P.S.Seelan Wrote:700000 போரில் எத்தனை பேர் கொழும்பிற்கு ஓடிவந்தது? யாரை ஏமாற்றுகின்றீர்கள். அவர்களினது பாதுகாப்பிற்காகத் தான் அவர்களை வன்னியில் போய் இருக்கச் சொன்னார்கள். சொகுசு வாழ்வைத் தேடி தெற்கிற்கு ஓடிவந்து அந்நியனுக்கு வால் பிடித்து வாழச் சொல்லவில்லை.என்ன வன்னியில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் செத்தா போனார்கள். மண்ணை நேசித்தவனுக்கு இந்தத் துன்பம் ஒன்றும் பெரிதாகப் படவில்லை. சுயநலம் பிடித்து வாழ நினைத்தவர்கள் தாம் அதிகம் ஓடிவந்தது. வெட்கமாகத் தான் இருக்கிறது. தனது மண்ணின் நிலைமைக்கு வாழத் தெரியாமல் அந்நியனின் அடிவருடிக் கூட்டமாக வாழ நினைப்பதற்கு. அதற்காவது சிங்கள உருமையவை உருவேற்ற வேண்டும். திரும்பவும் வன்னிக்கும் யாழுக்குமாக சொந்த மண்ணிற்கு தமிழர் படையெடுக்க. செம்மணிகள் இன்னும் விசலமானதாக இருந்திருக்கும். அவர்கள் துரத்தி விடாவிட்;;டால் காணமல் போனோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். உதவாத சிலதுகள் சிங்களவனை நம்பியதால் தான் கணவனின் முன்னாலே துகிலுரிந்து அவமானப்பட்டு அநியாயமாக செத்தது. ஐம்பதுகளில் அறுபதுகளில் எங்கே வடகிழக்கிலா அடிவாங்கினார்கள். அப்போது எங்கே போனது இந்த ரோசம். அடிமை வாழ்வு அசிங்க வாழ்வு இதை உணருங்கள் முதலில்.
ஆமாம் போய் தெற்கில் குடியேறியவர்களைக் கேட்டால் சொல்வார்கள் கதையாரிடம் விடுகின்றீர்கள்.
நிச்சயமாக அமெரிக்கன் முதன் முதலில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு முதல் முதலில் பணமில்லாமல் தான் ஆயுத உதவி செய்தது. ஏனேனில் அடுத்தவனை அடித்து உலையில் போட்டால் பின் அவனுக்கு இவன் ஆயுதம் விற்று வயிறு வளர்க்கலாமே என்ற எண்ணம்
நிச்சயமாக அமெரிக்கனால் ஈராக்கில் நின்று பிடிக்காத நிலை மிக விரைவில் ஏற்படும். உலக நாடுகளைக் கெஞ்சிக் கேட்டும் அவர்கள் மறுத்து விட்டார்கள். ஏனேனில் இது அமெரிக்கனின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு யுத்தம், எண்ணைத் திருட்டுக்கான ஒரு யுத்தம் என்பது அனைவரும் புரிந்து கொண்டு விட்டார்கள். அந்த சர்வதேச அங்கீகாரத்தை ஏன் யுத்தம் தொடங்க முன் கேட்கவில்லை. அதற்கான அங்கீகாரத்தை ஐ.நா சபையும் உலக நாடுகளும் கொடுக்காத போதும் இவன் ஏன் அங்கு புகுந்தான்? திருடனே இன்னோரு திருடனைப் பார்த்து திருடன் என்கின்றான். உலக பயங்கர வாதி மற்றவனைப் பார்த்து பயங்கரவாதி என்கின்றான். முதலில் உன் முதுகை சுத்தப்படுத்து மற்றவனின் முகத்தைப் பின் பார்க்கலாம்.
இல்லை நிச்சயமாக எந்த நாடும் அமெரிக்கனின் ஆதரவுடன் செயல்பட்ட எந்த நாடும் முன்னேறவும் முடியாது முன்னேறவும் அமெரிக்கன் விட மாட்டான். அவனுக்கு வேண்டியதெல்லாம் மற்ற நாடுகளை கொதி நிலையில் வைத்து தனது பொருளாதா பலத்;தையும் உலக பொலிஸ் காரனென்ற அந்தஸ்தையும் பெறுவதே. அது இனி முடியாமல் போகலாம். ஏனேனில் முஸ்லிம் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களுக்கென ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பொல்லுக் கொடுத்து அடிமட்டுமல்ல பல்லுடையும் பட்டுக் கொண்டிருக்கின்றான். வாங்கிக் கட்டியவைகளை மறந்து மறந்து ஆச்சி போல சன்னதம் ஆடுகின்றான். சீக்கிரம் பயங்கரவாதி பயங்கரவாதிகளின் கைகளினாலேயே பாடம் படிக்கப் போகின்றான். கவலை அப்பாவி அமெரிக்க மக்களை நினைத்தே.
ஐயா சீலன் 700000 போரில் வசதியான குடும்பங்கள் அத்தனையும் மேல்நாடுகளுக்கும் சிங்களப்பகுதிகளுக்கும் குடிபெயர்ந்தார்கள்.. மேலும் இலட்சக்கணக்கில் பணம்கொடுத்து சொத்துக்கள் பணயம்வைத்து வெளியேற விரும்பாதவர்கள் பாஸ் வேண்ட முடியாதவர்கள்.. வன்னியில் அடைபட்டுக்கிடந்தார்கள் என்றால் மிகையாகாது. தற்போது என்ன இராணுவமில்லாமலா குடாநாடு இருக்கின்றது.. எப்போது சந்தர்ப்பம் வரும் என்று காத்திருந்து தமது வீடுகளுக்கு வசதிகள் பல இல்லாதநேரத்திலும் வந்து குடியேறவில்லையா..? யாருக்கையா பூச்சொருவுகிறீர்..? ஐயா.. நீங்கள் ஏன் வன்னியில் இல்லை..? அதற்கு முதலில் பதில் சொல்லுங்களேன். உங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா..? நீங்களும் வன்னிக்குள் சாகாமல் இருந்திருக்கலாம்தானே..? உங்களுக்குச் சுயநலமில்லாமல்த்தான் உங்கிருந்துகொண்டு உங்களைப்போன்ற ஏனையோரை தூற்றுகிறீர்களாக்கும்.
முதலில் உன் முதுகை சுத்தப்படுத்து மற்றவனின் முகத்தைப் பின் பார்க்கலாம். (நீங்கள் எழுதியததான்)
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஐயா நாட்டைவிட்டு வெளியேறியது 1.2 மில்லியன். இவர்கள் அத்தனைபேரும் உங்களுக்கு அடிவருடிகளாகத் தெரியலாம் எனக்கு அப்படித் தோன்றவில்லை.
செம்மணிக்கதையை எனக்குச் சொல்லாதீர்கள்.. 92-95 3 வருடகால அதி உயர் பாதுகாப்பு வலையம் அமைத்திருந்தது இவர்களே. எதற்கும் நடக்கும் விசாரணை முடிவுகள் வரட்டும்.. அதுவரை பொறுத்திருப்போம்.. 5 இலட்சம் மக்கள் தற்போது சிங்களப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்களை சிங்களவன் அடித்து துகிலுரிந்து வற்புறுத்தி கொண்டுபோய் இருத்தினானா..?
உங்கள் கதையின்படி உங்களுக்கு ஆதரவு 20 சதவீதம்கூடத் தேறாதுபோலுள்ளதே..
:!:

:?:
ஐயா அமொரிக்கா தற்போதுதான் ஈராக்கினுள் நுளைந்துள்ளது.. அதற்குமுன்னம்.. சுரண்டிய ஜேர்மனீய பிரெஞ்சு ரஸ்ய வல்லரசுகள் தங்கள் சுரண்டல்கள் தடைப்பட்டதையிட்டு வருந்துகின்றனவேயன்றி ஈராக்கின் அக்கறையில் வருந்தவில்லை..

:!:
ஒரு கல்லில் பல மாங்காய் அதில் ஒன்றுதான் எண்னெய் விவகாரம்.. அதற்குமுன்னமும் மத்தியகிழக்கு எண்ணெய் உற்பத்திக்கு 75 வீதம் உதவிசெய்தது அமெரிக்காதான்..
அமெரிக்கா தன்நலமில்லாது உதவிசெய்யுமென்றா இவர்கள் உதவிகேட்டு அங்கு சென்றார்கள்.. இல்லை பணமில்லாமல் ஆயுதம் தரும் என்ற நினைப்பிலா அங்கு போனார்கள்..? எல்லாம் தெரிந்நுதான் போனார்கள்.. தம்நாட்டையே சுடுகாடாக்கினார்கள்.
முதலில் சதாம்.. பின்லாடன் போன்றவர்கள் தங்கள் முதுகை சுத்தப்படுத்தட்டும் பின்னர் மற்றவனின் முகத்தைப் பார்க்கட்டும்.
ஐயா இஸ்லாமியர்கள் ஒன்றுசேர்ந்தால் சூரியனே இல்லாமலப்போய்லிடும். சீலன்.. "முஸ்லிம் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்க தருணம் பார்க்கிறார்கள்" தயவு செய்த இப்படியான வார்த்தைகளைப் பிரயோகித்து உலகை அழிக்கும் முயற்சியில் இறங்காதீர்கள்..
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தமது மக்களையே ஆயுதத்தால் அடக்கி ஒடுக்கி கப்பமும் வரியும் அறவிட்டு தம் சுயநலம் காக்க ஒருசாராரை மூளைச்சலவைசெய்து சலுகைகள் கொடுத்த வாங்கிவைத்திருக்கும் பயங்கரம் நிச்சயம் அழியவேண்டும்.. ஜனநாயகமுறை வளரவேண்டும்.. சீக்கிரம் பயங்கரவாதிகள் பாடம் படிக்கப் போகின்றார்கள்.
ஐயா இது உங்கள் பதிலுக்கான பதிலே தவிர தலைப்புக்கான கருத்தாடல் அல்ல..