Posts: 37
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
அம்மா நளாயினி ஆத்துக்காரரையும் கொஞ்சம் கூப்பிடம்மா அட்டாங்கமாகவோ, பஞ்சாங்கமாகவோ உங்க இரண்டுபேரின்ரை காலிலையும் விழுந்து மன்னிப்புக் கேக்கிறன்.
இன்னும் புண்பட்ட மனங்களோட நிக்கிற எல்லாரையும் மனதாரக் கூப்பிடுறன் வாங்கோ உங்களையெல்லாம் நடுவாக நிக்க வச்சு சுற்றி அங்கப்பிரதஸ்டணம் பண்ணி மன்னிப்புக் கேக்கிறன்.
தப்பெண்டு நினைச்சால் தப்புத்தான் ஒத்துக்கொள்ளுறதிலை வெக்கப்பட என்ன கிடக்கு. அஜீவன் தவறைச் சுட்டிக்காட்டியதுக்கு நன்றியப்பு. களம் கொஞ்சம் சு10டாகிறமாதிரித் தெரிஞ்சுது அதுதான் கலகலப்பாக்குவம் என நினைச்சு எழுதிப்போட்டன். எழுத்திலை ஒரு தரமிருக்க வேணும்தானே புரிஞ்சுகொண்டன். எல்லாருமாச் சேர்ந்து அடியேனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேணுமோ யோசிச்சுச் சொல்லுங்கோ. செய்யக்காத்திருக்கிறன். பாவம் வயசான காலத்திலை 1008 தோப்புக்கரணம் போடு என்றுமட்டும் சொல்லிப்போடாதையுங்கோ மூட்டுவேதனையாலை கஸ்டப்படுகிற என்னாலை அதைமட்டும் செய்ய ஏலாது. நானே வேணுமெண்டால் சுயதீர்பாக 2 வாரத்துக்கு களமாடாமல் இருக்கிறன்.
என்ன புண்பட்ட மனசுகளுக்கு கொஞ்சமாவது திருப்தியோ? அப்பிடியெண்டால் எல்லாரும் சேர்ந்து சந்தோசமா வாய்விட்டுச் சிரியுங்கோ பாப்பம். கிழவன் நிம்மதியா அடுத்த அலுவலைப் பார்க்கப்போகலாம்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:22pt;line-height:100%'>அம்பலத்து அங்கள்,
உங்கட சொல்லு கேட்டு,மனசு சங்கடமா இருக்கு. இருந்தாலும் கொதித்து ஆறிட்டமாதிரி ஒரு எண்ணம்.
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
நீங்கள் பெரியவங்க,
நீங்கதான் எங்கட சரி-பிழைய திருத்த வேணும்.
நாங்க இல்ல.
அப்பிடியிருக்கும் போது,
நாங்க சொல்லுறது உங்களுக்கும் மரியாதையில்லை.
எங்களுக்கும் அது சரியில்லை.
அதுக்காக...................... உங்கட விவேக குறும்புகளை நிறுத்திடாதேங்கோ. தொடரட்டும்.............
சிரி..........சிரிசிரிசிரிசிரி......................
</span>
அன்புடன் என்றும் உங்கள்
-அஜீவன்
[scroll:aad39e6233][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
லுா - லுாசு
பொ - பொறுக்கி,பொண்டாட்டி தாசன்,பொண்--யன், .......
கி - கிறுக்கன்,கிடுக்கன்,கில்லாடி...........
இது போதுமா இன்னும் வேணுமா?
எனது டிக்சனரியில் இதை விட பலமான வார்த்தைகள் உண்டு.தனி மெயிலில் அனுப்புகிறேன்.
பிரச்சனைகள் நடக்கும் போது யாரும் கருத்துகளைப் பேசுவதில்லை.
பிரச்சனை தீரும் போது எரியற நெருப்பில் எண்ணைäற்றி குளிர்காய எண்டே சிலர் இருக்கிறார்கள்.
குத்தி விட்டு கூத்துப் பார்க்கிறதே பிழைப்பா போச்சு.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
தெரியாத விசயங்களை தெரிஞ்சமாதிரி காட்ட எனக்கு விருப்பமில்லை.. குத்திவிட்டு கூத்து பார்க்கிறதுக்கு.. கூத்தாடிகள் தராதரமாய் இருந்தால்தானே?!
.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ர்ர்ர்ாார்ர்ர்ர்......... மந்தி கொப்பிழக்கப் பாயாது.
.
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
இப்ப எதை வேண்டாம் தொலையட்டும் எண்டுறியள்?
Posts: 37
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
ஒருசிறு பொறி எப்படிக் கொழுந்துவிட்டு எரியப் பார்க்குது. ஊத்துறவை இருந்தால் திரி என்ன செய்யும் கொட்டகையையே கொழுத்தப் பார்க்கும்.
நான் ஒருத்தனை எள்ளி நகையாடினால் எனது சிறுமையைக் கைதட்டிக் கேலிசெய்ய இன்னொரு கூட்டமே வரும் மறக்கக்கூடாது. சாட்டையடி என்றுமட்டுமில்லை, கல்லடி, கிழவி அடிகூட தம்மாத்துண்டு இதயத்துக்கு வலியைத்தரும். கல்லடி, சொல்லடி, பிச்சுப்பாத்தல் என்று பலவித வேதனையையும் இப்ப பலரும் அனுபவிச்சுப் பாத்தாச்சு. தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
தவறுசெய்த குழந்தையைத் தட்டிக் கேட்பது மட்டுமல்ல அள்ளி அணைத்துக் கொள்வதும்தான் தாய்மை
தவறுவது இயற்கை.
தவறைத் தவறென்று ஒப்புக்கொள்வது
மனிதம்.
தம்பி அஜீவன் அள்ளிப்போட்ட சாமியாரின் அருள்வாக்கு எப்படி நமக்கெல்லாம் கனகச்சிதமாய் பொருந்துது. பிச்சுப் பிச்சு படுகிற வேதனையிலை சுகம் காணுறதைவிட்டிட்டு, நாவினால் தடவித் தடவி ஒத்தணம் கொடுக்கும் நாய்மையிலையிருந்து தாய்மையைக் கற்றுக்கொள்ளுவம்.
இதெல்லாம் நான் கொட்டின வார்த்தைகளுக்கு நியாயம் கற்பிக்கச் சொல்லவரேல்லை. அவசரத்தில் கொட்டினதைப் பொறுக்கும் வல்லமைகூட இல்லாமல் அழுதழுது சொல்லுறன். இனிமேலாவது நான் என்றதைவிட்டு நாம் என இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து நிற்பம். மானிட மேன்மைக்கு இராமரின் அணிலாகவேனும் வலுச்சேர்ப்பம்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
வாழ்த்துக்கள்
சிறு கடிகளெனினும் அவை சேதங்கள் இன்றி செல்லக்கடிகளாக அமைந்தது சந்தோசம். அம்பலத்தார் ஜயா நகைசுவை தர நளாயினி அக்காவோ அதை இன்னும் நயம்பட எடுத்தியம்ப இடையில் அதை திரிவுசெய்தது ஏன் ?
எவ்வளவுதான் இறுக்கமான நிலையிலும் ஒரு சிறிய நகைச்சுவை இல்லாவிட்டால் வாதம் மோதலாகிவிடும். அந்த வகையில் அம்பலத்தார் ஜயாவின் விவேக நகைச்சுவைக்கு நன்றிகள். அதை நகை சுவையாகவே கருத்திலெடுத்த நளாயினி அக்காவிற்கும் நன்றிகள்.
நடுநிலையில் எப்பக்கமும் தீ மூட்டாது கருத்தளித்த அஜீவன் அண்ணாவிற்கும் நன்றிகள்.
நகம் இருந்தால்தான் இருக்கும் காயத்ததை இன்னும் இன்னும் கீறவோ கிண்டவோ தோன்றும். அதை நறுக்கிவிட்டால் காயத்தின் மீது கரங்கள் படும்போது வருடும் உணர்வே தோன்றும். நாம் நகத்தைவெட்டுவோம் விரல்களையல்ல காயங்களை வருடுவோம் வலிகளில்லாமல்
நட்புடன் பரணீதரன்
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கீறிட்ட இடம்...
லூ....
பொ.....
கி.....
எல்லாம் எமக்கே.....நாமே ஏற்றோம் மறந்தோம்...பின் ஏன் கி...கிளறல்கள்....பொ...பொறுமை லூ...லூசானால்..பொங்கும் என எதிர்பார்ப்போ....அதுதவறு...களத்தில் வந்த கருத்தாடல் போல் வீட்டில் அக்கா ஒருவரால் வந்தால் என்ன செய்வோம்....நாலுவார்த்தை நறுக்காக நாமும் சொல்லிவிட்டுச் செல்லலாம்....ஆனால் இது பப்பிளிக் களமாச்சே பாவம் அக்கா பற்றி நாமறிவோம்....அம்பலம் அங்கிள் நகைச்சுவையாகத்தர...நகைச்சுவை போல் பதில் தந்த அக்கா...அடுத்து வந்து சீறியசாக கருத்துவைத்து சொதப்பினதுதான் பிழை...அம்பலம் அங்கிள் மனம் நொந்து மன்னிப்புக் கேக்கும் அளவுக்கு வந்தது...அது பெருந்தன்மையின் வெளிப்பாடு...இது அந்தப் பொ....வில் அக்கா செய்ய மறந்தது.....! எங்கும் பொறுமை என்பது அனுபவத்தால் மேன்மையாகிறதோ....?!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 37
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
மதித்தாத்தா
இன்றைய தேதிக்குக் குட்டக் குட்டக் குனியுறவன் முட்டாள்.
ஒருகன்னத்திலை அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டினால் அசடு.
பாவபுண்ணியமெல்லாம் செத்துப் பலகாலமாச்சு.
வல்லவன் வாழ்வான் என்றதுதான் இன்றைய உலகநீதி.
பழைய கதையளைச் சொல்லிச்சொல்லி பிள்ளைகளைப் பத்தாம் பசலிகளா வளர்காமல் உலகின் நெழிவுசுழிவுகளையும் தெரியப்படுத்தி பாலைவனத்திலை கிள்ளிப்போட்டாலும் துளிர்க்கும் கள்ளிச்செடிபோல எந்த இடத்திலும் நாம் நாமாக விசுவரூபம் எடுக்க அவர்களுக்கு பாடம் சொல்லுங்கோ.
பரம்பரை பரம்பரையா பணிந்து அவன் பெரியவன் இவன் பெரியவன் வம்பெதுக்கு என்று எவனைக் கண்டாலும் தலையிலை கிடக்கிற துண்டைக் கழட்டி கமக்கட்டிலை வைக்கிற தாழ்வு மனப்பான்மையைத் து}க்கி மூட்டைகட்டி ஆத்திலை குளத்திலை போடுங்கோ. தமிழன் தலை நிமிர்வான். உலகம் எங்களைப் பார்த்து வியக்கும். பணமும் பலமும் சேர்ந்தால் மிகுதி எல்லாம் தானே வரும். பழசுகள் பாரம்பரியங்கள் என்று சொல்லிக் கொள்ளுறதுகளைத் து}க்கிப்போட்டிட்டுவரக் கொஞ்சம் யோசிக்கும் அது தெரிஞ்சவிசயம்தானே.
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
சீரயசாக கருத்தெழுத தூண்டியது யார்.? கள நிர்வாகம் இதை கவனத்தில் கொள்வார்கள் என நினைக்கிறேன்: தனிப்பட்ட ஒருவரது மனம் நோக நடந்து கொள்வதோ அன்றி எழுதுவதோ கூடாது என்பது கூட கள நிர்வாகம் கூறுகிறது ஆனால் கள நிர்வாகம் கண்டு கொள்வதாக இல்லை. இந்த பழிசுமத்தல்கள் எனக்கு தூசு. அதற்காக இவற்றை பாத்தக்கொண்டிருப்பேன் என நினைத்தால் இது முட்டாள் தனம்.
kuruvikal Wrote:கீறிட்ட இடம்...
லூ....
பொ.....
கி.....
எல்லாம் எமக்கே.....நாமே ஏற்றோம் மறந்தோம்...பின் ஏன் கி...கிளறல்கள்....பொ...பொறுமை லூ...லூசானால்..பொங்கும் என எதிர்பார்ப்போ....அதுதவறு...களத்தில் வந்த கருத்தாடல் போல் வீட்டில் அக்கா ஒருவரால் வந்தால் என்ன செய்வோம்....நாலுவார்த்தை நறுக்காக நாமும் சொல்லிவிட்டுச் செல்லலாம்....ஆனால் இது பப்பிளிக் களமாச்சே பாவம் அக்கா பற்றி நாமறிவோம்....அம்பலம் அங்கிள் நகைச்சுவையாகத்தர...நகைச்சுவை போல் பதில் தந்த அக்கா...அடுத்து வந்து சீறியசாக கருத்துவைத்து சொதப்பினதுதான் பிழை...அம்பலம் அங்கிள் மனம் நொந்து மன்னிப்புக் கேக்கும் அளவுக்கு வந்தது...அது பெருந்தன்மையின் வெளிப்பாடு...இது அந்தப் பொ....வில் அக்கா செய்ய மறந்தது.....! எங்கும் பொறுமை என்பது அனுபவத்தால் மேன்மையாகிறதோ....?!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
கருத்துடன் ஓன்றிப்போவோம்
விலகவேண்டாம். தனிப்பட் சாடல்கள் வேண்டாம்.
[b] ?