Yarl Forum
இலங்கை தமிழ் ( அல்லது யாழ்ப்பாண தமிழ் ?) மட்டுமே தூய தமிழா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: இலங்கை தமிழ் ( அல்லது யாழ்ப்பாண தமிழ் ?) மட்டுமே தூய தமிழா? (/showthread.php?tid=7549)

Pages: 1 2 3 4 5


இலங்கை தமிழ் ( அல்லது ய - Guest - 01-29-2004

<span style='font-size:30pt;line-height:100%'>இலங்கை தமிழ் ( அல்லது யாழ்ப்பாண தமிழ் ?) மட்டுமே தூய தமிழா?</span>

இப்போதெல்லாம் நாம் (சில இந்திய தமிழர்களும் கூட) இலங்கை தமிழ் மட்டுமே தூய தமிழ் என்று கூறிவருகிறோம்.இது எத்தனை சதவீதம் உண்மையானது? நமது தமிழில் கலப்படங்கள் மற்றும் வட்டார பேச்சு நடை () இல்லையா?

அப்படியானால் இலங்கை தமிழை ஏன் மற்றய தமிழர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை? நாம் அவர்கள் தமிழை புரிந்து கொள்கிறோமே? அது எப்படி? ஏன் நமது தமிழ் சிங்கள தமிழ்என்று அழைக்கப்படுகிறது?

தற்சமயம் இத்தனை கேள்விகளும் போதும் என நினைக்கின்றேன். உங்கள் கருத்துக்களை பார்த்து மீண்டும் தொடர்கின்றேன்.

இது குற்றம் சாட்டும் அல்லது நம்மை நாமே தாழ்த்தும் முயற்சி அல்ல ... எம்மை பற்றிய ஒரு சுய விமர்சனம். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

[b]கருத்துக்கள் மோதினால் தெளிவு பிறக்கும்.


- Guest - 01-29-2004

வட்டார பேச்சு நடை = Slang


Re: இலங்கை தமிழ் ( அல்லது - Mathivathanan - 01-29-2004

[quote=Suren]<span style='font-size:30pt;line-height:100%'>இலங்கை தமிழ் ( அல்லது யாழ்ப்பாண தமிழ் ?) மட்டுமே தூய தமிழா?</span>

இப்போதெல்லாம் நாம் (சில இந்திய தமிழர்களும் கூட) இலங்கை தமிழ் மட்டுமே தூய தமிழ் என்று கூறிவருகிறோம்.இது எத்தனை சதவீதம் உண்மையானது? நமது தமிழில் கலப்படங்கள் மற்றும் வட்டார பேச்சு நடை () இல்லையா?

அப்படியானால் இலங்கை தமிழை ஏன் மற்றய தமிழர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை? நாம் அவர்கள் தமிழை புரிந்து கொள்கிறோமே? அது எப்படி? ஏன் நமது தமிழ் சிங்கள தமிழ்என்று அழைக்கப்படுகிறது?

தற்சமயம் இத்தனை கேள்விகளும் போதும் என நினைக்கின்றேன். உங்கள் கருத்துக்களை பார்த்து மீண்டும் தொடர்கின்றேன்.

இது குற்றம் சாட்டும் அல்லது நம்மை நாமே தாழ்த்தும் முயற்சி அல்ல ... எம்மை பற்றிய ஒரு சுய விமர்சனம். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

[b]கருத்துக்கள் மோதினால் தெளிவு பிறக்கும்.அட போங்கப்பா.. நீங்களும் உங்கடை தூய தமிழும்.. இவங்களுக்கு இன்னும் சிங்களத்தமிழ்.. மலையாளத்தமிழ்தான் தெரியிது..
இப்பத்தான் இங்கிலிஸ்தமிழ்.. பிரெஞ்சுத்தமிழ்.. டொச்சுத்தமிழ்.. டச்சுத்தமிழ்.. நொஸ்க்குத்தமிழ்.. ஸ்பனிஸ்தமிழ்.. டெயினிஸ்தமிழ்.. அதோடை காஃப்புலித்தமிழ்.. இப்படி வகைவகையான தமிழ் இருக்கே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Guest - 01-29-2004

அப்படியானால் தூயதமிழ் என்று எதுவுமில்லை. அனைத்துமே கல்ப்பு தமிழ்தான். அதுதானே உங்கள் கருத்து?


- Mathan - 01-29-2004

என்ற கொழும்பு தமிழ விட்டுடீங்க? என்ன பொஸ் இப்பிடி செய்யலாமா?


- kuruvikal - 01-29-2004

அது கிடக்கிறகேட்டுக்க அதுவுமே....பிறகு 'நோண்டியாகிடுவியள்'...சும்மா உதாரணத்துக்கு ஒண்டு விட்டிருக்கம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- Mathan - 01-29-2004

என்ன பொஸ் என்ன நோண்டியாக்கிறீங்க? வயச சொன்ன கடுப்போ? அது சரி உங்கட என்ன டமிழ்?


- kuruvikal - 01-29-2004

இஞ்ச பாருங்கோ எங்களுக்கு தமிழும் தெரியும் டமிழும் தெரியும் தெமழவும் தெரியும் இன்னும் என்னென்ன வைப்பியளே அதுகளும் தெரியும்....ஆனா பாவம் தமிழ் இப்படி அல்லாடுறதுதான் கவலையாக் கிடக்கு....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 01-29-2004

என்ன போஸ் செய்றது. எல்லாம் டமிலோட டலைவிதி.

ஆனா ஒன்டு பொஸ் பியோர் தமிழ்ல சொல்றன்

"ஒரு மொழியில் மாற்றங்கள் கலப்புகள் இல்லையானால் அது உபயோகிகப்படாத மொழி என்று அர்த்தம். ஆனால் மாற்றங்களுக்குள்ளாகும் மொழி சரியான வழியில் வழிநடத்தப்படாவிட்டால் அது அந்த மொழி விற்பன்னர்களின் தப்பு"

இது கூட சுட்டது தான் பொஸ்


- kuruvikal - 01-29-2004

தமிழ் மொழிக்குள் வேற்று மொழிக்கலப்பு அவசியம் இல்லை. அதன் இலக்கண வடிவமே பல... புதிய, காலத்துக்கு அவசியமான சொற்களை உருவாக்கி உள்வாங்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போதும்...நாகரிகம் என்ற தோறணையில் மொழிக்கலப்பு அவசியம் அற்றது...அது ஒரு மொழி அதன் தனித்துவம் இழந்து அருகவே வழி சமைக்கும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Paranee - 01-29-2004

மாற்றிக்லந்துதான் இப்ப மாற்றுக்குறைந்து போய் இருக்கின்றது


- Mathan - 01-29-2004

நம்ம தமிழ்ழ இருக்க நிறைய சொல்லு வடமொழி, டச்சு மற்றும் பல மொழிகளில் இருந்து வந்ததெண்டு எனக்கு தமிழ் படிப்பிச்ச யாழ்பாண டீச்சர் சொன்னா.

நீங்க ஒரே பொம்மா இல்லை என்டுறீங்க?

யார் சரி சொல்லுங்கப்பா? நம்ம தாத்தாவும் மிஸ்ஸிங்கா கிடக்கு


- sutharshan - 01-29-2004

அடியேனின் தாழ்மையான அபிப்பிராயம்: இந்தியத் தமிழை இலங்கையர்கள் புரிந்துகொள்ளக்காரணம் இந்திய சினிமா தான். நாமெல்லாம் நிறைய இந்திய சினிமா மற்றும் மெகா சீரியல் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பார்ப்பதினால் அந்த தமிழுக்கு பழக்கப்பட்டு விட்டோம். அவர்களுக்கு(இந்தியர்களுக்கு) அந்த வாய்ப்பு இல்லாமையால் எம்மொழி புரிவதில்லை.

பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.


- Guest - 01-29-2004

நீங்கள் சொல்வதும் உண்மைதான். நாமெல்லாம் அந்த இந்திய தமிழு்க்கு இயல்பாக்கம் அடைந்திருக்கலாம். ஆனால் நமது தமிழில் குறிப்பாக பேச்சுத்தமிழில் நிறைய கலப்படங்கள் இருக்கின்றன. எமது தமிழ் தூய்மையானது என்று சொல்லமுடியாது. வேண்டுமானால் இந்திய தமிழுடன் ஒப்பீடு செய்யும் போது ஆங்கில கலப்பு குறைவானது என்று கூறலாம்.

நீங்கள் ஒரு இந்திய தமிழரோடு பேசும் போதும் அவர் அதனை சுட்டிக்காட்டும் போதுதான் உங்களுக்கே தெரிய்ம். நான் அதனை உணர்ந்திருக்கின்றேன்.

மற்றய யாழ் எழுத்தாளர்கள் எங்கே? ஏன் யாருமே கருத்தெழுத பின்னிற்கிறார்கள்? ஆம் இல்லை என்றாவது சொல்லுங்கள்.


- vasisutha - 01-29-2004

ஆம், இல்லை. :-)


- yarl - 01-29-2004

எமது தமிழில் சில சங்ககாலத்து தமிழ் சொற்கள் இன்றைக்கும் வழக்கம் வழக்கமாக கலந்து இன்றளவும் காணாமல் போகாது நிலைத்து நிற்கிறது.

அதற்கு காரணம் இந்தியத்தமிழரைவிட நாம் மொழி பாசம் கொண்டவர்கள் என்பதாகாது.

எமது நாட்டில் இந்தியாஇதமிழ்நாட்டைவிட பல்லின படையெடுப்பு நடந்து பல கலப்புகள் நடந்தமைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு.அதனால் தமிழ் சற்று தப்பிப்பிழைத்தது.

இன்றும் எம்மைப்போலவே பல தமிழ்நாட்டுக்குக்கிராமங்கள் தப்பி பிழைத்து நல்ல தமிழ் பேசுகின்றன..

நாம் விடும் பெரும் தவறு சென்னைத்தமிழைக்கொண்டு முழு தமிழ்நாட்டையும் புரிந்துகொள்வது.


- Mathivathanan - 01-29-2004

எங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அவங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அதுதான் வித்தியாசமேதவிர.. எல்லாருக்கும் சமஸ்கிரிதம்தான் முதுமொழி.. அவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வந்தாங்கள்.. அதேமாதிரி இவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வரப்பார்க்கிறாங்கள்.. கண்ணுக்குத் தெரியிற சமஸ்கிரித எழுத்து உள்ளதுகள்தான் இவங்களுக்கு சமஸ்கிரிதம்.. தெரியாமல் இருக்கிறதெல்லாம் தமிழ் எண்ட நினைப்பு..

5 சமஸ்கிரித எழுத்துக்களை உதைச்சுத் தள்ளினாங்கள்.. பாதித்தமிழரே இல்லாமல்போச்சுது..
அதாலை திரும்பக் கொண்டுவந்திட்டாங்கள்..

எண்டாலும் உந்த சிங்கள சிறீ.. தமிழ் சிறீ சண்டை மண்டைக்கை நிக்கிறபடியால் அந்த தமிழ் .. யை சிறீ யெண்டு மாத்தி வச்சிருக்கிறாங்கள்..

சமஸ்கிரித மூலம் உள்ளதுகள் இல்லாமலாக்கினால் தமிழே இருக்காதே.. என்ன செய்யிறாங்கள் பார்ப்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- anpagam - 01-30-2004

Quote:இஞ்ச பாருங்கோ எங்களுக்கு தமிழும் தெரியும் டமிழும் தெரியும் தெமழவும் தெரியும் இன்னும் என்னென்ன வைப்பியளே அதுகளும் தெரியும்....ஆனா பாவம் தமிழ் இப்படி அல்லாடுறதுதான் கவலையாக் கிடக்கு....!
உண்மை...

Quote:"ஒரு மொழியில் மாற்றங்கள் கலப்புகள் இல்லையானால் அது உபயோகிகப்படாத மொழி என்று அர்த்தம். ஆனால் மாற்றங்களுக்குள்ளாகும் மொழி சரியான வழியில் வழிநடத்தப்படாவிட்டால் அது அந்த மொழி விற்பன்னர்களின் தப்பு"
சிந்திக்கவேண்டியது......

Quote:தமிழ் மொழிக்குள் வேற்று மொழிக்கலப்பு அவசியம் இல்லை. அதன் இலக்கண வடிவமே பல... புதிய, காலத்துக்கு அவசியமான சொற்களை உருவாக்கி உள்வாங்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போதும்...நாகரிகம் என்ற தோறணையில் மொழிக்கலப்பு அவசியம் அற்றது...அது ஒரு மொழி அதன் தனித்துவம் இழந்து அருகவே வழி சமைக்கும்....!
உண்மை...
சிந்திக்கவேண்டியது......

Quote:நீங்கள் ஒரு இந்திய தமிழரோடு பேசும் போதும் அவர் அதனை சுட்டிக்காட்டும் போதுதான் உங்களுக்கே தெரிய்ம். நான் அதனை உணர்ந்திருக்கின்றேன்.
படுபொய்.... (கொழும்பு தமிழ் = இந்தியதமிழ் ஆனால் கொழும்பு தமிழ் கொஞ்சம் நாகாPகமாக இருக்கிறது) :!:

Quote: எமது நாட்டில் இந்தியாஇதமிழ்நாட்டைவிட பல்லின படையெடுப்பு நடந்து பல கலப்புகள் நடந்தமைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு.அதனால் தமிழ் சற்று தப்பிப்பிழைத்தது.
இதுவரலாறு இப்படி நான் அறியவில்லை எனக்கு தெரியா..... (இலங்கையில்லும் தானே) :roll:

Quote:எங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அவங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அதுதான் வித்தியாசமேதவிர.. எல்லாருக்கும் சமஸ்கிரிதம்தான் முதுமொழி.. அவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வந்தாங்கள்.. அதேமாதிரி இவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வரப்பார்க்கிறாங்கள்.. கண்ணுக்குத் தெரியிற சமஸ்கிரித எழுத்து உள்ளதுகள்தான் இவங்களுக்கு சமஸ்கிரிதம்.. தெரியாமல் இருக்கிறதெல்லாம் தமிழ் எண்ட நினைப்பு..

5 சமஸ்கிரித எழுத்துக்களை உதைச்சுத் தள்ளினாங்கள்.. பாதித்தமிழரே இல்லாமல்போச்சுது..
அதாலை திரும்பக் கொண்டுவந்திட்டாங்கள்..

எண்டாலும் உந்த சிங்கள சிறீ.. தமிழ் சிறீ சண்டை மண்டைக்கை நிக்கிறபடியால் அந்த தமிழ் .. யை சிறீ யெண்டு மாத்தி வச்சிருக்கிறாங்கள்..

சமஸ்கிரித மூலம் உள்ளதுகள் இல்லாமலாக்கினால் தமிழே இருக்காதே.. என்ன செய்யிறாங்கள் பார்ப்பம்..
நல்ல கருத்து சிந்திக்கவேண்டியது...... :roll: Idea 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 01-30-2004

படுபொய்.... (கொழும்பு தமிழ் = இந்தியதமிழ் ஆனால் கொழும்பு தமிழ் கொஞ்சம் நாகாPகமாக இருக்கிறது) :!:

நம்ம தமிழுக்கு குட் சொன்னதுக்கு தாங்ஸ் பொஸ்


- adipadda_tamilan - 01-30-2004

இந்தியர்கள் பேசுவது சரியான தமிழ் இல்லை என்பது உண்மை. ஆனால் அவர்கள் பேசும் சில சொற்கள் உண்மையில் தூய பழந் தமிழ்.
எமது தமிழ் கலப்பானது என்பதில் பிழையில்லை ஆனால் நாம் ஆங்கிலம் கலந்து பேசவில்லை - இதனாலும் எமது தமிழ் அவர்களைவிட நல்லது என்று சொல்லக்கூடியதாக உள்ளது.

ஏன் இந்தியத் தமிழர்கள் நாம் கதைப்பதை விளங்க முடியமல் இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஒரு கருத்துக்கு நிரைய சொற்கள் உண்டு அனால் இந்தியர்களுக்கு ஒரு கருத்துக்கு ஒரு சொல்தான் தெரிகிறது - இங்குதான் நாம் முன்னிற்கிறோம்(ஏனெனில் எமக்கு தமிழ் எப்படி கதைத்தாலும் விளங்கக்கூடியதாக உள்ளது). உதாரணத்திற்கு நான் மேல் எழுதியிருக்கும் கதைப்ப்துஇ விளங்குவது என்பதெல்லாம் அவர்களுக்கு ஏதோ ஏலியன் மொழி மாதிரி தெரிகிறது. இத்னால்தான் யார் எப்படி தமிழ் பேசினாலும்ஃகதைத்தாலும் எம்மால் விளங்க முடிகிறது அத்துடம் நாமே முன்னிற்கிறோம். நான் இங்கு நாம்தான் தூய தமிழ் கதைக்கிறோம் என்ன்பதை நிருபிக்க எழுதவில்லை ஆனால் நாம் பேசும் தமிழ் யாவரிலும் உயர்ந்தது என்பதை பெருமையுடம் கூறுகின்றேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->