மீனவர்களுக்கு தெரிந்தது ,இந்த பரபரப்பாக செய்தி விடும் பத்திரிகையாளர்களுக்குத் தெரியவில்லை.எதையும் ஆராயாமல் கண்மூடித் தனமாகக் கருத்து எழுதுவது அறியாமயய்யே வளர்க்கும்.
திருமலை, கிண்ணியா கடற்கரை பகுதியில் ஒளிக்கீற்றைப் பார்க்க மக்கள் முண்டியடிப்பு கோடை காலத்தில் கடலில் தென்படும் இயற்கை நிகழ்வென்கின்றனர் மீனவர்கள்
திருகோணமலை நகரம் மற்றும் கிண்ணியா பட்டினம் மற்றும் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் திங்கள் இரவு 9 மணி தொடக்கம் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக கடலில் தெரிவதாகக் கூறப்பட்ட ஒளிக்கீற்றைப் பார்க்க அகப்பட்ட வாகனங்களில் கடற்கரையை நோக்கிச் சென்றனர்.
திருமலை நகரில் நூற்றுக் கணக்கானோர் கடற்கரையில் திரண்டதால் அப்பகுதியில் சன நெரிசல் ஏற்பட்டது. பொலிஸார் உடனடியாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டு சன நெரிசலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடலில் கோடை காலத்தில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளில் ஒளிக்கீற்று தென்படுவதும் ஒன்று என கடற்றொழிலில் நீண்ட காலமாக ஈடுபடுபவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வுக்கும் கடல்கோள் அபாயத்திற்கும் எதுவிதத் தொடர்புமே கிடையாது என்று அனுபவமிக்கவர்கள் கூறுகின்றனர்.
வால்வெள்ளி ஒன்று கடலில் விழுந்து நொருங்கியதால் கடலில் தீப்பிடித்துள்ளது என்றும் வதந்திகள் தீ போன்று பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்தே கடலை நோக்கி சனக்கூட்டம் ஆட்டோக்கள், சைக்கிள்கள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள் கடற்கரையில் திரண்டது.
ஒளிக்கீற்றைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அதிகாரி ஒருவர், ஆண்டாண்டு காலமாக கடலில் வெப்ப காலத்தில் இடம்பெறும் இயற்கை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்றும் இதனை `கெவுர்' என்று கடற்றொழில் சார்ந்தவர்கள் அழைப்பர் என்றும் தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
கடல்கோளுக்கு முன்பு, கடலை எவரும் உன்னிப்பாக கவனிப்பதில்லை. கடல்கோளுக்குப் பின்னர் அனைவரின் கண்களும் கடல்மேல்தான். அதனால் வந்த விளைவுதான் `கடலில் ஒளிக்கீற்று' என்ற பரபரப்பான தகவல் என்றும் அவர் கூறினார்.
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm