09-24-2005, 07:10 PM
நல்ல கதை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
|
சுடுகின்ற புதைமணல்கள் தொடர் - இந்திரஜித்
|
|
09-24-2005, 09:38 PM
மதிப்புக்குரிய களப்பொறுப்பாளர் மட்டுறுத்துனர்களே என் கதை கொஞ்சம் பெரிதாக இருக்கும் அனுமதி அளிப்பிர்களா தொடர்ந்து எழுதுவதற்கு ஏதாவது பிரச்சனைகள் இருக்குமா ?
inthirajith
09-25-2005, 12:38 PM
<b>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 3</b>
'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்திலெல்லாம் உன்னை போல் பாவை தெரியுதடி" அந்தநிலவொளியில் அவன் கைகளை மதுவின் பக்கம் ஊன்றிவைத்தபடி பேசிக்கொண்டு இருந்தான். திடிரென்று ஏதோ ஊர்வது போல் இருந்தது திடுக்கிட்டு பார்த்தான் மதுவின் விரல்கள் கொழுகொம்பை தழுவும் கொடிபோல் அவன் விரல்களை பற்றி இருந்தன. விரல்களை பிரிக்க நினைத்தாலும், அந்த பேதையின் ஆறுதலுக்காக அப்படியே அசையாமல் இருந்தான் அவன். மதுவுக்கோ 'அந்த இரவு அப்படியே அசையாமல் நீண்டு கொண்டே போனால் நல்லது'.. என்ற நினைப்பில், "இப்படியே பேசிக்கொண்டே இருக்கவேணும் போல் இருக்கு " அப்போ மாலா நண்பனின் மனைவி சொன்னா ''கைகளை பிடிக்க ஒருவர் இருந்தால் காலம் முழுக்க இப்படியே பேசிகொண்டே இருக்கலாம் தான்'' என்று சிரித்தபடியே சொல்ல.. "ம்ம் உண்மை தான் "என்று மது காதல் மயக்கத்துடன் சொன்னா. அதிகாலை 3.00 மணிவரை பேசிக்கொண்டு இருந்துவிட்டு உறங்கச் சென்றார்கள். 'காலையில் அப்பாவின் கராஜ்க்கு போகவேணும், நிறைய வேலை இருக்கு. அப்பாவும் பாவம் தானே' என்று நினைத்தபடியே உறங்கச் சென்ற ரமணனுக்கு நித்திரையே வரவில்லை.. சிறுவயசு முதலே பாடசாலை விடுமுறையில், பாடசாலை முடிந்த நேரத்தில் எல்லாம் அப்பாவின் கராஜ்ஜில் தான் நிற்பான். அவன் சிறந்த மெக்கானிக்கும் கூட.. அதனால் அப்பா கொழும்பு போனால், அல்லது அவரால் முடியாதபோது எல்லாம் கராஜ்ஜை அவன் தான் பார்த்துக் கொள்ளுவான். நித்திரை வராமல் அவன் படுக்கையில் புரண்டபோது கதவை திறந்து கொண்டு வந்த மது ''என்ன நித்திரை வரவில்லையோ'' என்று கேட்டபடி பக்கதில் வந்து அமர்ந்தா.. "ம்ம்'' ஏதோ நினைப்பில் இருந்த ரமணன் சொன்னான். ''எனக்கும் தான் நீங்கள் இருக்கும் போது ஏதோ நிம்மதியா இருக்கு சந்தோசத்தில் நித்திரையும் வரவில்லை'' அவன் அதைக் கேட்டு சிரித்து விட்டு ''எனக்கு அப்பாவை பற்றி தான் சிந்தனை நான் வெளிநாடு போனால் அவருக்கு ஒருவரும் உதவி இல்லையே என்று தான் யோசிக்கிறேன்'' இருவரும் பேசியபடியே இருக்க பொழுதும் விடிந்தது. நித்திரை முடிந்து எழும்பிவந்த மாலா. "என்ன எதிர்காலம் பற்றி கதைத்துக் கொண்டு, தூக்கம் இல்லாமல் இருந்திங்களோ" என்று சிரித்தபடியே கேட்க.. ''ம்ம்'' என்று சொன்னா மது. ஆனால் அது உண்மையில்லை என்பது அவனுக்கும் தெரியும், இருந்தாலும் மதுவின் ஆசையை ஏன் கெடுப்பான் என்று மெல்ல முறுவலித்தான் ரமணன். இப்படியே பொழுதுகள் போனது. ஒரு நாள் அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான். அவர்கள் எல்லாரும் அவன் கூட படித்தவர்கள். வீட்டில் கடைக்குட்டிகள். 8 நண்பர்களும் சேர்ந்தால் ஊரே பார்த்து வியக்கும். இப்படி ஒரு ஒற்றுமையா? என்று. யாராவது உறவினர்களின் திருமணமா இல்லை அந்திமசடங்கர் கோவில் திருவிழாவா, எல்லாவற்றிலும் அவர்கள் சேர்ந்து வந்தால் யாரும் கவலையே படாமல் பொறுப்பை அவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவார்கள். அவர்களும் ரமணன் தலைமையில் பொறுப்பாக செய்து முடித்து கொடுத்து விடுவார்கள். அவர்களுடன் பேசிகொண்டு இருந்தபோது எல்லோரும் சாமி பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள். 'அவன் இல்லாமல் 7 பேர் ஆகிவிட்டோம்' என்று.. அப்போ அங்கே ஓடிவந்த சாமியின் அக்கா "ரமணா ஓடிவாங்கோ எங்கள் அப்பா நெஞ்சுவலியில் துடிக்கிறார். உங்களை வர சொல்லி அழுகிறார்௪'' என்றதும் பதறி துடித்தபடி எல்லோரும் ஓடினார்கள். போகும் போதே வழியில் வந்த வாடகை காரையும் பின்தொடர சொல்லிவிட்டு போனான் ரமணன். "வா ரமணா" உடம்பெல்லாம் வேர்த்தபடி சாமியின் அப்பா சரிந்து கிடந்தார். ''என்ன அப்பா செய்யுது'' கவலையுடன் கேட்டன். அதற்கிடையில் கார் வந்தது.. ''யாரும் வரவேண்டாம் நான் ரமணனுடன் போகிறேன்'' சாமியின் அப்பா சொன்னார். மருத்துவம் படிக்கும் ரமணனுக்கு புரிந்துவிட்டது 'சிவியர் ஹாட் அற்றாக்'தான் என்று.. காரில் அவன் மடியில் படுத்தபடியே வந்தார். வைத்தியசாலைக்கு மற்ற நண்பர்கள் சைக்கிளில் பின்தொடர்ந்தார்கள். சிகிச்சைக்காக போகும் போது வைத்தியரிடம்.. ''நான் ரமணனின் மடியில் படுக்கப்போறேன்'' வைத்தியர் 'சரி' என்று சிகிச்சையை ஆரம்பிக்கும் போது வெட்டி வெட்டி இழுக்க தொடங்கியது சாமியின் அப்பாவுக்கு ''ரெண்டாவது அற்றாக் வந்துவிட்டது'' என்று வைத்தியார் பதறியபடி சொன்னார். ''அட்றினல் இஞ்ஜெக்சனை எடுங்கோ'' என்று பதட்டதுடன் சொல்ல.. சாமியின் அப்பாவின் உடல் அடங்கியது ரமணனின் மடியில். அதிர்ச்சியில் உறைந்துவிட்டான் ரமணன்.. அழக்கூட திராணியில்லாமல் சிலையாகிவிட்டான். வெளியில் எல்லோரும் நிற்கிறார்கள். அவனோ பேயறைந்தவன் போல் நம்பமுடியாமல்.. வைத்தியர் செய்த முதலுதவிகள் ஒன்றுமே பலனளிக்காமல் சாமியின் அப்பா போய் விட்டார். சாமி, அவன் அம்மா,அக்கா, மது... எல்லோரையும் ரமணன் கையில் விட்டு விட்டு போய்விட்டார். வெளியில் வந்தவன் அழக்கூடமுடியாமல் பிரமைபிடித்தவன் போல் இருப்பதை பார்த்த எல்லோருக்கும் புரிந்து விட்டது. இனி என்ன செய்வது.. எல்லா ஏகாதசிக்கும் ரமணன் வராமல் சாப்பிடாத ஜீவன்.. என்ன சமைத்தாலும் ரமணனுக்கும் வை என்று சாமியின் அம்மாவிடம் கட்டளை போடும் ஜீவன்.. உரிமையில் பசிக்குது என்று போனால் அடுக்களை வரை அனுமதித்த அன்பு ஆன்மா அவனை விட்டு பிரிந்தது அவனால் நம்பமுடியாவில்லை. எத்தனையோ மரணங்களை பார்த்தவன். குண்டு துளைத்த எத்தனையோ நண்பர்களை சுமந்தவன். தன் தோளிலே மரித்த உடலங்களை சுமந்தவனால் அன்று முடியவில்லை.. அவர் உயிருடன் வந்த காரிலேயே உயிரற்ற மனிதராக கொண்டுவந்தான். குய்யோ முறையோ என்று அழும் சாமி குடும்பத்தவருக்கு தேறுதல் எப்படி சொல்வது. வேலைக்கு போன மதுவை கூட்டி கொண்டு வர சொல்லி யாரோ சொன்னார்கள்.. அந்த துக்கத்திலும் ரமணனை போக சொல்லி அழுதார்கள் சாமியின் அம்மா. நண்பனின் மோட்டார் சைக்கிளில் மதுவை கூட்டி கொண்டு வர புறப்பட்டான். வைத்தியசாலைக்கு போனவனை கண்டதும் வெள்ளை உடையில் தேவதையாக நின்ற மது முகம் மலர ''என்ன அதிசயம்'' என்று ஆச்சரியத்துடன் கேட்டா. ''இருங்கோ வாறேன்'' என்று சொல்லிவிட்டு விபரம் சொல்லி அனுமதி பெற்று மதுவை வரும் படி கேட்டான். ''என்ன ஏதும் பிரச்சனையா??சொல்லுங்கோ இதுவரை உங்கள் முகம் இப்படி இருந்தது இல்லையே" என்று மது அழத்தொடங்கினா. ''ஒன்றுமில்லை நான் கொழும்பு போகவேணும் அதுதான் உங்களுடன் பேசவேணும் வாங்கோ'' என்று கூட்டிகொண்டு வந்தான். வரும் போதே வீட்டு வாசலில் நிறைய சனம் நிற்பதை பார்த்த மதுவுக்கு ஏதோ நடக்க கூடாத சம்பவம் என்று புரிந்துவிட்டது. அவனை விட்டு உள்ளே ஓடினா மது.. மரணவீட்டுகாரியங்களை கவனிக்கதொடங்கினான் ரமணன். சாமிக்கு தந்தி அடிக்க ஒரு நண்பன், இப்படி ஒவ்வொருவரிடம் வேலைகளை பகிர்ந்து கொடுத்து தன் தகப்பனார் என்று தன் குடும்பம் என்று கண்கள் கலங்கியபடியே வேலைகளை கவனித்தான். அப்போ தான் விபரம் அறிந்து வந்த நண்பனின் மனைவி மாலா அழுதபடி சாமியின் அப்பா அருகே போனார். சிறிது நேரத்தில் அருகே வந்த மாலா ரமணா ஒருவிடயம் என்று ஒரமாக அழைத்துச் சென்று ''கொஞ்சம் ஒதுங்கி இருங்கோ ரமணன். உரிமையில்லாத நீங்கள் செய்வதை பார்த்து விட்டு உறவினர்கள் கோபத்தில் பிரச்சனைகள் பண்ணலாம்'' என்று மது சொல்லிட அவன் டக்கன்று மதுவை பார்தான். அந்த சோகத்திலும் அவனை பற்றி யோசிக்கிறா மது. உண்மைதான் என்பது போல் அவனும் மெல்ல ஒதுங்கிய படி ஒரு மரத்தின் கீழே அமர்ந்தான். அவன் குடும்பதினரும் வந்துவிட்டார்கள். சாமியின் அம்மா சொல்லி அழும் குரல் கேட்டது. ''உங்களை நேசித்த என் மடியை விட ரமணன் மடி தான் உங்களுக்கு நிம்மதியோ'' என்று... அவனால் அதை கேட்டதும் தாங்க முடியவில்லை. ஆனால் மதுவின் யோசனை படியே ஒதுங்கியே இருந்து விட்டான். சாமி அப்பாவின் காரியங்கள் எல்லாம் முடிந்து உறவுகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார்கள். அந்தவீட்டில் எஞ்சி நின்ற ஒரு ஜீவன் அவன்தான். ரமணனின் வீட்டுகாரர் தான் சமையல் சாப்பாடு எல்லாம். ஒரு கிழமையின் பின்பு "வேலைக்கு போகவில்லையா மது?''என்று கேட்டான். நிமிர்ந்து பார்த்த மதுவின் விழிகளிலே நீர்த்துளி.. "எழும்புங்கோ வாங்கோ'' என்று வலுக்கட்டாயமாக அழைத்து சென்றான் வேலைக்கு. மெல்ல மெல்ல மதுவின் அப்பாவை மறந்து, எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள். சாமி தான் பாவம். அழுது அழுது கடிதம் எழுதி இருந்தான். அவனால் வரமுடியாத சூழுல்.. என்ன செய்வது? பணத்துக்காக பாலை வனம் போனவன் அவன். வெய்யிலும் குளிரும் அரபிக்காறனின் தொல்லை வேறு கசக்கிப் பிழிவான். வேலையில் "யல்லா யல்லா" தான். யாரையுமே மனிதர்களாக அவர்கள் மதிப்பதில்லையே.. வாழ்க்கையை தொலைத்தமனிதர்கள் அங்கே. அது ஒரு ஜென்மதண்டனை. <b>-தொடரும்-</b> ம்ம் யாரவது உங்கள் விமரிசனம் சொல்லுங்களேன் மேற்கொண்டு எழுத தூண்டுதலா இருக்கும்
inthirajith
09-25-2005, 12:42 PM
நன்றாக இருக்கின்றது இந்திரஜீத். மேலும் தொடருங்கள்...
09-25-2005, 01:33 PM
நன்றாக இருக்கின்றது
மேலும் தொடருங்கள்...
09-25-2005, 03:09 PM
முடிந்தால் யாராவது சேர்த்து எழுதுங்கள் 15 மணிநேர வேலை முடிந்து கதையும் எழுதும் போது ஆவல் இருந்தாலும் கவனக்குறைவு எழுத்துபிழைகள் வருவதை தடுக்கமுடியவில்லை இராவணன் அவர்களே உங்கள் ஆதரவான செய்திக்கு நன்றி
inthirajith
09-25-2005, 09:28 PM
<span style='font-size:25pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 4</span>
"நினைத்து பார்க்கிறேன் நெஞ்சம் இனிக்கிறது சிரித்து பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கிறது" "சாமியின் அப்பா போனபின்பு எல்லா விடயத்திலும் ரமணனின் உதவி தேவைபட்டது. சாமி குடும்பத்துக்கும் ரமணன் குடும்பமும் முழுமனதுடன் சொன்னார்கள். அவர்களுக்கு உதவி பண்ணும் படி. அடிக்கடி மதுவை பார்க்க வைத்தியசாலைக்கு போவான் தகப்பன் இல்லாத குறை தெரியாமல் பார்க்கவேணும் என்று போவான்.." "ஒரு நாள் அவன் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த போது.ஒரு நண்பன் பீடிகையுடன் ஆரம்பித்தான் .. "டேய் ரமணா ஊரில் ஒருகதை அடிபடுகிறது ... " என்னடா சொல்லு" ம்ம்.. நீ சாமியின் தங்கையை காதலிக்கிறாய் என்று கதைக்கினம் ..என்று வெடி ஒன்றை கொழுத்தினான் ..அதை மற்றவனும் ஆமோதித்தான்.. நீ அடிக்கடி மதுவை வைதியாசாலை போய் சந்திப்பதாக கதைக்கினம் என்று சொன்னான் ..அதிர்ந்து விட்டான் ரமணன். என்ன இது புதிய பூதம் என்று யோசித்தபடி இருந்தான். ஒரு கிழமையால் வந்த அப்பா சொன்னார் தம்பி சவூதிக்கு போக ஒரு விசா இருக்கு போகவிரும்புறிங்களா என்று.... அவனும் சம்மதித்து விட்டான் .. அதற்கிடையில் அவன் ஊரில் கோவில் திருவிழா ..அவன் கோவிலில் பிரதட்டை செய்வது வழக்கம்.. இந்தமுறை அவன் பிரதட்டை செய்யும் போது... தேரில் அன்று மது அவன் பின்னால் அடி அளித்தா எல்லோருக்கும் மெல்ல அவல் கிடைத்து விட்டது .. ஆனால், அவள் அடி அளிப்பது புரியாத அவனோ.. உள்வீதி வெளிவீதி எல்லாம் பிரதட்டை முடிந்து.. எழும் போது தான் பார்த்தான் மதுவை ..வேர்த்து நீள்கூந்தலுடன் மண்ணின் அழுக்குடனும் சாறி யுடன் முதல் தடவையாக பார்க்கிறான் ..அந்த அழகும் முகத்தில் தெரியும் ஒரு ஆனந்தமும் அவனை என்னவோ செய்கிறது ..பரிதாபமாக பார்க்கிறான் .. " நான் வெளி நாடு போவது அவவுக்கு தெரியாக்கூடாது கடவுளே என்று கும்பிட்டான் ..ஆனால் கடவுளின் முடிவோ வேறு அப்போதான் கோவிலுக்கு வந்த ரமணனின் அக்கா அவன் வெளி நாடு போவதை போட்டு உடைத்து விட்டா .. அவள்முகம் மாறி விட்டது.. பக்கத்தில் வந்து சொன்னா இன்று எனகு இரவு வேலை என்னை இரவு கூட்டி கொண்டு போய் மாலாவீட்டில் விடுங்கோ என்று சொல்லிவிட்டு விறு விறு என்று போய்விட்டா... மது வீட்டில் போய் விரதம் முடித்துவிட்டு.. மாலையில் மதுவையும் அழைத்துகொண்டு சைக்கிளில் போனான் அப்போ மது விம்மி அழுதபடி வந்தாள்..என்னவென்று கேட்கவில்லை அவன்.. மாலா வீட்டுக்கு வந்ததும் அழுகின்ற மதுவை பார்த்து என்ன விடையம் என்று கேட்டாள் மாலா... " ம்ம் என்னை விட்டு போகபோறார் இவர் என்று.. ஓவென்று மாலாவை கட்டிபிடிது அழுதாள் மது" அந்த பேதை மது ..ரமணனின் மனதும் புரியாமல் அவன் மௌனமும் புரியாமல் இருந்தாள்... அப்போ தான் மாலா கேட்டா "என்ன இன்று மது நீங்க லீவுதானே ? ஏன் வந்திங்க ? என்று " "ம்ம் இவருடன் பேசவேனும் ..இல்லாவிட்டல் நான் ஏதாவது செய்து விடுவேன்.. என்று மிகப்பிடிவாதமாக சொன்னாள் மது.. சரி என்று அன்று இரவு அங்கே தங்குவதாக சம்மதித்து விட்டனர்.. அவன் இரவு சாப்பிடும் வரை மௌனமாக இருந்தான்.. சரி படுப்போம் என்றபடி மாலாவும் கணவனும் தங்கள் அறையினுள் போய்விட்டார்கள் அவர்களை தனிமையில் விட்டுவிட்டு அவன் பயந்தபடியே ஆயிற்று "அவன் பயந்தபடியே அவர்களை தனியேவிட்டு நண்பனும் மனைவியும் சாமியறை அருகில் துயில போகும் போது,மதுவிடம் நண்பனின் மனைவி .. "மது பார்த்து ரமணன் வெளிநாடு போகமுதல் ஆளை ஒருவழி பண்ணுங்கோ... "என்று ஜாடையாக சொல்லிவிட்டு போனா... மதுவும் ...ம்,ம் என்று சிரித்து விட்டு ரமணனை பார்த்தாள்.. ரமணன் மனசோ அலைபாயதொடங்கியது. ஒரு பாய் மட்டும் அவர்களுக்கு வைக்கபட்டும் இருந்தது என்ன செய்வது என்று பாய் அருகில் அமர்ந்தான்.. இருங்கோ முகம் கழுவி வாரேன் என்று சொல்லி மது துவாய் எடுத்து கொண்டு கிணத்தடிக்கு போனாள்.. திரும்பி வரும் போது,நைற்றி மாற்றி மிகவும் மாறி போய் இருந்தாள் மது... அவளை பார்த்த ரமணனுக்கு ஏதோ இண்று மிகவும் பிடித்து இருந்தது...அருகில் அமர்ந்த மதுவில் ஏதொ வாசம்,அவனை அலைகழித்தது.. மெல்ல அதுகில் மலரின் வாசனையுடம் நை&டேய் சோப்பின் வாசமும் இன்றுவரை அவன்மனதில் இருக்கிறது. பசுமையான நினவுகளாய்,அருகில் அமர்ந்த மதுவிடம்... ரம்ணன் மது என்னப்பா இன்று அழகாய் இருக்கிறிங்க? சொல்லுங்கோ என்ற போது அவள்முகத்தில் ஒர் அமானுஸ்ய அழகும் ஒளிர்ந்தது ...மெதுவாக அவன் கரங்களை பற்றிய மது இப்படியே இருக்கவேணும் போல் இருக்கு ஆயுள் முழுக்க என்று தழுதழுத்த குரலில்,சொன்னபோது அவனாலும் தாங்கமுடியவில்லை மெதுவாக அவன் மார்பில் சாய்ந்தமதுவை அவனால் தடுக்கும் மனபலம்,இல்லாது போயிற்று. "மது நான் திரும்பிவரும் வரைக்கு எனக்காக காத்து இருபிங்களா "என்று கேட்டான்.. ரமணனின் வாயை பொத்தியது மதுவின் வளைகரங்கள்.கண்ணின் ஓரம் நீர்த்திவலைகள் என்னுயிர் இருக்கும் வரை உங்களுக்காக என் உயிர்பறவை துடித்து கொண்டு இருக்கும் என்று தழுதழுத்தபடியே, அவன் கன்னத்தில் முத்தமிடாள் மது.. அன்று இரவு பூராவும் அந்த இரு உயிகளும் தூங்கவே இல்லை.. மது தன்னை முழுமனதுடன் ரமணனுக்கு தன்னை அர்ப்பணம் செய்ய தயாராக இருந்தும், ரமணன் தன் மன உறுதியுடன் சொன்னான்.. "மது, என்று உன்கழுத்தில் ஊர் அறிய மாலை சூட்டுகிறேனோ அப்போதுதான் நாம் சேரவேண்டும். அதுவரை பொறுத்து இருப்பிங்களா?" கடவுளே என்ன இது,என்ன கேள்வி நீங்கள் பயணம் போகமுதல் என்னை உங்களிடம் தரவிரும்புகிறேன், உங்களுக்கு மனம் ஒப்புகொள்ளவில்லை.. அது உங்களின் நேர்மையை சொல்லிவிட்டது என்று.. அவன்மடியில் படுத்தபடி அவன் முகத்தையே பார்த்தபடி எத்தனையோ கதைகள் அந்த இரவு முழுக்க பேசினார்கள் அவன் புறப்படும் அந்த நாளும் வந்தது.......... யாழ்பஸ் நிலையம் கொழும்பு புறப்படும் பஸ்க்கள் அருகே ரமணன் குடும்பத்தினர் இப்படி பயணம் அனுப்ப வந்து நிற்பவர்கள் பிரிவு துயருடன் என்று நிறைய நண்பர்கள் இருக்கும் போது, மது மட்டும் தனியாக வந்தா,அவளைக் கண்ட ரமணன் வேகமாக அவள் அருகே போய் என்னப்பைங்கே வேலை இல்லையா என்று கேட்டபடியே அவள் முகத்தை பார்த்தான் இல்லை நீங்கள் பயணம் போகும் போது பக்கத்தில் இருக்கவெணும் போல் இருந்தது, லீவு எடுத்து வந்தேன்.. என்று அன்புடன் சொன்ன மதுவை பார்க்க ரமனனுக்கு ஏதொ செய்தது, அவன் தான் பிறந்த பழகிய ஓடிவிளையாடிய எல்லாம் விட்டு குடும்பத்தாரின் வேண்டுதலுக்கும் வற்புறுத்தலுக்கும் கல்யாணம் ஆகவேண்டிய சகோதரிகளுக்காகவும்,தன்னையே நினத்தபடி வாழப்போகும் அந்த மது என்ற ஜீவனை,பிரியவேண்டிவந்துவிட்டதே என்று மனதின் அழுகுரலையும் மீறி தன்னை கட்டுபடுத்த மிகவும் கஸ்ரப்பட்டான்.எல்லோரும் பஸ்ஸினுள் அமர தொடங்கினார்கள் அப்பா வாய் பேசமுடியாத அம்மா சகோதரிகள் கூடபடிக்கும் பல்கலைகழக நண்பர்கள் எல்லோரிடமும் பிரியமனம் இல்லாமல்,பிரியாவிடை பெற்றான் கடைசியாக மதுவின் அருகே வந்தான். மெதுவாக "நான் போகட்டுமா?" மது என்று அவள்கண்களை பார்த்தபடியே ,மென்று முழுங்கினான் அவன் அதுவரை தன்னை கட்டுபடுத்தியபடி,இருந்த மது தான் இருக்கும் இடம்,சூழ்நிலை எல்லாமே மறந்து விட்டாள் "தன்னை மறந்தாள் தன் நாமம் மறந்தாள் , *அப்படியே அவனை ஆழமாக அணைத்தபடி அவன் இதழ்களில் முத்தமிட்டாள்" ஒருநிமிடம் எல்லாமே அசையாமல் போனது அதிர்ச்சியில் எல்லோருமே உறைந்து விட்டார்கள்.அவன் அப்ப தான் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை குறைக்குமாப் போல்.. சரி தம்பி பஸ்ஸினுள்ளே ஏறுங்கோ,என்று குரல் கொடுத்தார்.. ஆனால் யாழ்நகர கலாச்சாரத்தில் இப்படி பகிரங்கமாக முத்தம் வாங்கிய முதல் ஆள் ரமணன் ஆக தான் இருக்க வேண்டும்.இதுவரை யார் சொல்லியும் நம்பாத அவன் குடும்பத்தினருக்கு நிஜம் புரிந்தது...! கண்கள் கலங்க பஸ்ஸினுள்ளே அமர்கிறான்.கண்ணாடி ஜன்னல் ஊடாக அவன் கையை பிடித்தபடி மது அவளை தடுக்கதிராணி இன்றி எல்லொருமே கலங்கிவிட்டார்கள்.அப்பா சொன்னார் தம்பி பயப்படவேண்டாம் மதுவுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று தைரியம் சொன்னார் மெதுவாக புறப்பட்டது அவன் நீண்ட நெடும் பயணம் அவன் திரும்பிவரும் போது இந்தமுகங்கள் எல்லமே இருக்குமா? விடைதெரியாத சூனிய வெளியினுள்ளே அவனை விதி அழைத்து செல்கிறது.. அதன் வலியகரங்கள் அவன் ஆசை வைத்த எல்லாமே உன்னிடம் இல்லை என்று சொல்லி சிரிப்பது போல் பிரமை வந்தது தலையை சிலுப்பியபடி திரும்பிபார்தால் கடிதம் போடுங்கோ என்று அழுத மதுவின் குரல் தேய்ந்து மறைந்தது ..நடைபிணமாக 3 நாட்களில் சவூதி அரேபியா வந்து சேர்ந்த்தான்... ! அவன் வந்தபோது குளிர்காலம் தொடங்கிவிட்டது.. அவனுக்கு முன்பே அந்த கொம்பனிக்கு வந்து விட்ட நிறையா தொழிலார்கள் அவனுடன் வேறுயாரும் வந்தாகளா என்று பார்க்க வந்தார்கள். மிக்க அன்புடன் தம்பி யோசிக்கதீர்கள் இப்படிதான் நங்களும் மனைவி பிள்ளைகள் எல்லொரையும் பிரிந்து வந்தபோது கலங்கி தான் போனோம். என்ன செய்வது வலிகளை விட வாழ்க்கை பிரிதகிவிட்டதே எண்ரு ஆறுதல் சொன்னபடியே கடிதம் எழுதும் தாள்கள் முத்திரை சோப் என்று அத்தியாவசிய பொருட்க்களுடன் அன்பால் திணறடித்தார்கள் முன்பின் பழக்கமில்லா அந்த உறவுகள்...! பின்பு தான் தெரிந்து கொண்டான் அது புதிதாக வருபவர்களுக்கு கவலையை மறக்கவும் ஆறுதலாகவும் ஒரு பெரியா துணையாக இருக்க அந்த நண்பர்களே பிரதி உபகாரம் பாராமல் செய்யும் செயல் என்று உண்மையான நட்பின் பரிமாணம் எங்கும் இல்லை அது பெண்களே இல்லமால் இருக்கும் நண்பர்கள் மட்டுமே இருக்கும் இடத்தில் தான் இருக்கிறது...! வந்ததும் 3 நாட்களுக்கு வேலை இல்லை ..அவனை பார்க்க வந்தவர்கள் புதியவிலாசம் கொடுத்தார்கள். வேலைக்கு போக அக்காமா வேலை அனுமதி பத்திரம் )கிடைக்கும் வரை அவன் தான் வேலை செய்யபோகும் கொம்பனியை சுற்றிபார்த்தான்.முழுவதுமே வெளிநாட்டவர்கள் தான்.இரவு கடிதம் எழுத உட்கார்ந்தான்.முதலில் மதுவுக்க அவன் குடும்பமா கடிதம் எழுதவேண்டும் என்று யோசித்தான்.சரி அப்பாவுக்கு எழுதும் கடிதத்த்தினுள்ளே மதுவுக்கும் வைப்போம் என்று தீர்மனித்தான்.வந்து சேர்ந்தவிபரத்தை அப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் எழுதிவிட்டு மதுவுக்கும் மடல் வரைய்ய தொடங்கினான் எப்படி ஆரம்பிப்பது? 10 முறை எழுதி எதுவுமே பிடிக்கமால் கிழித்து விட்டான் இறுதியில் . <i>"என்னுடன் கலந்துவிட்ட என் மதுவுக்கு... உயிரைவிட்டு வெறும் உடல் கூட்டுடன் உலாவும் உன் ரமணன் எழுதுவது... நலமா? உயிரே,ஏன்டா என்னை நேசித்தாய்.சிறுவயசு முதலே நான் உன்னுடன் தானே இருந்தேன்.. அப்போதெல்லாம் நண்பனின் சகோதரி என்று ஒர் எல்லையுடன் தானே பழகினேன்.எப்போ நமக்குள்ளே இப்படி ஒரு பந்தம் வந்தது? உன் அப்ப இறந்தபோது ஆறுதலாக தான் இருக்க நினைத்தேன். என்னை நம்பிய உன் அண்ணாவை நினைத்து மனதுக்குள்ளே உன் விருப்பத்தையெல்லாம் நிறாகரித்தேன். அதற்காக தான் அந்த கண்ணன் என்னை கடைசி நேரத்தில் உன் அன்பு மாளிகை அரசனாக்கி இப்போ பட்டினத்தார் வாழ்க்கையை தந்துவிட்டானோ? உன்னை பார்த்தபோது அருகில் இருந்தபோது வராத உணர்வுகள்.என்னை கொல்லுதடி.அன்பே எப்போது என்மடியில் நீ சரிந்து என்முகத்தை பார்த்தபடியே பேசாமலே ஒருவரை ஒருவர் பார்த்து மௌனமாக கரையும் அந்த ஆன்மார்த்தமான அந்த வேளை இனி எப்போ?உன்ஞாபங்கள்தான் ...என் மனவானில் சிறகடித்தபடி உன் இனிய முத்தம் என்னால் மறக்கமுடியவில்லை நீங்கள் என்னை முத்தமிட்டது இப்பொ ஊர் முழுக்க தெரிந்து இருக்கும் உங்கள் அம்மா என்ன கவலைபட்டாரா? உங்கள் அண்ணாவுக்கு எப்படியும் கடிதம் எழுதுவார்கள் என்று நினைகிறேன் பயப்பட வேண்டம்..கவலையை மறக்க வேலைக்கு போங்கோ.அண்ணா நான் இருக்கும் இடத்தில் இருந்து 1280 கீமி இல் இருப்பதக அறிந்தேன்.முடிந்தால் அவரை பார்ப்பேன் அவன் எங்கள் உறவுக்கு தடையாக இருக்கமாட்டான் என்று நினைகிறேன்.. நிறையா எழுத நினைக்கிறேன் விழிகளை ஈரம் மறைக்கிறது.உயிரே,உன்நினவுகளின் பசுமையுடன் இருக்கும் என்னை தூக்கமும் தழுவ மறுக்கிறது இந்தமடல் கிடைததும் பதில் மடல் அனுப்புங்கள் வழி மேல் விழிவைத்து காத்து இருக்கும் ... உயிருடன் கலந்து விட்ட .. உங்கல் ரமணன்...</i> கடிதம் எழுதி அனுப்பிவிட்டு 3 நாட்களின் பின்பு அவன் புதிய வேலை ஆரம்பமானது.அவனின் திறமையை ஓரிரு நாட்களிலேஅவதானித்த மேலதிகாரி.அவனை அழைத்து கேட்டார் . "உனக்கு பிடித்தால் உன் சம்பளம் அதிகரித்து வேறு வேலை தரட்டுமா? என்று கேட்டார் ..வரும் போது அவன் சம்பள ஒப்பந்தம் 800 ரியால்கள்.அவர் சொன்னார் 1350ரியால்கள் சம்பளம் அத்துடன் பிரேக்டவுன் மெக்கானிக் வாகனம் என்றுபதவி உயர்வுகளுடன் சலுகைகளுடன் அவன் யோசித்துவிட்டும் சரி என்றுதலையாட்டினான் ... அன்னலும் அவன் மனது தவித்தது... அவன் தன் தங்கும் அறைக்கு வந்த போது... அன்று வியாழக்கிழமை அடுத்தநாள் வெள்ளிக் கிழமையாதலால் விடுமுறை நிறைய நண்பர்கள் அவனை பார்க்கவந்து இருந்தார்கள், "அதிலேஒருவர் தம்பி உங்கள் பொஸ் துவேசம் பிடித்தவன் கவனமாக இருங்கோ, என்று சொன்னார். "அப்பொழுது ரமணன்சொன்னான். அண்னை இன்று ஒரு புதிய விடையம் நடந்தது என்று ,,அவனை பொஸ் கேட்டதும் தான் சம்மதித்துவிட்டதாகவும் சொன்னான் .. அவனை எல்லொருமே ஆச்சரியத்துடனும் திடுகிட்டுப் போய் பார்த்தார்கள் ...வந்து ஒரு கிழமைக்குள் இப்படி ஒரு சம்பளமா என்று ஆச்சரியபட்டார்கள்.அன்றில் இருந்து அவனை யாருமே மதிப்புடனே நடத்த தொடங்கினார்கள் ..இதுவரை எந்த இலங்கை தமிழருமே அந்த கொம்பனியில் இத்னை சம்பளத்துடனும், வசதியுடனும் ,வேலை செய்யவில்லை அவர்களால் வேறு நகரத்துக்கோ அவர்கள் உறவுகளையே பார்க்க முடியாது ..போக கொம்பனி அனுமதி கொடுக்கமாட்டாது.. அருகே இருந்தாலும் கடிதங்கள் தான் தொடர்பு வழி . ரமணனுக்கு இப்படி ஒரு வேலை கிடைத்ததும் எல்லொருக்கும் சந்தோசம் .அவர்கள் உறவுகளை அவனாவது சந்தித்து வருவான் என்று எது கேட்டலும் செய்து கொடுத்தார்கள்.. அவனும் வேலையில் மிகவும் ஈடு பட்டான் ...செய்ய தொடங்கினான் அவனுடன் வேலை செய்த பிலிப்பீன் மெக்கானிகை விட அவனிடன் திருத்கவேலை செய்த வாகன சாரதிகலிடையே மிகவும் நல்லபெயர் பெற்றான். <b>தொடரும்.........</b>
inthirajith
11-07-2005, 12:50 AM
அபிப்பிராயம் சொல்லுங்களேன் இந்தகதையை யாரவது சேர்த்து எழுதுங்களேன் என்னை உங்கள் அபிப்பிராயம் தான் புடம் போடும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்
inthirajith
11-07-2005, 01:42 AM
இந்திரஜித் கதை அருமை நீங்கள் போட போட நான் வாசித்துவிட்டேன், நான் நினைத்தேன் இங்கு நீங்கள் கதை தொடர்ந்து எழுதுகிறீர்கள், கருத்துகள் எழுதக்கூடாது என்று, கதை உண்மையிலேயே அருமையாக, இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க ஆவலாக இருக்கிறோம் தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
.
.
11-07-2005, 01:54 AM
இந்திரஜித் கதை மிகவும் யதார்த்தமாக அழககாக செல்கிறது. எழுத்துப்பிழைகளை கவனித்து எழுதவும் . மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள்.
<b> .. .. !!</b>
11-07-2005, 02:57 AM
நல்லா இருக்கு...முழு கதையையும் சீக்கிறமா எழுதிபோடுங்க அண்ணா..வாசிக்க ஆவலாக உள்ளேம்..வெயிட் பன்ன முடியலப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
11-07-2005, 04:42 PM
<span style='font-size:25pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 5 </span>
அந்த பாலைவனபூமியின் காலநிலை அவனுக்கு ஒத்துவரவில்லை. மூக்கினால் அடிக்கடி இரத்தம் வர வைத்தியரிடம் போனபோது, அவர் சொன்னார் "ஆரம்பத்தில் அப்படிதான் மூக்கில் ரத்தம் வரும் அதைவிட விரல்கள் குளிரில் வெடித்து இரத்தம் வரும் என்று." மெதுவாக 3 கிழமையின் பின்பு அவன் பெயரில் கடிதம் வந்து இருப்பதாக மேலதிகாரி சொன்னார். அவனுக்கு புலன் வேலையில் ஓடவில்லை. எப்போ மாலை வரும், யாரிடம் இருந்து வந்து இருக்கும் என்று மனது அலை பாயத் தொடங்கியது. மிகவும் கஸ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான். பாலைவனத்தில் இருக்கும் ஜீவன்களுக்கு கடிதம் ஒன்று தான் ஜீவனை காப்பாற்றும் ஒரு அமுதம் அந்த மடல்கள் தான் அவர்களின் ஆதாரமே கடிதத்திலே தான் வாழ்க்கையே போகும். அந்த வாழ்க்கையை வாழ்வதுக்கு நிறைய மனபலம் வேண்டும். நட்பு ஒன்றுதான் சுகதுக்கம் எல்லாவற்றிக்கும் மருந்து. மெதுவாக போகும் நேரத்தை சபித்தபடியே மாலைவரும் வரை, எப்படியோ நேரத்தை ஓட்டியவன் அலுவலகத்துக்குச் சென்று, கைகள் நடுங்க கடிதத்தை வாங்கிக் கொண்டான். அதில் முத்து முத்தாய் இருந்த மதுவின் கையெழுத்தை பார்த்ததும் விரல்கள் நடுங்க பிரித்தான் <i>என்றும் என் இனியவருக்கு, பாசத்துடனும் காதலுடனும் உங்கள் மது எழுதுவது.. உயிரே,நலமா? உங்களைப் பிரிந்த நாள் முதலாய் என் அந்தராத்மா நிம்மதியில்லாமல் அலைகிறது. உங்களப்பா(என் மாமா)உங்கள் மடலை என்னிடம் பிரிக்காமல் கொண்டுவந்து வந்து தந்தார். உலகத்திலே மகனுக்காக காதல்கடிதம் சுமந்துவந்தது என் மாமா தான் என்று நினைக்கிறேன். இனிமேல் எனக்கு நேரடியாக மடல் அனுப்புங்கள் நிற்க. உங்களை நான் முத்தமிட்டது ஊர் எல்லாம் பரவி விட்டது. அம்மா என்னை ஒரே திட்டுவதுவும் தான் அண்ணாவுக்கு கடிதம் போட்டுவிட்டா. எனக்கும் உங்களுக்கும் காதல் என்று. கவனம் அண்ணாவுடன் சண்டை பிடிக்கவேண்டாம் அவரிடம் குணம் என்னைவிட எல்லாம் புரிந்தவர் நீங்கள் சிக்கல் இல்லாமல் நாம் சேரவேண்டும். உங்களை முத்தமிட நினைக்கவில்லை ஆனால் என் உயிர் உங்களிடமே கூட போவது போல் ஒரு உணர்வு அதணால் தான் அப்படி நடந்துவிட்டேன். ஆசை முத்தங்கள் எப்போதும் என் மனம் கவர்ந்த என் செல்ல அத்தானுக்கு. இப்பொதெல்லம் என் தலையணைக்கு அடியில் உங்கள் மடல் தான் துணை. தூக்கம் வராத இரவுகள் எல்லாம் அந்தமடல் தான் என் துயர் துடைக்கும் தேவதூதன் கிழமைக்கு 2கடிதங்கள் போடுங்கோ. தபால்காரனைப்பார்த்துக் கொண்டு இருப்பதுதான் என் வேலை. அம்மா பேசுகிறா எனக்கு பைத்தியம் என்று… இப்படி ஒரு அன்பானவனை பிரிந்தால் எந்த பொண்ணுக்குதான் பைத்தியம் பிடிக்காது. ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்கோ பார்க்க எனக்கு மட்டும் பிளிஸ்</i> என்று வாசிக்க கண்கள் பனிக்க அவன் மீதியை அறையில் சென்று வாசிக்க வைத்துக் கொண்டான் அறைக்குள் சென்றவன் உடை கூட மாற்றத் தோன்றாமல் படுக்கையில் சாய்ந்தான். மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் படுக்கைகள் ரொம்ப வித்தியாசமானவை, அதை விபரித்தால் தான் புரியும். மேலும், கீழும், அமைந்த படுக்கைகள். ஆதனைச் சுற்றி காட்போட் மட்டைகளினால் அடைத்து, ஒரு தனி உலகமாக்கி விடுவார்கள். அதனுள்ளே தன் மனைவி பிள்ளைகள் எல்லோரினதும் படங்களை மாட்டி படுக்கப்போகும் முன்பு முத்தமிடுவார்கள். மின்குமிழ் பூட்டி அழகு பார்ப்பார்கள். கடிதம் வந்தவுடன் அந்த படுக்கையில் வாசித்தபடியே கண்ணில் நீர்வடிய… படுக்கையை நனைக்கும் கணவர்கள், காதலியின் கடிதம் காணாமல் ஏங்கும் காளையர்களின் சோகப்பாடல்கள்... என்று ஓர் கதம்பமான உணர்வு அலைகள் அந்த அறையினுள்ளே அலையும். ஓர் விசித்திரமான உலகம் அது.. அந்த வாழ்க்கையின் சுவை ஒரு தனி இன்பம் தான். கவலையோ, இன்பமோ பகிரும் அற்புதமான உலகம் அது. பெண் என்று ஒர் உறவு அங்கே இல்லாத போதும், அங்கே அவர்கள் எல்லோரையும் இணத்து வைத்த உறவுகள் பெண்மை தானோ! மனைவி, பிள்ளைகள் ,காதலி ,சகோதரி என்று பெண்களுக்கே என்று தானே ஒவ்வொரு மனிதனும் அலைகிறான். ஏதோ ஒருவடிவத்தில் ஒரு பெண் ஒரு ஆணை ஆட்டி படைகிறாள் தாயாக, தங்கையாக, காதலியாக. படுக்கையில் சாய்ந்த அவனுக்கு தன் தவிப்பு பற்றி முதன் முறையாக வெட்கம் வந்தது காதல் எப்படியெல்லாம் மனிதனை மாற்றுகிறது. மெல்ல தொடர்ந்து மதுவின் கடிதத்தை வாசிக்கத் தொடங்கினான். <i>"ரமணா... என் ஆருயிரே.. என்னை தழுவிய உங்கள் கரங்கள் எப்போ என்னை தீண்டும் உங்கள் மடியில் ஆயிரம் யுகங்கள் சாய வேண்டும் "சங்கீதம் நீயாக சாகித்தியம் நானாக வாழ்கின்ற மனசும் சாரீரம்" சேர மனது துடிக்கின்றது... கையில் வைத்து இருந்த இனிப்பை யாரோ பறித்து விட்டது போல் ஒரு உணர்வு வந்து கொண்டே இருக்கிறது. யார் செய்த சதி இது. படுக்கையெல்லாம் முள்ளாய் ...தூக்கமும் வராமல் உங்களை பிரிந்து 2 ஆண்டுகள் எப்படி... நினைக்கவே முடியாமல்… இந்தகடிதம் எழுதும் போது விடிகாலை 2 மணி அன்பு முத்தங்கள்.. என் இனியவரே ..வேறு என்ன பதிலை எதிர்பார்த்து காதலுடன் உங்கள் வருங்கால மனைவி .. மது அன்பு முத்தங்கள் கண்ணா.. </i> "கடிதம் வாசித்த அவனுக்கு உறக்கம் வரவில்லை… மெதுவாக எழுந்து கடிதம் எழுத ஆரம்பித்தான். அவன் நினைவுகளும் மதுவுடன் வாழ்வது போல்… எழுதும் மடலுடன் ஒன்றி விட்டான் போல் இருந்தது. அடுத்த படுக்கையில் இருந்து அவனை பர்ர்த்த ஜெனி கேட்டான்.. "யாரிடம் இருந்து கடிதம் என்று " மழுப்பலாக சிரித்த ரமணனை பார்த்த ஜெனி " ம்ம் எனக்கு தான் 2 கிழமையாக கடிதமே வரவில்லை என்று கவலை பட்டான். கல்யாணம் கட்டி ஒரு மாதத்தில் மனைவியை பிரிந்து வந்த ஜீவன் அவன் படுக்கபோக முதல் மனைவியின் போட்டோவை முத்தமிடும் சத்தம் அந்த அறை பூராக கேட்கும். எல்லோரும் அனுதாபத்துடன் அவனை ரசிப்பார்கள். ஊருக்கு சென்று வரும் கல்யாணமானவர்கள் ஒரு கிழமையோ, ஒரு மாதமோ பித்துபிடித்தவர்கள் போல் இருப்பார்கள். ரமணனுக்கும் அவர்கள் நிலை புரிந்தது காதலிக்கத் தொடங்கி ஒரு மாதத்தில் ஏற்பட்ட பிரிவையே தாங்கமுடியாதவனால், தன் நண்பர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.! "இப்படியே வேலை என்று வாழ்க்கை ஓடியது அப்பாவும் கடிதம் போட்டார். அக்காவுக்கு கல்யாணம் சரி வந்து இருக்கு என்று. அவனும் பதில் உடன் பணமும் அனுப்பினான். ஓய்வு இல்லாமல் மேலதிக நேர வேலை செய்து நிறைய பணமும் கையில் இருந்தது. விடு முறையில் ஊருக்கு செல்லும் நண்பனிடம் அக்காவின் தாலிக்கு தங்க பிஸ்கட் வாங்கி பணமும் கொடுத்து அனுப்பினான். ரமணனுக்கு என்று கொம்பனி வாகனம் கொடுத்தபடியால் எல்லா இலங்கை சேர்ந்த நண்பர்களுக்கும் இலவசமாக விமான நிலையம் செல்ல உதவி செய்யும் அவனை எல்லோருக்கும் தேவையாக இருந்தது. அவனும் சலிக்காமல் உதவி செய்வான். விடுமுறையில் ஊருக்கு செல்லும் யாரும் அவன் வீட்டில் போய் சாப்பிடாமல் வந்ததும் இல்லை. அவர்களை சாப்பிடும் போது பார்த்தபடியே இருக்கும் அவன் வாய் பேசாத அன்னை சொல்லுவா அவர்களை பார்க்கும் போது ரமணனை பார்ப்பது போல் இருக்கு என்று வாத்சல்யத்துடன் பரிமாறி சைகையில் சொல்லுவா என்று இங்கு வந்து கதை கதையாக சொல்வார்கள்... சில வேளைகளில் மதுவுக்கும் சாறிகள், வாசனைத் திரவியங்கள் என்று கொடுத்து விடுவான் இப்படியே 3 வருடங்கள் ஓடின. இரண்டு சகோதரிகளுக்கும் திருமணமும் முடிந்து, சந்தோசமாக வாழ்க்கை நடத்துவதாக கேள்விபட்டான். ஒரு நாள் வேலையின் நிமித்தம் ஜெட்டா நகரத்துக்கு போனபோது அருகில் தான் மதுவின் அண்ணா இருப்பது தெரிந்தது அவனின் முகாமுக்கு சென்றான். அங்கே மதுவின் அண்ணவை சந்தித்தான். அது சொல்ல முடியாத சங்கடமான நிலை எப்படி அழைப்பது? மச்சான் என்றா இல்ல எப்படி? வாங்கோ ரமணன் என்று வரவேற்ற மதுவின் அண்ணாவுடன் அன்று இரவு தங்கினான். மனசுவிட்டு கதைத்தபோது அவனுக்கும் சம்மதம் என்று சொன்னான். அப்போ வருகிற ஆறு மாதங்களின் பின்பு இருவரும் சேர்ந்து போய் கல்யாணம் மதுவுக்கு என்று தீர்மானித்தார்கள். அன்பு நண்பனாக இருந்தவன் சகோதரியின் கணவன் என்ற நிலை வந்த போது ஏற்பட்ட மரியாதை அவனை தவிக்க வைத்தது. எதிர்பாரமல் ஜெட்டாவில் பழுதான வாகனங்கள் அதிகமாகவே, அவன் மேலதிகாரி அவனை தொலைபேசியில் அழைத்து 2,3 கிழமைகள் சென்றாலும் பிரச்சனை இல்லை வேலைகளை முடித்து வரும்படிசொன்னார். மிகுந்த மனக்கஸ்டத்துடன் ஒப்புக் கொண்டான். ரமணன் அடிக்கடி மதுவின் சகோதரனிடம் போவான். மதுவுக்கு பிடித்தமானது என்று பார்த்து பார்த்து வாங்கினான். வருங்கால மனைவி அல்லவா. நகைகள் இப்படி எல்லாமே மிக தரமானவைதான். ஆதைப் பார்த்த அவள் சகோதரன் அத்தான் மதுவுக்கு நினைக்கமுடியாத ஒரு வாழ்க்கை கொடுக்கபோறீங்கள் அவள் கொடுத்து வைத்தவள்… என்று சொல்லி சொல்லி பூரித்து விட்டான். அவன் ஜெட்டாவில் இருக்கும் போது மதுவின் கடிதம் ஒன்று சகோதரனுக்கும் வந்தது அப்போ ரமணன் கேட்டான். "என்னவாம் மது" என்று? வழக்கமாக உங்களைப் போய் பார்க்கச் சொல்லி எழுதும் மது இந்தமுறை உங்களை பற்றி ஏதுமே எழுதவில்லையே ஆச்சரியமாக இரூக்கு என்று சொன்னான் அவள் சகோதரன். மூன்று கிழமையால் திரும்பி அவன் தன் இருப்பிடம் போகும் போது, வழியில் வந்த பாலை வனங்கள் எல்லாம் சோலை வனங்களாக மாறியதை அனுபவித்து கொண்டு வந்தான். அவன் இருப்பிடத்தில் ஒரு வெடிகுண்டு தன் வாழ்க்கையின் பாதை அவன் திட்டங்கள், மனகோட்டை எல்லாமே தவிடு பொடியாகி விடை தெரியா சூனியமாக போகிறான் என்று அவனை பார்த்தவர்களுக்கும் புரியுமா என்ன? 1286 கி,மீ தூரம் கடந்து வந்தவனுக்கு களைப்பே இல்லை மதுவின் நினைப்பும், கல்யாண சந்தோஸமும், அவனை பறக்கவைத்து கொண்டு இருந்தது. அவன் அறையில் 10 கடிதங்கள் இருந்தது அதிலே அவன் ஆசைக்காதலியின் முத்தான எழுத்துகளைக் காணோம் ஒரு புதியமுகவரி யுடன் அவன் நண்பன் ஒருவனின் கடிதம் வந்து இருந்தது அதைவிட அப்பாவின் கடிதத்துடன் தனியாக முத்திரை ஒட்டி ரமணனின் சகோதரி விலாசத்துடன் ஓர் கடிதம். சரி முதல் அக்காவின் கடிதம் பார்ப்போம் என்று உடைத்து வாசிக்க ஆரம்பித்தான். வாசிக்க ஆரம்பித்த அவனுக்கு முதலில் எதுவுமே புரியவில்லை, <i>"அன்பான தம்பிக்கு பாசமுடன் அக்கா அத்தான் எழுதிகொள்வது " என்ன இது புதிதாக இருக்கிறதே என்று நீங்கள் உங்கள் விழி தவிப்பது புரிகிறது என்ன செய்வது,நினைத்தது நம்பியது எல்லாம் கானல் நீர் ஆகும் என்று படைத்தவன் சொல்லாமல் விட்டுவிட்டான். மனம் கலங்க வைக்கவேண்டாம். இங்க இப்போதெல்லாம் மது எங்கள் வீட்டுக்கு வருவதில்லை.. தெரியாத மாதிரி போகிறா. நாங்கள் எம் மச்சாள் என்று மரியாதையாக தான் நடத்துகிறோம். ஒரு கிழமைக்கு முன்னால் அத்தான் மது வேலை செய்யும் வைத்தியசாலைக்கு அண்மையில் தன் நண்பரை சந்தித்து கதைத்து கொண்டு இருந்தபோது யாரோ கூட வேலை செய்யும் ஆணுடன் அன்னியோனியமாக கதைத்துக் கொண்டு போனதை கண்டாராம். மனது பொறுக்கமுடியாமல் எழுதுகிறேன் உண்மையாக இருக்கக்கூடாது என்று மாயவனை வேண்டுகிறேன் என்று இருந்தது.</i> வாசித்தவன் நம்பாமல் கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டான். மேலே வாசிக்காமல் அவன் செந்தழலை கறையான் அரித்துவிட்டது என்றால் நம்ப அவன் என்ன முட்டாளா? அவனுக்கு புரியவே இல்லை மதுவில் அவன் வைத்த அன்பு ம்ம்ம்ம்....! <b>-தொடரும்-</b>
inthirajith
11-07-2005, 10:16 PM
இந்திரஜித் கதையை உடனே தொடங்கியதில் மகிழ்ச்சி. ஒரு தலைப்பின் கீழ் எழுதினால் தொடர்ந்து வாசிக்க இலகுவாக இருக்கும் அத்தோடு எழுத்துப்பிழைகளும் இருக்கின்றது கவனித்து தொடர்ந்து தாருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-08-2005, 12:02 AM
நன்றாக இருக்கிறது இந்திரஜித்.
பாலைவனத்தில் மட்டுமல்ல எவ்விடத்தில் இருந்தாலும் தம்முறவுகளைப் பிரிந்த துயர் ஒன்றும் இலகுவானதல்ல. அதிலும் தான் உயிருக்குயிராக நேசிப்பவரின் பிரிவென்பது சொர்க்கத்தில் இருந்தாலும் எம்வாழ்வையே தொலைத்துவிட்டது போன்றதாகத்தான் இருக்கும். தெடர்ந்து போடுங்க இடையில நிறுத்திடாம........<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
11-08-2005, 12:26 PM
நல்லாயிருக்கு ஆரம்பம் அண்ணா
ஆனால் அழவைக்காதீங்க வாசகர்களையும் ரொம்ப சோகம் வேண்டாம் காதலர்களுக்கும் நன்றி மிகுதி தொடர வாழ்த்துக்கள்
11-08-2005, 01:04 PM
Quote:அதனுள்ளே தன் மனைவி பிள்ளைகள் எல்லோரினதும் படங்களை மாட்டி படுக்கபோகும் முன்பு முத்தமிடுவார்கள் மின்குமிழ் பூட்டி அழகு பார்ப்பார்கள் கடிதம் வந்தவுடன் அந்த படுக்கையை வாசித்தபடியே கண்ணில் நீர்வடியஇ படுக்கையை நனைக்கும் கணவர்கள் தம்பி முகத்தாரின் சொந்த வாழ்க்கையை பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி எழுதுகிறீர் நிச்சயமாக இது ஒரு உண்மைக் கதை என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுவதுக்கு.................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
11-08-2005, 02:31 PM
நன்றாக கொண்டு போறீங்கள் இந்திரஜித். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-08-2005, 02:47 PM
இந்திரஜித் உங்கள் சுடுகின்ற புதைமணல்கள் முந்தைய பதிவுகள் சமுதாயம் பகுதியில் இருக்கிறது. ஒன்றாக்கி விட்டால் வாசிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.
http://www.yarl.com/forum/viewforum.php?f=33
<b> .</b>
<b> .......!</b>
11-08-2005, 03:13 PM
ரொம்ப நன்றி தமிழினி உங்கள் தகவலுக்கு நன்றி அன்பான வணக்கங்களுடன் இந்திரஜித்
inthirajith
11-08-2005, 09:02 PM
<span style='font-size:20pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் தொடரின் அனைத்து பாகங்களையும் ஒரே தலைப்பில் இணைத்துள்ளேன்.</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|
|
« Next Oldest | Next Newest »
|