Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு
#1
நீங்கள் பாட்டுக்கு எங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் அளவுக்கு கேவலமாகப் பேசுவீர்கள்.... எங்கள் தலைவர்களை குள்ளநரி என்றெல்லாம் விமர்சிப்பீர்கள்.... அதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டால் தான் நாங்கள் தமிழினம்.... இல்லையென்றால் துரோகி அப்படித்தானே?
,
......
Reply
#2
ஆம் கருணானிதி மேல் எங்கள் ஆட்கள் பேசுவதை விட இங்கு அதிகமாக விமர்சனம் செய்ய பட்டுள்ளது. தனி தமிழ் நாடு கேள், ஹிந்தி கார்னின் அடிமை நாங்கள் என்ற தொணியில் எவ்வளவு கருத்து எழுத பட்ட்ளது , அது நீங்கள் அறியாத்த தலை??
.
.
Reply
#3
ம்.. இலங்கையணியைவிட இந்திய அணிமீது விருப்பம் கொண்ட பல இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவ்வளவும் ஏள்..? இலங்கைத் தமிழருக்கு பாகிஸ்தானுடன் என்ன பிணக்கு.. எதுவும் இல்லை! ஆனாலும் கார்கில் சண்டையில் இந்தியா வெல்ல வேண்டும் என்று மனதார குறிப்பிடத்தக்களவு இலங்கைத்தமிழர்கள் விரும்பினார்கள். ஆனாலும் இன்றளவும் இந்தியா ஈழத்தமிழரின் அபிலாசைகளுக்கு எதிரானதாகவே நடக்கிறது. காரணம் இந்தியாவின் இறையாண்மை எனப்படுகிறது. சரி.. இந்த முரணை என்னவென்பது? ஒரு நாட்டின் இறையாண்மைக்காக இன்னொரு இனம் இறையாண்மையுடன் வாழ வழிவிடப்படவில்லை. லக்கிலுக்! ராஜா இங்கே ஈழத்தமிழர் தரப்பிலிருந்து சிறுபிள்ளைத்தனமாக, முதிர்ச்சியற்ற கருத்துக்கள் வந்த போதும் அவற்றுக்கு நீங்களும் விசமம் நிரம்பி (வேண்டுமென்றே நிரப்பி) --இதில முதலில் யார் செய்தது என்ற பிரச்சனைக்கு வரவில்லை! -- கருத்துக்களை சொன்ன போதும் இன்றைக்கும் இந்தியா என்னும் நாட்டிற்கு ஈழம் அமைவது துளியும் விருப்பம் இல்லை.

ஒரு தமிழனாக என்று கேட்க வில்லை. ஒரு இந்தியனாக இருந்து பதில் சொல்லுங்கள். ஈழம் அமைவதனால் இந்தியனான உங்களிற்கு என்ன பாதிப்பக்கள் ஏற்படும் என நிங்கள் நினைக்கிறீர்கள்? உண்மையில் பாதிப்புக்கள் ஏற்படுமா? அதற்கு முன்னர் இந்தியா ஈழம் அமைவதை விரும்பவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் ஒரு இந்தியர் என்ற வகையில் ஏன் அவ்வாறு விரும்பவில்லை என கூற முடியுமா? இரண்டு தரப்பிலும் நடந்து கொண்டிருக்கும் குழந்தைப்பிள்ளைத்தனமான சீண்டல்களையும் நிறுத்திவிட்டு எதிரிகளாக இருந்தாலும் நாகரீகமான எதிரிகளாக இருத்தல் தான் நல்லது.
, ...
Reply
#4
Luckyluke Wrote:நீங்கள் பாட்டுக்கு எங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் அளவுக்கு கேவலமாகப் பேசுவீர்கள்.... எங்கள் தலைவர்களை குள்ளநரி என்றெல்லாம் விமர்சிப்பீர்கள்.... அதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டால் தான் நாங்கள் தமிழினம்.... இல்லையென்றால் துரோகி அப்படித்தானே?

அப்படி நீங்க கேள்வி கேட்டிருந்தால் ஒருவேளை எங்களின் நிலைப்பாட்டுக்கு காரணம் என்ன எண்று விளக்கி இருக்கலாம்.... அதுக்கு பதிலாய் எங்களின் தேசியத்தை இழுத்து பேசினால் நாங்கள் உங்களுக்கு அடங்கிவிடுவோம் எண்று நினைத்தால் அதுக்கு நாங்கள் சூடாக பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள்...!

மற்றயது உங்கள் தலைவரை எதிர்கட்ச்சியினர் இதைவிட கேவலமாக விமர்சிப்பதை கேட்க்காமல், இங்கு வந்து எங்களைக் கேட்பதின் நோக்கம் என்ன....??? ஈழத்தவன் இளைச்சவன் எண்ற எண்ணமா...???
::
Reply
#5
ராஜா நான் எனது நிலைப்பாடு பற்றித்தான் சொன்னேன் நான் எழுதிய கருத்தை நன்கு வாசிங்கப்பா (போற போக்கில நான் தமிழும் படிப்பிக்க வேண்டும் போல இருக்கே எனக்கே தமிழ் தகராறு இதுக்க )

நான் யாரையும் ஆதரவு கொடுக்காதீங்க எண்டு சொல்லயில்லை அப்படி சொன்னாக்கூட என்ன தப்பு
நான் என்ன இந்தியாக்கு இந்தியர்களையா நான் ஆதரவு கொடுக்க வேண்டாம் எண்டு சொன்னேன் எமது தாயகத்துக்கு துரோகம் செய்த இரண்டு நாடுகளுக்கும் எமது ஈழத்தவர்ஆதரவு கொடுக்க வேணும் எண்டு எப்படி எதிர் பார்ப்பீர்கள் ராஜா

உதாரணமாக இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு என்ன ஆதரவா கொடுக்கிறீங்க :roll: 8)
. .
.
Reply
#6
rajathiraja Wrote:ஆம் கருணானிதி மேல் எங்கள் ஆட்கள் பேசுவதை விட இங்கு அதிகமாக விமர்சனம் செய்ய பட்டுள்ளது. தனி தமிழ் நாடு கேள், ஹிந்தி கார்னின் அடிமை நாங்கள் என்ற தொணியில் எவ்வளவு கருத்து எழுத பட்ட்ளது , அது நீங்கள் அறியாத்த தலை??

எல்லாத்துக்கும் அடிப்படையில் இருந்தது யார்....??? இங்கு வந்து இந்தியராய் ஈழத்தவன் அபிலாசைகளை கேவலப்படுத்தியவர் யார்...??? தலைவரைப் பற்றி அவதூறு சொன்னவர்கள் யார்...???
::
Reply
#7
Niththila Wrote:உதாரணமாக இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு என்ன ஆதரவா கொடுக்கிறீங்க :roll: 8)

அப்படி கொடுக்கவில்லை எண்றால் பாக்கிஸ்தான்காறன் வந்து சண்டை பிடிக்கமாட்டான்......!
::
Reply
#8
நன்றி காவடி அவர்களே !! இது சிக்கலான கேள்வி , ஏன் தமிழ் நாட்டு மக்களில் ஈழத்தை வருவதை விரும்பாதவர் யாரும் இல்லை. இங்கு ஒரு காலத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் தினம் தினம் நடக்கும் ஜெயவர்தனா கொடும்பாவி எரிப்புகளை பார்த்து வளர்ந்தவன். உங்களுகாக குரல் குடுத்த தமிழ் நாட்டு மக்களும் , தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் இன்று கண்டும் காணாது இருப்பது ஏன், உங்களுக்கே புரியும் எங்கு இது ஆரம்பித்தது என்று. தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஈழ் செய்திகள் அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம், ஆனால் செய்திகளை பற்றி எந்த வித விமர்சனமும் வராது. அரசாங்க அடக்கு முறை எல்லாம் இல்லை,வேண்டும் என்ரே போடு கொண்ட வாய் பூட்டு தான்.மேலும் பேசலாம் எனக்கு கத்திரி போடாமல் இருந்தால்.
.
.
Reply
#9
//அதே போல தங்கள்வேற நாட்டவர் எண்டு பொய் சொல்லி அகதி அந்தஸ்து கேட்கவில்லை//
பிள்ளை நித்திலா.. எத்தினை பேர் கேட்டிருப்பினம்! ஒரு 100 அல்லது ஒரு 1000.. இந்தியாவின்ர சனத்தொகை 100 கோடிக்கும் மேலை பிள்ளை.. என்ன பிள்ளை லோயர் எண்டு சொல்லுறாங்கள்.. கவனம் பிள்ளை.. சரி நான் ஒண்டு கேக்கிறன்..

ஈழத்தில இருந்து வந்த ஒருத்தர் கூடவா தங்களுக்கு விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று கேட்டு அசைலம் அடிக்கவில்லை. இன்று விடுதலைப் புலிகளுக்கு மழு உதவி செய்கின்ற 1000 பேரில் ஒரு 5 பேராவது தங்களுக்கு புலிகளால் ஆபத்து என்று சொல்லி அசைலம் அடிச்சவையாக இருக்கலாம். அதுக்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழ் இனத்தையெ அப்பிடி சொல்ல முடியுமோ? யோசித்து பாரும்..
Quote:நித்திலா இந்தியாவுக்கு எதிராக யார் விளையாடினாலும் தான் அவர்களுக்கு ஆதரவு எண்று சொன்னார் அது அவரின் நிலைப்பாடு.... அதுக்காக நீங்கள் உங்கள் ஆதரவு வேண்டியதில்லை எண்றது நண்றாக இல்லை....!
மன்னிக்கோணும் தலை.. ஆதரவு தரமாட்டன் எண்டு சொல்லறது நித்திலாவின் நிலைப்பாடு எண்டால் அந்த ஆதரவு தேவையில்லை எண்டு சொல்லுறது ராஜாவின் நிலைப்பாடு எண்டு சொல்ல அவரை ஏன் வைக்கிறியள்.?
, ...
Reply
#10
தமிழ்நாட்டு தமிழர்மீது எங்களுக்க பாசம் இல்லை எண்டு கேக்கிறீங்க இந்திய அணிக்கு சப்போட எண்டா மட்டும்தானா தமிழக தமிழர் மீது பாசம் எண்டு அர்த்தமா ராஜா :roll:

இந்திய அணியில தமிழர்இருக்கினமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்க தெரியாது சடகோபன் ரமேசுக்கு பிறகு எந்த தமிழரையும் தனது அணியில சேர்க்காத இந்திய அணிக்கு சப்போட் பண்ணித்தான் எங்கட பாசத்தை நிருபிக்க வேண்டும் எண்டு இல்லையே

உங்கட கருத்துப்படி எல்லா இந்தியரும் இந்திய அணிக்கா சப்போட் பண்றாங்க :roll: :roll:
. .
.
Reply
#11
இங்கு ராஜா, லக்கி இருவருக்கும் நான் சொல்லிக் கொள்வது.... இந்தியாவையோ இல்லை அதன் அரசியலையோ விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது... அதோடு இந்திய கிரிக்கட் அணிக்கு ஆதரவு அளிக்கவும் எனக்கு உரிமை உண்டு. எனது நண்பர்கள் பலர் இந்தியர்கள். அவர்களை நண்பர்களாய் வைத்திர்க்கவும் உரிமை உள்ளது. அவர்களோடு மட்டும் இண்றி களத்திலும். எனது கருத்துக்களை. இந்திய அரசியல் பிழைகளைச் சுட்டிக்காட்டி வாதாடுவேன்...

எதிர்த்து சொல்லலாம்..... ஆனால் தடுக்க எந்த உரிமையும் எவருக்கும் கிடையாது என்பதை அறியத்தருகிறேன்....!

நண்றி வணக்கம்...! 8) 8) 8)
::
Reply
#12
என் ஈழ ஆதரவு நிலைபாடு இந்த களத்துக்கு வந்தபின் சில வாய்க்கொழுப்பெடுத்தவர்களால் குறைந்திருப்பது உண்மை... நான் எந்த அளவு ஈழத்தமிழர் ஆதரவாளன் என்பது ஆருரானுக்கு தெரியும்..... இப்போது என் நிலை என்னவென்றால்.... இவர்கள் என் தாய்நாட்டுக்கு எதிராக இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது தான்....

காலமெல்லாம் ஈழத்தமிழருக்காக இந்தியாவில் பல போராட்டங்களை நடத்தி ஆட்சி இழந்த தலைவனையே குள்ளநரி என்று விமர்சிக்கும் நன்றி கெட்டவர்களுக்கு நாம் ஏன் இன்னமும் ஆதரவு தரவேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது....
,
......
Reply
#13
<b>நித்திலா எழுதியது:</b>
வசம்பண்ணா நீங்கு என்ன உத்தியோகம் பாக்கிறீங்க எண்டு எனக்கு தெரியாது எனக்கு தெரிஞ்சு எந்த இலங்கையரும் டொக்டருக்கு படிச்சுட்டு இங்க பிளேட் கழுவயில்லை கோயில்ல சாப்பாட்டுக்கு நிக்கவில்லை(இnதையெல்லாம் பகிடி பண்ணுவதற்காக எழுதவில்லை இங்கு ஏதொ தாங்கள் பெரிய முன்னேறிய நாட்டவர் எண்டு பேசுபவர்களுக்கு எழுதப்பட்டது)

அதே போல தங்கள்வேற நாட்டவர் எண்டு பொய் சொல்லி அகதி அந்தஸ்து கேட்கவில்லை

இல்லை கேக்கிறன் எனறு குறை நினைக்காதீங்க நீங்கள் ஒரு ஈழத்தவரா இல்லை எமது நாட்டை எமது மக்களை எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்களக்கு ஆதரவாக மடடுமெ கருத்து எழுதுறதென்ட பிடிவாதத்தோட இருக்கிறீங்க அது தான் கேட்கிறன்.

<b>நித்திலா</b>

உங்கள் கருத்துக்களைப் பார்த்து உண்மையில் நீங்கள் லா தான் செய்கின்றீர்களோ என்ற சந்தேகம் எனக்குப் பல தடவைகள் ஏற்பட்டதுண்டு. ஆனாலும் கள நாகரீகம் கருதி அதை நான் கேட்க முன்வரவில்லை. இப்போது நீங்கள் கேட்டதால் நான் குறிப்பிடுகின்றேன். ஆரம்பத்தில் நானும் இங்கே கழுவித்தான் பின்பு படிப்படியாக உயர்ந்து இப்போது ஒரு தொழிற்சாலையில் ஒரு குழுவிற்கு தலைவனாக நல்லதொரு நிலையில் இருக்கின்றேன்.

மேலும் உங்கு வைத்தியத்துறையில் படிக்கும் போது பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டு தான் படிக்கின்றார்கள். அப்போது எப்படியான வேலைகள் செய்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கோயில்ல சாப்பாட்டுக்கு நிக்கவில்லை என்று எழுதியுள்ளீர்கள். நான் பல தடவை பிரித்தானியா வந்து போயுள்ளேன். நீங்கள் உங்கு கோவில்களுக்கு உண்மையில் சென்றுள்ளீர்களா??
உண்மைதான் நித்திலா நீங்கள் சொல்வது போல் நாம் எல்லோரும் இங்கு உண்மைகளைச் சொல்லித் தானே அகதி அந்தஸ்து பெற்றுள்ளோம். இவைற்றையெல்லாம் இந்த வருட சிறந்த நகைச்சுவையாக எடுக்கவா??

மற்றது எனது மூதாதையர் எல்லாம் இலங்கைப் பிரசைகள். அது போல் நானும் இலங்கைப் பிரசையென்றே எனது பிறப்ப அத்தாட்சிப் பத்திரத்திலுள்ளது. இதைவிட வேறு யாரிடமாவது ஏதாவது அத்தாட்சிப் பத்திரம் பெற வேண்டுமா என்ன??

ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் எமது கொள்கையில் திடமான நம்பிக்கையும் பிடிப்புமிருந்தால் எவரும் எம்மைக் கொச்சைப் படுத்திவிட முடியாது.

<b>தல எழுதியது:</b>

இங்கு எனது கேள்வி என்ன எண்றால்... சிறுவயதுமுதல் இந்திய அணிக்கு ஆதவு தரும் ஈழதவனில் நானும் ஒருவன்... 96ம் ஆண்டின் உலககோப்பையில் "கொல்கத்தாவில்" இந்திய இலங்கை அணிவிளையாடும் போது இலங்கை தோற்பதை பார்ப்பதற்காக "சோலோபவர்" கலங்கள் மூலம் 12ஏ லொறி பற்றரிவாங்கி சார்ச் ஏத்தி கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சியில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.... அந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் இந்தியா தோற்றதாய் அறிவிக்கப்பட்டு வினோத் கம்பிளி அழுதபடி வெளியேறியதை சோகமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்... ஆதலால் கேக்கிறேன்....!

எனக்கு என்ன சொல்லவருகிறார் ராஜாதிராஜா... ???? இந்தியாவுக்கு ஆதரவளிப்பது குற்றமா....??? அப்படிச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது....???

பதில் வசம்பரிடம் இருந்தும் வரலாம்...!

<b>தல</b>

இதற்கு ஏன் நீங்கள் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி காலத்திற்கு சென்றீர்கள். சமீபத்திலும் கொல்கொத்தாவில் கங்குலிக்கு ஆதரவாக அங்கு கலகம் நடந்ததே.

உங்களுக்கு ஞாபகம் இருக்குமென்று நம்புகின்றேன் முன்பு யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கான உதைபந்தாட்ட போட்டி யாழ் முற்றவெளியில் நடை பெறும். அப்போது இறுதிப் போட்டியின் போது அங்கு நடைபெறாத கலவரமா?? இவை எல்லாம் இரசிகர்களின் அதீத பற்றால் ஏற்படுபவை.

ஆனால் இங்கு நித்திலா என்ன இந்தியாவிற்கு ஆதரவான கருத்தா எழுதியுள்ளா??
<i><b> </b>


</i>
Reply
#14
Niththila Wrote:தமிழ்நாட்டு தமிழர்மீது எங்களுக்க பாசம் இல்லை எண்டு கேக்கிறீங்க இந்திய அணிக்கு சப்போட எண்டா மட்டும்தானா தமிழக தமிழர் மீது பாசம் எண்டு அர்த்தமா ராஜா :roll:

இந்திய அணியில தமிழர்இருக்கினமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்க தெரியாது சடகோபன் ரமேசுக்கு பிறகு எந்த தமிழரையும் தனது அணியில சேர்க்காத இந்திய அணிக்கு சப்போட் பண்ணித்தான் எங்கட பாசத்தை நிருபிக்க வேண்டும் எண்டு இல்லையே

உங்கட கருத்துப்படி எல்லா இந்தியரும் இந்திய அணிக்கா சப்போட் பண்றாங்க :roll: :roll:


ஏன் சமிபத்தில் பாலாஜி விளையாண்டாரே !! பின் காயம் காரணமாக தற்போது விளக்கி வைக்க பட்டுள்ளார்.

நீங்கள் பல பேர் தமிழ்கம் பால் அன்பிரிந்தும் இந்தியா மேல் பயங்கர வெறுப்பு கொண்டு இருக்கிரீர்.காரணம் என்னகும் தெரியும்..ஆனால் தமிழ் நாட்டு தமிழ்னும் இந்தியன் தானே !! இந்தியாவை விம்ர்சிப்பது எங்களியும் விமர்சிப்பது தானே !! உங்களில் பல பேர் தமிழ்க செய்திகளி தினம் தோறும் இணய தளங்கள் வழியாக படித்து வருவது எனக்கு மிகவும் மகிச்சி அளிக்கிறது.
.
.
Reply
#15
காவடி Wrote:ஈழத்தில இருந்து வந்த ஒருத்தர் கூடவா தங்களுக்கு விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று கேட்டு அசைலம் அடிக்கவில்லை. இன்று விடுதலைப் புலிகளுக்கு மழு உதவி செய்கின்ற 1000 பேரில் ஒரு 5 பேராவது தங்களுக்கு புலிகளால் ஆபத்து என்று சொல்லி அசைலம் அடிச்சவையாக இருக்கலாம். அதுக்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழ் இனத்தையெ அப்பிடி சொல்ல முடியுமோ? யோசித்து பாரும்..

அண்ணா அப்படி சொன்னவர்களிற்கு, அப்படி அசைலம் கேட்பவர்களுக்கு இங்கிலாந்து அரசின் பதில் எப்படி இருந்தது எண்றால்.... உங்களிற்க்கு பாதுகாப்பு தரவேண்டியது உங்கள் நாட்டின் அரசின் கடமை எங்களது அல்ல எண்று விண்ணப்பம் நிராகரிக்கப்படும்...!
::
Reply
#16
ம்.. நல்லது ராஜா.. நடந்து முடிந்த இருபகுதியினருக்குமேயான கசப்பான சம்பவங்களால்தான் ஈழத்திற்கான ஆதரவு கொடுக்க முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாதே.. அப்படியானால் இன்று யப்பானும் அமெரிக்காவும் எதிரிகளாகவே இருந்திருக்க வேண்டும்.. ஜேர்மனியும் பிரான்சும் இன்ன பிற நாடுகளும் எதிரிகளாக இருந்திருக்க வேண்டும்..

ஆனால்.. ஈழம் அமைவதை இந்தியா விரும்பாமைக்கு இருக்கின்ற காரணம் அதுவாக நான் நினைக்கவில்லை. ஒன்று தனக்கருகில் இன்னொரு நாடு உருவாவதை இந்தியா ஏனோ விரும்பவில்லை.. அது ஏன்..?

அடுத்தது(தயவு செய்து இந்தக் கேள்விக்கு கேலியாக பதிலளிக்க வேண்டாம். ஏனெனில் இதுவும் ஆராயப்பட கூடிய விடயம் தான்..) தனக்கருகில் பலம் பொருந்திய ஒரு அமைப்பு இருப்பதை இந்தியா விரும்பவில்லையா?

அகண்ட ஈழம் என்று ஏதோ சொல்கிறார்களே..(அதுதான் தமிழ் ஈழத்தையும் தமிழகத்தையும் இணைத்து) விடுதலைப்புலிகளின் தலைவர் கனவில் கூட கண்டிராத அந்த அகண்ட ஈழத்தை புலிகள் கோருவார்கள் என்ற புனைகதையை இந்தியா நம்பகிறதா?

தயவு செய்து இந்தியராக பதில் சொல்லுங்கள்.. இறுதியாக யொசித்து பாருங்கள்.. பக்கத்தில் அவ்வப்போது சண்டை பிடிக்கின்ற பாகிஸ்தானுக்கே அவ்வப்போது சென்று கை குலுக்குகின்ற இந்தியா இன்னமும் புலிகளுடனான முறுகல் நிலைக்கு பழைய காரணங்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?
, ...
Reply
#17
Vasampu Wrote:<b>தல</b>

இதற்கு ஏன் நீங்கள் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி காலத்திற்கு சென்றீர்கள். சமீபத்திலும் கொல்கொத்தாவில் கங்குலிக்கு ஆதரவாக அங்கு கலகம் நடந்ததே.

உங்களுக்கு ஞாபகம் இருக்குமென்று நம்புகின்றேன் முன்பு யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கான உதைபந்தாட்ட போட்டி யாழ் முற்றவெளியில் நடை பெறும். அப்போது இறுதிப் போட்டியின் போது அங்கு நடைபெறாத கலவரமா?? இவை எல்லாம் இரசிகர்களின் அதீத பற்றால் ஏற்படுபவை.

ஆனால் இங்கு நித்திலா என்ன இந்தியாவிற்கு ஆதரவான கருத்தா எழுதியுள்ளா??

1996 ல் யாழ்ப்பாணத்தில் மின்சார வசதி இருக்கவில்லை ஆதலால்த்தான் கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சி,12 v பற்றறியோடு, நான் சொல்லவந்த நிகள்வு கலவரம் அல்ல. இந்தியா தோற்றுப் போன கவலை...!
::
Reply
#18
இந்தியா ஈழம் அமைவதை விரும்பவில்லை என்று இதுவரை அறிவித்துள்ளதா? காவடி இதற்கு பதில் சொல்லுங்கள்.....
,
......
Reply
#19
காவடி Wrote:தயவு செய்து இந்தியராக பதில் சொல்லுங்கள்.. இறுதியாக யொசித்து பாருங்கள்.. பக்கத்தில் அவ்வப்போது சண்டை பிடிக்கின்ற பாகிஸ்தானுக்கே அவ்வப்போது சென்று கை குலுக்குகின்ற இந்தியா இன்னமும் புலிகளுடனான முறுகல் நிலைக்கு பழைய காரணங்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?

பாகிஸ்தான் பல விஷயங்களில் எங்களுக்கு எதிராக இருந்தாலும், உலகால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் அங்கு இருக்கிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.....

இலங்கையைப் பொறுத்தவரை இன்று வரை இலங்கைக்கு ஒரு அரசு உண்டு.... இந்தியா அந்த அரசுத் தரப்பு அதிகாரிகளோடு தான் எந்த பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ள முடியும்....

புலிகளுக்கு ஏன் இந்திய அரசு ஆதரவளிக்கவில்லை என கேட்காதீர்கள்.....

அரசு என்பது வேறு..... அரசியல் என்பது வேறு.... இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.......
,
......
Reply
#20
காவடி Wrote:அடுத்தது(தயவு செய்து இந்தக் கேள்விக்கு கேலியாக பதிலளிக்க வேண்டாம். ஏனெனில் இதுவும் ஆராயப்பட கூடிய விடயம் தான்..) தனக்கருகில் பலம் பொருந்திய ஒரு அமைப்பு இருப்பதை இந்தியா விரும்பவில்லையா?

இது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)