Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா பச்சோந்திக்கு வாழத்தெரியும் வீழத்தெரியாது...சூழலுக்கேற்பதாய் நிறம் மாறும் குணம் மாறாது...ஆனால் உங்கள் போல் விட்டில் பூச்சிகள் தன் வாயாலேயே தான் அழியுங்கள்..!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Repeated message. Error ... sorry about that.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Repeated message. Error ... sorry about that.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நாம் என்ன செய்யிறது? நீங்க சொன்ன மாதி தமிழ்ல மாத்தி எழுதாம ஆங்கிலத்துல எழுதினா புரியல்ல இது தமிழ் களம் நமக்கு ஆங்கிலம் தெரியாதுன்னு சொல்றாங்க சரின்னு மாத்தி நல்ல தமிழ்ல எழுதினா அதுவும் புரியல்ல. அப்ப என்ன தான் செய்றது? மிச்சம் கரச்சலா இருக்கில்ல?
ஆங்கிலத்தில் எழுதினால் புரியாது என்பது விதண்டாவாதம்,சங்ககால நடையில் எழுத வேண்டாம் என்று தான் நானும் சொன்னேன் எளிய தமிழில் எழுதுங்கள் உங்களுக்கே விளங்கும்
அப்புறம் அப்பு நாங்கள் இங்கை சிங்கப்பூரிலை மக்கிலை சாப்பிடும் போதும் சரி யாழ்ப்பாணம் மலாயன் கபேயிலை சாப்பிடும் போதும் சரி தமிழ் வாழ்க தமிழீழம் வாழ்க என்று சொல்லிக்கொண்டு சாப்பிடுவதில்லை அது எங்கள் மூச்சில் கலந்துவிட்ட விசயம் ஒவ்வொருதரம் சுவாசிக்கும் போதும் இதயமே சொல்லிக்கொள்ளும் அத்துடன் விசாவுக்கு ஒரு கதையும் விலாசத்துக்கு ஒரு கதையும் சொல்லும் ஆட்கள் நாங்கள் இல்லை
அத்துடன் ஏதோ வரலாற்றை சுருட்டி மடியில் கட்டிய கதை சொல்கிறீர்கள் உமக்கு எவர் சொன்னார் தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்று உங்கள் வடக்கத்தையார் இந்தியா வர முன்னரே அங்கே இருந்தது திராவிட பழங்குடி சிந்துவெளி நாகரீகம் பற்றி புத்தகம் எங்காவது இருந்தால் ஒருதரம் வாங்கிப்பாருங்கள் சமஸ்கிருத சொற்களை எடுத்துவிட்டால் தமிழ் அழகு பெறும் அழிந்துவிடாது
அப்பு உமக்கு வயசாகியும் விளப்பம் இல்லை நானும் அசல் யாழ்ப்பணத்தான் தான் உம்மை விட நாட்டு க்கதை நல்ல வரும் ஆனால் பாருங்கோ இப்படி கதைக்கலாம் எழுதினால் நல்லாவே இருக்கு
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
வீரயாழ்ப்பனைவட்டுப்பொன்னன்: பனங்காய் பொறுக்கினாயா? பாத்தி கட்டினாயா? கிழங்கு பிடுங்கினாயா? அங்கே எம் பனை மட்டைகளில் நார் உரித்து.. கயிறு திரித்தாயா? யாரைக் கேட்கிறாய் தமிழ்? எவரைக் கேட்கிறாய் தமிழ்? நாங்கள் உன் காலில் விழமாட்டோம்..
அரோ ஒன்று: என்ன? காலில் விழுபவன்..?
வீ.யா.வட்டுப்பொன்னன்: இந்த நாட்டில் அசல் யாழ்ப்பாணத்தானாக இல்லாதிருப்பான்.. :roll:
.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நீங்கள் சொல்வது சரி B.B.C நான் அப்பு சொன்ன மக் என்ற வார்த்தைக்கு பொருத்தமாக இருக்கட்டும் என்று தான் மலாயன் கபே என்று சொன்னேன்
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
யாழ்ப்பாணத்தில் பேச்சுவழக்கிலுள்ள ஐது என்ற சொல் தமிழகத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. அதைப்போல் வெந்நீர் என்று தமிழகத்தில் மிகச்சாதாரணமாகப் பேச்சுவழக்கிலுள்ள சொல் யாழ்ப்பாணத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படாமல் மருத்துவச் சொல்லாக (பிள்ளைப் பேற்றிற்கு) பயன்படுத்தப்படுகிறது.
பாண் என நாமழைப்பது போத்துக்கீசரிடம் இருந்து கற்றுக்கொண்டதாக இருக்கலாம். இதை தமிழகம் ரொட்டியென்றும்.பிரெட் என்றும் தமிழாக்கம் செய்துள்ளது.
தமிழகத்தில் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் தூயதமிழ் சொற்கள் பலவுண்டு.. சட்டென நினைவுக்கு வரமறுக்கிறது. ஞாபகத்தில் வந்தால் எழுதுவேன்
-
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
BBC நீங்க இலங்கையில் இருந்து எழுதவில்லை என உங்க எழுத்திலேயே காட்டிவிட்டீங்களே? :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இன்னொரு விடயம்.BBC கோபிக்காதீங்கோ ஆங்கலச் சொற்களை நீங்கள் தமிழில் எழுதுவது சரி, ஆனால் அநேகமான சொற்கள் விளங்கவில்லை.
எனவே ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதினால் உதவியாக இருக்கும். :|
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அப்பு நான் சிஙப்பூரெண்டு உமக்கு ரீல் விடுறனோ உமது மொன்னைக்காதிலை ரீல் என்ன நார் வைத்து மாலையே கட்டலாம் மொட்டந்தலையிலை மிளகாய் அரைக்கலாம் இன்னும் என்னென்ன செய்யாலம் என்றதை ....... நான் சொல்லத்தேவையில்லை எப்படியும் அடுத்த பதிலில் நீங்களெ சொல்லுவியள் தனெ.
நாங்கள் எல்லாம் படிச்சனாங்கள் இல்லைஅப்பு ஆனால் என்ரை மொழி பற்றியும் இனம் பற்றியும் நல்லாய்த் தெரியும்
ஒருக்கா வாசிக சாலைபக்க்ம் போய் நீங்கள் சொன்ன அதே புத்தகங்களை படிச்சு பாருங்கோ
தமிழ் திராவிட குடும்பத்து மொழி என்றும் அத்தோடை மலையாளம்,தெலுங்கு,கன்னடா,மராட்டி இன்னும் கிடத்தட்ட 15 மொழிகள் ஒரே குடும்பம் என்றும் இவற்றில் பல சொற்கள் எல்லா மொழியிலை இருக்கெண்டும் விளங்கும்
அப்பு
சமஸ்கிருததிலை நிறைய சொல்லுகள் இங்கை மலாயிலையும் இருக்கு ஒரு வேளை மலாய் தான் எமது தாய் மொழியோ
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அப்பு எங்கை அந்த குத்துப்போடாத அசல் சமச்கிருதச்சொல்லுகளிலை ஒரு நாலைந்து உதாராணத்துக்கு எடுத்து விடுங்கோ
உங்கடை கதைப்படி பார்த்தா நாங்கள் சமஸ்கிருத்ததிலை குத்துப்போடாமல்(முற்றுப்பெறாமல்)
அரையும் குறையுமாய் இருந்ததை முழுசாக்கி அதை தமிழ் என்று கொண்டாடுவோம் என்று பார்த்தா நீர் என்னடாவென்றால் இருந்ததையும் அவிழ்த்துப்போட்டு வாங்கோ இருங்கோ போங்கோ என்று அம்மணமாய் அலையவிடலாம் அதுவே போது என்கிறீர்
எது நல்லது முழுசா அம்மணமா?
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நன்றி அப்பு
ஆனால் நீங்கள் கொடுத்த உதாரணத்திற்கு அவை சமஸ்கிருதச்சொற்கள் தான் அதை நானும் ஏற்கனவே எனது விளக்கத்தில் கூறியிருக்கின்றேன் காலத்துக்கு காலம் தமிழில் பல்வேறு சொற்கள் கலந்தன என்று ஆனால் இப்படி சில சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு கொண்டு ஒட்டுமொத்த தமிழுமே சமஸ்கிருதத்தின் குழந்தைதான் என்று சொல்லிவிட முடியாது
அதற்கு உம்மிடம் சிறந்த ஆதாரம் இருந்தால் முன்வையும்
ஏனென்றால் சமஸ்கிருதம் இந்தியாவில் வழக்கத்தில் இருந்த அதே காலப்பகுதியில் திராவிடக்குடும்பத்து மொழிகளும் வழக்கத்தில் இருந்தன இதில் எது முன் தோன்றியது என்பது இன்னும் சர்ச்சைக்குரிய விடயமே ஆயினும் இரண்டுக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன திராவிடக்குடும்பத்திற்கு சமஸ்கிருதம் தாய் ஆக இருந்திருக்க முடியாது
அப்புறம் அப்பு நாங்கள் அரசியலை நம்புவோம் அரசியல்வாதிகளை நம்ப மாட்டோம் நல்ல விடயம் எங்கிருந்தாலும் அது நம்மூர் வாசிகசலையாக இருந்தால் என்ன இணையத்தளமாக இருந்தாலென்ன தேடிப்படிப்போம் இந்த கருத்துக்களத்திற்கு நான் வந்ததே இப்படியான பல்வேறுபட்டவர்களதும் கருத்தைக் கேட்டு எனது மொழியறிவை விருத்தி செய்யவேண்டும் என்பதற்காக தான் விடயங்களை நீங்கள் சொன்னால் நாலு பேரிடம் கேட்டு விடையிறுக்கிறேன் குசும்பு காட்டினால் இருக்கவே இருக்கு கைவசம் எங்க ஊர் குறும்பு