08-03-2005, 01:38 PM
ப்ரியசகி
<img src='http://img135.imageshack.us/img135/1083/priyasakhi4gg.jpg' border='0' alt='user posted image'>
திகட்ட திகட்ட தித்திக்கிற காதல், திருமணத்திற்கு பின்பும் தொடர்கிறதா? சீரான வேகத்தில் ஒரு ஜோரான கதை! ப்ரியாவும் சந்தான கிருஷ்ணனும்தான் ப்ரியசகி. இவர்களின் ப்ரியத்திற்கிடையில் சதியாக நுழைகிற சமாச்சாரம் என்ன என்பதை அழகான நீரோட்டமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.அதியமான்.
ஆபிஸ் விஷயமாக துபாய் போகிற மாதவன் அங்கே மாடல் அழகி சதாவை சந்திக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் சதாவின் மனசை அலைபாய விடுகிறார். பிறகு? ஹைகிளாஸ் சதா, அப்பர் மிடில்கிளாஸ் மாதவனுக்கு மனைவியான பின் அனுபவிக்கிற தொல்லைகளும் துயரங்களும் வேக வேகமாக நகர்கின்றன. டைவர்ஸ் செய்து கொள்கிற இந்த ஜோடி, மீண்டும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
துபாயில் சதாவை சந்திக்கிற மாதவன் மெல்ல மெல்ல அவரை தன் வலைக்குள் வசீகரித்துக் கொள்வது படம் பார்க்கிற இளசுகளையும் கிறங்கடிக்கும். ஒவ்வொரு முறை சதா முறைத்துக் கொள்வதும், அவரை மாதவன் சமாதான படுத்துவதும் அழகழகான குட்டி கவிதைகள். மாதவனின் அலைபாயும் கூந்தல் அழகு. அடிக்கடி சிரிக்கும் அவரின் வசீகரம் அழகு. ஆனால் சதா?
நடிப்பில் அவர் வாங்குகிற மதிப்பெண்களை விடவும் அழகுக்காக அவர் வாங்கும் மதிப்பெண்கள் ரொம்பவே கம்மி. இவரின் கர்ப்பத்தை நினைத்து குடும்பமே சந்தோஷத்தில் மிதக்க, ரொம்ப கேஷ§வலாக ÔÔஅபார்ஷன் பண்ணிக்கிட்டா என்ன?ÕÕ என்று மாதவனிடம் கேட்கிறாரே... பகீர்! அடுத்த வினாடியே அம்மா ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, ரகசிய அபார்ஷனுக்கு ரெடியாகிறது ஐஸ்வர்யா கோஷ்டி! இது புரியாமல் ஐஸ்வர்யாவிடம் போய் ÔÔநீங்க பாட்டியாக போறீங்கÕÕ என்கிற மாதவன் வீட்டாரை பார்த்து அதிர்கிறாரே ஐஸ்வர்யா.. குலுங்குகிறது தியேட்டர்.
காமெடிக்கென்று தனி டிராக் போடாமல் கதையோடு சேர்த்து தெளித்திருக்கிறார்கள். புதுமண தம்பதிகள் ÔபோகோÕ சேனல் பார்ப்பதாக பொய் சொல்லிய அடுத்தநாளே குட்டீஸ்கள் இரண்டும் நாங்களும் ÔபோகோÕ சேனல் பார்க்கிறோம் என்று தம்பதிகள் அறைக்குள் தஞ்சமடைவதும் உதட்டோர புன்னகையை வரவழைக்கிறது.
கலாச்சாரம் எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதை இதைவிட சுவாரஸ்யமாக சொல்லிவிட முடியாது. ÔÔத்தோ இருக்காளே... இவ ஏழு தடவ அபார்ஷன் பண்ணியிருக்காÕÕ ÔÔரொம்ப ஆசைப்படுறா... ஒரு தடவ கல்யாணம் பண்ணிதான் பாரேன்ÕÕ இப்படி போகிற போக்கில் வெடி கொளுத்தி போடுகிறார் இயக்குனர்.
ஜீவனை குழைத்து தருகிற பாடல்கள். மனசை சுண்டியிழுக்கும் பின்னணி இசை என்று ஜமாய்த்திருக்கிறார் பரத்வாஜ். குறிப்பாக Ôமுதல் முதல்Õ என்ற பாடல்.
துபாயை இத்தனை அழகாக எந்த படத்திலாவது காட்டியிருக்கிறார்களா? பிரமிப்பு! ஒளிப்பதிவு சேது ஸ்ரீராம்.
ப்ரியசகி- கறிக்குழம்பு வாசத்திற்கு நடுவில் மரிக்கொழுந்து வாசம்!
தமிழ் சினிமா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம் நல்ல படம்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&