08-23-2005, 04:07 AM
<img src='http://sooriyan.com/images/stories/jokes01/beauty1.jpg' border='0' alt='user posted image'>
ரொறன்ரோ நகரில் இம்மாதம் [b]ஒரு தமிழ் அழகுராணிப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான விளம்பரமொன்றினை தமிழ் தொலைக்காட்சியில் பார்த்தபோது இக்கட்டுரை எழுதவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.
இந்த அழகு ராணிப்போட்டியினை ரொறன்ரோவை அண்டிய மார்க்கம் நகரில் இயங்குகின்ற ஒரு தமிழ் அழகுபடுத்தும் நிலையம் ஒழுங்கு செய்கின்றது. இவ்வியாபாரா நிலையத்தைப் பொறுத்த வரையில் இந்நிகழ்வு மிகவும் சக்தி வாய்ந்த விளம்பரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எனினும் கலாச்சார கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது இந்நிகழ்வானது ஒரு ஆழ்ந்த தாக்கத்தினை புலம் பெயர் தமிழ் சமூகத்தின் இளைய சந்தியினரில் ஏற்படுத்தப் போகின்றது என்பது புலனாகும்.
அழகு ராணிப் போட்டி பற்றிய விமர்சனத்தை சில பெண்கள் ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு என தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். வேறு சிலர் பழமைவாதம் என ஒதுக்கி விடுகின்றார்கள். எனினும் உண்மை என்னவெனில் அழகு ராணிப்போட்டிகள் இன்னமும் நடைபெறுவது தான் உண்மையில் ஆண் ஆதிக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு ஆகும். அழகு ராணிப்போட்டியில் பங்கு கொள்ளும் எந்தப் பெண்ணினதும் அடிப்படை எண்ணம் எதிர்ப்பாலாரின் அங்கீகரிப்பினை பெறுவதை நோக்கியே அமைந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இன்னமும் சொல்வதானால் இவ்வகையான போட்டிகள் இளம் பெண்களது சிந்தனையை ஆண் அங்கீகரிப்பு நோக்கி வழர்க்கின்றன என்று கூறலாம். ஏனினும் இவ்வாறான போட்டிகள் அழகை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை என்ற வாதமும் இருக்கத் தான் செய்கிறது.
நவீன அழகு ராணிப் போட்டிகளில் அழகை மட்டும் மதிப்பிடுவதற்கு மாறாக பல சிக்கலான சமுதாயக் கண்ணோட்டத்தோடு கூடிய கேள்விகளிற்கு போட்டியாளர்கள் எவ்வாறு பதிலளிக்கின்றார்கள் என்பதைக் கொண்டே வெற்றி நிட்சயிக்கப்படுகின்றது என்ற வாதம் இப்போட்டியினை ஆதரிப்போரால் எழுப்பப்பட்டுக் கொண்டுஇருக்கின்றது. எனினும் இவ்வாதம் எடுத்த எடுப்பிலேயே தோல்வி காண்கின்றது. எவ்வாறெனின், இச்சிக்கலான கேள்விகளிற்கான பதில்களாக போட்டியாளர்களிடம் வியத்தகு பதில் இருக்குமாயின் அப்பதில்களை அவர்கள் வெளியிடுவதற்கு வேறு ஊடகங்கள் இல்லையா இவ்வுலகில? இப்போட்டிதாரர்களின் பதில் எவையேனும் இத்தனை ஆண்டு காலத்தில் வியத்தகு பதிலாகக் கருதப்பட்டு போட்டிகள் முடிந்த பின்னர் ஊடகத்துறையினராலோ அல்லது வேறு யாராலேனோ பேசப்பட்டுள்ளனவா? இவர்களின் பதில்கள் சமுதாய பிரச்சினைகள் எதற்கேனும் விமோசனம் கொடுத்துள்ளனவா? அதற்கும் மேலாக, அழகு ராணிப் போட்டியினைப் பார்வையிடும் தொகையினரில் எத்தனை நபர்கள் இவ் அழகிகள் கூறும் பதிலைக் கருத்திற் கொள்கிறார்கள? ஆதாரப்படுத்துவதற்கான விடயங்கள் ஏதமில்லாது உப்புச் சப்பில்லாமல் இவர்கள் கூறும் பதிலினை ஒரு சமூகவியல் மாணவி பரீட்சையில் பதிலாக எழுதின் பிழைபோடும் அல்லது அரை மதிப்பெண் கொடுக்கும் உலகம் அழகுராணிப் போட்டியில் மட்டும் இவ்விடைகளைப் பாராட்டுகின்றது என்றால், இவ்வழகிகளை இயல்பிலேயே அறிவாற்றல் குறைந்த மனிதர்களாக இப்போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் கருதுகின்றார்கள் என்றும் கொள்ளலாம் அல்லவா?. மேலும் இத்தகைய பதில்களிற்கும் நீச்சல் உடைக்குமான தொடர்பு என்ன? எனவே இப்போட்டிகள் அறிவுசார்ந்தவை என்ற வாதத்தினை முதலில் ஓரங்கட்டுவோம்.
அழகு என்பது தோலோடு நின்று விடும் ஒன்று என்ற மாயையினை இத்தகைய போட்டிகள் பல இளம் யுவதிகளின் மனங்களில் விதைக்கின்றன. அத்தோடு மட்டுமல்லாது ஒரு பெண் அழகுடையவளா இல்லையா என்பதனை ஆணின் இரசனை தான் முடிவு செய்கின்றது என்ற ஆணாதிக்க சிந்தையும் இளம் பெண்களின் மனதில் விதைக்கப்படுகின்றது. இவ்விதைப்பின் விளைவே பல இளம் பெண்கள் ஆண்களின் அங்கீகாரம் வேண்டி, தமக்கு உடன்பாடு அற்ற பல விடயங்களை இப்புலம் பெயர் நாடுகளில் மேற்கொள்வதற்குக் காரணமாக அமைகின்றது. எத்தனையோ திறமை மிக்க பல இளம் யுவதிகள், குறிப்பாக நம்மவர்கள், இளவயதில் தவறான மேற்படி நம்பிக்கைகளை மனதிற் பதித்து இந்நம்பிக்கைகளின் வாயிலாக தமது எதிர்காலத்தை வீணடித்து பின் அதே ஆண்களால் பட்டங்கள் கொடுக்கப்பட்டு விரக்தியின் விளிம்பில் நிற்பதும் தற்கொலை செய்வது நடந்த வண்ணம் தான் உள்ளது. இவர்களின் நிலையால் இவர்களது பெற்றோர்கள் உற்றார்கள் அடையும் நிலை அது வேறு. இளையோரை மட்டுமா பாதிக்கின்றன இத்தகு அழகு சார் சிந்தனைகள்?
திருமணமான தம்பதிகளைக் கூட இத்தவறான அழகு சார் சிந்தனைகள் எங்கெங்கோ இட்டுச் செல்கின்றன. உதாரணமாக, தனது கணவனை விட தான் அதிகம் அழகு என்ற சிந்தனை மனைவியிடமோ அல்லது தனது அழகிற்குத் தன் மனைவி மிகச் சுமார் என்ற எண்ணம் கணவனிடமோ ஏற்படும் போது தகாத தொடர்புகள் தேடி வருகின்றன. இத்தகைய விபரீதமான அழகு சார் சிந்தனைகளை அழகு ராணிப் போட்டி போன்ற நிகழ்வுகளும் அவற்றின் போது எழுகின்ற விசில் சத்தமும் ஊக்குவிக்கின்றன.
தவறான சிந்தனையால் குடும்பம் சிதைகின்றது குழந்தைகளின் எதிர்காலம் கேழ்விக் குறியாகின்றது. புலம் பெயர் நாடுகளில் நம்மவர் மத்தியிலும் கவலைக்கிடமான வகையில் காணப்படும் திருமணத்தின் பின்னான இதர தொடர்புகள், இத்தொடர்புகளால் பிறக்கின்ற காகத்தின் கூட்டுக் குயில்கள், விவாகரத்துக்கள், சிறிய பிரச்சினைகளையும் தீர்க முயலாது இலகுவில் விவாகரத்துப் போன்ற் பாரிய முடிவுகளை எடுக்கும் தன்மை, வருமானத்திற்கு மேலான அழகியற் செலவுகள், இதனால் ஏற்படும் மீழமுடியாத கடன் தொல்லைகள், இப்பாரிய கடன் தொல்லையில் இருந்து மீழ்வதற்கான பணம் சேர்ப்பதற்கான குற்றங்கள் முதலிய பல பிரச்சினைகளிற்கு அழகு ராணிப்போட்டி போன்ற மட்டமான நிகழ்வுகள் காரணமாக அமைகின்றன.
அழகு சார் சிந்தனை தூண்டப்பட்டு ஆனால் சமுதாய பயத்தினால் தாம் அத்தகு நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்கும் சில தாய்மார்கள் தமது பிள்ளைகளை இத்தகு செயல்களில் ஊக்குவிக்கும் கொடுமையும் நம் கண்முன்னால் நிகழ்ந்த வண்ணம் தானுள்ளது.
மேற்படி உடனடிச் சமுதாயப் பிரச்சினைகளிற்கும் மேலால் முழு தமிழ் இனததிற்கும் கூட இத்தகு செயல்கள் பாதகமாக அமைகின்றன. எவ்வாறு எனின், ஒரு மக்கள் கூட்டமானது ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கான தன்மைகளில் ஒன்றாக தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பின்னணி அமைகின்றது. எமது தனித்துவமான கலாச்சாரத்தை இழப்பதன் வாயிலாக புலம் பெயர் சமூகத்தில் பலர் தமிழ் தேசியத்தில் இருந்து விடுபடும் ஆபத்தினைச் சந்திக்கின்றார்கள். தற்போதைக்கு இது உடனடிப் பிரச்சினை போன்று வெளிப்படையாகத் தெரியாவிடினும் அடுத்தடுத்த சந்ததிகளில் நம்மவர் பலரும் தனித்துவ அடையாளம் அற்ற கரிபியன் தீவின் வம்சாவளி இந்தியர் போல் ஆகும் அபாயம் கண்கூடு. இவ்வாறான பல பாதகமான விளைவுகளை அழகு ராணிப் போட்டி போன்ற நிகழ்வுகள் கொண்டுள்ள போதிலும் இந்நடைமுறையினை எமது சமூகத்தில் இருந்து முற்றாக அழிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
அழகான பெண்களின் கவர்ச்சி ஆண்களை ஈர்ப்பது இயல்பு. எனவே இத்தகு விழாக்களிற்கு அதிக பார்வையாளர்கள் வருவதும் இயல்பு. இவ்வகையில் இத்தகைய நிகழ்வுகளை வியாபார அமைப்புகள் பணம் சேர்க்கின்ற நோக்கில் ஒழுங்கு செய்வதும் இயல்பு. இவ்விடயத்தில் பாதிப்படைவன இளம் பெண்கள் மற்றும் எமது இனத்தின் இருப்பு ஆகிய இரண்டும் மட்டுமே.
ஆழகு ராணிப் போட்டி போன்ற நிகழ்வுகள் அனைவரும் கூட்டாக முயன்றால் மட்டுமன்றி வேறெந்த விதத்திலும் அழிக்கப்படக் கூடியன அல்ல. இதன் முதற்கட்டமாக வியாபார நிறுவனங்கள் தாம் எச் சமூகத்திடம் இருந்து செல்வம் சேர்க்கின்றார்களோ அச்சமூகத்தின் மேல் சற்றேனும் அக்கறை கொண்டு இத்தகு பாதகமான நிகழ்வுகளை நடத்தாது இருக்க வேண்டியது அவசியமாகின்றது. மாறிச் செயற்படும் வியாபாரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியமாகின்றது. அனைத்திற்கும் மேலால் பெற்றோர்கள் தமது குழந்தைகள் இவ்விதத்தில் உபயோகப்படுத்தப்படுவதை தடுப்பது அவசியமாகின்றது.
இப்புலம் பெயர்ந்த சமூகத்தில் பெற்றோரால் தம்பிள்ளைகள் மீது போதியளவு கண்டிப்பை மேற்கொள்ள முடிவது இல்லை என்ற வாதமும் கேட்கத்தான் செய்கின்றது. ஆனால் இது சற்றும் ஏற்றுக் கொள்ளக் முடியாத வாதம். தெரியாவிடின் தெரிந்து கொள்ளுங்குள்! எவ்வாறு வீடு வாங்க ஈட்டுக்கடன் எடுப்பது? ஏந்தெந்த வழிகளில் வங்குறோத்து அடிப்பது? இந்நாட்டின் கோடைகாலாத்தில் கனிதரும் அப்பிள் மரத்தின் பூக்களைப் பூச்சி அரிக்காதிருக்க என்ன மருந்து அடிப்பது? அம்மருந்தை மலிவாக எக்கடையில் வாங்குவது? வீட்டிற்கு எந்தெந்த காலத்தில் என்னென்ன பராமரப்பு செய்வது? போன்ற புலம் பெயர் சமூகத்து பிரச்சினைகள் அனைத்திற்குமான பதில்களை மொழி மற்றும் பல தடைகளையும் தாண்டி நம்மவரால் புரிந்து கொள்ள முடியுமானால் குழந்தை வழர்ப்புப் பற்றி மட்டும் ஏன் புரிந்து கொள்ளமுடியாது. பணம் தேடும் நேரத்தைக் குறைத்தால் நேரம் தானாகக் கைக்கு வரும். ஏனவே இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முதல் பங்கு பெற்றோரையே சாரும் என்பதில் வேறு கருத்திற்கு இடமேயில்லை.
முடிவாக, ரொறன்ரோவில் இம்மாதக் கடைசியில் இடம்பெற இருக்கும் அழகு ராணிப்போட்டி எம்மக்களால் பூரண தோல்வியடையச் செய்யப்பட்டு எதிர்காலதில் இந்நிகழ்வுகளை ஓழுங்கு செய்யும் எண்ணம் எவரிற்கும் எழாத வகையில் நம்மக்கள் செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இக்கட்டுரையை முடிக்கின்றேன்.
நன்றி
குமரன் - சூரியன்.கொம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

:evil:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->