Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் தீர்வுத்திட்டம்.
#41
நான் எனது நன்பர் ஒருவருடன் இலன்டனில் தொடர்பு கொன்டேன் அவர் சொன்னார் றனில் புலிகளின் தீர்வுப்பொதியை வாசிச்சுப்போட்டு வெறி பனி ஸ்ரோறி என்டு சக அரசியல்வாதிகளுக்கு சொன்னாராம் இது உன்மையான கதை.
Reply
#42
எந்த வளியை சொல்கின்றீர்கள்.

கைகோர்த்து போராடுவதா ? யார் யாருடன் ?
Quote:இதுதான் இறுதிதீர்விற்கு வளிவகுக்கும்.
[b] ?
Reply
#43
சிலவேளை இந்தியா பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகிவிட்டது. அதைப்பற்றி சொன்னாரோ ?

[quote=தணிக்கை]நான் எனது நன்பர் ஒருவருடன் இலன்டனில் தொடர்பு கொன்டேன் அவர் சொன்னார் றனில் புலிகளின் தீர்வுப்பொதியை வாசிச்சுப்போட்டு வெறி பனி
[b] ?
Reply
#44
புரிந்துணர்வு ஒப்பந்தம்.. பேச்சுக்கான பேச்சுவார்த்தை.. இவ்வளவுகாலமும் தெடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை.. தத்துவத்தார் சமஸ்டி வக்காலத்து.. தத்துவத்தார் இடையில் காணாமலப்போனவை கருணாவின் நாட்டுக்குள் ஒருநாடு பேச்சு அத்தனையும் very funny story தானே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#45
இதற்கு என்ன அர்த்தம் ?

நன்றி . தினக்குரல்


இந்தியத் தலைவர்களுடன் அவசர பேச்சுக்கு ஜனாதிபதி புதுடில்லிக்கு செல்கிறார்

இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான யோசனைகளை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சூழ்நிலையில் அது தொடர்பிலும், தற்போதைய அரசியல் நிலை தொடர்பிலும் இந்தியத் தலைவர்களுடன் ஆராய்வதற்காக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, குமாரதுங்க அடுத்த வார பிற்பகுதியில் புதுடில்லி செல்லவிருக்கிறார்.

புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சின்ஹா, இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் பிரஜேர்; மிர்;ரா ஆகியோருடன் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க விசேட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருக்கிறது.

ஜனாதிபதியுடன், அவரது, சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் லடீ;மன் கதிர்காமர் மற்றும் அதிகாரிகள் பலரும் செல்லவிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் முன்வைத்துள்ள, இடைக்கால நிர்வாகசபை சம்பந்தமான யோசனைகள் தொடர்பில் இந்தியத் தலைவர்களுடன் கருத்துப் பரிமாற்றமொன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, இது தொடர்பில் புதுடில்லியின் நிலைப்பாட்டையும் அறிவாரென ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இலங்கை, இந்தியாவுடன் செய்துகொள்ளவுள்ள பாதுகாப்பு உடன்படி க்கை தொடர்பிலான ஆராய்வுகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியா செல்ல ஏற்பாடாகியிருக்கிறது.

இந்திய பாதுகாப்பமைச்சின் செயலாளருடன் ஒஸ்ரின் பெர்னாண்டோ பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதேசமயம் இந்த உடன்படிக்கை நகலையும் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவாரென தெரிவிக்கப்படுகிறது.
[b] ?
Reply
#46
இனித்தான் ஆரம்பம். ரணில் சரியாகத்தான் சொல்லியுள்ளார் very funny story

முதல் இந்த story ச்திரிக்காவுடன் ஆரம்பிக்கும்.

பிறகு சந்திரிக்கா ஜேவிபியுடன் இந்த story ஆரம்பிப்பா

பிறகு ஜேவிபி பிககுகளுடன் இந்த funny story ஆரம்பிப்பர்

தசெ சொல்வார் அது உங்கடை பிரச்சனை என..


பின்னர் தேர்தல் வரும்.

funny Lanka
Reply
#47
யாழ்/yarl Wrote:இனித்தான் ஆரம்பம். ரணில் சரியாகத்தான் சொல்லியுள்ளார் very funny story

முதல் இந்த story ச்திரிக்காவுடன் ஆரம்பிக்கும்.

பிறகு சந்திரிக்கா ஜேவிபியுடன் இந்த story ஆரம்பிப்பா

பிறகு ஜேவிபி பிககுகளுடன் இந்த funny story ஆரம்பிப்பர்

தசெ சொல்வார் அது உங்கடை பிரச்சனை என..


பின்னர் தேர்தல் வரும்.

funny Lanka
அங்கை தேர்தலாவது வருகுதே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


இருந்ததிலை 50% வெளிநாட்டிலை.. 25% சிங்களப்பகுதியிலை.. மிச்சமிருக்கிற 25% த்துக்குத்தான் இப்ப அலுவல் நடக்குது. அதுக்குப்பிறகு என்ன 05% தானே.. அதிலையும் முஸ்லீம் பாதி அப்ப நீ நான் பிரச்சனையும் அவங்களுக்கு இருக்காது.. பிறகென்ன Funny lanka தானே யாழ். தாயகப்பாடல் தாராளமா லண்டனிலை.. ஜேர்மனியிலை.. சுவிசிலை.. பிரான்சிலை.. கனடாவிலை.. அவுஸ்திரேலியாவிலை எண்டு விதவிதமாப் போடலாம். அவங்கள் பிரச்சனையும் எல்லாநாட்டிலையிருந்தும் கதைக்கலாம். பிரச்சனையில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#48
யேவீப்பி குப்பைதொட்டியில் அதை கொன்டுபோய் போடும்படி சொல்லியுள்ளார்கள்.
Reply
#49
அரசு தீர்வை ஏற்கத்தவறினால் தமிழர் தங்கள் தலைவிதியை தாமே தீர்மானிக்க நேரும்
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தாயகம்.
மலையக மக்களின் உரிமைகள் வென்றெடுக்க ஒத்துழைப்பு
தமிழ்ச்செல்வன்கேசரிக்கு பிரத்தியேகப் பேட்டி கூOக
""தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் ஒரு தீர்வை அரசாங்கம் முன் வைக்கத் தவறினால் தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எமது இடைக்கால திட்ட வரைவு யோசனையினை அரசாங்கம் நிராகரிக்காது பேச முன் வந்துள்ளமை வரவேற்கத் தக்கது'' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தமிழ் இனத்தின் நலன் கருதி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே அமையமாக செயற்படுவது நல்ல விடயம். அதனை நாம் எதிர்பார்க்கின்றோம். மலையக மக்கள் உரிமையினை வென்றெடுப்பதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம். முஸ்லிம்களும் வடகிழக்கை தாயகமாகக் கொண்டவர்கள். இடைக்கால நிர்வாகசபையில் முஸ்லிம் மக்களும் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளது சமாதான செயலகத்தில் வைத்து ""கேசரி''க்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் போதே தமிழ்ச்செல்வன் இவற்றை தெரிவித்தார்.

இடைக்கால நிர்வாக சபை திட்டவரைவு, இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் தமிழ்க்கட்சிகள், முஸ்லிம்களின் விவகாரம், மலையக மக்களின் விவகாரம் என்பவை தொடர்பாக தமிழ்ச் செல்வன் கேசரிக்கு வழங்கிய பேட்டியின் விபரம் வருமாறு:

கேள்வி: இடைக்கால நிர்வாக சபைத் திட்ட வரைவு மூலம் தமிழீழத்துக்கான அத்திவாரத்தினை நீங்கள் இடுவதாக ஜே.வி.பி, சிஹல உறுமய போன்ற கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: விடுதலைப் புலிகள் எத்தகைய கோரிக்கையினை வைத்தாலும் தென்னிலங்கையில் உள்ள எதிர்க்கட்சியினரும் இனவாத சக்தியினரும் எப்பொழுதும் இதேபாணியில் தான் கூறுவது வழமை. எங்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை, எதிர்பார்ப்புக்களை அவர்களுடைய அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கக் கூடிய ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை முன் வைக்க வேண்டியது எங்களுடைய கடமை.

அந்த வகையில் தான் இடைக்கால நிர்வாகசபை திட்டவரைவினை நாம் சமர்ப்பித்துள்ளோம். இது ஈழத்துக்கான முதல்படி என கூறுவது எந்த வகையிலும் பொருத்தமில்லாதது ஆகும். தமிழ் மக்களுக்கு நியாயமான அமைதி வழியில் சமாதான வழி மூலம் நாகரிகமான முறையில் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையில் ஒரு தீர்வை முன் வைக்கத் தவறினால் தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கக் கூடிய ஒரு முடிவுக்குத் தள்ளப்படுவார்கள்.

கேள்வி: காணி உட்பட சட்டம் ஒழுங்கு அதிகாரம் வடகிழக்கு இடைக்கால நிர்வாக சபைக்கு வேண்டும் என திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கில் நீதியை நிலை நாட்டவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் நீதித்துறையும், காவல்துறையும் உள்ளன. இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்பட்டால் இவை இரண்டினதும் பணிகள் எவ்வாறு அமையும்?

அதிகாரம் சரியாகவரையறுக்கப்பட வேண்டும்

பதில்: வடகிழக்கை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகினை உருவாக்கும்போது சட்டம் ஒழுங்கு, நீதி, காணி போன்ற பல்வேறு பட்ட அதிகாரங்களும் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியம். ஏனென்றால் இங்கு யுத்தத்தால் முழுமையாக நிர்வாகம் சீர்குலைந்துள்ளன. அடிப்படை கட்டுமானங்கள் சிதைந்துள்ளன. ஆகவே யுத்தத்தால் வெளியேற்றப்பட்ட மக்களை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள தமது சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டுமானால் அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது என்றால் எங்களுக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கின்றபோதுதான் அது சாத்தியப்படும். புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம் என்று சொல்லப்படுகின்ற, அவசியம் தேவைப்படும் நடவடிக்கை தொடர்பில் எத்தகைய நடவடிக்கையினை முன்னெடுக்கச் சென்றாலும் அதிகாரம் சரியான முறையில் வரையறுக்கப்பட்டு கையில் இல்லாவிட்டால் அது சாத்தியப்படாது.

இந்த ஒரு வருட காலத்தில் சிரான் போன்ற அமைப்புக்களை உருவாக்கி அவை செயற்பட முடியாது முடக்கம் அடைந்தமைக்கு இதுதான் காரணம். இந்த அடிப்படையில் வடகிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒரு முழுமையான அதிகாரம் உள்ள நிர்வாகத்தை முழுமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் எந்த நடவடிக்கைகளையும் முன்னகர்த்தி செல்வது சாத்தியமில்லை. அந்த அடிப்படையில் அனைத்து அதிகாரமும் உடைய இடைக்கால நிர்வாக சபைக்கான வரைவினை நாம் சமர்ப்பித்துள்ளோம்.

இந்தியாவின் கருத்து வரவேற்கத்தக்கது

கேள்வி: வடகிழக்கு இடைக்கால நிர்வாகசபை இறுதித் தீர்வை நோக்கியதாக அமைய வேண்டும் என்று இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தையடுத்து விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: இது ஒரு வரவேற்கத்தக்க கருத்து என்று தான் நான் நினைக்கின்றேன். ஏனெனில் இடைக்கால நிர்வாக கட்டமைப்பு என்பது இறுதியாக நாங்கள் ஏற்படுத்தப்போகும் தீர்வுக்கு உந்து சக்தியாகவும் அடிப்படையாகவும் அமைய வேண்டும். இந்தியாவின் கருத்து வரவேற்கத்தக்கது. அந்த வகையில் தான் இந்த இடைக்கால நிர்வாக திட்ட வரைவினை தூரநோக்கோடும் பார்வையுடனும் அதனை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

இந்தியாவின் கரிசனையே அவசியம்

கேள்வி: தற்போதைய சமாதான முயற்சியில் ஒரு அயல்நாடு என்ற ரீதியிலும், கலாசார உறவுகளைக் கொண்ட நாடு என்ற வகையிலும் இந்தியாவின் பங்களிப்பு எத்தகையதாக அமைய வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: இந்தியாவின் கரிசனையையும், அக்கறையையும் நாம் பெரிதும் போற்றுகின்றோம். இந்தியா ஒரு அயல்நாடு. இங்கு ஒரு அமைதி சமாதானம் ஏற்படுவதற்கு இந்தியாவும் அயல்நாடு என்ற வகையில் தங்களுடைய ஆதரவை வழங்குவது அவசியமானது. அந்த வகையில் இந்தியாவின் அக்கறையினை எங்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

கேள்வி: இந்தியாவின் எதிர்பார்ப்பை மீறி இலங்கையில் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது என தெரிவிக்கப்படும் கருத்து குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: எங்களைப் பொறுத்தவரையில் இந்தியா ஒன்றைப் புரிந்து கொள்ளும். தமிழ் மக்கள் இன்றைக்கு 50 வருடங்களாகப் போராடி வருகின்றனர். ஜனநாயக வழியில், ஆயுத வழியில் என கட்டம் கட்டமாக போராடி வந்துள்ளனர். தங்களுடைய அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகவே தமிழர்கள் போராடியுள்ளனர். அந்த வகையில் எவரும் அந்த மக்களுடைய அபிலாஷைகளுக்கு வரையறை போடுவது பொருத்தமில்லாதது. இங்கு ஒரு சமாதானமும், அமைதியும், தீர்வும் வரவேண்டுமானால் பாதிக்கப்பட்ட, ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு அவசியம்.

ஆகவே அவர்களது அரசியல் அபிலாஷைகள், குறிக்கோள்களுக்கு வரையறை போட்டு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. அது அவர்களது அடிப்படை உரிமை. அதற்காகவே அவர்கள் போராடுகின்றனர்.

அந்த வகையில் இதனை இந்தியா புரிந்து கொண்டு இதற்கும் தங்களுடைய தார்மீக ஆதரவினை வழங்க வேண்டியது தான் காலத்தின் தேவை. ஆனால் இந்தியா வரையறை போட்டுள்ளது என்பது ஊகங்களே தவிர இந்தியா எந்த வரையறையையும் போட்டதாக நாங்கள் கேள்விப்படவில்லை.

கேள்வி: இடைக்கால நிர்வாக சபை திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும், முஸ்லிம் காங்கிரஸ்கட்சியினர் தமக்கான திட்டவரைவு குறித்து ஆராய பிரித்தானியா சென்றுள்ளமை குறித்தும் உங்கள் கருத்து என்ன?

முஸ்லிம் பிரதிநிதிகளை அழைப்போம்

பதில்: அவர்கள் தங்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய அந்த மக்களின் எதிர்பார்ப்புக்கமைய நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது அவர்களது உரிமை. அவர்கள் எங்கு சென்றும் தங்களுடைய அரசியல் உரிமை சார்ந்த விடயங்களை ஆராயலாம். அபிப்பிராயங்களை, கருத்துக்களை எடுக்கலாம்.

அது அவர்களுடைய உரிமை. அதேநேரம் இடைக்கால நிர்வாக சபையில் முஸ்லிம் மக்களும் உள்ளடக்கப்படவேண்டும் என்பது அவசியம். அவர்களும் வட கிழக்கினை தாயகமாகக் கொண்டவர்கள். ஆகவே அவர்களும் பூர்வீகமாக இங்கு வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அவசியமானது.

ஏற்படுத்தப் போகும் கட்டமைப்பில் அவர்களது பிரதிநிதித்துவமும் அவசியமானது. அந்த அடிப்படையில் அப்படியான பேச்சுக்களை முன்னெடுக்கும்போது முஸ்லிம் மக்கள் சார்பாக அவர்களது பிரதிநிதிகளையும் நாம் அழைப்போம். நிச்சயமாக அவர்களுடன் பேசுவோம். இது தொடர்பான எங்களது நிலைப்பாட்டினை இந்த வரைவில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

கேள்வி: உங்களது இடைக்கால திட்டவரைவு குறித்து அரசாங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் அரசாங்கத்தின் திட்ட வரைவுக்கும், உங்களது திட்டவரைவுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தாலும் அதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் திட்டத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு?

பதில்: இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஏனெனில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கித் தான் நாம் இந்த வரைவினை உருவாக்கியுள்ளோம். இது புலிகளது தனிப்பட்ட கருத்தல்ல. தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பெருமளவில் சந்தித்து கருத்துக்களை அறிந்திருக்கின்றோம். புலம்பெயர்ந்திருக்கின்ற இலட்சக்கணக்கான மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்கள் புலமையாளர்கள் ஆகியோரையும் சந்தித்து அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கியுள்ளோம். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் நாம் சந்தித்துள்ளோம். இப்படி பல்வேறுபட்ட அமைப்புக்கள், மக்கள் எல்லோருடைய கருத்தாகவும் தான் திட்டவரைவு முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் நிராகரிக்காமை வரவேற்கத்தக்கது.

நாங்கள் கூடிய விரைவில் இதற்கு தீர்வு காண முடியுமானால் அது ஆரோக்கியமானதென்றே நான் நினைக்கின்றேன்.

பிராந்திய தலைவர்கள் மீது மு.கா.பழிபோடுவதை ஏற்க முடியாது

கேள்வி: புலிகளின் தலைவர் பிரபாகரனும தானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை புலிகளின் பிராந்தியத் தளபதிகள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது இருதரப்புக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாட்டுக்கு காரணம் இது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அண்மையில் கூறியிருந்தார். இது தொடர்பாக என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: (சிரிப்பு) எங்களைப் பொறுத்தவரையில் எமது தேசியத் தலைவரும் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் இணக்கப்பாடுகளுக்கு வந்தது உண்மை. ஆனால் அது காலக்கிரமத்தில் முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகள் காரணமாக, பிளவுகள் காரணமாக அவர்கள் செம்மையாக நடைமுறைப்படுத்த முடியாமல் போனது தான் கடந்த கால வரலாறு. இந்த உடன்பாடு கண்டபிறகு அவர்கள் குறிப்பிட்ட காலத்திலேயே முஸ்லிம் காங்கிரசில் இருந்து பலர் வெளியேறி, தலைவர் பதவியில் இருந்து ஹக்கீம் அவர்கள் வெளியேற்றப்பட்டதும், பின்னர் ஏற்பட்ட சர்ச்சைகளும், அவர்களுக்குள் உள்ள உள்முரண்பாடு காரணமாக இந்த உடன்பாடு செம்மையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதை எமது பிராந்திய தளபதிகள் மீது குற்றம் சுமத்துவதும், பழியை எமது தரப்பில் போடுவதையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எங்களைப் பொறுத்த வரையில் அவர்களிடம் இருந்த உறுதியற்ற தன்மை, அந்த அமைப்புக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடு, அதனால் ஏற்பட்ட பிளவுகள் காரணமாகவே உடன்பாட்டை நடைமுறைப்படுத்தாது அவர்கள் இதனை துஷ்பிரயோகம் செய்தனர். பலதடவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் உடன்பாட்டை செம்மையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்த ஒத்துழைப்பையும் தரவில்லை. அது சம்பந்தமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். தற்பொழுது அதனை தூக்கிக் கொண்டு வருவது எந்த அர்த்தத்தில் என்று எமக்கு புரியவில்லை. நாங்கள் செய்து கொண்டது முஸ்லிம் காங்கிரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒப்பந்தம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் இன்று முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்தமான பிரதிநிதிகளாக தங்களை வலுப்படுத்தி, நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி இருக்கின்றது.

அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்தே இப்போது குரல்கொடுக்கின்றார்கள். ஆகவே இதில் உள்ள உண்மைத்தன்மை, சரியான நிலைப்பாடு எங்களுக்கு விளங்கவில்லை.

கேள்வி: புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டவரைவில் அரசதரப்பு பிரதிநிதிகளை அரசாங்கமும், புலிகள் தரப்பு பிரதிநிதிகளை தமிழீழ விடுதலைப் புலிகளும், முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளை முஸ்லிம் சமூகமும் நியமிப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி...?

பதில் : தற்போதுள்ள துரதிஷ்டமான வரலாறு முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு இணைந்து அமைச்சர்களாக உள்ளனர். அதிகாரங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தோடு இணைந்து ஆட்சியமைப்பில் இணைந்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் அப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் இப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். ஆகவே அரசாங்கத்தோடு இணைந்துதான் முஸ்லிம் மக்களுடைய முன்னேற்றங்கள் எதிர்காலங்கள் பற்றி கடந்த காலங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை சூழலில் இரண்டு தரப்புத்தான் முக்கிய தரப்பு. மோதலுக்கான முரண்பாட்டிற்கான இரண்டு தரப்புமே பேச முற்படுகின்றன. ஆகவே முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். ஆகவே அரசாங்கமே அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதால் அவர்களுடைய குரலும் எதிர்பார்ப்பும் முன்வைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் விரும்பினால் அவர்களுடைய பிரச்சினைகள் பற்றி தேவையேற்படும்போது பேச தயாராகவுள்ளோம்.

ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும்

கேள்வி: நீங்கள் மலையக மக்கள் முன்ணி. இ.தொ.கா., மேல்மாகாண மக்கள் முன்னணி ஆகிய மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சந்தித்தீர்கள். இவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென வலியுறுத்தினீர்கள்.

பதில்: தமிழ் மக்கள் எப்போதுமே ஒன்றுபட்டு தமிழர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கும்போதோ அல்லது தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களிலேயோ கொள்கை ரீதியாக நாம் ஒன்று பட்டு செயற்படும் சூழலை தோற்றுவிக்க வேண்டும்.

நாம் மேற்படி அரசியல் காரணமாக பதவிகளை எதிர்பார்த்து எம் மக்களது ஒற்றுமையை பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவது எம்மக்களது சக்தியை பலவீனப்படுத்தும். தமிழ் மக்களது அரசியல எதிர்காலமே சூனியமாகியுள்ள நிலையில் ஒன்றுபட்ட முயற்சியும் உழைப்பும் அவசியம். இந்த தேவையை நிலைப்பாட்டை அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம்.

மலையகத்தில் இருந்தாலும்சரி கொழும்பில் இருந்தாலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி தமிழ் மக்கள் பரந்து வாழ்கிறார்கள். எங்கெங்கு தமிழ் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களது நலன்சார்ந்த விடயங்களிலே ஒன்றுபட்டு செயற்படக்கூடிய குரல் கொடுக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.

அதேவேளை வடக்குகிழக்கில் ஏற்படக்கூடிய தீர்வுக்கான முன்வைப்பான இடைக்கால நிர்வாகசபையை நாம் முன்வைக்கின்ற சூழலில் அவர்களுடைய தேவைகளையும் கருத்துக்களையும் நாம் உள்வாங்க வேண்டிய தேவை இருந்தது.

அவர்களும் தங்கள் ஆலோசனைகளை கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார்கள். அது எமக்கு ஆக்கபூர்வமாகவும் பிரயோசனமாகவும் இருந்தது.

கேள்வி: தமிழ் மக்கள் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பல்வேறு கட்சிகளில் அங்கம் வகிக்கின்றார்கள். இவர்களில் ஒன்றுபடக்கூடியவர்களை ஒன்றுபடுத்தினால் தமிழர்களின் அபிலாசைகளை மேலும் பிரதிபலிக்கலாம் என்ற கருத்துப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இது மிகவும் அவசியமானது என்பது எனது அபிப்பிராயம். எங்களுடைய கருத்தும் அதுதான். பலகட்சிகள் இருந்தாலும் தமிழ் மக்களுடைய நலன்கள் என்ற விடயத்தில் ஒன்றுபட்டு உழைக்கக்கூடிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவது எதிர்காலத்தில் சிறந்ததாக இருக்கும்.

அதற்கு ஒரு அடித்தளம் போடும் வகையிலேயே எமது கருத்துக்களையும் பரிமாறியிருக்கிறோம். அவர்களும் சிந்தித்து செயற்படுவார்களேயானால் நீங்கள் கூறிய நிலைமையை நோக்கி நாங்கள் முன்னேறலாம். அது ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கு பலமாகவும் இருக்கும். நலன்கள் குறிக்கோள்களுக்கும் வலுசேர்க்கும்.

தமிழர் விடுதலைக் கூட்டணி

கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள ஒரு சாரார் தமிழரசுக்கட்சிக்கு மீண்டும் புத்துயிரூட்ட முற்படுகிறார்கள். இது தமிழ் சமூகத்தினை பலவீனப்படுத்தலாமல்லவா?

பதில்: இது சம்பந்தமாக நான் ஊடகங்கள் மூலம் கேள்விப்பட்டேன். இது தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவராக இருப்பவரின் நடவடிக்கைகள் முரண்பாடான செயற்பாடுகள் காரணமாகவே இந்த நிலை தோன்றியதாக நாங்கள் அறிகின்றோம்.

தற்போது மாவட்ட மட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்து தீர்மானங்கள் கட்சியின் கிளைகளால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதனால் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக தமிழர் விடுதலைக் கூட்டணி ஒன்று பட்ட கட்சியாக பலம் பெற்று எதிர்காலத்தில் இயங்கக்கூடிய சூழல் ஏற்படுமென நாம் கருதுகிறோம்.

தலைமையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே தமிழரசுக் கட்சிக்கு புத்துயிரூட்ட முன்வந்தார்கள்.விரைவில் அவர்களும் தமது முடிவை மாற்றிக் கொள்ளக்கூடிய நிலைமை வருமென கருதுகிறேன்.
கேள்வி: தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஒற்றுமைச் சக்தி என்பதற்காகவே பெருவாரியான தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பதிவு செய்யாது இன்னமும் தனிக்கட்சிகளாக செயற்படுவது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

கூட்டமைப்பினர் சரியாக செயற்ப்படுகின்றனர்

பதில்: இது பற்றி பல தடவைகள் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் அவர்களுக்கென்று வரலாறு தனித்துவங்களோடு நீண்டகாலமாக செயற்பட்டவர்கள். நாம் ஒரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்ற கருத்தை திணிக்கவில்லை. ஆனால் கொள்கையளவில் தமிழ் மக்களுடைய எதிர்காலம் சார்ந்த விடயங்கள் நலன்கள் சார்ந்த விடயங்களில் ஒன்றுபட்டு உழைக்கக்கூடியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு இயங்க வேண்டுமென்பதே எங்களது விருப்பமும் நிலைப்பாடும்.

ஒரே கட்சியாக உருவாக வேண்டியிருந்தால் அது அவர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். எம்மை பொறுத்தவரை நாம் எம்மக்களுடைய அரசியல் அபிலாசைகள், அரசியல் உரிமைகள், அரசியல் கொள்கைகளுக்கு உழைப்பதற்காக எல்லோரையும் அரவணைத்து நிற்கிறோம்.

அந்த நிலைப்பாட்டில் ஒரு தேசிய ரீதியாக அவர்கள் ஒன்றுபட்டிருப்பது எங்களுக்கு ஒரு நிம்மதி தருகின்ற விடயம். பலம் சேர்க்கின்ற விடயம். ஆகவே கூட்டமைப்பினர் தற்போது சரியாக செயற்பட்டு வருகின்றார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

மாற்றுத் தமிழ்க்கட்சிகள் பலமான சக்திகள் அல்ல

கேள்வி: மாற்று தமிழ் கட்சிகளான ஈ.பி.டி.பி., புளொட் போன்ற கட்சிகளுடன் இத்தகைய நட்புறவு செயற்பாட்டை ஏற்படுத்த முடியாதா?

பதில்: கடந்த இரண்டு வருடங்களாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி சமாதான நடைமுறைகளின் கீழ் தீர்வுகளை காண சர்வதேச அங்கீகாரத்துடன் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஈ.பி.டி.பி, புளொட் போன்றவற்றின் ஆதரவோ ஒத்துழைப்போ இதற்குக் கிடைக்கவில்லை. அவர்கள் இந்த முயற்சிகளை குழப்பும் நோக்கோடு சீர்குலைக்கும் நோக்கோடு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். செயற்பட்டும் வருகிறார்கள்.

அதே நேரம் அவர்களை பலமான சக்தியாகவும் நாங்கள் பார்க்கவில்லை. கடந்த தேர்தலின் போது மிகக் குறைந்த வாக்குகளை அதாவது மக்கள் ஆதரவை பெருமளவில் பெற முடியாதவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பே பெருமளவு மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறது. அந்த வகையில் முழு அளவில் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக ஈ.பி.டி.பி., புளொட்டை நாம் பார்க்கவில்லை.

கேள்வி: இறுதி தீர்வின்போது மலையக மக்களது பிரச்சினைகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென உங்களுடனான சந்திப்பில் மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தியதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்திருகிறார். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

மலையக மக்களின் எதிர்காலம் கவனத்தில் எடுத்துள்ளோம்.

பதில்: வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம். பல நூறு ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்த பிரதேசம். இங்கு ஒரு தீர்வு ஏற்படுகின்றபொழுது அரசியல் உறுதிப்பாடு ஏற்படுகின்றபொழுது தென்பகுதியிலும், மலையகப் பகுதியிலும் வாழும் தமிழ் மக்களுக்கு அது பலம் சேர்க்கும்.

அவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய வலுவான சக்தியாகவும் தமிழர் தாயகப் பிரதேச அரசியல் உறுதிப்பாடு இருக்கும். அதனை நாம் அவர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

மலையக மக்களுக்கும் வித்தியாசமான சில பிரச்சினைகள் உள்ளன. அவர்களும் பல விடயங்களில் பின்தள்ளப்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்ட ரீதியில் அவர்களுடைய வசதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய முன்னேற்றங்களையும் எதிர்காலத்தையும் நாங்கள் கவனத்தில் எடுத்திருக்கிறோம். அதற்காக எமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவோம், முயற்சிகளும் இருக்கும்.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் தீர்வை கொண்டு வரும்பொழுது மலையகத்தையும் உள்ளடக்க முடியாது. மலையகம் என்பது இன்னொரு பிரதேசம், அங்குள்ள எமது சகோதர மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கலாம்.

எதிர்காலத்தில் எமது சமாதான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துச் செல்லும் போது மலையகத்தை உள்ளடக்க வேண்டுமென்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு. இதனை நாங்கள் உள்வாங்கியிருக்கிறோம். எதிர்காலம் தான் இதனை தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி: ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக இதுவரை பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு கிழித்தெறியப்பட்டன. அல்லது காலாவதியாகின. அத்தோடு ஒரு தரப்பினரால் ஒப்பந்தம் திணிக்கப்பட்டும் உள்ளன. இம்முறை தமிழர் தரப்பினால் கொடுக்கப்பட்ட தீர்வு வரைவை சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தால் புலிகளின் நிலைப்பாடு எவ்வாறு அமையும்.

பதில்: எம்மை பொறுத்தவரை நீண்டகாலமாக தமிழ் மக்கள் போராடி பெருமளவு தியாகங்களை அர்ப்பணிப்புக்களை செய்து அதனால் ஏற்பட்ட விளைவின் காரணமாக சர்வதேச அங்கீகாரத்துடன் அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் விளைவாக ஒரு இடைக்கால ஏற்பாடாக ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்க வேண்டிய அவசியம் எல்லோராலும் வலியுறுத்தப்பட்டது. அதனை எல்லோருமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் உட்பட சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த நிலையில் எமது மக்களின் கருத்துக்களை உள்வாங்கி இன்றைய யதார்த்தங்கள் தேவைகளை புரிந்து கொண்டுதான் வரைவை முன்வைத்திருக்கிறோம்.

எமது மக்கள், பல பொது அமைப்புக்கள், கட்சிகளிடமிருந்து முழுமையான அதிகாரமுள்ள வரைவை நாம் கோர வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எமது மக்களுடைய தற்காலிக ஏற்பாடாக இடைக்கால ஏற்பாடாக மக்கள் ஆதரவுடன் வரைவை முன்வைத்துள்ளோம்.

இதனுடைய வெற்றிதான் எமது அடுத்த கட்ட தீர்மானங்களுக்கு வழி சமைக்கும்.

கேள்வி: ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நேர்ந்த கதி இதற்கும் ஏற்பட்டால்?

பதில்: எம்மை பொறுத்தவரை நாம் இப்பொழுது ஒரு பலமான இராணுவ அரசியல் சக்தியாகவே உள்ளோம். சிங்கள தேசத்தினால்

கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து அரசியல் ஒடுக்கு முறைகளுக்கும் முகம் கொடுத்து அன்று முதல் இன்றுவரை போராடி வருகிறோம்.

சிங்கள தேசம் இதை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களுடைய நேசக்கரத்தை உதாசீனப்படுத்துமாக இருந்தால் எமது மக்களின் உரிமைகளுக்காக எமது தேசத்தின் எதிர்காலத்திற்காக நாங்கள் போராடுவது தவிர்க்க முடியாதது.

கடந்த காலங்களில் எங்களுடைய அரசியல் தலைவர்களோ அரசியல் சக்திகளோ வெறுமனே அரசியல் ஜனநாயக வழிமுறைகளினூடாகவே தீர்வைத் தேட முற்பட்டார்கள். அது இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டது. இப்போது இராணுவ ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் வளர்ந்து விட்டோம். அதற்கான பலமான சக்தி எங்களுக்கு உண்டு. எமது தலைவர் அதனைக் கட்டியெழுப்பியிருக்கிறார். உறுதிப்பாட்டையும் பலத்தையும் கட்டியெழுப்பியிருக்கிறார்.

நாம் பலத்தின் அடிப்படையில் நின்று பேசுகிறோம். அரசாங்கம் நிராகரித்தால் நாங்கள் ஏமாற்றப்படுவோமென்று சொல்ல முடியாது. தமிழீழ பிரதேசத்தில் பெரும்பான்மையான பிரதேசத்தை எமதுகட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். எனவே நிராகரித்தாலும், இராணுவ பலத்தோடும், மக்கள் சக்தியோடும் உள்ள நாம் எமது குறிக்கோளை அடைவோம் என்ற திடம் எம்மிடம் உண்டு. எனவே கடந்த காலங்களை போல எதிர்காலத்தில் எமது மக்கள் நிர்க்கதியாகமாட்டார்கள் என நம்புகிறோம்.

கேள்வி: தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமைபற்றி மாவட்ட குழுக்கள் தீர்மானங்களை நிறைவேற்றி வரும் நிலையில் விரைவில் மத்திய குழு கூடவுள்ளது.

பதில்: எம்மைப் பொறுத்தவரை நாங்கள் உட்கட்சி முரண்பாடுகளில் பெருமளவில் அக்கறை செலுத்தவில்லை. அது அவர்களுடைய பிரச்சினை.

தேசிய அளவில் எமது மக்களுடைய அரசியல் எதிர்காலம் சம்பந்தமாக அவர்களுடைய நலன்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் எல்லோருடைய ஒத்துழைப்புகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த விடயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை எடுத்திருக்கின்ற நிலைப்பாடு முரண்பாடான நிலைப்பாடு. எமது அரசியல் நிலைப்பாடுகளை பலவீனப்படுத்துவதான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தமிழர் விடுதலைக்கூட்டணி தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுத்து வரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொள்வது கடினம். இதனை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம்.

அந்த வகையில் தமிழர் விடுதலைக்கூட்டணி மாவட்டக்கிளைகள் தலைமையை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்து வருகின்றன. ஆகவே எதிர்காலத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் தூய்மை, நேர்மை, சரியான உறுதிப்பாடான தலைமைத்துவம் ஏற்படுகின்றபொழுது இன்னும் முன்னேற்றகரமாக அவர்களை இணைத்துக் கொண்டு அரசியல் முன்னெடுப்புக்களில் தொடர்ந்து செல்லலாம்.

கேள்வி: திட்டவரைவின் பிரகாரம் ஐந்து வருடங்களின் பின்னர் நடைபெறும் தேர்தலில் சகல கட்சிகளும் போட்டியிடக்கூடியதாக இருக்குமா?

பதில்: இங்கு ஜனநாயக வழிமுறையைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்தவகையில் மக்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. யாரை தெரிவு செய்வது என்ற உரிமை உள்ளது.

அதற்கு நிச்சயமாக நாங்கள் இடம்கொடுப்போம். அதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை.

நன்றி: வீரகேசரி
Reply
#50
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்லனுடன் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாளரும் வீரசேகரி உதவி செய்தி ஆசிரியருமான சீறீகஜன் மட்டக்களப்பு மாவட்ட பத்திரிகையாளன் ஜீ.நடேசன் ஆகியோருடன் ஊடகப்பொறுப்பாளர் தயாமாஸ்ரர் கானப்படுகிறார்.

<img src='http://www.virakesari.lk/20031103/PICS/Pa10-P1.jpg' border='0' alt='user posted image'>
Reply
#51
இந்திய தினகரன் என்ன சொல்கிறது எனப பார்ப்போமா.....


சட்டம்-ஒழுங்கு-வர்த்தகம்-வெளியுறவு„ புலிகளின் அதிகார பட்டியல் இலங்கை கட்சிகள் அதிர்ச்சி


கொழும்பு, நவ.2- புலிகளின் அதிகார பட்டியல் கண்டு இலங்கை கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன.

தனித்தமிழ் ஈழம் தவிர எந்த ஒரு சமரசத்திட்டத்துக்கும் ஒத்துக்கொள்ள மறுத்த புலிகள் தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளனர். இலங்கையின் 30 ஆண்டு கால உள் நாட்டுப்போர் வரலாற்றில் முதன்முறையாக எழுத்துப்பூர்வமான அதிகாரப்பங்கீட்டு திட்டம் ஒன்றை நேற்றுமுன் தினம் புலிகள் ஒப்படைத்துள்ளனர். 8 பக்கம் கொண்ட இந்த ஆவணத்தை புலிகளின் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச் செல்வன் நார்வே தூதாpடம் ஒப்படைத்தார். நார்வே தூதர் அதை இலங்கை மந்திhp ஜp.எல். பொpசிடம் கையளித்தார்.

புலிகளின் அதிகாரப் பங்கீட்டு திட்டத்தில் என்னெ;ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்ற தகவல் நேற்று வெளியாகி உள்ளது. இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில், தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடைக்கால சுயாட்சி கவுன்சில் ஒன்றை அமைக்க வேண்டும் என்று புலிகள் கோhpயுள்ளனர். இந்த கவுன்சில் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரையில் அல்லது 5 ஆண்டுகள் வரை நீடிக்க வேண்டும் என்பது புலிகளின் கோhpக்கை.

இந்த இடைக்கால கவுன்சிலுக்கு வாpவிதிக்கும் அதிகாரம், சட்டம்-ஓழுங்கை பரா மாpக்கும் அதிகாரம், வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம், வெளிநாடுகளுடன் நேரடியாக பேசி நிதியுதவி, கடனுதவி வாங்கும் அதிகாரம், தமிழர் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களின் மீது அதிகாரம் வேண்டும் என்று புலிகள் கோhpயுள்ளனர்.

புனர்வாழ்வு, மீள்குடிய மர்த்துவது, மறுசீரமைப்பு, மேம்பாடு போன்றவற்றிலும் புலிகள் அதிகாரம் கோhpயுள்ளனர்.

அதுபோல கடல் வளம், கரைக்கு அப்பால் உள்ள எண்ணெய் போன்ற வளங்கள் மீதும் புலிகள் அதிகாரம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். கடல் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக சென்றுவரும் அதிகாரத்தையும் புலிகள் கோhpயுள் ளனர்.

மேலும் தமிழர் மற்றும் தமிழர் பகுதி தொடர்பாக இலங்கை அரசு செய்துள்ள ஒப்பந்தம் அனைத்தையும் இந்த இடைக்கால கவுன்சிலுக்கு இலங்கை அரசு மாற்றியாக வேண்டும் என்று புலிகள் வற்புறுத்தியுள்ளனர்.

அண்மையில் திhpகோணமலையில் உள்ள எண்ணெய் சேகாpப்பு கிடங்குகளை இந்தி யன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது. புலிகளின் புதிய கோhpக்கையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டால் இந்த குத்தகை ஒப்பந்தம் இனிமேல் புலிகளின் இடைக்கால கவுன்சிலுக்கு கைமாறும். ஒப்பந்தம் மீது புலிகள் எந்த விதமான நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க முடியும்.

இந்த புதிய இடைக்கால கவுன்சில், சுயேச்சையான தேர்தல் கமிஷன் ஒன்றை அமைத்து அந்த கமிஷன் மூலம் தமிழர் பகுதிகளில் சுதந்திரமான முறையில் தேர் தல் நடத்தும் என்று புலிகள் கோhpயுள்ளனர்.

புலிகளின் இந்த அதிகாரப் பங்கீட்டு திட்டம் இலங்கை அரசியல் கட்சிகளை வழக்கம் போல அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இருப்பினும் புலிகளின் அதிகாரப்பங்கீட்டு திட்டத்தை பாpசீலித்து அது தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு நேற்று முன் வந்துள்ளது. மாத இறுதியில் புலிகளுடன் ஆரம்பக்கட்ட நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி நார்வே தூதருக்கு இலங்கை மந்திhp ஜp.எல்.பொpஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுபோல அதிகாரப்பங் கீட்டு திட்டம் குறித்து இலங்கை அரசுடன் நேரடி பேச்சு நடத்த புலிகளும் விருப்பம் தொpவித்துள்ளனர். புலிகளின் அரசியல் பிhpவு ஆலோசகர் தமிழ்ச் செல்வன், கிளிநொச்சியில் நேற்று இந்த தகவலை தொpவித்தார்.

புலிகளின் 8 மாத பிடிவாதம் ஒய்ந்தது

இலங்கை அரசுடன் புலிகள் இதுவரை 6 சுற்றுப்பேச்சு நடத்தினார்கள். இருப்பினும் புலிகளின் எந்த ஒரு கோhpக் கையையும் இலங்கை அரசு நிறைவேற்றhமல் போக்கு காட்டி வந்தது. ஜப்பான் நாட்டில் உள்ள ஹhகோன் நகாpல் நடந்த பேச்சுவார்த் தைக்கு பின் சமரசப்பேச்சு வார்த்தையை புறக்கணிப்பதாக புலிகள் அறிவித்தனர். கடந்த 8 மாதகாலமாக பேச்சு வார்த்தை எதுவு மின்றி சமரச முயற்சி முடங்கிகிடந்தது. இந்த நிலையில் புலிகள் தற்போது அதிகாரப்பங்கீட்டு சமரச திட்டம் ஒன்றை அறி வித்து இலங்கை அரசுடன் பேசத்தயார் என்று அறி வித்துள்ளனர்.
Reply
#52
SLMC leader invites all Muslim MPs against LTTE;s proposals
Reply
#53
அதிர்ச்சியாகத் தான் இருக்கும். அண்ணா சனதிபதி தேர்தல் வரையாவது இழுத்துக் கொண்டு ஓடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு இழுத்தடித்தார். இப்போது இப்படி வந்து நின்றால் பேரினம் எல்லாம் ஒன்று சேர்ந்து புரட்டி விடும் சனாதிபதி கணவும் இத்தோடு அரோகராதான். எது ரணிலின் இந்தக் கதையா அல்லது புலிகள் கொடுத்த தீர்வுத்திட்டமா very funny story .

அன்புடன்
சிலன்
seelan
Reply
#54
எல்லாம் நன்மைக்கே !
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)