Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னிப்புக் கேட்ட தங்கர்பச்சான்
#61
தங்கர் பச்சான் விவகாரத்தை நடிகர் சங்கம் பூதாகரமாக்கியது, தவறhன முன்னுதாரணம், …கோலங்கள்† இயக்குனர் திருச்செல்வன் பேட்டி
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ

வந்தவாசி,செப்.6- தங்கர்;;பச்சான் விவகாரத்தை நடிகர் சங்கம் பூதாகரமாக்கியது தவறhன முன்னுதாரணம் ஆகும் என்று வந்தவாசியில் டி,வி. இயக்குனர் திருச்செல்வம் கூறினார்.

டி.வி. இயக்குனர்„ பிரபல டெலிவிஷன் மெகாத் தொடர் இயக்குனர் …கோலங்கள்† திருச் செல்வன் வந்தவாசி வந்தார். இங்கு சுற்றுலா மாளிகையில் நிருபர்;;களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது„-

டெலிவிஷனில் நகைச்சுவைத் ;தொடரை அனைவரும் விரும்பு வதில்லை. டி.வி. மெகாத் தொடர் தொடர்களை பெண்கள் அனை வரும் விரும்பி பார்;க்கின்றனர். எனவே தான் மெகா தொடர்கள் வெற்றி பெறுகின்றன.

பெண்களின் பிரச்சினையை மையமாக வைத்து தொடர் எடுப் பதன் காரணம் பெண்கள் தான் தொடர்களை விரும்பி பார்க்கின்ற னர். இந்த தொடர்கள் மூலமாக பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். உதாரணத்திற்கு கோலங்கள் தொடாpல் அபி (தேவயானி)hpயல் எஸ்டேட் வியாபாரம் செய்வது போல் இயக்கி உள்ளேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு இது ஒரு தூண்டுகோலாக அமையும்.

பூதாகரமாக்குவதா?

தங்கர் பச்சான் விவகாரம் என்ன? அவர் என்ன பேசினார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் அதை நடிகர் சங்கம் பூதாகரமாக ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகை சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்ட விஜயகாந்த், தங்கர் பச்சானை குறை சொல்லக் கூடாது என்று விடுதலை சிறுத்தை அமைப்பாளர் திருமாவளவன் கூறியது சாpயா, தவறh என்று கருத்து கூற முடியாது.

நான் சினிமா படம் இயக்கத் தான் வந்தேன். ஆனால் டி,வி. தொடர்இயக்குனர்ஆகிவி;ட்டேன். இருந்தபோதிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றேன். வாய்ப்பு கிடைக்கும்போது சினிமா படம் இயக்குவேன். எந்த நடிகர் என்பதை விட, கதைக்காக நடிகரை உருவாக்குவேன். நடிகருக்காக கதை உருவாக்கமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வசன கர்த்;தா பாஸ்கர் சக்தி, முருகேஷ் ஆhpசன் அண்ணாமலை, வெண்ணிலா இஷhக் உடன் இருந்தனர்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#62
தங்கர்பச்சான் அடிக்கடி ஏன் இப்படி வார்த்தைச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் ?


அவர் உணர்ச்சிகரமான மனிதர் து}ண்டுவதுபோல் கேள்விகள் விழுந்தால் பொறியில் சிக்கிக் கொள்வார். சிக்கலுக்கு காரணம் பல நேரங்களில் அவர் பேசுவதில் உண்மை இருந்து தொலைப்பதுதான்.


நன்றி குமுதம்
Reply
#63
<img src='http://img432.imageshack.us/img432/7154/p24vb.jpg' border='0' alt='user posted image'>

- Vikadan

படத்தின் அளவை சிறியதாக்கியுள்ளேன் - மதன்
Reply
#64

<b>வீதிவீதியா ஓட்டுவேன்!</b>

சர்ச்சை சாம்ராட் " தங்கர் பச்சானின் <b>
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி </b>படத்தில் மும்பை மயில் ஸ்வாதி வர்மா ஒரு கலக்கல் ஆட்டம் ஆடியிருக்கிறார்.
கிளுகிளு சமாசாரங்களுக்கு எதிராக புரட்சிப் பேட்டிகள் கொடுக்கும் தங்கர்

http://www.vikatan.com/jv/2005/sep/11092005/p24a.jpg

<i>ஸ்வாதி வர்மா</i>

"இந்த ஆட்டம் கதைக்கு அவசியம் தேவை" என்கிறார்,...

Vikadan
Reply
#65
தங்கர் என்ற கோமாளி தமிழ்ச்சினிமாவுக்குக் கிடைத்தது மகிழ்ச்சிதான்.
அடிப்படையில் நேர்மையற்ற சுத்த ஏமாற்றுவாதி.
எதையெதை தீயவையென்று சொல்வாரோ அவையனைத்தையும் தன் படங்களில் செருகிவிடுவார். அழகியில் விவேக்கின் நகைச்சுவை, குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம் முதல் எல்லாப்படத்திலும் அவரே கேவலம் என்று சொல்லும் அனைத்து அம்சங்களும் இருக்கும். சிதம்பரத்தில் ஒரு அப்பாச்சாமியிலும் நீங்கள் மேற்சொன்ன நடனம் உட்பட, நடிகைகள் உடுக்கும் உடை வாங்கிவந்து அதைத் தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி (அவள் விருப்பமில்லாமலே) உடுக்க வைத்து ஒரு டூயட் பாடுவார் மனிதர். தலையிலடித்துக் கொள்ளலாம் இந்த ஏமாற்றுக்காரனின் புரட்டுக்களை நம்பி அவரை நல்ல மனிதனாகச் சித்தரிப்பவர்களை நினைத்து.

இங்கே தொன்னூறு வீதமான நடிகைகள் விபச்சாரிகள் தான் என்று ஒருவர் சொல்கிறார். பத்தாததுக்கு உங்களையும் அப்படித்தான் சொல்வேன் என்று ரசிகைக்கு மிரட்டல் விட உடனே ரசிகையும் பயந்து சரணடைகிறார். நல்ல விவாதம் போகிறது யாழ்க் களத்தில்.

தான் செய்யும் வேலைக்குரிய 600 ரூபாய்க் கூலியைக் கேட்டதற்கு நடிகைகளுக்கு விபச்சாரிப் பட்டம். அதுவும் 'கேவலம் 600 ரூபாய்' என்ற கதை. அந்த 600 ரூபாயை வைத்துத்தான் அந்தக் கிழமைக்குரிய குடும்பச் செலவு இருக்குமோ என்னவோ? ஆதே கேவலமான 600 ரூபாயைக் கொடுப்பதற்கு தங்கருக்கு மனசில்லை. தொழிலாளியிடம் கொள்ளையடிக்கும் கயவனை 'தமிழ்க் காவலன்' என்ற அளவில் புகழுபவர்களை நினைத்து என்ன செய்வது?
Reply
#66
மேலும் 'தமிழ் பாதுகாப்பு பேரவை' என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டினவர்கள் யாரென்று தெரியவில்லை. தமிழை ஒழுங்காக எழுதத் தெரியாதவர்கள் தமிழைப் பாதுகாக்கப் போகிறார்களாம். இது யாரோ தமிழறிவற்ற கும்பலொன்று அரசியல் ஆதாயத்துக்காக அடித்த சுவரொட்டி என்று நினைக்கிறேன். அனேகமாக பா.ம.க அடிக்கும் சுவரொட்டிகளிலும் இந்த தமிழ்ப் பிழைகள் இருப்பதுண்டு.
Reply
#67
nallavan Wrote:தங்கர் என்ற கோமாளி தமிழ்ச்சினிமாவுக்குக் கிடைத்தது மகிழ்ச்சிதான்.
அடிப்படையில் நேர்மையற்ற சுத்த ஏமாற்றுவாதி.
எதையெதை தீயவையென்று சொல்வாரோ அவையனைத்தையும் தன் படங்களில் செருகிவிடுவார். அழகியில் விவேக்கின் நகைச்சுவை, குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம் முதல் எல்லாப்படத்திலும் அவரே கேவலம் என்று சொல்லும் அனைத்து அம்சங்களும் இருக்கும். சிதம்பரத்தில் ஒரு அப்பாச்சாமியிலும் நீங்கள் மேற்சொன்ன நடனம் உட்பட, நடிகைகள் உடுக்கும் உடை வாங்கிவந்து அதைத் தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி (அவள் விருப்பமில்லாமலே) உடுக்க வைத்து ஒரு டூயட் பாடுவார் மனிதர். தலையிலடித்துக் கொள்ளலாம் இந்த ஏமாற்றுக்காரனின் புரட்டுக்களை நம்பி அவரை நல்ல மனிதனாகச் சித்தரிப்பவர்களை நினைத்து.

உங்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது நல்லவன். நீங்கள் ஏன் இப்படி நல்லவர்கள் மீது உங்கள் வெறுப்பினை திணிக்கின்றீர்கள். அதாவது தங்கரின் திரைப்படங்களில் அவர் கேவலமான கருத்தினை செருகுகின்றார் என்று சொல்லும் நீங்கள் (நல்லவன்?) ஏன் கங்கர்பச்சானின் விடயத்தில் அவரிடம் உங்களுக்கிகருக்கும் வெறுப்பான வரிகளை அவர் மீது திணிக்கின்றீர்கள்? கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியாதீர்கள். தங்கரின் தங்கமான குணத்தினை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே தொன்னூறு வீதமான நடிகைகள் விபச்சாரிகள் தான் என்று ஒருவர் சொல்கிறார். பத்தாததுக்கு உங்களையும் அப்படித்தான் சொல்வேன் என்று ரசிகைக்கு மிரட்டல் விட உடனே ரசிகையும் பயந்து சரணடைகிறார். நல்ல விவாதம் போகிறது யாழ்க் களத்தில்.

தான் செய்யும் வேலைக்குரிய 600 ரூபாய்க் கூலியைக் கேட்டதற்கு நடிகைகளுக்கு விபச்சாரிப் பட்டம். அதுவும் 'கேவலம் 600 ரூபாய்' என்ற கதை. அந்த 600 ரூபாயை வைத்துத்தான் அந்தக் கிழமைக்குரிய குடும்பச் செலவு இருக்குமோ என்னவோ? ஆதே கேவலமான 600 ரூபாயைக் கொடுப்பதற்கு தங்கருக்கு மனசில்லை. தொழிலாளியிடம் கொள்ளையடிக்கும் கயவனை 'தமிழ்க் காவலன்' என்ற அளவில் புகழுபவர்களை நினைத்து என்ன செய்வது?
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#68
உங்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது நல்லவன். நீங்கள் ஏன் இப்படி நல்லவர்கள் மீது உங்கள் வெறுப்பினை திணிக்கின்றீர்கள். அதாவது தங்கரின் திரைப்படங்களில் அவர் கேவலமான கருத்தினை செருகுகின்றார் என்று சொல்லும் நீங்கள் (நல்லவன்?) ஏன் கங்கர்பச்சானின் விடயத்தில் அவரிடம் உங்களுக்கிருக்கும் வெறுப்பான வரிகளை திணிக்கின்றீர்கள்? கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியாதீர்கள். தங்கரின் தங்கமான குணத்தினை புரிந்து கொள்ளுங்கள்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#69
நல்லவன் சினிமாவுக்காக தன்னைத் தியாகம் செய்து கொண்டிருப்பவர். அவர் குடும்ப உறவுகளை விட சினிமாக்கார்களை(முக்கியமாக நடிகைகள்) யாரும் குறை சொன்னால் பிடிக்காது. அப்படியிருக்க தங்கர்பச்சான் அப்படி ஒரு கருத்துச் சொல்;ல சும்மா விடுவாரா?

உம்...... எவன்கிட்ட? நம்ம நல்லவன் கூடவா! விடாதே நல்லவன். தமிழிலுள்ள எல்லா ..........வார்த்தைகளாலும் போட்டுத் தாக்கு!!!!
Reply
#70
ஐயோ,
தங்கரின் தங்கமான குணமென்று சொல்பவர்களே நான் கேட்ட கேள்விகளுக்கு உங்கள் பதிலென்ன?
தன்னிடம் வேலை பார்ப்பவருக்குரிய 600 ரூபாயைக் கொடுக்காதது நல்ல குணமா?
தன் உரிமைக் கேட்டவர்களை விபச்சாரிகள் என்று சொன்னது தங்கமான குணமா?

தானே கெட்டவை என்று சொல்பவற்றைத் தன் படங்களில் வைத்துவிட்டு பிறகு மற்றவர்களை அதே காரணத்துக்காகக் கிண்டலடிப்பது தங்கமான குணமா? சொல்லுங்கள் அழகியில் விவேக்கின் நகைச்சுவைக் காட்சிக்கும் குருவி குடைந்த கொய்யாப்பழ ஆபாச நடனத்துக்கும் என்ன தேவை? பிறகு தான் மட்டுமே சரியான , நல்ல படங்களை எடுப்பவன் என்ற புரட்டைச் சொல்வதில் என்ன தங்கமான குணமிருக்கிறது?

நீங்களே சொல்லுங்கள் உங்கள் முதலாளி உங்களுடைய சம்பளத்தைத் தராமல் ஏமாற்றுகிறார். அதைக்கேட்ட உங்களை விபச்சாரியென்றோ அல்லது உங்கள் குடும்பத்தைக் கீழ்த்தரமாகவோ திட்டுவதோடு சம்பளத்தையும் தரமறுக்கிறார். அவரை தங்கமான மனிதரென்றா சொல்வீர்கள்?
என்னையா கதை விடுகிறீர்கள்? இவ்வளவு செய்தபின் அவரைத் தங்கமானவர் என்று கதைவிடும் உங்களின்அறியாமையை என்னவென்பது. தங்கர் கெட்டதுக்கு எங்கட புலம்பெயர்ந்தவர்களும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவருக்கு அளவுக்கதிகமான பணஉதவிகள் செய்வதிலும் தலையில் தூக்கிவைத்து ஆடுவதிலும் அவர்கள்தான்முன்னணியில் நிற்கிறார்கள்.

சினிமாத்தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் தன்னிடம் 60 லட்சம்ரூபாவுக்கு தங்கர் பச்சான் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னது தெரியாதா? ஒன்பதுரூபா நோட்டுப் படமெடுக்கிறேன் என்று காசுவாங்கி அந்தப் படத்தை இடைநடுவில் விட்டுவிட்டுத் திரிகிறாரே தங்கர் பச்சான். இன்றும் அந்தப் படத்தை வேறுயாருக்காவது எடுப்பதானால் அந்த 60 லட்சத்தையும் கொடுத்தாக வேண்டிய நிலையில் அந்தப் படத்தை எடுக்காமலேயே கிடப்பில் போட்டுள்ளாரே தங்கர். இவரா தங்கமானவர்?
Reply
#71
ஐயா தூயவன்,
அரட்டையில் நேர்ந்த சந்திப்பு துரதிஸ்டவசமானது. பரவாயில்லை.

நான் சொன்னதில் என்ன தவறென்றாவது உங்களால் சொல்ல முடியுமா? தங்கர் ஏமாற்றவில்லையா? தொழிலாளிக்குரி கூலியைக் கொடுக்காதது ஏமாற்றுவேலையில்லையா?

தங்கரின் தமிழ்ப்பற்றை ஒருக்காச் சொல்லுங்கோவன் நானும் அறிஞ்சு கொள்ளிறன். நானும் அறிஞ்சன் அவரின்ர பற்றை. அதுவும் கொழுப்பில வைச்சு நேரடியா பேட்டி குடுத்தார். என்னெண்டு. பழ.நெடுமாறனையும், கி. ராஜநாராயணனையும் தான் படத்தில் நடிக்க வைத்தாராம். அதனால் தான் தமிழ்ப்பற்றாளனாம். என்னையா கதை இது? இதை தங்கர்தான் சொன்னார். இதைத்தான் நீங்களும் அவரின் தமிழ்ப்பற்று என்கிறீர்களா?
Reply
#72
நல்லவன்
உங்களுக்கு ஒரு விடயத்தை சொல்லவிரும்புகின்றேன். தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்காவிட்டால் அத் தொழிலாளிக்கு நீங்கள் சட்ட உதவிகள் செய்யலாமே. அப்படி செய்வீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் நல்லவன் தான்.
அதை விடுத்து தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்பதால் கெட்டவன் என்று இங்கு விவாதிப்பது ஏன்? அதனால் அத் தொழிலாளிக்கு நன்மை பயக்கும் என நம்புகின்றீர்களா?

தன் சுயநலத் தேவைகளுக்காக தமிழை பெருமைப்படுத்தி பேசுபவர்கள் முழுச்சுயநலவாதிகள் தான். அதை காலம் விரைவில் தெளிவுபடுத்தும்
Reply
#73
தூயவன்
கருத்தை எதிர்கொள்ள முடியாத தன்மைதான் உங்கள் பதிலில் தென்படுகிறது.
தங்கரை தங்கமானவர் என்று சொன்னவர்கள் எதை வைத்துச் சொன்னார்கள். தங்கரின் தவறைச் சொன்னபோது ஏன் நீ அவர்களுக்கு உதவி செய்திருக்கலாமே என்கிறீர்கள். இது என்ன நியாயம்?
தங்கர் தவறே செய்யாத அற்புத மனிதர் என்ற கருத்துப்பட இங்கே சிலர் சொன்னதால் நான் அவர் செய்த திருகுதாளங்களைச் சொன்னேன்.

உங்கள் கருத்துப்படி பார்த்தால் சந்திரிக்காவிலிருந்து, சதாம் உசேனிலிருந்து யாரையும் யாரும் விமர்சிக்க முடியாதே? எல்லாவற்றுக்கும் ஏன் நீ அதைச் செய்யலாம்தானே என்று நீங்கள் கேட்கும் கேள்விகளையே திருப்பிக் கேட்கலாம்.

நீங்களெல்லாம் ஏற்கெனவே ஒரு விம்பத்தை வைத்துக் கதைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதுதான் விபச்சாரியென்று திட்டியவனை தங்கமானவரென்றும், அப்படி எந்த வார்த்தையும் பாவிக்காத என்னைக் கீழ்த்தரமான வார்த்தைகள் பாவிப்பவனென்றும் சொல்லத் தோன்றுகிறது.
தங்கரின் தமிழ்ப்பற்றைப் பற்றிக் கேட்டேன். ஒரு பதிலையும் காணோம். உங்கள் விவாதம் தொழிலாளியின் சம்பளத்தை எமாற்றி ஏப்பமிட முனைந்தது சரியென்று சொல்வதாகப் படுகிறது. அதைக் கேட்டால் ஏன் நீ உதவி செய்யலாம்தானே என்று திசைதிருப்பற் பதில்வேறு.
Reply
#74
அப்படியே தங்கரை மன்னிப்புக் கேட்க வைத்ததுக்கெதிராகவும் சட்ட உதவியைச் செய்யுங்கள். இங்கே கருத்தெழுதாமல் அதைச்செய்தால் தான் நீங்கள் நல்லவர். மற்றும்படி நீங்கள் கெட்டவர். சரிதானே தூயவன்?
Reply
#75
உண்மை தான் எங்களுக்கு கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத நிலை தான் இருக்கின்றது. அது இருக்கட்டும்.
நீங்கள் இது வரை எழுதிய எக்கருத்தவாது நியாயத்தன்மை குறித்து வாதாடுகின்றாதா எனப் பாருங்கள். எதை எடுத்தாலும் தங்கர்பச்சான் மீது தனிப்பட்ட குரோதம் கொண்டு நடத்தப்படும் தாக்குதலாக தெரிகின்றது. உங்கள் தனிப்பட்ட கோபதாபங்களைக் கொட்டித் தீர்க்கின்றீர்கள். அதற்கு எம்மை ஒத்து ஊதச் சொல்கின்றீர்கள்.
சந்திரிக்காவுக்கு எதிராக கருத்துச் சொன்னால் மட்டும் போதும் என்றா நினைக்கின்றீர்கள். அப்படியென்றால் தேசியத் தலைவரும் போராட்டத்தை விடடு சந்திரிக்காவுக்கு எதிராக தினமும் 4 அறிக்கை எழுதிவிட்டால், எல்லாப்பிரச்சனையும் தீர்ந்து போச்சு. தமிழீழத்துக்கு இவ்வளவு இலகுவான வழி இருக்குது பாருங்கோ. கண்டு பிடிச்ச நல்லவனைப் பாராட்டத்தான் வேண்டும்.
Reply
#76
nallavan Wrote:அப்படியே தங்கரை மன்னிப்புக் கேட்க வைத்ததுக்கெதிராகவும் சட்ட உதவியைச் செய்யுங்கள்.

இது கூட தங்கர் மீது கொண்டுள்ள தனிப்பட்ட குரோத்தின் வெளிப்பாடு தானே
Reply
#77
ஐயா தூயவன்.
நானெங்கே சந்திரிக்காவை எதிர்த்துக் கருத்துச் சொன்னால் மட்டும் போதுமென்றேன். வார்த்தையைத் திரிக்காதீர்கள். நீங்கள் தான் கருத்துச் சொல்பவர்களை, அப்படிச் செய்தாயா? இப்படிச் செய்தாயா என்று கேட்டீர்கள். இன்னும் விளங்கத்தக்கதாகச் சொல்கிறேன்.

சந்திரிக்காவை எதிர்த்துக் கருத்து எழுதுபவனை, நீ ஏன் துவக்குத் தூக்கிப் போராடவில்லை என்றுதான் நீங்கள் கேட்கிறீர்கள்? அதே கேள்வி உங்களுக்கும் பொருந்துகிறது என்பது தெரியாமல் இருக்கிறீர்கள்

இப்போது நான் தான் அப்படிச்சொன்னேன் என்று கயிறு விடுகிறீர்களே?
-----------------------------
தங்கர் மேல் எனக்குத் தனிப்பட்ட கோபமேதுமில்லை. ஆனால் உண்மைக்குப் புறம்பான தகவல்களோடு அடிமுட்டாள்த்தனமாக தங்கரைத் தூக்கி வைத்துக் கருத்தெழுதியதைத்தான் நான் உண்மைகளைச் சொல்லி வாதிட்டேன். நான் சொன்னவற்றில் ஒரு பொய்யைக் காட்டுங்கள். பிறகேன் நான் நியாயத்தன்மையில்லை என்று சொல்கிறீர்கள்?
கூலி கொடுக்காமல் தங்கர் ஏமாற்றியது தான் நியாயத்தன்மை என்று நிங்கள் சொல்கிறீர்கள். நான் இல்லை அது அயோக்கியத்தனம் என்கிறேன். யாரின் கருத்து நியாயத்தனமானது. வாசி;க்கிறவங்கள் முட்டாள்களில்லைத்தானே.
Reply
#78
ஐயா தூயவன்,
நீர்தானே சொன்னீர் இங்கே கருத்தெழுதுவதை விட்டு சட்ட ரீதியான உதவி செய்தால் நீர் நல்லவன் என்று.
அதைத்தான் நானும் திரும்ப நக்கலாக உமக்குச் சொன்னேன். உடனே தங்கரின் மீதான காழ்ப்புணர்வு என்று கதைவிடுகிறீரே?

அப்போ நடிகைகள் மீதும் தொழிலாளிகள் மீதும் உமக்குக் காழ்ப்புணர்வு என்று நான் சொல்லலாமா?
Reply
#79
வணக்கம் நல்லவன்
தாங்கள் புரிதல் பற்றிய உங்கள் அறிவை தெளிவாக புரிந்து கொண்டேன். இவ்வளவு வாதத்திலும், தங்கர்சார்பாகவோ, அல்லது நடிகைகள் சார்பாகவோ எக்கருத்தையாவது நான் சொல்லியிருக்கின்றேனா? அப்படியிருக்க தங்கர் சார்பானவன் என்ற முடிவுக்கு எப்படி நீங்கள் வரமுடியும்?
தங்கர்பச்சான் என்ற பெயரே தமிழ் இல்லை. அவர் தமிழன் என்றே நான் நம்பவில்லை.
நான் சொன்னது உங்கள் எழுத்துக்கள் மட்டும் தனிப்பட்ட குரோதத் தன்மையை காட்டுவதாகவே மட்டுமே சொன்னேன்.
. நடிகைகளின் ஒழுக்கம் பற்றிய எண்ணக்கருவில் இருக்கும் உண்மைத்தன்மை பற்றி யாரும் அறியமாட்டோம். அப்படியிருக்க
நடிகைகள் பற்றிய கருத்துக்கள் என்பது அவசியமற்றது
மேலும் சட்டரீதியான உதவிகளைச் செய்ய சொல்லக்காரணம், நீங்கள் தொழிலாளர் குறித்து விட்ட கண்ணீர் தான். ஆனால் நான் அவர்கள் கஸ்டப்படுகின்றார்கள் என்று ஏதும் கண்ணீர் விடவில்லையே!

தமிழில் தாக்கி பேசும் தங்கள் பண்டித்துவத்தை கண்டு மனமகிழ்கின்றேன். ( உதாரணமாக கயிறு விடுதல் ,கதை விடுதல்) இதை விட படித்தவர்கள் காட்டும் ஆணவத்தன்மையும் நிறையவே உண்டு. பெண்ணின் அங்கங்களை விவாதித்தால் தான் சிறப்பு உண்டு என உங்கள் போல சிலர் மூலம் உணர்ந்து கொண்டேன். ஆனாலும் விவாதம் என்ற கருப்பொருளில் பெற்றவளையும், கூடப்பிறந்தவளையும் விவாதிக்காதவரை மகிழ்ச்சி தான். ஆக மொழியின் சிறப்புக்களுக்கு உங்களைப் போன்றவர்கள் தேவை என நம்புகின்றேன்.


வாசிக்கின்றவர்கள் முட்டாள் இல்லை என்றீர்கள். வாசிக்கின்றவர்கள் முட்டாள் இல்லை என்று தெரிந்துமா இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.
Reply
#80
தூயவன்,
என் கருத்து தனியே உங்களுக்கானது மட்டுமென்று புரிந்ததன் விளைவும் உள்ளது. அது என் தவறாகவும் இருக்கலாம். தங்கர் தங்கமானவர் என்று நீங்கள் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி என்னை விமரித்தவர் இன்னொருவர். அவருக்கான கேள்வியும் பதிற்கருத்தும் ஒன்றாகவே வந்துவிட்டதால் குழப்பம்.
தங்கரின் தமிழ்ப்பற்று பற்றி முன்பொருமுறை நீங்கள் கதைத்ததைத்தான் நான் இங்கே பொருத்தி தமிழ்ப்பற்றைப் பற்றிய கேள்வி கேட்டேன். ஆனால் தமிழ் பற்றிய தங்களின் கருத்தைச் சொன்னதுக்கு நன்றி.

படித்த மேதாவிகளின் ஆணவத்தன்மை எதுவென்று எனக்குப் புரியவில்லை. நீங்களே சுட்டிக்காட்டிய சொற்கள் பாமரன்தான் பயன்படுத்துவது. படித்தவர்களில்லை.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)