Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததில் பிடித்தவை.........
#21
"<b>அந்த நதிக்கரைக்கு - என்னை
அழைத்துச் செல்லுங்கள்
ஆன்மா துடிக்கிறது - அங்கே
அழைத்துச் செல்லுங்கள்

ஓடிக் களைத்துவிட்டேன் - உறவில்
உள்ளம் சலித்துவிட்டேன்
பாடி அலுத்துவிட்டேன் - பெரும்
பாரம் சுமந்துவிட்டேன்

ஓயாமல் அடிக்கின்ற தென்றல் - கொஞ்சம்
ஒயிலாகச் செல்கின்ற ஆறு
சாயாமல் இருக்கின்ற புன்னை - அது
தமிழ் பேசி வரவேற்கும் என்னை

மலைதொட்டு அடிக்கின்ற சாரல் - எந்தன்
மடிதொட்டு நனைக்கின்ற தூறல்
தூரத்தில் நதியோடும் சத்தம் - எந்தன்
துயரத்தில் பங்கேற்கும் தித்தம்

இதயத்தில் என்னென்ன வேட்கை - இது
இடைவேளை இல்லாத வாழ்க்கை
வாழ்வோடு போராட்டம் இங்கே - இதில்
வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே ?

என்னோடு குயில்பாட வேண்டும் - அந்த
குயிலோடு நான்பாட வேண்டும்
கண்ணோடு இமைமூட வேண்டும் - நான்
காற்றோடு சுதிசேர வேண்டும்
-வைரமுத்து (சிகரங்களை நோக்கி..)</b>
....
Reply
#22
வைரமுத்துவின் கவிதை தந்தமைக்கு நன்றிங்க
----------
Reply
#23
விமர்சனம்

'என் மனக் கவலைக்கெல்லாம்
உன் மடித் தலையணையே மருந்து'
காதலாய் பாராட்டும் கணவர்!

'அந்த நிறுவனத்தில்
எப்படி ஆர்டர் வாங்கினீங்க?'
அதிசயிக்கும் மானேஜர்!

'மகராசி.. உம் முகத்துக்காகத்தான்
தொடர்ந்து இருக்கேன்..'
கசிந்துருகும் வேலைக்காரி!

அத்தனை சமர்த்தும்
அடிபட்டுப் போய் விட்டது

ஆயாவிடமிருந்து வரமறுக்கும்
என் குழந்தையிடம்!
....
Reply
#24
நன்றிகள் வெண்ணிலா . நீங்களும் உங்களுக்கு பிடித்தமான கவிதைகள் போடுக்களேன் இங்கே
....
Reply
#25
படித்தவற்றை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#26
நன்றிகள் மதன் அண்ணா
....
Reply
#27
நடை பாதை ஓவியன்

கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடிந்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்



மாற்றங்கள்

பிரகாரம் நுளைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எழுமிச்சை..
தீர்தமாகி விடுகிறது
தண்ணீர்..
பிரசாதமாகி விடுகிறது
திரு நீரும் பொட்டும்..
எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்
....
Reply
#28
sakthy Wrote:<b>நடை பாதை ஓவியன்</b>

கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடிந்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்

யதார்தத்தை வெளிப்படுத்துகிறது கவிதை.



sakthy Wrote:<b>மாற்றங்கள்</b>

பிரகாரம் நுளைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எழுமிச்சை..
தீர்தமாகி விடுகிறது
தண்ணீர்..
பிரசாதமாகி விடுகிறது
திரு நீரும் பொட்டும்..
எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்

சடப்பொருளான எழ்லுமிச்சையையும் தண்ணீரும் திருநீறும் பொட்டும் எப்படியும் மாறலாம் .... மாத்தலாம், ஆனால் பக்தன் சடப்பொருள் இல்லை ,,,, மனசு இருக்கும். கடவுள் இருக்கார் இல்லை என்றது ஒருபக்கம் இருக்கட்டும். நாம எதை விரும்பி அங்க போகிறோமோ அது கிடைக்கிது. மனத்தில் அமைதியையும் சாந்தியையும் விரும்பினால் அது கிடைக்கும். அதனை நாம் வீட்டிலேயே மனதை கட்டுப்படுத்தி கொண்டுவர முடியுமானால் ஒரு இடமும் போக தேவையில்லை, தேவையான மாற்றத்தை நமக்கு வீட்டிலேயே கொண்டு வரலாம்.[/quote]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#29
நன்றி சக்தி...அழகான கவிதைகளை பகிர்ந்து கொன்டீர்கள்...

Quote:என்னோடு குயில்பாட வேண்டும் - அந்த
குயிலோடு நான்பாட வேண்டும்
கண்ணோடு இமைமூட வேண்டும் - நான்
காற்றோடு சுதிசேர வேண்டும்

அழகான வரிகள்..ரொம்ப பிடிச்சிருக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#30
வணக்கம்.
கவிதை அனைத்தும் நன்றாயிருக்கு பகிர்ந்தமைக்கு நன்றி.
நான் எழுதியது
[size=18[]நாளைய தலைப்புச் செய்தியில்
இன்றைய கனவுதமிழ் ஈழம் மலர்ந்தது
அதிபராக பிராபாகரன் பதவியேற்பு

பசிபிக் பெருங்கடலில்
திருவள்ளுவத் திரு நாடு
நாளை திறப்பு விழா
புலித்தலைவன் சிறப்பு வருகை

ஒலிம்பிக் நீச்சலில் இரண்டு தங்கம்
ஓர் வெள்ளி தமிழரசு சாதனை

செவ்வாயில் நாளை
கால் பதிக்கிறார் வெண்முகிலன்
நாசா நேரடி ஒலிபரப்பு

.......ம்ம் மன்னிக்கணும் கனவு கலைந்தது :!:

நண்பர்களே உங்கள் கருத்து :!:


----- -----
Reply
#31
ம்ம்ம்ம் உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#32
sakthy Wrote:நன்றிகள் வெண்ணிலா . நீங்களும் உங்களுக்கு பிடித்தமான கவிதைகள் போடுக்களேன் இங்கே


போடலாம் தான். ஆனால் தேடி படிக்கணுமே அது பிடிக்கணுமே. அப்போதானே போடலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#33
அப்ப பிள்ளையாருடைய கலியாணம் மாதிரியென்று சொல்லுங்கோஃ :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Reply
#34
Quote:-தூங்கும் புலியை தட்டி எழுப்பாதே


Arrow
----------
Reply
#35
vennila Wrote:
Quote:-தூங்கும் புலியை தட்டி எழுப்பாதே


Arrow

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#36
கரிகாலன் உங்கள் கவிதைக்கு நன்றி. நிச்சயமாக உங்கள் (எம் ஈழ மக்களின்) கனவு ஒரு நாள் பலிக்கும். ஒலிம்பிக் நீச்சலில் மட்டுமல்ல அனைத்து போட்டிகளிலும் நாம் ஜெயிப்போம் ஒரு நாள்
....
Reply
#37
பிரிவுகள்


பிரிவுகள் வேண்டும்
ஜனனத்தில் மனது
சந்தோசப் படுவதற்கும்
மரணத்தில் கொஞ்சம்
அழுவதிற்கும்
பிரிவுகள் வேண்டும்

பூமி கூடச்
சூரியனிலிருந்து
சிதறி விழுந்த சின்னத்துண்டுதான்
குரங்கிலிருந்து மெல்ல
வால் பிரிந்தபோது
வந்த வடிவமல்லவா மனித இனம்

கூடுவிட்டுக் குஞ்சு
பிரியும் போதுதானே
சிறகிருப்பதன் சிறப்பு புரிகிறது

பிரிவுகள் இருப்பதால்தானே
கற்புள்ள
கட்சிக் கொடியின்கீழ்
கூடி நிற்க முடிகிறது

பிரிவுகள் இல்லையானால்...
இமைமூடித் தூங்குவதற்கு
எவனுக்கு துணிவிருக்கும் ?
உதடுகள் இரண்டும்
ஒட்டிக் கொண்டால்
மனித குலத்தின்
ஒரே தாய்மொழி முனங்கலாகும்

பாம்புச் சட்டை பார்த்துச்
சிறுவர்கள் பரவசப் படுவதெப்படி ?
கூட்டுப்புழு
வண்ணாத்துப் பூச்சியாய்
வானில் பறக்குமா ?

சூரியனின் சுய நிறத்தை
வானவில் எப்படி
வரைந்து காட்டும்?

தாயின் மணிக்கொடிக்கு
தனி வணக்கம்
செலுத்துவதெப்படி ?

பிரிவுகள் இல்லையானால்
கருமேகம் பார்த்துக்
கானமயிலின் தோகை விரியாது

இதயத்தைச் சுண்டியிலுக்கும்
காதலியின்
இரட்டைச் சடையிருக்காது

தபால் துறையும்
தந்தி துறையும்
தலை முழுகப்படும்

ஒவ்வொருவருக்கும்
தொப்புளில் ஒரு வால்
எப்போதும்
தொங்கிக் கொண்டேயிருக்கும்

பிரிவுகள் சுவையானவை
சுகமானவை

மனித இனத்திலும்
மனத்திலும் தவிர
எல்லாப் பிரிவுகளையும்
ஏற்கச் சம்மதமே...

- சூரியதாஷ்
....
Reply
#38
மனிதனே !
அன்றாடங்களின் புழுதியை
உதறி விட்டு
மேலே பற !

பறப்பது என்பது
மேலே உயர்வது
பறப்பது என்பது
விட்டு விடுதலையாவது

பூமி நீ கருவாகும்
முட்டைதான்
அதை உடைத்துக் கொண்டு
வெளியே வா !

சூரியப் பூவின் மகரந்தம்
உன் மேல்
படியட்டும் !

என் சாண்
வயிற்றை விட்டு
மேலே வா !

நட்சத்திர மலர்களின் தேன்
உன் சுவைக்காய்
காத்திருக்கிறது !

உன்
பந்தக் கூண்டுகளை
உடைத்தெறி

உன்
கற்பனைகளை பறக்க விடு
வானமும் அதற்கு
எல்லை இல்லையே !

உன்
மனதினை உயர விடு
நீ
மேலே உயர உயர
மண்ணின் பேதங்கள்
மறையக் காண்பாய்

நீ பற
உன் இலக்கை நோக்கி.........
....
Reply
#39
அழகான,அருமையான கவிதைகளை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் சக்தி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#40
அருமையான கருத்துக்கள் கொண்ட கவிகள்..
ரொம்ப அழகா இருக்கு..நன்றி சக்தி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)