Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
பெண்ணியம் என்றால் என்ன?
------------------------------
"பெண்ணியம் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரான பெண்களின் விடுதலைச் சித்தாந்தம்"
நான்கு வகையான பெண்ணியக் கோட்பாடுகள் உள்ளன.
1. முற்போக்கு பெண்ணியம்
ஏற்கனவே நடைமுரையில் உள்ள அமைபிற்குள்ளேயே சமத்துவத்தைக் கொண்டுவர முயற்சிப்பது.
2. தீவிரவாத பெண்ணியம்
அனைத்து சமூக நிலைகளிலும், புரட்சிகர மற்றத்தை விரும்பினாலும், பல்வேறுபட்ட ஒடுக்குதல்களையும் முதன்மையாகப் பார்க்கிறது.
3. சோஷலிச பெண்ணியம்
பிற வடிவிலான ஒடுக்குதலுடன் பெண் ஒடுக்குதலை இணைத்து ஆய்வு செய்கிறது. மேலும் சோஷலிசத்தைப் பெற பெண்விடுதலை சித்தாந்தத்தோடு இணைத்துப் போராட முயல்கிறது.
4. சமூகப் பெண்ணியம்
சமுதாய சமத்துவமின்மையுடன் பெண் ஒடுக்குதலையும் சுரண்டலையும் இணைத்துப் பார்ப்பதோடு முழுமையாக விடுதலை பெற்ற ஒரு சமுதாயத்தை நோக்கித் தீவிரமாகக் குரல் கொடுக்கிறது.
கெய்ல் ஒம்வெட் என்ற அறிஞர் மேற்கண்டவாறு வரையிறுத்துள்ளார்.
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
இன்னும் சில வரைவிலக்கணங்கள் உள்ளன.
"பெண்ணியம் என்பது தந்தை வழியாட்சி முறையின் கட்டுப்பாடு குறித்த பெண்களின் உழைப்பு, கருவளம், பாலியல் ஆகியவற்றின் பொருள் கூறு மற்றும் கருத்தாக்க நிலைகளின் ஒடுக்குதலும் சுரண்டலும், சமூகத்திலும், வேலைத்தளங்களிலும், குடும்பத்திலும் நிகழும் பெண் ஒடுக்குமுறை, சுரண்டல் குறித்த பெண்களின் விழிப்புணர்வும், இதை மாற்ற பெண்களும் ஆண்களும் எடுக்கும் உணர்வுபூர்வமான நடவடிக்கை என்பதாகும்"
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
வரைவிலக்கணங்கள் விளங்க்காவிட்டால் சில கேள்விகளுக்கு விடையிறுத்த்ப் பார்த்தால் பெண்ணியம் சிலவேளை புரியக்க்கூடும்.
திருமணம் புரிதல், கருத்தரித்தல், குழந்தை பெறுதல் போன்றவற்றை தீர்மானிப்பது யார்?
பெண்கள் வீட்டில் ஆண்களுக்குக் கீழ்ப் படிந்து வாழவேண்டும் என்பது ஏன்?
தொழிலிலும், சமூகத்திலும் பெண்கள் தொடர்ந்து குறைவான அந்தஸ்த்தில் இருப்பதன் காரணம் என்ன?
பெண்களின் கல்வி வளர்ச்சியை ஒரு நிலைக்குமேல் போகவேண்டாம் என்று தடுப்பது ஏன்?
சீதனம் கொடுத்தல், ஆண் குழந்தையை பெற விரும்புதல் போன்றன இப்போதும் தொடர்வது ஏன்?
பெண்கள் நுகர்பண்டம் போல் திரைப்படங்கள், பத்திரிகை போன்ற ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் காட்டப்படுவது ஏன்?
இன்னும் பல கேள்விகளை அடுக்கலாம், தேவையில்லை என நினைக்கிறேன்.
பெண்ணடிமை இல்லை என்பது, டி.பி. விஜயதுங்க இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையென்று சொன்னதுபோல் உள்ளது.
<b> . .</b>