Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
நன்றி நன்றி முடிந்தவரைக்கும் எழுத்து பிழை இல்லாமல் எழுதமுயற்சிகிறேன் உண்மையில் வேலைகளைப்பிலும் உங்கள் ஆதரவு தான் என்னை எழுதவைகிறது நன்றிமதன் அவர்களே கனக்க எழுத யோசித்தேன் உங்கள் ஆதரவு சந்தோஸம் தருகிறது.
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 7
மயங்கி விழுந்தவனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல மூன்று மணி நேரம் எடுத்தது. அங்குவந்த அரபிக்காரனின் உதவியால் வைத்திய சாலைக்கு மயக்கத்திலேயே கொண்டு சென்றார்கள். டொக்டர் மிகுந்தகோபத்துடன் "நல்லவேளை 30 நிமிடம் தாமதித்து இருந்தாலும் அவனை காப்பாத்தி இருக்கமுடியாது" என்று சொன்னர் இருந்தும் 15 நாட்கள் ரமணன் அங்கேயே தங்க வேண்டி நேரிட்டது.
15 நாட்களின் ரமணன் அறைக்கு திரும்பினான் அவனின் தங்கைக்கு பேசிய நண்பனும் அடிக்கடி அவனைப்பார்க்க வரத்தொடங்கினார். ஒரு நாள் அவனிடம் வந்த அவர் "என்ன? உங்களிடம் தந்த போட்டோவை பார்த்தீர்களா உங்கள் விருப்பம் எப்படி என்று சொன்னால், அடுத்த விடுமுறைக்கு இருவரும் ஊருக்கு போய் எங்கள் இருவரினதும் கல்யாண அலுவல்களை பார்க்கலாம் தானே?" என்று சொன்னார்
ரமணனுக்கு முதலில் எதுவுமே புரியவில்லை "என்ன போட்டோ" என்று கேட்டான்.
"ஓ.... அன்று நான் உங்கள் றூம் க்கு வந்தபோது தந்த கடிதத்துக்குள் ஒரு போட்டோ இருந்தது பார்க்கவில்லையா?" என்று கேட்டபோது தான் அவனுக்கு எல்லாமே புரிந்தது.
வெட்கத்துடன் "ஐயோ நான் இன்னும் பார்க்கவில்லையே சரி" என்று அந்த கவரை திறந்து பார்த்தான்.
அதனுள்ளே ஒரு பெண் இரட்டை ஜடை போட்டு குறுகுறு என்ற பார்வையுடன் மிக அழகாக இருந்தா "யார் இது" என்று கேட்டபோது தான் சொன்னான் அந்த நண்பன்.
" இது என் தங்கை உங்களுக்கு விருப்பமா என்று சொல்லுங்கோ..." என்று ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தார்
"எங்கள் அம்மாவுக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது தங்கைக்கு உங்களை விட்டால் நல்ல மணமகன் கிடைக்காது என்று சொல்லி விட்டார். நாங்கள் ஐந்து ஆண்சகோதரங்கள் தங்கை மட்டும் தான் ஒரு பெண் நீங்கள் கேட்பது எல்லாம் கொடுப்போம். இருக்கும் வீடு ஏன் எங்கள் தங்கையை எங்கள் தோளிலே சுமந்துதான் வைத்து இருப்போம் நீங்கள் அவவுக்கு தாலி கட்டும் போதுகூட.. "என்று சொன்னார்.
" ம்ம்...."அதில் தெரிந்தது அவர்களின் பாசம் ஆனால் அதை கேட்ட பக்கதில் இருந்த ஜேனி "என்னடா மச்சி ரமணா நல்ல இடம் தான் கிடைத்து இருக்கு.." என்று சிரித்தான். ரமணன் மனது வேதனை யாருக்குமே புரியவே இல்லை ஒரு நாள் தீடிரென்று சாமி மதுவின் அண்ணா ரமணன் அறைக்கு வந்தான்.
வந்தவன் முகத்தில் ஈயாடவில்லை. ரமணன் பார்த்ததும் தலைகுனிந்தபடியே இருந்தான் அறையில் வேறு நண்பர்களும், ரமணனை வருத்தம் பார்க்க வந்தவர்களும் இருந்தார்கள். அப்போ சாமி மெதுவாக "ரமணா உங்களுடன் கொஞ்சம் பேசவேணும் முடியுமா? "என்று கேட்டான்.
inthirajith
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்ம் தொடர்ந்து எழுதுங்கள்... மதுவின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று அறிய ஆவலாய் இருக்கின்றோம்.
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
தொடருங்கள் மீண்டும்! காதல்பறவையொன்று திசைமாறிப் பறக்கின்றதே ஏன்? எங்கே விரிசல் ஏற்பட்டது? எந்த சுடும் புதைமணலில் கால்வைத்ததால் திசைமாறவேண்டியேற்பட்டது?
!:lol::lol::lol:
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
உண்மைதான் நேரம் இல்லை அத்துடன் வேலைப்பழு ரொம்ப அதிகம் 18 மணி நேரம் வேலை செய்தேன் நித்திரை முழிக்க முடியாமல் பொய் விட்டது மன்னிக்கவும்
inthirajith
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
இந்திரஜித் உங்கள் தொடரை வாசித்துவருகிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள். பலருடைய வாழ்க்கையில் இவ்வாறன எதிர்பாராத துன்பங்கள், திருப்பங்கள் ஏற்படுகிறன. வாழ்க்கையில் அனைத்தையும் தாங்கி கொண்டு தானே ஆகவேண்டும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
மெதுவாகக் கேட்ட சாமியிடம் "சரி வாங்கோ கன்ரீனுக்கு போவோம்" என்று அழைத்து சென்றான். ஏதோ சொல்லத்தவித்த படியே இருந்த சாமி "ரமணா என்னை மன்னிக்கவேணும்." என்று பீடிகையுடன் தொடங்கினான். சரி என்ன சொல்லுங்கோ என்று மனதை தைரியப்படுத்தி கொண்டான் ரமணன்.
"அம்மா கடிதம் போட்டு இருந்தா உடனே என்னை ஊருக்கு வரும்படி மதுவின் நடத்தையால் ஊருக்கு வெளியே தலைகாட்டமுடியவில்லை என்று எழுதி இருக்கிறா அவவும் எதோ எழுதி இருந்தா நம்பவும் முடியவில்லை "என்று முடித்தான் சாமி
"நானும் கேள்விப்பட்டேன் ஆனால் நான் நம்ப மாட்டேன் மது அப்படி பட்ட பெண் இல்லை சாமி" என்று சொன்ன ரமணனை கண்கலங்க பார்த்தான் சாமி.
" சரி எதுக்கும் நான் இலங்கை போட்டு வாறேன் அம்மா உடனே வர சொல்லி எழுதி இருக்கிறா ஒரு கிழமையில் ஊருக்கு போகிறேன். வரும் போது நல்லசெய்தியுடன் வருவேன்" என்று சொல்லி விடை பெற்றான் சாமி.
"ம்ம் எதுநடந்தாலும் சாமி உங்களை நான் வெறுக்கமாட்டேன் மது இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் மதுவிடம் சொல்லுங்கோ" என்று மது எழுதிய கடிதங்களின் குவியலை காட்டி "இப்படி எழுதியமதுவின் மனது எனக்கு தெரியும்" என்று சொன்னான் ரமணன் சாமியின் முகத்தில் ஏனோ சந்தோசமே இல்லை.
சாமியும் நாட்டுக்கு ஒரு மாத லீவில் போய்விட்டான் இதற்கு இடையில் நண்பனின் தங்கை நேரடியாக அவனுக்கு கடிதம் போட்டு இருந்தா.அதில்
அன்பான கவியின் அண்ணாவுக்கு,
அன்புடன் சசி எழுதிக்கொள்வது அம்மா உங்களுக்கு கடிதம் எழுத சொல்லி, உங்கள் அப்பாவிடம் விலாசம் வாங்கி தந்தார்கள் நாங்கள் அனுப்பிய பலகாரம் கிடைத்ததா? அண்ணா ஒரு படம் தந்தாரா? உங்கள் படம் உங்கள் வீட்டில் பார்த்தேன் சந்தோசம் எப்போ ஊருக்கு வருவீர்கள் என்று அம்மா கேட்க சொன்னா? வரும் போது அண்ணாவையும் ஒன்றாக கூட்டிக் கொண்டு வரட்டாம் ( எனக்கும் உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறது. கவி எனக்கு உங்கள் படம் ஒன்று தந்தா அதை பார்த்த அம்மா தான் உங்களுக்கு கடிதம் எழுதச் சொன்னார்கள்) நீங்கள் ஊருக்கு வரும் போது என் ஐந்து சகோதரர்களும் இங்கே ஒன்றாக நிற்பதாக சொல்லி விட்டார்கள். அம்மாவிடம் எனது கல்யாணம் நன்றாக நடக்கவேணும் என்று ஆசைப் படுகிறார்கள் ம்ம் உங்கள் மனது தான் அதற்கு ஆவன செய்ய வேணும்
பிற்குறிப்பு;
நான் இப்போ சமைக்கபழகுகிறேன் உங்களுக்கு என்ன பிடிக்கும் ?
அன்புடன் பதிலை எதிர்பார்க்கும்
சசி
என்று எழுதி இருந்தது. ரமணனின் மனநிலையோ தவித்தபடி இருக்கும்போது, இதுவேறு புதுத் தலை இடி தானோ ? என்று நினைத்துக் கொண்டான்.
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
இப்போதெல்லாம் சசியின் அண்ணா அடிக்கடி ரமணன் அறைக்கு வருவார் ரமணனுக்கும் அது இடஞ்சலாக இருந்தாலும், சொல்லமுடியவில்லை. கடிதம் வந்த அன்று மாலை வந்த சசியின் அண்ணாவிடம் சொன்னான் "உங்கள் தங்கை கடிதம் போட்டு இருக்கிறா" என்று சொன்னான்.
"ஓ என்னவாம்..." என்று சிரித்தபடியே கேட்டவரிடம் கடிதத்தை கொடுத்தான்.வாசித்துவிட்டு
"கடவுளே நான் அம்மாவுக்கு சொன்னனான் சமைக்கவிடவேண்டாம் வரும் மாப்பிளை எங்களுடன் தானே இருப்பார்.அம்மா சமைக்கலாம் தானே பாவம் சசி என்ன கஸ்ட படுகிறாவோ..." என்று சொன்னார்
"ம்.ம்..."மென்று முழுங்கிய ரமணன் மனதுக்குள் சிரித்தான்.எத்தனை கற்பனைகள் ஆனால் ரமணனிடம் எந்தமுடிவும் கேட்காது அவர்களாக எடுக்கும் எந்தமுடிவுகளுக்கும் அவன் பொறுப்பு இல்லை தானே சாமியின் வரவுக்காக காத்து இருந்தான் ரமணன் காலம் தன் வேலையை தொடர்ந்தது
ஊருக்குப்போன சாமி திரும்பி வந்து விட்டான் என்று அப்பா எழுதி இருந்தார் எல்லா விடயமும் சாமி வந்து சொல்லுவார் என்று அப்பாவும் எழுதி இருந்தார். ரமணனும் சாமிவருவான் அல்லது கடிதம் வரும் என்று பார்த்தபடியே இருந்தான். இரண்டு மாதங்கள் சென்றும் சாமி ரமணனை தொடர்பு கொள்ளவே இல்லை சரி என்று இருந்தபோது அவனுக்கு ஜெட்டா திரும்பவும் போகும் சந்தர்ப்பம் வந்தது. அவனும் போனான் சாமியிடமும் போனான்.
அப்போ தான் ஏன்டா அவனிடம் போனேன் என்று இப்போதும் அழுகிறான். அந்த சுடுகின்ற பாலை வனங்கள் எல்லாம் இப்போ அவனுக்கு சுடுவதில்லை. அவனின் மனதும் மரத்து விட்டது இலங்கையை விட்டு போகும்போது எப்படியும் சீக்கிரமாக வந்து மதுவின் கைபிடிக்கும் இலட்சியத்துடன் போன அந்த ஆத்மாவின் அலறல் யாருக்குமே கேட்கவில்லை.
அவசர உலகில் அவனை பற்றி கவலைபட யாருமே இல்லை அப்பாவும் அம்மாவும் இறந்தபோதும், அவன் போகவில்லை அவனின் மருமக்களுக்கும் மாமாவின் படம் தான் தெரியும் அவன் அனுப்பும் சொக்கலேற்கள் ருசி தெரியும் மாமா வாங்கோ என்று கடிதம் எழுதுவார்கள். முகம் தெரியா ரமணன் மாமாவின் அன்புக்காக ஏங்கும் அவர்களால் ஏங்கதான் முடியும் அப்பாவின் பழையகடிதத்தை எடுத்துவாசித்தபடியே இருந்த ரமணணுக்கு மது கொடுத்த முத்தம் மட்டும் தான் நினைப்பில் இருக்கிறது.
அவன் சௌதிக்கு வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது ஜெனி எல்லோருமே நிரந்தரமாக இலங்கைக்கு போய்விட்டார்கள். அவர்களின் பிரிவுத்துயர் ஆரம்பத்தில் தன் வாழ்க்கையை நினைவுபடுத்தும் அப்பொதெல்லம் அவனுக்கு ஆறுதல் மதுவின் கடிதங்கள் தான்.
<b>ஓஒ பொறுங்கள் ஏன் ரமணன் இப்படி ஆகிவிட்டான் அடுத்தமடலில் சொல்கிறேன் </b>
-தொடரும்-
inthirajith
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்ம் சீக்கிரம் எழுதுங்கள்... காத்திருக்கின்றோம்.... மதுவுக்கு என்ன நடந்தது என்று சொல்லலையே????
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்.. வாசகர்களை தவிப்புடன் இருக்கவைப்பதுதான் கதாசிரியர்களின் கைவந்த கலையாச்சே!....
தொடருங்கள் காத்திருக்கின்றோம்.
!:lol::lol::lol:
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
இந்திரஜித் இன்னும் தூக்கமா? நாங்கள் தூங்காமல் அடுத்த அங்கத்தை எதிர்பார்த்து விழித்திருக்கின்றோம்.உடன் தொடரவும்.......
" "
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
பாராட்டுக்கள் இந்திரஜித்..
கதையை நல்ல விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள்..
முக்கியமான கட்டத்தில் நிறுத்தி விட்டீர்களே..
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
உண்மையிலே உங்கள் வாழ்த்துக்கள் தான் எனக்கு உற்சாகமருந்து நன்றிகள் உதவி செய்த எல்லொருக்கும் என் நன்றிகள் என் அன்பான தோழிக்கும் நன்றிகள்
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
<b>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 8</b>
படுக்கையில் படுத்தபடியே அப்பாவின் கடிதம், மதுவின் கடிதங்கள், நண்பர்களின் கடிதங்கள் என்று பிரித்து அடுக்கி வைத்து இருந்த ரமணன் சசி அனுப்பிய கடிதங்களையும் தனியாக வைத்து இருந்தான். அதில் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். இது சசி இடம் இருந்து வந்த எட்டாவது கடிதம் அதனை மீண்டும் வாசித்தான். ம்ம் மனித மனங்களின் பச்சோந்தி புத்திகள் நினைத்து சிரிப்பு தான் வந்தது. கடிதம் வாசிக்கத் தொடங்கினான்
அன்பான ரமணனுக்கு (பேர் சொல்லி எழுதுவதால் குறை நினைக்கவேண்டாம்) நான் கடிதம் போட்டதை அண்ணாவிடம் சொல்லி விட்டிர்களா? அண்ணா கோபிக்கவில்லை சந்தோசமாக எழுத சொல்லிவிட்டார் இருந்தும், உங்களிடமிருந்து எந்தகடிதமும் வரவே இல்லையே. ஏன் உங்கள் படத்தை வைத்துக் கொண்டுதான் படுக்கிறேன் அம்மா அண்ணாக்களிடம் சொல்லி சிரிக்கிறா நான் என்ன செய்ய? பதில் போடுங்கோ. போன கிழமை கோவிலுக்கு போய்விட்டு வரும்போது உங்கள் வீட்டுக்கும் போனேன். உங்கள் அப்பா சந்தோசமாக கதைத்தார். எப்படி சமைப்பீங்களா என்று கேட்டார் ஓம் என்று சொன்னேன் அதற்கு அவர் சொன்னார் பிற்காலத்தில் எங்களுடன் தானம் வந்து இருக்கப்போவதாக என்று
அது சரி ரமணன் நீங்கள் ஊருக்கு வந்து கல்யாணம் முடித்து விட்டு திரும்பி போகப்போறீங்களா சவூதிக்கு. என்னால் உங்களை விட்டு பிரிய முடியாது அண்ணா என்றால் திரும்பிப் போகட்டும் நீங்கள் என்னுடன் இருந்தால் எனக்கு சந்தோசம். உங்கள் விருப்பத்தையும் எழுதுங்களேன். உங்கள் எழுத்தையும் பார்க்க ஆசையாக இருக்கிறது
"ம்ம் இப்படி எழுதிய சசியும் போனபாதை" சசியின் அண்ணாவும் சசியின் செயலால் சவூதியை விட்டுப் போகும் போது ரமணனிடன் சொல்லாமலே போய் விட்டார் என்ன செய்ய ரமணனின் மனது மாறும் நேரத்தில் சசி ஊரில் சாக்கு வாங்க வரும் ஒருவனுடன் ஓடிவிட்டா கண்டதும் காதலாம் " என்று ரமணனின் தங்கை எழுதி இருந்தா. நல்ல வேளை ரமணன் சம்மதித்தால் எல்லாவற்றுக்கும் என்று அவனை புரிந்த தங்கை இருந்தபடியால் அவனுக்கு ரொம்ப நிம்மதி.
மதுவின் நிலை அவன் அவ்வப்போது ஊரில் இருந்து வரும் நண்பர்களின் கடிதங்களில் அறிந்து கொள்ளுவான் எப்படி இருந்தாலும் அவன் மனதுக்கு இனிய உறவு தானே..?
ஒரு நாள் ரமணனின் விடுமுறையில் சாமியிடம் போனபோது......
அவனை எதிர்பார்க்காத சாமி திகைத்து விட்டான் பின்பு ரமணன் சாமியிடம்
"என்ன சாமி எதுவானாலும் எனக்கு சொல்லுங்கோ,உங்கள் மேல் கோபம் இல்லை மதுவையும் கோபிக்கமாட்டேன்." என்று சொன்ன ரமணனிடம் மனதைத் திறந்து அழுகையினூடே சொல்லத்தொடங்கினான்
மது வேலை செய்யும் போது ஒரு நாள் மதுவுக்கும் அந்த திருமணமான அந்த ஆடவனுக்கு இரவு டியூட்டி. அது தொடர்ந்து இரண்டு கிழமைகள் வந்தது இரவில் நோயாளிகள் உறங்கிய பின்பு அவர்களுக்கு கிடைத்த தனிமைகள் சந்தர்ப்பங்கள். மது அவனிடம் தன்னை இழந்து விட்டாள். மதுவின் முழு அனுமதியடன் தான் அந்த ஆடவன் மதுவை தொட்டு இருக்கிறார். வயசும் சூழ்நிலையும் தன்னை அவனிடம் இழுக்கவைத்து விட்டதாக மது சாமியிடம் சொல்லி அழுது இருந்தபோது, சாமிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒருபுறம் சின்னவயது முதலே பழகிய ரமணன், நிலை புரிந்தவன் ஒருமுறை யாரிடமும் பலவந்தமாக மதுவை யார் தொட்டலும் மதுவை ரமணன் ஏற்று இருப்பான் ஆனால்...
மதுவே சம்மதித்து நடந்தபோது என்ன செய்வது, பின்பு ஒருமுடிவு எடுத்து அந்த ஆடவனுடன் கதைத்து, அவர்கள் இருவருக்கும் வீட்டில் வைத்து முதல் மனைவியின் எதிர்ப்புக்கு இடையிலும் கல்யாணம் முடித்துவிட்டு வந்து விட்டான் ஆனால் ரமணன் முகத்தில் எப்படி முழிப்பது என்று வராமலே இருந்துவிட்டான். மனதெல்லாம் உடைந்து சிதற, எதுமே பேசாமல் வந்தான் ரமணன்...
திரும்பி அறைக்கு வந்த ரமணன் அன்றில் இருந்து மாறிப் போய்விட்டான் நத்தை தன் ஓட்டுக்குள்ளே அடைவது போல் ஒரு ஞானியை போல் எதிலும் பற்று இல்லாமல் வாழ தொடங்கினான் இன்று வரை அவனுக்கு இப்போதெல்லாம் அந்த பாலை வன மண் சுடுவதில்லை மனதெல்லாம் வேகும் போது கேவலம் அந்த வெறும் சூடு என்ன செய்யும் அவனுக்கு மட்டும் எல்லோருக்கும் "சுடுகின்ற புதை மணல்கள்"சுடுவதே இல்லை
<b>பிற்குறிப்பு</b>
ஏனோ கல்யாணம் முடித்து 8 வருடங்கள் ஆகியும் மதுவுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை கோவில் கோவிலாக ஏறி இறங்குவதாக ரமணனின் சகோதரிகள் எழுதி இருந்தார்கள்
ஒரு ஆறுதலான செய்தி ரமணன் ஊருக்கு போகிறான் ஏதாவது கோவில் மடத்தில் தன் காலத்தை கழிக்க போவதாக முடிவு செய்து விட்டான் அவனுக்கு அவன் மனதை புரிந்த ஓர் உறவு கிடைக்க பிராத்தனை செய்வோமா.... ?
-முற்றும்-
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
இந்த கதைக்கு ஆதரவு தந்த உள்ளங்களுக்கும் யாழ் இணையத்துக்கும் என்னையும் ஏற்று கொண்ட உங்கள் அனைவருக்கும் என் இதய பூர்வமான நன்றிகள் என்னை எழுத வைத்த தோழிக்கும் நன்றிகள் என் புதிய தொடர்
"வலி தெரியாக் காயங்கள்"[/b]
inthirajith
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
விறு விறுப்பாக தொடர்ந்த கதைக்கு முடிவுதான் திடீர் நிறுத்தல் (சடும் பிறேக்) ஆகிவிட்டது.
" "
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்ம்ம நல்லா இருக்கு அந்த மதுவுக்கு முன்னால் றமணன் சிறப்பாக அவளை விட எல்லா வகையிலும் திறமையான பெண்ணுடன் வாழந்து காட்டவேண்டும்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அடுத்த கதையை பாத்துக்கொண்டு இருக்கிறம்;
அடுத்து ஒரு சந்தோஷமான கதைய தாங்கப்பா...
சுடுகிற புதைமணல்கள் றொம்ப சுடுது.... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............