![]() |
|
வேண்டாம் தொலையட்டும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வேண்டாம் தொலையட்டும் (/showthread.php?tid=7982) |
வேண்டாம் தொலையட்டும் - shanthy - 10-16-2003 <b>வேண்டாம் தொலையட்டும்.</b> நரகல்களை மடியில் அள்ளி வைத்து - அது நாகரீமெனப் பெயர் சூட்டி கறுப்பாயிருந்த தலை சிவப்பாகி பச்சையாகி.... நாய் சூப்பிய பனங்கொட்டை நல்ல வடிவு. காக்கா அன்னநடை நடந்த கதை காதுகளை , மூக்குகளை முகங்களையெல்லாம் நாறவைத்து பேயோ எனப்பயந்து பேதலிக்க..... வணக்கம் சொல்ல வாய் நோவில் கலோ சொல்லும் உதடுகளின் இடைக்குக் கீழாயும் தொடைக்கு மேலாயும் கம்பிகள்....கம்பிகள்..... தம்பிகளின் , தங்கைகளின் காற்சட்டைகளில் ஓட்டைகள் கடகமளவில் கால் அகலம் றோட்டுக்கூட்ட கலர் கலராய் நடைநடக்கும் காளையரே , கன்னியரே வாந்தி வருகிறது உந்த வடிவுகளைப் பார்க்க.... வடிவாய்க் கிடந்த தலைமயிரை வழித்து மொட்டையாக்கி வானரமாய் உருமாறி டிஸ்கோவுக்குச் சினேகிதியோடு மகன் அலைய 'என்ர பிள்ளை நாகரீகம் தெரிஞ்ச பிள்ளை" அம்மாக்கள் சிலபேரின் அறியாமை சும்மாயிருந்த பொன்னம்மாக்களுக்கும் , பொன்னையாக்களுக்கும் யுவாலேத்த சத்தமின்றியிருக்கும் பிள்ளைக்கும் சனிக்குணங்களைச் சொல்லிக்குடுக்கும். இங்கு அப்பாக்கள் பலருக்கு அமோகக்கொண்டாட்டம் துணையாய் பியரடிக்க ஒருதுணையாய் மகனின் நண்பனின்.... இன்னொருவீட்டுப் பிள்ளையை இரவுக்குடிகாரனாக்கித் தன்பிள்ளையை அரிச்சந்திரனாகக் கதையளந்து எவளோ ஒரு தாயின் மகன் தறுதலையாவதில் துளியும் கவலையில்லை இவர்க்கெல்லாம். தன்பிள்ளை முகம் ஒருநாள் கிளிந்து விட மாற்றான் தாய் பிள்ளை கெடுத்ததாய் குறைசொல்லும் குடிகாரத் தகப்பன்கள் துணையான அம்மாக்கள் துலையாரோ இப்புவிவிட்டு.....? பெண்ணின் உடைகுறைத்து - அவள் அங்கங்களை அங்குமிங்கும் அசைத்துக்காட்டி தானுறிஞ்சிப் பால்குடித்த முலைகளையே விலையாக்கிப் பிழைக்கும் வித்தகர்கள் காந்தம் இருப்பதாய்ப் பெண்ணில் காமக்கனிரசம் சுரப்பதாய்க் கதையளந்து காலம் பயன்பெறவேண்டிய கண்ணுணரும் சாதனத்தை விபச்சாரமாக்கி.... இலக்கியம் படைப்பதாய் ஏமாற்றும் வித்தைகளை 'இதுவெல்லோ நல்லபடம்" அறியாததையா காட்டுகிறார் - உமக்கு அதில் ஆர்வமில்லையா....? அறிவார்ந்து சினிமாக்கலைபடித்த சீமான்களும் சேர்ந்து வக்காளத்து. குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த கொடிபிடிக்கும் கொள்ளையர்கள் கல்லெறிபட்டுச் சாகவேணும் கடவுளே கண்திறவாய்....! அது தமிழ் வளர்க்கும் ஒளித்தலமாயினும் தொலைந்தொழியட்டும் வேண்டாம். 16.10.03. - Paranee - 10-16-2003 கல்லெறிபட்டு சாகின்றார்களோ இல்லையோ ! இங்கு இல்லாவிட்டாலும் எங்கோ உங்களிற்கு சொல்லெறி நிச்சயம் உண்டு. வாழ்த்துக்கள் சமுதாயத்திற்கு நல்லதொரு சாட்டையடி ! இன்னமும் தாருங்கள் இதன்மூலமாவது திருத்தப்பார்ப்போம் திருந்தப்பார்ப்போம் நட்புடன் பரணீதரன் - shanmuhi - 10-16-2003 யதார்த்தங்களை கவிதையாய் வடித்தெடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். கடவுள் கண் திறந்தால் மட்டும் போதாது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - tamilmaravan - 10-16-2003 மற்றவர்களின் நாத்தங்களை மணந்து பாக்கிறதே சிலருக்கு பொழுது போக்கு.உங்கடை உங்கடை அலுவலுகளை பாப்பீர்களா. - Mathivathanan - 10-16-2003 tamilmaravan Wrote:மற்றவர்களின் நாத்தங்களை மணந்து பாக்கிறதே சிலருக்கு பொழுது போக்கு.உங்கடை உங்கடை அலுவலுகளை பாப்பீர்களா.விவாதம் காரசாரமாக்கிடக்கு. ம்.. நடாத்துங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ampalathar - 10-16-2003 உள்ளதை உள்ளபடிக்குச் சொல்ல இதைவிட வார்த்தைகள் ஏதும் உண்டோ? இதைப் படிச்ச ஒருத்தனாவது திருந்தினால் அதுவே சாந்தியின் படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி. நாத்தங்களை மணந்து பார்க்க யாரும் வரவில்லை வீடுகள், நாடுகள் என எல்லைகள் தாண்டி நாத்தமடிப்பதில் நொந்துபோன ஒருத்தரின் ஆதங்கமும் கோபமுமே கவிதையாக மலர்ந்திருக்கு. - S.Malaravan - 10-16-2003 நாத்தம் இங்கு எழுதப்பட்ட கவியிலோ அல்லது எழுதியவரிலோ அல்ல. அதனை வாசித்த தமிழால் மறவனெண்டு சொல்லி வந்தவரின் உள்ளத்து நாத்தம். தம்மை வெளிக் கொண்டு வந்து விட்டாரே என்று. - S.Malaravan - 10-16-2003 மறவா நீ குடித்தது தமிழ்தாயின் முலைப்பால் தானே அப்புறம் ஏன் உனக்கு இக்கவியில் ஓர் ஒவ்வாமை. இவர் எழுதியது நூற்றில் ஒன்று இன்னமும் எழுதாதது 99 இருக்கிறது.ம்ம்ம்ம்;;;;;;................... :twisted: :twisted: :twisted: - tamilmaravan - 10-16-2003 நாத்தம் வரும் என்று தெரிந்து தானே ஓடிவந்தோம். அவரவர் தம்மைத்தாமே காப்பாற்றிக்கொள்ளட்டும். மற்றபடி அழிபவன் அழிந்து தான் கொள்வானம்மா. - Paranee - 10-17-2003 தயவுசெய்து கவிதைக்கான விமர்சனங்களை வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களை வைதுகொள்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். - kuruvikal - 10-17-2003 பலகாலமாய் பல வடிவங்களில் சொல்ல வந்ததை ஒரே கவிதையில் சொல்லிவிட்டீர்கள்...இது எல்லோ சமூகக்கவிதை....விழி/ளிக்கட்டும் இல்லாவிட்டால் நாறும்...நாற்றமென்று பிதட்டும் முற்றத்தில் நாற்றம் கொட்டிக்கிடக்குது போல்...அதுதான் நாறுகிறான்/ள். :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- இளைஞன் - 10-17-2003 Quote:நரகல்களை மடியில் கலாச்சாரம் என்று அங் கன்று நடந்தேறியவை இங்கின்று நாகரீகமாய் அரங்கேற்றம்? தவறேதும் உளதெனக் கருதுகிறீர்களா? - kuruvikal - 10-17-2003 கலாசாரம் என்று கண்டதுகளையும் தூக்கி தானும் கெட்டு தமிழ் சமூகத்தின் தனித்துவத்தையும் கெடுக்கும்...அவர்கள் இப்படி ஆகட்டும் ...எப்படி... [b]குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த கொடிபிடிக்கும் கொள்ளையர்கள் கல்லெறிபட்டுச் சாகவேணும் கடவுளே கண்திறவாய்....! அது தமிழ் வளர்க்கும் ஒளித்தலமாயினும் தொலைந்தொழியட்டும் வேண்டாம் :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Kanani - 10-17-2003 ஹிப்பிகளைத் திருத்தவா முடியும்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 10-19-2003 இந்த நாடுகளில் உள்ளவர்கள் நம்மைப் போல் பேசினால் (கதைத்தால்) அவர்களை Racist (ரசிஸ்ட்) என்று கூக்குரலிட்டுக் கத்திக் கூச்சல் போடுகிறோம். அப்படிப் பட்ட இந் நாட்டு மக்கள் இந் நாடுகளில் எம்மை வாழ விட்டிருப்பதே தவறு. அவர்களது கலாச்சாரத்துக்கு நாம் உண்மையில் எதிரானவர்கள். நான் முன்னர் ஒரு வைத்தியசாலையில் வேலை செய்தேன்.சாதாரணமாக வேலை செய்பவர்களுக்கு அங்கு வேலை செய்வோர் கோப்பி குடிப்பதற்காக வைப்பது வழக்கமாக இருந்தது.அதே போல் மீதமாகும் உணவு வகைகளைக் கூட வேலை செய்வோருக்கு கொடுப்பார்கள். அங்கே 4 தமிழர்கள் வேலை செய்தார்கள்.அவர்கள் அந்த இடத்தில் வேலை செய்யும் போது கோப்பிகள் மீதமாகாமல் பண்ணி விடுவார்கள் அல்லது கொட்டி விடுவார்கள்.அது போலவே சாப்பாட்டைக் கூட பன்றி வாளிக்குள் கொட்டி மகிழ்வார்கள்.இது ஒரு பாரிய மன நோய். இவர்கள் செய்வது பொறுக்க முடியாது சுவிஸ் மக்களே என்னிடம் வேதனைப் பட்டிருக்கிறார்கள். இதனால் ஒரு முறை இவர்களில் ஒருவரை அடிக்க வேண்டி வந்த போது தமிழர்கள் தவிர்ந்து ஏனையோர் என்னை ஆதரித்தார்கள்.அவர்களை பல பிரச்சனைகளில் காப்பாற்றியிருக்கிறேன். அப்படிப் பட்டோர் நான் கூட ஏனையவர்களுக்காக பரிந்து பேசுவதாக என்னை எதிர்த்தார்கள்.நான் வேலையை விட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு அனைத்து விதத்திலும் முயன்றார்கள். சுவிஸ் மக்கள் ,உங்கள் நாட்டவர் இப்படியா அங்கும் எனும் போது வெட்கத்தால் இதயம் வேதனைப் படும். நமது கலை கலாச்சாரம் பெரிது என்று சொல்ல விழைவோரும் ,கல்லெறிபட்டுச் சாகவேணும் என்பவர்களும் எங்களுக்கு முன்மாதிரியாக வந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று அவற்றை உறுதிப்படுத்துங்கள்.அப்போது இங்குள்ளோரும் வரத் தயார்................ ஒரு விலை மாதை நோக்கி கல்லெறிந்து கொல்ல ஒரு கூட்டம் முயன்ற போது ஏசுநாதர் சொன்னார். உங்களில் எவர் ஒருவர் எதுவித பாவமும் செய்யவில்லையோ அவன் முதல் கல்லை எடுத்து எறியட்டும் என்றார். அதை ஒருமுறை நினைவு கூர்வது நலம். நாங்கள் 10-15 வருடங்களுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறி விட்டோம்.அதே நாளில் இருந்த நாட்டை மனதில் வைத்துக் கொண்டு இன்றும் பேசி வருகிறோம்.நாடு எவ்வளவோ திருந்தி விட்டது.நாங்கள் திருந்த எவ்வளவோ இருக்கிறது. வீட்டுக்குள் இருந்து உலகத்தைப் பார்க்காமல் , வெளியே வந்து உலகத்தை பாருங்கள்........... [scroll:71ee15b264][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன் - shanmuhi - 10-19-2003 உதாரணம் காட்டி விளக்கியிருக்கிறீர்கள். எல்லோருக்கும் பிரயோசனமாக இருக்கும் என்று நினைக்கிறேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - kuruvikal - 10-19-2003 ஜேசுநாதர் கேட்ட கூட்டத்தில் அப்படியானவகள் இல்லாமல் இருந்திருக்கலாம்...ஆனால் ஜேசு வந்து இத்தனை வழிகாட்டிய பின்னும் இன்னும் அதே கூட்டங்கள் இருக்க வேண்டுமா...?....அப்படி நினைக்க வேண்டுமா...? ஒவ்வொருவரும் தன்னை சமூகத்துக்கு ஏற்றதாய் வினைத்திறன் உள்ள வகையில் மாற்றிக் கொள்ளும் வகையில் செயற்பட வேண்டுமே தவிர தேவையற்றவைகளை சமூகத்துக்குள் உள்வாங்கல் அவசியமற்றதே....! அது எந்தச் சமூகமாக இருந்தாலும் சரி....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 10-19-2003 kuruvikal Wrote:ஜேசுநாதர் கேட்ட கூட்டத்தில் அப்படியானவகள் இல்லாமல் இருந்திருக்கலாம்...ஆனால் ஜேசு வந்து இத்தனை வழிகாட்டிய பின்னும் இன்னும் அதே கூட்டங்கள் இருக்க வேண்டுமா...?....அப்படி நினைக்க வேண்டுமா...? ஒவ்வொருவரும் தன்னை சமூகத்துக்கு ஏற்றதாய் வினைத்திறன் உள்ள வகையில் மாற்றிக் கொள்ளும் வகையில் செயற்பட வேண்டுமே தவிர தேவையற்றவைகளை சமூகத்துக்குள் உள்வாங்கல் அவசியமற்றதே....! அது எந்தச் சமூகமாக இருந்தாலும் சரி....! இதுதான் உலகத்தின் நகர்வு என்பது.இவற்றை தடை செய்ய இயலாது.அப்படியாயின் விஞ்ஞானம் ஒரு போதும் வளர்ந்திருக்காது.நாம் கூட நம்மவருடன் நினைத்த நேரத்தில் தொடர்புகளைக் கொண்டிருக்கவே முடியாது. வளர்ந்தும் இருக்க முடியாது. புத்தரும்,காந்தியும்,விவேகானந்தரும்,வள்ளுவரும்,ஏசுவும்,நபிகள் நாயகமும் ...............இன்னும் எத்தனை எத்தனை மாகான்கள் நாம் பிறந்த ஆசியாவுக்குள் பிறந்தார்கள்.....................நாம் திருந்தினோமா? நம் உயிர் துடிக்கும் இரத்த நாளங்கள் முழுவதும் வன்முறை........ நமது சிந்தனைகள், தத்துவங்கள் எல்லாம் நல்லவைதான். ஆனால் நாங்கள் மனித உயிர்களுக்கு எதுவித மதிப்போ,மரியாதையோ கொடுக்கத் தெரியாதவர்கள். நினைத்த போது எதுவும் பார்க்காமல் நடு வீதிகளில் எவரையும் கொன்று போடுபவர்கள். ஒருவரது உயிரின் மதிப்பு என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு கருக் கலைப்பை எதிர்த்து கோசமிடும் உங்கள் பேனா ஏன் ஒரு கொலையை நியாயப் படுத்துகிறது. கொலை செய்யத் துாண்டுகிறது. நீங்களும் அதைத்தானே எழுதுகிறீர்கள்............... உங்கள் கருத்துகள் ஆக்கத்துக்கா? அழிவுக்கா? shanthy Wrote:<b>வேண்டாம் தொலையட்டும்.</b> உங்கள் கொலை வெறிதான் உங்கள் கலாச்சாரமாக இருந்தால்.நாங்கள் செத்துப் போவது மேல்.......... நாங்கள் வாழும் புலம் பெயர் நாடுகளில் மனித உயிர்களுக்கு மட்டுமல்ல பிராணிகளைக் கூட கொல்வதற்கு பாவம் பார்க்கிறார்கள்.மரண தண்டனையைக் கூட ஒரு மனிதனுக்குக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்.எத்தனை எத்தனை மாமிசம் சாப்பிடாத மேலை நாட்டவர்கள் இங்கே தெரியுமா? நமக்கு இறைச்சி இல்லாவிட்டாலே சோறு இறங்காது. பிராணிகள் மேலுள்ள அன்பு அவர்களிடமிருக்கிறதே!!!!!!!!!!!!! <span style='font-size:25pt;line-height:100%'>நாம் தத்துவங்கள் சொன்னோம் , பின்பற்றவேயில்லை. மேலை நாட்டவர்கள் தத்துவங்களை படித்தார்கள். அதை தமது நடைமுறையில் பயன் படுத்துகிறார்கள்.இதுவே நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு. அவர்களிடம் மனிதம் இருப்பதற்கும் , நம்மிடம் இல்லாமல் போனதற்கும் காரணம்.........</span> <span style='font-size:25pt;line-height:100%'>மனிதநேயம் இல்லாத எந்த ஒரு மனிதனையோ ,படைப்பையோ என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. </span> [scroll:f90043bfd1][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன் - Kanani - 10-19-2003 அஜீவன் அண்ணை நாங்கள் யார் இங்க வெள்ளையனின் கலாசாரத்தை கேலி செய்தது அவன் அப்படித்தான் எமது ஹிப்பிகளை என்ன செய்வது? Hippy - A person who opposes and rejects many of the conventional standards and customs of society, especially one who advocates extreme liberalism in sociopolitical attitudes and lifestyles. - kuruvikal - 10-19-2003 மேலை நாட்டுத்தத்துவம் வெள்ளைத்தோலைக் காப்பாற்றலாம்....கோடி கோடியாய் உலகெங்கும் கொடூர ஆயுதங்கள் செய்து விற்றுப்பிழைப்பது யார் இதே பூனைக்கும் நாய்க்கும் ஜீவகாருணியம் காட்டும் வெள்ளையர்கள் தான்.... அதுமட்டுமா ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் அழிவதெல்லாம் அப்பாவி மனித உயிர்கள்...அங்கே எங்கே போனது அவர்களின் மனிதாபிமானமும் ஜீவகாருணியமும்...இவர்கள் சொல்லமுதலே முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும் புறாவுக்கு உடல் கொடுத்த சிபியும் காட்டிய ஜீவகாருணியத்தை ஏன் உங்கள் இதயங்கள் காணமறுக்கின்றன...அங்கெல்லாம் நீங்கள் உணர்ந்தவற்றை ஏன் உங்கள் பிள்ளைக்களுக்கு இனங்காட்டவில்லை...வெள்ளையனிடம் படிக்க முதல் உங்களிடம் உள்ளதை ஏன் அறிந்து உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்ட மறுக்கிறீர்கள்...ஈழத்தமிழர் அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக மேற்குலகை நோக்கி இடம்பெயர முதலே மேற்குலகில் உயர்கல்விக்காக வந்து குடியேறிய பல தமிழ் மக்கள் இன்னும் அதே கட்டுக் கோப்புடன் வாழ்கின்றனர்...பல இஸ்லாமிய நாட்டவர்கள் அதே கட்டுக்கோப்புடன் ஆண்டாண்டாய் வாழ்ந்து தமது தலை முறையையும் கட்டுக்கோப்பாக வளர்த்தெடுக்கின்றனர்....! வெள்ளையர்கள் காலனித்துவக் கொள்கையோடு உங்கள் வாசல்களில் வாழ்ந்த போது உங்கள் கலாசாரத்தையா பற்றிக் கொண்டு மீண்டார்கள்...?! தங்கள் கலாசாரத்தை பரப்பிவிட்டுத்தான் வந்தார்கள்...ஏன் அதை நீங்கள் இங்கு செய்யக் கூடாது...உங்களுக்கு உங்கள் காலாசாரத்தின் மீது அதன் தந்துவங்களின் மீது நம்பிக்கை இல்லை...அவற்றின் மீது ஒரு ஏளனப் பார்வை....உங்களின் மனங்களின் பலவீனமே நீங்கள் மாற்றுக்காலாசாரத்துள் விளங்கமின்றி தாவிக் குதிக்கக் காரணமே அன்றி வேறல்ல...அதை மறைக்கவே இத்தனை வேடங்களும்....!இப்படி விந்தை மனிதர்கள் வாழத்தான் வேண்டுமா....தன் சுயமிழந்து வாழ்ச்சொல்லி அடைக்கலம் தந்த வெள்ளையனே சொல்லாத போது நீங்கள் ஏன் சுயத்தை இழந்து மாறு வேடம் பூணுகிறீர்கள்....!அப்படி எதைத்தான் மறைக்க விரும்புகிறீர்கள்...ஓ ஓ...நாங்கள் மேலைத்தேய புதிய சமூகம்... எம்மை எம்பாட்டில் விட்டுவிடுங்கள் என்று பிரகடனத்துக்கான முயற்சியோ...நீங்கள் எப்படித்தான் வேடம் போட்டாலும் இயற்கை தந்த பிறப்புரிமை உங்களை காட்டிக் கொடுக்கும் வெள்ளையனும் உங்களை நன்கே பிரித்துணர்வான்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
|