veera Wrote:[quote=kuruvikal]இதென்ன பாருங்கோ சிவாந்தி என்பவருக்கூடாக பணிப்பாளரும் சாதனை படைகிறாரோ......அப்ப சாதனையை பதியிற கின்னசுக்கும் சிவாந்தி என்றும் கடமைப்பட்டவர் என்று சொல்லுவியள் போல....!எது எப்படியோ இலங்கை வானொலிதான் இனங்கண்டு அறிவிப்பாளராக்கியது...
குருவிகளே
நீங்கள் ஆரம்பித்தது இப்படித்தான் ஆனால் இறுதிக் கருத்தில் பெரும் சிந்தனை வாதியாக மாறியிருக்கிறீர்கள்.
<b>அப்படியென்றால் தாயின் கருவறையின்றியே குழந்தை! அப்படித்தானே?</b>
இங்கே புலம் பெயர் நாட்டிலே ஒரு தமிழரிடம் சென்று வேலை செய்ய இன்னுமொரு தமிழர் வெறுக்கிறார்.ஒரு தமிழரை வேலைக்கமர்த்தக் கூட ஒரு தமிழ் நிறுவனம் தயங்குகிறது போன்ற சூழ்நிலையிருக்கின்றதே அது ஏன் தெரியுமா? இப்படிப்பட்ட நன்றி கெட்ட போக்கிற்காகத்தான்.
இந்த இடத்தில் ஒரு சாதனையாளரை வாழ்த்த வேண்டிய சூழ்நிலையில் அவருக்கு அதனை வழி சமைத்துக் கொடுத்தவரும் நன்றியுடன் நினைவு கூறப்படவேண்டும் என்பதுதான் எனது கருத்தாக இருந்ததே ஒழிய..நீங்கள் கேட்பது போன்று சாதனையாளரோடு சேர்த்துப் பெயர் பதிவதற்காக அல்ல.இது உங்களுக்குத் தெரியாத ஒன்றும் அல்ல.இருந்தாலும்
கருத்தின் திசையை மாற்றுகிறீர்கள்.
றமணன் விவகாரத்திற்கு முன்பதாக திருவாளர் சுரதா ஒரு விடயத்திற்காக ஒரு உதாரணம் காட்டியிருந்தார் அதாவது கவுண்டமணியின் அரசியலில் சகஜமப்பா..இந்த விடயத்திற்குப் பிறகு ஜெயகுமாரும் றமணனும் வானெலியில் கதைத்தது நல்லதொரு வானொலி நாகரிகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இடத்தில் ஒரு கேள்வியுள்ளது.அந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும் போது உங்கள் மனநிலை என்னவென்பதைப் புரிந்து கொள்ளலாம்.
<b>றனணன் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கோர்ட்டுக்கு கேஸ் எடுபடாமல் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் போன்று தான் அவரும் வாழ்ந்து வந்தார்.
ஆனால் இந்த வருட முற்பகுதியில் அவருக்கு எதிராக பலமாக அனுப்பப்பட்ட பெடிசன் ஒன்றினால் அவரது விடயங்கள் மீண்டும் அலசப்பட்டு அவர் திருப்பியனுப்பப்பட்டார்.அந்த விடயத்தில் வானொலியில் நேரடியாகவே பிரகடனம் செய்துவிட்டு அந்த வேலையை செய்தவர் இந்த மனிதர்.</b>
<b>இவருடன் றமணன் இன்று நேரடியாகவே கதைத்தவர் என்பது சிலருக்குப் பாராட்டக்கூடிய விடயம்.
ஆனால் இது வரை இந்தப் போராட்டத்தில் றமணனுக்காக குரல் கொடுத்த ( இந்த மனிதரை எதிர்த்து ) றமணனுக்காக திட்டிய, வானலையில் வீரம் பேசிய,சாபமிட்ட பல நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன?அவர்களுக்கு என்ன தேவையிருந்தது றமணனுக்காக இன்னுமொருவரைப் பகைத்துக்கொள்வதற்கு?
றமணனுக்காகக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் புலி எதிர்ப்பாளர்களாகவும் இவரோடு வெளிச்சென்றவர்கள் எல்லாம் தங்கள் பிரதேசத்தின் அமைப்பின் பொறுப்பாளர்கள் என்றும் இப்போது கரடி விட,தானும் ஒரு பழம் புலி என்று கதைவிட்டு இவர்கள் புண்ணியவான்களாக மாறிப் புலித்தோல் போர்த்தி வாழ்கிறார்கள்,
இன்று றமணனுக்காகக் கதைத்தவர்கள்,நோகடிக்கப்பட்டவர்கள்,புலி எதிர்ப்புச் சாயம் பூசப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா
[b]ஓ றமணன் கதைத்துவிட்டார் என்று மீண்டும் சென்று இவரை அணுகவேண்டியதுதான் அவர்கள் கதியா? அது எல்லாருக்கும் பொருந்தாது.
சாதனையாளருக்கு ஐரோப்பாவில் வாழும் அனைத்து தரப்பு அறிவிப்பாளர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.தெரிவிப்பது கடமையானதும் கூட.அதில் சில இவருக்குப் பிடிக்காத அறிவிப்பாளர்களின் வாழ்த்துக்களை வாசிக்க விடாமல் இவர் தடுத்துள்ளார்.அது பிரச்சனைக்குரிய விடயமுமல்ல.ஏனெனில்</b>
அவர்கள் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர் என்பது சிவாந்திக்குத் தெரிந்ததுதானே.
எதுவென்றாலும் செஞ்சோற்றுக்கடன்,செய்நன்றிக்கடன் ஊட்டி வளர்க்கப்பட்ட கலாச்சாரத்திற்குரிய நான் இதன் பின்ணணியில் இருந்த ஒரு மனிதரை சுட்டிக்காட்டியதற்கு நீங்கள் தந்த பதில் தவறானது.
அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை.ஆனால் விளக்க வேண்டிய கடமையுள்ளது.எனவே விளக்கியிருக்கிறேன்.
பண்பாடு இல்லையென்றால் அவன் தமிழனே இல்லை என்பது எனது கொள்கை.
சிறிய வயதில் பாடசாலை ஆசிரியர்கள் வி...வீ...என்ற சொற்களில் சில வார்த்தைகளை விளக்கும் போது ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருந்தது.ஆனால் நான் எழுதியவற்றிற்கு நீங்கள் தந்திருந்த பதில்களைப் பார்க்கும் போதுதான் அந்த அர்த்தங்கள் எனக்கு நன்கு புரிந்தது.
கருத்துக்களின் வேகத்தைவிட அதன் ஆழமும் உணர்வுகளும் முக்கியமானவை.எனவே அவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுங்கள்.
உங்கள் கருத்தில் குருவிகள் Bold செய்தவற்றிற்கும் குருவிகளின் கருத்து அல்லது தற்போதய சாதனை நிகழ்வுக்கும் இடையில் என்ன தொடர்பு உள்ளது...அப்படித் நேரடியற்ற தொடர்பு இருந்தாலும் அதை தற்போது வெளிவிடக் காரணம்...?
வீரா அவர்களே ஏட்டிக்குப்போட்டியாக கருத்தெழுதும் தாங்களும் தணிக்கையும் எழுதியவற்றில் பலது தற்போதைய சாதனை நிகழ்வுக்கும் அதன் வெற்றிக்கும் புறம்பானவை...பணிப்பாளரைப் பற்றியோ அல்லது சாதனையின் பின்னணி பற்றியோ கதைக்க விரும்பின் அதனை பிறிதொரு தலைப்பில் ஆரம்பித்து நீங்களும் தணிக்கையும் கருத்தாடி இருக்கலாம்....தணிக்கை சாதனை பற்றிய செய்திகளுடன் கருத்துப்பரிமாறினாலும் நல்ல கருத்தாளனான தாங்கள் பணிப்பாளருக்கும் வானொலிக்கும் வாழ்த்துவதில் முழுக் கவனமும் செலுத்துவது ஏன்....?!
எது எப்படியோ தமிழ் சகோதரியின் சாதனை வெற்றி பெற இறை நல்லாசிகள் வேண்டி எமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>