Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு
#81
rajathiraja Wrote:<b>திரு காவடி

புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி</b>
http://www.rediff.com/news/2005/dec/15bihar.htm

எங்களுக்கு தெரிந்த அளவில் அது நிச்சயமாக பொய்யான விடயம்தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். புலிகள் அதை பலமுறை தெளிவு படுத்தி விட்டார்கள்.

நெடுமாறன் அண்ணாவின் நிலைப்பாடுகள் புலிகளால் எடுப்பவையாக இருப்பதில்லை, ஆனாலும் புலிகள் அவருக்கு தரும் மரியாதை அளப்பரியது. அதுக்காக அவர் ஆதரவு கொடுப்பவர்களுக்கு புலிகள் ஆதரவு கொடுக்கிறார்கள் எண்று இல்லை.

மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமா எல்லோரும் இந்திய ஜனநாயகத்தை ஏற்று நடப்பவர்கள்தானே.? அவர்களும் புலிகளின் ஆதரவாளர்தானே.? அவர்களிற்கும் புலிகளோ ஈழத்தவரோ மதிப்பளிக்கிறார்கள் என்பதால் ஏன் நீங்கள் புலிகள் இந்திய ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கிறார்கள் எண்று கொள்ளக்கூடாது.?
Reply
#82
Quote:இந்தியா இலங்கைக்கு எக்காலத்திலும் ஆயுத உதவி வழங்காது.... தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்.... அவர்கள் பெரும் போராட்டம் அறிவித்து ஸ்தம்பிக்க செய்ய மாட்டார்களா?
உண்மைதான். இதில் வைகோ போன்றவர்களின் பங்கு முக்கியமானது. அடிக்கடி டெல்லி சென்று அவர் இதுதொடர்பில் பேசுகின்றார் என அறிகின்றோம். அண்மையில் செல்வி ஜெயலலிதா கூட ஆயுதங்கள் வழங்ககூடாதெனவும் வேண்டுமானால் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் வழங்கட்டும் எனக் கூறியிருந்தார்.
, ...
Reply
#83
காவடி Wrote:உண்மைதான். இதில் வைகோ போன்றவர்களின் பங்கு முக்கியமானது. அடிக்கடி டெல்லி சென்று அவர் இதுதொடர்பில் பேசுகின்றார் என அறிகின்றோம். அண்மையில் செல்வி ஜெயலலிதா கூட ஆயுதங்கள் வழங்ககூடாதெனவும் வேண்டுமானால் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் வழங்கட்டும் எனக் கூறியிருந்தார்.

இதில் தனது திமுக தலைவர் தன் கருத்தை சொல்லாமல் மத்திய அரசின் கருத்தை ஆதரிப்பேன் எண்று சொல்லி அரசியல் வாதியாக நடந்துகொள்வது வேதனையான விடயம். பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#84
திமுக தலைவர் புத்திசாலியாக நடந்துகொள்கிறார் என்பது புலப்படுகிறது... அவர் ஆட்சி 91ல் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார் என்ற காரணத்துக்காக கலைக்கப்பட்டது.... அப்படியிருந்தும் புலிகள் கலைஞரை ஒரு பொருட்டாக என்றுமே மதித்தது கிடையாது.....
,
......
Reply
#85
Quote:காவடி உங்கள் பெயர் 'ரகு' தானே?
எந்த ரகு?
, ...
Reply
#86
அவரும் மத்திய அரசில் பங்கு வகிப்பவர் தானே அகிலன் !! அவர் தமிழ்ர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல் பட அனுமதிக்க மாட்டார்
.
.
Reply
#87
அகிலன் உங்களுக்கு புரியுமோ புரியதோ எனக்கு தெரியாது....

கலைஞர் உங்களை ஆதரித்தது இன உணர்வால்....

ஜெயலலிதாவோ, எம்.ஜி.ஆரோ உங்களை ஆதரித்திருப்பார்களேயானால் அதில் கண்டிப்பாக அரசியல் இருக்கிறது.... இதைப் பற்றியெல்லாம் விவாதித்து நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.....
,
......
Reply
#88
Quote:அவர் ஆட்சி 91ல் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார் என்ற காரணத்துக்காக கலைக்கப்பட்டது.... அப்படியிருந்தும் புலிகள் கலைஞரை ஒரு பொருட்டாக என்றுமே மதித்தது கிடையாது.....
இது பற்றி எழுதிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள், எம்ஜிஆர் ஒருமுறை புலிகளை சந்திக்க அழைப்பு விடுத்ததாகவும், அதையறிந்த கலைஞர் குறித்த அதே நாளில் அனைத்தப் போராளிக்குழுக்களுக்கும் சந்திக்க அழைப்பு விடுத்து அதனை அரசியலாக்க முனைந்தார் என்றும், தம்மை மட்டுமே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்று அழைத்த எம் ஜி ஆரின் அழைப்பினை தாம் ஏற்றுக் கொண்டதாகவும் எழுதுகிறார். அந்தச் சந்திப்பே எம் ஜி ஆருக்்கும் புலிகுள்கும் இடையில் மிகுந்த நெரக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பு. அந்தச் சந்திப்பிலேயே புலிகளுக்கு 4 கோடி ரூபாக்கள் வழங்குவதாக எம் ஜி ஆர் உறுதியளித்தார். இவ்வாறு எம் ஜி ஆருடன் நெருங்கிய பின்னர் புலிகள் கலைஞரை புறக்கணித்தமை ஒருவித அரசியல் தழுவிய நிலைப்பாடுதான்.

ஆனாலும் 87 களில் புலிகளின் ஒரு குழு( யோகரட்ணம் யோகி, அன்ரன் பாலா ) கலைஞரை சந்தித்திருந்தது. அதன் பின்னர் யுத்தம் ஆரம்பமாகிவிட ... அவை நடந்த கதைகள்..

இன்னுமெபன்று எந்த அளவிற்கு உண்யென தெரியாது. ஒருவேளை அகண்ட ஈழம் கதைபோலவே பொய்யானதாய் இருக்கலாம். வைகோ அதிமுகவிற்கு பாய்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சம்யத்தில் அவர் தொடர்ந்தும் திமுகவிலேயெ இருக்க வேண்டுமென கடல் கடந்து ஒரு அறிவுறுத்தல் வந்தது என உங்கள் ஊர்ப் பத்திரிகைகளில் பார்த்தேன். அது பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
, ...
Reply
#89
கலைஞர் இந்திய இராணுவ வீரர்களை சந்திக்க மறுத்தமையும், இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வாக ஈழம் செக்கெச்சுலோவியா போல அமைதியாக பிரிந்து விட வேண்டும் எனக் கூறியிருந்தமையையும், தமிழீழம் கிடைத்தால் தான் மிக மகிழ்வடைவேன் என சொல்லியிருக்கின்றமையையும் நாம் நன்கு அறிவோம். ஒருவேளை அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக தனது எண்ணத்தை தற்போது பகிரங்கமாக கூறமுடியாதவராக இருக்கிறாரோ தெரியவில்லை.. தனிப்பட்ட ரீதியில் தொடர்புகள் இரக்கின்றதா என்பது புலிகளுக்கே வெளிச்சம்
, ...
Reply
#90
Quote:வைகோ அதிமுகவிற்கு பாய்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சம்யத்தில் அவர் தொடர்ந்தும் திமுகவிலேயெ இருக்க வேண்டுமென கடல் கடந்து ஒரு அறிவுறுத்தல் வந்தது என உங்கள் ஊர்ப் பத்திரிகைகளில் பார்த்தேன். அது பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

அது தினமலர் என்னும் பத்திரிகையின் கட்டுக்கதை....

வைகோவின் ரிமோட் ஈழத்திலிருந்து இயக்கப்படுகிறது என்பதை நான் நம்பவில்லை......

கலைஞர் டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் ஏனைய இயக்கங்களை ஆதரித்தார்.... அவருக்கு எதிராக அரசியல் நடத்த வேண்டிய நிலையில் இருந்த எம்.ஜி.ஆர். மீதமிருந்த இயக்கமான புலிகளை ஆதரித்தார். இது தான் உண்மை....

இன்றைய திருச்சி பேட்டியில் கூட கலைஞர் ஈழத்தமிழர் மீதான தனது அக்கறையை தெளிவுபடுத்தியிருக்கிறார்....

புலிகளை ஆதரித்தால் தான் ஈழத்தமிழரை ஆதரிப்பது என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் அது நகைப்புக்குரியது....

தமிழ்மக்களின் அனுதாபம் அப்பாவி ஈழத்தமிழர்களின் மீது மட்டுமே.... புலிகள் மீது கிடையாது.....
,
......
Reply
#91
காவடி

ஜெயலலிதா எந்த இடத்திலும் ஆயுதம் வழங்கக் கூடாது என்று சொல்லவில்லை. அப்படி வழங்குவதற்கு முன் அதுபற்றி நன்கு ஆராய வேண்டமென்றெ குறிப்பிட்டுள்ளார். அதுபோல் ஆசிரியர்கள் என்பதையும் நீங்கள் தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். செவிலித்தாய்கள் ( தாதிகள் ) என்பதைத்தான் அப்படி தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். அதுபோல் கலைஞர் கருணாநிதியும் இலங்கைத்தமிழ் மக்கள் விடயத்தில் தாம் பாரா முகமாக இருந்து விட முடியாது என்றும் இது விடயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவு அளிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார். இதனை சரியாக புரிந்து கொள்ள முன்வரவேண்டும். திமுகவை பொறுத்தவரை எந்தவித ஆதரவையும் நேரடியாக சொல்ல முடியாது. ஏற்கனவே திமுக அரசு இவ்விடயத்தால் கவிழ்க்கப் பட்டதை நாம் மறக்கவும் கூடாது. ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய அரசு பாதகமான நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கவும் மாட்டார்கள். இதற்கு இராமதாஸ் வைகோ போன்றோரும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது எமக்குச் சாதகமான விடயமே.
<i><b> </b>


</i>
Reply
#92
97 இன் இறுதியில் வன்னியில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலாவிற்கு உடல்நிலை மிக மோசமாப் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை இந்தியாவிற்கு அனுப்பி மருத்துவ சிகிச்சை வழங்க நினைத்ததாகவும் அதற்கு அப்போதைய தமிழக அரசியல் வாதிகள் பலர் உதவிபுரிவதாய் சொன்னதாகவும் அடேல் பாலா எழுதிய நூலில் குறிப்பிடுகிறார். ஆயினும் பயண மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டு அவர் கடல்வழியாக தெற்காசிய நாடொன்றிற்கு சென்றிருந்தார். (தாய்லாந்தாக இருக்கலாம் என்பது என் ஊகம்).

மீண்டும் 2002 இல் அவருக்கு மருத்துஉதவிகள் தேவைப்படுவதால் தென்னிந்தியாவில் எங்காவது தங்கியிருந்து புலிகளின் தலைவரை வன்னியில் வந்து சந்திப்பதற்கு அனுமதி இந்திய அரசிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் வாஜபேய்.. அதனை மனிதாபிமான அடிப்படையில் சாதகமாக பரிசீலிப்பதாய் சொல்லியிருந்தார். ஆனாலும் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். கருணாநிதி என்ன நீலைப்பாடு கொண்டிருந்தார் என தெரியவில்லை..
, ...
Reply
#93
96ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் மிக மோசமாக நடத்தப்பட்ட நேரம்....

கலைஞர் அதை கண்டித்து சென்னையில் மாபெரும் மவுன ஊர்வலம் நடத்தினார்.... கட்டுக்கடங்காத கூட்டம்....

தேனாம்பேட்டையை ஊர்வலம் நெருங்கும்போது மாலை 6.30.... அப்போது ஆட்சியில் இருந்த ஜெ. தெருவிளக்குகளை எல்லாம் மின்சாரத்தை துண்டித்து அணைத்தார்....

இது தான் ஜெயா உங்கள் மீது கொண்டிருக்கும் பாசம்......
,
......
Reply
#94
Quote:தமிழ்மக்களின் அனுதாபம் அப்பாவி ஈழத்தமிழர்களின் மீது மட்டுமே.... புலிகள் மீது கிடையாது.....
ஆனால்.. அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள் தங்கள் விமோசனத்துக்கு புலிகளைத்தானே நம்பியாகவேண்டும்.

நன்றி வசம்பு உங்கள் சுட்டிக்காட்டல்களுக்கு.. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதானால் அது தொடர்பாக ஆராயப் பட வேணும். என்றிருந்தார்.

ஒருவேளை வைகோ தன் பக்கம் சாய இருந்த சந்தர்ப்பத்தில் அவர் அவ்வாறு சொல்லியிருக்கலாம். இனி இல்லையென்றான பிறகு என்ன சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
, ...
Reply
#95
சச்சிதானந்தம் என்ற அறிஞர் ஈழத்தவர் இந்தியாவிலிருக்கிறார்...பண்டராவன்னியனை பற்றி கருணாதி அவர்கள் எழுத தகவல்களை வழங்கியவர்...கருணாதியின் மிக நெருங்கிய நண்பரும் கூட..கருணாதியின் பதவியேற்ப்பு வைபங்களில் கூட இவரை அழைத்து கெளவரபிப்பார்...சச்சிதானந்தம் தீவிர ஈழ விசுவாசி..கருணாதிக்கு ஈழபோராட்டத்தை பற்றி முழூமையாக தெரியும் ஆனால் இங்கு இன உணர்விலும் பார்க்க வர்த்தக அரசியல் நலன்கள் முக்கியமாக இருப்பதால் ஒன்றும் செய்யமபடியாதுள்ளதென்று நினைக்கிறன்.
Reply
#96
Quote:புலிகளை ஆதரித்தால் தான் ஈழத்தமிழரை ஆதரிப்பது என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் அது நகைப்புக்குரியது....
அப்படியல்ல லக்கி.. இந்திய மக்களின் உலக மக்களின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு போதுமானது. அவ்வாறிருந்தால் எமக்கு வாழ்வு சமைத்துத் தர புலிகள் இருக்கிறார்கள். அதே போல உணர்வோடு ஒன்றித்து எங்கள் நியாயம் விளங்கிய உங்களைப் போன்ற சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆகவே நாம் வென்று காட்டுவம்
, ...
Reply
#97
Quote:சச்சிதானந்தம் என்ற அறிஞர் ஈழத்தவர் இந்தியாவிலிருக்கிறார்
மறவன் புலவு சச்சியோ..?
Quote:...பண்டராவன்னியனை பற்றி கருணாதி அவர்கள் எழுத தகவல்களை வழங்கியவர்...
பாயும் புலி பண்டாரவன்னியன் தானே
, ...
Reply
#98
காவடி Wrote:அப்படியல்ல லக்கி.. இந்திய மக்களின் உலக மக்களின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு போதுமானது. அவ்வாறிருந்தால் எமக்கு வாழ்வு சமைத்துத் தர புலிகள் இருக்கிறார்கள். அதே போல உணர்வோடு ஒன்றித்து எங்கள் நியாயம் விளங்கிய உங்களைப் போன்ற சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆகவே நாம் வென்று காட்டுவம்

நேற்றய சாலைவளியே ttn நிகழ்ச்சியில் ஈழத்து மக்களின் உணர்வும். தற்போதைய பலப்பரிச்சையும் அதைத்தான் சுட்டி நிற்கிகிறது.!

இளப்பதற்க்கு எண்று எம்மிடம் எதுவுமே இல்லை உயிர்களைத்தவிர. இதுதான் வெல்லும் மக்களின் உறுதிமொழி.
Reply
#99
கொஞ்சம் சீரியசாக போகின்றதனால் நகைச்சுவைக்காக இதை செருகுகின்றேன். அதாவது புலிகளை ஆதரிக்க மாட்டோம். ஆனால் தமிழீழம் அமைந்தால் மகிழ்ச்சியடைவோம் என்று சிலர் கூறுகிறார்கள். அது எவ்வாறு இருக்கின்றதென்றால் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதை விரும்ப மாட்டோம். ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியடைவோம் என்பது போல இருக்கிறது என்றார் ஒரு நிகழ்வில் தேனிசை செல்லப்பா
, ...
Reply
காவடி Wrote:
Quote:சச்சிதானந்தம் என்ற அறிஞர் ஈழத்தவர் இந்தியாவிலிருக்கிறார்
மறவன் புலவு சச்சியோ..?
Quote:...பண்டராவன்னியனை பற்றி கருணாதி அவர்கள் எழுத தகவல்களை வழங்கியவர்...
பாயும் புலி பண்டாரவன்னியன் தானே
ஓம் மோனை காவடி அவரே தான்...ஓ பாயும் புலி பண்டாரவன்னியன் தான் ஏதும் இசகு பிசகா சொல்லிப்போட்டேனே....
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)