Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#61
இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சி வழங்குவது குறித்து இந்தியா கடும் கவலை

இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் அமெரிக்கா அதீத அக்கறை காட்டி வருவது குறித்து இந்தியா கடும் கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் வேண்டுகோளை தொடர்ந்து இலங்கை இராணுவம் தனது உயர் அதிகாரிகளை ஹவாய்க்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் பசுபிக்குக்கான கட்டளைப் பீடம் ஹவாயிலேயே அமைந்துள்ளது. இலங்கையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயலாளர் நாயகமாக பதவி வகிக்கும் பிரிகேடியர் ஹேந்திர வித்தாரனவை ஹவாய்க்கு பயிற்சிக்கு அனுப்புமாறு அமெரிக்கா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமையை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் வழமை நடைமுறைகளின்படி ஒரு அதிகாரிக்கு இவ்வாறு விசேட பயிற்சிக்கான சந்தர்ப்பம் கிடைத்தால் இது தொடர்பான இறுதி முடிவினை விசேட குழுவொன்றே எடுக்க வேண்டியிருக்கும். இதனால் பிரிகேடியர் வித்தாரனவை ஹவாய்க்கு அனுப்புவதா என்பது குறித்து விசேட குழுவொன்று கூடி ஆராய்ந்துள்ளது. இந்தக் குழு பிரிகேடியர் குலதுங்கவே இவ்வாறான பயிற்சிக்கு அனுப்புவதற்குப் பொருத்தமானவர் என தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் ரிச்சட் கிர்வினிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க தூதரகம் பிரிகேடியர் வித்தாரனவை பயிற்சிக்கு அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் வித்தாரன ஹவாய் செல்லவுள்ளார். இதேவேளை புலனாய்வுப் பிரிவிவைச் சேர்ந்த இன்னொரு அதிகாரியும் ஹவாய்க்கு பயிற்சிக்கு சென்றுள்ளார். இராணுவ பாரம்பரியத்தின் படி தேசிய புலனாய்வு பணியக தலைவர் வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்பப்படுவதில்லை என சுட்டிக் காட்டப்படுகின்றது.

-------------------------------------- ----------------------------------------

இந்திய உயர்மட்ட பாதுகாப்பு குழுவினர் இலங்கையில் பல்வேறு தரப்புடனும் சந்திப்பு

இலங்கை பாதுகாப்பு தரப்புடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக இந்திய உயர்மட்ட பாதுகாப்புக் குழு கொழும்பு வந்துள்ளது.

தடைப்பட்டிருக்கும் இலங்கை இந்திய பாதுகாப்பு உடன்பாடு குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காகவே இவர்கள் இங்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு இவர்கள் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். எனினும் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென இந்திய ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையுடனான பாதுகாப்பு உடன்பாட்டிற்கு இந்தியா தயங்கிய நிலையில் இலங்கை அரசுஇ பாதுகாப்பு குறித்து வேறு நாடுகளுடன் உடன்பாடுகளைச் செய்து வருவதையடுத்தே இந்திய பாதுகாப்பு தரப்பினர் இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடல்கோளினால் இலங்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போது இந்தியாவே முதன் முதலில் உதவிக்கு வந்தது. கடற்படை போர்க்கப்பல்களில் அவசர உதவிப் பொருட்கள் உடனடியாக பெருமளவில் அனுப்பி வைக்கப்பட்டன.

நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இந்தியப் படையினர் உடனடியாக வெளியேறிய போதிலும் தற்போது காலியில் எண்பது பேரைக் கொண்ட அணியொன்று புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அந்தப் பணிகளும் முடிவடைந்ததும் இந்தியப் படையினர் உடனடியாக வெளியேறி விடுவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினக்குரல்
Reply
#62
[quote=shiyam]அன்றொரு நாள்
ஆகாயத்திலிருந்து
அரிசியும் மண்ணெண்ணெயும்
ஆகா வந்துவிட்டார்கள்
கொண்டாடினோம்
குதூகலித்தோம்
குட்டி கரணமடித்தோம்
வந்து லீழ்ந்தது எமது
வாய்க்கரிசியென்றும்
மண்ணெண்ணெய் எம்
மண்ணை கொழுத்த
என்று தெரியாமல்
வந்தோரை வரவேற்று
மாலைகள் மரியாதைகள்
ஒருவன் ஏதோ சென்னான்
ஓன்றும்புரியவில்லை
ஒருவர் மெழி யெர்த்தார்
கவலை வேண்டாம்
காப்பாற்றவந்துள்ளோம்
நன்றாய் உங்களை
பார்த்து கொள்வோம்
கைதட்டினோம்
பின்னர் தெரிந்தது
பார்த்து பார்த்து
கொன்றபோது
மொழிபெயர்ப்பு
பிழையென்று
தட்டிய கைகள்
கட்டிவீதியெங்கும்
விலங்குகள்போல்
கட்டிதூக்கியே
கோழிபோல்
உயிருடன் உரிக்கப்பட்டவர்
எத்தனை
அவர்களின்
காமக்கழிவுகழை
வெளியேற்ற
கழிவறைகளாய் போன
எம்மவர் எத்தனை
காணாமல் போனவர்
எத்தனை.
என்ன பார்க்கிறீர்கள்
உங்கள் கேள்வி
சிங்களவன் இத்தனையும்
செய்யவில்லையா??
செய்தான்
அவன் எம்எதிரி
அப்படித்தான்
செய்வான்
ஆனால்
நீ????????????????????????????????????
நன்றி:-
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/power.gif' border='0' alt='user posted image'>
shiyam
களப்பிரிவு இங்கே
Reply
#63
பிராந்திய ரீதியான பூகோள அரசியல் நகர்வுகளை மாற்றிக்கொண்ட இந்தியா

-மார்வன் மக்கான் மார்கர்-

தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த 12 நாடுகளையும் கடல்கோள் தாக்கி அவலத்துக்குள்ளாக்கிய ஒரு மாதகால எல்லைக்குள் இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு புதிய அரசியல் நிலைப்பாட்டைப் பெற்றுள்ளது.

உருவாகிவரும் இந்தியாவினது இந்த நிலைப்பாட்டிற்கு அதிக வரவேற்பை ஷ்ரீலங்கா அரசாங்கம் அளித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் இந்தியாவும் பாதிக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாரம் தனது மருத்துவ உதவிப் பணிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்திய மருத்துவக் குழுவொன்றிற்கு வட இலங்கையிலுள்ள திருகோணமலையில் கோலாகலமான பிரியாவிடை அளிக்கப்பட்டது.

இத்தீவின் வேறு பகுதிகளிலும் பெருமளவிலான இந்திய இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் இத்தகைய நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டன. இந்தியாவின் வானவில் நடவடிக்கையின் கீழ் நத்தார் தினத்திற்கு அடுத்த நாள் ஷ்ரீலங்கா கடல்கோளினால் தாக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்துள் இந்திய இராணுவத்தினரும் கடற்படையினரும் மீட்பு நடவடிக்கைக்காக வரத் தொடங்கினர்.

இந்தியாவின் உதவி ஷ்ரீலங்காவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என இராணுவ ஆலோசகர் இக்பால் அத்தாஸ் ஐ.பி.எஸ்.ஸுக்குக் கூறியுள்ளார். "இந்தியாவும் கடல்கோளினால் பாதிக்கப்பட்டாலும் அது இந்நாட்டுக்களித்த உதவிகளுக்காக மக்கள் அதனைப் பெரிதும் பாராட்டியுள்ளனர்"

ஆனால் இந்தியாவினால் அதனது அயல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட உதவி மனிதாபிமான நோக்கங்களுக்கும் அப்பாற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வரலாற்றுப் பேராசிரியர் பெற்றாம் பஸ்தியாம் பிள்ளை ஒரு நேர்காணலில் கூறியதாவது லங்காவிற்கும் மாலை தீவுகளுக்கும் உதவ வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம் தான் இப்பிராந்தியத்தில் அதிகளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற அதனது மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது"

பூகோள அரசியல் அரங்கில் நியூடெல்லியினது ஆதரவுக்கரம் இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய வல்லரசுகளான சீனா ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றிடமிருந்து இத்தருணத்தில் வரக்கூடிய சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் ஒன்றாகும்.

பஸ்தியாம்பிள்ளை மேலும் கூறுவதாவது தனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் வேறு நாடுகள் காலூன்றுவதைத் தடுப்பதும் இந்தியாவின் செயற்பாடுகளுக்குக் காரணமாகும்.

கடல்கோள் அனர்த்தத்தினால் இரண்டாவது பெரிய தொகையான 38இ000 மக்களை இழந்த லங்காவிற்கு இந்தியாவின் உதவிக் கப்பல்கள்இ விமானங்கள்இ உலங்கு வானூர்திகளைக் கொண்ட இராணுவ கடற்படை உதவிகளுடன் மாத்திரம் நின்று விடவில்லை. இத்தீவின் கடற்கரைப் பிரதேசங்களைப் புனரமைக்க 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை அளிக்க இந்தியா முன் வந்துள்ளது.

கடந்த இரண்டு தசாப்த காலங்களிலும் இந்தியாவின் இரண்டு தலையீடுகளினாலும் உருவாகிய கசப்புணர்வு இரு நாடுகளுக்கிடையேயும் நீங்கியுள்ளது.

முதலாவதாக 1987 இல் இந்திய இராணுவ விமானங்கள் யாழ். நகரில் 25 தொன் நிறையுள்ள நிவாரணப் பொருட்களை வீசியுள்ளன. இது லங்கா படைகளினால் விடுதலைப் புலிகளுடன் தொடுக்கப்பட்ட தாக்குதலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட உதவியாகும். அப்போது புலிகள் யாழ்நகரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அதன் பின்னர் கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையிலான உறவு இலங்கையின் அரசுத் தலைவர்கள் இந்திய அரசை வெகுவாகச் சாடியதனால் மிகக் கீழ் நிலையை அடைந்திருந்தது. இலங்கையின் அரசுத் தலைவர்கள் இந்தியாவைப் பிராந்தியத்தின் சண்டியன் எனவும் நிந்தித்தனர்.

அதன் பின்னர் நியூடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்ட காலப்பகுதியில் உருவானது. இந்த இந்திய- லங்கா உடன்படிக்கை தீவின் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. இவ்விரு மாகாணங்களிலும் ஒரு சுதந்திர தாயகத்தை உருவாக்கப் புலிப் போராளிகள் அத்தருணம் போராடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இந்திய அமைதி காக்கும் படையுடன் விடுதலைப் புலிகள் மோதலில் ஈடுபட்டதனால் 1500 இந்தியப் படையினர் இறந்துள்ளதுடன்இ 3000 பேர் வரை காயமடைந்தனர். இலங்கை அரசாங்கம் இந்தியப் படையினருக்கு நன்றி கூறுவதற்குப் பதிலாக அவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணித்தது.

அத்தாஸ் கூறுவதாவது "பழைய கசப்புணர்வுகள் கடல்கோளைத் தொடர்ந்து வந்த செயற்பாடுகளினால் நீங்கியுள்ளன. இரண்டு நாடுகளும் நெருங்கி வந்துள்ளன. இது இந்தியாவின் நன்மதிப்பை உயர்த்தும்"

இப்பிராந்தியத்தில் இந்தியாவின் நிலை கடல்கோளோடு சம்பந்தப்பட்ட இன்னொரு கொள்கையில் இன்னும் அதிகளவான சிறப்பைப் பெற்றுள்ளது. அதாவது இந்தக் கொல்லும் அலைகளினால் இந்தியாவின் தென் கிழக்குக் கரைகள் 9000 மக்களை இழந்துள்ள போதிலும் இந்தியா அந்நிய உதவிகளை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது.

இந்திய அரசாங்கம் கடல்கோள் பாதிப்பினால் ஏற்பட்ட 575 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தையும் தானே ஏற்று ஈடுசெய்ய முன் வந்துள்ளது.

கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 12 நாடுகளில் 5300 மக்களை இழந்த தாய்லாந்து மாத்திரம் இந்தியாவைப் போன்று வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்துள்ளது. இந்தியாவைப் போன்று பாங்கொங்கினுடைய தீர்மானமும் தனது சொந்த அலுவல்களைத் தானே செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையையும் செருக்கையும் அடிப்படையாகக் கொண்டது எனலாம்.

அமெரிக்கப் படைகளுக்கும் அவர்களது நிவாரணப் பணிகளுக்கும் இலங்கையிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு 200000 பேருக்கு மேற்பலியான இந்தோனேஷியாவிலும் பாராட்டுகள் தெரிவிக்கப்படும் வேளையில் மாலை தீவுகளிலும் இலங்கையிலும் இந்தியா மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகளினால் அமெரிக்காவின் நிலையை விஞ்சியுள்ளது.

ஒரு இந்தியச் சஞ்சிகை கூறுவதாவது லங்காவினது அனர்த்தம் களைய நியூடெல்லி தாமதமன்றி செயற்பட்டமை தனது பிராந்தியத்தில் அமெரிக்கா முந்திக் கொள்ளக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகும்.

சைக்கற் டாற்றா "அவுற்லுக்கில்" எழுதுவதாவது பெரிய அளவிலான யூ.எஸ். உதவி இப்பிராந்தியத்திற்குச் செல்ல உள்ளது என்ற அறிக்கையை அறிந்தே நிவாரணக் கப்பல்களைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

டாற்றா மேலும் கூறுவதாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது நலன்களை நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கையின் பிரகாரம் இந்தியா செயற்பட்டுள்ளது. இப்படிச் செயற்பட்டதனால் இந்த தென் இந்திய நாடு ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது. விமர்சகர்களின் கூற்றுப்படி இந்தியா தனது சுதந்திரத்தை 1947 இல் பெற்ற பின்னர் மிக அதிகளவிலான வெளிநாட்டு உதவித் தொகைகளை வழங்கியது இதுவே முதல் தடவையாகும்.

- ஐ.பி.எஸ்

நன்றி: தினக்குரல்
Reply
#64
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்

( தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 12:43 ஈழம்)

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்தமாத இறுதியில் சிறீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இந்தியப் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் மூலம் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்காக முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி 1987 இலும் சார்க் மாநாட்டுக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1988ம் ஆண்டிலும் விஜயம் செய்த பின்னர் 18 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை டொக்டர் மன்மோகன் சிங் பெறுகிறார்.

சிறீலங்காவின் அரசுப்பீடம் இந்தியா தொடர்பான கொள்கையில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள இந்நேரத்தில் இலங்கைக்கு வருகை தருவது சாலப்பொருந்தும் எனக்கருதியே இந்தியப் பிரதமர் தனது விஜயத்தை முடிவுவெய்துள்ளார் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரச உயர்மட்டத் தலைவர்களாக வெளிவிவகார அமைச்சர் ஐ.கே.குஜரால் ஜஸ்வந்த் சிங் ஜஸ்வந்த் சின்ஹா ஆகியோர் சிறீலங்காவிற்கு வருகைதந்துள்ளனர்.

சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பிரதமர்கள் ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அடிக்கடி இலங்கைக்கு சென்று வந்துள்ளபோதும் அந்த மட்டத்திலான பதில் விஜயங்கள் இந்தியாவிலிருந்து சிறீலங்காவிற்கு மேற்கொள்ளப்படவில்லை.

பிரதமரின் மன்மோகன் சிங்கின் வருகை தொடர்பாக இந்தியாவுக்கான சிறீலங்காவின் தூதுவர் மங்கள முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில் -

'சிறீலங்காவிற்கு இந்தியப் பிரதமர் விஜயம் தரவேண்டும் என 1998ம் ஆண்டு முதல் இந்திய ஆட்சிபீடத்திடம் முன்வைத்து வந்துள்ளோம். சிறீலங்காவில் இந்தியப் பிரதமரைக்காண ஆர்வமாக உள்ளோம். சிறீலங்காவின் தேசிய அரசமைப்பு இந்திய ஆதரவுடையதே."- என்று கூறியுள்ளார்.

தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதாக் கட்சியைத் தோற்கடித்து அமோக வெற்றியீட்டி ஆட்சிப் பீடமேறியுள்ள காங்கிரஸ்ää தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய ஈழத் தமிழரதும் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவான கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது.

சிறீலங்கா அரசு இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்ய முயன்றபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்கட்சிகள் பிரதமர் மன்மோகனை நேரடியாகச் சென்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தன.

இத்தகைய ஆட்சிக்கூட்டணியின் தலைவரான பிரதமர் மன்மோகனின் சிறீலங்கா விஜயம் முக்கியதொன்றாகக் கருதப்படுகிறது. :? :roll:

--------- -------------- ----------- ------------- ------------- ----------

பாதுகாப்பு ஒப்பந்தத்தை துரிதமாக கைச்சாத்திட
இந்தியாவைக் கோருகிறார் அமைச்சர் கதிர்காமர்

(தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 12:48 ஈழம்)

சிறீலங்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தம் தொடர்பில் துரிதமாகச் செயற்பட்டு கூடியவிரைவில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு இந்திய அரசைக் கோரியுள்ளார் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்.

அடுத்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்யவுள்ள நிலையில் கதிர்காமர் இப்படியொரு அறிவிப்பை விடுத்துள்ளார்.

புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் சிறீலங்கா படையினருக்கு இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் பயறற்சி போன்ற விடயங்களை உள்ளடக்கிய உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பலதரப்பிலுமிருந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து அந்தமுயற்சி கைவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் இதுபற்றி தமிழகக் கட்சிகளிடம் உறுதியளிக்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான எந்த செயலையும் இந்தியா செய்யாது என்று உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி சந்திரிகாவுடன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த கதிர்காமர் அங்கு அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

புலிகளின் மட்டு.-அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விடுதலைப்புலிகளின் தலைமைமையை கடும் சீற்றத்துக்குள்ளாக்கியுள்ள நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்து மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கலாம் என்ற பீதி அரசமட்டத்தில் எழுந்துள்ளது. இதனாலேயே அரசு முன் ஆயத்த நடவடிக்கைகளில் துரிதமாகியுள்ளது என்கிறார்கள் அரசியல் அவதானிகள். :? :roll:

--------- ---------- -------- ----------- ---------- -----

தயாகம் திரும்பத் தயாராகும் அமெரிக்கப் படைகள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x :roll: :!: :?: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:

(தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 19:47 ஈழம்)

சிறீலங்காவில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவென நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினர் தமது நிவாரணப்பணிகளை நிறைவுசெய்துகொண்டு தாயகம் திரும்பத்தயாராகி வருகிறார்கள் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிக்கென பாதிக்கப்ட்ட ஏழு நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா தற்போது படிப்படியாக படைகளைத் தாயகத்துக்குத் திருப்பியழைத்து வருகிறது.

கடந்த இரு வாரங்களாக சுமார் 1600 படையினருக்கு மேல் சிறீலங்காவிலிருந்து வெளியேறிவிட்டனர் என்றும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த சொற்ப எண்ணிக்கையானோரே தற்போது சிறீலங்காவில் உள்ளனர். அவர்களும் தற்போது தாயகம் திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர் என்றும் அவ்வட்டாரஙகள் தெரிவித்திருக்கின்றன.

ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து சுமார் 12ற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகள் நிவாரணப் பணிகளுக்காக சிறீலங்காவுக்கு வந்தன. அவற்றில் பல நாட்டுப்படைகள் ஏற்கனவே தாயகம் திரும்பிவிட்டன.

ஒஸ்ரியா கனடா பெல்ஜியம் கிரீஸ் இத்தாலி பாகிஸ்தான் இந்தியா ஆகிய நாட்டுப்படைகள் கடந்த சில நாட்களில் தமது படைகளில் பெரும் பகுதியினர் தாயகம் திரும்பிவிட்டனர்

நன்றி: புதினம்
Reply
#65
இன்றைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் அவசியம்

புலம்பெயர்ந்த தமிழ்ப் புத்தி ஜீவிகளின் முன்பாகவுள்ள தலையாய கடமை

-தில்லைக்கூத்தன்-


அநேக வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்கு அநேக சாத்வீகப் போராட்டங்களை நடாத்தி அதில் மிகமோசமான தோல்வியைத் தழுவினார்கள் என்பது உலகறிந்த விடயம்.

சேர் பொன். இராமநாதன் 75 சதவீதத்துக்குமேல் அவருடைய நேரத்தை சிங்கள சமுதாயத்துக்கும் பௌத்த மதத்துக்கும் தான் செலவழித்தார் என்பது நாமறிந்த உண்மை. இன்று வெசாக் தினம் பொதுசன விடுமுறையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் சிங்கள மக்களிடம் தாங்க முடியாத தானிய வரியை அறவிட்டு அதன் விளைவாக அவர்கள் அடைந்த துன்பத்தை நாம் அறிவோம்.

1915 ஆம் ஆண்டில் சிங்கள முஸ்லிம் கலவரம் தோன்றிய காலத்தில் அனேக சிங்களத் தலைவர்களை பிரித்தானிய அரசாங்கம் அவர்களைச் சிறைக்கு அனுப்பி எந்த நேரத்திலும் மரணதண்டனையை எதிர்பார்த்தனர்.

இந்தக் கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாத சேர் பொன். இராமநாதன் தனது உயிரையும் மதிக்காமல் இங்கிலாந்து சென்று சிங்கள தேசியத் தலைவர்களுக்கு உயிர்ப் பிச்சை எடுத்துக் கொடுத்தார். இந்த வெற்றியை அடைந்த பின்பு சேர் பொன். இராமநாதன் வெற்றிவாகையுடன் திரும்பிவந்த பொழுது அவரை கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவருடைய வீடுவரை சிங்களத் தலைவர்கள் குதிரைகளாக மாறி அவரை வண்டியில் வைத்து அவர் வீடு வரை அழைத்துச் சென்றமை சகலருக்கும் தெரிந்த விடயம்.

அவர் சிங்களத் தலைவர்களுக்கு (உயிர்ப்பிச்சை) எடுத்துக் கொடுத்ததற்கு தங்கள் நன்றியை பகிரங்கமாகச் செய்தார்கள். சேர் பொன்.இராமநாதனுடைய சேவையை சிங்களத் தலைவர்கள் மறந்து அவருக்கு மிகக் கொடிய துரோகத்தை உண்டு பண்ணியது இன்றுவரை தன்மானமுள்ள எந்தத் தமிழனும் மறக்கமாட்டான். அவருடைய பிற்கால வாழ்க்கை மிகவும் விரக்தியடைந்த ஒன்று. இன்று யாழ். குடா நாட்டில் அவர் விரக்தியின் காரணமாக திருநெல்வேலியில் பரமேஸ்வரா கல்லூரியை ஸ்தாபித்தும் சுன்னாகத்தில் பெண்களுக்கு ஒரு தனியான கல்லூரியையும் அமைத்தார். அவர் அடைந்த விரக்தியை இது நன்கு புலப்படுத்திவிட்டது.

இதன் விளைவாக இன்று அந்த இரு ஸ்தாபனங்களும் பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுவிட்டன. அவர் துயரத்தில்தான் தனது பிற்கால வாழ்க்கையை செலவழித்தார். அவர் பின்பு தமிழ்த் தலைவர்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்கு அநேக சாத்வீகப் போராட்டங்களை நடாத்தி அது ஒன்றாவது வெற்றியளிக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு முக்கிய விடயத்தை நாம் தன்மானமுள்ள தமிழர்களுக்கு சொல்லவிரும்புகின்றோம். சிங்களவர்கள் தமிழரின் எஜமானர்கள் அல்ல அல்லது தமிழர்கள் சிங்களவரின் கூலியாட்களாகவும் இல்லை. இந்த நிலைப்பாட்டை தன்மானமுள்ள தமிழர்கள் மறந்துவிடப்படாது.

தமிழர்கள் செய்த சாத்வீக உரிமைப் போராட்டங்கள் எல்லாம் படுதோல்வியைத் தழுவிய காரணத்தினால் விரக்தி அடைந்த தமிழ் இளைஞர்கள் தங்களுடைய சுயமரியாதையையும் தன்மானத்தையும் காப்பாற்றுவதற்காக வட கிழக்கில் நிலை கொண்டிருந்த சிங்கள இராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி சுதந்திரப் போரை ஆரம்பித்தார்கள். இந்தச் சுதந்திரப் போராட்டத்துக்கு அநேக குழுக்கள் தோன்றினாலும் பிரபாகரன் அமைத்த விடுதலைப் புலிகள் இயக்கம் தான் அநேக இராணுவ வெற்றிகளை ஈட்டியதுமல்லாமல் சர்வதேச அரங்கில் அவர்கள் இராஜதந்திர அரசியல் துறைகளில் அதி உன்னத மதிப்பைப் பெற்று சர்வதேச சமுதாயத்துடைய ஆதரவையும் பெற்றது சரித்திர உண்மை.

சமீப காலத்தில் வட கிழக்கில் விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக அறிவித்த யுத்த நிறுத்தத்தையும் மதிக்காமல் அரசாங்கத்துடன் செய்த உடன்பாடுகளையும் மதிக்காமல் சிங்கள இராணுவம் மிகமோசமான கெடுபிடிகளில் செயல்படுவது தமிழினத்தை பூண்டோடு அழிக்கும் கொள்கைக்கு நல்ல உதாரணமாக விளங்குகிறது. இந்த உண்மையை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துவிட்டது. அப்படியிருந்தும் சிங்கள இராணுவம் விடுதலைப் புலிகளை அழிக்கும் செயல்கள் மிகக் கொடிய இராணுவ நடவடிக்கை.

சமீபத்தில் தெற்காசியாவை குலுக்கிய கடல்கோள் விடயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கை மிகமோசமான பாரபட்சம் என்றே நாம் புள்ளி விபரங்களுடன் எடுத்துக் கூற முடியும். இப்படியான சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தங்கள் பொறுமையை கடைப்பிடித்து சமாதானத் தீர்வையே விரும்புகின்றார்கள். இவ்விதமான பயங்கர சூழ்நிலையில் விருதலைப் புலிகள் தங்கள் பொறுமையை கடைப்பிடித்துவரும் சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளை சர்வதேச சமூகம் மிகவும் கடுமையாக கண்டனம் செய்தது. ஐ.நா.வினுடைய செயலாளர் நாயகம் கூட இந்தக் கொடூர செயல்களை கண்டித்து அறிக்கைவிட்டார். இவ்விதமான சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் இனிமேலும் பொறுமையைக் கடைப்பிடிப்பார்களா என்ற கேள்வி நிச்சயமாக எழுகின்றது.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களுடைய பொறுமை எல்லை கடந்து அதன் விளைவாக விடுதலைப் புலிகள் தங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டெனக் கருதி செயலில் இறங்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகளின் கடமை என்ன?

புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் அனேக துறைகளில் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக செயலில் இறங்கமுடியும்.

1. புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். இதற்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

2. ஐ.நா. மனித உரிமை குழுக் கூட்டங்களில் இந்த விடயத்தை தகுந்த புள்ளிவிபரங்களுடன் எடுத்துக் காட்ட முடியும். ஐ.நா. மனித உரிமைக் குழுவினுடைய ஆதரவைப் பெறுவது மிகவும் அவசியம்.

3. சமாதான நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலாவை அழைத்து வடஇ கிழக்கில் நடந்த துயர சம்பவங்களை எடுத்துக் காட்ட முடியும்.

4. ஐ.நா. மனித உரிமைக் குழு தலைவர்களை வட கிழக்கிற்கு அழைத்து சகல உண்மைகளையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுவது அவசியமாகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நமது புலம் பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் மனித உரிமைக்குப் போராடிய மேரி றொபின்சன் போன்ற தலைவர்களை வடஇ கிழக்கிற்கு அழைத்துவராதது பாரிய தவறு என்றுதான் நாம் கருதுகின்றோம். சுருங்கச் சொல்வதென்றால் புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் இந்தத் துறையில் அதிக பங்கெடுத்து சர்வதேச ஆதரவைப் பெற்றிருப்பது மிகவும் முக்கியம்.

நமது தமிழ் கூட்டணி பாராளுமன்ற அங்கத்தவர்கள் நமது அயல் நாடாகிய இந்தியாவுக்குச் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை தமிழ் நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் முறைப்பாடு செய்யாதது தவறென்றே நாம் கருதுகின்றோம்.

ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் அநேக தடவைகள் புது டில்லி சென்று இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுவிட்டார்கள். உதாரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகரான மிலிந்த மொரகொட அநேக தடவைகள் புது டில்லி சென்று அதனுடைய ஆதரவைப் பெற்றார் நிகழப்போகும் இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஐ.தே. கட்சிதான் உருவாக்கியது. ஐ.தே.கட்சியிலும் விட தற்போதைய அரசாங்கம் இந்தியாவினுடைய நட்பை நன்கு பெற்றுவிட்டது. இதன் விளைவாகத்தான் தெற்கு இலங்கையில் ஒரு சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டவுடன் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு சகல உதவிகளையும் செய்தது. வட கிழக்கிற்கு நடைமுறையில் இந்திய அரசாங்கத்தின் உதவி இன்னும் கிடைக்கவில்லை.

புதிய இந்திய ஸ்தானிகர் நியமிக்கப்பட்டபின்பு தமிழர்களுக்காக வரவேற்கத்தக்க மாற்றங்களைக் காணமுடிகின்றது. ஆனால் நடைமுறையில் இந்தியாவினுடைய உதவி தமிழ் மக்களுக்கு இன்னும் சென்றடையவில்லை.

முஸ்லிம் தலைவர்கள் கூட புது டில்லி சென்று தங்களுடைய பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவைப் பெறுகின்றார்கள். ஆகவே தமிழர் கூட்டணி பாராளுமன்ற அங்கத்தவர்கள் தமிழ் நாட்டுக்கும் புதுடில்லிக்கும் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எடுத்துக் கூறி தமிழர்களுக்கு இந்தியாவினுடைய ஆதரவைப் பெறுவது மிகவும் அவசியம். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா இலங்கை மீது செலுத்தும் ஆதிக்கத்தை அமெரிக்கா விரும்பாது. அதேபோல் இந்தியாவும் அமெரிக்காவினுடைய இராணுவ அக்கறையை விரும்பாது.

இது அவர்களுடைய பிரச்சினை. எம்மைப் பொறுத்தவரை எங்களுக்கு இந்தியாவினுடைய ஆதரவும் அமெரிக்காவினுடைய ஆதரவும் தேவைப்படுகிறது. இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. அதனுடைய பிராந்திய நலனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுபோல் அமெரிக்கா உலக வல்லரசு இலங்கை ஒரு கேந்திர முக்கிய ஸ்தானத்தை பெற்றபடியினால் அமெரிக்கா நேரடியாக அக்கறையை செயலில் காட்டுகின்றது.

இந்த சூழ்நிலையில் ஒரு பாரிய தவறை இந்திய மத்திய அரசு செய்துவிட்டது. இராஜ தந்திர சரித்திரத்தில் புலனாய்வுத்துறையை வழிநடத்திய ஒரு நபரை இன்னொரு நாட்டிற்கு தூதுவராக நியமிக்கப்பட்டதை நாம் அறிந்திருக்கவில்லை. பாகிஸ்தான் இலங்கையில் அதனுடைய புதிய தூதுவர் நியமிக்கப்பட்டபின்பு அநேக மாற்றங்களை காணமுடிகிறது. பாகிஸ்தானுடைய புதிய தூதுவர் பாகிஸ்தானிலுள்ள சகல புலனாய்வுத் துறைகளுடைய ஒருங்கிணைப்பை இவரே வழி நடாத்தினார். அப்படிப்பட்டவரை பாகிஸ்தானிய அரசாங்கம் இலங்கைக்கு தூதுவராக நியமித்தது அநேக சந்தேகங்களை உண்டாக்குகின்றது. முக்கியமாக கிழக்கு இலங்கையில் இந்த தூதுவருடைய நியமனம் நிச்சயம் அநேக சந்தேகங்களை உண்டாக்குகின்றது. இவருடைய நியமனத்தை இந்தியா தனது இராஜதந்திர எதிர்ப்பை மறை முகமாகவேனும் இலங்கை அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் பாகிஸ்தானுடைய செயற்பாடுகள் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியாவுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையுமென்பதற்கு அநேக வாய்ப்புகள் உண்டு.

நாம் இந்த விடயத்தில் இந்தியா தன்னுடைய தென் இந்திய பாதுகாப்புக்காக வேண்டியாவது இராஜதந்திர ரீதியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனது எதிர்ப்பைக் காட்டவேண்டுமென்று வற்புறுத்தியிருந்தோம்.

ஆகையினால் இந்தியா இந்த விடயம் தங்களுக்குத் தெரியாதென்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாது. இன்று பாகிஸ்தான் இலங்கைக்கு இராணுவ ரீதியாக அதிக உதவிகளைச் செய்கின்றது இது நிச்சயம் தமிழர்களை அடக்குவதற்கு உதவப் போகின்றது. இவருடைய நடவடிக்கைகளை இந்திய புலனாய்வுத் துறையினர் நன்கு அவதானிப்பது இந்தியாவுக்கு நன்மை விளையும் என்பதே எமது ஆணித்தரமான கருத்து.
நன்றி: தினக்குரல்
Reply
#66
பாதுகாப்பு உடன்படிக்கை: இந்திய நிலைப்பாடு என்ன?

இலங்கையின் இன நெருக்கடியை இங்தியா எவ்வாறு அணுகுகின்றது என்பது தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுப்பப்பட்டிருக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் இந்தியாவுக்கான உத்தியோக பூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் புதுடில்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கைப் பிரச்சினையில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாகவே உள்ளது.

கதிர்காமரின் இப்போதைய விஜயத்துக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதில் மறைமுக நோக்கம் ஒன்றிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளினதும் உதவியை இலங்கை நாடியிருந்தது. பிராந்திய வல்லரசான தனக்குத் தெரியப்படுத்தாமல் அமெரிக்காவின் படை உதவியை இலங்கை பெற்றுக்கொண்டது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது இரகசியமான ஒரு விடயமல்ல. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் அதிகரித்த இராணுவக் கூட்டுறவை வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளிலும் இலங்கை அரசாங்கம் இறங்கியிருந்தது. ஐனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்டிருந்த விஜயமும் இந்தப் பின்னணியிலேயே நோக்கப்பட்டது.

இலங்கை அரசின் இவ்விதமான நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள இந்தியாவைத் திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியாகவே கதிர்காமரின் தற்போதைய இந்திய விஜயம் அமைந்திருக்கின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் மேற்கொள்ளவுள்ள இலங்கை விஜயத்துக்கான முன்னோடியாகவும். கதிர்காமரின் இந்தியச் சுற்றுப் பயணம் அமைந்திருக்கலாம்.

கதிர்காமர் புதுடில்லியில் தெரிவித்த இரண்டு விடயங்கள் கவனத்துக்குரியவை. முதலாவதாக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவாத்தைகளை மீள ஆரம்பிப்பதற்குரிய தருணம் இதுவல்ல என கதிர்காமர் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதாவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. பேச்சுவார்த்தை ஒன்றுக்கான சூழ்நிலையை உருவாக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதையும் இது உறுதிப்படுத்துகின்றது.

இரண்டாவதாக பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடும் அளவுக்கு இலங்கையும் இந்தியாவும் நெருங்கி வந்துள்ளன என்ற தகவலையும் அவர் தெரிவித்திருக்கின்றார்.புதுடில்லியில் கதிர்காமர் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் போது இது தொடர்பாக மேலும் ஆராயப்பட்டுஇந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இதற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படலாம் என்ற ஊகத்தையும் இது ஏற்படுத்தியிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுடன் இப்போதைக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகள் இல்லை என்பதைத் தெளிவாகக் கூறியுள்ள கதிர்காமர் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதில் அவசரம் காட்டுவது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாததல்ல.ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் அக்கறை காட்டியே வந்திருக்கின்றது.

பாதுகாப்பு உடன்படிக்கையானது தம்மைப் பிரச்சினைக்குள் வலிந்து இழுப்பதற்கான ஒரு முயற்சி என்ற சந்தேகத்தின் காரணமாகவே இந்தியா அதில் அவசரம் காட்டவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஒரு சூடுகண்ட பூனை எனக் குறிப்பிடுவதில் தவறில்லை!

போர் நிறுத்தம் நடைமுறையிலுள்ள நிலையில் எந்தவொரு நாட்டுடனும் செய்துகொள்ளக் கூடிய பாதுகாப்பு உடன்படிக்கைகள் இராணுவச் சமநிலையைப் பாதிப்பதாக அமையும் என்பது உண்மை. இதனைத் தெளிவாகப் புரிந்துக்கொண்டும் அதற்காக அரசாங்கம் முற்படுவது பேச்சுவார்த்தை முயற்சிகளின் போது விடுதலைப் புலிகள் மீது அதிகளவு அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும் என்பதனால்தான்! அதாவது இது ஒரு வகையில் போர் நிறுத்த மீறல்தான்.

ஈழப் பிரச்சினை தொடர்பாக தம்முடைய நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகக் கூறக் கூடிய நிலைமையில் இந்தியா இல்லாமையால் தான் பல்வேறு உபாயங்களையும் கையாள்வதற்கு இலங்கை முற்படுகின்றது. தன்னை ஒரு பிராந்திய வல்லரசாகப் பிரகடனம் செய்து கொண்டுள்ள இந்தியா ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில்தான் அமெரிக்கப் படைகள் இலங்கைக்கு வந்து இறங்கின.

வெளிநாட்டுப் படைகள் தொடர்புகள் இலங்கையில் இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய - இலங்கை உடன்படிக்கையை 1987 இல் ஏற்படுத்திக் கொண்ட புதுடில்லியைப் பொறுத்த வரையில் அதன் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த ஒரு தோல்வியாகவே வெளிநாட்டுப் படைகளின் இலங்கை வருகையை கருதலாம். ஈழத்தமிழர் பிரச்சினையை வெறுமனே புலிகளின் பிரச்சினையாக மட்டும் கருதி தமது கொள்கைகளை வகுத்துக்கொண்டதாலேயே இவ்வாறான ஒரு தோல்வியை இந்தியா சந்திக்க வேண்டியிருந்தது.

இலங்கை அரசாங்கமும் புலிகளை மையப்படுத்தியே தமது வெளிநாட்டுக் கொள்கையை வகுத்துக் கொள்வதற்கு அண்மைக் காலமாக முற்பட்டு வருவதைக் காணக் கூடியதாவுள்ளது. அதாவது புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதனால்தான் இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளை வைத்துக் கொள்ள இலங்கை அரசாங்கமும் முற்படுகின்றது.

இந்த நிலையில் தம்முடைய நிலைப்பாடு என்ன என்பதில் இந்தியா தெளிவாக இருக்கவேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஈழப் பிரச்சினை தொடர்பாக டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நான்கு அம்சத் தீர்மானம் இவ்விடயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒன்று - ஈழப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு கூடாது. இரண்டு - இலங்கையின் இறையான்மைக்கும் ஒற்றுமைக்கும் மரியாதை மூன்றாவது - இலங்கையில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக தமிழர்களுக்கு முழுப் பாதுகாப்பு நான்காவது இலங்கையின் அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் தமிழர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு !

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே தன்னுடைய அணுகுமுறையை இந்தியா வகுத்துக்கொள்ள வேண்டும். இலங்கையின் அழுத்தங்களால் இராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றுக்கு செல்வதென்பது மறைமுகமான இராணுவத் தலையீடாகவே அமையும். அது மேற்சொன்ன நான்கு அம்சத் திட்டத்துக்கு முரணானது என்பதுடன் போர் நிறுத்தத்தையும் பாரதூரமான முறையில் பாதிக்கக் கூடியது.

சமாதானப் பேச்சுக்கள் இப்போதைக்கு இல்லை என்பதை அரசாங்கத் தரப்பினரே கூறியுள்ள நிலையில் இராணுவத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா நிதானமாகச் செயற்படுவது அவசியம்!

நன்றி: தினக்குரல்
---------------------------------------- --------------------------
இந்ந நாடகத்தில் ஆப்பிளுத்த குரங்காக இந்தியாதான் மாட்டுப்பட்டுள்ளது ஈழமும் சிறிலங்காவும் அல்ல... இந்திய நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கும் கூர்ந்துகவனித்தால்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :|
Reply
#67
இந்தியாவும் கதிர்காமரும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய உறவுநிலையை மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மகோன்னதமானது' என்று அடிக்கடி வர்ணிப்பதில் பெருமைப்படும் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கடந்த வாரம் புதுடில்லி விஜயத்தின்போது தெரிவித்திருந்த சில கருத்துகள் எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் கதிர்காமர் இந்தியாவுக்கு இதுவரை 50 க்கும் அதிகமான தடவைகள் விஜயம் மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. கடல்கோள் அனர்த்தத்தில் இலங்கை அவலத்துக்குள்ளான வேளையில் அவசர நிவாரணப் பணிகளில் இந்தியா செய்த அளப்பரிய உதவிக்காக நன்றி தெரிவிப்பதற்கு ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் விசேட தூதுவராகவே இத்தடவை அவர் புதுடில்லி சென்றிருந்தார்.

ஹதூரதர்ஷன்' தொலைக்காட்சிக்கு விரிவான பேட்டி யொன்றை அளித்த கதிர்காமரிடம் இலங்கை விவகாரத்தில் இந்தியா தீவிர பங்கேற்கவேண்டுமா என்று கேட்கப்பட்டபோது ஆம் இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவில் உள்ளவர்களுக்கு நியாயபூர்வமான- முறைப்படியான ஒரு நலன் ( Legitimate Interest ) இருக்கிறது. இலங்கையில் என்ன நடந்தாலும் அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். இதன் அடிப்படையில்இ ஒட்டுமொத்த விளைவுகளில் அக்கறையில்லாத தரப்பாக இந்தியா இருக்க முடியாது' என்று பதிலளித்திருக்கிறார்.

கோட்பாட்டு அளவிலான (Academic Interest) அக்கறையை விட கூடுதலான பங்கை இந்தியா ஆற்ற வேண்டுமென்று நாம் விரும்புகின்றோம். இலங்கையில் எந்த வகையான தீர்வு காணப்படுவதை இந்தியா விரும்புகிறது என்பதை குறிப்பிட்டுக் கூற அது தயாராக வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். வேறு எந்தவெளிச் சக்தியும் எதையும் கூறமுடியாது. தீர்வு எத்தகையதாக இருக்க வேண்டும் என்று கூறக்கூடிய ஒரே வல்லமை மிக்க நாடு இந்தியா தான். அவ்வாறு கூறுவதற்கான நியாயபூர்வமான உரிமை இந்தியாவுக்கு மாத்திரமே இருக்கிறது. இந்தியா இதைக் கூறாதவரை முரண்பாடுகளுக்கு இடமிருக்கும். இலங்கையில் நடப்பவை குறித்து நிச்சயம் இந்தியத் தலைவர்கள் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இலங்கைக்கான தீர்வு எந்த வகையானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் அதன் மனதில் இருப்பதை இந்திய அரசாங்கம் வெளிப்படையாகச் சொல்வதற்கு சரியான தருணம் இது. சமஷ்டித் தீர்வு காணப்பட வேண்டுமென்று இந்தியா யோசனை கூறுமானால்இ இலங்கையில் உள்ள சகல கட்சிகளும் அதற்கு இணங்கும்' என்று வெளியுறவு அமைச்சர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்து 11 மாதங்கள் கடந்தும் நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்க முடியாமல் இருக்கும் துரதிர்ஷ்டவசமானதொரு நிலையில்- அரசாங்கமே கவிழ்ந்து விடுமோ என்று சந்தேகம் வலுவடையுமளவுக்கு அதன் பிரதான பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)க்கும் இடையே (விடுதலைப் புலிகளுடனான விவகாரங்களைக் கையாளுவது தொடர்பில்) சர்ச்சைகள் கூர்மையடைந்திருக்கும் ஒரு கட்டத்தில் இலங்கை விவகாரத்தில் இந்தியா தீவிர பங்காற்ற வேண்டுமென்று கதிர்காமர் கேட்கிறார். இதே இந்திய விஜயத்தின் போது தான் கதிர்காமர்இ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இது பொருத்தமான தருணமில்லை என்றும் கூறியிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

சமாதான முயற்சிகளில் காணப்படும் தேக்க நிலையைப் போக்குவதற்கு குறைந்தபட்ச முயற்சியையேனும் மேற்கொள்வதற்கு ஏதுவான மனோ நிலை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியில் இல்லாதிருக்கும் இச் சந்தர்ப்பத்தில்- அதே சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக உலகுக்குக் கூறிக் கொண்டிருக்கும் இந்தியாவை தீவிர ஈடுபாட்டைக் காண்பிக்குமாறு கதிர்காமர் வலிந்து கேட்பதன் நோக்கம் என்ன? விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமற்றதாகக் கதிர்காமர் காணும் இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தீவிர ஈடுபாட்டினால் எதைச் சாதிக்க முடியுமென்று அவர் நம்புகிறார்?

இலங்கைக்கான தீர்வு எத்தகையதாக இருக்க வேண்டுமென்று கூறுவதற்கு நியாயபூர்வமான உரிமையுடைய நாடு இந்தியா மாத்திரமே என்றும் இந்தியா அதைக் கூறாதவரை முரண்பாடுகளுக்கு இடமிருக்கும் என்றும் கூறும் கதிர்காமர் 1980 களில் இலங்கைக்கான தீர்வொன்றைத் தருவதற்கு நேரடியாக புதுடில்லி தலையீடு செய்த போது தென்னிலங்கை அரசியல் சமுதாயம் இந்தியாவை எவ்வாறு கணித்தது என்பதை அறியாதவராக இருக்க முடியாது. சமஷ்டித் தீர்வை இந்தியா யோசனையாக முன்வைக்குமானால் இலங்கையில் உள்ள சகல கட்சிகளும் அதற்கு இணங்கும் என்று வெளியுறவு அமைச்சர் தைரியத்துடன் கூறுவதற்குக் காரணம் தென்னிலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இன்றைய மகோன்னத உறவு நிலையே' என்று கருதவேண்டியிருக்கிறது.

இலங்கையின் சரித்திரத்தையும் அதன் அரசியலையும் வேறு எதையும் விட மிகக் கூடுதலான செல்வாக்கிற்குட்படுத்திய ஒரே காரணியென்றால்இ அது இந்தியாவுக்கு மிகவும் அண்மையாக- 20 மைல் அகலக் கடலால் பிரிக்கப்பட்ட நிலையில்- அமைந்திருக்கிறதென்ற புவியியல் நெருக்கமேயாகும். இந்த உண்மையின் அடிப்படையில் நிலைவரங்களைப் புரிந்து கொள்வதற்குப் பெரிதாக அரசியல் ஞானம் எதுவுமே தேவையில்லை. ஆனால் அதே புவியியல் நெருக்கம் இலங்கையின் அண்மைக்கால சரித்திரத்தில் ஒரு குறுகிய கால கட்டத்துக்குள் ஏற்படுத்திய விபரீதங்கள் இரு நாடுகளும் அவற்றின் மக்களும் என்றென்றைக்கும் மனதைவிட்டகலாத பாரதூரமான படிப்பினைகளைத் தந்திருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இன நெருக்கடிக்குக் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வுமே தமிழர்களின் பாதுகாப்பையும் பத்திரத்தையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருந்த கால கட்டமொன்று இருந்தது. அப்போது தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் அதிகப் பெரும்பான்மையான பிரிவினரால் இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடாகவே நோக்கப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படையின் இலங்கைப் பிரவேசத்துக்குப் பின்னரான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் காரணமாக மாற்றமடைந்த நிலைமைகளின் கீழ் இலங்கை விவகாரத்தைத் தூர இருந்து அவதானிக்கும் போக்கை இந்தியா கடைப்பிடிக்க ஆரம்பித்தது.

இந்தியா விடுதலைப் புலிகளைத் தடை செய்து அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலைகள் காலப்போக்கில் தென்னிலங்கையின் உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதுடன்இ தமிழ் மக்களின் நியாயபூர்வமானதும் சட்டபூர்வமானதுமான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களுக்குக் குறுக்கே இனிமேல் இந்தியா நிற்கும் என்ற நம்பிக்கையையும் பேரினவாதச் சக்திகள் மத்தியில் தோற்றுவித்தன. இன்று தென்னிலங்கை இந்தியாவை ஆரத் தழுவுவதற்கும் நாட்டின் ஐக்கியத்தினதும் ஆட்புல ஒருமைப்பாட்டினதும் நம்பிக்கைக்குரிய பாதுகாவலன்' என்று போற்றுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா ஈடுபாட்டைக் காட்டவேண்டும். அதேவேளைஇ தமிழ் மக்களினதும் பொதுவில் சிறுபான்மை இனங்களினதும் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளுக்கு விரோதமான தென்னிலங்கைப் பேரினவாதச் சக்திகளுக்குக் தெம்பூட்டக் கூடிய ஒரு சிறுநகர்வைக் கூட இந்தியா செய்தல் ஆகாது என்பதே எமது வேண்டுகோள். சரித்திரத்தில் இருந்து எவரும் எதையும் படிப்பதில்லை என்பதே சரித் திரத்தில் இருந்து நாம் படித்த பாடமாகிவிடக் கூடாது.

நன்றி: தினக்குரல்
-----------------------------

:roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தமது சுயநலத்துக்காக பிராந்தியசுயநலத்துக்காக மீண்டும் மீண்டும் சரித்திரத்தில் இருந்து எவரும் எதையும் படிப்பதில்லை என்பதே சரித் திரத்தில் இருந்து அவர்கள் படித்த பாடமாகிவிடக் கூடலாம்....
Reply
#68
இலங்கையின் கபட வலைக்குள் இந்தியா விழுந்துவிடக்கூடாது!

நாடாளுமன்ற உரையில் சம்பந்தன் எச்சரிக்கை
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் உதவியைக்கோரும் அரசு பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்வதில் மும் முரமாகச் செயற்படுகின்றது. இலங்கை அர சின் கபட வலைக்குள் இந்தியா சிக்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலை வர் இரா.சம்பந்தன் இதனை நேற்று நாடாளு மன்றத்தில் பகிரங்கமாகவே தெரிவித்தார்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசிடம் ஸ்திரமான ஒருநிலைப்பாடு இல்லை. நாட்டுக்கு நாடு மாறுபட்ட கருத்துக்களை இலங்கை தெரிவிக்கின்றது.
இரட்டைக் குரலில் பேசும் அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் இனப்பிரச்சினை யைத் தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. அதற்கு அவர்களிடம் உருப்படியான திட்டங்களும் இல்லை - என்றும் சம்பந்தன் எம்.பி.சாடினார்.
இந்தியாவுக்கு விஜயம்செய்த வெளிவிவ கார அமைச்சர் கதிர்காமர்இ இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் பங் களிப்பு அவசியம் - இந்தவிடயத்தில் இந்தியா வின் பங்களிப்பை - நிலைப்பாட்டை - அதிக ரிக்கவேண்டும்; தீவிரமாக்கவேண்டும் - என் றெல்லாம் மண்டியிடுகின்றார்.
அதே கதிர்காமர் பாகிஸ்தானுக்குச் சென்று அவர்களின் புகழ்பாடுகின்றார். தக்கசமயத்தில் பாகிஸ்தான் உதவியிருக்காவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதோ தமிழீழத்தை அமைத்திருப்பார்கள் என்று பாகிஸ்தானை சந் தோசப்படுத்தி பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள மும்முரமாகச் செயற்படுகின் றார்.
அதோடு நின்றுவிடவில்லை. சீனாவுக்கு சென்றபோது சீன அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியமைக்காக சீனாவுக்கு நன்றி தெரி விக்கின்றார். நாட்டுக்கு நாடு தேசத்திற்கு தேசம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்றிக்கொள் ளும் இலங்கை அரசின் சூழ்ச்சி வலைக்குள் இந்தியா சிக்கிவிடக்கூடாது - என்று சம்பந்தன் எம்.பி.மேலும் கூறினார்.
நன்றி: உதயன்
Reply
#69
<b> இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையை உடன் கைச்சாத்திடுமாறு வலியுறுத்தல் </b>

ஜனாதிபதியிடம் ஹெல உறுமய கோரிக்கை

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையை உடனடியாக கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென்றும் அதன் மூலம் இந்திய விமானப் படையினருடன் பயிற்சிகளை மேற்கொண்டு புலிகளின் விமானப் படைப்பிரிவை அழித்தொழிக்க வேண்டுமென்றும் ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நுகேகொடையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தலைமையில் கூடிய மத்திய குழுக் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு கூடிய மத்திய குழுக் கூட்டம் இரவு 8 மணி வரை இடம்பெற்றுள்ளது. இதில் அத்துருலியே ரத்ன தேரர், கொட்டபொல அமரகித்தி தேரர் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிறி தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட 3 வருட காலத்திற்குள் விடுதலைப் புலிகள் விமானப் படைப் பிரிவையும் அமைத்து இரணைமடுவில் ஓடு பாதையையும் அமைத்துள்ளதை எமது இராணுவத்தினதும் வெளிநாட்டு இராணுவத்தினதும் உளவுப் பிரிவுகள் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளன.

இது எமது நாட்டுக்கு மட்டுமல்ல தென்கிழக்காசியாவிற்கே பெரும் ஆபத்தாகும். யுத்த நிறுத்தம் முறிவடைந்தால் புலிகள் தமது விமானப்படை பிரிவை பயன்படுத்தி நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தும் அச்சுறுத்தலும் இருக்கின்றது.

இதுபோன்ற ஆபத்து நிலையை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவோ, அரசாங்கமோ அல்லது வேறு அரசியல் கட்சிகளோ கண்டும் காணாது அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கின்றன.

எனவே, ஜனாதிபதி உடனடியாக இது தொடர்பில் கூடிய கவனத்தை செலுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்திய விமானப் படையுடன் பயிற்சிகளை மேற்கொண்டு புலிகளின் விமானப் படைப் பிரிவை அழித்தொழிக்க வேண்டுமென்றும் மத்திய குழு முடிவெடுத்து அதனை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக நிஷாந்த ஸ்ரீ வர்ண சிறி தெரிவித்தார்.

தினக்குரல்
...............
Reply
#70
நோர்வேயை வெளியேற்ற கதிர்காமர் ஊடாக ஜே.வி.பியினர் முயற்சி!

சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகளில் இருந்து நோர்வே தரப்பை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜே.வி.பியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

அண்மையில் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை சந்தித்த கதிர்காமார் மிக விரைவில் நோர்வே அரசாங்கத்தை சமாதான முயற்சிகளில் இருந்து விலக்கி வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதனை அடுத்தே இந்தியா சமாதான முயற்சிகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என கதிர்காமர் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோர்வே ஏற்பாட்டாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாகவும் தனிநாடு ஒன்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ஜே.வி.பி தரப்பு அச்சமடைந்துள்ளது.

எனவே நோர்வேத் தரப்பை சமாதான முயற்சிகளில் இருந்து விலக்கிவிட்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள இந்தியாவை மத்தியஸ்தராக்குவதற்கு ஜே.வி.பி. விருப்பம் கொண்டுள்ளது.

இந்தியா மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டால் தனிநாட்டு கோரிக்கை அல்லது அதற்கு ஈடான தீர்வை பெற்றுக் கொடுக்காது என்று ஜே.வி.பி திடமான நம்பிக்கையினை கொண்டிருக்கிறது.

இலங்கையில் தனிநாடு அல்லது அதற்கு ஈடான கட்டமைப்பு உருவாக்கப்படுவது இந்திய தேசிய ஒருமைப்பாட்டடை பாதிக்கும் என்பதோடு இந்தியாவில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு சார்பாக அமைந்துவிடும் என்பதால் இந்தியா இலங்கையில் தனிநாடு உருவாகுவதை விரும்பாது என்று ஜே.வி.பியினர் கருதுகின்றனர்.

எனவே இந்தியா சமாதான முயற்சிகளில் ஈடுபடுவதை அவர்கள் வரவேற்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கு ஊடாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்
Reply
#71
இந்தியாவோடு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து
புலிகளின் விமானத்தளத்தை அழியுங்கள்!

அரசுக்கு யஹல உறுமய அவசர வேண்டுகோள்
தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் யுத்த மொன்றுக்குத் தயாராகிவிட்டனர். அவர்களி டம் இப்போது விமானப்படையும் இருப்பது பெரும் ஆபத்தாகும். இவ்வாறான நிலையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன டியாகச் செய்து புலிகளின் விமானத்தளங் களை அழிக்க ஐனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- இவ்வாறு ஜாதிக யஹல உறுமய நேற்று அவசர வேண்டுகோளொன்றைவிடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று யஹல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வண. எல்லாவல மேதானந்ததேரர் தலைமை யிலான தேரர்கள் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். அந்தச் செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அங்கு வண. எல்லாவல மேதானந்த தேரர் மேலும் கூறியதாவது:-
உலகில் இல்லாத அதிகாரங்களையயல் லாம் இந்த அரசு பிரபாகரனுக்கு வழங்கியி ருக்கிறது. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின் னர் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கவேண்டும். ஆனால், அந்த அதிகாரத்தைப் பிரபாகரனுக்கு வழங்கிவிட்டு அரசு விழிபிதுங்கி நிற்கின்றது. ஆழிப்பேரலையின் பின்னர் விடுதலைப் புலி கள் மேலும் பலமடைந்திருக்கின்றனர்.
ஆழிப்பேரலைக்கு முன்னர் புலிகளிடம் விமான ஓடுபாதைத்தளம் மட்டுமே இருந்தது. இப்போது விமானமும் இருக்கிறது. இது தேசி யப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். பத்தாயி ரம் அடி உயரத்தில் நீண்டதூரம் வரை செல் லக்கூடிய விமானங்களை வைத்துக்கொண்டு புலிகள் நாடாளுமன்றம், இராணுவத்தலை மையகம் மற்றும் பொருளாதார கேந்திர ஸ்தா னங்களைத் தாக்கக்கூடும் .
எனவே, இந்தியாவுடன் விரைந்து பாது காப்பு உடன்படிக்கையயான்றைச் செய்து புலி களை அடக்கவேண்டும்.

----------------------- --------------------------------------------

பாகிஸ்தான் தலையீடு: இந்தியாவுக்கு எச்சரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கம் விமானப் படை ஒன்றை அமைத்து அதனை விஸ்தரித்து, விருத்தி செய்து வருவதா கச் செய்திகள் வெளியான பின்னணியில் விமான நகர்வு களைத் துல்லியமாகக் கண்டறியும் நவீன மரடார்டு கருவி வசதிகளை இலங்கைக்கு வழங்குவதற்குப் பாகிஸ்தான் முன் வந்தி ருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இந்நடவடிக்கைக்கு அமெரிக்க அரசின் ஆதரவும், ஆசீர்வாதமும் கூட பின்னணி யில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் தனக்கென விமானத்தளம், விமானப்படை ஆகியவற்றை அமைத்து, விமானங்களைச் சுவீகரித்தது மட்டுமல்லாமல் விமானத்தளத்துக்கான வான் வழிப் பாதுகாப்பு வலையமைப்பையும் நிறுவியுள்ளது எனக் கிடைத்த ஊடகத் தவல்கள் இலங்கை அரசுத் தலைமையைப் பீதியில் கிலிகொள்ள வைத்திருக்கின்றன எனத்தெரிகின்றது. புலிகளின் இந்த நடவடிக்கை குறித்து யுத்தநிறுத்தக் கண் காணிப்புக்குழு, நோர்வே அனுசரணையாளர்கள் எனப் பல தரப்பினரிடமும் இலங்கை அரசு முறையிட்டுள்ளது.

இலங்கை அரசு, அமெரிக்காவிடமும் முறையீடு செய்து உதவியும் பாதுகாப்பும் கோரி மண்டியிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலிஸாரைஸுக்கு இறைஞ்சிக் கடிதம் எழுதியிருந்தார் எனச் செய்திகள் வெளி யாகியிருந்தமை தெரிந்ததே. அந்த இறைஞ்சுதலுக்கே இப்போது கைமேல் பலன் கிட்டியிருக்கின்றது. அமெரிக்க ஆசீர்வாதத்துடன் நவீன மரடார்டு கருவிகள் பாகிஸ்தான் மூலம் இங்கைக்குக் கிடைக்கவிருக்கின்றன. விடுதலைப் புலிகளிடம் இருப்பதாகக் கூறப்படும் விமா னங்களின் நகர்வுகளைத் துல்லியமாகவும், தெளிவாகவும் இந்த மரடார்டுகள் கண்டுபிடித்து இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு வெளிப்படுத்துமா என்பது ஒருபுறமிருக்க, பாகிஸ் தானின் உதவியுடன் உயர் தொழில்நுட்ப மரடார்டுகளை இலங்கைக்குள் செயற்படுத்துவது இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பையும், அதற்குச் சார்பான திறமையையும் எவ்வளவு தூரம் அதிகரிக்கவைக்கும் என்பதும் மறுபுறத்தில் கவனிக்கப்படவேண்டியவை ஆகும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையத்தில் அமைந்துள்ளது. இங்கு தனது ஏற்பாட்டில் ஓர் உயர்தொழில்நுட்ப மரடார்டு கருவித் தொகுதியைப் பொருத்த உதவும் சாக்கில் இப்பிராந்தியத்தின் சகல வான்நகர்வுகளையும் தான் அறிந்துகொள்ளும் ஒரு வலிமையை இத்தொழில்நுட்பத்தில் உயர்ந்த திறமையும், பரிச்சயமும் உள்ள ஒரு நாடு இலகுவில் சுவீகரித்துக் கொள்ளமுடியும் என்பதும் கவனிக்கப்படவேண்டிய அம்சமாகும். புலிகளின் விமான அச்சுறுத்தல் என்ற போர்வையில் பாகிஸ்தானும், அதன் ஞானத் தந்தையான அமெரிக்காவும் தமது உயர்தொழில் நுட்பக் கருவிகள்மூலம் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்கு உதவக்கூடிய அம்சங்களுடன் இங்கு காலூன்றக்கூடிய வாய்ப்பு இருப்பதை அடியோடு ஒதுக்கி விட முடியாது. இதுபற்றி அதிக சிரத்தை கொள்ளவேண்டிய நாடு, இலங் கைக்கு முன்னர் இந்தியா என்பதுதான் முக்கிய அம்சமாகும். அமெரிக்க ஆதரவோடு பாகிஸ்தான் ஏற்பாட்டில் இலங்கை யில் உயர்தொழில்நுட்ப மரடார்டு வசதிகளைப் பொருத்துவது இந்தப் பிரதேசத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவின் பாதுகாப்புப்கே முதல் அச்சுறுத்தல் ஆகும். இது இந்தியா வுக்கு விடப்படும் சவால் என்றே கொள்ளப்படவேண்டும். மமதெற்காசியத் தென்முனையில் இலங்கையைத் தளமா கக் கொண்டு அமெரிக்கப் படையணிகள் வேகமாக ஊடுரு வுவதால் தெற்காசிய மக்களின் தற்சார்புக்கும், பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது." - என்று தமிழகத்தில் இருந்து வெளியாகும் மதினமணிடு நாளி தழ் கடந்த சனியன்று எச்சரிக்கை செய்திருந்தது.

1994ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கத் தலையீடு, ஊடுருவல் எப்படியயல்லாம் நிகழ்ந் திருக்கின்றன என்பதை அந்த ஆசிரியத் தலையங்கம் விலா வாரியாக விளக்கியிருக்கின்றது. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்ப் பகுதிகளுக்குள் அமெரிக்கா எவ்வாறு காலூன்றித் தனது வலையமைப்பைப் பின்னி, தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்கின் றது என்பதை அந்த ஆசிரியத் தலையங்கம் விவரமாக விவ ரிக்கின்றது. மமநேரு, இந்திரா, பண்டாரநாயக்கா, சிறிமாவோ ஆகிய இரு நாட்டுப் பிரதமர்களும், பாகிஸ்தானுக்கு வெளியே தெற் காசியாவில் வேறெந்த நாட்டிலும் அமெரிக்க ஊடுருவலுக்கு இடமளிக்காமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், இன்று அமெரிக்கப் படையணி இலங்கையைத் தளமாகக் கொண்டு தெற்காசியத் தென்முனையில் ஊடுருவியுள்ளது.டுடு - என்று மதினமணிடு எச்சரித்திருந்தது. அந்த எச்சரிக்கை நியாயமானது என்பதைத்தான் அமெ ரிக்க ஆசீர்வாதத்தோடு பாகிஸ்தான் இலங்கையில் உயர் தொழில்நுட்ப மரடார்டு கருவிகளைப் பொருத்துவதை நோக்க வேண்டும். எனவே, இவ்விடயங்கள் இந்தியாவுக்குச் சமர்ப்பணம்.

நன்றி: உதயன்
Reply
#72
இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்திய அரசு செய்யவே செய்யாது!

புதுடில்லித் தலைமை தெளிவாகத் தெரிவிப்பு
"இலங்கையோடு பாதுகாப்பு ஒப்பந்தமா? அப்படி ஒன்று இப்போதைக்கு இல்லவே இல்லை' - இவ்வாறு தெளிவாகத் தெரிவித்துவிட்டது இந்திய அரசுத் தலைமை.
இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றின் தலைவரிடமே இந்தி யப் பிரதமரும்இ பாதுகாப்பு அமைச்சரும் கடந்த வெள்ளியன்று இந்தத் திட்டவட்டமான முடிவைத் தெரிவித்தனர் என அறியவந்தது.

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய் திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்இ அங்கிருந்து திரும்பிய பின்னர் இலங்கை - இந்தியப் பாதுகாப்பு ஒப் பந்தம் விரைவில் கைச்சாத்தாகும் என்ற சாரப் பட கருத்து வெளியிட்டு வந்தார்.
இது தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மத்தியில் குழப்பத்தையும் எரிச்சலையும் ஊட்டி யதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்திய மத்திய அரசில் கூட்ட மைத்து இணைந்துள்ள தமிழகக் கட்சி ஒன் றின் மூத்த தலைவர் ஒருவர் கடந்த வெள்ளி யன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கையும் வெளிவிவகார அமைச் சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து இது விட யம் குறித்து விளக்கம் கோரினார் எனத் தெரி கின்றது.
அப்போதேஇ இலங்கை - இந்தியப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இப்போது இட மில்லை என்ற தங்கள் நிலைப்பாட்டை அவர் கள் இருவரும் சம்பந்தப்பட்ட தமிழகத் தலை வருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர் என்று நம்பகரமாக அறியவந்தது.
அரசுக் கூட்டமைப்பில் உள்ள தமிழகக் கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரியாமல் இவ் விடயத்தில் ஒரு காய்நகர்த்தலும் இடம்பெறவே பெறாது என்றும் அவர்கள் இருவரும் தமிழகத் தலைவருக்கு உறுதி வழங்கினர் என்றும் கூறப் பட்டது.
தமக்கு இத்தகைய உறுதிமொழி அளிக் கப்பட்டிருப்பது பற்றிய அறிவிப்பை சம்பந்தப் பட்ட தலைவர் இன்று அல்லது நாளை உத்தி யோகபூர்வமாக வெளிப்படுத்துவார் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இந்திய அரசின் இந்த நிலைப்பாடு சம் பந்தப்பட்ட தரப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப் பதாகவும் அறியவந்தது.
நன்றி: உதயன்
Reply
#73
ஒளவை என்றொரு எழுத்தாளர் யாருக்காவது தெரியுமா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அலர் தந்தை பெயர்மகாகவி 8)
பிறந்தது கொழும்பு :wink:
யாழ்ப்பாணம்வந்தது 83லை அடிவாங்கிகொண்டு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சொந்த இடம் அளவெட்டி <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
அவர் அண்ணனும் எழுத்தாளர் : :?
இப்ப இருப்பது இந்தியா Confusedhock:
அவரின் எழுத்துக்கள் :twisted:
என்ன அன்பகம் :roll:
; ;
Reply
#74
மன்னிக்கவும் இதற்கு நான்பதில் அழித்தால் என்னை அரசியல்வாதியாக்கிவிடுவீர்கள் அல்லது அரசியல்வாதியாக என்னை முத்திரைகுத்திவிடுவீர்கள்... அது அல்ல.... அதற்க்குமேல... ஏதோ ஒன்று... அடியேன்... :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :|
Reply
#75
இந்தியாவுடனான உறவு

சர்வதேச அரசியல் ஒழுங்கில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதுடன் அவசியமானவையும் கூட. எந்த ஒரு கருத்தையோ அல்லது கொள்கையையோ இறுக்கமாகக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பது காலத்துக்கேற்ற திசையில் செல்ல முடியாத முட்டுக்கட்டை நிலை ஒன்றை ஏற்படுத்தும் என்பது சர்வதேச அரசியல் நகர்வுகளில் உணர்ந்து கொள்ளப்பட்ட ஒரு விடயம்!

ஈழப் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடும் இவ்விதம் காலத்துக்கேற்ற மாற்றத்தை உள்வாங்காத ஒன்றாகவே இருக்கின்றது. இலங்கையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ராஜீவ் காந்தியின் படுகொலை என்ற இரண்டு முடிச்சுக்களாலும் கட்டுண்ட நிலைமையில் இந்த விவகாரம் இறுக்கமானதாக இருக்கிறது.

இந்த இறுக்கத்தைத் தளர்த்துவது காலத்தின் தேவை என்பதை இந்தியத் தரப்பினரும் விடுதலைப் புலிகளும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் வந்திருக்கின்றது. அதேவேளையில் இரு தரப்பினரது நலன்களுக்கும் இந்த இறுக்கம் தளர்த்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.

இந்தப் பின்னணியில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விஷேட செய்தியொன்று லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களை நோக்க வேண்டியுள்ளது. இந்தச் செய்தியை இந்தியத் தரப்போ அல்லது புலிகளின் தலைமையோ மறுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பிட்ட இணையத்தள செய்தியாளர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள கட்டுரையில் முக்கியமான பல தகவல்களையும் வெளியிட்டிருக்கின்றார். லண்டனிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரைச் சந்தித்த பின்னர் வன்னி சென்று விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களையும் சந்தித்ததாக இங்கு கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் லண்டன் திரும்பிய போதே பிரபாகரனின் முக்கிய செய்தியுடன் சென்றதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவுடனான உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதில் தமக்குள்ள விருப்பத்தை விடுதலைப் புலிகள் நீண்ட காலமாகவே வெளிப்படுத்தி வருகின்றார்கள். இருந்த போதிலும் இவ்விடயத்தில் திட்டவட்டமான சமிக்ஞைகள் எதுவும் இந்தியத் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கவில்லை.

சர்வதேச அரசியலில் முரண்பாடுகள் மோதல்கள் பின்னர் சமாதானம் என்பது ஒரு வழமையான நிகழ்வு. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இறுதியாக நடைபெற்ற யுத்தத்துக்கு காரணகர்த்தா எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜெனரல் முஷாரப். அவர் பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில்தான் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவலை நடத்தியது. அந்த ஊடுருவலைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி யுத்தம் இடம்பெற்றது.

அதே முஷாரப் இராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி இந்தியாவுக்கும் சமாதானக் கொடியைக் காட்டினார். இந்தியாவும் செங்கம்பள வரவேற்பளிப்பதுடன் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்வையிடுவதற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அரசியலைப் பொறுத்த வரையில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்ற கோட்பாட்டை இது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் சர்வதேச அரசியலில் யதார்த்தமும் அதுதான்!

அந்த யதார்த்தத்தை ஈழத் தமிழர்கள் விவகாரத்திலும் இந்தியா பிரயோகிக்க முற்படாதது பல சிக்கல்களுக்குக் காரணமாக இருந்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகளுக்கும் இந்தியத் தரப்புக்கும் இடையே எழுதப்படாத புரிந்துணர்வு ஒன்று ஏற்பட்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தமிழர்களுடைய நலன்களுக்கு விரோதமாக செயற்படுவதில்லை என இந்தியாவும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்படுவதில்லை என புலிகளும் உறுதியளித்திருப்பதாக இந்த இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் செய்தியில் எந்தளவுக்கு உண்மை இருந்தாலும் இரு தரப்பு நல்லுறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான பாதை இதுதான் என்பது மட்டும் உண்மை.

ஈழப் பிரச்சினையில் இந்தியா கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் தலையிடாக் கொள்கை சிங்கள ஆளும் வர்க்கத்துக்கே சாதகமாக அமைந்திருந்தது. "தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகள் நிறைவு செய்யப்படும் வகையில் இனநெருக்கடி தீர்க்கப்பட வேண்டும்" என இந்திரா காந்தி காலத்திலிருந்து கூறி வந்த இந்தியா பின்னர் - "அனைத்து இனத்தவர்களினதும் அபிலாஷைகளையும் நிறைவு செய்யும் வகையில் இன நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும்" என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

இந்தியாவின் இந்த மாற்றத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலேயே சிங்கள ஆளும் வர்க்கம் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளது. இந்திய விஸ்தரிப்பு வாதம்' பற்றி தமது இரண்டாவது புரட்சியின் போது போதித்த ஜே.வி.பி.யினர் இன்று இந்தியாவை நண்பனாக அறிவிக்கின்றனர். இந்தியாவுடனான நட்பை விரும்புவதாலல்ல இந்தியாவை தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்ற அவர்களுடைய ஒரே நம்பிக்கையே இதற்குக் காரணம்.

தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தைத் தொடுப்பதினால் இந்தியாவை விட இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அதிகளவுக்குப் பயன்படுத்தலாம் என்றால் சிங்கள ஆளும் வர்க்கம் அதனைத்தான் விரும்பும். கடல்கோளுக்குப் பின்னரான நிகழ்வுகளும் சமீபத்திய சீனப் பிரதமரின் விஜயமும் உணர்த்துவது அதனைத் தான். இலங்கை தொடர்பான இந்திய இராஜதந்திரம் இந்தச் சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்தித்தது!

ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் ஸ்திரமற்ற நிலைப்பாடு - இந்திய நலன்களுக்கே பாதகமானது. இந்தியாவுக்கு எதிரான சக்திகளும் அதனை இந்திய நலன்களுக்கு விரோதமாகவே பயன்படுத்திக் கொள்ளும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஈழத் தமிழர்களுடனான தன்னுடைய உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலமாகவே பிராந்தியத்தில் தனக்கெதிரான சக்திகளை பலமிழக்கச் செய்ய முடியும் என்பதை இந்தியா இந்தச் சந்தர்ப்பத்திலாவது புரிந்து கொள்வது அவசியம்.
நன்றி: தினக்குரல்
Reply
#76
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா இடம் பிடிப்பதாயின் முதலில் இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்

அரசியல் விமர்சகர் கல்யாணந்த கொடகே கூறுகிறார்

ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் தனக்கென ஒரு இடத்தை இந்தியா கைப்பற்ற வேண்டுமெனின் அது முதலில் தனது பிராந்தியத்தில் பாரிய பாதுகாப்புப் பிரச்சினையாக விளங்கும் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி செய்ய வேண்டுமென ஆங்கில தினசரியொன்றிற்கு எழுதியுள்ள கட்டுரையில் அரசியல் விமர்சகரான கல்யாணந்த கொடகே குறிப்பிட்டுள்ளார்.

பாரிய சனத்தொகையையும் அணுவாயுதங்களையும் மட்டும் வைத்திருப்பதன் மூலம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. குறைந்த பட்சம் தனது பிராந்தியத்திலாவது சமாதானம் மற்றும் சுபீட்சத்தை நிலை நாட்டுவதில் அர்த்தமுள்ள பங்களிப்பை இந்தியா நல்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர் இதுவரை இந்தியா சமாதான பாதுகாப்பு விடயங்களை உணர்ந்து கொண்டு அதற்கு துணை புரியும் வகையில் சாதித்தது என்னவென்று கேள்வியெழுப்புகிறார்.

இந்தியாவின் தோழனாக நான் இருக்கின்ற போதும் ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்திற்கான போட்டியில் இந்தியாவுக்கு தோல்வி என்றே முடிவு கூறுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்துவதற்கான வல்லமை இந்தியாவுக்கு இல்லாதிருக்க வேண்டும். அல்லது அதற்கான அரசியல் விருப்பு அற்று இருக்க வேண்டும். தமது பிரச்சினையைத் தீர்க்க முடியாத இந்தியாவால் எவ்வாறு எமது பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்து சர்வதேச பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்கும் உத்தரவாதம் அளிக்க முடியும்? என கேள்விகளை அவர் மேலும் தொடுக்கிறார்.

இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்திய பங்களிப்பு முன்னணி வகிக்க வேண்டுமென கொடகே அழைப்பு விடுக்கிறார். ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இருப்பானது இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஒரு அச்சுறுத்தலாக அமைகிறது. இலங்கையின் அரசியலிலே இரு துருவங்களாக விளங்கும் ஜனாதிபதி சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும் இனப்பிரச்சினைக்கான சாத்தியமான தீர்வு குறித்து பொது உடன்பாடொன்றை எட்டுவதற்கு இந்தியா தகுந்த சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவேண்டும்.

பல தசாப்தங்களாக இப்பிரச்சினை இலங்கையை அழித்து வந்தமைக்கு இர பிரதான அரசியல் கட்சிகளும் ஒருமித்த பார்வையுடன் இதனை நோக்காததே காரணமாகும்.

வரலாற்று ரீதியான காரணங்கள் தவிர அண்டை நாடென்ற வகையில் இலங்கையின் பாதுகாப்பிற்கும் நிலைத்தன்மைக்கும் ஆதரவு வழங்கக் கூடிய ஒரே ஒரு நாடு இந்தியாவே. ஆகவே சற்று விலகி நிற்கும் கொள்கையை இந்தியா கைவிட்டு இலங்கைக்கு சமாதானத்தை வரவழைப்பதில் இந்தியா உச்சப்பங்கை வழங்க வேண்டுமெனவும் கொடகே கோரியுள்ளார்.

ஜூன் 2003 இல் டோக்கியோ மாநாட்டில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான் மற்றும் நோர்வே ஆகியன சர்வதேச நிதி குறித்து தீர்மானிக்க பங்குபற்றியிருந்தன. ஆனால் இந்தியா விடுதலைப் புலிகள் இம்மாநாட்டில் சமுகமளிக்கவிருப்பதை காரணங்காட்டி அதில் பங்குகொள்ள மறுத்து விட்டது. ஏனெனில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிலே தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும்.

எனினும் அவ்வியக்கத்தை தடை செய்துள்ள அமெரிக்கா மாநாட்டில் பங்குபற்றியதை சுட்டிக்காட்டும் கொடகே அமெரிக்காவிற்கு வற்புறுத்த வேண்டிய தேவையில்லை. அவர்களின் பொறுப்புகளை அவர்கள் நன்கு உணர்ந்தவர்கள். உலகின் ஏக அதிகாரத் தலைவன் என்பதோடு மட்டுமல்லாது அமெரிக்கா இலங்கையின் விசுவாசமான நீண்டகால நண்பனும் கூட என அவர் அமெரிக்காவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
நன்றி: தினக்குரல்
Reply
#77
தேச விரோதிகளின் பின்னணியில் இந்தியா

பிரவீனா
சுறுவில் காட்டுப் பகுதியான வண்ணத்துறையடி காட்டுப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தேச விரோதிகள் பலியான சம்பவம் சிறிலங்காப் படைப் புலனாய்வுக்கு பெரும் பின்னடைவையும் சிறிலங்கா அரச படைகள் இது வரை காலமும் மூடிவந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையிலும் மற்றுமொரு மர்மம் மறைந்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மர்மமாக மறைக்கப்பட்ட நான்கு சடலங்களும் இந்தியர்களது சடலங்களாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படியானால் தேசவிரோதிகளிற்கு பின்னணியில் இந்தியா உள்ளதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.

தீவுச்சேனையில் தேசவிரோதக் கும்பல் முகாமிட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் கடந்த மாதம் பொலநறுவை மா வட்டத்திலுள்ள தீவுச்சேனைப் பகுதிக்குச் சென்று அங்கு தேசவிரோத ஆயுதக் குழு இருப்பதை புகைப்படங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் சிறிலங்காப் படைத்தரப்பின் பேச்சாளர் தீவுச்சேனையில் எந்த ஒரு ஆயுதக் குழுவும் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கவில்லையெனத் தெரிவித்திருந்த போதும் உண்மைகள் ஊடகங்கள் வாயிலாகக் கசியத் தொடங்கின.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த மட்டக்களப்பு மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைமை அதிகாரி ஸ்ரீபன் ஜோர்ன்சன் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுப் பிரிதிநிதி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அப்பிரதேசத்தை சுத்திகரித்து தெளிவுபடுத்த முயற்சித்த படைத்தரப்பு தீவுச்சேனைப் பகுதியில் கொட்டில்கள் அமைத்து படையினருடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுவை அவசர அவசரமாக இடமாற்றினர்.

பொலநறுவை மாவட்டம் திம்புலாகலப் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட அரலகன்வில பொலிஸ் பிரிவிலுள்ள சொறுவில் தமிழ்க் கிராமத்திற்கு தெற்காக ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள வண்ணத்துறை ஆற்றோரமாக இந்தக் கும்பலின் முகாம் அமைக்கப்பட்டது. மீண்டும் ஊடகவியலாளர்கள் உள்நுழைந்து இந்த ஆயுதக் கும்பல் தொடர்பான செய்திகள் புகைப்படங்கள் வெளிவரக் கூடாது எனக் கருதியே வண்ணத்துறையடிக் காட்டுப் பகுதிக்கு இவர்கள் அனுப்பப்பட்டார்களாம்.

அத்துடன் படை முகாம்கள் சிங் கள ஊர்காவல் படையினர் சிங்கள கிராம மக்களுக்கும் இக்குழுவினர் தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என படை அதிகாரிகளால் அறிவூட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் காட்டுப் பகுதியில் ஐந்து கொட்டில்கள் இருந்துள்ளன. இவற்றில் காணப்பட்ட தடயங்களின் அடிப்படையில் 11 பேர் இருந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

அங்கு 11 சோடி பாதணிகள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் யாரால் நடாத்தப்பட்டது. என்பது தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் காணப்பட்டன.

ஒன்று தாக்குதல் அணி சென்று முகாமைத் தாக்கியிருக்கலாம். அல்லது உள்ளிருந்தே தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம். இதில் விடுதலைப்புலிகள் தரப்பில் இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தெரியப்பட்டதை அடுத்து உள்ளிருந்தே தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இத்தாக்குதலின் போது ஐவரது சடலங்களே படைத்தரப்பினரால் மீட்கப்பட்டன. இருவர் காயமடைந்து பொலநறுவைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே.

எனினும் மீட்கப்பட்ட ஐவரது சடலங்களில் விஜயன் என்பவரது சடலமும் மர்மமான முறையில் மறைக்கப்பட்ட நான்கு பேரது சடலங்கள் பற்றியும் வாசகர்கள் அறிந்திருக்க வேண்டியதே இப்பத்தியின் நோக்கமாகும்.

இதில் உயிரிழந்த விஜயன் என அழைக்கப்படும் ராஜேந்திரன் பேரின்பநாதன் தேசவிரோதக்கும்பலான ஈ.என்.டி.எல்.எவ்ச் சேர்ந்தவர். திருமலையைச் சேர்ந்த இவர் ஈ.என்.டி.எல்.எவ் பின் முக்கிய சகாவாகக் கருதப்பட்டவர்.

1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழின விடுதலை விரோதச் சக்திகளை பலப்படுத்தி விடுதலைப்புலிகளை அழித்தொழித்து விடலாம் என இந்தியா கனவு கண்டது. இதற்கான நடவடிக்கையில் இந்திய ~~றோ|| முன்னின்று செயற்பட்டது.

இக்கால கட்டத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் புளொட் அமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை உருவாக்கினர்.

பரந்தன் ராஜன் தலைமையிலான இந்த ஈ.என்.டி.எல்.எவ் இந்திய ~~றோ||வின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தது. இந்தியப்படை தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த கால கட்டத்தில் ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பு கிழக்கில் மேற்கொண்ட தேச விரோத அராஜகத்தனங்கள் சொல்லில் அடங்காதவை.

விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பைவிட தமிழ்த் தேச விரோதச் சக்திகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஒரு படையை உருவாக்கி மோதவிடுவதற்கான முயற்சிகள் ~றோ|வின் சதித்திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட போது பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கிழக்கில் வீதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு இந்தியப் படை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் இவ்வாறு தமிழ் இளைஞர்களை கைது செய்வதிலும் கட்டாயப் பயிற்சி வழங்குவதிலும் ஈ.என்.டி.எல்.எவ் கடுமையாக நடந்து கொண்டது. தமிழ் மக்கள் ~~புள்ளை புடிக்கிறானுகள்|| என திட்டித் தீர்த்தனர். ~றோ|வின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ~~தமிழ்த் தேசிய இராணுவம்|| இந்தியப் படை வெளியேற்றதுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் நிராயுதபாணிகளாக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம்.

அதே காலகட்டத்தில் ஈ.என்.டி.எல்.எவ் மற்றும் புளொட்ää ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்கள் இந்தியப் படை யுடன் சேர்ந்து அராஜக நடவடிக்கையில் ஈடுபட்ட போது கணிசமான தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து வலுச் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் படை வெளியேற்றத்தைத் தொடர்ந்து கிழக்கில் முக்கிய வர்த்தகர்கள் பிரமுகர்களிடம் பெரும் தொகைப் பணத்தை ஆயுதமுனையில் மிரட்டி பறித்த ஈ.என்.டி.எல்.எவ் இந்திய இராணுவத்துடன் வெளியேறி சேலத்தில் நிலை கொண்டது. அந்தக் காலகட்டத்தில் தான் சொறுவில் தாக்குதலில் பலியான விஜயனும் சென்றிருந்தார். பின்னர் ஏனைய தமிழ்க் குழுக்கள் சிறிலங்கா சிங்கள அரசியல் தலைமைகளுடனும்ää உறவுகளைப் பேணி இலங்கையில் காலூன்றிய போது ஈ.என்.டி.எல்.எவ் இந்தியாவிலிருந்து கொண்டு ~றோ|வுடன் நெருக்கமாக தொடர்புகளைப் பேணி வந்தது. தற்போது கூட பலியான விஜயனின் குடும்பத்தினர் சேலத்தில் உள்ளனர்.

இத்தகைய நிலையில் சொறுவில் தாக்குதலின் பின்னர் கிடைக்கப்பெற்ற தடயங்களிலிருந்து மறைக்கப்பட்ட நான்கு சடலங்களும் இந்தியர்களுடைதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அங்கு மீட்கப்பட்ட பொருட்களில் இருந்து இந்திய வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு சாக்குகளில் துப்பாக்கி ரவைகள் இராணுவ உருமறைப்பு வலைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. மற்றும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்களில் பல பதவியா இராணுவ அதிகாரிகளின் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழ் இளைஞர்களுடையது. மற்றும் சில புகைப்படங்கள் இராணுவ அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவையாகும்.

இவை எல்லாவற்றையும் நன்கு அவதானிக்கும் போது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இந்திய சிறிலங்கா அரசுகள் தேசவிரோத சக்திகளின் துணையுடன் மிகப்பெரிய சதி முயற்சியில் ஈடுபடுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினையில் சுயலாப அரசியல் நலன்களுக்காக மூக்கை நுழைத்த இந்தியா இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை அடுத்து தலையிடாக் கொள்கையைக் கடைப் பிடித்து வருகிறது. ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு துன்பியல் நிகழ்வு என விடுதலைப்புலிகளால் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அதனை ஏற்றுக் கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் எத்தகைய ஆரோக்கியமான சூழலையும் கொண்டிருக்கவில்லை.

மாறாக சிறிலங்கா அரசுக்கு போர்க்கப்பல்களையும் சிறிலங்காக் கடற்படையினருக்கு மேலதிக பயிற்சிகளையும் வழங்குவதிலேயே இந்திய அக்கறை காட்டி வருகிறது.

மறுபுறம் சமாதான முயற்சிகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையல் இனவாதத்தை கக்கி வரும் ஜே.வி.பி போன்ற பேரினவாதச் சக்திகள் இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில்தான் சொறுவில் வண்ணத்துறையடி ஆற்றோரமாக உள்ள தேசவிரோதிகளின் முகாமிலிருந்து மீட்கப்பட்ட இந்திய சாரதி அனுமதிப் பத்திரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறன.

சிறிலங்கா அரசிற்கு வழங்கும் நேரடி இராணுவ உதவியோடு ஈ.என்.டி.எல்.எவ் மற்றும் தேச விரோதச் சக்திகளைப் பலப்படுத்தி அதன் மூலம் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடாத்தி புலிகளுக்கு நெருக்குவாரங்களைக் கொடுக்கும் சதித்திட்டத்தில் இந்தியா ஈடுபடுகின்றதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

போர்நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டு மூன்றாண்டுகளாகின்றன. சமாதானப் பேச்சு வார்த்தைகள் சிங்கள ஆளும் தரப்பினால் இழுத்தடிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில் ஆழிப்பேரலை அனர்த்தத்தாலும் தமிழர் தாயகம் சிதைவடைந்து நலிவடைந்து கிடக்கிறது.

எனவே ஐரோப்பிய சமூகம் உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருக்கும் நிலையில் பாரதம் பாராமுகமாக இருப்பது கவலைக்குரியது.

இலங்கையின் அண்டை நாடு என்ற வகையிலும் தமிழக மக்களின் உ ணர்வுகளுக்கும் மதிப்பளித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது தார்மீக கடமையாகும் அல்லாதுவிடின் உபத்திரமாவது செய்யாதிருப்பது மேன்மை தரும்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
Reply
#78
தெற்காசியாவின் கட்டுப்பாட்டை படிப்படியாக இந்தியா இழக்கிறது
- இந்திய ஆய்வாளர்

இந்தியாவிடம் தெளிவான வெளிநாட்டு கொள்கைகள் இல்லை என்றும் இதன் காரணமாக அந்நிய சக்திகள் தெற்காசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் இந்திய ஆய்வாளர் ஒருவர் இதன் மூலம் இந்தியா படிப்படியாக தெற்காசியப் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை இழந்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையிடாத கொள்ளை காரணமாகவே நோர்வே மத்தியஸ்த முயற்ச்சிக்கு அழைக்கப்பட்டது என்றும் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டிய இந்தியா தனது இயலாமை காரணமாக நோர்வேயிடம் இலங்கை விவகாரத்தை கையளிக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தான் வெளிப்படையான ஆதரவை தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்தியா தொடர்ந்தும் இது போன்ற தலையிடாக் கொள்கைகளை கடைப்பிடிக்குமானால் தெற்காசிய பிராந்தியத்தின் ஆதிக்கம் பாகிஸ்தானிடம் செல்வதை தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் வான்படை குறித்தும்ää கடற்புலிகளின் வளர்ச்சி குறித்தும் தனது கவலையை நோர்வே தரப்பிடம் தெரிவிக்கும் நிலைக்கு இந்தியா பலவீனப்பட்டுள்ளதையே அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் எடுத்து காட்டுவதாகவும் அந்த ஆய்வாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: சங்கதி
Reply
#79
'விடுதலைப்புலிகள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை'- ஜெயலலிதா

விடுதலைப் புலிகளை தமிழ் நாட்டில் செயற்பட அனுமதிக்கக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தன்னைக் கொல்வதற்கு விடுதலைப்புலிகள் ஒரு தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணை அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகமே அண்மையில் தனக்கு அறிவித்தது என்றும், ஆனாலும் தனது விடுதலைப்புலி எதிர்ப்பில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது இடைவிடாத நடவடிக்கைகளால்தால் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் எரிபொருள் கடத்துவதாக கூறும் மத்திய உள்துறையின் அண்மைய அறிக்கை ஒன்றையும் அவர் கண்டித்திருக்கிறார்.


பிபிசி தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#80
Mathan Wrote:'விடுதலைப்புலிகள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை'- ஜெயலலிதா


தன்னைக் கொல்வதற்கு விடுதலைப்புலிகள் ஒரு தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணை அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகமே அண்மையில் தனக்கு அறிவித்தது என்றும், ஆனாலும் தனது விடுதலைப்புலி எதிர்ப்பில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.


பிபிசி தமிழ்
<b>உன்னை நாங்கள் ஏன் கொலை செய்வான் நீயே வீங்கி வெடிச்சுப்போடுவாய் போல கிடக்கு.</b>
[size=16]<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)