Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாதனை
சாதனைதான்
[b] ?
Reply
களத்தில் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

நமது சமூகத்திற்குப் பல செய்திகளைச் சொல்ல வேண்டும் என்றால் சில விடயங்களில் மிகவும் கடினமாகத்தான் நடந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.இது காலத்தால் நாம் கண்டுணர்ந்திருக்கக்கூடிய <b>உண்மைகளாகவும்</b> இருக்கின்றது.

அந்த வகையில் யாழ் களம் வெறும் ஒரு இணையத்தளமாக மாத்திரமன்றி <b>சமூகத்திற்கு செய்திகளை எடுத்துச் செல்லும் ஒரு ஊடகமாகவும் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது</b>.

சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஊடகக்காரர்களுக்கு ஒரு அசாத்திய துணிவும் நேர்மையும் தேவைப்படுகிறது.அந்த நேர்மையும் துணிவும் உருவாக வேண்டும் என்றால் சமூகமாகிய நாம் பாகுபாடுகளை மறந்து நல்லது கெட்டது பற்றியும் விமர்சிக்கத் தயங்கக் கூடாது.

இந்த வானொலி விடயத்தினைப் பற்றி இங்கு எழுதியது இன்று அந்த வானொலிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எத்தனையோ பொய்யான பிரச்சாரங்களுக்குப் <b>பதிலாக</b> அமைந்துள்ளதாக அந்த வானொலியை நேசிக்கும் உண்மையான நேயர்கள் நேற்றும் இன்றும் நிகழ்ச்சிகளின் போது வானலையில் தெரிவித்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

வழக்கத்திற்கு மாறாக இங்கு பலரின் பெயர்கள் நேரடியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது யாழ் கள <b>நிர்வாகத்திற்கு</b> தர்ம சங்கடமான விடயம்.எனினும் உண்மைகள் நிலைக்க வேண்டும் என்றால் இதுவும் தவிர்க்க முடியாதது.கள நிர்வாகத்தினரை எந்த சந்தர்ப்பத்திலும் யாரும் மறந்துவிடாதீர்கள்.

<b>அவர்கள் பக்க சார்பற்றவர்கள்</b>.அதனால் தான் யாரை வேண்டுமானாலும் கருத்தெழுத அனுமதிக்கிறார்கள்.தவிரவும் பொறுப்பாளர் யாழ் இங்கு நடுநிலையாகவே தனது கருத்தினை எழுதியிருப்பது மதிக்கத்தக்கது.மறுபக்கம் என்று ஒன்று இருக்கின்றதென்ற சுரதா அவர்களின் நியாயமான எடுத்துக்ாட்டலையும் அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.

எனினும் யாழ் களத்தில் இது பற்றிய விடயங்களை நான் பகிர்ந்து கொண்டதிலும் <b>ஒரு அர்த்தமும் உட்காரணமும் இருக்கின்றது</b>.

அதாவது இந்த வானொலியில் கடமையாற்றும்,கடமையாற்றிய,மற்றும் ஆதரவாளர்கள் என்று அனைவருக்கும் யாழ் இணையத்தினைப் பார்க்கும் <b>பழக்கம்</b> உண்டு.நேற்றைய தினம் முதல் அதிகரித்திருக்கும் கெஸ்டுகளின் எண்ணிக்கையும் இதற்கு ஒரு சான்றாகும்.

இந்தப்பழக்கத்தினை மற்றவர்கள் மத்தியில் உருவாக்கிய பெருமை அதே வெளியேற்றப்பட்ட அறிவிப்பாளரைத் தான் சாரும்.

முன்னைய நாட்களில் ரிபிஸி இருந்தது மட்டுமன்றி மற்றவர்களையும் தூண்டும் இவர்..

இப்போதும் யாழ் இணையத்தினைப் பார்த்திருப்பார்,இதுபற்றித் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியிருப்பார்,மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக யார் யாரையெல்லாம் தயாராக்குகிறாரோ நானறியேன்.<b>ஆனால் அவர் பார்வை யாழ் பக்கம் இருப்பதனை 100 வீதம் உறுதியாக என்னால் சொல்ல முடியும்.</b>

எனவே சுரதா அவர்களின் வேண்டுகோளின் படி மறுபக்கம் தமது நியாயங்களைக் கூட முன்வைக்கட்டும்.சம்பந்தப்பட்டவர்கள் பதில் எழுதட்டும்.

வீராவினால் இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களாவன இந்தத் <b>துன்பியல் சரித்திரத்தின் சாரம்சம்</b> மாத்திரமே.இதனை அனைவரும் கவனத்திற்கொள்ளுங்கள்.

வாத விவாதம் என்று வரும் போது தேவைப்படும் என்பதற்காக எத்தனையோ சம்பவங்களை நான் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறேன்வைத்திருக்கிறேன்.

இப்போது இந்த விடயத்தினை ஆரம்பித்துவிட்டோம்.ஐபிஸி இருந்தால்,..

ஒரு தனி மனித அட்டகாசங்களுக்காக புலம் வாழ் வானொலி நேயர்கள் அனைவரும் பாதிக்கப்படுவதை <b>யாராலும் நிறுத்த முடியாது.</b>

சரி,வாத விவாதம் என்று வந்தால் மாத்திரம் அந்த விடயங்களைத் தொடுவோம்.

ஆனால் யாழ் அவர்களின் காலத்திற்கேற்ற மிகப் பொருத்தமான இந்தக் கேள்விக்காக எனது பதில்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.அனைவரும் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து யாழ் இணையத்தின் கருத்துக்களத்தினை மெருகூட்டுங்கள்.

யாழ்/yarl Wrote:இன்னொரு சந்தேகம்..
நேயர்கள் அறிவிப்பாளரின் எல்லைகளை கடந்து அவரை
விசுவாசிக்க ஆரம்பிப்பதால்தானோ இப்படியான பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன..அல்லது நேயர்களால் வானொலிகளில் தூண்டிவிடப்படுகின்றன..????
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
வீரா.. சம்பந்தப்பட்ட சுந்தருக்கு ஆரம்பிக்க முன்னமே எச்சரிக்கை செய்தேன். அவரது காலம் அனுபவித்து உணரவேண்டுமென்றிருந்ததால் நான் சொல்லியது கேட்கவில்லை. இனிமேலாவது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள அவர் வணங்கும் ஆண்டவன் புத்தியைக் கொடுக்கட்டும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நான்குமணிநேர வானொலி நிகழ்ச்சி. அதில் பாதி ஒலிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதற்குக்கூட அடம்பிடித்து முக்காலும் வாயாலும் அழுது புலம்பி ஒப்பாரி வைத்த பலரை எனது வாழ்க்கையில் சந்தித்தேன்.

சிவாந்தியினுடைய முயற்சியை கேள்விப்பட்டதும் ரமணன் கூறிய விதிமுறைகள்தான் ஞாபகத்திற்கு வந்தது. அது எவ்வளவு கடினம் எவ்வளவு தூரம் சாத்தியம் வெற்றியடைய எவ்வளவு வைராக்கியம் தேவைஎன்பது தெரிந்து வெற்றிகரமாக முடிவடையுமட்டும் எதுவும் எழுதக்கூடாது என்று தம்பிடித்து காத்திருந்தேன்.

சாதனை புத்தகத்தில் சிவாந்தியினுடைய பெயர் தங்குதடையின்றி பிரசுரமாகி அதற்கான சான்றிதழும்கிடைக்க.. சிவாந்திக்கு எனது மனப்பூர்வமான நல்லாசிகள்.
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
உண்மைதான் திரு மதி அவர்களே,தாங்கள் உட்பட தாங்களும் அறிந்த சுந்தரின் நலன் விரும்பிகள் எத்தனையோ பேர் இவருடன் கூட்டுச் சேர வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்கள்.

ஆனால் விதி அவரை விடவில்லை.நடந்தது போகட்டும் தங்கள் விருப்பப்படியே இனியாவது அவர் புத்தியுடன் நடக்கட்டும்.

சரி, சுரதாவின் கேள்விக்கு நான் தரும் பதில் :

வானொலி நேயர்கள் அறிவிப்பாளரின் எல்லை கடந்து அவரை நேசிப்பதனால் விசுவாசிப்பதனால் என்பதை விட.... பிரதானமாக <b>வானொலியின் குறிப்பிட்ட விசுவாசிகள்</b> வரம்பு மீறி நடப்பதனால்...அவர்கள் தூண்டுதல்களால் தான் வானொலிகளுக்குள் பிளவு வருகின்றதென்பது எனது கருத்து.

மற்றவர்களும் தங்கள் பார்வைகளை முன்வைக்கட்டும்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
ஈரிபிசியில் இருந்து வெளியேறியவர்களின் குரலை
வெக்ரோன் தொலைக்காட்சியில்
கேட்கமுடிகிறது
Reply
ganesh Wrote:ஈரிபிசியில் இருந்து வெளியேறியவர்களின் குரலை
வெக்ரோன் தொலைக்காட்சியில்
கேட்கமுடிகிறது
வெக்ரோனுக்குக் கெட்டகாலம் போலும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
அதுக்கு எப்பவோ கெட்ட காலம் தொடங்கிபோட்டுது சீ ஜ ரீ வி யை சில கூட்டம் நாசம் பன்ச்சுது அந்த கூட்டம் அதுக்கை இப்பபோய் நிக்குது.
Reply
திரு ஜெயக்குமார் சற்றுமுன் செய்தி வாசித்திருந்தார் குரலைமட்டும்தான்
கேட்கமுடிந்தது
Reply
வானலையில் சாதனை படைத்து
தமிழருக்கும், பெண்களுக்கும் பெருமை சேர்த்துத் தந்த
ஈழப்பெண் சிவாந்திக்கு நிறைந்த வாழ்த்துக்கள்.
Nadpudan
Chandravathanaa
Reply
வானலையில் சாதனை படைத்து
தமிழருக்கும், பெண்களுக்கும் பெருமை சேர்த்துத் தந்த
ஈழப்பெண் சிவாந்திக்கு நிறைந்த வாழ்த்துக்கள்.


இதன் விபரங்களை உங்கள் குடிலில் பதிவாக்கிவிடுங்களேன்.
Reply
யாழ்

சிவாந்தியின் சாதனை பற்றியதான சரியானதொரு விபரத்தை சரியான முறையில் தொகுத்து எனது குடிலில் பதிக்க வேண்டுமென்பது எனதும் விருப்பமும் கூட.

ஆனால் சரியான முறையில் எழுத தற்சமயம் நேரம் ஒத்துழைக்கவில்லை.

எங்காவது சிவாந்தியின் சாதனை பற்றிய சரியான விபரங்கள் அடங்கிய கட்டுரை இருந்தால் தெரியப் படுத்துங்கள். அதையாவது தற்போதைக்கு எனது குடிலில் சேர்த்து விடுகிறேன்.
Nadpudan
Chandravathanaa
Reply
வானொலியில் தொடர்ந்து பேசி தமிழ்ப் பெண் உலக சாதனை

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட வானொலி அறிவிப்பாளரான செல்வி சிவாந்தி, 3 நாட்கள் தொடர்ந்து பரதநாட்டிýயம் ஆடிý 2 ஆவது கின்னஸ் சாதனையை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

ஐரோப்பிய தமிழ் ஒளிபரப்புக் கூýட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகக் கடமையாற்றி வரும் சிவாந்தி, கடந்த வாரம் 111 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக வானொலியில் உரையாற்றி புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தினார்.

இதற்கு முன்னர் சுவிஸ் நாட்டவர் ஒருவர் 103 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் வானொலியில் உரையாற்றி கின்னஸ் சாதனையை ஏற்படுத்தினார். இவரது சாதனையைத்தான் செல்வி சிவாந்தி தற்போது முறியடிýத்துள்ளார்.

இவர் வானொலியில் உரையாற்றுவதற்கு முன்னர், தான் 123 மணித்தியாலங்கள் தொடர்ந்து உரையாற்றப் போவதாகக் கூýறி போட்டிýயை ஆரம்பித்தார். ஆனால் இவர் 104 மணித்தியாலங்கள் தொடர்ந்து உரையாற்றி முன்னைய சாதனையை முறியடிýத்ததும் இவரது உடலில் ஒருவித தளர்ச்சி ஏற்பட்டதை வைத்தியர்கள் தெரிந்து கொண்டதும் உடனடிýயாக, உரையாற்றுவதை நிறுத்தும்படிý தெரிவித்தனர்.

ஆனாலும், செல்வி சிவாந்தி தான் தொடர்ந்தும் உரையாற்றப் போவதாகக் கூýறி போட்டிýயில் இருந்து விலகுவதற்கு மறுத்துவிட்டார். இதனால், இவரது உடலில் தொடர்ந்தும் தளர்ச்சி நிலை ஏற்பட்டு வருவதாக, வைத்தியர்கள் அடிýக்கடிý தெரிவித்ததைத் தொடர்ந்து, செல்வி சிவாந்தி 111 மணித்தியாலங்கள் 45 நிமிடத்துடன், உரையாற்றுவதை நிறுத்திக் கொண்டார்.

வானொலியில் 111 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தொடர்ந்து உரையாற்றி புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்திய முதலாவது இலங்கை தமிழ் பெண்மணி என்ற புகழ் தற்போது இவருக்குக் கிடைத்துள்ளது.

3 நாட்கள் தொடர்ந்து பரதநாட்டிýயம் ஆடிý, 2 ஆவது கின்னஸ் சாதனையை தான் விரைவில் ஏற்படுத்துவேன், என்று கூýறிய செல்வி சிவாந்தி இச் சாதனையை எப்போது நிகழ்த்தப் போவது, என்பதைப் பற்றிய திகதியை தெரிவிக்கவில்லை.

ஆதாரம் தினகுரல்
Reply
[quote=Chandravathanaa]யாழ்

சிவாந்தியின் சாதனை பற்றியதான சரியானதொரு விபரத்தை சரியான முறையில் தொகுத்து எனது குடிலில் பதிக்க வேண்டுமென்பது எனதும் விருப்பமும் கூட.

ஆனால் சரியான முறையில் எழுத தற்சமயம் நேரம் ஒத்துழைக்கவில்லை.

எங்காவது சிவாந்தியின் சாதனை பற்றிய சரியான விபரங்கள் அடங்கிய கட்டுரை இருந்தால் தெரியப் படுத்துங்கள். அதையாவது தற்போதைக்கு எனது குடிலில் சேர்த்து விடுகிறேன்.

[size=15]சந்திரவதனா,
நல்லதொரு விடயத்தை சிந்தித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்...............

உங்களைப் போன்றவர்கள் இல்லாது பெரும்பாலான இடங்கள் காலியாகவே உள்ளது.

எம் சமூகத்தில் திறமைசாலிகளை ஊக்குவிக்கச் செய்ய உங்களைப் போன்றோர் முன்வருவதே நல்ல சகுனம்தான்................

<img src='http://geethavani.homestead.com/files/siva2.jpg' border='0' alt='user posted image'>
சாதனையாளர் சிவாந்தி

எதற்கும் சிவாந்தியை ஒருமுறை நேரடியாக தொடர்பு கொண்ட பின் எழுதுங்கள்.
தாமதமானாலும் ,ஆரம்பத்தில் எந்தவொரு தவறும் பதிவுகளில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது எனது பணிவான வேண்டுகோள்..............

என்ன யாழ் சரிதானே?


win little victories
-AJeevan
Reply
test
Reply
தூக்கமோ தெரியாது<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
புலனாய்வு வாரஇதழ் படித்த உணர்வு ஏற்பட்டது

நன்றி

இப்படியான ஒரு சூடான பக்கத்தை யாழ்களத்தில் சேர்த்துகக்கொண்டால் மேலும் மெருகூட்டும். ஆனால் விளைவுகளை எண்ணிப்பார்க்கமுடியவில்லை.
Reply
துக்கமாகவும் இருக்கலாம்
Quote:தூக்கமோ தெரியாது
[b] ?
Reply
Karavai Paranee Wrote:துக்கமாகவும் இருக்கலாம்
Quote:தூக்கமோ தெரியாது
குளப்பம்?
Reply
சிவாந்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பணிப்பாளர் கேட்டுள்ளார்.

(மாதவனைப் போல் இருக்கும் ஒருவர் அன்று நிகழ்ச்சியில் உரையாடியதை கேட்டேன். வாழ்த்துக்கள்.....)
Reply
அப்பவே சொன்னம் சாதனைக்குப் பின்னால எவ்வளவோ சோதனை இருக்குதெண்டு....இப்ப சாதனை போய் சோதனை சாதனையாய் வருகுது பாத்தியளோ...இதுதான் தமிழன்ற தலைவிதி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)