05-29-2005, 02:46 PM
விமானங்களால் போர் நிறுத்தத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே கண்காணிப்பு குழு அதுபற்றி பேச முடியும்
இப்போது கருத்து தெரிவிக்க உரிமையில்லையென புலிகள் அறிவிப்பு
போர்நிறுத்த காலத்தில் புலிகளின் விமானங்கள் மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அதுபற்றி அரசு தரப்போ அல்லது போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவோ கதைக்க முடியுமே தவிர, பாதிப்பெதுவும் ஏற்படாத நிலையில் அதுபற்றி எவரும் கதைக்க உரிமையில்லையென விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் வசம் விமானங்கள் பலவும் புதிய விமான ஓடுபாதையுமிருப்பதாக அண்மைக்காலமாக அரசும் படையினரும் பெரும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவது குறித்தும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
புலிகள் வசம் விமானங்களிருப்பதானது இலங்கைக்கு மட்டுமல்லாது இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஆபத்தாயிருக்குமெனவும் தெரிவித்துள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பதில் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட், அரசு என்ற ரீதியில் இலங்கை அரசானது ஆயுதங்களை வாங்கிக் குவிக்க முடியுமென்றும் எனினும், அதனைப் புலிகள் செய்ய முடியாதென்றும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
இது பற்றி விடுதலைப் புலிகள் கூறுகையில்;
விடுதலைப் புலிகளிடம் மிகப்பெரிய இராணுவ அமைப்புள்ளது. இரு தரப்பினதும் சம பல நிலையிலேயே போர் நிறுத்த உடன்பாடே உருவானது.
இந்த உடன்பாடு உருவாவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே எம் வசம் விமானப் படையும் விமான ஓடுபாதையுமுள்ளன. இது உலகமறிந்த விடயம்.
இன்று போர் நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ளது. அதனைப் புலிகள் முறையாகக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், எமது விமானப்படை பற்றியும் விமான ஓடு பாதை பற்றியும் அரசும் படையினரும் பெரும் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போர் நிறுத்த காலத்தில் எம் மூலம் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் மட்டுமே அதுபற்றி கதைக்கும் உரிமையுள்ளது. இல்லையேல், அது கண்காணிப்புக் குழுவென்றாலும் சரி அது பற்றி கதைக்க முடியாது.
நாம் விமானப்படையை உருவாக்கி நீண்ட காலமாகிவிட்டது. காலத்திற்குக் காலம் தொழில் நுட்ப ரீதியில், ஏனைய படையணிகளைப் போன்று அதுவும் வளர்ச்சி பெற்றுள்ளது.
ஆனால், அதனை இவர்கள் இன்று பூதாகரமாக்கி அதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து போர்த்தளபாடங்களைப் பெற முயற்சிக்கின்றனர்.
எமது விமான ஓடுபாதையை பார்க்க வேண்டுமென கண்காணிப்புக் குழு கேட்கிறது. ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படாதென தெளிவாகக் கூறிவிட்டோம்.
இராணுவ இரகசியங்களை எவருக்கும் காண்பிக்க வேண்டிய தேவை எமக்கில்லை. இவ்வாறான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

hock: காணிப்புக்குழு க்கு திருப்தியான பதில் கிடைத்திருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->