அண்மையில் கனடா விடுதலை புலிகளை பயங்கரவாத இயக்கப்பட்டியலில் சேர்த்திருக்கிறது. அது பற்றிய பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் பலராலும் முன்வைக்கப்பட்டிருக்கிறன. கனடாவின் தடை கண்டனதுக்குரியது என கூறுவோரும், அது பழமைவாத கட்சியின் நீண்டகால திட்டம் , அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அதை நடைமுறைபடுத்தினார்கள் என சொல்லி திருப்திபடுவோர் ஒருபக்கமும், தடை விடுதலை போரை பாதிக்காது, என்ன கனடாவை நம்பியா எமது விடுதலை போர் தொடங்கப்பட்டது என வசனம் பேசுவோரும் என பல கருத்துக்கள் பலவாறு வைக்கப்பட்டாலும், கனடா தடை செய்தது என்பது ஒருவகையில் எமக்கு இராஜதந்திர ரீதியில் நல்லதல்ல.
அதுகும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் சனத்தொகையை கொண்ட ஒரு நாட்டில் அம்முடிவு எடுக்கப்பட்டதென்பது வருத்ததிற்குரியது.
இன்று எமது போராட்டம் ஏதோ ஒருவகையில் சர்வதேசமயப்பட்டு விட்டது என்பது கள நிதர்சனம். அதை யாரும் மறுக்கமுடியாது.
தடை செய்யப்படுவதற்கு இலங்கை அரசின் பிரச்சாரம், மனித உரிமை அமைப்பின் அறிக்கை என நியாயபடுத்தமுனைந்தாலும், எம்பக்கத்திலும் சில தவறுகள் இருக்கத்தான் செய்திருக்கும், அதை நாம் சுயவிமர்சனதுக்கு உட்படுத்தி மறுசீரமைக்க வேண்டியது எமது கடமை. இது கனடாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் தமிழர் சார்பாக பொறுப்பில் இருக்கும் பலரும் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம். அதை சம்பந்தபட்டவர்கள் எதிர்காலத்தில் கவனத்தில் எடுபார்கள் என நம்புவோம்.
அடுத்ததாக எமது பிரச்சார யுத்திகள், ஊடகத்துக்கு எமது தகவல்களை எடுத்துசெல்வதில் இருக்கும் பலவீனமான நிலை, அவ்வவ்நட்டு நிர்வாகத்தினருக்கு எமது தரப்பு நியாயத்தையும், அவ்வபோது நடக்கும் அட்டூழியங்களை அவர்களின் கவனத்துக்கு எடுத்துசெல்வதிலும் கவனம் எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது.
அண்மையில் சில நாட்டு இளையோர் அமைப்புக்கள் அந்த பணியில் ஈடுபட்டாலும் இன்னும் வினைதிறனாக அரச ஊடக இயந்திரத்துக்கு சமனாக எமது பிரச்சாரம் முன்னெடுக்கப்பட் வேண்டியது அத்தியாவசியமானது.
இன்றைய பல்தேசிய ஊடக உலகில் ஈழத்தவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் அல்லது முற்றுமுழுதாகவே இல்லை எனும் நிலையே காணப்படுகிறது.
பலதேசிய ஊடகங்களில் பார்த்தீர்கள் என்றால் செய்தி வாசிப்பவர்களில் இருந்து செய்தியாளர்கள் வரை பல இந்தியர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.
செய்தியாளர்களின் செய்திவழங்கும் பாணியில் அச்செய்தி மக்களின் உணர்வுகளை சென்றடையும் தன்மை தங்கியுளது.
உதாரணமாக
அண்மையில் ஈழத்தில் நடக்கும் அண்மைய சம்வங்கள் தொடர்பில்
தமிழ் மொழி மூலஇணைய ஊடகங்களன
புதினம், பதிவு, சங்கதி, உதயன் , வீரகேசரி, தினக்குரல் என பலதிலும் ஒரே சம்பவம் தொடர்பில்
வரும் செய்திகள் ஒரே மாதிரியான உணர்வை வாசகர் மத்தியில் ஏற்படுத்துவதில்லை.
எம்மவர்கள் சர்வதேச ஊடகத்துறையில் நுளையும் போது வேற்று நாட்டவரின் செய்தி எழுதும் பாணிக்கும் எம்மவரின் பாணிக்கும் இடையில் பாரிய வேறுபாடு நிச்சயமாக இருக்கும்.
ஆனால் ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளிலும் ஈழப்பிரச்சனைக்கு முன்பே வேரூன்றிய எமது சமூகத்தில் இருந்து எவரும் ஊடகம் சார் பணியில் பெரிதாக நுளையவில்லை என்பதும், எமது சமூகம் தமது பாரம்பரிய சிந்தனையில் இருந்து விடுபடாது வைத்தியர், பொறியிலாளர், கணக்காளர் எனும் துறைகளிலே கவனத்தை செலுத்தியது என்பது நடைமுறை யதார்த்தம்.
இதில் இருந்து எதிர்காலத்திலாவது எதிர்கால சந்ததி விடுபட வேண்டும். எம்மவர்கள் பலரும் அது சார் துறைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக முன்னேற வேண்டும். இது உடனடி பலனை தராவிட்டாலும் எமது சமூகத்துக்கு நீண்டகால பலனை தரக்கூடியது.
யூதர்களால் அவர்களுக்கு சார்பான ஒரு ஊடக உலகை பல்தேசிய அளவில் வைத்திருக்க முடிகிறது இன்றும்.
எம்மால் அந்தளவுக்கு முடிகிறதோ இல்லையோ நாமும் அந்துறைக்குள் எம்மவர்களை கொண்டு செல்வதன் மூலம் சிறிதளவாவது எமக்கு சாதகமாக்கலாம். எமது இணையப்பக்கங்கள் பல ஆங்கிலம் மற்றும் தமிழிலேயே இருக்கிறது. அவை பல்வேறு ஐரோப்பிய மொழியிலும் உருவாக்கப்பட்டு எமது பிரச்சனைகளை, எமது போராட்டத்தின் நியாய தன்மையை அந்நாட்டு மக்களுக்கு எடுத்துகூற கூடியதாக இருக்க வேண்டும்.அது தற்போது முடியாத காரியமாக இருக்கமுடியாது ஏன் எனில எமது இளம் சந்தையினர், பலர் அவ்வவ்நாட்டு மொழி, தமிழில் தேர்ச்சி உடையவர்கள் இருக்கிறார்கள்.
எமது பிரச்சாரம், என்பது எமது ஈழத்தமிழ் மக்களை மாட்டும் கருத்தில் எடுக்காது அவ்வவ்நாட்டு மக்களையும் சென்றடைய கூடியதாக இருக்க வேண்டும்.
அதற்கு அடுத்ததாக பல நாடுகளிலும் இருக்கும் ஈழத்து கல்வியாளர்களையும், எமக்கு சார்பான அவ்வவ் நாட்டு கல்விமான்களையும் ஒன்றிணைத்து எமக்கு சார்பான பிரச்சாரத்தை மேற்கொள்வது நன்மை பயக்ககூடியது.
சிலர் சொல்லலாம், அவர்களாக உணர்ந்து அவ்வாறு செய்யலாம் தானே அவ்வாறு வராதவர்களை ஏன் கணக்கெடுக்க வேண்டும் என்று.
ஒரு கையின் ஐந்து விரல்களும் ஒரு மாதிரி இருப்பதில்லை.
ஈழத்தில் கூட போருக்கான படை திரட்டலில்
ஆரம்ப காலத்தில் தாமக இணைந்தவர்கள் பலர். பிற்பட்ட 90 களில் போரின் உக்கிரத்தை / அட்டூழியத்தை தாமாக உணர்ந்து இணைந்தவர்கள், தமது குடும்ப இழப்புக்கள் அதன் மூலமான ஒரு உணர்வால் இணைந்தவர்கள் என ஒரு சாராரும் இருக்கும் போது. இன்னொரு சாரார் பல்வேறு நேரங்களில் நடந்த பிரச்சார/ சமகால அரசியல் கருத்தரங்குகளில் கேட்டு அதன் பின்னர் இணைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் தாமாக இணைவார்கள் என்று காத்திருந்தால் போராட்டம் இந்தளவுக்கு வளர்ந்திருக்காது.
அவ்வாறு இருகும் போது புலம்பெயர்ந்து இருக்கும் கல்வியாளர்கள் அனைவரும் தம்பாட்டுக்கு வருவார்கள் என சொல்லமுடியாது. தாமாக இனையும் ஒரு சிலர் மூலமாக , அவர்களுடன் இணைப்பில் உள்ள பல்வேறு நபர்களையும் உள்வாங்க முயற்சிக்கலாம். அவ்வாறு முழுப்பேரும் இணைவார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் குறிபிட்ட ஒரு பகுதியினரைவது இணைத்து கொண்டு அவர்கள் மூலமாக எமது போராட்டதுக்கு வலுசேர்க்கும், சில நடவடிக்கைக்களமேற்கொள்ள முடியும் என நம்புகிறேன்.
2003 ம் ஆண்டு ஈழத்தில் வடகிழக்கிற்கான சூழலியல் முகாமைதுவம் சம்பந்தமான ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.
அது யாழ்பல்கலைகழகம், கிழக்குபலகலைகழகம், The economic consultancy house(TECH) எனும் கிளிநொச்சியை தலைமையகமாக கொண்ட அரச சாரா அமைப்பும் இணைந்து நடாத்தப்பட்டது.
http://www.esn.ac.lk/emnes2003/background.asp
அதற்கு ஜப்பான் நாட்டு பேராசிரியர் (ஜப்பானியர்) ஒருவர் விருந்தினராக கலந்துகொண்டார். அவரை விட பல நாடுகளையும் சேர்ந்த ஈழத்து புலமையாளர்களும் கலந்துகொண்டனர்.
இச்செயற்பாடு புலம்பெயர் புலமையாளர்களால் தாமாக முன்வந்து செய்யப்பட்ட ஒன்றல்ல என்றே நினைக்கிறேன். அதற்கான முன்முயற்சி ஈழத்தில் தான் எடுக்கப்பட்டது. பின்னர் பல நாட்டிலும் வசிக்கும் எம்மவர்கள் இணைந்துகொண்டார்கள்.
இதே பொன்றே எம் போராட்டதின நியாயம், சமகால அரசியல் பிரச்சனைகளை சர்வதேச சமூகத்துக்கு பல மொழிகளிலும் எடுத்து செல்ல, பல நாடுகளில வசிக்கும் இளையோரையும் புலமையாளர்களையும் இணைத்து வினைதிறனான முறையில் செயற்பட வேண்டும். அதற்கு முன்முயற்சிக்கள் எடுக்கப்பட்டு, அவை தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இதன் மூலமும், எம்மை சுய பரிசோதனைக்கு உட்படுதுவதன் மூலமும் வருங்காலதில் மேலும் பாதகமான முடிவுகள் வராமல் தடுக்கக்கூடியதாக இருக்கலாம்.
அதைவிடுத்து தொடர்ந்தும் இதற்கு அவர் காரணம்/ அவர்கள் காரணம் என வேறு நபர்கள்/ சமூகங்களில் மட்டும் காரணம் தேடி குற்றம் சுமத்துவதை விடுத்து நாம் வினைத்திறனாக செயற்பட வேண்டியது இன்றைய சூழலில் அவசியம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>