Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேய் கதை சொல்லுங்கோ
#81
எனது நண்பர் ஒருவர் வெளிநாட்டிலே வசித்துவருகிறார். அவருக்கு இரவு வேலைதான். வேலை 10 மணிவரை என்றாலும் சில நாட்களில் ஒவர்டைம் 2 மணிகொடுப்பார்களாம் அப்படியான நாட்களில் வீட்டிக்கு வர இரவு ஒருமாணியாகிவிடுமாம். ஒருதடவை இரவு கூட வேலைசெய்யும் நண்பரை இரவு வீட்டில்விட்டுவிட்டு வந்துள்ளார். ஒரு இடத்தில் ஒரு வயதானவர் காரை மறித்து ஏறியுள்ளார். அவர் இறங்க வேண்டும் என்று சொன்ன இடத்தில் காரை நிறுத்தித்திரும்பிப்பார்த்த போது அந்த வயதானவரை இருக்கையில் காணவில்லையாம். வீட்டிற்குச்சென்று கூடவேலைசெய்யும் நண்பருக்கு போன் செய்து சொன்னபோது அவர் வந்த வழியைக்கேட்டுவிட்டுச்சொன்னாராம் நீ இடுகாடு ஒன்றிற்குப்பின் தான் அந்த நபரை ஏற்றியுள்ளாய் என்று. இதுபோல இலங்கையில் கண்டி றோட்டில்; டக்ஸிக்காரர்களை ஒரு பேய் தொந்தரவு செய்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.
Reply
#82
<img src='http://en.wikipedia.org/wiki/Image:Ghostly_monk.jpg' border='0' alt='user posted image'>

இது எனக்குத்தெரிந்த நண்பர்களுக்கு நடந்தது. அவர்கள் இங்கு (அவுஸ்திரேலியா) ஒரு கடையில் வேலைசெய்கின்றார்கள். அதன் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்து வந்தார்கள். சில நாட்களாக அவர்கள் இரவில் நித்திரை கொள்ள முடியவில்லை. இரவு சுமார் இரண்டுமணியளவில் ஏதோ ஒன்று அவர்களை வந்து பிடித்து அமத்துமாம். இரண்டு நண்பர்களையும் அது விட்டு வைக்கவில்லை. சில சமயங்களில் நெஞ்சில் ஏறி அமர்ந்தும் விடுமாம். மீண்டும் தூங்கினால் மீண்டும் வந்து தொந்தரவு செய்யுமாம். தொடர்ந்து சில நாட்கள் தூக்கம் இல்லாது அவர்கள் அவதிப்பட்டனர். இரவில் விளக்கு ஏற்றி தேவாரம் பாடிவிட்டு படுத்தாலும் அந்தப்பேய்கள் வந்து தொந்தரவு கொடுக்குமாம். இப்போது அவர்கள் வேறு வீடு எடுத்து சென்றுவிட்டார்கள். இப்போது நிம்மதியாக இருக்கின்றார்கள். வெளியே எங்கும் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினால் கைகால் அலம்பி விளக்கு வைத்து வணங்கினால் இந்தப்பிரச்சனை வராது.
Reply
#83
:roll: :roll:
Reply
#84
ஐயோ பயமாக இருக்கு நித்திரையில் இந்தப்படம் தான் வரும் :evil: :roll:

Reply
#85
aathipan Wrote:<img src='http://en.wikipedia.org/wiki/Image:Ghostly_monk.jpg' border='0' alt='user posted image'>

இது எனக்குத்தெரிந்த நண்பர்களுக்கு நடந்தது. அவர்கள் இங்கு (அவுஸ்திரேலியா) ஒரு கடையில் வேலைசெய்கின்றார்கள். அதன் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்து வந்தார்கள். சில நாட்களாக அவர்கள் இரவில் நித்திரை கொள்ள முடியவில்லை. இரவு சுமார் இரண்டுமணியளவில் ஏதோ ஒன்று அவர்களை வந்து பிடித்து அமத்துமாம். இரண்டு நண்பர்களையும் அது விட்டு வைக்கவில்லை. சில சமயங்களில் நெஞ்சில் ஏறி அமர்ந்தும் விடுமாம். மீண்டும் தூங்கினால் மீண்டும் வந்து தொந்தரவு செய்யுமாம். தொடர்ந்து சில நாட்கள் தூக்கம் இல்லாது அவர்கள் அவதிப்பட்டனர். இரவில் விளக்கு ஏற்றி தேவாரம் பாடிவிட்டு படுத்தாலும் அந்தப்பேய்கள் வந்து தொந்தரவு கொடுக்குமாம். இப்போது அவர்கள் வேறு வீடு எடுத்து சென்றுவிட்டார்கள். இப்போது நிம்மதியாக இருக்கின்றார்கள். வெளியே எங்கும் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினால் கைகால் அலம்பி விளக்கு வைத்து வணங்கினால் இந்தப்பிரச்சனை வராது.


அப்ப அவுஸ்ரேலியாவில் வெள்ளைப் பேய்களா இருக்கும்?

Reply
#86
இது ஒரு உண்மைச் சம்பவம்...

நாங்கள் சிறு வயதில் பொழுதுபட்டால் காணும் பிறகு யாரவது ஒருவர் வேணும் துனைக்கு வீட்டிற்கு இருப்பதென்றாலும்... வெள்ளையாக நாய் ஒடினாலும் அப்ப எங்க கண்ணுக்கு அது பேய் தான்... காத்துக்கு வெள்ளைப்பேப்பரும் பறக்க கூடாது...பேய் என்றால் வெள்ளைச் சீலை உடுத்திருக்கும் தலை விரித்திருக்கும் இது தான் அடையாளங்கள்...
சம்பவத்திற்கு வருகின்றேன்...
ஒரு நாள் மாலை 6 மணி இருக்கும். எனது அண்ணா என்னை கொஞ்சம் தள்ளி இருக்கும் ஆசையம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.. அங்கு எனது அம்மாம்மா எல்லோரும் நின்றார்கள்.. கொஞ்ச நேரம் கழித்து (ஒரு 8 மணி இருக்கும்) அண்ணாவிடம் என்னை வீட்டில் கொண்டு போய் விடும்படியும் தாங்கள் லேட்டாகும் வீட்டிற்கு வர என்று எனது அம்மாம்மா அண்ணாவிடம் கூறினார்... எனது அண்ணாவிற்கு பேய் என்றால் என்னை விட பயம். அவர் என்னை ஒரு சிறு தூரம் கூட்டி வந்திட்டு ஒக்கேய் நான் பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.. நீ ஒடு என்றார்... எனக்கு பயம் தான்.. ஆனால் என்ன செய்வது..
கடவுளே கடவுளே என்று கொண்டு போனேன். அப்போ அதில் ஒரு சிறிய வேப்பம் மரம். அதைக்கண்டவுடன் எனக்கு இன்னும் பயம்... அப்போது பார்த்து ஒரு பெண் வெள்ளை சேலையுடன் எனக்கு பக்கத்தில் நிற்பாதக உணர்ந்தேன்... அப்போது பயத்தில் கத்த தொடங்கினேன்.. அப்போ என்னவோ பச்சையாய் பறப்பதாய் உணர்ந்தேன். என்ன அதியசயம் அந்த வேப்ப மரத்திற்கு பக்கத்து வீட்டுக்காரருக்கு நான் கத்திய சத்தம் கேட்கலை.... ஆனால் வீட்டிலிருந்த அப்பா எனது சத்தத்தை கேட்டு ஒடிவந்திட்டார். அதற்கு பிறகு 1 மாதமாக ஓரே காய்ச்சல்...
பின்னார் பக்கத்து வீட்டுக்காரர் அது உனது அம்மா தான் உன்னை பார்க்க வந்திருக்கிறா என்று கதை வேறு

Reply
#87
உண்மைதான் வெள்ளைப்பேய்கள் எமது தேவாரங்களுக்கு அடங்குவதில்லை. அதற்கு நாம் படுக்கச்செல்லும் முன் தலையணையில் சிலுவை வரையவேண்டும்.
Reply
#88
aathipan Wrote:<img src='http://en.wikipedia.org/wiki/Image:Ghostly_monk.jpg' border='0' alt='user posted image'>

இது எனக்குத்தெரிந்த நண்பர்களுக்கு நடந்தது. அவர்கள் இங்கு (அவுஸ்திரேலியா) ஒரு கடையில் வேலைசெய்கின்றார்கள். அதன் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்து வந்தார்கள். சில நாட்களாக அவர்கள் இரவில் நித்திரை கொள்ள முடியவில்லை. இரவு சுமார் இரண்டுமணியளவில் ஏதோ ஒன்று அவர்களை வந்து பிடித்து அமத்துமாம். இரண்டு நண்பர்களையும் அது விட்டு வைக்கவில்லை. சில சமயங்களில் நெஞ்சில் ஏறி அமர்ந்தும் விடுமாம். மீண்டும் தூங்கினால் மீண்டும் வந்து தொந்தரவு செய்யுமாம். தொடர்ந்து சில நாட்கள் தூக்கம் இல்லாது அவர்கள் அவதிப்பட்டனர். இரவில் விளக்கு ஏற்றி தேவாரம் பாடிவிட்டு படுத்தாலும் அந்தப்பேய்கள் வந்து தொந்தரவு கொடுக்குமாம். இப்போது அவர்கள் வேறு வீடு எடுத்து சென்றுவிட்டார்கள். இப்போது நிம்மதியாக இருக்கின்றார்கள். வெளியே எங்கும் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினால் கைகால் அலம்பி விளக்கு வைத்து வணங்கினால் இந்தப்பிரச்சனை வராது.

இதற்கு பெயர் அமுக்கினிப்பிசாசு, கத்த வேண்டும்போல் இருக்கும் ஆனால் சத்தம் வராது, எழும்ப வேனும்போல் இருக்கும் அனால் எழும்ப முடியாது மேலே ஏறி இருந்து அமுக்குவது போல் இருக்கும், எனக்கு பலமுறை வந்திருக்கிறது, இதற்கு காரனம் பேய் அல்ல மனம்தான்
விழித்து எழுதல் என்பது தனிய உடல்மட்டும் எழும் விடயமல்ல, விழித்தல் என்பது மனதும் உடலும் ஒரே நேரத்தில் எழுதல் ஆகும், ஏதாவது ஒண்று முன்னுக்கு பின் நடக்கும் போது இந்த பிரச்சனை நடக்கிறது, அனேகமாக உடல்தான் பிந்தி எழுகிறது, அமுக்கினிபிசாசுக்கும் இதுதான் காரணம், நாளைய தேவைக்காகவும் அவசரத்துக்காகவும் மனம் முதலில் விழித்து விடுகிறது தனக்கு தேவயான ஓய்வு கிடைக்காமையாலும், களைப்பாலும் உடல் எழ மறுக்கிறது,
அதனால்தான் கத்தநினைத்தாலும் சத்தம் வருவதில்லை எழும்ப நினைத்தாலும் எழும்ப முடிவதில்லை, மேலே யாரோ எறி எழும்பவிடாது தடுக்கிறமாதிரி இருக்கும், அந்தநேரத்தில் மனம் விழித்து விட்டது உடல் விழிக்கவில்லை என்ற எண்ணத்தை கொண்டுவாருங்கள், மனம் அமைதி அடந்துவிடும் , முடியாவிட்டால் நடப்பது நடக்கட்டும் என்று சிறுது நேரம் படுத்திருங்கள், உடலும் உள்ளமும் சமன்பட்டு சாதாரன விழிப்பு ஏற்படும். இதை பழக்கத்தில் கொண்டுவந்தால் அமுக்கினி ஓடியே ஓடிவிடும்.
காற்றோட்டமான படுக்கை வசதியும் முக்கியம்.
.

.
Reply
#89
[size=13]எனக்கும் இப்படி நடந்தது ஒரு முறை.. ஆனால் நான்
பேய் என்று நினைக்கவில்லை. ஏதோ கனவு என்றுதான்
எண்ணினேன். :roll:
Reply
#90
ஓ அப்ப நிறையப்பேரை இந்த அமுக்கினிப்பிசாசு பிடிச்சு இருக்கு. எனக்கும் வந்திருக்கு.ஆனால் வருடத்தில் ஒரிரண்டு தடவைதான்.

எனது அண்ணாவிற்கு முன்பு இருந்த வீட்டில் அடிக்கடி வருமாம். இப்போது காத்தோட்டமான அறையோ என்னவோ அந்தத்தொந்தரவு இல்லை.

குறிப்பிட்ட எனது நண்பர்களுக்கு தினமும் இது நடப்பதால்தான் அவர்கள் பேய் என்று சொல்கிறார்கள். இருவருக்கும் இது அடிக்கடி வந்துள்ளது.
Reply
#91
[quote=vasisutha][size=13]எனக்கும் இப்படி நடந்தது ஒரு முறை.. ஆனால் நான்
பேய் என்று நினைக்கவில்லை. ஏதோ கனவு என்றுதான்
எண்ணினேன்.

அது கனவும் இல்லைதம்பி
யார் எண்டு எனக்குத் தெரியும் சொல்லட்டே............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#92
aathipan Wrote:ஓ அப்ப நிறையப்பேரை இந்த அமுக்கினிப்பிசாசு பிடிச்சு இருக்கு. எனக்கும் வந்திருக்கு.ஆனால் வருடத்தில் ஒரிரண்டு தடவைதான்.

எனது அண்ணாவிற்கு முன்பு இருந்த வீட்டில் அடிக்கடி வருமாம். இப்போது காத்தோட்டமான அறையோ என்னவோ அந்தத்தொந்தரவு இல்லை.

குறிப்பிட்ட எனது நண்பர்களுக்கு தினமும் இது நடப்பதால்தான் அவர்கள் பேய் என்று சொல்கிறார்கள். இருவருக்கும் இது அடிக்கடி வந்துள்ளது.

இருவரும் இளைஞர்கள் வேலைக்கு போகின்றவர்கள், வேலைத்தளத்தில் தெரியும்தானே எத்தனை பிக்கல்பிடுங்கல் வேளைக்கு வேலைக்கு போகவேனும், பிந்தி எழுந்தால் வேலைத்தளத்தில் பிரச்சனை, போக்குவரத்தில் பிரச்சனை நமக்கு தேள்வைகள் அதிகம், நம்மை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் அதிகம், அவற்றை எல்லாம் சமாளிக்க வேலை முக்கியம் இந்த எண்ணமும், வேலை அலுப்பும் சேர்தால் அமுக்கினிவரும்தானே, ஒரு வேலை செய்யும் எமக்கே அமுக்கினி வருது, மூண்று வேலை செய்பவர்பாடு அமுக்கினியும்வந்து அமுக்கினியின் தாத்தாவும் வந்திருந்து அமுக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மாறிய வீடு காற்றோட்டமாக இருக்கும், வேலைத்தளத்துக்கு அருகில் இருக்கும், எல்லாத்துக்கும் மனம்தான் காரணம், அந்த வீட்டை விட்டு மாறியதே அவர்களுக்கு அமுக்கினியிடம் இருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்துவிடும், அவர்கட்கு அதுவே பெரிய ஆறுதல். :wink:
.

.
Reply
#93
பல ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகையில் படித்தது மனதிலே படிந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சுூரியன் மறைய காரிருள் கௌவிக்கொண்ட நேரம். மழையும் இலேசாகத் து}விக்கொண்டிருந்தது. மெதுவாக வந்துகொண்டிருந்த மோட்டார் வண்டியைக் கைகாட்டி மறித்தேன். என்னருகில் வந்தபோது மெதுவாக வந்த வண்டியில் ஏறி பின் ஆசனத்தில் உட்கார்ந்துவிட்டு சாரதியைப் பார்த்தேன் அங்கே சாரதியைக் காணவில்லை. இந்த நேரத்தில் பேயா? என்மனம் என்னையே கேள்வி கேட்டது. பயத்தினால் உடலெங்கும் ஒரே பதட்டம். பேச்சுக்கூட என்னால் பேசமுடியவில்லை. மெதுவாகச் சென்றுகொண்டிருந்த வண்டி எதிரே வந்துகொண்டிருந்த இன்னொரு வண்டியுடன் மோதப்போனபோது ஒரு கை மட்டும் உள்ளே வந்து "ஸ்ரியரிங்கைப்" பிடித்து வண்டியை நேராக்கியது. இதனைப் பார்த்ததும் இதயம் இன்னும் வேகமாக அடித்துக்கொண்டது. என்னால் உள்ளே இருக்க முடியவில்லை. எதுவித சத்தமும் செய்யாமல் மெதுவாக வண்டியின் கதவைத் திறந்துகொண்டு இறங்கி வண்டியின் பின்பக்கமாக ஓடினேன். அப்போதுதான் அந்தப் ~பேயை~க் கண்டேன். பழுதடைந்த தனது மோட்டார்வண்டியை மிகவும் சிரமப்பட்டபடி தனியொருவராக பின்னாலிருந்து தள்ளிக்கொண்டு சென்ற சாரதியைக் கண்டேன்.

Reply
#94
aathipan Wrote:எனது நண்பர் ஒருவர் வெளிநாட்டிலே வசித்துவருகிறார். அவருக்கு இரவு வேலைதான். வேலை 10 மணிவரை என்றாலும் சில நாட்களில் ஒவர்டைம் 2 மணிகொடுப்பார்களாம் அப்படியான நாட்களில் வீட்டிக்கு வர இரவு ஒருமாணியாகிவிடுமாம். ஒருதடவை இரவு கூட வேலைசெய்யும் நண்பரை இரவு வீட்டில்விட்டுவிட்டு வந்துள்ளார். ஒரு இடத்தில் ஒரு வயதானவர் காரை மறித்து ஏறியுள்ளார். அவர் இறங்க வேண்டும் என்று சொன்ன இடத்தில் காரை நிறுத்தித்திரும்பிப்பார்த்த போது அந்த வயதானவரை இருக்கையில் காணவில்லையாம். வீட்டிற்குச்சென்று கூடவேலைசெய்யும் நண்பருக்கு போன் செய்து சொன்னபோது அவர் வந்த வழியைக்கேட்டுவிட்டுச்சொன்னாராம் நீ இடுகாடு ஒன்றிற்குப்பின் தான் அந்த நபரை ஏற்றியுள்ளாய் என்று. இதுபோல இலங்கையில் கண்டி றோட்டில்; டக்ஸிக்காரர்களை ஒரு பேய் தொந்தரவு செய்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.


நான் ஒன்றரை வருடமாக வேலைவிட்டுவரும் போது இடுகாட்டிற்கு முன் நின்று தான் பேருந்து எடுக்கிறனான் அதுவும் இரவு 1 மணிக்கு சிலவேளை அந்த இடுகாட்டைச் சுற்றிக்கூட நடந்து போறனான் அப்பெல்லாம் எனக்குத் துணையா ஒண்டும் வரலையே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#95
Selvamuthu Wrote:பல ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகையில் படித்தது மனதிலே படிந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சுூரியன் மறைய காரிருள் கௌவிக்கொண்ட நேரம். மழையும் இலேசாகத் து}விக்கொண்டிருந்தது. மெதுவாக வந்துகொண்டிருந்த மோட்டார் வண்டியைக் கைகாட்டி மறித்தேன். என்னருகில் வந்தபோது மெதுவாக வந்த வண்டியில் ஏறி பின் ஆசனத்தில் உட்கார்ந்துவிட்டு சாரதியைப் பார்த்தேன் அங்கே சாரதியைக் காணவில்லை. இந்த நேரத்தில் பேயா? என்மனம் என்னையே கேள்வி கேட்டது. பயத்தினால் உடலெங்கும் ஒரே பதட்டம். பேச்சுக்கூட என்னால் பேசமுடியவில்லை. மெதுவாகச் சென்றுகொண்டிருந்த வண்டி எதிரே வந்துகொண்டிருந்த இன்னொரு வண்டியுடன் மோதப்போனபோது ஒரு கை மட்டும் உள்ளே வந்து "ஸ்ரியரிங்கைப்" பிடித்து வண்டியை நேராக்கியது. இதனைப் பார்த்ததும் இதயம் இன்னும் வேகமாக அடித்துக்கொண்டது. என்னால் உள்ளே இருக்க முடியவில்லை. எதுவித சத்தமும் செய்யாமல் மெதுவாக வண்டியின் கதவைத் திறந்துகொண்டு இறங்கி வண்டியின் பின்பக்கமாக ஓடினேன். அப்போதுதான் அந்தப் ~பேயை~க் கண்டேன். பழுதடைந்த தனது மோட்டார்வண்டியை மிகவும் சிரமப்பட்டபடி தனியொருவராக பின்னாலிருந்து தள்ளிக்கொண்டு சென்ற சாரதியைக் கண்டேன்.


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#96
டிஸ்கவரிச்சனலில் பேய்கள் பற்றிய ஒரு செய்தித்திரைப்படத்தில் பார்த்ததாக ஒரு நண்பன் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது.

ஓரு சுற்றுலா பேருந்து ஒன்று இரவு ஆளில்லா புகையிரத வீதியைக்கடக்கையில் நின்றுவிட்டதாம். ஓட்டுனர் தவிர்ந்த பெரும்பாலானவர்கள் தூக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது.

அந்தச்சமயம் புகையிரதம் வேகமாக வந்துள்ளது. ஓட்டுனர் என்ன செய்வது என்று தெரியாது திகிலுற்று நின்ற வேளை அந்த பேருந்து மேதுவாக புகையிரத வீதியைக்கடந்து பாதுகாப்பான இடத்தில் நின்றதாம்.

அதன்பின் ஓட்டுனர் இறங்கி வண்டியை சரி செய்யது ஏற்பாடு செய்திருந்த விடுதிக்கு சென்றிருக்கிறார். மறுநாள் காலை விடுதியில் உள்ளவர்களுக்கு இரவு நடந்ததை கூறியுள்ளார். அப்போது விடுதியில் உள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள் இரண்டு வருடத்திற்கு முன் அதே புகையிரத சந்திப்பில் ஓரு பாடசாலை பேருந்து பழுதடைந்து நின்று அதில் வந்த குழந்தைகள் அனைவரும் இறந்து போனதாக.

அதன் பின் சுற்றிலாப்பேருந்தை சுத்தம் செய்ய ஓட்டுனர் சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்தின் பின் சின்னச்சின்ன கை அடையாளங்கள் இருந்திருக்கிறது. அவையனைத்தும் நின்று போன பேருந்தை தள்ளியபோது ஏற்படுட்ட கை அடையாளங்கள் போல தென்பட்டுள்ளது. அதன்பின்தான் விசாரித்ததில் தெரிந்தது அவர்களைக் காப்பாற்றியது இரண்டுவருடங்களுக்கு முன் இறந்த அந்தக் குழந்தைகள்தான் என. அவர்கள் குழந்தை தேவதைகளாக அங்கு இருப்பதாக அந்த ஊர் மக்கள் இப்போதும் நம்புகின்றனர்.
Reply
#97
சின்ன வயதில் எனது அம்மம்மா சில பேய்கதைகளை சொல்லி இருக்கிறார். அதையெல்லாம் கேட்டு நான் பெரிதாகப்பயந்ததில்லை. எனது வாழ்க்கையிலும் கதைகளில் வருவது போல் திகிலான சம்பவங்கள் நடக்கும் என நான் அப்போது நினைக்கவில்லை.

பல்கலைக்கழகப்படிப்பை முடித்து சில மாதங்களில் நான் குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளும் வேலையில் ஈடுபத்திருந்தேன். அப்போது தான் அந்தப்பயங்கர சம்பவங்கள் எனது வாழ்வில ஏற்பட்டது. முதல் முதல் அந்த வீட்டிற்கு சென்றபோது அந்த வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் அமைதியான பெரிய வீடு. விசாலமான அறைகள். உயரமான யன்னல்கள். குளிர்காலத்திலும் கொஞ்சம் கதகதப்பாக இருக்கும்.

நான் அங்கு பார்த்துக்கொள்ள வேண்டிய குழந்தைகள் இரண்டு. ஒன்று நான்கு மாதக்குழந்தை மற்றயைது. ஒன்றரைவயது. இரண்டும் பெண்குழந்தைகள். முதல் வாரம் எந்த தொந்தரவும் இருக்க வில்லை. எப்போதாவது நாய் வெறும் காற்றைப்பார்த்து குரைக்கும். அதையாரோ அதை பயமுறுத்துவபோலவும் ஆக்ரோசமாக குரைக்கும். ஆனால் அதை நான் பெரிதாக எடுக்கவில்லை.

சில வாரங்கள் கழித்து அந்தக் குழந்தைகளின் பெற்றோர் விடுமுறையைக்களிக்க அவர்களது தோட்ட வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து வீட்டையும் நாயையும் பார்த்துக்கொள்ளும் படி என்னைக்கேட்டுக்கொண்டார்கள். இலகுவாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆவலில் நான் அதற்கு ஒத்துக்கொண்டேன். நாயை என் வீட்டிற்கு அழைத்துச்சென்றுவிட்டேன். வாரத்தில் இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து கடிதங்களை எடுத்து ஓழுங்கு படுத்திவைத்து பின்பு நேரம் கிடைக்கும் போது நாயை நடப்பதற்கு அழைத்துச்செல்வேன்.

ஓருதடவை வழக்கம் போல எல்லாம் முடித்து சிறிது நேரம் தொலைக்காட்சி பார்க்க அமர்ந்தேன். நாய் வெளியே விளையாடச்சென்றுவிட்டது. திடீரென தொலைக்காட்சிப்பெட்டி தானாக நின்று போனது. மேலே இருந்த காற்றாடி சுற்றிக்கொண்டுதான் இருந்தது. முதலில் தொலைக்காட்சியில் ஏதும் பிழை என்றுதான் நினைத்தேன். அருகில் இருந்த ஒரு வார சஞ்சிகையை எடுத்து படிக்கத்தொடங்கினேன். ஆனால் எனக்குள் யாரோ என்னை பின்னால் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு. எனக்குப் பின்னால் படிக்கட்டுகள்தான் இருந்தன. அது இருளான பகுதியில் அமைந்திருந்தது. அதைப்பார்க்கவே ஏனோ பயமாக இருந்தது. சரி போய்விடலாம் என்று நான் முடிவெடுத்து எழுந்தபோது மேலே மாடியில் யாரோ துள்ளி விளையாடுவது போல ஓசை கேட்டது. அதன்பின் குழந்தை ஒன்று குதூகலித்துச்சிரிப்பது போலவும் ஏதேதோ சத்தங்கள்.

தொடரும்
Reply
#98
அப்போது நான் சிறுவனாக இருந்த காலம்... எமது வீட்டுக்கு பின்னால் ஒரு வெளி வளவு.. அதை அடுத்து இரு வீடுகள். இரண்டுக்கும் பொதுவான பாவனைக் கிணறு.

அப்போது நல்ல மாரி காலம். பாலு என்பவர் இரவு கொழும்பிலிருந்து வந்து, தனது வீட்டவர்கள் நித்திரையில் இருந்ததால், அடுத்த வீட்டுக்கு வந்து பொதுக் கிணற்றின் கட்டு வழியாக தனது வீட்டுக்கு செல்ல முற்படுகையில்.. கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இது மறுநாள்தான் ஏனையவர்களுக்குத் தெரியும்..

இது நடந்து சிலநாட்கள் கழிந்ததா? அன்று அதிகாலை 4 மணியளவில் அடை மழை. திடீரென 'ஆ.. ஊ..' என யாரோ அலறுவதுபோன்ற சத்தம் அந்தக் கிணற்றுப் பக்கமாக இருந்து கேட்டது.

நான் தூக்கத்திலிருந்து விழித்து, 'என்ன சத்தம்?' என்று அம்மாவைக் கேட்டேன். அவர் உடனே எழுந்து சென்று, விபூதியை எடுத்து வந்து, எனக்கும் பூசி, தனக்கும் பூசி.. 'அது அவச்சாவில போன பாலுவின் ஆவி கத்துது.. நீ படு' என்றார்.

இனிப் படுப்பதா.. தூக்கமா? அரைகுறையா படித்த தேவாரமெல்லாம் முழுசு முழுசா மனதுக்குள்ளே ராகமிசைத்தன.

பின் ஓருவாறாக நன்றாக விடிய சத்தம் நின்றுவிட்டது. அம்மாவோ வீதியால் போவோர் வருவோருக்கு அதிகாலை நடந்த விடயத்தை கூறுவதிலேயே பொழுது கரைந்துகொண்டிருந்தது.

அப்போது பகல் பதினொரு மணியிருக்கும்.. மீண்டும் பின் வளவிலிருந்து அதே சத்தம்.. பகலிலும் பேயா.. பகல் என்பதால் துணிவுடன் வேலியால் எட்டிப் பார்த்தோம்.

அங்கே, சொறி நாயொன்று 'ஆ.. ஊ..' என ஊளையிட்டுக் கொண்டிருந்தது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#99
பயத்தில் உடல் நடுங்க நான் கிறித்துவ இறைவன் துதியை உரக்கச்சொல்லியபடி கதவைக்கூட மூடாது வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டேன். அதன்பின் சிறிது நேரம் கழித்து அம்மாவைத்துணைக்கு அழைத்துக்கொண்டு மீண்டும் வந்தேன். அப்போது எந்த சத்தமும் இல்லை. எதுவும் நடைபெறாதது போல வீடு அமைதியாக மாறிவிட்டிருந்தது.

அதன்பின் இரண்டொரு நாளில் நான் நடந்த சம்பங்களை மறந்து எனது வேலையில் மூழ்கிவிட்டேன். ஒரு வாரம் கழித்து மீண்டும் வீட்டைச் சுத்தம் செய்ய அங்கே போகவேண்டியதாகிவிட்டது. அன்று வீட்டைச்சுற்றம் செய்து நாயை வெளியே விட்டு சிறிது நேரம் செய்தித்தாள் படிக்க அமர்ந்தேன். எங்கோ ஒரு புத்தகத்தில் பேய்களை எதிர்பார்த்துச்சென்றால் அவை எதிர்ப்படாது என படித்த ஞாபகம். அது உண்மையில்லை என தெரிந்தது. சிறிது நேரத்தின் பின் மீண்டும் முதல்த்தடவை கேட்டது போல கொக்கரித்துச் சிரிக்கும் சத்தம். இந்தத்தடவை மிகவும் பயந்துவிட்டேன் என்று சொல்லலாம்.
Reply
எனது தம்பியும், ஒன்றுவிட்ட தம்பியும் ஒருமுறை கோப்பாயிலே வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்க்கச் சென்றிருந்தார்கள். நாடகம் தொடங்கும் சமயம் பார்த்து இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை (பேய் மழை என்றும் இப்படியானவற்றைக் கூறுவார்கள்) ஆரம்பித்தது. நாடகத்தை மேடையேறுவதற்காகப் போடப்பட்டிருந்த தற்காலிக மேடை, அதன் சுற்றுப்புறங்கள் எங்கும் ஒரே வெள்ளம். சிறிது நேரத்தில் மேடையையும் காணவில்லை. நாடகம் நடிப்பதற்காக வேடமிட்டிருந்த கட்டபொம்மனும், எட்டப்பனும், வெள்ளையத்தேவனும் அந்த ஆடைகளுடனேயே வெளியே வந்து ஒன்றாக நின்றுகொண்டு மேடையைத் திருத்தியமைப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். அதனைப் பார்த்ததும் சகோதரர்களுக்கு நாடகம் பார்க்கும் ஆவல் மேலும் அதிகமாகிவிட்டது. தொடர்ந்தும் மழை பெய்துகொண்டே இருந்தது. பலவிதமான முயற்சிகளின் பின்னர் எதுவும் செய்ய முடியாத நிலையில் நாடக ஏற்பாட்டாளர்கள் "இன்று நாடகம் நடக்காது" என்று கவலையுடன் அறிவித்தனர்.

தம்பிமார் இருவருக்கும் அழுகையே வந்துவிட்டது. நாடகம் பார்க்கச் சென்றபோது பகல்வேளை ஆனால் இவையெல்லாம் நடந்து முடிய இரவு பதினென்றிற்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் சென்ற "சைக்கிளில்" ஒரு மணி (பெல்) மட்டும்தான் இருந்தது. "லைட்டும்" இல்லை, "பிறேக்கும்" இல்லை. குறுக்கு வழியெங்கும் வெள்ளம் அதிகமாக இருந்ததினால் நடுநிசியில் பிரதான பாதைவழியாகச் செல்வதென்று முடிவெடுத்தார்கள். கோப்பாயிலிருந்து உரும்பிராய்ச் சந்திக்கு வந்து, அங்கிருந்து பாலாலி வீதி வழியாக ஊரெளுவை நோக்கி உரும்பிராய் கற்பக விநாயகர் ஆலயத்தைக் கடந்து, அரிசி மிளகாய் அரைக்கும் ஆலை அருகில் வந்துகொண்டிருந்தனர். (இந்த ஆலையை "மில்" என்று ஆங்கிலத்தில்தான் அப்போதும் எல்லோரும் அழைப்பார்கள்)

எங்கும் பயங்கரமான இருள். கோப்பாய்க்கும் உரும்பிராய்க்கும் இடையே ஓர் பெரிய மயானம் இருக்கிறது. சிறுவர்கள் இருவருக்கும் அதனைத் தாண்டி வந்தபோது ஏற்பட்ட அச்சம் அவர்கள் மனங்களில் அப்படியே இருந்தது. அச்சத்தைப் போக்குவதற்காக இடையிடையே ஒருவர் ஏதாவது கேள்வி கேட்க மற்றவர் பதில் சொல்லியபடியே வந்துகொண்டிருந்தனர். துவிச்சக்கரவண்டியின் முன்னால் அமர்ந்த ஒன்றுவிட்ட தம்பி அதனை ஓட்டிக்கொண்டிருந்தவரை நோக்கி "இப்போது எவ்விடத்தில் இருக்கிறோம்" என்று கேட்டார். அதற்கு எனது தம்பி இடையிடையே எழுந்த மின்னல் வெளிச்சத்தில் நாலாபுறமும் பார்த்துவிட்டு "மில்லடி, மில்லடி" என்றார். அதாவது நாம் அந்த ஆலை அருகில் வந்துவிட்டோம் என்று பொருள்படும்படியாகக் கூறினான். திடீரென முன்னாலிருந்தவர் "சைக்கிளில்" பொருத்தியிருந்த மணியை இரு தடவைகள் ஒலிக்கச் செய்தார். வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த எனது தம்பிக்கு பயம் மேலும் அதிகமாகியது. தன் கண்களுக்குத் தெரியாதபடி யாரோ பாதையின் குறுக்கே சென்றிருக்கவேண்டும் அதுதான் அவன் மணியை அடித்திருக்கிறான் என்று தனக்குள் எண்ணினான். ஆனால் முன்னால் இருந்தவரோ தன் கண்களுக்குத் தெரியாதபடி யாரோ தமக்குக் குறுக்கே சென்றதை வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவர் கண்டிருக்கிறார். அது நிச்சயம் பேயாகத்தான் இருக்கவேண்டும் என்று தனக்குள் எண்ணினான். அடுத்த சில விநாடிகளுக்கு இருவரும் எதுவுமே பேசவில்லை. வண்டியை இறுக்கமாகப் பிடித்தபடியே சென்றுகொண்டிருந்தனர்.

மீண்டும் எனது தம்பி முன்னாலிருந்தவரிடம் மிகுந்த அச்சத்தோடு "நீ எதற்காக அங்கே "சைக்கிள்" மணியை அடித்தாய்?" என்று நடுங்கியபடியே கேட்டார். "நீ தானே "பெல்லடி, பெல்லடி" என்று இரு தடவைகள் கூறினாய்" என்று பதில் கூறினான். "நான் மில்லடி, மில்லடி என்றல்லவா கூறினேன்" என்று பதில் கூறினான் என் தம்பி. மீண்டும் சில விநாடிகள் இருவரும் எதுவும் பேசவில்லை. திடீரென்று இருவரும் ஒரே நேரத்தில் பெலத்துச் சிரித்தனர். "மில்லடி" என்ற சொல் அவன் காதில் "பெல் - அடி" (மணி - அடி) என்று மாறிக் கேட்டதன் வினையை இன்று நினைத்தாலும் ஒரே சிரிப்புத்தான்.

"இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்ய்ய்ய்!" அல்லவா?

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)