Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!!
#41
இப்படியே முகனயனத்தப் போட்டு தமிழினி அக்கான்ட ரெக்கோட்டை உடைக்கிற பிளானோ,அதுவும் அக்கா தொடர்ந்து எழுதிறதோ அல்லாட்டி புதுசா வாறவைக்கு இடம் விடுறதோ எண்டு யோசிக்கிற நேரத்தில....
Reply
#42
கோதாரி இன்னும் 50 ஆகேல்லையே!

தூக்கிக் கொண்டும் போயிருக்கலாம், கட்டியிழுத்துக் கொண்டும் போயிருக்கலாம்... தான பறந்தும் வந்திருக்கும் coordinates program பண்ணி விட. :roll: Idea Arrow :wink:
Reply
#43
kurukaalapoovan Wrote:கோதாரி இன்னும் 50 ஆகேல்லையே!

தூக்கிக் கொண்டும் போயிருக்கலாம், கட்டியிழுத்துக் கொண்டும் போயிருக்கலாம்... தான பறந்தும் வந்திருக்கும் coordinates program பண்ணி விட. :roll: Idea Arrow :wink:





coordinates program பண்ணேலும் எண்டா பேசாம cruise missile லையே அனுப்பி இருக்கலாமே Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#44
கதிர்காமர் கொலை உள்வீட்டு வேலையே?
[புதன்கிழமை, 17 ஓகஸ்ட் 2005, 23:26 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கதிர்காமரின் கொலையுடன் புலிகளைச் சம்பந்தப்படுத்த சிறீலங்கா அரசு முயன்று வரும் இவ்வேளையில், கதிர்காமரின் கொலை தொடர்பாக புதிதாகக் கிடைத்திருக்கும் தகவல்கள் உள்வீட்டு விவகாரமே இக்கொலையா என்ற சந்தேகத்தைப் பலமாக ஏற்படுத்தியிருக்கிறது.


கதிர்காமரின் கொலையாளிகள் தங்கியிருந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிகரட் துண்டு மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள இவ்வேளையில், விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் புகைப்பிடிக்காதவர்கள் என்பதை நோக்கும் கொழும்பு ஊடகவியலாளர்கள் இக் கொலைக்கான சில வேறு சந்தேகங்களையும் இதனுடன் இணைத்துள்ளனர்.

குறிப்பாக, ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்ட போது அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பம்பலப்பிட்டிப் பொலிஸ் நிலையத்தின் முன்பாகவே அவருக்காகக் காத்திருந்ததோடு, மிகவும் பாதுகாப்பான பிரதேசமும், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அடக்கும் பிரதேசமுமான பாராளுமன்றத்திற்கு அண்மையில் வைத்து அவரைக் கொலை செய்த பின்னர் அவரது உடலைப் போட்டுவிட்டு வருமளவிற்கு அவர்களிற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.

எனினும் சிவராமின் தொலைபேசியின் சிம் அட்டையை கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் தனிப்பட்ட பாவனைக்கான அற்ப ஆசையில் வைத்திருந்த காரணத்தினாலேயே இக் கொலையில் அவர்கள் சிக்க நேர்ந்தது. அதில் கூட கொலைக்கான வலைப்பின்னல் மறைக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசுடன் தொடர்புடைய அரசியல்வாதியொருவரின் பங்கு குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

அதேபோல, அடுத்த அரசுத் தலைவருக்கான வேட்பாளராக தற்போதைய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கிருக்கிறது என்ற ஹேஸ்யங்களின் மத்தியிலேயே இக் கொலை இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் கதிர்காமரை பிரதமராக நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஆளும்கட்சியின் பெரும்பாலான அரசியல்தலைவர்களும் ஜே.வி.பி.யும் இதற்கு பூரண எதிர்ப்புத் தெரிவித்து அந்த வாய்ப்பை கதிர்காமருக்கு வழங்க மறுத்திருந்தன.

எனவே பிரபல்யமான அரசியற் குடும்பமொன்றின் ஆண் வாரிசு பிரதமராகலாம் என்று கணிக்கப்பட்ட போதிலும் அவர் நிதானமில்லாத நடவடிக்கைகளில் பலதடவைகள் முன்னரே ஈடுபட்டிருந்தார் என்ற காரணத்தினால் அவர் தவிர்க்கப்படலாம் என்ற நிலை இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, இந்தியாவின் மும்பை நகரில் பல ஆண்டுகளிற்கு முன்பு ஆடைகள் ஏதுமின்றி மதுபோதையில் ஒரு நபர் தெருவில் சென்ற போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, அவர் சிறீலங்காவின் பிரபல்யமான அரசியற் குடும்பமொன்றைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால் விசாரணைகள் ஏதுமின்றி தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

எனவே கதிர்காமர் மீதே இனவாதத்தைப் பிரயோகித்த இந்த அரசின் அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் நம்பிக்கையானர்கள் என்பது சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட வேண்டிய ஒரு விவகாரமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று ஊடகமொன்றிற்குப் பேட்டியளித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் பொறுப்பாளரின் கூற்றுக்களும், கதிர்காமரின் கொலை உள்வீட்டு வேலையாக இருக்கலாம் என்பதற்காகத் தெரிவித்த ஆதாரங்களும் கனதியானவை என்றும், சிறீலங்காவின் நீதித்துறை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்ற வேண்டுகோள் அலட்சியப்படுத்தக்கூடியதொன்றல்ல என்றும் கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#45
ஐயோ! இந்தக் கதிர்காமரின் கொலை உள்வீட்டு வேலையா? என்ற கேள்வியே தேவையற்றது! இது உள்வீட்டுக் கொலையே!!

ஆனால், ஒரு தனிமனிதனின் இறப்பில், ஒரு தேசிய இனமே மகிழ்வடைந்திருக்கிறது!

யார் குற்றியதோ? எமக்கு அரிசியாகி விட்டது! நன்றிகள்!!!!
" "
Reply
#46
யார் குற்றியதோ? எமக்கு அரிசியாகி விட்டது! நன்றிகள்!!!!

«Ð ¾¡ý ¯ý¨Á ¿ýÀ¡
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#47
http://www.miniclip.com/sniper.htm
http://www.tacticalprecisionsystems.com/
http://www.snipercountry.com/sniper.htm
http://www.snipercentral.com/
http://www.marinescoutsniper.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#48
கதிர்காமர் கொலை ,உள்ளிருந்து படங்கள்
<img src='http://img168.imageshack.us/img168/8137/image0143ib.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img168.imageshack.us/img168/5058/image0131al.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img168.imageshack.us/img168/5088/image0116za.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img168.imageshack.us/img168/5421/image0101bu.jpg' border='0' alt='user posted image'>
Reply
#49
<img src='http://img168.imageshack.us/img168/1139/image0091zs.jpg' border='0' alt='user posted image'><img src='http://img168.imageshack.us/img168/7844/image0080mw.jpg' border='0' alt='user posted image'><img src='http://img168.imageshack.us/img168/9577/image0071ei.jpg' border='0' alt='user posted image'>
Reply
#50
<img src='http://img168.imageshack.us/img168/775/image0065fx.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img168.imageshack.us/img168/5787/image0054af.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img168.imageshack.us/img168/9550/image0035zq.jpg' border='0' alt='user posted image'>
[/URL]
<img src='http://img168.imageshack.us/img168/2897/image0013wn.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img340.imageshack.us/img340/9494/image0045so.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img340.imageshack.us/img340/4914/image0020kw.jpg' border='0' alt='user posted image'>
Reply
#51
இது புலிகளின் வேலையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்கள் மகிழ்கிறார்கள்.
அதைவிட கதிர்காமரது உள் எதிரிகள் பெரிதும் மகிழ்கிறார்கள்.

அதற்கு காரணம் அடுத்து வரும் தேர்தலில் கதிருக்கு என்ன பதவி கிடைக்கவிருந்தது என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருந்தனர்.

பிரதமர் பதவிக்கு போட்டிகள் நடக்கும் போதே கதிர் உள்ளே பௌத்தராக மாறிவிட்டார் என்பது பலருக்கு தெரியாத சங்கதி.
எனவேதான் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தவிர செத்தவரை தோண்டி எடுத்து பிரச்சனை படுத்தாமல் இருப்பதற்காக கதிரை தீக்கதிரால் ................................?

கதிரது இரண்டாவது மனைவி ஒரு வழக்கறிஞ்ஞர்.
இவரது முதல் மனைவி மற்றும் குடும்பம் பிரான்சில் இருக்கிறார்கள்.
இவர்களை அடையாளம் காட்டி உரிமை பாராட்ட விடாது முதல் மனைவி படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளை தடை செய்ய முயன்றார்.



தற்போதைய பிரதமரின் பாதாள படை பலமானது என்பது நெருக்கமானவர்களுக்கே தெரிந்த ஒரு விடயம்.

தவிர சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் பலர் JVPயாளர்கள்.
அவர்கள் தம்மை யாரென்பதை இனங் காட்டிக் கொள்வதில்லை.
சுதந்திரக் கட்சிக் காரர்களாக செயல் பட்ட போதிலும் அவர்களது வாக்குகளும் ஏனைய வேலைகளும் தமது கட்சிக்கேயாகும்.

அவர்கள் அரசோடு இணைந்த போது இது இன்னும் இலகுவாகியது.
இவர்கள் இலகுவாகவே இராணுவத்தில் நுழையவும் முடிந்தது.

கதிர் இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் நெருக்கமானவர்.
இது JVPக்கு பிடிக்காத ஒரு விடயம்.

இது தவிர சந்திரிகா கதிரது மரணம் கேட்டதும் பாதுகாப்பே இல்லாமல் ஓடி வந்தார் என்பது பெரு வியப்பை ஆழ்த்தும் ஒரு சம்பவம்.

இப்படியான நேரத்தில் எதிரிகள் சந்திரிகாவுக்கும் குறி வைக்கத் தவற மாட்டார்கள் என்பதைக் குடி போதையில் கூட யோசிக்க முடியாதவர் அல்ல சந்திரிகா.........................?
இவரும் தெரிந்து வைத்திருந்தாரா?

எல்லாம் உள் வீட்டு சமாச்சாரம் என்பது போன்ற கேள்விகளை உண்டாக்கும் போது விரல்களை இலகுவாக நீட்ட எப்படி முடிகிறது?

AN
Reply
#52
உண்மை தான் அஜீவன் அண்ணா..
::
Reply
#53
<b>பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தவிர்ப்பது அவசியம்</b>

""வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை புலிகளே கொலை செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டுகின்றது. ஆனால், கதிர்காமர் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லையென புலிகள் தெரிவிக்கின்றனர். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து உடன் பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வை காண முடியும்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இந்தியத் தலைவர்களிடம் எடுத்துரைத்த கருத்து இந்தியாவை மாத்திரமன்றி, சர்வதேச சமூகத்தையும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், இவரது கூற்று அர்த்தம் பொதிந்ததாக அமையும். அதுவே இன்றையத் தேவையாகவுமுள்ளது என தமிழ் பேசும் மக்கள் கூறுகின்றனர்.

பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதையே இரு தரப்பினரும் பிரதானமாகக் கொண்டு செயற்படுகின்றனரே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காண எவரும் முன்வருவதில்லை. பிரச்சினைகள் உருவாகும் சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு, அதனூடாக முறுகல் நிலையை ஏற்படுத்துவதையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். மாறாக, பிரச்சினைகளை பேசித் தீர்க்க முற்படுவதில்லை என்றும் தமிழ் பேசும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இன்றைய போக்குகளால் யுத்தநிறுத்த உடன்படிக்கை முறிவடையும் அபாயமே தோன்றியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் மீண்டுமொரு போர் மூண்டு விடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

தற்பொழுது, ஓரளவு நிம்மதி பெருமூச்சுடன் வாழும் மக்கள் மீண்டும் பழைய விரக்தி நிலைக்குச் செல்ல அஞ்சுகின்றனர். அந்த நிலை ஏற்படாமல் தடுக்க சகலரும் முனைப்புடன் செயற்பட வேண்டியது இன்றியமையாதது.

குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் கொலையின் பின்னணியில் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேட முனையக் கூடாது. அவ்வாறு அவர்கள் முனைந்தால் நாட்டில் மேலும் விபரீதங்களே ஏற்படும். எனவே, அரசாங்கம் நிதானத்துடன் செயற்பட வேண்டும். அதுவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரே மார்க்கமாகும்.

கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய முறையில் சமாதான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அதனை விடுத்து, இனப்பிரச்சினையை வைத்து அரசியல் இலாபம் காண எவரும் முனைவார்களேயானால் நாட்டின் பிரச்சினைகள் ஒருபோதும் முடிவுக்கு வர மாட்டாது.

இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர தீர்வொன்று காணப்படுமிடத்து மாத்திரமே இத்தகைய பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என்பது சகலரதும் நம்பிக்கையாகும். எனவே, இரு தரப்பினரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதன் மூலமே. நிரந்தர சமாதானத்தை மலரச் செய்ய முடியும்.

இதற்கு கால்கோளிட வேண்டிய பாரிய பொறுப்பு சர்வதேச சமூகத்திடமே உள்ளது. இதனை சகல தரப்பினரும் பல தடவைகள் இடித்துரைத்துள்ளனர். எவ்வாறெனினும் சர்வதேச சமூகமோ அல்லது சமாதான விரும்பிகளோ அதனை உணர்ந்து செயலுருப்படுத்த முன்வராமை வேதனைக்குரியதே.

எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றை சிரமேற்கொண்டு, சர்வதேச சமூகம் சமாதான பேச்சுக்களுக்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய தருணம் இதுவாகும். உரிய வகையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அழுத்தம் கொடுத்து இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கும் பாரிய பொறுப்பு அவர்களிடமே சார்ந்துள்ளது.

இதேவேளை, ""லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைக்கு விடுதலைப் புலிகள் மீது எழுந்தமானத்தில் குற்றஞ்சாட்டி விட்டு உண்மையான குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயலில் ஸ்ரீலங்கா அரசு இறங்கியுள்ளது'' என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

கதிர்காமர் கொலையின் பின்னணியில், அரசு புலிகளைக் குற்றஞ்சாட்டியதற்கு பதிலாக புலிகள் அரசு மீது பழி சுமத்தியுள்ளது. சர்வதேச ரீதியில் இந்த பழி சுமத்தும் படலம் இரு தரப்பினர் மத்தியிலும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதனைவிடுத்து, இரு தரப்பும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து, பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதையே சகலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வெறுமனே வாய்ப்பேச்சினால் மீண்டும் கொலை கலாசாரம் தொடர்வதற்கு எவரும் வித்திடக் கூடாது. மாறாக, கொலை கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவே சகலரும் பாடுபட வேண்டுமென்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.

எது எவ்வாறாயினும், தமிழ்ச் செல்வன் முன் வைத்திருக்கும் கருத்தை எவரும் இலகுவில் அலட்சியம் செய்து விட முடியாது. இவ்விதமாக, அரசு எழுந்தமானமாக குற்றஞ் சுமத்துவதால் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைத்து விடக் கூடாது. அல்லது அரசு குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற தொனிப் பொருளிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார் போலும்.

உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்ள முடியாது. உண்மை நிலையை சர்வதேச சமூகத்துக்கு எடுத்து விளக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதே தமிழ்ச் செல்வனின் வாதமாகவுள்ளது.

அந்த வகையில், வரவேற்கப்பட வேண்டியதொரு கருத்தையும் தமிழ்ச்செல்வன் முன்வைத்திருக்கிறார் என்பது மறுக்கப்படுவதற்கில்லை.

எனவே, அரசு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை நடந்து, ஒருமாத காலத்தில் அந்தக் கொலையை மறந்து விடுவதே வழமையாக இடம்பெற்று வருகின்றது. இதனால், குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர். எனவே, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, முறிந்து போயுள்ள சமாதான முயற்சிகளுக்கும் உயிரூட்ட அரசு தயாராக வேண்டும்.

எது எப்படியிருப்பினும், அநாவசியமான கருத்துக்களால் சமாதான முயற்சிகள் பாழ்பட்டு விடவோ, நாட்டில் மீண்டும் யுத்த மேகங்கள் மூண்டு விடவோ கூடாது என்பதையே நாம் கூறி வைக்க விரும்புகிறோம்.

Veerakesari
Reply
#54
<b>அமைச்சர் கதிர்காமரின் படுகொலை குறித்து விசாரிக்க சுயாதீன ஆணைக்குழுவை உடன் அமைக்க வேண்டும் மீண்டும் யுத்தத்தை ஜே. வி. பி. வலிந்து ஏற்படுத்த முயல்கிறது என்கிறது ஐ. தே. க. </b>

(ஜப்ரல் அஸ்கான்)

வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலைதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சுயாதீன ஆணைக் குழுவை உடனடியõக அமைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமாதான சூழ்நிலை நிலவிய இந்த நாட்டில் மீண்டும் யுத்தத்தை வலிந்து ஏற்படுத்துவதே ஜே. வி. பி. யின் நோக்கமாகும். அதற்கான முயற்சிகளிலேயே அக்கட்சி தீவிரமாக இறங்கி செயற்பட்டு வருகின்றது என்றும் ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட குருநாகல் மாவட்ட ஐ. தே. க. எம்.பி. ஜொன்சன் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின்

படுகொலையுடன் தொடர்புபட்டவர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சுயாதீன ஆணைக் குழுவை அவசரமாக ஏற்படுத்தி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். இதற்காகவே நாம் அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவளித்தோம். ஆனால் இந்த அவசர கால சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முனையக் கூடாது. அரசாங்கம் நாட்டு மக்களின் நலனை பாதுகாப்பதற்கே அவசர கால சட்ட நடவடிக்கைகளை பிரயோகிக்க வேண்டும்.

அமைச்சரொருவர் தனது வீட்டுக்கு செல்ல முடியாதிருக்கிறது என்றால் அரசாங்கத்தின் பாதுகாப்பு குறித்து நாம் கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. படுகொலை கலாசாரம் தொடரக்கூடாது என்பதற்காகவே அவசர காலச் சட்ட நீடிப்புக்கு ஐ. தே. க. ஆதரவு வழங்கியது. இதனை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்க் கூடாது. பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்குண்டு மக்கள் அவதிப்படும் இவ்வேளையில் அவசரகால சட்டம் அவர்களை மேலும் சிரமத்திற்குள் உட்படுத்தாது அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே அவசர கால சட்டம் நீடிக்கப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தினரே இந்த நாட்டை ஆள வேண்டும் அன்ற ஒரே நோக்குடனேயே ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காக 11 மாதங்கள் முன்னதாக சத்தியப் பிரமாணம் செய்தார்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சட்டப்படி இவ்வருடமே நடத்தப்பட வேண்டும். தேர்தல் தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு மட்டுமே இருக்கிறது என்றார்.

Veerakesari
Reply
#55
<b>கதிர்காமர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு இராணுவத்தினர் இரு மணி நேரம் கழித்து சென்றது ஏன்? கூட்டமைப்பு எம்.பி.க்கள் கேள்வி</b>
வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற அவசர கால சட்ட விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.ரவிராஜ், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஜெயானந்த மூர்த்தி ஆகியோரும் மற்றும் விவாதத்தின் போது இடையிடையே குறுக்கீடு செய்த ஈழவேந்தன் எம்.பி., சிவநேசன் எம்.பி., எஸ்.கஜேந்திரன் எம்.பி. ஆகியோரும் மேற்கண்டவாறு சந்தேகங்களை கிளப்பியிருந்தனர்.

அமைச்சர் கதிர்காமர் கொலை செய்யப்பட்டு இரு மணி நேரம் சென்ற பின்னர்தான் துப்பாக்கிதாரர்கள் மறைந்திருந்து சூடு நடத்தியதாக கருதப்படும் கதிர்காமரின் எதிர் வீட்டுக்கு இராணுவம் சென்றிருக்கின்றது.

அந்த வீட்டில் தங்கியிருந்த தளையசிங்கம் என்பவர் அது பற்றி கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது கூறியதாக சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அவ்வாறு இரு மணிநேரம் கழித்து குறித்த வீட்டிற்கு ஏன் இராணுவம் சென்றது. உடனடியாகவே சென்றிருக்க
வேண்டும் அல்லவா எனவும் கேள்வி
தொடுத்து சந்தேகம் எழுப்பினர்.

பொலிஸாரின் விசாரணையிலும் தமது நம்பிக்கையீனத்தை தெரிவித்து சுதந்திரமான நீதியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
Reply
#56
[b]<span style='color:red'>அமைச்சர் கதிர்காமர் சுடப்பட்டது சினைப்பர் துப்பாக்கியால் அல்ல, இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் தகவல்


அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டது சினைப்பர் ரக துப்பாக்கியினால் அல்ல எனவும் ""மொடல் 85'' ரக துப்பாக்கியாலேயே அவர் சுடப்பட்டுள்ளார் எனவும் இராசாயனப் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள், வெற்றுத் தோட்டாக்கள் முதலானவற்றை பகுப்பாய்வு செய்ததன் பின்னர் இரசாயன பகுப்பாய்வாளர்கள் இது குறித்து இரகசிய பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

""மொடல் 85'' ரக துப்பாக்கியால் 200 மீற்றர் தூரத்திற்குள் உள்ள இலக்கை சுட முடியும் எனவும் சினைப்பர் துப்பாக்கியால் ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை சுட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</span>
Reply
#57
அப்படியானால் அருகில் இருந்தா சுட்டிருக்கிறார்கள்?? Confusedhock:
Reply
#58
பாவம் பக்கத்து வீட்டுத் தமிழரும் பல அப்பாவிகளும் பலிக்கடாக்கள்.
இது உள் வீட்டுக்குள்ளிருந்து எழுந்த சின்னப்பர் வேலை.
புத்தகத்தை வெளியிட்டு வந்த சந்தோசத்தில
செய்த பாவங்களுக்கு பரிகாரமா கங்கையில்............. மன்னிக்கவும் சுவிம்பாத்தில குளித்த பிறகு....................... திட்டமிட்ட செயல்?

(இது நெருக்கமானவர்களது தகவல்.)
Reply
#59
<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->பாவம் பக்கத்து  வீட்டுத் தமிழரும் பல அப்பாவிகளும் பலிக்கடாக்கள்.
இது உள் வீட்டுக்குள்ளிருந்து எழுந்த சின்னப்பர் வேலை.
புத்தகத்தை வெளியிட்டு வந்த சந்தோசத்தில  
செய்த பாவங்களுக்கு பரிகாரமா கங்கையில்............. மன்னிக்கவும் சுவிம்பாத்தில குளித்த பிறகு.......................  திட்டமிட்ட செயல்?  

(இது நெருக்கமானவர்களது தகவல்.)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓஒ Confusedhock: Confusedhock:
<b> .. .. !!</b>
Reply
#60
கதிர்காமர் கொலையை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று தொடர்ந்து கூறிவரும் இலங்கை அரசு, அதற்கான எந்தவொரு ஆதாரங்களையும் அதற்காக வெளியிடவுமில்லை, அவர்களிடம் எந்த ஒரு ஆதாரங்களுமே இல்லை! மாறாக எவ்வாறு புலிகளை இதில் தொடர்புபடுத்தலாமென்பதற்கு பல பொய்களை புனைய முற்படுகிறார்கள்!!!

ஆனால்....
1) இவரது இறுதிக் காலத்தில் மகிந்த ராஜபக்ஸவிற்கும், இவருக்குமிடையே தோன்றிய முறுகலை விசாரிக்கிறார்களில்லை!!!! மகிந்த ராஜபக்ஸவிற்கும் பாதாள உலக கோஸ்டிகளுக்குமிடையான தொடர்புகள் எத்தகையது?
2) ஒரு சிறு சம்பவம் நடந்தாலேயே அப்பகுதிகளை சுற்றி வளைக்கும் இலங்கையின் பாதுகாப்புப்படைகள், ஏன் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் கதிர்காமரின் இல்லத்திற்கு பக்கத்து வீட்டுக்கு இரண்டு மணித்தியாளங்களின் பின் தான் சென்றார்கள்?? அப்படியாயின் கொலையாளிகள் தப்புவதற்கு போதிய சந்தர்ப்பம் வளங்கப்பட்டதா?
3) இக்கொலையானது வெளியிலிருந்து நடைபெற்றதற்கு மாறாக ஏன் அவருக்கு பாதுகாப்பிற்காக நின்ற படைகளினாலேயே செய்திருக்க முடியாது??? அங்கிருந்த படைகள் இன்றுவரை ஏன் விசாரிக்கப்படவில்லை?? ஏன் உலகில் எத்தனை தலைவர்கள் தங்களது மெய்க்காப்பாலர்களினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்!!!!

எல்லாவற்றிற்கும் மேலாக பெயரளவில் தமிழனான லக்ஸ்மன் கதிர்காமர் எனும் புத்த சிங்களவன், தானாடிய கூத்தில் இறுதிக் கிளைமாக்ஸ்ஸில் பலியாக்கப்பட்டிருக்கிறான்.

ஒட்டுமொத்த ஈழத்தமிழினம் இக்கொலைக்கு அழவோ, வேதனைப்படவோ போவதில்லை! மாறாக இன்னும் பெரும் சந்தோசத்தில் மிதந்து கொண்டிருக்கிறோம்!!! இதில் எந்தவொரு ஈழத்தமிழனுக்கும் இரண்டாம் கருத்திற்கே இடமிருக்காது!!!!

ஆனால் செய்யாத ஒன்றிற்காக பழியை சுமக்க ஈழத்தமிழினம் தயாரில்லை!!
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)