http://sooriyan.com/index.php?option=conte...id=2181&Itemid=
நடிகை அசின் படத்தை காட்டி கனடா பொறியாளரிடம் பணம் பறிப்பு
Wednesday, 24 August 2005
--------------------------------------------------------------------------------
கோவை உடல் ஊனமுற்ற பெண கைது
கோயம்புத்தூர், ஆக 24- இண்டர்நெட்டில் நடிகை அசின் படத்தை காண்பித்து கனடா நாட்டு என்ஜினீயரிடம் நூதன முறையில் பணம் பறித்த கோயம்புத்தூரை சேர்ந்த உடல் ஊனமுற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
பூங்கொடி
கோயம்புத்தூர் செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ பள்ளி அருகில் வசித்து வருபவர் பூங்கொடி (வயது 30) இவரது கணவர் பெயர் ரவிக்குமார் பூங்கொடியின் 2 கால்களும் ஊனமுற்றவை ஆகும் இவர், பி.ஏ படித்துள்ளார்.
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே கணவன் பிரிந்து சென்றுவிட்டார. பூங்கொடி கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று முகம் தெரியாத நபர்களுடன் 'சாட்டிங் செய்வார். இதுதான் இவரது பொழுது போக்கு. இவருக்கு, இண்டர் நெட்டில் கனடா, ஸ்காபரோ, விக்டோரியா பார்க் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் டெரனஸ் சவுந்தர் என்கிற ஷியாம் (வயது 36) என்பவரது முகவா கிடைத்தது இவரை வளைத்து போட திட்டமிட்டார் அதன்படி, இண்டர் நெட்டில் நடிகை அசின் படத்தை அனுப்பினார் அத்துடன், 'இதுதான், என்னுடைய படம் நான், மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன், பிறகு 'பியூட்டி பார்லர் வைக்க திட்டமிட்டு இருக்கிறேன் எனவே எனக்கு உதவி செய்யுங்கள்" என வேண்டுகோள் கடிதமும் அனுப்பினார்.
விரும்புகிறேன், பிறகு 'பியூட்டி பார்லர் வைக்க திட்டமிட்டு இருக்கிறேன் எனவே எனக்கு உதவி செய்யுங்கள்" என வேண்டுகோள் கடிதமும் அனுப்பினார்.
ரூ.1.7 லட்சம் பணம்
கனடா என்ஜினீயரின் பூர்வீகம் இலங்கை என்பதை தெரிந்து கொண்டு, ''எனது பூர்வீகமும் இலங்கைதான் எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் அந்த கடிதத்தில் தனது பெயர் அர்ச்சனா (வயது 20) என குறிப்பிட்டு இருந்தார் இதை, படித்து பார்த்த அவர் தனது மனதை பறிகொடுத்தார் பிறகு, அவரது போட்டோவை இண்டர்நெட் மூலம் பூங்கொடிக்கு அனுப்பி வைத்தார் அத்துடன், கொஞ்சம் கொஞ்சமாக பூங்கொடி படிப்பு செலவுக்கு பணம் அனுப்பி வைத்தார் மொத்தம் ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் அனுப்பினார. இதன்பிறகு, அவர் சில காலம் கழித்து பூங்கொடி கேட்ட பொருட்களுடன் கோயம்புத்தூர் வர விரும்பினார். இதனால், பூங்கொடிக்கு பகீர்ரென ஆகிவிட்டது. தன்னை கண்டுபிடித்துவிட்டால் மானம் போய்விடுமே.. என பயந்தார. பிடிபடாமல் இருக்க புதிய வியூகம் வகுத்தார்.
ரூ.1- லட்சம் பொருட்கள்
அதன்படி, அவருக்கு மீண்டும் இண்டர்நெட் மூலம் கடிதம் அனுப்பினார் அதில், ''எனக்கு கோயம்புத்தூரில் பூங்கொடி என்று ஒரு தோழி உண்டு அவரிடம் நீங்கள் கொண்டு வரும் பொருட்களை ஒப்படைத்துவிடுங்கள் அதை நான் பெற்றுக்கொள்கிறேன்" எனக்கூறி அவரது முகவரியையே கொடுத்தார. அதன்படி, அவரும் லேப்டாப் கம்ப்யூட்டர், காமிரா, செல்போன், டேப்ரெக்கார்டர், கப் அண்டு சாசர், பிளேட் ஆகியவை உள்பட ரூ. லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தட்டுமுட்டு சாமான்களுடன் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தார்.
பூங்கொடியிடம் அனைத்து பொருட்களையும் கொடுத்தார் பிறகு அவர், பூங்கொடியிடம், ''நான் அர்ச்சனாவை பார்க்க விரும்புகிறேன்" என கூறினார் அவர்தான் அர்ச்சனா என அவருக்கு தெரியவில்லை. கடைசி வரை முயன்றும் அர்ச்சனாவை பார்க்க முடியாமல் கனடா திரும்பி விட்டார்.
கைது
இவர்களது இண்டர்நெட் விளையாட்டு கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடந்தது. இதன்பிறகுதான் கனடா என்ஜினீயருக்கு முழு விவரம் தெரியவந்தது கடும் அதிர்ச்சி அடைந்தார் நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்து வேதனை அடைந்தார் பின்னர், அங்கிருந்தபடியே தபால் மூலம் கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் கரன்சின் காவுக்கு புகார் மனு அனுப்பினார் அவரது உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வித்யா குல்கர்னி (குற்றப்பிரிவு) மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெயபாண்டியன், இன்ஸ் பெக்டர் வெற்றிவேல், சப்- இன்ஸ்பெக்டர் வாசுகி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் பிறகுதான் மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் தெரியவந்தன இதையடுத்து, நேற்று (செவ்வாய்) காலை ப+ங்கொடியை சுற்றி வளைத்து கைது செய்தனர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சிக்கிக்கொண்டேன் ப+ங்கொடி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது-
நான் பி.ஏ வரை படித்து உள்ளேன் எனக்கு தந்தை இல்லை தாய் மட்டும்தான் உள்ளார் எனது குடும்பம் நடுத்தர குடும்பம் இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த என்ஜினீர் ரவிக்குமார் கோயம்புத்தூருக்கு கட்டிட வேலை தொடர்பாக வந்து இருந்தார். அவருக்கும், எனக்கும் காதல் ஏற்பட்டது காதலித்த அவரை என்னை திருமணம் செய்ய மறுத்தார் இதையடுத்து நான் போலீசில் புகார் செய்தேன் பின்னர் போலீசார் உதவியுடன் அவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே அவர் என்னைவிட்டு விட்டு ஓடிவிட்டார். இதனால் நான் தனிமையில் வசித்து வந்தேன் எனக்கு கம்ப்யூட்டர், இண்டர்நெட் பற்றி நன்கு தெரியும்
நான் கம்ப்ய+ட்டர் பிரவுசிங் சென்டருக்கு சென்று 'சாட்டிங் கில் ஈடுபட்டேன் அப்போது கனடா என்ஜினீயர் அறிமுகம் கிடைத்தது பணக்காரரான அவரிடம் இருந்து பணத்தை கறந்து ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன் இதனால், நடிகை அசீன் படத்தை எனது படம் எனக்காட்டி அவருடன் அடிக்கடி பேசி பணம் மற்றும் பொருட்களை பெற்றேன் இப்போது போலீசில் சிக்கிக் கொண்டேன்
இவ்வாறு அவர் கூறி இருப்பதாக தெரிகிறது.