Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
கேள்விக்கு முன்னுரைபோல் ஒரு சின்ன கதையுண்டு. ஒரு ஊரில் அப்பன், சுப்பன் என்று இரண்டு தொழிலாளர்கள், ஒரு முதலாளியிடம் வேலை செய்தார்கள். அந்த முதலாளியிடம் ஒரு ஆடு இருந்தது. அந்த ஆடு ஒரு நாள் ரெண்டு குட்டி போட்டது. ஆனால் அந்த ஆடு குட்டி போட்டதும் இறந்து போனது. அட அம்மா ஆடு இல்லாமல் இந்தக் குட்டிகளை எப்படி வளர்ப்பது என்று நினைத்த அந்த முதலாளி, அந்த இரண்டு குட்டிகளையும் விற்பதற்கு முடிவு செய்தார். அந்த தொழிலாளிகளிடம், அதை விற்பதற்கு ஏற்பாடு செய்ய சொன்னாராம். அவர்களும் சரி என்று சொல்லிட்டு வீட்டுக்குப் போனார்கள். போகும் வழியில் அவர்கள் இருவரும் யோசித்தார்கள், 'அட இந்த ஆட்டுக் குட்டிகளை நாங்களே வாங்கி வளர்த்தால் என்ன' என்று. அவர்கள் இரண்டு பேரும், ஆளுக்கு 25 ரூபா போட்டு அந்த ஆட்டுகுட்டிகள் இரண்டையும், 50 ரூபாவுக்கு முதலாளியிடம் வாங்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஆங்... நான் எங்கே விட்டேன், ஆஆ... அப்படியே மறுநாள் முதலாளியிடம் போய் 50 ரூபா கொடுத்து விட்டு, இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் வாங்கிக்கொண்டு போனார்கள். அவர்கள் போன பின்னர்தான் முதலாளி யோசித்தார், 'அட, நம்மிடம் வேலை செய்பவர்களாச்சே, அதனால் கொஞ்சம் விலையை குறைத்துக் கொள்ளலாமே' என்று. யோசித்தவர் உடனேயே, அங்கே வேலை பார்த்துக்கொண்டு இருந்த கந்தனைக் கூப்பிட்டு, 5 ரூபாவைக் கொடுத்து, "இதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டு வா" என்று கொடுத்து அனுப்பினார். அந்தக் கந்தன் என்ன செய்தானென்றால், அதில் 2 ரூபாவை அவன் எடுத்துக்கொண்டு 3 ரூபாவை மட்டும் அந்த அப்பன் + சுப்பனிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். அவர்கள் இரண்டு பேரும், அதை பாதியாக்கி 1.50 ரூபாவாக எடுத்துக் கொண்டார்கள்.
சரி இதுதான் கதை. இப்போ கேள்வி என்னவென்றால், அப்பனுக்கும், சுப்பனுக்கும், தாம் கொடுத்த பணத்தில் 1.50 ரூபா திருப்பி கிடைத்து விட்டது. அப்படியானால், அவர்கள் ஒவ்வொருவரும் அந்த ஆட்டுக் குட்டிக்கு கொடுத்திருக்கிற பணம் 25௧.50=23.50 ரூபா. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொடுத்திருக்கிற பணம் 23.50 + 23.50 = 47 ரூபா, சரியா? இதில் கந்தன் எடுத்துக் கொண்ட பணம் 2 ரூபா, சரியா? அப்போ 47 + 2 = 49 ரூபா வருகிறது. அப்படியானால், அந்த மிச்சம் 1 ரூபா எங்கே போனது? இதுதான் கேள்வி.
<b> .. .. !!</b>
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
இருவரும் ஆட்டுக்கு கொடுத்த விலை 50-3 47
முதலாளி பெற்றது 45 கந்தன் எடுத்தது 2
மொத்தம் 47
!:lol::lol::lol:
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
சரி நானே சொல்லுறன்
இந்தக் கேள்விக்கு நேரடியான, விளக்கமான பதிலை இப்படிச் சொல்லலாம்.
"அப்பனும் சுப்பனும் செலவு செய்த பணம்தானே 47 (23.50 + 23.50) ரூபா. அந்த செலவு செய்யப்பட்ட பணம் எங்கே இருக்கிறது? முதலாளியிடம் 45 (22.50 + 22.50) ரூபாவும், கந்தனிடம் 2 (1 + 1) ரூபாவும்தானே? அவர்கள் செலவு செய்திருக்கும் பணத்தின் ஒரு பகுதிதானே கந்தன் வைத்திருப்பது. அப்படியானால் அந்த 47 ரூபாவுக்குள்தானே அந்த 2 ரூபாவும் அடக்கம். எனவே அவை இரண்டையும் கூட்டிப் பார்க்க முடியாதுதானே? எனவே அந்தக் கேள்வி பிழையானது." <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
தப்புக்கணக்கு அதுக்கு தரவுகள் வேணுமா?
!:lol::lol::lol:
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அனித்தா முன்னுக்கு போய் கேள்வியை வாசியுங்கோ அப்புறம் சொல்லுன்கோ தப்புகணக்கோ இல்லையோ என்று
<b> .. .. !!</b>
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
சரிங்க! சாரிங்க!! ஏன் கோபிக்கிறீங்க!!1
!:lol::lol::lol: