Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உராய்வு
stalin Wrote:
narathar Wrote:என்ன எல்லாரும் உராய்வில வந்து உரசலில நிக்கிறீங்க போல,அது சரி ஏன் மதன் இண்ட படத்துக்கு இவ்வளவு அடிபாடு,அவர் தான் தன்ட்ட படத்த அவதாரில போட்டிருக்கிறார்,உதுக்கே வசிக்கு 1000 பவுன்ஸ் நித்தி?
சொல்லி இருந்தா இப்படி கன படம் சுட்டுத் தந்திருப்பனே நித்தி?
என்ன நாரதர் இப்படி சொல்லிப்போட்டீங்கள்....நம்ம மதனின் persnality க்கு முன்னால் நடிகர் மாதவன் கிட்ட நிக்கிலாது தெரியுமோ....நேரிலை பார்த்தபடியால் சொல்றன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆகா மதனுக்கு இனி கால் நிலத்தில படாதே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
vasisutha Wrote:
narathar Wrote:என்ன எல்லாரும் உராய்வில வந்து உரசலில நிக்கிறீங்க போல,அது சரி ஏன் மதன் இண்ட படத்துக்கு இவ்வளவு அடிபாடு,அவர் தான் தன்ட்ட படத்த அவதாரில போட்டிருக்கிறார்,உதுக்கே வசிக்கு 1000 பவுன்ஸ் நித்தி?
சொல்லி இருந்தா இப்படி கன படம் சுட்டுத் தந்திருப்பனே நித்தி?

:oops: :twisted: :evil: :evil: :evil:
:roll: :?1000.00 GBP :twisted:
Reply
stalin Wrote:
narathar Wrote:என்ன எல்லாரும் உராய்வில வந்து உரசலில நிக்கிறீங்க போல,அது சரி ஏன் மதன் இண்ட படத்துக்கு இவ்வளவு அடிபாடு,அவர் தான் தன்ட்ட படத்த அவதாரில போட்டிருக்கிறார்,உதுக்கே வசிக்கு 1000 பவுன்ஸ் நித்தி?
சொல்லி இருந்தா இப்படி கன படம் சுட்டுத் தந்திருப்பனே நித்தி?
என்ன நாரதர் இப்படி சொல்லிப்போட்டீங்கள்....நம்ம மதனின் persnality க்கு முன்னால் நடிகர் மாதவன் கிட்ட நிக்கிலாது தெரியுமோ....நேரிலை பார்த்தபடியால் சொல்றன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்ப மதன் தன்ட்ட படத்தயே போடலமே,ரசிகை போட்டிருக்கிற மாதிரி :wink: , யாரும் கீரோவா போட்டிருப்பினமே,
அஜீவன் அண்ணா கவனிக்கவும்,அடுத்த குறும் படத்துக்கு கீரோ ரெடி :wink:
Reply
ஆ என்ன நாரதா என்னை வம்புக்கு இழுக்குறீங்கள்
<b> .. .. !!</b>
Reply
KULAKADDAN Wrote:என்ன வசி
யார் சுதா , கல்யாணி எண்டு சொல்லவே இல்லை
எல்லரும் கல்யாணி தேடி போனியளாம் எண்டு கேள்வி

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
KULAKADDAN Wrote:
stalin Wrote:
narathar Wrote:என்ன எல்லாரும் உராய்வில வந்து உரசலில நிக்கிறீங்க போல,அது சரி ஏன் மதன் இண்ட படத்துக்கு இவ்வளவு அடிபாடு,அவர் தான் தன்ட்ட படத்த அவதாரில போட்டிருக்கிறார்,உதுக்கே வசிக்கு 1000 பவுன்ஸ் நித்தி?
சொல்லி இருந்தா இப்படி கன படம் சுட்டுத் தந்திருப்பனே நித்தி?
என்ன நாரதர் இப்படி சொல்லிப்போட்டீங்கள்....நம்ம மதனின் persnality க்கு முன்னால் நடிகர் மாதவன் கிட்ட நிக்கிலாது தெரியுமோ....நேரிலை பார்த்தபடியால் சொல்றன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆகா மதனுக்கு இனி கால் நிலத்தில படாதே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இந்தப்பக்கம் மதன் அண்ணாவைக் காணவே முடியல்லை. ஏன் என்னாச்சு? :roll:
----------
Reply
இளைஞனின் உராய்வுக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு சிறப்புற நிகழ்ந்ததைக் களம் வழி கேள்வியுற்று மகிழ்வுறுகின்றோம்..! முன்னர் கூறியது போல அன்றி தற்போது...குருவிகள் லண்டன் தேம்ஸ் நதிக் கரையில் பறந்து கொண்டிருந்தாலும்...அதே தினம் வேறொரு நிகழ்வுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்த படியால்...வரமுடியவில்லை..!

வாழ்த்துக்கள் இளைஞன்...! நிகழ்வு தொடர்பான..சொந்த அனுபவங்களை சுவையாக பகிர்ந்து கொண்ட வசி, கிருபன்ஸ், ஸ்ராலின் ஆகியோருக்கும் நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குருவியா கொக்கா?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
sOliyAn Wrote:குருவியா கொக்கா?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இதில என்ன சந்தேகம் உங்களுக்கு...குருவிண்ணா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:

"தற்போது...குருவிகள் லண்டன் தேம்ஸ் நதிக் கரையில் பறந்து கொண்டிருந்தாலும்...அதே தினம் வேறொரு நிகழ்வுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்த படியால்...வரமுடியவில்லை..! "

கொக்குத்தான் தண்ணிரை கண்டவுடன் ஒற்றைகாலில் நிற்குமாம். அதனால் தான் அப்படி கேட்டாராக்கும்
Reply
sri Wrote:

தண்ணீருக்குள் நிக்கும் என்பது சரி...தண்ணீரைக் கண்டவுடனுமா நிக்கும்...?! எது எப்படியோ...கொக்கு ஒற்றைக்காலில் நிப்பதும் விசயத்தோடதான்...அது கொக்கு..இது குருவி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
வாழ்த்துக்கள் இளைஞன் அண்ணா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
Reply
ஏன் வாழ்த்துக்களை சோகமா சொல்றீங்க ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று

ஓகஸ்ட் மாதம் (2005ம் ஆண்டு) 27ம் நாள், சனிக்கிழமை மாலை ஈலிங் கனகதுர்க்கை அம்மன்கோவில் மண்டபத்தில் (இலண்டன்) இளைஞன் சஞ்சீவ்காந்தின் "உராய்வு" கவிதை நூல் வெளியீடு சிறப்புற நிகழ்ந்தது. நூல் வெளியீட்டை முதன்மையாகக் கொண்டு அரங்கு ஒன்று நிகழ்வு மூன்று என்ற நோக்கில் நூல் வெளியீடு, ஆவணக்கண்காட்சி, கலைநிகழ்வு என மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றன. இம் மூன்று நிகழ்வுகளினதும் நாயகர்கள் இளந்தலைமுறையினராய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool13.jpg' border='0' alt='user posted image'>

மாலை 3:30 மணிக்கு ஆவணக்கண்காட்சி தொடங்கியது.இந் நிகழ்வினை கவிஞரும், தமிழ்ப்பற்றாளருமாகிய திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் மரபுவழியாக ஒளியேற்றி தொடக்கி வைத்தார். யேர்மனியில் வசித்து வரும் திரு.அன்ரன் யோசப் அவர்களால் நடத்தப்பட்ட இக் கண்காட்சியில் இலங்கை - இந்திய - உலக நாணயங்கள், பணஓலைகள், முத்திரைகள், செய்தித்தாள்கள், கேலிச்சித்திரங்கள் என பல்வகையான சேகரிப்புக்களும், ஆவணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் தமிழ் மன்னர் காலத்து நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் என இதுவரை பலர் பார்த்திராத நாணயங்கள் மற்றும் பணஓலைகள் காணக்கிடைத்தன. தனது சேகரிப்பின் ஒரு சிறு பகுதியையே திரு.அன்ரன் யோசப் அவர்கள் இந்நிகழ்வில் காட்சிக்கு வைத்திருந்தார் - இருப்பினும் அத்தனை பொருட்களும் நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கியது. பலரின் ஆர்வத்தையும் தூண்டிய இந்நிகழ்வை பலரும் வரவேற்றார்கள் - அதேபோல் இந்த அரும் பெரும் பணியை விடாமுயற்சியுடன் செய்துகொண்டிருக்கும் திரு.அன்ரன் யோசப்பின் செயல்வீரத்தை வியந்து பாராட்டினார்கள். கிடைத்தற்கரிய இந்த ஆவணங்களை நம் நாட்டில் மக்கள் பார்க்கவேண்டும் - எனவே ஈழத்திலும் இதுபோன்ற கண்காட்சிகளை வைக்கவேண்டும் என்கிற கருத்துக்களை சிலர் கூறினர். புலம்பெயர்ந்த இளந்தலைமுறையினர்க்கு பயனுள்ள இக் கண்காட்சியை இலண்டனில் இன்னும் விரிவாக நடத்தவேண்டும் என்கிற கருத்தையும் இன்னும் சிலர் முன்வைத்தார்கள். நாம் பலவிடயங்களை முன்னர் ஆவணப்படுத்தத் தவறியமையால் தான் இன்று பலதை இழந்து நிற்கிறோம் என்கிற ஆதங்கக்குரல்களையும் கேட்க முடிந்தது.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool1.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool17.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool18.jpg' border='0' alt='user posted image'>

மாலை 4:30 மணிக்கு உராய்வு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு தொடங்கியது. இந் நிகழ்வினை திருமதி.சங்கரலிங்கம் அம்மையார் மங்கள விளக்கேற்றி மரபுவழி தொடக்கி வைத்தார்.அடுத்து தாயக விடுதலைக்காய் தம்முயிர் நீத்த மாவீரர்க்கும், மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செல்வி.அபிராமி இராஜமனோகரன் தாய்மொழி வாழ்த்து பாட நிகழ்வு இனிதே தொடங்கியது.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool19.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool3.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool2.jpg' border='0' alt='user posted image'>

நிகழ்வில் முதலாவதாக நாடகக் கலைஞர், ஊடகவியலாளர் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் [IBC] தொடக்க காலப் பணிப்பாளர் - தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் [TTN] தலைமைப் பொறுப்பில் இருந்தவர்) திரு.ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் நிகழ்விற்கு தலைமையேற்று தலைமையுரை நிகழ்த்தினார். தொடர்ந்தும் நிகழ்வுகளை அவரே நெறிப்படுத்தினார். இந்த உராய்வு கவிதைத் தொகுப்பின் கவிஞன் எப்படி தனக்கு அறிமுகமானான், அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (IBC) அவனது கவிதை வாசிப்புக்கள், தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (TTN) உண்டான நேரடிச் சந்திப்பு என தனக்கும் கவிஞனுக்கும் இடையிலான பல்வேறு அனுபவங்களை நிகழ்வின் இடையிடையே பகிர்ந்துகொண்டார். இளங்கவிஞன் சஞ்சீவ்காந்த்தை உரிமையோடு கவிக்கூர் என்று அழைத்து, தனக்கு பிடித்த கவிதைகளை கவிஞனின் குரலிலேயே வாசிக்கச் செய்து தனது விளக்கத்தை உணர்வுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் கூறினார். நாடகபாணியிலான இந்த தலைமையுரையை பலரும் இரசித்தார்கள்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool20.jpg' border='0' alt='user posted image'>

அதனையடுத்து சிவசிறி பாலகுமாரக் குருக்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். உராய்வு என்கிற கவிதை நூலின் பெயரை அறிவியல் அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும் அணுகி விளக்கம் சொன்னார். உராய்வு என்பது இரு பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது உருவாகிறது என்றும், அதுபோலவே இக் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளும் சமூகத்தினது பல்வேறுபட்ட உராய்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இக் கவிதைகள் வேண்டிநிற்கும் சமூகமாற்றங்கள் நம் சமூகத்தில் நிகழவேண்டும் என்பதைக் கூறி, கவிஞனை வாழ்த்தி தனதுரையை நிறைவுசெய்தார்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool5.jpg' border='0' alt='user posted image'>

அடுத்ததாக கவிஞர் திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார். இவ்வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பு எப்படித் தனக்கு கிட்டியது என்றும், கவிஞனுக்கும் தனக்குமிடையிலான அறிமுகம் பற்றியும் குறிப்பிட்டார். கவிதைத் தொகுப்பில் கையாளப்பட்டுள்ள அறிவியல், பெண்விடுதலை போன்ற பல்வேறு கருப்பொருட்களையும் முன்னிறுத்தி அவை சார் கவிதைகளையும் வாசித்து தனது உரையை ஆற்றினார். உராய்வு என்றால் என்ன என்கிற விஞ்ஞான விளக்கத்தையும் அளித்தார். உராய்வு தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒலிநயத்துடன் இருக்கின்றன என்றும், ஒலிநயமுள்ள கவிதைகள் உணர்வை தீண்டுவனவாகவும், இலகுவாக பிறரைச் சென்றடைவனவாகவும் அமையும் என்றும் கூறினார்.அதேபோல் இவ்வயதிலேயே தனது கவிதைகளை சமூகம் சார்ந்து இயற்றும் இவ் இளங்கவிஞன், தம் வயதில் மாபெரும் கவிஞனாக திகழ்வான் எனக் கூறினார்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool4.jpg' border='0' alt='user posted image'>

அதன்பின் திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் உராய்வு கவிதை நூலை வெளியிட்டு வைக்க, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும் - தமிழ் மாணவர் பேரவையின் நிறுவனருமான பொன் சத்தியசீலன் அவர்கள் நூலைப் பெற்றுககொண்டார். அதைத் தொடர்ந்து வாழ்த்துரை நிகழ்த்திய பொன் சத்தியசீலன் அவர்கள் இளங்கவிஞன் சஞ்சீவ்காந்தை மனதார வாழ்த்தியதோடு, இந்த இளந்தலைமுறையினரையும் அவர்களது முயற்சிகளையும், படைப்புக்களையும் வரவேற்றார்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool6.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool7.jpg' border='0' alt='user posted image'>

அவரைத் தொடர்ந்து "அப்பால் தமிழ்" இணையத்தள நெறியாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். இளந்தலைமுறையினர் மீது நம்பிக்கை கொள்ளுதல் பற்றியும், தலைமுறை இடைவெளியை குறைப்பதுபற்றியும் குறிப்பிட்ட அவர், இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழ் அழியப் போகிறது என்று எதிர்காலம் பற்றி புலம்புவதை தவிர்த்து - இப்படியான இளைஞர்களை வரவேற்று செயலில் இறங்கவேண்டும் என்பதை அழுத்திக் கூறினார். கவிஞன் சஞ்சீவ்காந்தின் புனைபெயரான இளைஞன் என்பதைக் குறியீடாகப் பயன்படுத்தி, இன்றை இளைஞர்களும் - தமிழ் சமூகமும் பற்றி சிறப்பாக தனது கருத்துக்களை முன்வைத்த அவர், கவிதை பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. கவிதையின் இயல்பு கவிதையின் எளிமை என்றும், சாதாரண சொற்களே கவிதையாக மாறுகிறது என்றும் சில எடுத்துக்காட்டுக்கள் மூலம் தெளிவாக விளக்கினார்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool8.jpg' border='0' alt='user posted image'>

அடுத்ததாக மேடையேறிய அரசியல் ஆய்வாளர் திரு.பற்றிமாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அறிவுடை சமூகத்தின் தேவை பற்றியும், தேடல் பற்றியும் பேசிய அவர் உராய்வு கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் அவற்றைத் தான் காண்பதாகவும் தெரிவித்தார். அறிவியல் - தொழில்நுட்பம் சார் கவிதைகளை முன்னிறுத்திப் பேசி, இக் கவிஞன் கவிதை என்கிற படைப்போடு மட்டும் நின்றுவிடப்போவதில்லை வேறுபல துறைகளிலும் மிளிர்வான் என்று கூறி உரையை நிறைவுசெய்தார்.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool9.jpg' border='0' alt='user posted image'>

மாலை 19:00 மணியளவில் கலைநிகழ்வுகள் தொடங்கின. நூல் வெளியீட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வாக அமைந்த இந்நிகழ்வில் முதலாவதாக இசை நிகழ்வு இடம்பெற்றது. உராய்வு கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் மூன்றைத் தெரிவு செய்து அவற்றைப் இனிமையாக இசையமைத்து செல்வி அபிராமி இராஜமனோகரன் மிக அற்புதமாகப் பாடினார். செல்வன் செந்தூரன் இராஜமனோகரன் வேய்ங்குழல் இசைக்க, செல்வி சிவகாமி இராஜமனோகரன் வயலின் இசைக்க, செல்வன் செந்தூரன் அனந்தசயனன் மிருதங்கம் இசைக்க இசை நிகழ்வு செவிக்கு விருந்தாகியது.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool16.jpg' border='0' alt='user posted image'>

அதைத் தொடர்ந்து நடன ஆசிரியை திருமதி சாந்தி தயாபரன் நெறிப்படுத்திய இரண்டு நடனங்கள் இடம்பெற்றன. அவரது மாணவர்களான செல்வன் கஜிநாத் ஜெயக்குமார், செல்வன் சாயிபிரகாஷ் இராமகிருஷ்ணன், செல்வி சோபனா தயாபரன், செல்வி தீபிகா குணராஜா, செல்வி நிஷாந்தினி பாஸ்கரன், செல்வி ஸியான் யேசன், செல்வி கரோஷினி சிவராஜா, செல்வி ஷர்மி சிவராஜா, செல்வி பிரியங்கா குமாரகுலசிங்கம், செல்வி சரணியா குமாரகுலசிங்கம் ஆகியோர் சிறப்புற அபிநயித்த நடன நிகழ்வு பார்வையாளர் கண்களுக்கு விருந்து படைத்தது. குறிப்பாக திருக்குறளுக்கு பொருள் சொல்வதாய் அமைக்கப்பட்ட நடனம் பலரைக் கவர்ந்தது.

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool12.jpg' border='0' alt='user posted image'>

[img]இறுதியாக உராய்வு கவிதைத் தொகுப்பின் கவிஞன் சஞ்சீவ்காந்த் ஏற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்வை இனிதே நிறைவுசெய்து வைத்தார்.[/img]

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool15.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/uraayvu/nool14.jpg' border='0' alt='user posted image'>

நன்றி - குயிலி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Mathan Wrote:ஏன் வாழ்த்துக்களை சோகமா சொல்றீங்க ?

இல்லை..வாழ்த்து சொல்ல தாமதமாகி விட்டது அதுதான்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
Reply
விழா நிகழவுகளை அழகுற தொகுத்துத் தந்த குயிலிக்கும் அதை இங்கு தந்த மதனுக்கும் நன்றிகள்..! Idea

எங்க மதன் உங்களை ஒளிச்சிட்டீங்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
போட்டிருக்கே முதல் படத்தில் ... ஆனா முகம் மட்டும் தான் தெரியலை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கவிதைகளை எங்க வாசிக்கலாம்?
..
....
..!
Reply
ப்ரியசகி Wrote:கவிதைகளை எங்க வாசிக்கலாம்?

புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினால் வாசிக்கலாம். :wink:
<b> . .</b>
Reply
விழா நிகழ்வுகளை அழகுற தொகுத்துத் தந்தமைக்கு நன்றிகள்...
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)