Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாலியல் உறவுக்கான வயதெல்லை
#41
இலங்கையில் சிறுமிகள் துஷ்பிரயோக அவலம் பெருகுகிறது

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050716002841nannhan203.jpg' border='0' alt='user posted image'>
<b>இலங்கையில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் பெருகிவருகிறது</b>

இலங்கையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு லட்சம் பெண்கள் வீட்டு வேலை செய்து பிழைப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்கிறார்கள்.

கோடிக்கணக்கான டாலர்களை அந்நியச் செலாவணியாக நாட்டுக்கு சம்பாதித்துத் தரும் வர்த்தகம் இது. ஆனால் இலங்கையின் குடும்ப அமைப்பின் தன்மையையும் இது அடிப்படையாக மாற்றிவிடும் ஆபத்தையும் இது உருவாக்கியுள்ளது.

தாயார் வெளிநாடு செல்ல தனியாய் விடப்படும் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கும், கொடுமைக்கும் ஆளாகிறார்கள் சிலர் சிறுமியாய் இருக்கும்போதே கர்ப்பம் தரித்தும் குழந்தை பெற்றும் கஷ்டப்படுகிறார்கள்.

தனது தந்தையே தனது பிள்ளைக்கும் தந்தையாகும் அவலநிலையெல்லாம் சிறுமிகளூக்கு ஏற்பட்டுவருகிறது.

கன்னித்தன்மையையும் குழந்தைப் பருவத்தையும் பறிகொடுக்கும் இச்சிறுமிகளுக்கு ஒரு பக்கம் நீதி மறுக்கப்படுகிறது மறுபக்கம் இவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்படுகிறார்கள்.

BBC Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#42
<b>ஆயுதப் படைகளில் சிறார் சேர்க்கப்பட்டால் 30 ஆண்டு சிறைத் தண்டனை </b>


[ஞாயிற்றுக்கிழமை, 2 ஒக்ரொபர் 2005, 05:48 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவில் ஆயுதப்படைகளில் சிறார் சேர்க்கப்பட்டால் தொடர்புடைய நபருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கடந்த நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது.

இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.

18 வயதுக்குட்பட்டோர் குழந்தைகளாக இச்சட்டமூலம் வரையறை செய்துள்ளது.

சட்டவிரோதமாக சிறாரை வெளிநாட்டுக் கடத்திச் செல்வது, கணணிகளைப் பயன்படுத்தி சிறார் பாலியல் துஸ்ப்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடுவது, சிறார் பாலியல் துஸ்ப்பிரயோகம் நடைபெறும் இடங்களைத் தெரிவிக்க மறுப்பது, கொத்தடிமை முறை உள்ளிட்டவைகளுக்கும் பொருந்தும். இக்குற்றங்களில் ஈடுபடும் நபரை எவ்வித பிடியாணையுமின்றி கைது செய்ய சிறிலங்கா காவல்துறைக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இச்சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=20491
::
Reply
#43
அப்ப 14 வயதில் பாலியல் தொடர்புகள் சட்டமாக்கப் பட்டால் சிறுவர் பாலியல் சட்ட அங்கீகாரம் உள்ள ஒரே நாடு சிறீலங்கா எண்ற பெருமையைப் பெற்றுக்கொள்ளும்...

அது சரி புத்த பிக்ஷுவா 5 வயதிலயே சேரணுமே அது சிறுவர் துஸ்பிரயோகம் இல்லையா??? அதுக்கு எதிரா எப்ப சட்ட மூலம் வரும்???
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)