<span style='font-size:21pt;line-height:100%'><b>கடந்த10 வருடமாக நாம் எமது தந்தையுடன் தொடர்பு கொள்ளாது தடுக்கப்பட்டோம்
மறைந்த அமைச்சர் கதிர்காமரின் மூத்த புதல்வி விதவை தாயை சாடுகிறார் </b>
(நமது நிருபர்)
\"\"கடந்த 11 ஆண்டுகளாக எனது தந்தையார் அரசாங்கத்தில் பதவி வகித்து வந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் அவர் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் சிறைப்பட்ட கைதியாகவே இருந்து வந்துள்ளார். இப்போது அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது'' என மறைந்த வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் புதல்வி அஜித்தா தமது உரையில் குறிப்பிட்டார்.கதிர்காமரின் மறைவையொட்டி, பௌத்தலோக மாவத்தையிலுள்ள இயேசு பேராலயத்தில் நிகழ்ந்த நன்றி திருப்பலி ஒப்புக் கொடுத்தல் வைபவத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.மறைந்த அமைச்சரின் புதல்வி அஜித்தா கதிர்காமர் பெரேரா, அவரது சகோதரர் ரெஹி, இதர உறவினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கொழும்பு அங்கிலிக்கன் ஆயர் அதி வண டுலீப் டி சிகேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
தங்களை உதாசீனம் செய்யும் வகையில் மறைந்த அமைச்சரின் அஸ்தி, ஒரு தலைப்பட்சமாக சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு களுத்துறை ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளது என அவர் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்தார்.
அமைச்சரின் புதல்வி இங்கு தொடர்ந்து பேசுகையில், \"\"எங்கள் தந்தையாரின் அஸ்தியையோ, அதில் ஒரு பகுதியையோ குடும்ப மயானத்தில் அடக்கம் செய்வதற்காக இரு கடிதங்கள் வாயிலாக விதவைத் தயாரிடம் கோரியிருந்தோம்.
\"\"அவ்விரு கடிதங்களில் ஒன்று வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. இது தனிப்பட்ட வேண்டுகோளை உள்ளடக்கியது. மற்றையது வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. இது பூர்வாங்க சட்டரீதியிலான வேண்டுகோளைக் கொண்டது.
\"\"எனினும் கதிர்காமரின் எந்த ஒரு பிள்ளைக்கும் தெரியாமல், சனிக்கிழமை அதிகாலை விதவைத் தாயாரால் இந்த அஸ்தி கரைக்கப்பட்டுள்ளது.
\"\"கடந்த பத்து வருடங்களாக எமது தந்தையோடு நாம் தொடர்பு கொள்வதை இவர் தடுத்தே வந்துள்ளார். இறப்பிலும், இவர் எம்மை புறம் தள்ளி வைத்துள்ளார். இரக்கமற்ற இவரால், இத்தகைய குரூர செயல்களால் எதனை அடைய முடியும்?
\"\"எங்கள் தந்தையாரின் இறுதி ஆசையும், தமது அஸ்தி நீரில் கலக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்கப்பட வில்லை. எமக்குத் தெரியாமலேயே அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
\"\"இந்த விவகாரத்தை மூத்த பிள்ளை என்ற ரீதியில் எப்படி எமது இதர குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தந்தையாரின் சகோதரரின் பிள்ளைகள் ஆகியோரிடம் என்னால் கூற முடியும்? அந்த அஸ்தி எம்மிடமிருந்து பறித்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறலாமா?
\"\"கதிர்காமரின் வழித்தோன்றலில் இறுதியாக இருந்தவர் எனது தந்தை. அவருடைய சகாப்தம் ஒரு வழியில் அல்ல. பல வழிகளில் இப்போது மறைந்து விட்டது.
\"\"எப்போது எனது தந்தையார் அரசாங்கத்தில் பதவி ஏற்றாரோ, அப்போதே எனது தாயாரும், சகோதரியும் நானும் அவரை இழந்து விட்டோம். இது எங்களின் இழப்பு. அதேவேளை இது நாடு கண்ட நன்மை. அக்காலகட்டத்தில் அவரோடு தொடர்பு கொள்ள முயன்று வந்துள்ளேன்.
\"\"எனினும், அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் எல்லை வரம்புகளைக் கடந்து அவர் எங்கோ சென்று விட்டார். இந்த இழப்பை நான் உணர்ந்தேன். இது அப்போது அவருக்கும் தெரியும்'' என்றார்.
சனிக்கிழமை இடம்பெற்ற நன்றி பலி ஒப்புக் கொடுத்தல் வைபவத்தில் மறைந்த கதிர்காமரின் விதவை மனைவி கலந்து கொள்ளவில்லை.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா தலையிடும் வரை, கதிர்காமரின் மரணச் சடங்கில் அவரது பிள்ளைகள் பங்குபற்ற அனுமதிக்கப்பட வில்லை என குடும்ப வட்டாரம் தெரிவித்துள்ளது.</span>
- Veerakesai
Quote: :oops: படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்தி கதிர்காமரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
:evil: :?: :?: :?: