Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Boys
விளக்கம் சரி அண்ணா...ஆனா ஒரு இடத்தில உதைக்குதே...ஏன் அடிக்கடி குத்தகைக்கு எடுக்கவேண்டும்....! குத்தகைக்கு எடுக்கிறதைக் குறைக்கலாமே...எல்லாம் மனதில இருக்கு....மனம் அடங்கினால் மனிதன் மிருகமாகான் இல்லையோ....! முந்திக் காலத்தில உதுகள் எல்லாம் இல்லைத்தானே ,மனித சனத்தொகையும் இப்படி 600 பில்லியன் எண்டு தொட்டதும் இல்லை...அப்ப வர வர குத்தகைக்கு எடுக்கிறது கூடுதெண்டுறியளோ...?! அதை சங்கர் சொல்லிப் போட்டார் எண்டுதானே இத்தனை பாய்ச்சலும் போல...?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:விளக்கம் சரி அண்ணா...ஆனா ஒரு இடத்தில உதைக்குதே...ஏன் அடிக்கடி குத்தகைக்கு எடுக்கவேண்டும்....! குத்தகைக்கு எடுக்கிறதைக் குறைக்கலாமே...எல்லாம் மனதில இருக்கு....மனம் அடங்கினால் மனிதன் மிருகமாகான் இல்லையோ....! முந்திக் காலத்தில உதுகள் எல்லாம் இல்லைத்தானே ,மனித சனத்தொகையும் இப்படி 600 பில்லியன் எண்டு தொட்டதும் இல்லை...அப்ப வர வர குத்தகைக்கு எடுக்கிறது கூடுதெண்டுறியளோ...?! அதை சங்கர் சொல்லிப் போட்டார் எண்டுதானே இத்தனை பாய்ச்சலும் போல...?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<span style='font-size:21pt;line-height:100%'>எங்களப் பெத்தவங்களும் மனசை அடக்கியிருந்தா எங்களப் போல ஒரு கூட்டம் பிறந்திருக்காதுதான்.
உங்கட ஆதங்கம் எனக்கு விளங்குது,அவங்களுக்கு தெரியாம போச்சே என்டுதான் வருத்தமாயிருக்கு.
திரும்பி என்ன,
வந்த பாதையில போகவா முடியும்??????????????
சந்தேகம்தான்!!!!!!!!!!!!
சொன்னதை மறந்து சில நேரம் பினாத்திற நேரம்,
கடிச்சுக் குதறிடுமோ என்டும்
பயமாயிருக்கு..........
சத்தியமா
தொப்புளை சுத்தி ஊசி போட
எனக்கு பலமில்ல தம்பி...........
</span>
Reply
----------
nadpudan
alai
Reply
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......! எங்களைக் கேட்டா எங்களை இறக்கினவங்க.....கேட்டிருந்தால் அப்பவே ஐயோ வேண்டாம் தான்....என்ன மனிதப்பிறப்பப்பா...போதுமடா சாமி...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நான் பாலியலையே செக்ஸ் என எடுத்துக் கதைத்தேன்.. நீங்கள் யாரோ சொன்ன அன்பு பாசம்.. தாய்ப்பாசம்.. குழந்தையின் அன்பு எல்லாவற்றையும் செக்ஸ் என்ற பதத்துள் புகுத்தியதை இங்கே கொண்டு வருகிறீர்கள்.. அப்படிப் பார்த்தால் குழந்தைக்க எதற்காக இனிசல் என்ற அரிதாரம்.. வேண்டும் போது வேண்டியவரோடு செக்ஸை அனுபவித்துவிட்டு பெத்துப்போட்டு.. தமிழ்நாட்டில் உள்ளதுபோல தாயின் இனிசலைப் போடவேண்டியதுதானே.. பிறகு ஏன் சொந்தம் பந்தம் குடும்பம் என்ற போலி அவதாரங்களும் மாமா மாமி மச்சான் அண்ணன் தம்பி என்ற அரிதாரங்களும்.. தேவையானால் செக்ஸை வீட்டினுள்ளேயும் பங்குபோடலாமே.. யார் தடுத்தார்.. நீங்கள் கூறுவதுபோல அதுகளும் பொய் முகங்கள்தானே.. தப்பில்லையே.. குவேனியின் பிள்ளைகள்தானே இலங்கையில் வேடர் பரம்பரையை உருவாக்கியதாக வரலாறு சொல்லுது... வாழ்க செக்ஸ்.. வளர்க வேடர் குலம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
அப்ப கடவுளுக்கு வேலை லேசு....மனிதனுக்கு ஆறாம் அறிவு வைக்கத்தேவையில்லை எண்டுறியளோ...அதுதானே பெரிய பிரச்சனையாக் கிடக்கு..மிருகமாகவும் விடுகுதில்லை ..மனிதனாகவும் விடுகுதில்லை....! இரண்டும் கெட்டாம் நிலைக்கு ஆறாம் அறிவின் பயன்படுதிறனே முக்கிய பங்களிக்குது போல....பயன்படு திறன் கூட மனித இயல்பு கூடும்... குறைய மிருக இயல்பு கூடும்...அறவே இல்லாமல் போக மிருகத்தைவிடக் கேவல நிலை தோன்றும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:அன்பு, காதல், காமம், பாசம்,நேசம்,அனுதாபம்,நட்பு,கவர்ச்சி,............இப்படியான ஒருவரை ஒருவர் ஈர்க்கும் சக்தியுடன் கூடியதைத்தான் செக்ஸ் என்கிறோம். நமது நடைமுறை பழக்கத்தின் வித்தியாசங்கள்தான் வேறு வேறே தவிர அடிப்படை ஒன்றுதான்.

Sex - All of the feelings resulting from the urge to gratify sexual impulses

அண்ணை
காமத்தை ஒரு கலையாகப் போற்றிப் புகழ்ந்தது எமது கலாசாரம்...ஒருவனுக்கு ஒருத்தி எனும் பண்பாட்டில்..தலைவனும் தலைவியும் ஒன்றறக்கலந்து காதலில் ஈருடல் ஓருடலாகக்கலக்கும் நிகழ்வு...
கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு சமுதாய அமைப்பை நெறிப்படுத்தவும் நோய் நொடியிலிருந்து பாதுகாக்கவுமே திருமணத்தையும் ஒருவனுக்கு ஒருத்தி...ஒருத்திக்கு ஒருவன் எனும் கற்பின் அடிப்படையிலான கலாசார அமைப்பைக் கொண்டது எமது இனம்...திருமணத்தின் பின் தத்தமது துணையுடன் அந்தக் கலையை நன்றே பயின்று நன்கே அனுபவிக்கலாம்....
திருமணத்திற்கு முன் எதற்கையா அலையவேண்டும்?....மாணவ (பிரம்மச்சாரிய) பருவத்தில் மனதை அடக்கி ஐம்புலன்களை ஒடுக்கி கல்வி கடமைகளில் மனதைச் செலுத்தவேண்டும்

சோறு அவிந்தபின்தான் சாப்பிடலாம்..அதுவரை பொறுமை வேண்டும்...அவிய முதல் பானையினுள் கையைவிட்டுச் சாப்பிட்டால் கையையும் சுட்டுக்கொள்வீர்கள் வாயையும் புண்ணாக்கிக் கொள்வீர்கள்...எல்லாத்துக்கும் ஒரு பருவம் பக்குவம் உண்டு!
Reply
சுதந்திரம் இருக்கெண்டதுக்காக நிர்வாணமாக ஓடக்கூடாதென்று சொல்லுறியளோ கணனி?!
.
Reply
[quote=sOliyAn]நான் பாலியலையே செக்ஸ் என எடுத்துக் கதைத்தேன்.குழந்தைக்க எதற்காக இனிசல் என்ற அரிதாரம்.. வேண்டும் போது வேண்டியவரோடு செக்ஸை அனுபவித்துவிட்டு பெத்துப்போட்டு. தாயின் இனிசலைப் போடவேண்டியதுதானேதேவையானால் செக்ஸை வீட்டினுள்ளேயும் பங்குபோடலாமே.. யார் தடுத்தார்.. நீங்கள் கூறுவதுபோல அதுகளும் பொய் முகங்கள்தானே.. தப்பில்லையே.. குவேனியின் பிள்ளைகள்தானே இலங்கையில் வேடர் பரம்பரையை உருவாக்கியதாக வரலாறு சொல்லுது...

[quote=Kanani]
காமத்தை ஒரு கலையாகப் போற்றிப் புகழ்ந்தது எமது கலாசாரம்...ஒருவனுக்கு ஒருத்தி எனும் பண்பாட்டில்..தலைவனும் தலைவியும் ஒன்றறக்கலந்து காதலில் ஈருடல் ஓருடலாகக்கலக்கும் நிகழ்வு...
கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு சமுதாய அமைப்பை நெறிப்படுத்தவும் நோய் நொடியிலிருந்து பாதுகாக்கவுமே திருமணத்தையும் ஒருவனுக்கு ஒருத்தி...ஒருத்திக்கு ஒருவன் எனும் கற்பின் அடிப்படையிலான கலாசார அமைப்பைக் கொண்டது எமது இனம்...திருமணத்தின் பின் தத்தமது துணையுடன் அந்தக் கலையை நன்றே பயின்று நன்கே அனுபவிக்கலாம்....
திருமணத்திற்கு முன் எதற்கையா அலையவேண்டும்?....மாணவ (பிரம்மச்சாரிய) பருவத்தில் மனதை அடக்கி ஐம்புலன்களை ஒடுக்கி கல்வி கடமைகளில் மனதைச் செலுத்தவேண்டும்
[/quote]

[quote=kuruvikal]அப்ப கடவுளுக்கு வேலை லேசு....மனிதனுக்கு ஆறாம் அறிவு வைக்கத்தேவையில்லை.மிருகமாகவும் விடுகுதில்லை ..மனிதனாகவும் விடுகுதில்லை....! இரண்டும் கெட்டாம் நிலைக்கு ஆறாம் அறிவின் பயன்படுதிறனே முக்கிய பங்களிக்குது போல....பயன்படு திறன் கூட மனித இயல்பு கூடும்... குறைய மிருக இயல்பு கூடும்...அறவே இல்லாமல் போக மிருகத்தைவிடக் கேவல நிலை தோன்றும்...!
[/quote]

[quote=kuruvikal]ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......! எங்களைக் கேட்டா எங்களை இறக்கினவங்க.....கேட்டிருந்தால் அப்பவே ஐயோ வேண்டாம் தான்....என்ன மனிதப்பிறப்பப்பா...போதுமடா சாமி...!

[size=13]நமக்குள்ளேயே நமக்குத் தேவையானவை இருக்கிறது.
அடிமனம் சொல்கிறது , புறமனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

[size=14]இருப்பது என்றும் அழியாது. இல்லாதது எதுவும் புதிதாக தோன்றவும் செய்யாது.
வடிவங்கள் மாறும். தோற்றங்கள் மாறும்.
ஆனால் வாழ்வின் ஆழ்ந்த இரகசியம் மட்டும் எப்போதும் அப்படியே இருக்கும்.
தனிமனிதர்கள் வருவார்கள், போவார்கள் ,கடல் அலைகள் எழுந்து பொங்கி வீழ்ந்து மறைவது போல. தனிமனிதனுக்குள் இருப்பதுவும் , அலைகளுக்குள் இருப்பதுவும் அழிவதில்லை...............

அன்புடன்
அஜீவன்
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>பாலியல் சம்பந்தமான
கெளரவ பெண் கொலை</span>
<img src='http://www.frauenheilkunde-praxis.de/templates/Care/img/669999/bild3.jpg' border='0' alt='user posted image'>

ஈராக்கின் குர்திஸ் இனத்தின் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த அப்துல்லா யொன்னெஸ்
10 வருடங்களுக்கு முன்னர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாமெனும் பயத்தினால் நாட்டை
விட்டு வெளியேறி லண்டணுக்கு வந்தார்.அவரது அரசியல் தங்சக் கோரிக்கை லண்டனில் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதியதொரு வாழ்கையைத் தொடங்கினார்.


காலப் போக்கில் தனது குழந்தைகள் குர்திய நாட்டு இஸ்லாமிய கலாசாரத்தை விட்டு ஐரோப்பி கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கிதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர் தமது குழந்தைகளை கண்டித்தது மட்டுமல்லாமல், அவர்களை ஈவிரக்கமின்றி தண்டித்தும் இருக்கிறார்.

திடீரென ஒரு நாள் எவரும் எதிர்பாராத விதத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொடுரமாக கொலை செய்யப்பட்டுக் காணப்பட்ட அப்துல்லாவின் மகளான 16 வயது கெசு யொன்னசை அல்கொய்தா தீவிரவாதிகள் வீட்டினுள் நுழைந்து தாக்கி தன் மகளை கொலை செய்து விட்டு
சென்று விட்டதாக அப்துல்லா போலீசிடம் புகார் கொடுத்தார்.


ஆனால் நீதிமன்றத்தில் புதியதொரு தகவல் ெவளிப்பட்டப்பட்டது.

அது
16 வயது கேசு இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதமொன்று போலீசாரிடம் சிக்கி அது நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதுதான்.
<b>
அக் கடிதம்:-</b>


<span style='color:green'>
இனி வணக்கம் அப்பா, இதுவரை உங்களை கஸ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன் அப்பா.
அப்பா நீங்கள் விரும்பி விதத்திலான மகளாக வளர என்னால் முடியாமல் போனதையிட்டு மிகு வருத்தமாக இருக்கிறது.
இருந்தாலும் அப்பாவுக்கு விருப்பமில்லாதவற்றையும் செய்ய வேண்டியிருக்கிறதே.
ஆனாலும் அப்பாவுக்கு வயசானாலும் உங்கள் கை-கால்களின் வலு இன்னும் இளமையாகவே இருக்கிறது. நான் உங்கள் கை- கால்களின் பலத்தை காட்டக் கிடைத்த ஒரு பொருளாகத்தான் என்னை நான் நினைக்க வேண்டியிருக்கிறது.
மிக அருமை. நான் எங்கே போகப் போகிறேன் என்பது கூட எனக்கு தெரியவில்லை.
அதனால் என்னைத் தேடாதீர்கள் அப்பா.</span>

என்று
அக்கடித்தை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற கெசு முயற்ச்சி செய்தாலும் அது நிறைவேறவேயில்லை.

அவள் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவ இளைஞனுடன் ஏற்பட்டிருந்த காதல் தொடர்பு காரணமாக அவளது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டும் கழுத்து வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டது குடும்ப கௌரவமும் கலாச்சாரமும் காப்பாற்ற பட வேண்டுமென்ற காரணத்தால்.

இக் கொலையை விசாரித்த நீதிமன்றம் கெசுவின் தந்தையான அப்துல்லாவுக்கு ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்தது.
<span style='color:red'>

தமது கௌரத்தை காப்பாற்ற நடத்தப்படும் கொலைகள் தொடர்பாக : குடும்ப கௌரவங்களை பாதுகாக்க நடத்தப்படும் வன்முறைகள் பெண்களின் பாலியல் பிரச்சனைகளை முன் வைத்தே ஆரம்பமாகிறது.

ஓரு பெண்ணிண் வாழ்கை முறை , அவளது உடைகள், அவள் வாழும் விதம் ஆகியவை குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கூடிய விதத்தில் அமைய வேண்டுமென்றே ஆண்வர்கவாதிகள் எண்ணுகிறார்கள்.

ஓரு பெண் தன் குடும்ப கௌரவம் -மதம் - கலாச்சாரம் மற்றும் கொள்கைகளை மீறினால் அவர்களது குடும்ப கௌரவத்தை இழிவு படுத்துவதாக எண்ணுகிறர்கள். இப்படியாக தினம் தோறும் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் 13 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறது பெண் உரிமைக்கான லண்டன் மனித நேய அமைப்பு.

ஆனால் இப்படியான குடும்ப கௌரவத்தை அவமதிப்பதான குற்றச்சாட்டுகள் ஆண் வர்க்கம் மேல் சுமத்தப்படுவதில்லை என்று அது மேலும் கூறுகிறது.

உலகத்தில் வாழும் இப்படியான அல்லலுக்கு தினந்தோறும் சிக்கிக் கொள்ளும் 5000 பேருக்கு இளைக்கப் படும் கொடுமைகளை தட்டிக் கேட்கவோ தண்டனை வாங்கிக் கொடுக்கவோ முடியாமலிருப்பது வருத்தத்துக்குரியது என்று கூறுகிறது இவ் அமைப்பு.

இப்படியான கொலைகள் எந்த சமயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று லண்டனின் தலைமை இஸ்லாமிய அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

ஆனாலும் இவை கிழக்காசியாவிலும் அரபு நாடுகளிலும் மிகக் கடுமையாக இருக்கிறது.
பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் இவை இன்றும் நடை முறையில் இருக்கிறது. இருப்பினும் இவை இங்கே சட்டத்துக்கு புறம்பானதேயாகும். யோர்தானின் சில பகுதிகளிலும், சிரியாவிலும் இந்நிலையை நேரடியாகவே காண முடியும். இந் நாடுகளில் நீதிக்கு புறம்பானதாகவும் இல்லை ,ஏற்புடையதாகவும் இல்லை. இங்கே இவற்றை மாற்றவோ எதிர்க்கவோ ஆட்சியாளர்கள் யோசிப்பதோ கண்டு கொள்வதோ இல்லை.

கொலை செய்யப் பட்ட கெசுவை கொலை செய்த அவளது தந்தைக்கு வேறு சில குர்திஸ் இனத்தவர்களது உதவி கிடைத்திருப்பதான தகவல்கள் கிடைத்ததையடுத்து லண்டன் போலீசார் தொடர் துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆசியாவில் மட்டுமல்ல ஐரோப்பி நாடுகளிலும் இப்படியான பெண் வதைகளும் கொலைகளும் இடம் பெறுவதாகக் கூறும் லண்டன் நகர போலீசின் தலைமை அதிகாரியான அன்டி பேக்கர் கடந்த வருடத்தில் மாத்திரம் இப்படியாக லண்டனில் மட்டும் 12 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
[size=14]இது குடும்ப கௌரவ - கலாச்சார கொலைகள் என்பதை விட மனித நேயமற்ற பாலியல் மிருக வதைக் கொலைகள் என்று தனது விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்.</span>

அடுத்த வாரம் லண்டன்-சுவிஸ் பெண்கள் அமைப்பு தரும் இலங்கை பெண்கள் தொடர்பான கொலைகள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட இருககிறது.
Reply
ஆனால் இப்படியான குடும்ப கௌரவத்தை அவமதிப்பதான குற்றச்சாட்டுகள் ஆண் வர்க்கம் மேல் சுமத்தப்படுவதில்லை என்று அது மேலும் கூறுகிறது......
பெண் உரிமைக்கான லண்டன் மனித நேய அமைப்பு.


தமது கலாசாரத்தை பாதுகாப்பதென்பது ஒரு சமூகத்தின் கடமையே தவிர ஆணினது மட்டும் அல்ல...இஸ்லாமிய சமூகம் ஆணுக்கு முன்னுரிமை அளிக்கும் சமூகம்...அங்கு நடத்தப்படும் குற்றங்களுக்கு எல்லாம் ஒட்டு மொத்த ஆண்கள் பொறுப்பேற்க முடியாது....! அது மட்டுமன்றி இது ஒரு கிறிமினல் குற்றம்....அதற்கான காரணங்களில் கலாசாரத்தை விலகி நடந்தது என்பது ஒன்று...கலாசாரத்தை விலகி நடந்ததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்காதது தனிநபரின் குறையே அன்றி முழு சமூகத்து ஆணினதும் அல்ல...தனிமனித இயலாமைகளினதும் பலவீனங்களினதும் கொடூரங்களினதும் வெளிப்பாடுகள் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தை குறை கூறப்பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது....! அது ஆண்களின் அடிப்படை மனித உரிமையைப் பாதிக்கும் செயலும் கூட....! சொந்தப் பிள்ளையையே கொல்லும் தாய்மாரும் ஐரோப்பிய சமூகத்துள்ளும் உள்ளனர்...அதற்காக ஒட்டு மொத்த பெண்களையும் நாம் குறை கூறி தீர்வு தேடினால் நடப்பது என்ன...?!
தனிமனித பலவீனங்களைக் களையும் நடவடிக்கையை விட்டுவிட்டு ஆண்கள் மீது பழி போட்டுக் காலம் கடத்துதல் குற்றங்கள் பல்கிப்பெருகவே வழி சமைக்கும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='font-size:21pt;line-height:100%'>ஓரு பெண்ணிண் வாழ்கை முறை , அவளது உடைகள், அவள் வாழும் விதம் ஆகியவை குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கூடிய விதத்தில் அமைய வேண்டுமென்றே ஆண்வர்கவாதிகள் எண்ணுகிறார்கள் எனும் வாக்கியத்தை வைத்து ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் சாடுவதாக நினைக்கிறீர்கள்.

ஒரு நாட்டில் யுத்தம் நடக்கிறது என்றால் அந்த நாடு முழுவதுமே யுத்தக் காடாக இருக்கிறது என்றோ, உலகமே கெட்டு விட்டது என்று சொன்னால் முழு உலகமே கெட்டு விட்டது என்றோ எடுத்துக் கொள்வதா? அது ஒரு குறிப்பிட்ட பகுதியைத்தான் குறிக்கிறது. ஒருவர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த சமூகமும் என்று யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

<b>[size=14]முடிவாக,
லண்டன் நகர போலீசின் தலைமை அதிகாரியான அன்டி பேக்கர் (இவரும் ஒரு ஆண்தான்) கூறுவதுதென்ன:</span></b>
<span style='color:darkblue'>ஆசியாவில் மட்டுமல்ல ஐரோப்பி நாடுகளிலும் இப்படியான பெண் வதைகளும் கொலைகளும் இடம் பெறுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் இப்படியாக லண்டனில் மட்டும் 12 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்

[size=14]இது குடும்ப கௌரவ - கலாச்சார கொலைகள் என்பதை விட மனித நேயமற்ற பாலியல் மிருக வதைக் கொலைகள்</span> என்றுதான் விசனப்பட்டிருக்கிறார்.

<span style='color:brown'>இங்கே ஒட்டு மொத்த ஆண் வர்க்கமும் ஒரு போதும் தாக்கப்படவில்லை. சம்பந்தப் பட்டவர்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கிறரர்கள்.

இச் செய்தியினுாடாக ஐரோப்பிய நாட்டுக்குள் வசிக்கும் ஏனைய சமூகங்களின் [size=18][u]ஒரு சிலரிடம் காணப்படும்
</span>கொலை வெறிப் போக்கு பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவை நாகரீகமான ஒரு சமூகத்தால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

அஜீவன்
Reply
மக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் - பித்தனின் கோபங்கள்.
பித்தன்

'பாய்ஸ்' படம் வெளிவந்து மோசமான படம் என்றாகி, ஷங்கரும் 'பாய்ஸ§ம்' மோசம் (bad) என்று பெயரெடுத்துள்ள நிலையில் டைரக்டர் செல்வராகவன் பேட்டி அளித்துள்ளார். என்ன சமூக சிந்தனையுள்ள பேட்டி! பல வருடங்களாக சினிமாக்காரர்கள் கூறும் வாதத்தையே இவரும் கூறுகிறார், "நடப்பதைத்தானே காட்டுகிறோம்" என்று. இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்களோ தெரியவில்லை. "நீலப்படமா எடுக்கிறோம்?" என்று வேறு கேட்கிறார்! (அந்த ஆசை வேறு இருக்கிறதா?). நீலப்படங்களில் என்ன உடலுறவுக் காட்சிகள் தானே இருக்கும். தமிழ் நாட்டில் அது நடப்பதில்லையா? நடப்பதைத்தானே காட்டுகிறோம் என்று அவற்றையும் காட்ட முடியுமா? எது நடப்பதில்லை? சிலவற்றை வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டும்; சிலவற்றை பொதுவில் செய்யக்கூடாது என்பதுதான் சமூகமும் அதற்கான விதிகளும். உங்களுக்கு ஒரு கோடி கும்பிடு, இனியாவது 'நடப்பதைத்தான் காட்டுகிறோம்' என்ற கிறுக்குத்தனமான வாதத்தை நிறுத்துங்கள். காது புளித்துவிட்டது.


சமீபகாலமாக இன்னொன்று, எதற்கெடுத்தாலும், "அமெரிக்கா போன்ற நாடுகளில் இது சகஜம்" என்று கூறுவது! இருக்கட்டுமே, அது அவர்கள் கலாச்சாரம். அதை ஏன் இங்கு புகுத்தவேண்டும்? அவ்வளவு அவசரமாக நம் குழந்தைகளையும், மக்களையும் அந்த கலாச்சாரத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? நம் கலாச்சாரத்திற்கு திடீரென என்ன குறைந்துவிட்டது? போதை மருந்துப் பழக்கங்களும் கூட அமெரிக்கா போன்ற நாடுகளில் சகஜம். அதற்காக அவற்றை நம் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தலாமா என்ன? பிற நாடுகளில் உள்ள நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொள்வதுதான் அழகு. புடவையை உதறிவிட்டு தங்கள் வசதிக்காக பெண்கள் சுடிதாரும், ஜீன்ஸ§ம் அணிவது கலாச்சார மாற்றம். புடவை, புற ஆடைகளை உருவிவிட்டு உள்ளாடைகளுக்கு வர்ணம் பூசி வெளியாடைகள் போலக் காட்டி குலுக்கி ஆடச் சொல்வது கலாச்சாரச் சீரழிவு. சமூக மாற்றத்தைத் தடுக்க முடியாது. தடுக்கவும் தேவையில்லை. ஆனால் மாற்றத்தை நல்ல முறையில் கொண்டு செல்லும் கடமை-பொறுப்பு அனைவருக்கும் தேவை. மாற்றம் என்ற பெயரில் சீரழிவு செய்யாதீர்கள் என்பதே வெகுஜன வேண்டுகோள்.


முன்பின் அறிமுகமில்லாத பெண்ணைப்பார்த்து 'ஓடிப்போயிடலாமா?' எனக் கேட்பது, பட்டம் வாங்கும் போது பட்டம் வழங்கும் பெண்மணியைப்பார்த்து 'ஐ லவ் யு' சொல்வது, ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நடுநிசியில் நடுத்தெருவில் பெண்களோடு சேர்ந்து ஆடிவிட்டு காவல் நிலயம் செல்வது, நம் சமூக நம்பிக்கையின் ஆணிவேரான தாலியைக்கழட்டி ஆணியில் மாட்டுவது, அப்பாவை, "டேய் சேகர்" என பெயர் சொல்லி மரியாதையாக(?!) அழைப்பது, 4 வயது பிள்ளைகள் கூட 40 வயது ஆட்களை விட மோசமாக பேசுவது; இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் பெரிய டைரக்டர் என பெயர் வாங்கிய மணிரத்னம் படங்களின் சமூக அன்பளிப்புகள். இப்போது ஷங்கரும் சேருகிறார். சேரன், லிங்குசாமி போன்ற புதுமுக இயக்குனர்களை விட பெரிய டைரக்டர்கள் எனப் புகழ் பெற்றுவிட்டவர்களின் படங்களில் தான் இந்தக் கேவலங்கள் அதிகமாக இருக்கிறது. இப்படித்தான் பெரிய இயக்குனராவதோ என்னவோ? செல்வராகவனும் சீக்கிரம் பெரிய டைரக்டர் ஆகிவிடுவார்! இந்தப்படங்களைப் பார்த்துவிட்டு, மாணவர்கள் ஆசிரியைகளை ஓடிப்போக அழைத்தக் கூத்துக்களும் நடந்தது. எங்கோ மாநரப்பகுதிகளில் ஒரு சில சம்பவங்கள் நடக்கலாம்; ஒரு சில வாயாடிக் குழந்தைகள் அப்பாவை பெயர் சொல்லி அழைக்கலாம். இது போன்ற காட்சிகளைக் காட்டுவதால் அதனுடைய நீட்சி கிராமப்புறங்களிலும் எதிரொளித்து, ஒழுக்கமான குழந்தைகளும் கெட்டுப்போக வாய்ப்பளிக்கும்.


ஒரு நகரப் பேருந்து நிலயத்தில் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாகக்கூறி ஒரு காதல் ஜோடியை போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொதுவிடங்களில் இப்படி நடக்கக்கூடாதென்று எச்சரித்து அனுப்பியுள்ளது, செய்தி. முத்தம் கூடாதென்பதாலோ, போலீஸிற்கு பிடிக்கதென்பதாலோ அல்ல. பல வயதினரும், பலதரப்பட்ட மக்களும் இருக்கும் பொது இடமென்பதால்தான்.1000 பேர் வரக்கூடிய பேருந்து நிலையத்திற்கே இப்படி. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் படங்களில் பல வருடங்களாகக் கிட்டதட்ட அனைத்துப்படங்களிலும் முத்தக்காட்சியை வைத்துவருகிறார் கமல்! இதை யார் கண்டிப்பது? சென்சார் எப்படி அனுமதிக்கிறது? நகைச்சுவை என்ற பெயரில் அப்பட்டமான 'ஈவ் டீஸிங்' காட்சிகள். நடந்துபோகும் பெண்ணைப்பார்த்து "நீ என்ன, உலக அழகிக்கு தங்கையா?" என்று கேட்கிறார் ஒரு சிரிப்பு நடிகர்! (இவர் ஏதோ ஆணழகனுக்கு அண்ணன் போல!) இதைப்பார்த்து விட்டு 'ஈவ் டீஸிங்' செய்யும் மாணவர்களை போலீஸ் கைது செய்கிறது. இது போன்ற காட்சிகளுக்கு சென்சார் ஏன் அனுமதியளிக்கிறது? கொலை செய்வதை விட அதை தூண்டுவதற்கே தண்டனை அதிகம் எனில், பெண்களை கிண்டல் செய்வது குற்றமாகிவிட்ட நிலையில், அதை தூண்டுவது போல அமையப்பெற்ற இக்காட்சிகளை எடுப்போரையும், நடிப்போரையும் போலிஸ் கைது செய்யுமா?


கேட்டால் கதைக்குத் தேவையானதென்பதாலேயே இக்காட்சிகள் இடம்பெறுவதாக, அதரப்பழைய வாதத்தையே வைக்கிறார்கள். இது அடுத்த முட்டாள்தனம். கதையை அமைப்பதே இவர்கள் தானே. கதைக்குத் தேவையெனில் கவர்ச்சிக் காட்டுவேன் என்று நாயகிகள் கூறுவதுபோல! கதைக்கும் கவர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? ஆள் மயக்கியாகவோ, விலைமாதாகவோ நடிப்பதானால் சிறு கவர்ச்சி வைக்கலாம். (அதையும் கவர்சி இல்லாமல் எடுக்க முடியுமென்பதே உண்மை!) இவர்களோ, கதாநாயகிகள். கல்லூரியில் படிக்கும் ஒரு சாதாரணப் பெண், ஹீரோவைக் காதலிக்கப் போகிறார். அவ்வளவுதான் கதையும் அவர்கள் கதாப்பாத்திரமும். இதில் கதைக்கு ஏற்ப கவர்ச்சிக்காட்டுவேன் என்பது என்ன ஏமாற்றுவேலை! 'எல்லாவற்றையும் மறைத்து வைத்துதான் மாணவர்களை கெடுத்து வைத்திருக்கிறோம்' என்றுவேறு கவலைப்படுகிறார். என்ன கரிசனம்? ஆடும் ஓநாயும் உள்ள பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஷங்கரும், கமலும், மணிரத்னமும், செல்வராகவனும், சுஜாதாவும் வந்துதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என மாணவர்கள் ஒன்றும் அழவில்லை. நல்ல வழிக்காட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை, தீயவழிகளைக் காட்டாமலிருந்தாலே போதும்.


"நான் படித்தபோது பார்த்தவைகளை படமாக எடுக்கவேண்டும் என நினைத்ததையே எடுத்திருக்கிறேன்" என்கிறார் ஷங்கர். எங்கு, மனநோய் காப்பகத்தில் படித்திருப்பாரோ?! நானும் கூட இரண்டு கல்லூரிகளில் படித்திருக்கிறேன். எந்த மாணவரும் அம்மணமாகத்திரிந்து நான் பார்க்கவில்லை. எங்காவது பைத்தியம் பிடித்து, அழுக்கேறி, தலைவிரி கோலத்துடன் அப்படி நடப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். காதலுக்காக துணியைக்கழட்டி அம்மணமாகத் திரிபவர்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள். ஹீரோவாக்கப்படவேண்டியவர்களல்ல. (அல்லது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்). வயது அதிகமாக ஆக ஒரு சிலருக்கு மூளை குழம்பிவிடும் என்பதற்கு சுஜாதா ஒரு உதாரணம்.


நூறு இளைஞர்களைக் கொடுங்கள் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன் என்று சொன்ன விவேகானந்தர் பிறந்த நாட்டில், ஒருக் கோடி இளைஞர்களைக் கொடுங்கள், ஒரே படம் எடுத்து அவர்களை சீரழித்துக் காட்டுகிறோம் (அதற்கு பணமும் பெற்றுக்கொண்டு!) என்று திரிபவர்களை என்ன சொல்ல? இது போன்ற படங்களை தணிக்கையல்ல தடையே செய்யவேண்டும். அதீத நடவடக்கையாக தோன்றினாலும் பரவாயில்லை என்று டாக்டர் ராமதாஸ் சொல்வதுபோல ஒரு 5 வருடங்களுக்கு சினிமாவையே தடை செய்தால் தான் நாடு உருப்படும் போல தெரிகிறது.


[சாட்டையடி கொடுத்திருக்கும் 'இந்தியா டுடே' இதழுக்கும், 'சீ' என விமர்சனம் கூறியுள்ள விகடனுக்கும் மற்றும் கண்டனம் தெரிவிக்கும் அனைவருக்கும் என் வணக்கங்கள்.]


-பித்தன்

நன்றி திண்ணை.வணி

பித்தன் என்பது சத்தியமா கணணிப்பித்தனில்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
யமுனாவின் பார்வையில் நன்றி திண்ணை.

http://www.yarl.com/cgi-bin/frame/smartfra...i.com/index.asp
[b]Nalayiny Thamaraichselvan
Reply
யமுனா இதுபற்றி ஏற்கனவே ஐபிசியில் சினிமாப்பகுதியில் ஒரு பார்வை பார்த்திருந்தார்.

மிக தரமாகவிருந்திருந்தது-ஒரு பாராட்டு எழுதுவோம் என நினைத்திருந்தேன் ...எங்கே நேரம்?
Reply
கையிலை மணிக் கூட்டை கட்டிக்கொண்டு மணிக் கம்பிகளோடு போட்டி போட்டு வேலைகளை முடித்தால் நேரம் கிடைத்துவிட்டுப்Nhபாகிறது.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
யமுனா ராஜேந்திரன்

"சீ போடா பொறுக்கி" என்பது பாய்ஸ் படத்தில் வருகிற வசனம். சங்கரையும் சுஜாதாவையும் யாரும் இன்னும் இவ்வளவு நாகரீகமாக விமர்சிக்கவில்லை எனச் சந்தோசப்படலாம்.


இன்பம் சந்தோசம் பாலுறவுக் கொண்டாட்டம் போன்ற பின்நவீனத்துவம் பேசுகிற வேட்கை என்கிற சமாச்சாரத்தை பாய்ஸ் படம் முன்வைத்திருக்கிறது. என்ன செய்வது எப்படி அணுகுவது என்று வழக்கம் போலவே தமிழக தீவிர இலக்கியவாதிகளுக்குக் குழப்பம் வந்திருக்கிறது. மனுஷ்யபுத்திரன் தன்னுடைய இலக்கிய சாதனையாளர் குறித்த கல்கி கட்டுரைப் பட்டியலில் சுந்ததரராமசாமி ஜெயகாந்தன் போன்றவர்கள் வரிசையில் சுஜாதாவையும் சேர்த்துபின் இன்னும் பலருக்குக் குழப்பம் . ஆனால காலச்சுவட்டில் இருந்தபோது சொல்லாமல் சுஜாதாவினுடைய புத்தகங்களின் உரிமைகிடைத்த பிறகு பதிப்பாளராகத் தனிக்கடை விரித்த பிறகு இதைச் சொல்கிறீர்களே என்று மனுஷ்யபுத்திரனைக் கேட்பதற்கு நிறையச் சங்கடமாக இருக்கிறது. சுஜாதாவின் உரைநடைச் சாமர்த்தியத்தை வெசாவும் அப்புறம் ஜெமோவும் வலியுறுத்தியபிறகு பலருக்கு சுஜாதாவை எப்படி அணுகுவது என அதி குழப்பம். சுஜாதாவின் ஆதர்ஸ் கவி மனுஷ்யபுத்திரனின் உயிர்மையில் சுஜாதா தொடர் கட்டுரை எழுதுவதால் இல்க்கியவாதிகளுக்குக் குழப்பம் இன்னும் கூடிப்போயிற்று. சாநி என்கிற இலக்கியவாதியின் பாலியல் விளையாட்டு பெத்தாம்பெரிய இலக்கியவாதி ஜெமோவுக்கு குறிப்பிட்ட வகை எழுத்தாகத் தெரிவதால் இவர்கயெல்லாம் எப்படி அணுகுவது என்று படு தமிழகத்திலுள்ள பலருவுக்கும் குழப்பம். போதாதற்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஜெமோ-அமா-சாநி என பற்பலரும் பின்நவீனத்துவத்தையும் பூர்வீகத்தினையும் பன்முகத்தவத்தையும் புறநிலைமறுப்பையும் உயரத்திப் பிடிப்பதால் பலருக்குக் குழப்ப்திலிருந்து மீள்வதற்கான வழியே அற்றுப் போயிற்று.


அ.மார்க்சின் பல்வேறு பின்நவீனத்துவக் கருத்தாக்கங்களால் ஆகர்ஷிகப்பட்ட ரோஸா வசந்துக்கு சங்கரின் படத்தைப் பாதுகாத்து நிற்க வேண்டிய நிலை வந்ததில் கொஞ்சமும் ஆச்சர்யமில்லை. அ.மார்க்சுக்கு சாநி. ரோஸா வசந்துக்குச் சங்கர. ஜெயமோகன் நண்பர்களிடம் அபிப்பிராயம் கேட்டு பாய்ஸ் படம் பற்றித் தன் அபிப்பிராயங்களைச் சொல்கிறார். போதாதுக்கு ஜெமோவுக்கு தன் நாவல்களைப் படிக்காமல் பி றர் அபிப்பிராயம் சொல்கிறார்கள் என்று விசனம் வேறு. கிடக்கிட்டும். சினிமா பற்றிய அக்கறைகளும் அப்பிராயங்களின் லட்சணங்களும் இப்படியாகத்தான் இலக்கிய வட்டாரங்களில் உருவாகிறது. குறைந்தபட்சம் படத்தைப் பார்த்தவிட்டுப் பேச வேண்டும் என்ற பொறுப்பு கூட இவர்களுக்கு இல்லை ஜெயமோகனைப் பற்றிப் பேசினால் அவருடைய எல்லா எழுததுக்களையும் படித்துவிட்டுப் பேசுங்கள் என்று அவருக்குப் பந்தம் பிடிப்பவர்கள் அடிக்க வருகிறார்கள். ஜெயமோகன் அபிப்பிராயம் சொல்லாத விசயங்கள் பிஜேபியின் நடைமுறை அரசியல் தவிர வேறேதுமில்லை -கலைஞுரின் இலக்கியத் தகைமை குறித்து ஜெயலிலதா குரலெழுப்பி வருகிற அதே வேளையில் ஜெமோவும் கலைஞுருக்கு எதிரான புனித யுத்தம் துவங்கியிருக்கிறார், திகசி மீதான ஜெமோவின் தாக்குதலை வாங்கிப் போட்ட பரீக்சா ஞு£நி இந்தப் புனித யுத் தத்திலும் பங்கேற்பார் என நம்புவோம் - ஜெமோ பாய்ஸ் பற்றிச் சொல்வதை மறுப்பதற்கு விஷ்னுபரம் படிக்கத் தேவையில்லை. அவர் அரசுத் துறை ஊழியர்கள் பற்றிச் சொல்வதை மறுப்பதற்கு பின் தொடரும் நிழலின் குரல் படிக்கத் தேவையில்லை. ஏனென்றால் இரண்டும் இலக்கிய விமர்சனம் சம்பந்தமான சமாச்சாரங்கள் இல்லை. ஜெயமோகனின் தணிக்கை சம்பந்தமான தாரளவாத அரசியல் மற்றும் இடதுசாரித். தொழிற்சங்கங்கள் சம்பந்தமான அரசியல் அபிப்பிராயங்கள் இவை. ஆகவே ஜெமோவின் புரவிப்படை வீரர்கள் கொஞ்சம் நிதானமாகவும், ஜெமோவுடனான கோட்பாட்டுச் சரச்சைகைளை பொறாமையினால்தான் மேற்கொள்கிறார்கள் எனக் கிறாக்குத்தனமாக எழுதிக்கொண்டிருக்கும் அடிப்பொடிகள் விவரமாகவும் விவாதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.


நிதானித்துக் கொண்டு பார்க்க ஜெமோ ரோஸா வசந்த நிலைபாடுகள் அரசியல் பாஷையில் தாராளவாத , கருத்தியல் பாஷையில் பின்நவீனத்துவ நிலைபாடுகள் எனப் புரிந்து கொள்வது ரொம்பச் சாதாரணம்.


படம் இயங்குகிற காலத்தைக்கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். தமிழ் ஹாலிவுட் சினிமா இயக்குனர் சங்கர். ஹாலிவுட் சினிமாவுக்கு நேரடி வாரிசு. மக்களின் இயலாமைக்கு அவரது பட நாயகர்கள் ஒரு பிரதி. அதாவது புதிது புதிதாகத் தோன்றுகிற மாதிரியான குட்டிச் சாமியார்களின் சக்தி கொண்டவர்கள் சங்கரின் பட கதாநாயகன்கள். ஜென்டில்மேனிலிருந்து இந்தியன் தாத்தா வரை அவர்கள் இப்படித்தான். சுவார்ஸ்சேக்கர் மாதிரி மோஸ்தர் நாயகன்கன் இவர்கள். இவரது பெண்கள் சார்ந்த சித்திரிப்பை டிக்கிலோனா வியாட்டிலிருந்து காததாடிக்குத் து£க்குகிற பாவாடைச் சித்தரிப்பு வரை பார்க்கலாம். சுஜாதா வெற்றி பெற்ற கெட்டிக்காரர். வெற்றி பெறுபவன் உழைப்பின் சின்னம். வெற்றி பெறுவதற்கு எவ்வளவு கடினமாக எழைக்க வேண்டியிருக்கிறது என மனுஷ்யபுத்திரன் கூடச் சொல்கிறார். இலக்கியத்தில் கூட வெற்றி பெறுவது தகுதியாகிவிட்டது ரொம்பவும் மெச்சப்பட வேண்டிய விசயம் என்பதில் சந்தேகமில்லை. வெற்றி என்றால் சமூக அங்கீகாரம் மற்றது பொருளாதார வெற்றியைத் தான் குறிப்பிடுகிறார்கள். இதைத்தான் பரீக்சா ஞாநி பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறார் எதற்கெல்லாமோ நடவடிக்கை எடுக்கிற காவல்துறையினர் பாய்ஸ் படம் அப்பட்டமாகச் சகலவிதமான பெண்களின மீதும் அவமானகரமாக அத்துமீறலைச் செய்திருக்கிறதே, இந்தச் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை இல்லையா என ஞாநி கேட்பதை நேரடியானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் அப்படியே நேரடியாக எடுத்துக் கொண்டாலும் தவறில்லை. சரிகாசா சாவுக்குக் காரணமானவனை சமூகவிரோதி என்று தண்டிக்கத்தானே செய்கிறோம்.


பாய்ஸ் படத்தின் கதை என்ன? நாலு பையன்கள். ஒரு பெண். பட்டபடிப்பின் ஆரம்ப ஆண்டுகளில் இருப்பவர்கள் இவர்கள். இவர்களது ஒரே பிரச்சினை பெண். பெண்குழந்தைகள் மாணவியர் மத்தியதரவயதுப் பெண்கள் வயோதிபப் பெண்கள் தாய்மார்கள் என்று இவர்களுக்கு வித்தியாசமில்லை. எல்லாப் பெண்களுமே சதைப் பிண்டங்கள்தான். ஆனால் இவர்களுக்கு இவர்களது அப்பா அம்மா சகோதரியர் மட்டும் இவ்வாறான பார்வைக்குள் வராத பெண்கள். ஆகவேதான் சுஜாதவினது மனைவி திரையிடலுக்கு வந்து சகிக்க முடியாமல் எழுந்து சென்றுவிட்டார் என்பதற்கு இந்த நாள் வரை சுஜாதா மௌனம் சாதிக்கிறார். இதனால்தான் ரஜினிகாந்த தன்மகள்களோடு இந்தப் படம் பார்க்கவில்லை என சிரமப்பட்டு அறிக்கை விடுகிறார். சிவகுமாரது மகள் படத்தின் இடையிலேயே பாரக்கச் சகிக்காமல் எழுந்து போய்விட்டார் என்ற செய்தி அப்படியே கிடக்கிறது. குஷ்புவின் வியாக்கியானமே தனி. தாங்களே இப்படியான காட்சிகளில் கூச்சப்படாமல் நடிககிறோம, நீங்கள் ஏன் இப்படி ஆத்திரப்படுகிறீர்கள் என்கிறார். அடுத்ததாக வினிதா விசயத்தில் அவர் வைக்கிற கேள்வி இதுதான்: காலையிலிருந்து மாலை வரை வேலை செய்துவிட்டு 5000 ரூபா சம்பளத்தோடு நாங்கள் வீட்டுக்குப் போகமுடியுமா, எங்களுககு நடிப்பபைத் தவிர வேறென்ன தெரியும் என்கிறார். அதாவது அலுவலகங்களுக்கு வேலைக்னுப் போகிற கீழ் மத்தியதரவர்ககப் பெண்களுக்கு குஷ்பு தருகிற மரியாதை இவ்வுளவுதான்.


வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சினிமாக்காரர்கள் பிற சமூகப் பிரிவினரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்குச் சான்று மேலே கண்ட நிகழ்வுகள்.


பாய்ஸ் படத்தில் பெண்களைச் சித்தரித்ததற்காக எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் சும்மா ஓழுக்கக் கேட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் மட்டுமல்ல. அந்தப் படத்தில் பையன்களின் கவனத்துககுள்ளாகிச் சித்திரிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பெண்களுமே படுகேவலமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக மத்தியவயதுப் பெண்களும் தாய்மை எய்தியவர்களும் கடை கண்ணிகளுக்குப் போகிற நடுத்தரவர்க்கப் பெண்களும் அவமானகரமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது பிருஷ்டமும் மார்பும் விடலைப் பையன்களின போக்கிடமாகப் படத்தின் சகல காட்சிகளிலும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. தன்மானமுள்ள எந்தப் பெணணுக்கும் அவர்களது உடலின் மீதான வன்மமான இந்த அத்து மீறல் கோபமூட்டக் கூடியது மட்டுமல்ல எதிர்த்து நிற்கக் கூடியதும்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்சார்ந்த மூதாட்டி பாப்பா உமாநாத்தும் பகுத்தறிவுவாதியும் மனிதஉரிமையாளரமான சரஸ்வதியும் இதனை எதிர்த்து செய்திருக்கும் நீதிமன்ற நடவடிக்கை தமது சுயமரியாதையின் பாற்பட்ட நடவடிக்கையாகும்.


வெறுமனே ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை இல்லை இது. பெண்நிலைவாத உணர்வுள்ளவர்கள் செய்யக் கூடிய சாதாரணமான எதிர்வினை இது.


பெண்களின் மீதான பாலியல் குற்றிச் செயல்கள் அதிகரித்திருக்கிற தமிழ்ச்சூழலில்தான் பாய்ஸ் படம் வந்திக்கிறது. இந்தக் குற்றச் செயல்களுக்கு ஒரு உளவியல் நியாயத்தை இந்தப்படம் வழங்குவது மட்டுமல்ல, இதற்கு தகவல் தொழில்நுட்ப ஊடகக் கலாச்சார உலகமயமாதலின் பின்னணியில் ஒரு தத்துவ விளக்கத்தையும் விவேக்கை விட்டுச் சொல்லியிருக்கிறார்கள் சுஜாதாவும் சங்கரும். மோஸ்தர் இன்டஸ்ட்ரி சேனல்களிலிருந்து நேச்சர் சேனல் வலை புணர்வதையே காண்பிக்கிறார்களாம். அதனால்தான் பையன்கள் கெட்டுப் போகிறார்களாம். படிக்காவிட்டாலும் கொஞ்நசாளில் உணர்ந்து திருந்தி எம்டிவி புண்ணியத்தில் பொளச்குக்குவாங்களாம். இந்த நபர்கள் சொல்கிற விசயத்தில் இந்த வியாபாரிகளே நேர்மையாக இல்லை. எந்த நீலப்படச் சேனல்களிலும் வருகிற காட்சி அசைவுகளையும் விட தீவிர அசைவுடனும் உடையமைப்புடனும் இந்தப் படத்தின் நடனக்காட்சிகள் இருக்கின்றன. குறிப்பாக பாய்ஸ் எம்டிவி பரிசு பெறும் நடனக்காட்சி. விவேக்கின் அட்வைஸ் இந்தக் காட்சிக்கும் பொருந்தும். பின்னே என்னாத்துக்கு பெற்றோர்களுக்கு அட்வைஸ் செய்து புணர்ச்சி பற்றி சுஜாதா அப்படி வனசம் எழுத வேண்டும். சங்கரும் சுஜாதாவும் பிடித்துக் காட்டியிருக்கிற காட்சிகளைப் பாரக்க இரண்டு காமாந்தகாரர்கள் சேர்ந்து நீலப்படம் எடுத்திருக்கிறது மாதிரி இருக்கிறது. இந்த லட்சணத்தில் விவேக்கை விட்டு அட்வைஸ் செய்கிறார்கள்-அட்வைஸ். பன்னாட்டு வங்கியில் வேலை செய்கிற விவேக் பன்னாட்டுக் கம்டபெனியான எம்டிவியில் அந்தப் பையன்களுக்கு எதிர்காலத்தையம் திறந்து விடுகிறார். படிப்புப் போனா மசிறாச்சு- குப்பத்துப் பையானயிருந்தால் என்ன கானாப் பாட்டாயிருந்தால் என்ன கஸ்டம்ஸ் ஆபிசர் பையனாயிந்தால் என்ன எல்லாரும் சேர்ந்து- எல்லாப் பாடல் வடிவங்களயும் சேர்த்து- மியூசிக் டரூப் அமைத்து ஜெயிக்கலாம் என்கிறார்கள் சுஜாதாவும் சங்கருடம். அதாவது பையன்கள் ஜெயிக்கிறதை நீதிபோதனையுடன சொல்லியிருக்கிறோம் என்கிறார்கள். சுஜாதா மாதிரி வர்க் கத்துப் பையனகள் ஐஐடியில் படித்து கம்ப்யூட்டர் இன்ஜினியர்களாக மத்தியதரவர்ககப் பையன்கள் எம்டிவியால் பலன் பெறுவார்கள் எனக் கதை விடுகிறார்கள்.


படம் சந்தேகமில்லாமல் ஸ்பைஸ் கேர்ள்ஸ், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் என்று கீழ்மத்தியதரவர்க்க்திலிருந்து வந்து பணம் குவித்த பலரது திரைப்படப் பிரதிகளை கவனமாகப் பாரத்துப் பிரதி செய்திருக்கிறது.


ஆப்ரிக்க மக்களின் எதிர்ப்பிசையையும் ஹெர்லம் பாஷையையும் ஹாலிவுட் திருடி நீர்த் துப் போகச் செய்தமாதிரி, குப்பத்து மக்கள்¤ன் பாசையை அவர்களது இசையைத் திருடி சங்கரும் சுஜாதாவும் அதனை நீர்த்துப் போகச்செய்திருக்கிறாரகள் . ஐயப்பன் பாட்டும் நக்ஸலைட்டுகளுக்குப் பாட்டுப் போட்டுத் தருவதும் ஒன்றுதான் இவர்களுக்கு.. அதாவது கெரில்லாஸ் இன்த மிஸ்ட் பாடகர்களும் எமினமும் ஸ்பைஸ் கேர்ஸ்சும் ஒன்றுதான் என்கிறார்கள். கெரில்லாஸ் இன் த மிஸ்ட் பாடகர்கள் நிறவாதம் பற்றிப் பாடுகிறார்கள். எமினம் எழுதுகிற வார்த்தைகள் கவித்துவம் வாய்ந்தவை என்கிறார் அயர்லாந் தின் நோபல் பரிசுக் கவிஞுர் ஸீமஸ் ஹீனி. ஸ்பைஸ் கேர்ல்ஸ் உருவாக்கபட்ட பண்ட இசைச்குழு என்கின்றன அசலான பிரித்தானிய இசை விமர்சனங்கள். இவர்களுக்கிடையில் குண வித்தியாசங்கள் இல்லை என்கிறார்கள் சுஜாதாவும் சங்கரும் - சரியான வியாபாரிகள். பேட்டல் அட்ராக்ஸன் என்றொரு படம்வந்தது. அதில் குழந்தை ஆசை கொண்ட ஒரு விலைமாது குடும்பத்தைக் குலைக்கிறாள், கொலைகாரியாகிறாள் என்றொரு பாத்திரம் இருந்தது, இதனை எதிர்த்து பெண்நிலைவாதிகள் பேசினார்கள். விலைமகளிர் அமைப்புச் சேர்ந்தவர்கள் கண்டனக் குரல் எழுப்பினார்கள். ஆனால் புவனேசுவரி கேரக்டர் சித்திரிக்கப்பட்ட விதம் பற்றி தமிழகத்தில் யாரும் பேசமாட்டாரகள் என்று தைரியத்துடன் இறங்கியிருக்கிறாரகள் சங்கரும் சுஜாதாவும். புவனேசுவரி மீதான விபச்சாரத் தடுப்பு வழுக்கு இன்னும் தமிழக மக்களின் நினைவுகளில் இருக்கிறது. சமயோசிதமாக புவனேசுவரியை அந்தப் பாத்திரத்துக்குப் போட்டீருக்கிறார்கள். அதாவது விடலைப் பையன்கள் கூப்பிட்டனுப்ப கைக் குழந்தையுடன் வந்து அவர்களுடன் 10க்கும் 15க்கும் உடலுறவு கொள்ள பிரகாசமான உடையுடன் எந்தவிதமான குறைந்தபட்ச சங்கடமுமற்று விலைமாது வருகிறாராம். வு¤லைமாதர்கள் குறித்த பார்வையென்பது இன்று மிகுந்த மனிதாபிமான உள்ளடக்கம் கொண்டதாக மாறிவருகிற காலத்தில் எத்துனை அறுவறுப்பாக அக்காட்சி சித்திரிக்கப்பட்டீருக்கிறது என்று பாருங்கள்.


இந்தப்படத்தின் மிகப்பெரிய பிரச்சினையே இப்படம் ஒற்றைப் பரிமாணம் கொண்ட வெகுதட்டையான படம் என்பதுது£ன்.


எந்தவிதமான படைப்புத்தன்மையுமற்ற ஒற்றைத்தனமை கொண்ட சுஜாதா மற்றும் சங்கர் என்கிற இரண்டு உலகவயமாதல் பிரகிருதிகளின் நோக்கில் பையன்களள காமாந்தகாரர்கள் என மட்டுமே சித்தரித்த, அவர்களது நடவடிக்கைக்கு எதிர்வினைகளே காட்டாத பெண் கூட்டம் தமிழ் சமூகம் என்று சித்தரி த்த திமிர் கொண்ட படம்தான் இது. இவ்வளவு அயோக்கியத்தனங்கள் செய்கிறவர்கள் தமிழகத்தில் நிஜவாழ்வில் போலீஸ்காரர்களால் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டிருப்பாரகள். அல்லது அங்கங்கே பெண்களிடம் செருப்படியாவது வாங்கியிருப்பாரகள். அல்லது இவர்களில் சில அப்பாவிகளின் படங்கள் பத்தரிக்கைளில் வந்து நாறியிருக்கும். இத்தகைய பிற பரிமாணக்காட்சிகள் எதுவுமே இந்தப் படத்தில் இல்லை. ஏனெனில் இப்படியான எதிர்வினைகளுக்கு அவர்கள் உட்பட்டிருந்தால் இந்தப் பொடிப் பையன்கள் கதாநாயகன்கள் ஆகியிருக்க முடியாது. யோக்கியர்கள் ஆகியிருக்க முடியாது.


பொதுவாக அது பெத்தாம் பெரிய இலக்கியப் படைப்புக்கள் ஆனாலும் சரி ஐம்பது பைசாப் பத்திரிக்கையில் சுஜாதா எழுதி வெளிவந்த செக்ஸ் கதைகளேயானாலும் சரி அல்லது சின்னக்கதையாடல் எனும் பெயரில் வருகிற சாநியின் உன்னத சங்கீதம் மாதிரியான எழக்கியமும் சரி- பிரச்சினை என்று வந்து இவைகளை அணுகும்போது அந்தக் கதை நிகழும் காலத்திலும் புவிப்பரப்பிலும் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று பார்ப்பது மிக முக்கியமாகும். அமெரிக்கன் பை1- அமெரிக்கன் பை2- க்கு வைக்கிற மாதிரியான விவாதங்களை, அமெரிக்க விடலைப்பையன்கள் பால் வைக்கிற கண்ணோட்டங்களை ஒருவர் தமிழகத்து பாய்ஸ்சுக்கு வைத்துக்கொண்டு பேசமுடியாது. லோலிடாவை உல்ட்டா பண்ணிவிட்டு, ஈழப்பிரச்சனை பற்றி தத்துப்பித்தென்று உளறிவிட்டு சாநி மாதிரி சும்மாக் கதையடித்துக் கொணடிருக்கமுடியாது. தமிழ்நாட்டில் பொதுவாக பெண்களின் மீதான அணுகுமுறை அல்லது குறிப்பாக இளம்பெண்கள் மீதான புறவுலக நடவடிக்கைகள் எவ்வாறாக இருக்கிறது என்பதை வைத்துத்தான் பாய்ஸ் படத்தை அணுக வேண்டும்.


கொஞ்சும் திரும்பிப் பாருங்கள். சரிகா சா பிரச்சினை. அப்புறம ஈவ் டீசிங் தடைச் சட்டம். தமிழ் சினிமாப் பாடல்களில் இளம்பெண்களின் மீதான வன்முறை. இதுதான் நிகழ்கால தமிழ் நாடு.


ஓரே சமயத்தில் நடந்த நான்கு நிகழ்வுகளைப் பாருங்கள். முதலாவது சம்பவம் : சென்னை நகரத்தில் மாணவர்கள் பள்ளிக்கூட மைதானத்தில் குடித்தார்கள் அடாவடி செய்தார்கள் என பள்ளி நிர்வாகத்தினரால் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். பள்ளியில் கழிபபறை வசதி கேட்டோம், ஊழலைத் தட்டிக் கேட்டு இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தோம், அதனால்தான் எங்கள் மீது இந்த நடவடிக்கை என்கிறா£ கள் மாணவர்கள். எக்காரணம் கொண்டும் பள்ளி நிர்வாகம் மாணவர்களை போலீசிடம் ஒப்படைக்க கூடாது என்கிறார்கள் கல்வியாளர்கள் வசந்தி தேவி , கோவை சர்வஜன உயர்நிலைப்பிள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும் ( என்து தலைமையாசிரியரும்) மேதையுமான எஸ்.எஸ்.ராஜகோபாலன் போன்றவர்கள். இரண்டாவது சம்பவம் : சென்னையில் பூங்காவில் உட்காரந்திருந்த மாணவியரும் அவர்களது ஆண் நண்பர்களும் போலீசினால் கைது செய்யப்பட்டு, பொது இடத்தில் அசிங்கமாக நடந்து கொண்டார்கள் என பத்திரி க்கையில் படம் போடப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு எதிராக வழக்குரைஞுர்களும் பழைய போலீஸ் அதிகாரிகளும் சினிமாக் கவிஞுர்களும் பேசுகிறார்கள்.


மூன்றாவதாக ஒரு சம்பவம் : அவள் விகடன் (10 அக்டோபர் 2003 ) பத்திரிக்கையில் கல்லு£ரி மாணவிகள் பாய்ஸ் பட சர்ச்சை தொடர்பாகத் தமிழக தணிக்கை அதிகாரியைச் சந்தித்து, சினிமாவில் தங்கள் மீதான பாலியல் வன்முறையை ஏன் மட்டற்று அனுமதிக்கிறீர்கள் எனக் கேள்வி கேட்கிறார்கள்.


தமிழக தணிக்கை அதிபாரியுடனான உரையாடல் இப்படித் தொடங்குகிறது : சாதி மதம் மொழி எதிலேயும் ( சமூகம்) எதிரப்புத் தெரிவிக்கத் தயங்குவதில்லை. ஆனால் சினிமா பெண்களை எவ்வளவு எவ்வளவு இழிவு படுத்தினாலும் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது அதே சமூகம். மூன்று மாணவிகளின் அபிப்பிராயங்களில் இருந்து மேற்கோள்கள்: (1).எந்த காலேஜில கதாநாயகனும் கதாநாயகியும் செஞ்சோடு நெஞ்சு இடிக்கிறாங் க? யாரு தாவணியை உருவுறான்? உருவிப் பாரக்கச் சொல்லுங்க. கை இருக்காது. சு¤னமாவில காலேஜ் ஸ்ரூடன்டுன்னா பொறுக்கியாதா இருக்கனுமா? யாருமே ஒழுங்கா படிக்கமாட்டாங்களா? (2). படம் எடுத்தவங்க தன்னோட அம்மா மகள் அக்கா தங்கச்சியோட படத்தப் பாரக்கணும். அப்புறம் படத்த ரிலீஸ் பண்ணட்டுமே. எத்தனை பொண்ணுங்க செத்தாலும் சமாதி கட்டி அது மேல உக்காந்து ஈவ்டீசிங் செய்வாங்க. இதையெல்லாம் அனுமதிக்கிறதுக்கு எதுக்கு சென்ஸார் போர்டு? (3).பையன் பண்ணாமட்டும் ஈவ்டீசிங் இல்லை. அதைச் செய்யத் து£ண்டுற மாதிரி படம் எடுத்தாலும் குற்றம்தான். வெளிநாட்டுல படம் பாரக்கிறது பாக்கெட் மணி. அங்க படம் பாக்கறது ஒரு குடும்பத்தோட சோறு. இதுவும் திருட்டுத்தான். கடுமையான சட்டம் போடனும். அதைக் கடைப்பிடிக்கனும். மனசுவலி சம்பந்தப்பட்ட விஷயம் இது.


நான்காவது நிகழ்வு: போடா சட்டம் எனும் பெயரில் அதனை ஆதரித்து இப்போது அதனால் நொந்து போயிருக்கும் வைகோ அப்புறமாகச் சொஞ்சம் தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழர் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். நக்ஸலைட்டுகளை ஒடுக்க அத்வானி 2000 கோடி ருபாவில் திட்டம் போட்டிருக்கிறார். நக்ஸலைட் அரசியல்கொண்டவர்கள் அதியற்புதமான கலைஞர்களாகப் பாடகர்களாக இருந்து தாங்களே காஸட் போட்டு குறைந்த விலையில் விற்கிறார்கள். தாங்களே அதற்காள போலீசின் அடக்குமுறையையும் எதிர்கொள்கிறார்கள்.


பாய்ஸ் படத்திலும் கல்லு£ரிப் பையன்கள் வருகிறார்கள். கல்லு£ரி மாணவிகள் வருகிறார்கள். நக்ஸலைட்டுகள் வருகிறார்கள். போலீஸ்கள் வருகிறார்கள். ஈவ் டீசிங் வருகிறது. ஆனால் காணாமல் போயிருப்பது குறைந்தபட்ச வாழ்க்கையின் யதார்த்தம்.


இந்தப்படத்தில் சித்தரிக்கிற யதார்த்தத்தை எவரேனும் அதி யதார்த்தமென்றோ மாயா யதார்த்தமென்றோ கயிறு திரிக்கலாம். தளயசிங்கம்- ராஜநாயகம் பிரச்சனையில் கச்சை கட்டிக் கொண்டு தார்மீக நெறி பேசியவர்கள் தணிக்கை விதி பற்றிய விவாதங்களில் இங்கு அமெரிக்க தாராளவாதச் சர்ச்சைகளை இ டம் பெயர்த்து வைக்கலாம். ஹெரால்ட ராபின்ஸ் - சால் பெல்லோ என்று ஜல்லியடிக்கலாம். ஆனால் கல்லு£ரி மாணவிகளும் பாப்பா உமாநாத் போன்ற மூதாட்டிகளும் வாசுகி போன்ற போராட்ட குணமுள்ள பெண்களும் சரஸ்வதியும் தங்களது வலியினின்று சீற்றம் கொள்கிறார்கள். வெளியிடத்தில் தங்களது உடல் மீது தொடர்ந்து இருந்து வரும் வன்முறைக்கு ஒரு தொடர் விளக்கமாகவும் கருத்துருவாகவும் இந்தக் குப்பைப் படம் அமைந்து விடுமோ எனப் பயம் கொள்கிறார்கள். ஆகவேதான் இந்தப் படத்திற்கு அவர்கள் எதிரப்புத் தெரிவித்திருக்கிறார்கள். உடல் மீதான வன்முறை சம்பந்தமான பிரச்சனையை வெறுமனே ஒழுக்கப் பிரச்சனையாகப் பாரக்கிறவர்களும் இருக்கிறார்கள். மதவழிப் பின்நவீனத்துவவாதிகளும் சின்னக்கதையாடல் பின்நவீனத்துவவாதிகளும் இப்படத்தை வெறுமனே ஒழுக்கம் சார்ந்த விவாதத்துக்கான பிரதேசமாப் பாரக்கிறார்கள். செக்ஸ் கல்விக்கரரர் மாத்ருபூதம் ஒரு பிஜேபிக்காரர் என்பது அதிகம் அறியப்படாத செய்தி. அவர் காமசூத்ரா நு£ல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றபோது பிஜேபி அரசியல்வாதிகள் காமாசூத்திராவைப் பரவலாக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். சமகாலத்தில் எய்ட்ஸ் வியாதியிலிருந்து விலைமாதர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யோனிப் புணர்ச்சி தவிர்த்து பிற வழிகளில் உச்ச இன்பம் அடைவது தொடர்பாக காமசூத்ரா நு£லை முன்வைத்து வகுப்பொன்றை கல்கத்தா விலைமாதர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எய்ட்ஸ் தடுப்பு காமசூத்ரா தொடர்பைக் கேள்விப்பட்ட அதே காலகட்டத்தில் ஸோர்போன் பல்கலைக் கழகத்தில் பின்நவீனத்துவ சிந்தனையின் அடிப்படையில் ஒரு பெண்மணி ஜோசியத்திற்காகக் கலாநிதிப்பட்டமும் பெற்றிருந்தார. சின்னக்கருப்பன் ரோஸா வசந்த் ஜெமோ போன்றவர்களின் பாய்ஸ் பட அபிப்பிராயங்களைப் பார்க்க இந்தச் செய்திகள் எல்லாமும் ஏனோ ஞு£பகம் வருகின்றது. பாமியன் புத்தர் சிலை உடைப்பிலிருந்து பூர்வீக இந்திய பாலுறவுப்பார்வை வரை கலாச்சாரச் சார்புடன் நியாயப்படுத்தத் தெரிந்த புத்திசாலி சின்னக்கருப்பனுக்கு இந்தப் பிரச்சனையை மனித உரிமைப் பிரச்சனையாக எடுத்தக்கொணடு பெண் சார்பு நிலையினி ன்று பாரக்கமுடியாமல் ஜூடோ கிறிஸ்டியன் மதிப்பீடுகள் என்று கதையடிப்பது அப்பட்டமான மோசடி.


கலாச்சாரச் சார்புவாதம் இவ்வகையில்தான் இடது வலது வித்தியாசங்களை இல்லாமலாக்குகிறது போலும்.


ஓரு மிக முக்கியமான கேள்வி : மற்ற தமிழ் படங்களில் இல்லாத விசயமா சங்கர் படத்தில் இருக்கிறது. ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டும் என்றொரு கேள்வி. காதல் கொண்டேன் துள்ளுவதோ இளமை பட இயக்குளர் செல்வராகவன் ஒரு படி கொஞ்சம்மேலே போய், பையன்களின் பாலுறவு வேட்கை வெளிப்படையாக இருப்பதால்தான் அமெரிக்காவில் பாலியல் பலாத்காரமும் விபச்சாரமும் இல்லை என்று தத்துவமொன்று எடுத்து விடுகிறார். இந்த மாதிரி அறிவிலிகளை நினைக்க வேதனையாக இருக்கிறது. அமெரிக்க சர்ச்சுகளில் இருக்கிற கன்னியாஸ்திரிகளில் 90 சதமானவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் விபச்சாரமும் நீலப்பட வியாபாரமும் நிறுவனமயப்பட்டிருக்கிறது. அதிகமான இளவயதுக் குற்றவாளிகள் அந்த நாட்டிலேயே இருக்கிறார்கள். சிறுவர்கள் தண்டனையில் கொல்லப்படும் நாடாக அமெரிக்காதான் இருக்கிறது. தமிழ்ப்படங்களின் பிரச்சினையென்னவென்றால் பெற்றோர்களைவிட்டு அட்வைஸ் செய்கிற மாதிரிக் காட்சிகளை எடுத்துவிட்டு குடும்பப்படம் என்று சென்சாரை ஏமாற்றிச் சர்ட்டிபிகேட் வாங்கிவிட்டு எல்லோரையும் பார்க்க அழைக்கிற கயமைத்தனம்தான். இந்த கயமைத்தனத்தை திரைக்கதையமைத்த சுஜாதாவும் செய்திருக்கிறார். தமிழ் தெரியாத ஆந்திர சென்சார் போர்டுக்குப் படத்தைக் கொண்டு சென்ற சங்கரும் தாயரிப்பாளர் ரத்தினமும் செய்திருக்கிறாரகள். இந்தப்படத்தின் துணைத் தலைப்பாக பாய்ஸ் பர் கேள்ஸ் என்று இருக்கிறது. அப்படியானால் 18 வயதுக்கு மேலே இருக்கிற வாலிபப் பையன்களும் பெண்பிள்ளைகளும் பார்க்கிற மாதிரி வயது வந்தோர் சர்ட்டிபிகேட் வாங்கியிருக்கலாம். அதுதான் படைப்பாளிக்குரிய நேர்மையாக இருந்திருக்கும்.


லண்டனில் இந்தப் படத்தை விநியோகித்தவரகள் குடும்பத்துடன் வருகிற குழந்தைகளுக்கு இலவசம் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.


இந்தமாதிரிப்படத்தை உங்களது மனைவியரும் மகள்களுமே பாரக்க முடியவில்லையென்றால் என்னத்துக்காக் குடும்பத்தவர்கள் அனைவரையும் காண அழைக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. புவனேசுவரி சம்பந்தமான நீண்ட காட்சிகளில் வருகிற அனத்தல் சத்தங்களுக்கு ஒரு குழந்தை அர்த்தம் கேட்டால் குழந்தைகளை இலவசமாக அழைத்துவந்த விநியோகஸ்தருக்கு என்ன கேவலமான அனுபவம் கிடைக்கும் என நினைக்கவே அறுவறுப்பாக இருக்கிறது.


சில அபிப்பிரயாங்கள் பொருட்டுத்திப் பதில் தரத்தக்கவை. பக்கிங் என்ற சொல் நிக்கர் என்ற சொல் போன்றன சினிமாவில் பாவிக்கப்பட வேண்டும். அதன் மூலமே யதார்த்தம் கட்டமைக்கப்படமுடியும் என ஹாலிவுட்டில் ரொம்ப காலங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்டுவட்டார்கள். பல்ப் பிக்ஸன் ரிசர்வ் வயர் டாக்ஸ் போன்ற குவின்டன் டரான்டினோவின் படவசனங்கள் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். தமிழ் சினிமாவிலும் வக்கா தாயளி போன்ற சொற்கள் சத்யராஜ் படவசனங்களை கூர்ந்து கேட்பவர்கள் அறிந்திருகக் கூடியவை. பிராமணரான விஜயகுமாரின் மருமகனான ஹரி இயக்கிய சாமியில் விக்ரம் பேச ங்கோத்தா எனும் வசனம் வருகிறது. பாய்சிலும் சுஜாதா எழுதியிருக்கிறார். இந்த மாதிரி வசனங்களில் ஒரு புரட்சியும் இல்லை. பெரிய யதார்த்தமும் சித்திரிக்கப்படப் போவதில்லை. இந்த மாதிரியான வார்த்தைகளை வைத்துக்கொண்டு இவர்கள் உருவாக்குவதாகக் கதைகட்டுகிற யதாரத்தம் வியாபாரிகளின் யதார்த்தம். காசுபண்ணத்தெரிந்த புத்திசாலிகளின் யதார்த்தம் என்பதுதான் நாம் இங்கு சுட்டிக்காட்டுவது. தமிழகத்தில் தலித் பிரச்சனை இருக்கிறது. சினிமாவில் ஒரு தலித்தின் மீதான வன்முறையைக் காண்பிப்பதற்காக, ஒரு பிரக்ஞைபூர்வமான பிராமிணிய கருத்தியல் கொணட இயக்குனரின் படத்தில் வருகிற பிராமணப்பாத்திரமொன்று குறிப்பிட்ட தலித்தின் குறிப்பிட்ட சாதியின் பெரைச் சொல்லி துவேஷமான சொற்பிரயோகத்தை பாவிக்குமானால் அதனை மதிப்பிடுகளற்று அணுக நிச்சயமாகவே முடியாது. இதைப் போலத்தான் மின நீண்ட் வரலாறு கொண்ட சதை வியாபாரிகளான சங்கருடையதும் சுஜாதாவினதும் பெண் சித்திரிப்பை நாம் மதிப்பீடுகளற்று அணுகமுடியாது.


இதைப்போலவே பாலுறவும் வன்முறையும் சினிமாவில் வெளிப்படையாகச் சித்தரிக்கலாமா கூடாதா எனும் விவாதமும் இந்தப் படத்தைச்சுற்றி எழுந்திருக்கிறது. சித்தரிக்க வேண்டும். அதுவும் பொறுப்புடன் சித்தரிக்க வேண்டும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்கமுடியாது.


உலக சினிமாவின் மேதைகள் ஒஸிமா, பெரட்டுலு£ஸி, கென்லோச் போன்றவர்கள் வன்முறையையும் காதலையும் அதியற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்கள். பாலுறவில் சாசம் புரிந்த டீ சேட் பற்றி குவில் என்றொரு படம் அழகியல் உணர்வுடன் தத்துவார்த்தக் கேள்விகளுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சினிமாவில் கோவிந்த் நிஹ்லானியின் ஆக்ரோஷ் வன்முறையையும் பாலுறவையும் சித்தரித்திருக்கிறது. கேதன் மேத்தாவின் மாயா பாலுறலை நிர்வாணக் காட்சிகளுடனேயே சித்தரித்திருக்கிறது. மணிகௌலின் இந்தியன் எரோடிக் டேல் நிர்வாணத்தைச் சித்தரித்திருக்கிறது. ஆனால் அவை பாலுறவு, ஆதாரமாக எழுப்புகிற உளவியல் அறவியல் வேட்கை சார்நத விசயங்களை மிகமிக நேர்மையுடன் அலசுகிறது. இவர்கள் யாரும் சங்கர் சுஜாதா மாதிரி தமிழகத் தணிக்கைக் குழுவுக்குத தண்ணிகாட்டிவிட்டு, குடும்பத்தவர்களே வாருங்கள் என அழைக்கிற கயமைத்தனத்தைச் செய்யவில்லை. பாய்ஸ் படத்திற்குக் குறைந்தபட்சம் வயதுவந்தோர்க்கான சான்றிதழ் வாங்கியிருந்தால் எவரும் இந்த அளவுக்கு அலட்டிக்கொள்ளவே போவதில்லை. ஏனென்றால் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் ஓடிக்கொணடிருக்கிற மலையாள பலான படங்களுக்கு எதிராக யாரும் வழக்கும் தொடுக்காமலே வருசக்கணக்கில் அவைகள் ஓடிக்கொண்டிருக்கிறதை யோசித்துப் பார்த்தால் போதும், நாம் சொல்வது விளங்கும்.


தொடரும்..............................
Reply
பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
யமுனா ராஜேந்திரன்

முன்னைய தொடர்...................

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பா.கிருஷ் ணசாமி அங்கீகரிக்கப்பட்ட தணிக்கை நிறுவனங்களுக்கு வெளியில் மககள் தணிக்கை அமைப்பை உருவாக்கப் போகிறேன். என்று சொல்வது சிலருக்குச் சட்டமீறலாகவும் தான« தான்றித்தனமாகவும் தெரிகிறது. படத்தை தமிழே தெரியாத ஆந்திரக் குழவினரைப் பார்க்கச் செய்து தணிக்கையாளர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றிச் சான்றிதழ் பெறத் தெரிந்த சங்கரும் சுஜாதாவும் கணவான்களாகச் சமூகத்தில் திரிகிறபோது எவரிடம் சென்றுதான் மக்கள் முறையிடமுடியும். தணிக்கைக் குழவிற்குள்ளும் அரசியல் செல்வாக்குகள் மலிந்த சூழ்நிழலையில் தொடர்ந்து விகாரமாக-அவமானகரமாகச் சித்திரிககப்படும் சமூகப் பகுதிகள் குறித்த ஆட்சேபத்தை எந்த வழியில்தான் வெளிப்படுத்த முடியும்? தேவர் சமூகத்தின் உடல் திமிரை பரவசத்துடன் திவான் படத்தில் சித்திரிக்கும் சரத்குமார் உடனடியாகவே கிருஷ்ணசாமிக்கு அதிரடியாப் பதில் தருகிறாரே அதில் அரசியல் இல்லையா? பாய்ஸ் படத்தில் தணிக்கையின் போது வெட்டப்பட்ட காட்சிகள் மறுபடி தியேட்டர்களில் ஓடுவதைத் தடுக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகளால் முடியவில்லை. தணிக்கை அதிகாரிகளால் முடியவில்லை.அதாவது சமூகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மத்திய அரசினாலும் அது முடியவில்லை.மாநில் அரசினாலும் அது முடியவில்லை. இவ்வேளையில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிற ஒரு கட்சியின் தலைவர் ஏன் மககள் தணிக்கை அமைப்புகளைக் குறித்துப் பேசக்கூடாது. பா.கிருஷ்ணசாமி தொடங்கியிருக்கும் கலகம் மிகச் சரியான கலகம். அவரது அரசியல் குறித்த விமர்சனங்களைத் தண்டியம் அவரது நடவடிக்கை கலகத்தின் பின் பிறக்கும் நீதி நடவடிக்கையேயாகும். ஓரு வெகுஜன விவாதத்தைத் து£ண்ட அவர் முயல்கிறார். ஒரு வெகுஜன ஊடகம் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பணர்வ குறத்து அவர் பேசுகிறார். ஆவரது செயல் காலம் கருதிய ஒரு செயலாகும்.


சங்கர் படங்களில் காமெரா கோணங்களும் பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். அந்தப்பிரம்மாணடம் கூட இந்தப்படத்தின் காட்சிகளில் இல்லை. சங்கரினுடைய சில படங்களில் தனித்தனிக்காட்சிகள் சில பார்க்கத் தக்கதாக இருக்கும். உதாரணம் இந்தியன் படத்தில் வரகிற பச்சைச்கிளிகள் தோளோடு பாடல் காட்சி. அப்படியான காடசிகள் கூட இப்படத்தில் இல்லை. ரவி கே.சந்திரனின் கேமரா இருக்கிறது என யாரேனும் வலியுறுத்திச் சொன்னால் தான் ஞாபகம் வரும். சாபு சிரிலின் டப்பாக் குப்பைக் காட்சியும் அப்படித்தான். ரஜினிகாந்த்தை ஏன் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்றால் அவர் செய்கிற சேட்டைகள் கார்ட்டுன் பாத்திரம் போல இருக்கிறது என்று ஒரு நண்பர் விளகக்ம் சொன்னார். பொறுத்தமான பதில் என்றுதான் படுகிறது. அது போலவே சங்கர் படப் பாடல்களும் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது. ஏனென்றால் அமெரிக்க டாய்ஸ் வகைப்படங்களில் வருகிற மாதிரி யானை புலி சிங்கமெல்லாம் அவர் படங்களில் வரும. அப்படியான மிருகங்கள் இந்தப்படத்தில் குறைவு என்பது சோகம். அதற்குப் பதிலாகத்தான் பாய்சின் சேட்டைகளே இருக்கிறது என சங்கர் விட்டு விட்டார் எனவும் கொள்ளலாம். சாதாரணமாக சங்கர் படங்களுக்கு இந்தச் சரக்குகளை எதிர்பார்த்துச் செல்கிறவர்கள் கூட ஏமாந்து போயிருக்கிறார்கள். சங்கர் படத்திற்கு 18 கோடி செலவு செய்திருக்கிறார் என்கிறார்கள். தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் பாவம் என்று சொல்கிற சினிமா பட்ஜெட் சூட்சமம் தெரிந்தவர்களை இப்போது நிறையப் பார்க்க முடிகிறது.


ஜனநாயக மாதர்சங்கச் செயலாளரும் பாய்ஸ் படத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறவருமான வாசுகி- சமூகப்பொறுப்புள்ள இயக்குனர் சங்கர் இந்தமாதிரிப் படமெடுத்திருக்கிறரே என அங்கலாயத்திருப்பதில் அர்த்தமேயில்லை. தமிழ்சினிமாவில் கொஞ்சமும் பொறுப்பேயில்லாத சிரழிவுச்சினிமாக்காரர் ஒருவர் இருக்கிறரென்றால் அவர் சங்கர்தான். ஜென்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிராமணப்பார்வை,இந்தியனில் பிரபல அரசியல்வாதிகள் தவிர்த்த நடுத்தரவர்க்க அதிகாரிகளைக் கொல்லும் தனிநபர் பாசிசம்,முதல்வனில் பாமரமனிதனின் கனவு நிசைவேற்றக் கூத்து என அர்த்தமற்ற குப்பைகளே அவர் படங்கள். ஆசான் எஸ்ஏ.சந்திரசேகரனிடம் கற்றுக்கொண்ட குப்பகைளை அகன்ற திரையில் பிரம்மாண்டமாகச் சொன்னவைதான் சங்கரின் படங்கள். சந்திரசேகரனின் சட்டம் ஒரு இருட்டறையின் நீட்சியானதுதான் சங்கரின் போலி அரசியல் படஙுகள்.


சங்கரின் ஆசான் சந்திரசேகருக்கு சுஜாதா போன்ற தொழில்நுட்பம் மற்றும் வரலாறு தெரிந்து சுத்துமாத்துச்செய்யும் புத்திசாலி அருகில் இல்லை என்பதுதான் வித்தியாசம்.


இறுதியாக மக்கள்-அரசியல்வாதிகள்-தணிக்கைநெறிகள்-படைப்புச் சுதந்திரம் போன்று விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் நமக்கு முன் இருக்கிறது.

yamunarn@hotmail.com


பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
யமுனா ராஜேந்திரன்

முன்னைய தொடர்...................

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பா.கிருஷ் ணசாமி அங்கீகரிக்கப்பட்ட தணிக்கை நிறுவனங்களுக்கு வெளியில் மககள் தணிக்கை அமைப்பை உருவாக்கப் போகிறேன். என்று சொல்வது சிலருக்குச் சட்டமீறலாகவும் தான« தான்றித்தனமாகவும் தெரிகிறது. படத்தை தமிழே தெரியாத ஆந்திரக் குழவினரைப் பார்க்கச் செய்து தணிக்கையாளர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றிச் சான்றிதழ் பெறத் தெரிந்த சங்கரும் சுஜாதாவும் கணவான்களாகச் சமூகத்தில் திரிகிறபோது எவரிடம் சென்றுதான் மக்கள் முறையிடமுடியும். தணிக்கைக் குழவிற்குள்ளும் அரசியல் செல்வாக்குகள் மலிந்த சூழ்நிழலையில் தொடர்ந்து விகாரமாக-அவமானகரமாகச் சித்திரிககப்படும் சமூகப் பகுதிகள் குறித்த ஆட்சேபத்தை எந்த வழியில்தான் வெளிப்படுத்த முடியும்? தேவர் சமூகத்தின் உடல் திமிரை பரவசத்துடன் திவான் படத்தில் சித்திரிக்கும் சரத்குமார் உடனடியாகவே கிருஷ்ணசாமிக்கு அதிரடியாப் பதில் தருகிறாரே அதில் அரசியல் இல்லையா? பாய்ஸ் படத்தில் தணிக்கையின் போது வெட்டப்பட்ட காட்சிகள் மறுபடி தியேட்டர்களில் ஓடுவதைத் தடுக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகளால் முடியவில்லை. தணிக்கை அதிகாரிகளால் முடியவில்லை.அதாவது சமூகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மத்திய அரசினாலும் அது முடியவில்லை.மாநில் அரசினாலும் அது முடியவில்லை. இவ்வேளையில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிற ஒரு கட்சியின் தலைவர் ஏன் மககள் தணிக்கை அமைப்புகளைக் குறித்துப் பேசக்கூடாது. பா.கிருஷ்ணசாமி தொடங்கியிருக்கும் கலகம் மிகச் சரியான கலகம். அவரது அரசியல் குறித்த விமர்சனங்களைத் தண்டியம் அவரது நடவடிக்கை கலகத்தின் பின் பிறக்கும் நீதி நடவடிக்கையேயாகும். ஓரு வெகுஜன விவாதத்தைத் து£ண்ட அவர் முயல்கிறார். ஒரு வெகுஜன ஊடகம் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பணர்வ குறத்து அவர் பேசுகிறார். ஆவரது செயல் காலம் கருதிய ஒரு செயலாகும்.


சங்கர் படங்களில் காமெரா கோணங்களும் பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். அந்தப்பிரம்மாணடம் கூட இந்தப்படத்தின் காட்சிகளில் இல்லை. சங்கரினுடைய சில படங்களில் தனித்தனிக்காட்சிகள் சில பார்க்கத் தக்கதாக இருக்கும். உதாரணம் இந்தியன் படத்தில் வரகிற பச்சைச்கிளிகள் தோளோடு பாடல் காட்சி. அப்படியான காடசிகள் கூட இப்படத்தில் இல்லை. ரவி கே.சந்திரனின் கேமரா இருக்கிறது என யாரேனும் வலியுறுத்திச் சொன்னால் தான் ஞாபகம் வரும். சாபு சிரிலின் டப்பாக் குப்பைக் காட்சியும் அப்படித்தான். ரஜினிகாந்த்தை ஏன் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்றால் அவர் செய்கிற சேட்டைகள் கார்ட்டுன் பாத்திரம் போல இருக்கிறது என்று ஒரு நண்பர் விளகக்ம் சொன்னார். பொறுத்தமான பதில் என்றுதான் படுகிறது. அது போலவே சங்கர் படப் பாடல்களும் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது. ஏனென்றால் அமெரிக்க டாய்ஸ் வகைப்படங்களில் வருகிற மாதிரி யானை புலி சிங்கமெல்லாம் அவர் படங்களில் வரும. அப்படியான மிருகங்கள் இந்தப்படத்தில் குறைவு என்பது சோகம். அதற்குப் பதிலாகத்தான் பாய்சின் சேட்டைகளே இருக்கிறது என சங்கர் விட்டு விட்டார் எனவும் கொள்ளலாம். சாதாரணமாக சங்கர் படங்களுக்கு இந்தச் சரக்குகளை எதிர்பார்த்துச் செல்கிறவர்கள் கூட ஏமாந்து போயிருக்கிறார்கள். சங்கர் படத்திற்கு 18 கோடி செலவு செய்திருக்கிறார் என்கிறார்கள். தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் பாவம் என்று சொல்கிற சினிமா பட்ஜெட் சூட்சமம் தெரிந்தவர்களை இப்போது நிறையப் பார்க்க முடிகிறது.


ஜனநாயக மாதர்சங்கச் செயலாளரும் பாய்ஸ் படத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறவருமான வாசுகி- சமூகப்பொறுப்புள்ள இயக்குனர் சங்கர் இந்தமாதிரிப் படமெடுத்திருக்கிறரே என அங்கலாயத்திருப்பதில் அர்த்தமேயில்லை. தமிழ்சினிமாவில் கொஞ்சமும் பொறுப்பேயில்லாத சிரழிவுச்சினிமாக்காரர் ஒருவர் இருக்கிறரென்றால் அவர் சங்கர்தான். ஜென்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிராமணப்பார்வை,இந்தியனில் பிரபல அரசியல்வாதிகள் தவிர்த்த நடுத்தரவர்க்க அதிகாரிகளைக் கொல்லும் தனிநபர் பாசிசம்,முதல்வனில் பாமரமனிதனின் கனவு நிசைவேற்றக் கூத்து என அர்த்தமற்ற குப்பைகளே அவர் படங்கள். ஆசான் எஸ்ஏ.சந்திரசேகரனிடம் கற்றுக்கொண்ட குப்பகைளை அகன்ற திரையில் பிரம்மாண்டமாகச் சொன்னவைதான் சங்கரின் படங்கள். சந்திரசேகரனின் சட்டம் ஒரு இருட்டறையின் நீட்சியானதுதான் சங்கரின் போலி அரசியல் படஙுகள்.


சங்கரின் ஆசான் சந்திரசேகருக்கு சுஜாதா போன்ற தொழில்நுட்பம் மற்றும் வரலாறு தெரிந்து சுத்துமாத்துச்செய்யும் புத்திசாலி அருகில் இல்லை என்பதுதான் வித்தியாசம்.


இறுதியாக மக்கள்-அரசியல்வாதிகள்-தணிக்கைநெறிகள்-படைப்புச் சுதந்திரம் போன்று விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் நமக்கு முன் இருக்கிறது.

yamunarn@hotmail.com

நன்றி:திண்ணை & யமுனா
Reply
பாய்ஸ் திரைப்படத்தின் இன்றைய வெற்றிக்கு அடிப்படைக்காரணங்களே விமர்சகர்கள் தான்.

விமர்சனம், சதந்திரமான கருத்து எனும் போர்வையில் எதையும் விமர்சிக்கலாம் என்ற நிலையிலிருந்து விமர்சகர்கள் வெளிவரவேண்டும்.

பாய்ஸ் திரைப்படத்தில் அப்படியென்ன தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டது என்பது எனக்கென்றால் புதிராகவுள்ளது.<b>பள்ளிப் பருவத்தில் தொடங்கி பட்டப்படிப்பு வரையில், பின்னர் இலட்சியப் பாதையில்,பின்னர் வாழ்க்கையில் என்று கூடி வாழும் நட்புக்கு இங்கு யாரும் மதிப்பு கொடுக்கவில்லை.</b>அதுவும் ஏன் என்று புரியவில்லை.

இளைஞர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விபத்துக்களை அவர்கள் வாழ்க்கையின் யதார்த்தமான அம்சங்களை படம் பிடித்துக்காட்டியதை ஏற்க மறுக்கும் நிலை உருவானதற்கு என்ன காரணம்?

ஒன்று விமர்சிப்பதனால் பிரபலம் தேடலாம் அல்லது நெகடிவ் பப்ளிசிட்டி.

பாய்ஸ் திரையில் எந்த இடத்திலும் இளைஞர்களின் சாதாரண வாழ்க்கையில் இருந்து புதிதாக புனையப்பட்ட எந்தவொரு காட்சியும் இருப்பதாகத் தோன்றவில்லை.தன் காதலியை அடைய வேண்டுமென்று நிர்வாணமாக ஒருவன் பாதையில் ஓடுவது அதிகமாகவே தென்பட்டாலும் கூட தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள நிர்வாணமாக பாதைகளில் ஓடித்திரிந்த பலரது சம்பவங்கள் உள்ளன.அவ்வளவு ஏன் லண்டனில் ஒரு தமிழ்ப்பெண்ணே அப்படியானதொரு காரியத்தினை செய்திருந்தார்.

விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு விடயத்தினை விமர்சகர்கள் உணரவேண்டும்.<b>உங்கள் விமர்சனங்கள் நடு நிலையில் இருந்து ஆராயப்பட வேண்டும்</b>.இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறையினை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை எமது பெற்றோர்கள் மத்தியில் இன்னும் நிலவத்தான் செய்கிறது.

ஒரு இளைஞனின் இதயத்துடிப்பு,இலட்சிய வெறி,நட்பு,யதார்த்தம் என்று பலதையும் தொட்டுச் சென்றிருக்கும் பாய்ஸ் திரைப்படத்தினை பெரிதளவு சர்ச்சைகள் ஆட்கொண்டிருந்தாலும் வசன கர்த்தாவும் சரி இயக்குனரும் சரி நடிகர்களும் சரி இசையமைப்பாளரும் சரி திறம் பட செதுக்கியுள்ளார்கள்.

உங்கள் வயதுகள் ஒத்துழைத்தால் பாராட்டுங்கள் அல்லது நல்லதையும் கெட்டதையும் ஆழ்ந்து ஆராயும் விமர்சகர்களாக சமுதாயத்திற்கு நல்லதை எடுத்துச்சொல்லுங்கள்.

விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையும் விமர்சிக்கும் மனப்பான்மையிலிருந்து விமர்சகர்ககள் விடுபடவேண்டும் :!:

வயதானவர்கள் பார்வையில் நவீனத்துவத்திற்கு வேறு அர்த்தம் இருக்கும்.இளைஞர்களின் பார்வையில் உங்கள் நவீனத்துவத்திற்கு வேறு பார்வை இருக்கும்.

நவீனத்துவம் யாருக்கு அவசியமானது?யாரிடமும் தானாகப் புகுத்தப்படுவதில்லையே?யதார்த்த உலகில் நிராசைகளுடன் போராட ஒரு நவீனத்துவம் தேவைப்படுகிறது.

<b>இதே நவீனத்துவம் ஆசைகள் நிராசையான பழமைக்கு குழப்பத்திற்குரிய பின் நவீனத்துவமாக மாறுகிறது.</b>

எனினும் விமர்சனங்களுக்கும் வரையறை,கண்ணியம்,கட்டுப்பாடு,நடு நிலை என்று பல கோணங்கள் தேவை.

அந்தந்த காலங்களிற்கேற்ற விமர்சன நுணுக்கங்கள் தேவை.எதையெடுத்தாலும் ஒரு றொபட்சன் கூறியதாகக் கூறும் விமர்சனங்கள் சற்று அநாகரிகமானது. :!: :!: :!:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
veera Wrote:பாய்ஸ் திரைப்படத்தின் இன்றைய வெற்றிக்கு அடிப்படைக்காரணங்களே விமர்சகர்கள் தான்.

உங்கள் வயதுகள் ஒத்துழைத்தால் பாராட்டுங்கள் அல்லது நல்லதையும் கெட்டதையும் ஆழ்ந்து ஆராயும் விமர்சகர்களாக சமுதாயத்திற்கு நல்லதை எடுத்துச்சொல்லுங்கள்.

வயதானவர்கள் பார்வையில் நவீனத்துவத்திற்கு வேறு அர்த்தம் இருக்கும்.இளைஞர்களின் பார்வையில் உங்கள் நவீனத்துவத்திற்கு வேறு பார்வை இருக்கும்.

நவீனத்துவம் யாருக்கு அவசியமானது?யாரிடமும் தானாகப் புகுத்தப்படுவதில்லையே?யதார்த்த உலகில் நிராசைகளுடன் போராட ஒரு நவீனத்துவம் தேவைப்படுகிறது.

அந்தந்த காலங்களிற்கேற்ற விமர்சன நுணுக்கங்கள் தேவை.எதையெடுத்தாலும் ஒரு றொபட்சன் கூறியதாகக் கூறும் விமர்சனங்கள் சற்று அநாகரிகமானது. :!: :!: :!:

விமர்சனத்தை யதார்த்த பார்வையுடன் விமர்சிக்கும் வீராவுக்கு வாழ்த்துகள்...............தொடருங்கள்..............
நட்புடன்,
அஜீவன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)