Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!!
#81
<b>கதிர்காமர் கொலையில் சதித்திட்டம் தீட்டிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் கூறுகிறது</b>

இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமரின் படுகொலை குறித்த புலன்விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சதித்திட்டம் தீட்டியவர்களில் இருவர் தற்போது கைதாகி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ கூறியிருக்கிறார்.

இந்தக் கொலைக்கு விடுதலைப்புலிகள் பொறுப்பு என்று இலங்கை அரசு குற்றம் சாட்டிவருகிறது, ஆனால் புலிகள் தரப்பு இதை மறுத்து வருகிறது.

பிபிசியிடம் கருத்து வெளியிட்ட பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்னாண்டோ, அமைச்சர் கதிர்காமர் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

கொலைக்கான சதித்திட்டத்தை தீட்டியவர்களில் இருவர் தாங்கள் என்று கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிசாரின் விசாரணைகளின்போது தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு சென்று அங்கு படுகொலை குறித்த விவாதங்களை நடத்திவிட்டு பின்னர் கொழும்பு திரும்பிதான் திட்டத்தை செயல்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டவர்கள் கூறியிருப்பதாக பெர்னாண்டோ கூறினார்.

படுகொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மறைத்துவைக்க கொலையாளிகள் பயன்படுத்திய அட்டைப் பெட்டிகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன என்பது பற்றியும் பொலிசாருக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொலையைச் செய்தவர்கள் குறித்து இப்போதைக்கு தன்னால் எதுவும் கூறமுடியாது என்றும் அவர் கூறினார்.

BBC tamil
Reply
#82
ரணில் இந்தியாவுக்கு ஓடிப்போனார் கதிர்காமரின் இறுதிக்கிரியை மலர்வளயம் வாடமுதல்.

பின்னால ஓடினார் அனுரா.

தம்பிக்கு இந்தியாவில உபசரிப்புச்சரியில்லை போல கிடக்கு அதுதான் அக்கா சீனாவுக்கு போறவோ?

இதுக்குள்ள இந்துவின் ராம் சமாதன பேச்சால் தான் தீர்கவிருப்பம் எண்டாலும் இராணுவரீதியில் தான் தீரும் என சாத்திரம் கூறுறார்.

புலிகள் இராணுவரீதியில் இராஜதந்திரரீதியில் பலமாக இருக்கும் போது தீர்வு ஒன்றை தமிழர் மீது சமாதானப் பேச்சு என்று சுத்துமாத்துப்பண்ணி திணிக்கமுடியாது என்று கவலைப்படுறார் போலகிடக்கு.

காதிர்காமருக்கு பின்னர் புத்தசாலி அரசியல் சாவதேச அளவில் நடத்துகூடியவர் ரணில் ஒருவரே. வெளியில் சமாதான வேடம் போட்டுக்கொண்டு சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் பின்னக்கூடிய புத்திசாலி இவருக்குத்தான் இருக்கு. இனவாதம் பேசாமல் காரியத்தை கச்சிதமாக முடிக்க நினைப்பவர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்தது மாதனமுத்தா அரசியல் என்று பிராந்திய ஏகாதிபத்தியம் உணர்ந்துள்ளதா?

மாதனமுத்தாக்களை வைத்து போர் ஒன்றை ஆரம்பித்து சர்வதேசமயப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தம் பேச்சுவார்தை முயற்சியை முடிவுக்கு கொண்டுவர முயலுமா? போர்ச்சூழலில் சமாதான தேவனிற்கு வெற்றிவாய்ப்பு அதிகம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)