Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுட்ட கவிதைகளுக்கு நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
quote="nallavan"]என்னங்கோ,
உதுகள எங்கயிருந்து பொறுக்கினியள் எண்டும் போடுங்கோவன்,
இல்லாட்டி நீங்கள்தான் உதக் கிறுக்கினதெண்டெல்லோ சனம் நினைக்கப்போகுது.[/quote]
ஓஓஓஓ இது சுட்ட கவிதை வேனும் என்றால் நீங்களும் சுட்டுப் போடமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
பெண்
சில காலம் பெறோருக்காய்
சில காலம் ஆசிரியருக்காய்
சில காலம் உடன்பிறப்பிற்காய்
மீதி காலம் கணவருக்கும் குழந்தைகளுக்குமாய்
வாழ்வதிலேயே என் வாழ்வு முடிந்து விடும்
எனக்காய் வாழ்வது எப்போது ............. ?
- யாரோ(படித்ததில் பிடித்தது)
....
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>என்று விடுதலை...</b>
பெண்ணே சீர் செய்ய வேண்டும்
அதற்கு முன் உன்னை யாரென்று
அடையாளம் காட்டிவிடு
வீதிக்கு வர இருக்கும் பெண்ணே
நீ வீட்டுக்குள் இருந்து கொண்டே
சாதித்துக் காட்டிவிடு
ஆணுக்கு பெண் சம உரிமையாம்
தயவு செய்து எதில் என்று
எங்களைப் போன்றவர்களுக்கு கூறமுடியுமா?
நியாயம் வேண்டி போராட எமக்கு
வலிமை இல்லாவிட்டாலும் எங்கள்
பேனாவிற்கும் வலிமை கிடையாதா என்ன?
உன் திறமையை வெளிப் படுத்தாமலே
நான்கு சுவர்களுக்குள் உனது
வாழ்க்கை என்றானதா?
அடி பெண்ணே எங்கே
தொலைத்தாய் உன் சுதந்திரத்தை
இன்னும் தேடிக்கிடைக்கவில்லையா?
இலட்சியம் இல்லாத பெண்ணாய்
வாழாதே வாழ்க்கை என்பது உனக்கு
வெறும் பொழுதுபோக்கு ஆகிவிடும்
சுதந்திரக் காற்று இனியும் எங்கள் பக்கம்
கொஞ்சம் வீசுமா? இல்லை புயலாகி
வந்து எம்மையே அழிக்குமா?
பெண்கள் ஆயுதம் ஏந்தி போர்க்களம்
இறங்கும் காலமடி பெண்ணே
நீ இன்னும் அடுப்பங்கரையிலா?
ஊமை கண்ட கனவு போல
உனக்குள்ளையே புழுங்கிச்
சாவதில் என்ன பயன்?
உதட்டில் மட்டும் தெரியும் பெண்ணின்
சிரிப்புக்கு பின் எத்தனை சோகக்
கதைகள் இருக்கின்றன
சோதனைகளை தோளில் சுமந்து
எங்கே செல்கிறாய் இந்த உலகத்தில்
இறக்கி வைக்க இன்னும் உன்னால் முடியவில்லையா?
விந்தை நிறைந்த இந்த உலகில்
பெண் நொந்து நூலாகிப்
போவது தான் வரலாறா?
தண்ணீரில் மூழ்கி விடாதே பெண்ணே
எதிர் நீச்சல் போட்டால் தான்
கரையை நீ அடைய முடியும்
உன் எதிர்காலம் உன் காலடியில்
தான் கிடக்கிறது உனக்குள் உறங்கும்
விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்பு
வானவில்லுக்கு வர்ணம்
பூசும் இந்த உலகம் ஒரு விதவையின்
சேலையில் பூசட்டும்
அருவி ஓடுவதற்கு யாரிடம் அனுமதி
கேட்பது பெண்ணே கல் காயப்பட
மறுத்தால் சிற்பமாகாது அதை உணர்ந்துகொள்
இறந்த காலத்தை எண்ணி
எண்ணியே நீ நிகழ் காலத்தை
தொலைத்து விடாதே
பெண்ணே இருட்டுக்குள் வாழும்
உன்னை வெளிச்சத்துக்கு கொண்டு வா
வெளியுலகம் உன்னைப் பார்க்கட்டும்
மீண்டும் பாரதி பிறக்க வேண்டுமா?
பெண் விடுதலைக்காக கவி பாட
பாரதியே நீ மீண்டும் பிறந்து வா எமக்காக
- யாரோ
<b> .. .. !!</b>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
நல்ல வரிகள் நன்றி பெரிய கவிதை சிந்தனை உள்ள கவிதை கொஞ்சம் வாசிக்க சோகமாகத்தான் இருக்கு
வாழ்த்துக்கள் அக்கா
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
நன்றி சொன்ன அனவருக்கும் நன்றி. வாசித்ததில் எனக்கு பிடித்த கவிதை அதுதான் இங்க போட்டன். உங்களுக்கும் பிடித்ததை இட்டு ரொம்ப சந்தோசம்.
<b> .. .. !!</b>
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
நிலவு தனிமையில்
வானமும் தனிமையில்
இதயம் எங்கு தேடினாலும்
மிஞ்சுவது வெறுமை
நம்பிக்கைகள் மவுனமாய்
செத்துவிட்டன.
தனியாக ஒரு புகைக் கீற்று
மட்டும்
கணநேரம் நடுங்கிச் செல்கிறது
உடலும் உள்ளமும்
தனிமையில் தரிசிப்பதுதான்
வாழ்க்கையா ?
எப்போதாவது ஒரு துணை கிடைத்தாலும்
நம்மைக் கரம் பற்றி இழுத்துச் செல்வது
தனிமை
ஆள் அரவமற்ற மாளிகைக்குள்
தயங்கியபடி ஒரு தீபம் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது
தனிமையின்
இடிபாடுகளுக்கிடையில்
இன்னும் பல வருடங்கள்
நான் நம்பிக்கையுடன்
காத்திருப்பேன் .........
வளைந்து நெளிந்து செல்லும்
வாழ்க்கைப் பாதையை
பார்த்தபடி
அதன் பிறகு போய்விடுவேன்
இந்த உலகை விட்டு
தனியாக...............
- உருது கவிதை
....
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
ரசிகை, சக்தி கவிதைகள் நல்லா இருக்கு......
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
காதலி
என்னைக் கொன்ற பிறகு
உன் வீதியில்
புதைது விடாதே
ஊரார்
எனது புதைக்குழியை வைத்து
உனது மலர்வனத்தை ஏன்
கண்டு பிடிக்க வேண்டும்
- உருது கவிதை
....
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
சக்தி சுட்ட கவிதை நல்லாயிருக்கு
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
காதல் உண்டு
காற்றுக்கும் காதல் உண்டு
இலைகளில் மேல்!
நிலவுக்கும் காதல் உண்டு
வானத்தின் மேல்!
பனித்துளிக்கும் காதல் உண்டு
புற்களின் மேல்!
வண்டுக்கும் காதல் உண்டு
மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு
நட்பின் மேல்!
எனக்கும் காதல் உண்டு
தமிழ்த்தாயே உன் மேல்!
..
....
..!
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்