Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#41

மூக மாற்றங்களை தெறிக்கும் (சுநகடநஉவ) ஒரு ஊடகமாகவே அரங்கு மனித வரலாற்றில் பதிவாகி வந்திருக்கிறது. சேக்ஸ்பியர், ஹென்றிக்கிப்சன், அன்ரன் செக்கொவ , பெணாட்ஸா என உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர்கள் பலரின் நாடகங்களும் இதற்கு சான்றாகியுள்ளன.
ஈழத்திலும் எமது மக்களின் கற்பனை ஆற்றலையும், கவித்துவத்திறனையும், இசை வளத்தையும், சமூகம் மற்றும் சமயம் சார்ந்த விருப்பு வெறுப்புக்களையும் படம் பிடித்துக் காட்டும் சாதனமாக விளங்கியது நாடகங்களே. பள்ளு, குறவஞ்சி, அம்மானை போன்ற இலக்கிய வடிவங்களின் ஊற்றுக் கண்களாக நாடகங்களே விளங்கின.
கைத்தொழில் புரட்சியின் விளைவாக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி (ஊiநெஅயவழபசயிhல) எனும் புதிய சலனப்படக் கலைக்கு வழி திறந்ததோடு, நாடகம் கிராமப்புற பாமர மக்களின் கலை வடிவமாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் 1956களில் எழுந்த இலங்கை தேசிய எழுச்சிகளுடனான போக்கில் பேராசிரியர் சரத்சந்திரவின் 'மனமே' 'சிங்கபாகு' போன்றவை சிங்கள தேசிய அரங்குகளாக பரிணமித்தபோது பேராசிரியர் வித்தியானந்தனின் முயற்சியினால் தமிழ்ப்பாரம்பரிய நாடக அரங்கங்களும் புதிய வடிவங்களைப் பெற்று புத்துயிர் பெற்றன. 'இராவணேசன்' என்னும் நாடகம் இவ வாறு உருவாகிய நாடகமாகும்.
எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து உருவாகிய நாடக அரங்கக் கல்லூரி ஈழத் தமிழ் நாடகங்களுக்கான ஒரு புதிய திறவு முனையாக அமைந்தது. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான தீண்டாமை ஒழிப்பு, வெகுஜன போராட்டத்திற்கு ஆதரவாக உருவாகிய எஸ். கே. ரகுநாதனின் 'கந்தன் கருணை' முன்னரே உருவாகிய ஒரு அரசியல் நாடகமாக இருந்த போதும் (84) 1984ல் மிகவும் கூர்மையடைந்திருந்த தமிழினத்திற்கு எதிரான சிங்கள இராணுவ அரசியல் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக மக்களை விழிப்படைய வைக்கும் நோக்குடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 'மண்சுமந்த மேனியர்' எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. இது 150 மேடைகளுக்கு மேல் மேடையிடப்பட்டது. இது ஒருவகையில் அரசியல் நாடகமாகவும் (Pழடவைiஉயட வுhநயவசந) ஈழத் தமிழ் நாடகங்களின் ஒரு புதிய பரிணாமமாகவும் அப்போது அமைந்திருந்தது. எமது பாரம்பரிய நாட்டார் இசை, தேவாரம், புதுக்கவிதைகள் ஆகியவற்றோடு கிரேக்கநாடக மரபின் கோரஸ் முறையும் 'பிறக்றிய' அரங்கின் புறநிலைப்படுத்தி நோக்கும் முறையும் இந்நாடகத்தில் சிறப்பம்சமாய் அமைந்தது.
மறைபொருட் பண்பும், புலமை சார் பண்பும் நிறைந்ததாக இந்நாடகம் அமைந்திருந்தபோதும், இது பார்வையாளருடன் நல்லதொரு இடை வினையைக் (ஐவெநச யுஉவழைn) கொண்டிருந்தது. பார்வையாளரும் நடிகர்களுடன் சேர்ந்து பாடினர், ஆடினர். பார்வையாளருடைய வாழ்வை, அவர்களுடைய துயரங்களை நாடகப் பாத்திரங்கள பிரதிபலிப்பதை உணர்ந்தனர். இங்கு அரங்கிடப்பட்ட உணர்வுகள் சரியான இடை வினையை அடைந்ததே இந்நாடகத்தின் வெற்றியாக அமைந்தது. இது படச்சட்ட மேடைகளைக் கடந்துபல இடங்களில் மக்களோடு நெருக்கமாக ஒரே தளத்தில் அரங்கிடப்பட்டபோது (தெருவெளி அரங்கைப் போன்று) இதன் இடை வினை மிகச் சிறப்பாக இருந்ததாக இதன் நெறியாளர் திரு. க. சிதம்பரநாதன் தெரிவித்திருந்தார். இது ஒரு மாற்றத்துக்கான புதிய அரங்கவடிவ முறையாக பரிணமித்திருந்தது.
இதன்பின் ஈழத்தமிழ் நாடக அரங்கு விடுதலைக்கான அரங்காக உருவானது நாடக அரங்கக் கல்லூரி (குழந்தை ம. சண்முகலிங்கம், முருகையன்) மட்டுமன்றி வேறு பலரும், குறிப்பாக வீ. என். குகராஜா, திரு. எஸ். பாலசிங்கம், பொன். கணேசமூர்த்தி, நா. யோகேந்திரநாதன் போன்றவர்களுடன் வேறும் பலரும் அரசியல் நாடகங்களை உருவாக்கினர்.
நவீன தொழில் நுட்ப விஞ்ஞான வளர்ச்சியின் விளைபொருளான சினிமா, வீடியோ என்பவற்றின் தாக்கங்களைக் கடந்து நாடகம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தது. அதன் நம்பகத் தன்மையினாலும், ஆற்றுவோர் ஆற்றப்படுவோருக்கிடையேயான எவ வித தடைகளுமற்ற மனிதன் மனிதன் எனும் நெருக்கத் தன்மையினாலுமேயாகும். ஒடுக்கப்படும் மக்களின் குரலாகவும் அரங்கு அமைந்திருந்ததால் நாடகங்கள் எமது மக்களிடையே வரவேற்புப் பெற்று வேரூன்றத் தொடங்கியது.
வாழ்வின் தேடலை அர்த்தப்படுத்தும் கலை நாடமாகும். மனித வாழ்வின் நம்பிக்கைகளை, சாத்தியப்பாடுகளை நிகழ்த்திக் காட்டுவதும் நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்துதற்குமான ஒரு ஊடகமாகவே நாடகம் நிலைத்திருக்கிறது.
மனித உடலே நாடகத்தின் பிரதான மொழியாகிறது. காத்திரமான கவிதை வரிகள் இங்கே மிக மிகச் சாதாரண மொழியாகி விடுகிறது. இசையோ அரங்கின் இடைவெளிகளை நிரப்பிச் செல்லும் ஊடகமாகிவிடுகிறது. மனித மனங்கள் தளைகளைக் கடந்து நாடகங்கள் ஊடே சுதந்திர வெளிகளை அடைகின்றன. இந்த வெளிகளிலேயே அவர்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர். ஒவ வொரு மனிதனுடைய வாழ்வும், அதன் எதிர்பார்ப்புக்களும், நம்பிக்கைகளும் நாடகங்கள் ஊடே வெளிப்படவேண்டும். வாழ்வின் தேடலை அர்த்தப் படுத்தும் கலையான நாடகம் ஒடுக்கப்படுபவர்களின் குரலாக ஒலிக்கும் போதே சமூக மாற்றத்துக்கான ஆயுதமாக மாறுகிறது.
எமது மக்களின் துயரங்களை, வாழ்வியல் அவலங்களை வெளிப்படுத்தும் பல்வேறு அரங்க வடிவங்கள் எம்மிடையே எழுந்தன. நாற்சார் வீட்டினை அரங்காகக் கொண்டு நடாத்தப்பட்ட குழந்தை ம. சண் முகலிங்கத்தின் 'எந்தையும் தாயும்' மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட ரதிதரனின் 'அண்டவெளி' சிதம்பரநாதனால் கொழும்பு காலி வீதியில் நிகழ்த்தப்பட்ட 'கொற்றவையுடன் ஓர் ஆற்றுகை' திருகோணமலையில் நிகழ்த்தப்பட்ட 'பிரமாண்ட இராணுவ சப்பாத்து' என்பன ஊர்வல அரங்குகளாயின. இவற்றோடு பலவகையான பட்டறை நாடகங்களும், அகதிமுகாம களின் அவலங்களைச் சுமந்து வந்த கட்புலனாகா அரங்குகள் (ஐnஎளைiடிடந வுhநயவசந) என அரசியல் அரங்குகள் விரிவடைந்தன. அரங்கு என்பது அரசியலுக்கான தொடர்புூடகமாயிற்று. (வுhநயவசந யள Pழடவைiஉயட ஊழஅஅரniஉயவழைn)
1995 இன் பின் இடப்பெயர்வினால் எழுந்த பாரிய நெருக்கடிகளும், வாழ்தலுக்கான போராட்டமும், வசதியீனங்களும் தெருவெளி அரங்குகளின் எழுச்சியை எம்மண்ணில் ஏற்படுத்தின. ஆரம்பத்தில் அடையாளப்படுத்தப்பட்டது போன்று தெருவெளி அரங்குகள் கிளர்ச்சியுூட்டும் பிரச்சார அலகுகளாகவே (யுபவையவழைn யனெ pசழியபயனெய ரnவை) இருந்தன.
காலப்போக்கில் மக்களோடு நெருக்கமாகி நின்ற தெருவெளி அரங்குகள் புலமைசார் பண்பு குறியீட்டு உத்திப் பிரயோகங்கள் என்பனவற்றில் விருத்தியுறத் தொடங்கின. மேடைகளையும், திரைகளையும் நிராகரித்திருந்த இவ அரங்கு குறித்த ஒரு பகுதியினருக்கு என்றில்லாமல் எல்லா மக்களுக்குமான அரங்காக மாறியது. அவர்கள் உணர்வுகளைத் தூண்டி, சிந்தனையை நெறிப்படுத்த முயன்றன. அரங்க அளிக்கையாளர்களும் பார்வையாளர்களும் இணைந்து என்ன செய்யவேண்டும் என்பதை விவாதிக்கும் போரம் அரங்குகளாகவும் (குழசரஅ வாநயவசந) இரண்டொரு பாPட்சார்த்த இன்விசிபிள் அரங்குகளாகவும் (ஐnஎளைiடிடந வுhநயவசந) பல புதினப் பத்திரிகைகளின் செய்திகளை விவாதிக்கும் செய்தித்தாள் அரங்கம் (நேறள Pயிநச வுhநயவசந) ஆகவும் எமது மண்ணின் தெருவெளி அரங்குகள் விரிவடைந்தன. மறைபொருட் பண்பு விரவிய குறியீட்டு உத்திகளை எமது மக்கள் புரிந்துகொள்ளும் வன்மையைப்பெற்று அரங்கங்களுடன் வளர்ந்தனர். கிராமிய நாட்டார் பாடல்கள், கூத்து மெட்டுக்களில் அமைந்த பாடல்கள் மூலம் எமது தெருவெளி அரங்குகள் இசை நாடகப் பண்பில் (ஆநடழனசயஅய) வளர்ச்சியுற்றன. பல தெருவெளி அரங்கப் பாடல்கள் இசை நாடாக்களாக வெளிவந்தன. புதுவை அன்பனின் (நா. செல்வம்) 'வெற்றி முரசுப் பாடல்கள்' மிகச் சிறப்பாக அமைந்த நாடக இசைப்பாடல் நாடாவாகும்.
இவ வாறு பல்வேறு நாடக உத்திச் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி மெருகு பெற்ற எமது மண்ணின் தெருவெளி அரங்குகள் தமிழ் நாடக உலகின் கவனத்தை பெறாதிருந்தது கவலை தரும் விடயமேயாகும். எனினும் கடந்த வருடம் செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இனி-2000' மகாநாட்டில் 'கடந்த நூற்றாண்டில் ஈழத்து தமிழ் நாடக அரங்கு' என்னும் கட்டுரையை சமர்ப்பித்திருந்த திரு. கந்தையா சிறீகணேசன் 'போர் முழக்க அரங்கு' என எமது தெருவெளி அரங்குகள் சிலவற்றையும் அதன் கலைஞர்களையும் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் என்பது மறுக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்.
எமது மண்ணில் தெருவெளி அரங்கப் படைப்பாளிகள் பலர். இவர்களில் புதுவை அன்பன் (திரு. நா. செல்வம்) திரு. பாலசிங்கம் (பாலா மாஸ்ரர்) பேபி ஆசிரியை, ரகு, இளங்கோ எனப் பலர் உள்ளனர். பெயர்கள் குறிப்பிடப்படாது போனாலும் இவர்களில் பலர் காத்திரமான படைப்புக்களை உருவாக்கியிருக்கின்றனர். வாழ்வியல் துயரங்களின் குறியீடுகள் (நுஒளைவநவெயைட யுரபரiளா) மூலம் பார்வையாளர்களின் உணர்வு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கருத்துக்களை விதைக்கின்ற ஒரு முறைமையை கைக்கொள்பவர் புதுவை அன்பன். இவருடைய படைப்புகளில் கவித்துவமான சொல்லாடல்கள் (னுiஉவழைn) இனிய பாடல்கள், உயர்வான அரங்க நுட்பம் (ளுவயபந ஊசயகவ) நிறைந்து காணப்படும். களத்தில் காத்தான், சதியை வென்ற சாவு, வெள்ளைப்புறா சிவப்பானதேன்? போன்றவை மிகச் சிறப்பான அரங்குகளாக பேசப்பட்டவை ஆகும்.
கண்ணீரும் வாழ்வின் துயரங்களிலும் இருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஏனைய விடுதலைப் போராட்டங்களும் கருக்கொண்டன எனும் கருத்தில் நம்பிக்கையுடைய இப்படைப்பாளி கல்வி மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களிலுமே புதிய சிந்தனை வேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருக்கிறார். எமது போராட்டம் தமிழீழ விடுதலையை நோக்கி செல்லும் என்னும் அடிநாதத்தையே தனது நாடகங்களில் கொண்டிருக்கிறார்.
சகல ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுவிக்கப்படும் போதே உண்மையான விடுதலை சாத்தியமாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை உருவாக்குபவர் பாலாமாஸ்டர், பிரச்சினைகளின் அடிப்படைகளையும் அவற்றிற்கிடையேயான முரண்களையும் சரியாக கணக்கிடும் வன்மையுடைய இவருடைய நாடகங்கள் கருத்தியல் செழுமையுடையதாக இருக்கும். 'சமுத்திரத்தில் ஓர் சரித்திரம்' எனும் இவருடைய நாடகம் மணலாற்று சிங்களக் குடியேற்றத்தின் வரலாற்றையும், அக்குடியேற்றம் தொடர்பில் சிங்கள அரசு கொண்டிருந்த நிலைப்பாடுகளையும் தெளிவாக எடுத்துரைத்தது. 'புூமழை பொழியும்' எனும் நாடகம் எதிர்கால தமிழீழ தேசம் எப்படி அமையும் எனும் கருத்துச் சித்திரமாக அமைந்திருந்ததுடன் ஒரு விவாதத்தின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்திருந்தது.
பேபி ஆசிரியையின் 'யுத்தம்' ஒரு சிறப்பான செய்தித்தாள் அரங்காக (நேறள Pயிநச வாநயவசந) அமைந்திருந்தது. ஆட்டங்களும், சிறப்பான இயங்கு தன்மையுடைய (னுலயெஅiஉ) பாத்திர உருவாக்கமும் இவருடைய சிறப்பம்சமாகும். பலமும், பலவீனமுமான கலவையாக பரிணாமம் பெறும் எமது தெருவெளி அரங்குகளிடையே வித்தியாசமானதொரு ஊர்வல அரங்காக, அக்கராயன் ப.நோ.கூ.சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தள எச்சங்கள்' அமைந்திருந்தது. கவிஞர் சாதுரியன், நவரட்ணஜோதி ஆகியோர் இணைந்து உருவாக்கிய இந்த அரங்கில் கிளிநொச்சி உதய நகரில் மலக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட மனித உலும்புக்கூடுகள், இரத்தம் தோய்ந்த புத்தகம், தலையுடைந்த தெய்வச் சிலைகள், சிதைந்துபோன குருகுலஸ்தாபகர் படம், செல் சிதறல்கள், வீட்டுப் பொருட்கள், பட்டினியைக் குறித்து வெற்றுத்தட்டு, நாலு கிடுகுகளுடன் ஒரு கொட்டில், சவப்பெட்டி என பறையும், கவிதையும் இணைந்து பலரை கண்ணீர் சொரிய வைத்தது.
கிளிநொச்சியை சேர்ந்த ரகு (கணேசலிங்கம்) எளிமையும், கிராமிய இசை வடிவங்களையும் கொண்ட நாடகங்களை உருவாக்கும் திறமையுடையவர். இவருடைய நாடகங்கள் வரலாற்றுப் போக்கினை (ஊhசழniஉடந) மையமாக கொண்டு அசையும் இயல்படையது. 'இன்றைய தேவை' 'வீரமுரசம்' என்பன இவருடைய நாடகங்களில் சிறப்பாக அமைந்திருந்தன. தவில் இசையும், வியட்னாமிய மக்களின் தொப்பி, முள்முடி போன்ற குறியீடுகள் மேடை நுட்பத்தை, சிறப்புடன் வெளிப்படுத்தும் இயல்பைக் கொண்டிருந்தது.
மக்கள் மத்தியில் தெருவெளி அரங்குக்குரிய செல்வாக்கை கருத்தில்கொண்டு, சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 'யுனிசெப்' நிறுவனம் கிளிநொச்சி அழகியல் கலாமன்றத்தினூடு விஜயசேகரனின் நெறியாள்கையில் தெருவெளி அரங்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
சூரியனுக்கு கீழே உள்ள எந்த விடயத்தையும் எளிமையாக தெருவெளி அரங்கில் காட்சிப்படுத்தமுடியும் என்பதனை எமது கலைஞர்கள் நிரூபித்து வருகின்றனர். தெருவெளி அரங்கின் வெற்றி என்பது பார்வையாளருடன் அது ஏற்படுத்தும் இடைவினையிலேயே தங்கியுள்ளது. சுதந்திரமானதொரு வாழ்வின் அடிப்படையை உருவாக்குவதில் சமூகத்தின் ஒவ வொரு மனிதரையும் தட்டி எழுப்புவதில் எமது மண்ணில் தெருவெளி அரங்குகள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன.
அன்ரன் அன்பழகன்
Reply
#42
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி
100 நாட்கள் கடந்த பின்னர் கிழக்கில் இயல்புநிலை தோன்றியுள்ளதா?



திருகோணமலை நகருக்கு வடக்கே கடற்கரைப் பகுதித் தமிழ்க்கிராமங்களின் பாதுகாப்பு சிறீலங்காக் கடற் படையினரின் பொறுப்பில் இருக்கின்றது. சாம்பல்தீவு, சல்லி, நிலாவெளி, இறக்கக்கண்டி, கும்புறுப்பிட்டி, குச் சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை போன்றவை தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற கிராமங்கள். இக்கிராமங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகக் குச்சவெளிப் பிரதேசச் செயலர் பிரிவு அமைந்துள்ளது. கட்டுக்குளம் பற்றுக் கிழக்கு என்று இப்பகுதி அழைக்கப்படுகின்றது.
அங்கு எங்கும் கடற்படையினரின் முகாம்கள் காணப்படுகின்றன. இம் முகாம்களைப் பலப்படுத்தும் வேலைகளைத் தற்போது கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். காவலரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மண் சாக்குகள் அடுக்கப்பட்டு வருகின்றன. காலை தொடக்கம் மாலை வரை கடற்படையினர் ஊர்மனைகளுக்குள் சென்று தமிழ் பொது மக்களை மறித்துச் சோதனை நடத்துகின்றனர். விசாரணை நடத்துகின்றனர். யாரைச் சந்திக்கச் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று மக்களைக் கேட்கின்றனர். துருவித் துருவி விசாரிக்கின்றனர்.
தமிழ் மக்கள் பயந்து மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இரவு வேளைகளில் தமிழ் மக்கள் தங்களின் நடமாட்டத்தைக் குறைத்து வருகின்றனர். கடற்படையினரின் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையின் நோக்கம் என்னவாக இருக்கும்? யுத்தநிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த பின்னர் முகாம்களைப் பலப்படுத்தும் வேலைகளைப் படையினர் மேற்கொள்வது இப்பகுதி வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் குச்சவெளிப் பிரதேச அரசியல் அலுவலகம் ஒன்று நிலாவெளிக் கிராமத்தில் கோபாலபுரம் பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. யுத்தநிறுத்த உடன்படிக்கையின் கீழ் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கடற்படையினர் குச்சவெளிப் பகுதியில் அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் சீராக மேற்கொள்ள விட்டுவைப்பதாக இல்லை. அவர்களையும் வீதியில் வாகனத்தில் செல்லும் போது வழிமறித்து விசாரிக்கின்றனர். இரவு நேரத்தில் திருகோணமலை-குச்சவெளி வீதியில் பொதுமக்கள் வாகனங் களில் அல்லது வேறு வழிகளில் செல்லும்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளதாக முறைப்படுகின்றனர். நிலா வெளிக்குச் செல்லும் வீதியில் ஆத்திமோட்டை என்ற குக்கிராமம் உள்ளது. அங்குள்ள மலையின் உச்சியில் முருகன் கோவில் ஒன்று இருக்கின றது. அந்தக் கோவிலில் கடற்படை யினர் முகாம் அமைத்துள்ளனர். பக்தர்கள் செல்ல முடியாதுள்ளது. இரவு வேளைகளில் மலை உச்சியில் இருக்கும் கடற்படையினர் வீதியால் செல்லும் வாகனங்கள் மீது டோர்ச்லைட் வெளிச்சம் அடித்துப் பார்ப்பார்கள்
திருகோணமலையின் வடக்கே கடற்படையினரின் கெடுபிடி அதிகரிக்கக் காரணம் என்னவாக இருக்கும்? அப்பகுதி தமிழ் மக்களின் வாழ்க்கையில் தற்போது அமுல் நடத்தப்பட்டு வரும் யுத்தநிறுத்தம் இயல்பு நிலையை ஏற படுத்தி விட்டதா? அன்றாடக்காய்ச்சிகளாக வாழும் அப்பகுதி மக்களின் வாழ்வில் தற்போதைய யுத்த நிறுத்தம் இன்னும் அமைதியை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திருகோணமலை நகரின் பல இடங்களில் இன்னும் பொலிசாரின் சோதனைச் சாவடிகள் இருக்கத்தான் செய்கின்றன. பொதுமக்களை மறித்துச் சோதனை நடத்தப்படுவது இச்சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப் படவில்லையாயினும் சாவடிகள் இருக்கின்றன. அவற்றில் பொலிசார் தங்கியுள்ளனர். தற்போது நடைமுறையில் இருக்கும் யுத்தநிறுத்த உடன்பாட்டின்படி, மக்கள் நெருக்கமாக வாழுகின்ற நகரங்கள் மற்றும் பட்டி னங்களில் இருக்கும் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மக்களுக்குச் சிரமம் கொடுக்காத விதத்தில் இச்சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்து நு}று தினங்கள் கடந்துவிட்டன. என்றாலும் அரச படையினரின் கெடுபிடிகள் குறைந்தபாடாக இல்லை.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் உண்மை அர்த்தத்தைச் சாதாரண சிங்கள மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச படையினர் மட்டும் இன்னும் புரிந்துகொள்ள முடியாது இருக்கின்றனர். அரசாங்கமும் அரச படையினரும் ஓர் உண்மையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. தற்போதைய சமாதான முயற்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை அரசும் அரச படையினரும் ஒருதரம் சிந்தித்துப் பார்த்தால் இப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த ஒரு சில தினங்களில் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதுடன் அதனைக் கடைப்பிடிக்கவும் ஆரம்பித்தனர். அதன் பின்னர் அரசாங்கம் பதிலுக்கு யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்தனர்.
உண்மையில் தற்போதைய சமாதான முயற்சிக்கு வித்திட்டவர்கள் என்று விடுதலைப்புலிகளைத்தான் கூற வேண்டும். இந்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கை மீதான விசேட விவாதத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய தமிழ்க்கட்சிகள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி வடக்கு கிழக்கு மாகாணத்தில் இயல்புநிலை இன்னும் தோன்றவில்லை. பாடசாலைகள், வணக்க ஸ்தலங்கள் மற்றும் பொதுக்கட்டடங்கள் ஆகியவற்றில் இன்னும் அரச படையினர் முகாமிட்டுள்ளனர் என்று திரு. சம்பந்தன் நாடாளுமன்றத தில் சுட்டிக்காட்டினார். இனியும் தாமதிக்காதீர்கள் விரைந்து யுத்தநிறுத்த உடன்பாட்டை அதில் கூறப்பட்டுள்ளவாறு அமுல் நடத்தி வடக்கு கிழக்கில் இயல்பு நிலையைத் தோற்றுவித்து சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை திரு.சம்பந்தன் கேட்டுக் கொண்டார். யுத்த நிறுத்த உடன்பாடு அமுலுக்கு வந்து நு}று தினங்கள் சென்ற பின்னரும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நிலை இதுதான் என்று நாடாளுமன்றத்தில் விவரமாகத் தெரிவிக்கப்பட்டது.

-நாதன்
Reply
#43
1994-1995 இல் யாழ் மண்ணை
ஆக்கிரமித்த சிங்களப் படைகள்
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பனை தென்னைகளையும் பிற பயன்தரு மரங்கiயும் தறித்தனர். யாழ். தீபகற்பத்தை மூன்று தனித்தனி வலயங்களாகப் பிரிக்கும் பாரிய மண் அணைகளைக் கட்டியெழுப்பினார்கள். வீடுகள், மரங்கள், தோட்ட நிலங்கள் அரண் அமைப்பதற்காக அழிக்கப்பட்டன. நிலத்தடி நீரை நம்பியிருக்கும் யாழ். மக்களுக்கு இப்பாரிய அணைகளால் நீண்டகாலப் பாதிப்பு ஏற்படலாம் என்று மண்வள ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

--------------------------------------------------------------------------------


போர்நிறுத்த உடன்பாட்டின் பின் தமிழ் மக்கள் மீதான இராணுவக் கெடுபிடிகளும் வன்முறைகளும் முற்றாக நீங்கா விட்டாலும் ஓரளவுக்குத் தணிந்துள்ளன. கடந்த பல தசாப்தங்களாக நடைபெறும் எமது வாழ்வாதாரங்களின் அழிப்பு மாத்திரம் இன்னும் ஓயவில்லை. இவ வருட மார்ச்சு- ஏப்பிறில் மாதங்களில் மன்னார் தீவின் பனைகளைப் புல்டோசர் மூலம் படையினர் வீழ்த்தினர். இதேபோன்று முன்னர் முல்லைத்தீவில் சிங்கள இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட பனைகள் அழிக்கப்பட்டுள்ளன.
மன்னார் தீவில் ஐம்பதினாயிரம் பனைகள் இவ வாறு வீழ்த்தப்பட்டன. அதன்பின் துண்டுகளாக நறுக்கிச் சீவப்பட்டு தென்னிலங்கைக்கு இராணுவ வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டன. மன்னார் தீவு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஆட்சேபக் கடிதம் அனுப்பினார். இலண்டனில் இயங்கும் ஐ.பி.சி. வானொலி இதுபற்றிய செய்தியை ஒலிபரப்பியது. பனைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை புூர்த்தியாகும்வரை தொடர்ந்தது. எதிர்ப்புகளால் ஒரு சிறிய அனுகூலம் கிடைத்தது. ஆயர் இல்ல வளாகப் பனைகள் உயிர் தப்பின.
மூடிமறைத்தல், திசை திருப்புதல், வீண்பழி சுமத்தல், மிகைப்படுத்தல், கூட்டிக்குறைத்தல் என்ற பஞ்ச கிருத்தியங்களை கொழும்பு ஊடகங்கள் கனகச்சிதமாகச் செய்கின்றன. மன்னார் தீவுச் சம்பவங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. அரசுடமையான சண்டே ஒப்சேபர் ஞாயிறு இதழ் தனது ஏப்பிறில் 21.2002 வெளியீடு மூலம் திசை திருப்பல் நடவடிக்கையைத் தொடங்கியது.
முதலாம் பக்கத்தில் 'புலிகளின் காட்டை அழிக்கும் திட்டம்' என்ற தலைப்பின் கீழ் ஒரு நீண்ட செய்திக்குறிப்பை ஒப்சேபர் வெளியிட்டது. 'வனவளத் திணைக்களம் நிலமையை அவதானிக்கிறது. சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள் விழிப்பு' என்ற உப தலைப்பும் அதன் கீழ் காணப்படுகின்றது.
உண்மைக்குப் புறம்பான ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை மேற்கூறிய ஒப்சேபர் செய்தி விடுதலைப் புலிகள் மீது சுமத்துகின்றது. சர்வதேச மட்டத்தில் பெரும் அப கீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இது புனையப்பட்டுள்ளது. செய்தியின் சாரம் பின்வருமாறு, இடம்பெயர்ந்து அல்லற்படும் தமிழ் அகதிகளைக் குடியமர்த்துவதற்காக மாங்குளத்தின் 2,198 ஹெக்ரேயர் கன்னிக் காடுகளை அழிப்பதற்கு புலிகளின் 'பொருண்மிய திட்டமிடல் முகாமைத்துவ அதிகாரிகள்' திட்டம் வகுத்துள்ளனர்.
காரணமின்றி செய்திகள் வெளியிடப்படுவதில்லை. இது ஊடகத்துறைக் கோட்பாடு. மன்னார் தீவுப் பனைகளின் அழிப்பை மூடி மறைப்பதற்காகவே ஒப்சேபர் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியின் முக்கிய அம்சமாக ஜகத் குணவர்த்தனா என்ற சிங்கள சட்டத்தரணி விடுதலைப் புலிகள் நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் கூறப்படும் திட்டத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த நாட்டின் இயற்கை சூழல் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் நடக்கவேண்டும் என்று ஜகத் குணவர்த்தனா எமக்கு அறிவுரை கூறுகின்றார். 1990 தொடக்கம் இயற்கை சூழல் பாதுகாப்பில் புலிகள் காட்டும் அக்கறை வெறும் பொய்த்தோற்றம் என்றும் இச்சட்டத்தரணி வாதிடுகிறார்.
ஹேமன்தா விதானகே, லலான்த்த சில்வா என்னும் வேறிருவர் குணவர்த்தனாவுடன் இணைந்து கண்டனக் குரல் எழுப்புகின்றனர். இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பொன்றை உருவாக்கி அதன் நிறைவேற்று இயக்குநராக ஹேமன்தா விதானகே பணியாற்றுகிறார். பொதுமக்கள் சட்டநலன் காக்கும் அமைப்பின் தலைவராக லலானத்த சில்வா பதவி வகிக்கின்றனர். இயற்கைச் சூழல் பாதுகாப்புக்காக எனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளேன் என்று எழுதியும் பேசியும் வரும் தனிமனிதராக ஜகத் குணவர்த்தனா இடம்பெறுகிறார்.
இன்று இயற்கைச் சூழல் பாதுகாப்பு உலக விவகாரங்களில் முன்னணி இடம் வகிக்கின்றது. இந்த விழிப்புணர்வு அமெரிக்காவின் றேச்சல் கார்சன் அம்மையாரின் போராட்டத்துடன் ஆரம்பமாகியது. மரங்ளைத் தறிக்காதே, காடுகளை வளர்த்தெடு, கடல் நதிநீரை மாசுபடுத்தாதே, செயற்கை உரம் கிருமிநாசினிப் பாவிப்பை நிறுத்து என்று அவர் பரப்புரை வழங்கினார். நாட்டில் தோன்றிய கிளர்ச்சியை அவதானித்த ரைம் சஞ்சிகை றேச்சல் கார்சனை ஒரு மன நோயாளி என்று கண்டித்தது.
அப்போதைய அமெரிக்க அதிபர் கெனடி கார்சன}ன் கூற்றை விசாரிப்பதற்காக ஒரு தேசிய ஆணையத்தை அமைத்தார். கார்சன் கூறித்திரிபவை யாவும் உண்மை என்று ஆணையம் தீர்ப்பு வழங்கியது. 1962இல் கார்சன் எழுதிய 'அமைதியான துளிர்காலம்' என்ற நூல் இயற்கைச் சூழல் ஆர்வலர்களின் வேத நூலாகக் கருதப்படுகின்றது. எக்கோலொஜி என்று ஆங்கிலத்திலும் சூழலியல் என்று தமிழிலும் அழைக்கப்படும் இயற்கைச் சமநிலைக்கோட்பாடுகள் மனித வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஒயிகொஸ் லோகொஸ் என்ற கிரேக்க மொழிச் சொற்கள் இணைந்து எக்கோலொஜி என்ற ஆங்கிலச் சொல் உருவாகியுள்ளது. ஒயிகொஸ் என்றால் வீடு அல்லது வாழ்விடம் என்றும், லோகொஸ் என்றால் கற்கைநெறி என்றும் பொருள்படும். இயற்கையின் அமைப்பையும் தொழிற்பாட்டையும் பற்றிய கற்கை நெறி என்று சூழலியலை வர்ணிக்கலாம்.
வனவளம் பற்றிய ஆய்வுரைகள் காடுகள் மூவகைப்படும் என்று அறியத் தருகின்றன. முதலாவது வகை முதலான காடுகள் அல்லது கன்னிக்காடுகள் எனப்படுகின்றன. இரண்டாவது வகை அழிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தானாகத் தோன்றும் வழிவந்த காடுகள் இரண்டாம் தலைமுறைக்காடுகள் எனப்படும். மூன்றாவது வகை மீள வனமாக்கல் மூலம் மனிதன் தோற்றுவித்ததாகும்.
உலகின் 60 வீதமான கன்னிக் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. அழிப்பு இதுவரை நிறுத்தப்படவேயில்லை. இலங்கைத்தீவின் காடுகள் 18.5 வீதமாகக் குறைந்துவிட்டன. பசுமையான நிலப்பகுதிகளும் 47 வீதமாக இறங்கிவிட்டன. குடியேற்றத்திட்டங்கள், இராணுவ நடவடிக்கைகள், மரவியாபாரம் என்பன இப்பாரிய விகிதாசார வீழ்ச்சிக்குக் காரணமாகின்றன.
இலங்கையின் இயற்கைச்சூழல் பாதுகாப்பைக் குறியாகக் கொண்ட தொண்டர் அமைப்புகளும் தனி மனிதர்களும் வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாகவுள்ளன. பெற்ற நிதிக்குச் சமனான பணிகள் நடக்கின்றனவா என்று கேட்டால் இல்லை என்றே பதில் கூறவேண்டும். பரபரப்பான அறிக்கை விடுதல், பத்திரிகைகள் மூலம் பிரசாரம் செய்தல் போன்றவற்றைவிட வேறொன்றும் நடைபெறுவதில்லை. நிதி வழங்கியோரைத் திருப்திப் படுத்துவதற்காகவே அறிக்கைகளும் பத்திரிகைச் செய்திகளும் வெளிவருகின்றன.
ஜகத் குணவர்த்தனா போன்றோர் நடத்தும் பிரசாரங்களை இனவாதத்தின் இன்னுமோர் வெளிப்பாடாக நோக்க வேண்டும். புலிகளை மட்டந்தட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் ஒப்சேபர் செய்தி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதற் பக்கச் செய்திகளுக்கு பத்திரிகை உலகில் ஒரு உயர் முக்கியத்துவம் உண்டு. முதற் பக்கச் செய்திகள் மாத்திரமே செய்திகள். மாங்குளம் காட்டை புலிகள் அழிக்கத் திட்டமிடுகிறார்கள் என்ற செய்தியை முதல் பக்கத்தில் ஒப்சேபர் வெளியிட்டதன் நோக்கம் இதிலிருந்து புலப்படும்.
சிங்கள நாட்டில் நடக்கும் இயற்கைவள அழிப்புக்கள் பற்றி சட்டத்தரணி ஜகத் குணவர்த்தனாவும்அவருடைய தோழர்களும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இலங்கையின் உலக அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு பறவைகள் சரணாலயமான அம்பாந்தோட்டை-புத்தளம் பிராந்தியம் இப்போது பேராபத்தை எதிர்நோக்குகின்றது. 6216 ஹெக்ரேயர் பரப்பளவைக் கொண்ட சரணாலயம் 5016 ஹெக்ரேயராகக் குறைக்கப்பட்டுள்ளது.
பிரித்தெடுக்கப்படும் 1200 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் குடியேற்றம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. ஐ.நா நடைமுறைப்படுத்தும் பறவைகள் சரணாலய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இச்சரணாலயத்திற்கு விசேட அந்தஸ்து உண்டு. அதை அரசு பொருட்படுத்தவில்லை. ஒருபகுதி நிலம் மக்கள் வாழ்விடமாக மாற்றப்படும்போது சரணாலயத்த}ன் அமைதிச் சூழல் கெட்டுவிடும்.
சிங்கராஜ ஈரவலயக்காடும் இதே வகைச் சீரழிவை எதிர்நோக்குகின்றது. பிற நாடுகளில் காணமுடியாத பல அரிய மூலிகைச் செடிகளும், உயிரினங்களும் இதில் காணப்படுகின்றன. நோய்த்தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களும் அவற்றின் உள்@ர் முகவர்களும் சிங்கராஜ வனங்களைத் திருடிச் செல்வதில் அக்கறை காட்டுவதாகச் செய்திகள் அடிபடுகின்றன. மரபணுத்திருட்டு பரவலாகக் காணப்படுகின்றது.
சூழல் பாதுகாப்பு அமைப்புக்களும் தனிநபர்களும் மௌனம் சாதிக்கின்றன. இவர்களுடைய இருப்புக்கு வகை செய்யும் நிதி உதவிகளை வழங்கும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் சிங்கராஜ வனத்தில் திருட்டுக்கள் நடத்துகின்றன. சூழல் பாதுகாப்பின் அவல நிலையை இதிலிருந்து உணர முடிகின்றது.
சிங்கராஜவனப் பிரதேசம் சம்பந்தமான பிறிதோர் ருசிகரமான செய்தியை இங்கு தருகிறோம். சிறீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலின் தெற்குக் கோபுரத்தின் நிழல் இத்தீவின் மீதுபடுவதால் தீவு இரண்டுபடும் ஆபத்து இருப்பதாக ஒரு ஐதீகம் நிலவுகின்றது. இக்கோபுரம் பல வருடங்களாக முற்றுப்பெறாமல் இருந்தது உண்மைதான். சிருங்கேரி மடாதிபதியின் முயற்சியால் சில வருடங்களுக்கு முன் கோபுரப்பணி புூர்த்தி செய்யப்பட்டது.
புூர்த்தி செய்யப்பட்ட கோபுரம் தரக்கூடிய ஆபத்துக்களை விலக்குவதற்கு ஜெனரல் ரத்வத்த கடும் முயற்சி எடுத்தார். மூட நம்பிக்கைக்கும் தவறான கணிப்பீடுகளுக்கும் பெயர்பெற்ற இப்போலி மனிதர் தென்னிந்தியாவின் சோதிடர்களின் உதவியை நாடினார். சிறிரங்கம் கோயிற் கோபுரத்தின் திசையில் உங்கள் நாட்டில் ஒரு இந்துக்கோயில் கட்டுங்கள் என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.
இக்கோயில் கட்டுவதற்காக சிங்கராஜ வனத்தின் ஒருபகுதி வெட்டை நிலமாக்கப்பட்டது. புூமிபுூசை செய்வதற்காக இந்திய அந்தணர்கள் வந்தனர். எல்லாம் நல்லபடி நடந்தேறின. ஆனால், கோயில் கட்டுவதற்கு திறைசேரி பணம் தரமறுத்தது. கொழும்பின் தமிழ் வர்த்தகர்களும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர். கோயில் எழும்பவேயில்லை. காடு மாத்திரம் பல பெறுமதிமிக்க மரங்களை இழந்து நிற்கின்றது.
பொய்யை மெய்யாக்க வேண்டுமாயின் அதையொரு வலுவான உண்மையோடு பக்குவமாக இணைக்கவேண்டும். இதுதான் பிரசார பலம். கோபுரம் உண்மையானது. அதைச் சுற்றிப் பின்னப்பட்ட பொய் உண்மையின் கனதியைப் பெற்றுள்ளது. ஒப்சேபர் செய்தியைப் பகுப்பாய்வு செய்தால் இது புலப்படும். 900,000 வரையிலான தமிழ் மக்கள் தமது நாட்டிலேயே அகதிகளாக அவலப்படுகின்றனர். இராணுவ முகாம்களென்றும், அதியுயர் வலயங்களென்றும் தமிழ் மக்களுடைய வாழ்விடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடியிருக்க நிலம் வழங்க வேண்டியது புலிகளின் தார்மீகப் பொறுப்பு. இந்த உண்மையோடு மக்களைக் குடியிருத்த மாங்குளம் காட்டை வெட்டப் போகிறார்கள் என்ற பொய்யைக் கலந்தால் அது உண்மை என்று நம்பப்படும் பிரசார முன்னெடுப்புக்களின் அந்தரங்கம் இதுதான்.
எதிரியின் இயற்கை வளங்களை அழித்து நாசமாக்குவது அல்லது எடுத்துச் செல்வது நவீன போர்த் தந்திரோபாயம் என்று பேராசிரியர் மாட்டின் வான் கிரெவால்ட் தனது நூலில் குறிப்பிடுகிறார். பேராசிரியர் கிரெவால்ட் ஒரு யுூதர். இஸ்ரேலின் ஹ்புரு பல்கலைக் கழகத்தில் போரியல் கற்கை நெறிக்குப் பொறுப்பாக இருக்கிறார். இவர் எழுதிய போரியல் நூல்கள் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் இராணுவக் கல்லூரிகளில் பாடநூல்களாகப் பயன்படுகின்றன.
போர்த்துக்கேயர் தொடக்கம் எமது நிலத்தை ஆக்கிரமித்த அந்நியப் படைகள் யாவும் எமது இயற்கை வளங்களை அழிப்பதில் முனைப்பாக ஈடுபட்டன. இன்றுவரை மிக மோசமான சேதங்களை சிங்கள இராணுவம் விளைவிக்கின்றது. இந்தியப் படைகளும் இயற்கை வளங்களை அழிப்பதில் ஈடுபட்டன. 19ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஸ் அரச நிர்வாகி சேர் ஜேம ஸ் எமர்சன் தௌன்ற் எமது இயற்கை வளம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். 'வடக்கிலும் கிழக்கிலும் அப்பகுதித் தீவுகளிலும் சூரிய வெளிச்சம் நிலத்தில் விழுவதைத் தடுக்குமளவுக்கு நெருக்கமாகப் பனைகள் வளர்கின்றன. இப்பகுதி மக்கள் பனையைக் கற்பகதரு என்கிறார்கள்'
பிரிட்டிசாருக்கு முன் இத்தீவை ஆட்சி செய்த ஒல்லாந்தர்கள் (1658-1796) எமது பனைகளைத் தமது சொந்த நாட்டிற்கும் தமது ஆட்சிக்குட்பட்ட கிழக்கு இந்தியத் தீவுகளுக்கும் பெருமளவில் எடுத்துச் சென்றனர்.
இந்தியப்படைகள் தமது பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்காகப் பனை, தென்னைகளையும், பாலை, முதிரை, வேம்பு, புளி போன்ற மரங்களையும் வெட்டி வீழ்த்தினர். துருப்புக்களை ஏற்றிச் செல்லும் சக்தியான கனரக லாரிகளில் அவர்கள் பனம் துண்டுகளைக் கட்டி வைத்திருப்பார்கள். ஈழ மண்ணை விட்டு வெளியேறுவதற்கு முதல் நாட்கூட அவர்கள் நன்கு வளர்ந்த பனைகளை வெட்டி வீழ்த்தினார்கள்.
1994-1995 இல் யாழ் மண்ணை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பனை தென்னைகளையும் பிற பயன்தரு மரங்கiயும் தறித்தனர். யாழ். தீபகற்பத்தை மூன்று தனித்தனி வலயங்களாகப் பிரிக்கும் பாரிய மண் அணைகளைக் கட்டியெழுப்பினார்கள். வீடுகள், மரங்கள், தோட்ட நிலங்கள் அரண் அமைப்பதற்காக அழிக்கப்பட்டன. நிலத்தடி நீரை நம்பியிருக்கும் யாழ். மக்களுக்கு இப்பாரிய அணைகளால் நீண்டகாலப் பாதிப்பு ஏற்படலாம் என்று மண்வள ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
சிங்கள நாட்டில் எமது பனைக்கு ஒப்பான முக்கியத்துவம் பலாவுக்கு வழங்கப்படுகின்றது. பலாமர வளர்ப்பை பெருக்குவதற்கு ஒரு இயக்கம் சிங்களவர் மத்தியில் இருக்கின்றது. சிறீலங்கா சட்டப்படி அனுமதிப்பத்திரம் பெறாமல் பலாவைத் தறிக்கவோ ஏற்றிச் செல்லவோ முடியாது. சட்டத்தை மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படுகின்றது. சிங்களப் படைகள் எமது பனை வளத்தை அழிக்கும் வேகத்தைப் பார்த்தால் நாம் காலப்போக்கில் பனம் பண்டங்களை இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் எழக்கூடும்.
சிங்களப் படைகள் எமது இயற்கை வளங்களை அழிப்பதற்கு இன்னுமோர் காரணமுண்டு. பிரித்தானியா அரசு செயற்படுத்தும் சிறுவர் பாதுகாப்பு நிதியப் பிரதிநிதி ஜோன் பைகேட் அதை விபரிக்கிறார். பருத்தித்துறையில் சிறுவர் புூங்கா அமைத்த புலிகள் அதற்கு ரஞ்சன் புூங்கா என்று பெயரிட்டனர். ரிவிரெச படைகள் இப்புூங்காவை அழித்தபோது ஜோன் பைகேட் தடுக்க முயன்றார். எழுத்துக்களையும் புலிகளை நினைவு படுத்தும் பிற தடயங்களையும் விரும்பினால் அழியுங்கள், மரஞ்செடிகளை விட்டுவையுங்கள் என்று அழிப்புக்குப் பொறுப்பான அதிகாரியிடம் பைகேட் கூறினார். புலிகளின் யாதொரு அடையாளத்தையும் விட்டுவைக்காமல் அழிக் கும்படி மேலிடத்து உத்தரவு என்று அந்த அதிகாரி பதிலளித்தார்.
தனது வெள்ளைத்தோல் கொடுத்த தைரியத்தால் சிங்களப் படையினர் கொலைக்களம் இழுத்துச் சென்ற சில தமிழ் இளைஞர்களைத் தன்னால் காப்பாற்ற முடிந்தது என்று ஜோன் பைகேட் கூறுகிறார்.
கொடிகாமம் துயிலுமில்லம் படையினரால் சின்னாபின்னமாக்கப்பட்டபின் தான் அவ விடத்தைப் பார்வையிட்டதாகவும் அவர் வாக்குமூலம் தருகிறார். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த இந்த மனிதர் பிரித்தானியாவின் எம்.ஐ 5 உளவுப்படையைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. வியப்பு என்னவென்றால் இவர் தன்னை 'வெள்ளைப்புலி' என்று அழைப்பதுதான்.
வடபகுதி ஆளுனராகப் பதவி வகித்த (பதவிக்காலம் 1833-1867) பேர்சிவல் அக்லன்ட்டைக் யாழ்ப்பாணம் பழைய புூங்காவைக் கட்டியெழுப்பினார். இதில் காணப்படும் அரிய மரம் செடிகள் பற்றி பிற்காலத்தில் நிர்வாகம் செய்த வேர்னன் அபயசேகரா தனது நூலில் குறிப்பிடுகிறார்.
பழைய புூங்காவும் அதிலுள்ள செயலகக் கட்டிடமும் தமிழீழக் காவல்துறையின் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டபின் பழைய புூங்காவின் வனப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி பெற்றது. அரிய மரங்களில் நாற்றெடுத்து புதியவை உருவாக்கப்பட்டன. மரங்களின் நலன்காக்கும் நோக்கில் ஒவ வொரு மரத்திற்கும் தனித்தனியாகக் கோப்புக்கள் பேணப்பட்டன. சிங்களப் படைகளின் வருகைக்குப் பின் பழைய புூங்கா தனது பொலிவை இழந்தது. புூங்காவின் மதில் சுவர்களை உடைத்து அதனுடைய கட்டுக்கோப்பை படையினர் அழித்தனர். தமது விறகுத் தேவைக்காகப் பொதுமக்கள் சிறிது சிறிதாக மரங்களை வெட்டி எடுத்தனர் படைகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
அத்தோடு புலிகள் நடைமுறைப்படுத்திய மீள்வனமாக்கல் திட்டத்தின்கீழ் நாட்டப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் உட்பட வன்னிப் பிரதேசத்தின் பல்பெறுமதி மிக்க மரங்களை சிங்களப் படைகள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இலாபம் ஈட்டும் நோக்கில் தெற்கில் இருந்து அவர்கள் மரவியாபாரிகளையும் ஒப்பந்தகாரர்களையும் வன்னிக் காடுகளுக்குக் கொண்டுவந்தனர். வன்னியில் சிங்கள இராணுவம் நடத்திய அழிவை அளவிட முடியாது.
ஆகஸ்து 1996 தொடக்கம் செப்ரெம்பர் 1998 வரை கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப் பகுதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் கிடந்தது. மே 1997 தொடக்கம் நவம்பர் 1999 வரை மேற்கு வன்னியின் 1500 சதுர கி.மீ படையினர் கட்டுப்பாட்டில் இருந்தது. இக்காலப்பகுதியில் எமது இயற்கைவள இழப்புக்கள் உச்சக்கட்டம் அடைந்தன. தாண்டிக்குளம் தொட்டு மாங்குளம் வரையிலான ய-9 நெடுஞ்சாலையின் இரு பக்கமும் நின்ற மரங்கள் யாவும் தறித்து எடுக்கப்பட்டன. ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, புளியங்குளம் ஆகிய கிராமங்களின் பயன்தரு மரங்கள் யாவும் எடுத்துச் செல்லப்பட்டன. மணலாற்றுப் பகுதியில் குடியிருத்தப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகள் நெடுங்கெணி - ஒட்டுசுட்டான் வரை படையினர் உதவியுடன் வந்து தமிழர்களின் சொத்துக்களைத் திருடிச் சென்றனர்.
இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் ஜகத் குணவர்த்தனா கிளப்பிய புரளியைப் போன்றதொன்றை வனவள, சுற்றாடல், பாதுகாப்பு அமைச்சர் நந்தமித்திர எக்கநாயக்கா கிளப்பினார். இவர் 30 டிசம்பர் 1998இல் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக எமது தேசியத் தலைவர் அவர்களுக்கு 'வனவளத்தை அழிப்பதற்கு திறந்த அனுமதி வழங்கியுள்ளீர்கள்' என்று குற்றம் சுமத்தி ஒரு கடிதம் அனுப்பினார். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதையாக இதைக் கருதலாம்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜோர்ஜ் பொ னான்டஸ் அவர்கள் ஒக்ரோபர் 1997இல் ஒரு பகிரங்க வேண்டுகோளை சிறீலங்காவுக்கு விடுத்தார். சமதா கட்சியின் புதுடில்லி மாநாட்டில் நிறைவேறிய தீர்மானத்தின் பிரகாரம் இவ வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 'தமிழ் பிரதேசங்களிலுள்ள விவசாய நிலங்கள், விவசாயத்திற்கு உகந்த நிலங்கள், காடுகள் என்பனவற்றை அழிக்கும் நடவடிக்கையை நிறுத்தும்படி' மேற்படி வேண்டுகோள் கேட்டுக்கொண்டது.
வன்னி வனவளம்பற்றி ஒரு சிங்களப் புத்திஜீவிகொண்டுள்ள நிலைப்பாட்டை அறியவேண்டாமா? மாக்சிசலெனினிச வாதியாக ஆரம்பித்து கடும்போக்கு பேரினவாதியாக பரிணாம வளர்ச்சி பெற்ற தயான் ஜெயத்திலகா வீக்கென்ட் எக்ஸ்பிறஸ் என்ற பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கூறியதாவது, வியட்நாம் போரின் போது அமெரிக்க விமானங்கள் போராளிகளின் காடுகள் மீது டயோக்கின் நச்சுப்பொருளைத் தூவின. வன்னிக் காடுகள் மீது நாம் பொஸ்பொரஸ் எரிபொருளை விசிறவேண்டும். காடு பற்றி எரியும் போது புலிகள் வெளியே வருவார்கள், குண்டுவீசி அழித்துவிடலாம்.
வரலாறு எனது வழிகாட்டி, இயற்கை எனது நண்பன் என்று எமது தேசியத் தலைவர் கூறுவார்கள். புலிகள் தலையெடுத்த நாட்தொட்டு காட்டையும் நாட்டையும் மேம்படுத்துவதையே குறியாகக் கொண்டுள்ளனர். புலிகள}ன் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வனமும் வனம் சார்ந்த பிரதேசமும் ஆதாரமாக அமைகின்றன. புலியின் இயற்கைச் சூழல் வனவளம் ஒன்று மாத்திரமே இதை ஜகத் குணவர்த்தனா போன்ற மரமண்டையர்கள் மறவாதிருக்கவேண்டும்.

-
கலாநிதி க. சோமஸ்கந்தன்
Reply
#44
கரும்புலிகள் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்
தமிழீழத் தேசியத் தலைவர்
திரு.வே. பிரபாகரன் அவர்கள்

--------------------------------------------------------------------------------
நாம் இன அழிவை எதிர்கொள்ளும் ஒரு சிறிய தேசிய சமுதாயம். எம
க்கு குரல் கொடுக்கவோ, கை கொடுக்கவோ உலகில் எவரும் இல்லை, நாம் தனித்து நிற்கிறோம். எமது சொந்தக் கால்களில் நிலைத்து நிற்கிறோம். பலம் வாய்ந்த எதிரிகள் எம்மைச் சூழ்ந்து நிற்கின்றார்கள். எம்மை ஒழித்துக்கட்ட உறுதிபுூண்டு நிற்கின்றார்கள். முழு உலகமே ஒன்று திரண்டு எமது எதிரிக்கு முண்டு கொடுத்து வருகிறது. இந்த இக்கட்டான, ஆபத்தான சூழ்நிலையில் நிர்க்
கதியாக நிற்கும் ஒரு மக்கள் சமூகம் என்ற hPதியில், நாம் எம்மாலான சகல வழிகளையும் கையாண்டு. எமது சக்திகள் அனைத்தையும் பிரயோகித்து ஒரு தற்காப்புப் போரை நிகழ்த்தவேண்டும். இந்தத் தேவையை, நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. அல்லாத பட்சத்தில் நாம் இனவாரியாக அழிந்து போவதைத் தவிர்க்க முடியாது.
பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள், எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
கரும்புலிகள் வித்தியாசமானவர்கள், அபுூர்வமான பிறவிகள், இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தையும் காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.
இந்த உலகில் வாழும் மனிதன் ஒவ வொருவனும் எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே காதலிக்கிறான். தனது உயிரையே நேசிக்கிறான். உயிர் வாழவேண்டும் என்று துடிக்கிறான். மனிதன் உயிரை நேசிப்பதால். உயிர்வாழ விரும்புவதால் உயிர் அற்றுப்போகும் சாவு என்ற இல்லாமை நிலைக்கு பயப்படுகிறான். இது மனித இயல்பு, இயற்கையின் நியதி.
ஆனால் ஒரு கரும்புலி வீரன் தன்னை விட தனது இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்கு அப்பால் நிற்கும் மற்றவர்களின் நலன் பற்றியது, நல்வாழ்வு பற்றியது மற்றவர்கள் இன்புற்று இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெற்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்தைத் தழுவிக்கொள்ளும் ஒவ வொருவனும் முதலில் தன்னை விடுதலை செய்து கொள்ளவேண்டும். தனது மனவுலக ஆசைகளிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்துகொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும். மனமானது பயங்களிலிருந்து விடுதலை பெறும்போதுதான் வீரம் தோன்றுகிறது, துணிவும் பிறக்கிறது, இந்த மனவியல் உண்மையை நான் ஆரம்பத்திலிருந்தே எமது போராளிகளுக்கு எடுத்துரைத்து வருகிறேன்.
பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு, கோழைத்தனத்தின் தோழன், உறுதிக்கு எதிரி, பயங்களுக்கு எல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான் அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலைபெறுகிறான்.
கண்ணீர் சொரியும் ஒவ வொரு விழியும்
உங்களையே காணத் துடிக்கின்றது
உடலோடு வெடிசுமந்து
படகோடு குண்டு சுமந்து
கடலும் வானமும் பிளக்க
மரணமே மண்டியிட தேதி குறித்து
ஊமையாய் உலாவும் உறவே
உங்களால் மட்டும்
எப்படி முடிந்தது
மரணத்தைச் சுமக்க
மரணத்தையே உருக்கும் மரணம்
உங்களிடம் மட்டும்தான்
மரணத்தையே தூக்கிலேற்றி
மரண தேவனுக்கு ஜெனனம் பற்றி
தீர்ப்புக் கூறும் உத்தமரும் நீங்களே
வெந்து வெந்து மனம் கசிய
வெளிவரா வார்த்தைகளுக்குள்
பிரிந்து போன பொழுதுகள்
விட்டுவிலகாது எப்போதும்
உறுதியளித்த இறுதிமொழியும்
கண்ணிமை துச்சாது எமை
இறுதியாக பார்த்த இறுதிப் பார்வையும்
கையசைத்த கடைசிப் பொழுதும்
உங்கள் இறுதிப் பயணமும்
எம் விழிகளுக்கு விளக்காய்
க.சங்கீதன்

அக்கினிக் கடலில் நீந்திடும் தென்றல்
ஆதிக்க நதியில் பாய்ந்திடும் மின்னல்
முக்கனிச் சாறில் மூழ்கிய வெள்ளம்
மூண்டிடும் வேள்வியில் தோன்றிய உள்ளம்


சத்தியம் தர்மம் வென்றிட முளைத்தது
சாந்தியும் நீதியும் தந்திட உழைத்தது
வெற்றியின் இறுதி நாமென மகிழ்ந்தது
வேங்கையின் உறுதி தானென மறைந்தது


மில்லரின் நிறைவு மேகத்தைக் குட்டும்
மின்னிடும் விழிகள் சோகத்தை காட்டும்
செல்வங்கள் சுமந்தவை விடுதலைக் கோபுரங்கள்
திசைகளை அமைத்தன வெற்றியின் ஆவணங்கள்


கரும்புலி நதிகள் நாளும் பாய்கின்றன
கறுத்தப் புள்ளிகள் நாட்டில் சாய்கின்றன
வரும்பகை திரும்பி கடலில் மாய்கின்றன
வளர்பிறை தழிழர் வானில் விளைகின்றன.
நெல்லை மகேஸ்வரி
Reply
#45
நோர்வேயின் சமாதானம்

1
ரோமப்பேரசு கத்தோலிக்கத் திருச்சபைக்கு மதம் மாறிய பிறகு உடனடுத்து வந்த நூற்றாண்டுகளில் காட்டுமிராண்டிகள் என்றழைக்கப்பட்ட நாடோடி இனக்குழுக்கள் படையெடுத்து வந்தன. அலையலையாகத் தொடர்ச்சியாக வந்து மோதிய இவ வினக் குழுக்களின் விரைந்து நகருமியல்பும் சாவுக்கஞ்சா வீரமும் யுத்தத்தின் போக்கை அநேகமாக அவர்களுக்குச் சாதகமாகவே வைத்திருந்தன.
பேரரசின் நிம்மதியைக் கெடுத்த இவ வினக்குழுக்களில் ரியுூரோன், விக்கிங், நோர்மன், கோத்வன்டல். விஸ்கோத் போன்றவை பலமானவை.
அநுபவிக்க முடியாதவை அல்லது அநுபவிக்கத் தெரியாததை அழித்து விடுவது இவர்களின் பொது இயல்பு. இதனாலேயே பின்னாட்களில் காரணமின்றி அழிவுவேலைகளைச் செய்பவர்களை "வண்டல்ஸ்" என்று (ஆங்கிலத்தில்) அழைக்கும் ஒரு வழக்கம் உண்டாகியது.
நாமும் கூட இப்படிப்பட்ட நபர்களை "விசுக்கோத்து" என்று திட்டுவதுண்டு. இது மேற்சொன்ன விஸ்கோத் இனக்குழுவின் பெயரினடியாக வந்த ஒரு சொல்லாயிருத்தல் கூடும்.
இப்படி ரோமப் பேரரசை ஒருமுறை முற்றுகையிட்ட லம்போடிய இனக்குழுவுடன் பாப்பரசர் சமரசம் செய்யப்போனார். முடிவில் லம்போடிய இனக்குழுத்தலைவன் கேட்ட ஒரு மூட்டை மிளகைக் கொடுத்து புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்று செய்யப்பட்டது.
இத்தகைய காட்டுமிராண்டிகளிடம் இருந்து பேரரசைப் பாதுகாக்க வேண்டிய கி.பி. ஆறாம் நூற்றாண்டின் லத்தீன் திருச்சபையின் செபங்களில் லு} "பிதாவே காட்டுமிராண்டிகளான விக்கிங்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்தருளும்லு}., காட்டுமிராண்டிகளான லம்போடியர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்தருளும்லு}" என்று காணப்படுமாம்.
இப்படி கி.பி. ஆறாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வர்ணிக்கப்பட்ட இவ வினக்குழுக்களே பின்னாளில் மதம் மாறி ஐரோப்பா வெங்கும் அதற்குமப்பால் ஸ்கன்ரிநேவியாவிலும் சென்று குடியேறியதாகக் கூறப்படுகிறது.
இவர்களில் ரியுூரோன்கள் ஜேர்மனியிலும், கோத்ஸ்உம் நோர்மன்சும் பிரான்சிலும் சென்று குடியேறினார்கள் குறிப்பாக விக்கிங்ஸ் நோர்மன் போன்றோர் நோர்வேயில் சென்று குடியேறினார்கள்.
இவர்களின் வழித் தோன்றல்களே இன்று நாம் காணும் நோர்வீஜியர்கள்.
எங்களுக்கு சமாதானம் செய்ய வந்திருக்கும் நோர்வீஜியர்கள்.
ஒரு காலம் திருச்சபைச் செபங்களில் காட்டுமிராண்டிகள் என்று அழைக்கப்பட்டவர்கள்.


2


இந்த இடத்தில் நாம் தமிழர்களின் வரலாற்றைச் சிறிது பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
கி.பி. ஆறில் விக்கிங்ஸ் நாடோடிகளாகத் த}ரிந்த காலங்களில் தமிழ்நாட்டில் தமிழர்கள் தேவாரம் பாடத் தொடங்கி விட்டிருந்தார்கள். அதாவது பக்தி இலக்கிய காலம்.
இதை இன்னும் சரியாகச் சொல்லலாம். அதாவது தமிழர்கள் தலச்சிறப்பு மிக்க கோயில்களும் அவற்றின் மீதான தேவாரங்களுமாக வாழ்ந்த ஒரு காலத்தில் விக்கிங்ஸ் நாடோடிகளாகத் திரிந்தவர்கள்.
இன்று அவர்களுடைய வழித்தோன்றல்கள் எமக்குச் சமாதானம் செய்ய வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்களோ தேவாரம் பாடிப் பாடிலு} பழம்பெருமை பேசிப்பேசிலு} எங்கே வந்து நிற்கிறோம்?

3

நோர்வேயிலிருந்து வந்த ஒருவரிடம் கேட்டேன் நோர்வீஜியர்கள் இலங்கைத்தீவில் தமது பாத்திரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று, அதற்கவர் சொன்னார் "அவர்களுக்கு இங்கு நடப்பவை பற்றி அதிகம் விவரமாகத் தெரியாது. சொல்கெய்மைப்பற்றி அவர்கள் தமது கட்சி அரசியலுக்கூடாகத்தான் கதைப்பார்கள். மற்றும்படி இலங்கைத் தீவில் தமது நாட்டவர் செய்யும் சமாதானம் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது. அதுபற்றி அவர்களுக்கு பெரிய அக்கறையும் கிடையாது. இது சாத்தியமே ஏனெனில் நோர்வேயின் அரசியல் நலன்கள் எதனோடும் நாம் நேரடியாகச் சம்பந்தப்படாத மக்கள். எனவே இங்கு என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
தவிர, நோர்வேயில் தற்சமயம் 10,000 இற்கும் குறையாத தமிழர்கள் வசிக்கின்றார்கள். இதுவும் நோர்வே எமது பிரச்சினையில் தலையிட ஒரு காரணமாயிருக்கலாம்.


4
சிங்களவர்கள் பொதுவாக நோர்வேயின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
சந்திரிகாவின் காலத்தில் இக்கருத்தை அரசாங்கமே ஊக்குவித்தது. இப்போது ரணில் நோர்வேயின் பாத்திரத்தை வரவேற்பது போலத் தோன்றுகின்றது. ஆனால் படித்த சிங்களவர்கள் பொதுவாக அதை எதிர்கொள்கிறார்கள்.
கடந்த மாதம் இலங்கைப் பத்திரிகையாளார் குழு ஒன்று நோர்வேக்கு விஜயம் செய்தது. இதன்போது அவர்கள் ஒஸ்லோவில் சொல்கெய்மை பேட்டி கண்டார்கள். இதில் பலர் எதிர்மறைக் கேள்விகளையும் சங்கடமூட்டும் கேள்விகளையும் அதிகம் கேட்டார்கள். குறிப்பாக யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து நோர்வேயை விலத்தி விடுவது பற்றி விடாப்பிடியாகக் கேட்கப்பட்டது.
அதோடு, படித்த சிங்களவர்கள் சிலா பலஸ்தீன, இஸ்ரேல் சமாதான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நோர்வேத் தூதுவர் ஒருவருக்கு சன்மானம் தரப்பட்டதாகவும் கூறிவருகிறார்கள்.
பொதுவாகவே சிங்களவர்கள் நடுவர்களைச் சந்தேகிக்கும் இயல்புடையவர்கள் என்பது முன்னரும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் நடுவரை விளையாட்டு வீரராக்கிக் களத்திலிறக்கி மோதவிட்ட அனுபவம் அவர்களுக்குண்டு. எனவே புலிகளுக்கு எதிராக எளிதில் திருப்பப் படக்கூடிய ஒரு நடுவரே அவர்களுடைய விருப்பத் தெரிவாயுள்ளது.
ஆனால் நோர்வேக்கு பிராந்திய நலன்களேதுமில்லை என்பதே இங்கு தமிழர்களுக்கு ஆறுதலான ஒரு விசயம். இதில் நோh வேக்குப் பின்னாலிருக்கும் சக்திகள் எவை என்பது பற்றியோ அல்லது சமாதானத்தின் சூத்திரக்கயிறு மெய்யாகவே யாரிடம் உள்ளது என்பது பற்றியோ விவாதிப்பது இப்பந்தியின் நோக்கமில்லை.
பதிலாக வேறொரு முக்கியமான விசயத்தை இங்கே பார்க்க வேண்டியுள்ளது. அது என்னவெனில், சமாதானம் செய்வது என்பது ஒரு தொழிலாக அல்லது கலையாக உருவாகி வரும் ஒரு போக்கு அதில் நோர்வேயின் பாத்திரமும் பற்றியதாகும்.
ஐ.நா. போன்ற உலகப் பொது நிறுவனங்களின் நடுநிலமை அதிகம் சா ச்சைக் குh}யதாக மாறியுள்ள ஒரு சூழலில் நோர்வே போன்ற நேரடி நலன்கள் ஏதுமற்ற நாடுகள் சமாதானம் செய்ய முற்படும் ஒரு போக்கு வளர்ச்சி பெற்று வருகிறது.
இதில் சமாதானம் செய்ய வரும் நாடு அதற்குப் பிராந்திய மற்றும் புூகோள நலன்கள் அதிகம் இல்லாத காரணத்தால் ஒப்பீட்டளவில் அதன் நடுநிலை பெறுமதியானதாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் இருக்கும்.இது முதலாவது.
இரண்டாவது, அந்த நாடு சமாதானம் செய்வது என்பதை ஒரு தொழிலாக அல்லது கலையாகச் செய்யும் போது அங்கே அதற்குh}ய அறிவு புூர்வமான அணுகுமுறைகளும், உத்திகளும், முதிர்ச்சியும் வளரும்.
அதாவது ஒப்பிட்டளவில் மெய்யாகவே சமாதானத்துக்குரிய அறிவு புூர்வமான, ஆகக்கூடிய சாத்தியமான ஒரு வேலைத்திட்டம் இங்கேயிருக்கும்.
பலஸ்தீனப் பிரச்சினையிலும் முதலில் நோர்வேயின் பாத்திரம் பிரச்சினைப்படாமலேயே இருந்தது. பிரச்சினை எங்கே வந்தது என்றால் அமெரிக்கா சமாதானத்தைச் சுவீகரித்தபோதுதான். அங்கே சமாதானத்தைச் சுவீகரித்த அமெரிக்கா அதற்குப்பின் உரிய நடுநிலைப் பாத்திரத்தை வகிக்கத் தவறியதிலிருந்தே இன்றுள்ள எல்லாப் பிரச்சினைகளும் தொடங்கின.
எனவே இதில் அமெரிக்கா சமாதானத்தைச் சுவீகரித்தது வரையிலுமான முதற்கட்டத்தில் நோர்வேயின் முயற்சிகள் விறுவிறுப்பானவை, விசுவாசமானவை, பெறுமதியானவை.
இப்படிப் பார்த்தால் எமது விசயத்திலும் சமாதானத்தைப் பங்கு போட அல்லது சுவீகரிக்க முயலும் சக்திகளே இடறலாயிருக்கிறன.
இந்தப் புூமியின் இரண்டு பெரிய ஆறாத காயங்களுக்கு மருந்து போடும் முயற்சியில் நோர்வே இறங்கியது இறங்கியுள்ளது. முதலாவது பலஸ்தீனப் போராட்டம் மற்றது ஈழப் போரராட்டம் இரண்டிலும் களயதார்த்தம் வேறுதான் எனினும் இதில் நோர்வேயின் பாத்திரம் விசுவாசமானது, மகிமைக்குரியதாகும்.
பலஸ்தீனப் பிரச்சினையில் தீர்வு எட்டப்பட்டதற்காக தலைவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. இதில ஒரு பங்கு நோh வேக்கும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் மூலம் நலன்கள் அதிகம் இல்லாத நடுநிலையாளரின் பாத்திரம் மேலும் மகிமை செய்யப்பட்டிருக்கும்.
எமது ஈழப்போரின் களயதார்த்தத்தின்படி யுத்தம் செய்வதை விடவும் சமாதானம் செய்வதற்கே அதிகம் விழிப்பும் நிதானமும் தேவைப்படுகிறது.
சமாதானம் ஒரு வதந்தி போலிருந்த முன்னைய காலங்களில் துப்பாக்கிகளற்ற பாதுகாப்பான இரவு தமிழருக்குமிருக்கவில்லை முஸ்லீங்களுக்குமிருக்கவில்லை.
ஒரு வியுூகத்தைப்போல அல்லது பொறியைப்போல பாவிக்கப்பட்ட சமாதானம் முறிக்கப்படுகையில் தலைகளையும் தலைநகரங்களையும் கொண்டு போனது.
ஆனாலிப்பொழுது பிராந்திய நலன்களேதும்மற்ற ஒப்பிட்டளவில் ஒரு மெய்யான நடுவர் கிடைத்திருக்கிறார்.
சமாதானத்தைப் பங்கு போடத் துடிக்கும் அல்லது சுவீகரிக்கத் துடிக்கும் சக்திகளிடமிருந்து சமாதானத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிங்களவர், தமிழர், முஸ்ல்ம்கள் எல்லோருக்குமுரியது.


நிலாந்தன்
Reply
#46
தலைவரின் முன் போன இவர் தயங்கித் தயங்கி அமர்ந்துகொண்டார். இப்போது தலைவரின் முன்னிருப்பது 1990 இல் புதிதாகப் பொறுப்பேற்ற பொறுப்பாளரல்ல. எண்ணற்ற தடவைகள் தலைவரருகே இருந்து அவர் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட, சமயாசமயத்தில் தலைவரோடு தன் கருத்துகளைப் பரிமாறுகின்ற தளபதி பெரும்பாலான நேரங்களில் எங்களோடு தந்தையாக நடந்து கொள்கின்ற தலைவர், அன்று தலைவராகவே நடந்துகொண்டார்.

--------------------------------------------------------------------------------
தன் குஞ்சு பொன் குஞ்சு
காட்டிலே உருமறைப்புப் பயிற்சியில் பெண் போராளிகள் நன்றாகச் செயற்பட்டிருந்தார்கள். தலைவருக்குத் திருப்தியாக இருந்தது. அவர்களுக்குப் பரிசாக கண்டோஸ் கொடுத்துவிட்டு, அவர்களின் திறமையைப் பற்றிக் கேணல் கிட்டு அவர்களிடம் குறிப்பிட்டார்.
பெண் போராளிகளின் செயற்திறனைத் தாம் பார்க்க விரும்புவதாக கிட்டண்ணா கேட்டார். தலைவர் சம்மதித்துவிட்டார். கிட்டண்ணாவின் தந்திரங்களை நன்கு அறிந்திருந்த தலைவர் பெண் போராளிகளைக் கூப்பிட்டு, "கிட்டன் வந்து பாக்கப்போறான், நல்லா உருமறைப்புச் செய்யவேணும்" என்று உற்சாகப்படுத்தினார். "அவன் தன்ரை ஆக்களைவிட்டு நீங்கள் உருமறைப்புச் செய்யிறதையும் பார்ப்பான் கவனம்" என்றார்.
இவர்களில் ஆறுபேர் மூன்று அணிகளாகப் பிரிந்து உருமறைப்புடன் உரிய இடங்களில் மறைந்தபின், தானே நேரடியாக வந்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். "கிட்டன் பெரிய விளையாட்டெல்லாம் காட்டுவான். காணாவிட்டாலும் கண்ட மாதிரி. 'கண்டுவிட்டன், கண்டுவிட்டன்' எண்டெல்லாம் சொல்லுவான். நீங்கள் ஏமாந்து போய் அசையக்கூடாது" என்றெல்லாம் எச்சரித்துவிட்டு, போய் கிட்டண்ணையைக் கூட்டிவந்தார்.
கிட்டண்ணா வந்து பார்த்தார். தலைவரும் பக்கத்தில் நின்றார். அங்குலம் அங்குலமாக ஆராய்ந்த கிட்டண்ணா ஒரு அணியை மட்டும் இனங்கண்டார். மற்றைய இரண்டு அணிகளையும் காணவே முடியவில்லை.

பெண் போராளிகளின் திறமையைக் கிட்டண்ணா பாராட்டினார். கிட்டண்ணாவின் கூர்மையான விழிகளையே இவர்கள் மடக்கிவிட்டத்தில் தலைவர் சந்தோஸமடைந்தார்.

அன்றும் இன்றும்
1990 ஆம் ஆண்டு, இந்திய இராணுவம் தான் வந்த வேலையை முடிக்க முடியாமல் புறப்பட்ட இடத்துக்கே மூட்டை, முடிச்சுகளுடன் போய்ச் சேர்ந்து விட்டது. காட்டுக்குள் தம்மைப் பலப்படுத்திக்கொண்ட புலிகள்படை நாட்டுக்குள் அணிவகுத்து வந்தது. உயரத்தூக்கிக் கட்டிய பின்லோடும், வரிச்சீருடையோடும், இராணுவச் சப்பாத்துக்களோடும், ஆயுதத்தைச் சுமந்தவாறு நிமிர்ந்து நடந்து வந்த தன் மகளை, மருமகளை, பெறாமகளை, தங்கையை, ஒன்றாகப் படித்தவளை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு சமூகம் விழி விரித்துப் பார்த்தது.
மிக முக்கிய இராணுவத தளங்களைச் சுற்றி விடுதலைப் புலிகள் மகளிர் படையணி தனது காவல் நிலைகளை அமைத்துக்கொண்டது. காட்டிலே தன் கண்ணெதிரே படிப்படியாக வளர்ந்த ஒரு பெண் போராளியை, பலாலியில் பெண்போராளிகள் நிலைகொண்டிருந்த பகுதிக்குப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர். பாரிய பொறுப்பு, புதிய பொறுப்பு சின்னச் சின்ன ஐயங்களையும் தலைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு படைகளை வழிநடத்தினார் அந்தப் பொறுப்பாளர்.
அன்று இவர்கள் தமது பகுதியால் ஒரு முன்னேற்ற நடவடிக்கையைச் செய்திருந்தார்கள். சண்டை முடிந்தது. வீரச்சாவடைந்தோரின் வித்துடல்கள், காயமடைந்தவர்கள் எல்லோரும் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். அணிகளை மீளமைத்து நிலைப்படுத்திய அந்தப் பொறுப்பாளர் சில நாட்களின் பின் காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்காக மருத்துவ வீட்டுக்குப் போனபோது, அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. காயமடைந்ததாக இவர் கருதிக்கொண்டிருந்த வீரவேங்கை றெபேக்காவை காணவில்லை. மீளமைக்கப்பட்ட அணியிலும் இல்லை, வீரச்சாவடைந்தோரிலும் இல்லை என்பதால் றெபேக்கா காயமடைந்திருக்க வேண்டும் என்றுதான் அவர் இவ வளவு நாளும் நினைத்திருந்தார். உடனேயே பலாலிக்குத் திரும்பி சண்டையில் பங்குகொண்டவர்களை விசாரித்தார்.
தாம் சண்டைபிடித்தபோது றெபேக்காவின் வித்துடலைக் கடந்துபோனதாகச் சிலர் தெரிவித்தனர். றெபேக்காவின் வித்துடல் எதிரிப் பகுதிக்குள் விடுபட்டுவிட்டது என்ற உண்மை இப்போதுதான் விளங்கியது. நடந்தவற்றை தலைவரிடம் நேரடியாகச் சொல்லவேண்டும். விடயத்தை அறிந்த ஆண்போராளிகளின் பொறுப்பாளர் ஒருவர் தனக்கேற்பட்ட அனுபவத்தை இவரிடம் விபரித்தார்.
"இப்படியேதும் நடந்தால் அண்ணைக்குக்கிட்ட ஒருதரும் போகேலாது. இண்டைக்கு நீங்கள் சரி" அனுபவம் பேசியது.
தலைவரின் முன் அமர்ந்துகொண்ட இவர் தயங்கித்தயங்கி விடயத்தைச் சொல்லி முடித்துவிட்டு, பதட்டத்துடன் இருந்தார். சம்பவம் எப்படி நடந்தது. எப்படித் தெரியும் என்று நிதானமாக இவரிடம் கேட்டறிந்து கொண்ட தலைவர் "உங்களுக்கு இது புதிது. ஆனால் சண்டைகளில் இது நடக்கக்கூடிய விடயம்தான்" என று ஆரம்பித்து, சண்டை நடந்தபின் ஒரு பொறுப்பாளர் என்ன, என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் ஆலோசனை சொன்னபின், இனி இப்படிப் பிழை நடக்கக்கூடாது என்று கூறினார். நடந்த தவறுக்குப் பரிகாரமாக இவரையே வீரவேங்கை றெபேக்காவின் வீட்டுக்குப்போய், குடும்பத்தவர்களுக்கு நடந்ததை விளக்கி, வீரச்சாவுச் செய்தியைத் தெரியப்படுத்துமாறு பணித்தார். அன்று எங்களின் தலைவர் ஒரு தந்தையாக நடந்துகொண்டார்.
அப்போது 2000 ஆம் ஆண்டு அன்று சண்டையணி ஒன்றின் பொறுப்பாளராக இருந்தவர் இன்று படையணியொன்றின் சிறப்புத் தளபதி. ஒருநாள் அதிகாலையில் இவரது படையணியைச் சேர்ந்த நால்வர் ஒரே காப்பரணில் கவனக்குறைவாக நின்றதால், எதிரியின் திடீர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். நடந்தது மாபெரும் தவறு, தலைவரிடம் நேரடியாகச் சொல்லவேண்டும்.
தலைவரின் முன் போன இவர் தயங்கித் தயங்கி அமர்ந்துகொண்டார். இப்போது தலைவரின் முன்னிருப்பது 1990 இல் புதிதாகப் பொறுப்பேற்ற பொறுப்பாளரல்ல. எண்ணற்ற தடவைகள் தலைவரருகே இருந்து அவர் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட, சமயாசமயத்தில் தலைவரோடு தன் கருத்துகளைப் பரிமாறுகின்ற தளபதி. பெரும்பாலான நேரங்களில் எங்களோடு தந்தையாக நடந்து கொள்கின்ற தலைவர், அன்று தலைவராகவே
நடந்துகொண்டார்.
(தொடரும்)

- மலைமகள்
Reply
#47
பதினெட்டு வருடங்களிற்கு முன்பு தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக ஓட ஓட சிங்கள தேசம் விரட்டியது.
அன்று தமிழ்மக்கள் தமது பெரும் தேட்டங்களை இழந்து நின்றபோது தமிழ் மக்கள் மீது சிங்கள தேசம் போர்க்குரல் எழுப்பி நின்றது. இதனால் தமிழ்இளைஞர்களும் யுவதிகளும் வன்முறை சார்ந்த போராட்டத்தை தெரிவுசெய்ய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்கள். அத்தோடு தமிழ் மக்களை நோக்கி சிங்களதேசம் போரைத் தவிர வேறெந்த மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை.


--------------------------------------------------------------------------------

கட்டுநாயக்காவில் நடந்த
தாக்குதலோடு சிறீலங்காவிற்கு
ஏற்பட்ட பொருளாதார சீரழிவு என்பது இன்றுவரையான சமாதான முயற்சிக்கு அடிநாதமாக இருந்து வருகின்றது.

--------------------------------------------------------------------------------

கடந்த வருடம் யுூலை 25ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்தேறிய மிகப் பெரும் தாக்குதலின் ஒரு வருடம் புூர்த்தியாகியுள்ளது. இதேவேளை 1983ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறையின் பத்தொன்பதாவது ஆண்டும் புூர்த்தியாகின்றது.
சிறீலங்காவின் வரலாற்றில் 1983ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தின் விளைவு சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கான நிரந்தர விடிவு ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலம் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதை பறைசாற்றியது.
இதேவேளை கடந்த வருடம் கட்டுநாயக்காவில் நடந்தேறிய தாக்குதல் சிங்கள தேசம் சமாதானப் பேச்சுக்கள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத பட்சத்தில் சிறீலங்கா நிரந்தரமாகவே அழிவிற்குள், அமிழ்ந்து போய் விடுமென்பதை பறைசாற்றிற்று.
பதினெட்டு வருடங்களிற்கு முன்பு தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக ஓட ஓட சிங்கள தேசம் விரட்டியது.
அன்று தமிழ்மக்கள் தமது பெரும் தேட்டங்களை இழந்து நின்றபோது தமிழ் மக்கள் மீது சிங்கள தேசம் போர்க்குரல் எழுப்பி நின்றது. இதனால் தமிழ்இளைஞர்களும் யுவதிகளும் வன்முறை சார்ந்த போராட்டத்தை தெரிவுசெய்ய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்கள். அத்தோடு தமிழ் மக்களை நோக்கி சிங்களதேசம் போரைத் தவிர வேறெந்த மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை.
ஆனால் கடந்த வருடம் கட்டுநாயக்கா சர்வதேச மற்றும் ஒருங்கிணைந்த விமானப்படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது ஒரு வித்தியாசமான இராணுவ அரசியல் நிலையை சிறீலங்காவில் தோற்றுவித்தது.
பெரும் இராணுவ வலயமாகவும் அதிமுக்கியத்துவம் மிக்க கேந்திர நிலையமாகவும் இருந்த இவ விமானத்தளத்தின்மீது குறிவைத்த தாக்குதலாளர்கள் இராணுவ இழப்பு மற்றும் பொருளாதார இழப்பு என்ற வகையில் மிக நுட்பமாக தாக்குதலை நடத்தி வியப்பிற்குள்ளாக்கினார்கள்.
அங்கு தரித்து நிறுத்தப்பட்டிருந்த இராணுவ விமானங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் சிறீலங்கா வான்படையின் தாக்குதிறனை செயலிழக்க வைக்கும் அளவிற்கு மாற்றியிருந்தார்கள்.

அத்தோடு வடக்கு கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சிறீலங்கா இராணுவத்திற்கு திகைப்புூட்டும் பெரும் சக்தியாக இருந்த வான்படை தான் சந்தித்த இழப்பின் மூலம் இராணுவத்தினர் மத்தியில் பெரும் உளவியல் மனச்சிதைவையும் தோற்றுவித்திருந்தது. மேலும் சிறீலங்காவில் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக எந்தப் பிரதேசமும் பாதுகாப்பாக இல்லை என்பதையும் சிறீலங்காப் படைத்தரப்பு எந்தவொரு பகுதியையும் பாதுகாக்கக்கூடிய நிலையில் இல்லை என்பதையும் தெளிவுற வெளிப்படுத்தியது.
இது இவ வாறிருக்க சிறீலங்காவின் தலைவாசலாகவும் வருவாயின் வரவேற்பு மையமாகவும் திகழ்ந்த இவ விமானத் தளத்தின் வாசலிலேயே பெரும் தீ மூண்டதனால் சிங்கள தேசத்தில் வருவாய்ச்சுரங்கம் யாவும் சுருங்கு நிலைக்கு மாறியது.
முதலீட்டாளர்களும் உல்லாசப் பயணிகளும் தலைதெறிக்க சிறீலங்காவை விட்டு எவ வளவு வேகமாக வெளியேற முடியுமோ அவ வளவு விரைவாக வெளியேறினார்கள். அதுவரை பெரும் போர் முழக்கம் கொட்டிய சிங்கள தேசம் தவிர்க்க முடியாது சமாதான சமிக்ஞைகளை வெளிப்படுத்தத் தொடங்கியது.
இங்கேதான் 1983ஆம் ஆண்டு யுூலை இனக்கலவரமும் 2001ஆம் ஆண்டு யுூலை கட்டுநாயக்கா விமானத்தள தாக்குதலும் ஒற்றுமையாகி இரு வேறுபட்ட முடிவுகளைத் தோற்றுவித்தது.

அன்று தமிழ் மக்களிற்குச சிங்கள தேசம் "போர் என்றால் போர்" என்ற ஒரே வழியைத் திறந்துவிட்டு தமிழ் மக்களைப் போரின் மூலம் வெல்லும் முயற்சியில் இறங்கியது.
ஆனால் சிங்களத் தேசம் எதிர்பார்த்ததற்கு மாறாக பதினேழு வருடங்கள் கடந்த நிலையில் 2001ஆம் ஆண்டு யுூலை 25ஆம் திகதி உலக நாடெங்கணும் அலைந்து திரிந்து பேச்சுக்கான வாசலைத் தேடவைத்தது.
ஓயாத அலைகள் மூன்றோடு இராணுவ வல்லமையை இழந்து போயிருந்த சிங்களத் தேசம் நோர்வேயின் அனுசரணையோடு தொடங்கப்பட்ட சமாதான நடவடிக்கையினை மேலெழுந்த வகையில் நோக்கிக்கொண்டிருந்தது.
கட்டுநாயக்காவில் நடந்த தாக்குதலோடு அதற்கு ஏற்பட்ட பொருளாதார சீரழிவு என்பது இன்றுவரையான சமாதான முயற்சிக்கு அடிநாதமாக இருந்து வருகின்றது. இதனையே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறீலங்காவின் பொருளாதார நிலைகுறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது கட்டுநாயக்கா தாக்குதலின் விளைவு குறித்தும் பேசினார்.
இவ வாறு யுூலை மாதம் நடந்தேறிய இவ விரு தாக்குதல்களும் சிறீலங்காவின் வரலாற்றில் பெரும் பதிவை தமதாக்கிக் கொண்டது
அத்தோடு கட்டுநாயக்கா விமானத்தள தாக்குதலானது சிறீலங்காவின் வான்படைக்குத் தனது படைவலுவைப் பெருக்க விமானக் கொள்வனவிற்கான தேவையை அவசியமாக்கிய அதேவேளை கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களை பாதுகாக்க வேண்டிய நிலையையும் தோற்றுவித்தது. இது சிங்கள தேசத்திற்கு முள்ளுக்குத்திய வலி பாதி முள்ளெடுத்த வலி மீதி என்கின்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது.

-சிறி.இந்திரகுமார்
Reply
#48
35 பாலங்களையும்,
98 வரையிலான மதகுகளையும்
கொண்ட இவ் நெடுஞ்சாலை சடுதி
யாக மூடப்பட்டதனால் மட்டக்களப்பிற்கு வரும் மலையக மக்களும், மலையகத்திற்குச்
செல்லும் கிழக்கு பிராந்திய
மக்களும் வேறு வழியுூடாக
நெடுந்தூரம் சுற்றியே தங்களது
பயணத்தை தொடர
வேண்டியிருந்தது.
--------------------------------------------------------------------------------

புரிந்துணர்வு உடன்பாட்டில் உள்ளவாறான பல விடயங்கள் நடந்தேறாதிருக்கும் இவ்வேளையிலும் கூட இடையிடையே மக்களின் நலனுக்காக வெளிப்படுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் மனதிற்கு ஓரளவு திருப்தியளிப்பினும் இதனூடே நிரந்தர, உண்மை சமாதான ஒளிக்கீற்று தென்பட வேண்டும் என்பதே மக்களின் அவா.

--------------------------------------------------------------------------------
புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு இடம்பெற்றுள்ள ஏ-9(யு-9) பாதை திறப்பின் பின்னான மாற்றங்கள் என்பது ஒரு விதமான பதிவு.
இவ வுடன்படிக்கையின் பின்பு தென் தமிழீழமான கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள ஏ5 (யு-5)பாதை திறப்பானது வரலாற்றில் மற்றுமொரு பதிவினையும், மாற்றத்தையும் ஏற்படுத்தி இறுக்கத்திற்குள்ளாகியிருந்த மக்களுக்கு சற்றுத் தளர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கலடி - பதுளை வீதியான இந்த ஏ9 நெடுஞ்சாலை கடந்த 15ம் திகதி வைபவ hPதியாக இருதரப்பினரது ஒத்துழைப்பாலும் திறக்கப்பட்டிருப்பதானது, ஏ9 வீதி திறப்பின்போது வன்னி, யாழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்ததொரு உணர்வு வெளிப்பாடு. கிழக்கு பிராந்திய மலையக தமிழ், சிங்கள மக்களுக்கும் புூரிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தென் தமிழீழத்தையும் மலையகத்தையும் இணைக்கும் இந்நெடுஞ்சாலை 1995ம் ஆண்டிற்கு முன்னா இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கையில் கிழக்கிற்கும் மலையகத்திற்குமிடையேயான தொடர்புகளில் சிரமமின்றி மக்கள் தங்களது கல்வி, சுகாதார, பொருண்மிய மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் பலவற்றையும் கிரமமாக மேற்கொண்டு வந்தனர்.
1995 மார்ச் மாதம் வீதி அபிவிருத்தி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனமொன்று தொடர்பாக ஏற்பட்ட பிணக்கொன்றையடுத்து சிறீலங்கா படையினரால் செங்கலடி பதுளை வீதியான இந்த ஏ5 நெடுஞ்சாலை முற்றாக பொதுப் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது.
இலங்கைத் தீவிலுள்ள 36 'ஏ' தர வீதிகளில் இதுவும் ஒன்று. வடகிழக்கு மாகாணத்தில் மிகவும் பழைமை வாய்ந்த வீதியான இவ வீதி முன்னர் ஆங்கிலேயரால் கிழக்கிலிருந்து நெல் உற்பத்தியினையும், மலையகத்திலிருந்து பெருந்தோட்டத்தையும் இணைக்கும் கூரிய நோக்கில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அரச படைகளின் இவ நெடுஞ்சாலை மூடப்பட்டதை அடுத்து, கிழக்கிற்கும் மலையகத்திற்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட நிலையை அடைந்தது.
இதனால் இப்பகுதி மக்கள் துரித தொடர்புகள் எதுவுமின்றி வாழ்வாதார அடித்தளம் சீரழிந்து பல துன்பங்களை கடந்த சில வருடங்களாக அனுபவித்து வந்தனர்.
இவ வீதியை தங்களின் புூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான படையினர் மரப்பாலம், கரடியனாறு போன்ற இடங்களில் மட்டுமல்லாது மேலும் பல இடங்களையும் ஆக்கிரமித்து முகாமிட்டிருந்தனர். இதனால் இப்பகுதியில் வாழ்ந்த பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகள் விட்டு இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
35 பாலங்களையும், 98 வரையிலான மதகுகளையும் கொண்ட இவ நெடுஞ்சாலை சடுதியாக மூடப்பட்டதனால் மட்டக்களப்பிற்கு வரும் மலையக மக்களும், மலையகத்திற்குச் செல்லும் கிழக்கு பிராந்திய மக்களும் வேறு வழியுூடாக நெடுந்தூரரம் சுற்றியே தங்களது பயணத்தை தொடர வேண்டியிருந்தது.
ஏ9 சாலை மூடப்பட்டிருந்த போது தென்பகுதிக்கு செல்லும் வன்னி மக்கள் தம்பனையுூடாக சென்று வந்து அனுபவித்த அதே நிலையை ஏ5 சாலை மூடப்பட்டிருந்த போது மட்டு, மலையக மக்களும் அனுபவித்தே வந்துள்ளனர்.
இது வடக்கு தெற்கு தமிழீழ மக்களுக்கு சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டிருந்த வாழ்வியல் நசுக்கம் என்றே கூறலாம்.
மீனவ சமூகத்தினரை அதிகமாகக் கொண்டுள்ள மட்டக்களப்பிலிருந்து மீன் வளத்தை மலையகத்திற்கு கொண்டு செல்வதற்கும், மலையகத்தின் உற்பத்திப் பொருட்களான பிரதானமாக மரக்கறி வகைகளை கிழக்கிற்கு கொண்டு வருவதிலும் ஏற்பட்டிருந்த தடை பொருண்மிய பக்கங்களில் மக்களை மிகவும் நலிவடையவே செய்திருந்தது.
இவ வாறு பல்வேறு கோணங்களில் இன்னல்களை ஏற்படுத்தி வந்த இந்நெடுஞ்சாலை திறக்கப்படுவதற்கான உறுதிப்பாடுகள் இருதரப்பாலும் தெரிவிக்கப்பட்டு இரு பகுதிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மிதி வெடிகள் அகற்றும் பணி இரு தரப்பாலும் துரிதமாக செயற்படுத்தப்பட்டது.
இச் செய்தி அறிந்த மக்கள் திருப்தி அடைந்து இருதரப்பினருக்கும் நன்றி தெரிவித்து குதூகலித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு தமிழீழத்தில் நிகழ்ந்த இரண்டாவது 'ஏ' தர நெடுஞ்சாலை திறப்பினை அரசியலாளர்கள், சமூகவியலாளர்கள் பலரும் பாராட்டி இரு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ம் திகதி செங்கலடி கறுத்த பாலத்தில் 'ஏ' 5 வீதியின் வைபவாPதியான திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன், கொள்கை திட்டமிடல் அமைச்சின் ஆலோசகர் அலிசாகிர மௌலானா கிழக்கு மாகாண இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தென்னக்கோன், மட்டக்களப்பின் 23-3வது கட்டளை அதிகாரி அன்ரனீஸ், அரச அதிபர் சண்முகம் மற்றும் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந் நெடுஞ்சாலை திறப்போடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான புல்லுமலை வரை சென்ற அதிகாரிகளோடு போராட்டவடுக்களால் 8-10 வருடங்களாக பிரிந்திருந்த தமிழ் நண்பர்களை சந்திப்பதற்கு சிங்கள மக்களும் கூடவே சென்று தங்களது தமிழ் நண்பர்களை ஆரத்தழுவி உறவின் உணர்வுகளை மீட்டுக்கொண்டனர்.
புரிந்துணர்வு உடன்பாட்டில் உள்ளவாறான பல விடயங்கள் நடந்தேறாதிருக்கும் இவ வேளையிலும் கூட இடையிடையே மக்களின் நலனுக்காக வெளிப்படுகின்ற இவ வாறான செயற்பாடுகள் மனதிற்கு ஓரளவு திருப்தியளிப்பினும் இதனூடே நிரந்தர, உண்மை சமாதான ஒளிக்கீற்று தென்பட வேண்டும் என்பதே மக்களின் அவா.

-எஸ்.வி.ஆர். கஜன்
Reply
#49
நான் மிகவும் வேதனையோடு அழுத அந்த நாள் இப்போதும் என் நினைவில் நிற்கிறது. கரும்புலிகள் அணியில் இணைவதற்காக எத்தனையோ பாடுபட்டு தலைவரின் அனுமதியை வென்றெடுத்த என்னை, பயிற்சிக்கு எடுக்கமுடியாது என கூட்டிச்செல்ல வந்தவர்கள் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அப்போது நான்பட்ட வேதனைலு} அழுதுகொட்டிய கண்ணீர் எல்லாம் எனது சொந்த விரக்திக்குக் கணக்குத் தீர்ப்பதற்காய் அல்ல....


எனது அனுபவத்தின் படியும் என் சக தோழர்களின் வாழ்வுக் கட்டங்களில் இருந்தும் என்னால் கூறக்கூடியது என்னவென்றால் எந்தக் கரும்புலி வீரனும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் விரக்தியாலோ வெறுப்புணர்வாலோ தன்னை அh ப்பணிக்க முன்வருவதில்லை. எமது தலைவரால் உருவாக்கப்பட்டிருக்கும் கரும்புலிக் கட்டமைப்பை பொறுத்தவரை அப்படிப்பட்டவர்கள் எவராலும் நின்றுபிடிக்கவே முடியாது. என்று தனது பதிவுகளைத் தொடங்கும் கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் தனது அனுபவங்களினூடே தொடர்கின்றான்.
ஒரு போராளி எடுத்தமாத்திரத்திலேயே கரும்புலியாக இணைந்துவிடமுடியாது. அப்படியிருக்க தனிப்பட்ட விரக்திகளுக்கு இடமேது. பல வருடங்களாக ஒன்றுக்குப்பின் ஒன்றாக பலகடிதங்களை அனுப்பி தலைவருடன் சண்டையிட்டும் சந்தர்ப்பம் கிடைக்காத எத்தனையோ போராளிகள் அந்தப் பாக்கியம் கிடைக்காமலேயே வீரச்சாவு அடைந்தும் விட்டார்கள்.
மேலும் கரும்புலிகள் அணிக்கு மக்களிலிருந்து எவரும் நேரடியாக இணைந்து கொள்ளமுடியாது. எத்தனையோ படிமுறைகள் ஊடாக வந்தே அவர்கள் இணையமுடியும். போராளிகளில் இருந்து அவர்களின் இலட்சிய உறுதி, உடல்வலிமை, வயதுத்தகுதி, களஅனுபவம் என்பவற்றோடு அவர்களின் வேகமும் விவேகமும் பாPட்சிக்கப்பட்டே கரும்புலிகள் தெரிவாவார்கள்.
தெரிவுசெய்யப்பட்டாலும் கடினமானதும், வேகமானதும், வேதனைகள் சோதனைகள் நிறைந்ததுமான கடின பயிற்சிகளை நாங்கள் வெற்றிகொண்டு ஆகவேண்டும்.
எங்களின் தேர்வுப்பயிற்சியின் போது எப்படியாவது சித்தியடைந்துவிடவேண்டும் என்பதற்காக வயிற்றுக்காயங்களோடும், உடம்பின் உள்ளே இருக்கும் ரவைகள், செல்துண்டுகள் வீங்கிப் புடைத்து அவர்களை வருத்தும்போதும் அவற்றை வெளியே காட்டிக்கொள்ளாது, தமக்குள்ளேயே மறைத்துக் கொண்டு உறுதியோடு பயிற்சியெடுத்து வெற்றிபெற்ற பல தோழர்களைக் கண்டு நாங்களே வியந்து இருக்கிறோம்.
எம்மோடு நின்ற தோழன் ஒருவன் நல்ல கெட்டிக்காரன். ஆனால் சுகவீனம் காரணமாக பயிற்சி எடுக்கக்கூடாது என்று மருத்துவர் சொல்லிவிட்டு மருத்துவக் குறிப்பும் கொடுத்து அனுப்பியிருந்தார். ஆனால், அந்த சுகவீனத்தின் மத்தியிலும் தான் எந்தப் பயிற்சியானாலும் செய்துமுடிப்பேன் என்று அவன் அழுது அழுது அடம்பிடித்தான். தலைவருக்கு கடிதம் மேல் கடிதம் போட்டான். நிலைமை மோசமாகி கடைசியில் அவன் பயிற்சி எடுப்பதால் பாதிக்கப்படுவதைவிட, நிற்பாட்டப்பட்டதால் எழுந்த மனவேதனையால் விரைவில் செத்தே விடுவான் போல் இருந்தான். இறுதியில் அவன் தொடர்போராட்டத்தில் வெற்றியடைந்து, பயிற்சிகள் எல்லாம் செய்து முடித்து ஒரு முக்கியமான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிச் சென்று வெற்றியுடன் திரும்பியும் வந்தான்.
நான் மிகவும் வேதனையோடு அழுத அந்த நாள் இப்போதும் என் நினைவில் நிற்கிறது. கரும்புலிகள் அணியில் இணைவதற்காக எத்தனையோ பாடுபட்டு தலைவரின் அனுமதியை வென்றெடுத்த என்னை, பயிற்சிக்கு எடுக்கமுடியாது என கூட்டிச்செல்ல வந்தவர்கள் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அப்போது நான்பட்ட வேதனைலு} அழுதுகொட்டிய கண்ணீர்லு} எல்லாம் எனது சொந்த விரக்திக்குக் கணக்குத் தீர்ப்பதற்காய் அல்லலு}.
நாங்கள் ஏன் எமது வாழ்க்கையை இப்படி அமைத்துக்கொண்டோம் என்றால், நாம் ஆழமாக நேசிக்கின்ற எங்கள் உயிரிலும் மேலான பாச மக்கள் எதிரிகளின் கோரத்தாண்டவத்தால் அவலப்படும்போதும், காலம்காலமாய் நிலமிழந்து விரட்டியடிக்கப்படும்போதும் அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை தாமே அனுபவிப்பதுபோன்று உணர்கின்ற மென்மையான மனதாய் எங்கள் மனது இருக்கிறது. நாம் சிலர் எதையும் செய்யத்துணிந்துவிட்டால் மற்றவர்களுக்காகவது நிம்மதியை பெற்றுக்கொடுக்க முடியும் என நம்பினோம். மற்றவர்கள் நிம்மதியடைய எம்மை எப்படியும் வருத்த நாம் துணிந்தோம். இதுகூட விரக்தியடைந்த நிலையில் எழும் முடிவுதானே என எவரும் எண்ணக்கூடும். ஆனால், நின்று நிதானித்து தெளிவுபெற்ற மனிதர்களாகவே கரும்புலிகள் இருக்கிறார்கள்.
அகிலன்
Reply
#50
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியில் ஈடுபட்ட காலத்தில் குழல் துப்பாக்கி தாங்கிய ஆறாயிரம் சம்பிரதாயபுூர்வ இராணுவத்தினரே இலங்கை அரசிடமிருந்தனர். தற்போது நவீன படைக்கலங்களுடனும் பன்னாட்டுப் பயிற்சியுடனும் இத்தொகை ஒரு லட்சத்து இருபதாயிரத்தை எட்டிவிட்டது. குறிப்பாக ஜே. ஆர். காலத்தைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் இராணுவமும் தீர்மானகரமான சக்திகளில் ஒன்றாகிவிட்டது.
ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸாவின் அனுமதி பெறாமலும் அவருக்கு அறிவிக்காமலுமே கைதியாயிருந்த றோகண விஜயவீர, இராணுவத் தளபதி ஹமில்டன் வனசிங்கவின் கட்டளைப்படி அடித்து நொருக்கப்பட்டு உயிருடன் தீமூட்டிக் கொல்லப்பட்டார் என்ற செய்தி இன்னும் பொதுமக்கள் பலருக்குத் தெரியாத ஒன்றே. நெருக்கடிமிக்க கட்டங்களில் இராணுவம் தானே தீர்மானமெடுக்கும் நிலையிலுள்ளது என்பதை இது காட்டுகிறது.
எனவே இலங்கையின் இனவாத அரசியலை ஆராயுமிடத்து முற்றிலும் சிங்களமயப்பட்டுள்ள இராணுவத்தினையும் நிர்ணயகரமான காரணிகளுள் ஒன்றாய் எடுத்து ஆராய தல் அவசியமாகும். இதற்குமுன் அரசியற்தீர்மானங்களில் சிங்கள பௌத்த மதபீடங்களும், மதநிறுவனங்களும் வகித்த இந்த பங்குக்கு நிகரான அல்லது அதைவிட மேலான பங்கை சிங்கள இராணுவம் இப்போது வகிக்கிறது. இராணுவம் என்கின்ற ஒரு குழாமும் அதற்குரிய நலன்களும் இனவாதத்தின் பெயரால் உருவாகிவிட்டன. அது உள்நாட்டு hPதியான உயா குழாத்து வர்க்க உறவையும் அதற்கான நலன்களையும் கொண்டுள்ளது.
இலங்கை இராணுவம் முற்றிலும் தமிழின எதிh ப்பின் மீது கட்டி வளர்க்கப்பட்டதுடன் அதன் சித்தாந்தமும் இனவாதமாகவே உள்ளது. இனவாத சித்தாந்தமும் இன்றைய அரசியல் சூழலில் ஒப்பீட்டு hPதியில் தனது வேகத்தை ஓரளவு இழந்துள்ள போதிலும் வளர்ச்சியடைந்து தனது நலன்களைப் பேண இராணுவம் ஏதோ ஒரு சாக்குப் போக்கைத் தேடுகின்றது. வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கிறது. யுத்ததளத்தை மூட்டவிரும்புகின்றது, இனவாத சித்தாந்தமே இராணுவத்தை ஊட்டி வளர்த்ததாயினும் அது அதற்கும் அப்பாற் சென்று யுத்தவடிவ நலன்களுக்குப் போய்விட்டது.
இந்த இராணுவ விஸ்வரூபம் மொத்தத்திற் சிங்கள மக்களுக்கும் ஆபத்தானது. ஏனெனில் அதன் அடிப்படைச் சித்தாந்தம் இனவாத அடிப்படையிலான மனிதக்கொலை வெறியினைக் கொண்டதாகும். அண்மையில் தென்னிலங்கையில் சிங்களவருக்குச் சொந்தமான பல முச்சக்கர வண்டிகளை இராணுவத்தினர் சிலா கொலை வெறிகொண்டு தாக்கி நொருக்கியதுடன் சாரதிகள் பலரையும் படுகாயப்படுத்தினர். இலங கை இராணுவம் முற்றிலும் ஆபத்தான ஒரு வளர்ச்சியை இலங்கை அரசியலில் அடைந்திருக்கிறது. இனவாதத்தால் உருப்பெற்று வளர்ந்த சிங்கள இராணுவம் தனது நலன்களைப் பேணவும் ஆகலும் பெருகவும் அந்த இனவாதத்தைவிடவும் பரந்த தளத்தைத் தனக்குத் தேடுகின்றது. இனவாதம் சிங்கள இராணுவத்திற்குப் பரிச்சியப்பட்டுப்போன ஒரு கருவியென்பதால் வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அதனைக் கையில் எடுக்கத் தயங்காது.
இலங்கையில் இருகட்சி ஆட்சிமுறை அதிகம் வளர்ச்சி அடைந்து வந்தது. அத்தகைய இருகட்சி ஆட்சிமுறைச் சூழலில் இராணுவம் உள்நாட்டரசியலிற் சத்திவாய்ந்த தொன்றாக இருப்பதரிது. ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலமும் ஜனாதிபதிமுறை மூலமும் இருகட்சி ஆட்சிமுறை நலிவடையத் தொங்கிவிட்டது. சிறப்பான அரசியற் கலாச்சாரமும் பாரம்பரியமும் வளா ச்சியடையாத நாடுகளில் ஒரு வேளையில் இருவேறு கட்சிகள் தனித்தனியே ஜனாதிபதிப் பதவியையும். நாடாளுமன்றத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவைகளாய் இருக்குமிடத்து அங்கு அரசியற் ஸ்திரம் குலைந்து இராணுவத்தின் கையை ஓங்கச் செய்யும். ஜே. ஆர். யாப்பின் மூலம் அப்படியொரு பிரகாசமான வாய்ப்பு இலங்கை இராணுவத்திற்குத் தென்படுகிறது.
இலங்கையின் அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகம் வளர்ந்து வருவது உண்மையாயினும் அது ஆட்சியதிகாரத்தில் அமர்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிதானதே. புள்ளி போடுவதன் மூலம் தமது ஆட்சியாளரைத் தெரிவுசெய்கின்றதான முக்கால் நூற்றாண்டுப் பாரம்பரியத்தை சிங்கள மக்கள் கொண்டுள்ளதுடன் இனவாதத்திற்கு வெளியே சிங்கள நிறுவனங்கள் கூடியளவு சிங்கள ஜனநாயகத் தன்மை கொண்டுள்ளன. ஆதலால் இராணுவம் தவிர்க்கமுடியாத நெருக்கடியின மத்தியிற் பதவிக்கு வர நேர்ந்தாலும் சிறிது காலத்துள் அது புள்ளடியின் மூலமாக ஆட்சியதிகாரத்தையே ஸ்தாபிக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விடயமென்னவெனில் ஒரு கட்சி ஜனாதிபதிப் பதவிவகிக்க வேறொரு கட்சி நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் நிலையிருக்குமிடத்து அப்போது நெருக்கடி இரு கட்சிகளுக்குமிடையே வளருமாயின் அதில் இராணுவம் தனது நலத்திற்கேற்ற ஒருபக்கம் சார்ந்து அதன் மூலம் அரசியலிற் தனது செல்வாக்கை பெரிதும் பேணமுடியம். உள்நாட்டிற்குழப்பம் இந்த வகையிற் கணிசமானளவு மேலெழும்புமேயானால்த்தான் இராணுவத்தால் அதைப் பயன்படுத்தமுடியும். இந்த ஆபத்தான காரணியை தமிழீழ மக்கள் தமக்குப் பொருத்தமான வகையிற் கணிப்பீடு செய்யவேண்டும்.
இப்போது இனவாதத்துடனும் அதற் கப்பாலும் சிங்கள இராணுவம் தனது நலன்களை இணைத்தும் ஸ்தாபித்து விட டது. இதனால் இராணுவத்தின் நலன்கள் இனவாதத்துடனும் அதற்கப்பாலான அம்சங்களுடனும் இணைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றிற்செறிந்தும் செயற்படக்கூடியவை ஆகிவிட்டன.
இராணுவம் அரசின் செல்லப்பிள்ளையாய் வளா ந்து விட்டது. அது தொடா ந்தும் செல்லம் கேட்கும் அல்லது மூக்கைக் கடிக்கும். இராணுவத்தின் வரவு இலங்கை அரசிலில் ஒரு புதிய யதார்த்தம். இதனாற்தான் ரணில் பதவிக்கு வந்ததும் முக்கிய இராணுவ முகாங்களுக்கெல்லாம் சென்று இராணுவத்தினரை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளிலீடுபட்டார்.
இலங்கையின் இனவிவகாரத்திற் பங்கெடுக்கக்கூடிய முக்கிய சக்திகள் கட்சிகள், இராணுவம், பௌத்த மதபீடங்களும்நிறுவனங்களும், அரசியற் பொருளாதார அமுக்கக் குழுக்கள், பத்திரிகைகளும் ஏனைய வெகுஐன தொடர்புச்சாதனங்களும், புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும், அதிகாரிகள் வா க்கம் ஆகியனவாகும்.
கட்சிகள், மதபீடங்கள், தொடர்புச்சாதனங்கள் என்பவற்றுடன் ஒட்டியே இராணுவம் தன்னை மேன்மைப்படுத்த முயலும். அதனால் இவ வம்சங்களை மட டும் நோக்குவதன முலம் இனவாதத்தை குறுக்கு வெட்டாக எடைபோட முயல்வோம்.
ஐ.தே.க, சு.க, ஜே.வி.பி. ஆகிய மூன்றையுமே தற்போதைய நிலையிற் கருத்திற்கெடுப்போம்.
ஜே.வி.பி. இனவாதம் பொறுத்து ஒரு தூண்டுகோலான சக்தியே தவிர பதவிக்கு வரக்கூடிய ஒன்றல்ல. அதன் தூண்டற் பலம் இராணுவத்திற்கு முற்றிலும் பக்கபலமானது மட்டுமே. சு.க. விற்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. நலிந்துபோயிருக்கும் பொருளாதாரப் பின்னணியில் வெளிநாட்டாதரவுடன் எழுந்து நிற்கும் ரணிலை இலகுவில் எதிh க்க முடியாத நிலை. இனவாதத்தை இதன்பொருட்டு முழு அளவில் பயன்படுத்த முடியாமை. அடுத்து பண்டாரநாயக்கா வம்சம் கட்சிக்குள் புதிய நெருக்கடிக்குள்ளாகியுள்சளமை.
பண்டாரநாயக்க குடும்பத்திற்கு மாற்றாக சிங்கள மக்கள் மத்தியிலான சத்திவாய்ந்த குடும்பத்திலிருந்து மகிந்த ராஜபக்ச தலைமைத்துவப் போட்டிக்குள் நேரடியாகப் பிரவேசித்துவிட்டார். அத்துடன் அவருக்கு பௌத்த மதபீடங்களின் ஆசியுமுண்டு. இந்த இரண்டுபட்ட நிலையில் கட்சித்தலைமைத்துவத்தைப் பெற ஏட்டிக்குப் போட்டியாய் இரு அணியினரும் இனவாதத்தைத் தூக்கமுடியும்.ஆனால் தமது உட்கட்சிப் போட்டியில் ஐ.தே.க. வின் மறைமுக அனுசரணையைப் பெறுவது மகிந்த ராஜபக்சவிற்கு அனுகூலமானது. கட்சிக்குள் முன்னுக்குவர முழு இனவாதம் பேசிய முன்னாள் பிரதமர் ரத்தின சிறி விக்கிரமநாயக்காவின் தோல்வி அனுபவம் ராஜபக்சவிற்கு ஒரு முன்னுதாரணமாக அமை யுமாயின் சமாதானம் பற்றிய விவகாரத்தில் அவர் ஐ.தே. க. வுடன் மறைமுகமாக அனுசரித்தப் போவது அவருக்கு இலாபகரமானது. சந்திரிகா, அநுரா அணியினரின் இனவாதத்துடன் ஒப்பிடுகையில் ராஐபக்ச மிதமான நிலையையே எடுத்துள்ளாh . அத்துடன் ராஜபக்சவின் கோட்டையான தென்மாகாணத்தில் ஜே. வி.பி. விரைவாக வளர சந்திரிக்கா - ஜே.வி.பி. கூட்டு உதவுகிறது. இது ராஜபக்சவை நன்றாகப் பலவீனப் படுத்தக்கூடிய விடயமாகையாலும் ராஜபக்ச ஈவிரக்கமின்றி பண்டாரநாயக்க வம்ச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியுள்ளது. இவை சு.க. வைப் பவீனமான நிலையில் வைத்திருப்பதால் இராணுவம் தற்போது சு.க. வினை நம்பி எதையும் முதலீடுசெய்யமுடியாதுள்ளது. ஆதலால் சு.க. ஏதோ ஒரு வகையில் பலமடையும் வரை, ஏதோ ஒரு சக்தி முழுப்பலமடையும் வரை இராணுவம் காத்திருக்கவேண்டி உள்ளது.
ஐ. தே- க. விற்கு பௌத்த பீடங்களில் கணிசமான செல்வாக்குண்டு. அத்துடன் சு.க. இரண்டு பட்டிருப்பதாலும் பௌத்தபீடங்கள் முனைப்புடன் செயற்படத் தயாராயில்லை, யுத்தம் தலைநகர் வரை நகர்ந்து விட்டதாலும் அதன் கசப்பான அனுபவங்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஏதோ ஒருவகைச் சாமாதானம் வேண்டுமென்ற மனநிலையைத் தோற்றுவித்துள்ள பின்னணியில் இந்த பௌத்த பீடங்களின் இனவாதக் கூர்முனை ஓரளவு ஒடிந்துள்ளது. ஆயினும் பற்களில் விசமுண்டு.
வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் இனவாத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லையாயினும் விசம் கக்குவதை தணித்துள்ளன. இந்த நிலைமைகளின் கீழ் இனவாதத்திற்கு ஒரு ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்தம்பித்தைச் சமாதான விரும்பிகள் நன்கு பயன்படுத்தத் தயார் என்றால் சுமுக நிலையை அதிகம் மேம்படுத்த முடியும்.
இனி இராணுவத்தின் இராணுவ மனநிலையைச் சற்று நோக்குவோம். சிங்கள இராணுவத்தின் மூலமான ரத்வத்தையின் மிகப்பெரிய இராணுவத்திட்டம் "ஜெயசிக்குறு" வாகும். புலிகள் ஜெயசிக்குறுவிற்கு கொடுத்த அடியின் மூலம் அதன் இராணுவத் தளகர்த்தர் ரத்வத்தையின் முதுகெலும்பை நொருக்கியதுடன் இராணுவத்தையும் திணறடித்து விட்டனர். மேலும் இராணுவம் வன்னிப்பெருநிலப்பரப்பில் வைத்திருந்த அதிகமான முகாம்களை இழந்ததுடன் முக்கிய ஆனையிறவு முகாம்மீதான வெற்றியுடன் புலிகள் குடாநாடு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது இராணுவம் செயலற்று முழுத்தோல்வி மனப்பாங்கை அடைந்தது. அவ வேளை இராணுவத்தைக் காப்பாற்றியது வெளிநாட்டுச் சக்திகளின் உடனடி ஆதரவும், அனுசரணையும் உதவிகளும்தான். ஆதலால் இங்கு இராணுவம் அதிகம் வீரம் பேசமுடியாத விழுப்புண்ணைக் கொண்டிருப்பதுடன் வெளிநாட்டுச் சக்திகளின் விருப்பங்களுக்கு மாறாகச் சமாதான முயற்சிகளைக் குழப்பினால் அதனால் ஏற்படக்கூடிய எதிர்விளைவையும் கருத்திலெடுக்க வேண்டிய நிலையுண்டு.
ராஜீவ கொல்லப்பட்டமை தொடர்பாக புலிகளுக்கெதிராக ஜெயலலிதா விடும் கடும் கண்டனங்களும், மிரட்டல்களும் தமிழகச் சட்டசபைத் தீர்மானமும் சிங்கள இனவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் தெம்புூட்டும் விடயங்கள்தான். இதில் ஜெயலலிதாவிற்கு பல பின்னணிகள் இருக்கக்கூடும். எப்படியோ நோக்காடுற்றுள்ள சிங்கள இனவாதத்திற்கு ஜெயலலிதா தைலம் புூசுகிறார் என்பது மட்டும் உண்மை. இதில் ஜெயலலிதாவின் அரங்கம் எல்லைக்குட்பட்டதென்ற வகையில் சற்றாறுதல் உண்டு.
எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து நீண்டகால நிலைமைகளையும் கருத்திற்கொண்டு பார்க்கையில் ஒப்பீட்டு hPதியில் இனவாதம் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அது தனது சக்திகள் பலவற்றை ஒன்றுதிரட்டி மீள்வதற்கு முன் சமாதானத்தின்பால் விரைவாகச் செயற்பட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையின் குறிக்கோள்களை மேல் நோக்கி விரைவுபடுத்தி எடுத்து வடக்கு-கிழக்குக்கான இடைக்கால ஆட்சி அலகை உருவாக்கி விட்டால் சுமூக நிலையை சில வருடங்களுக்குப் பேணுவது சாத்தியம். பின்பு சமூக நிலையின் தன்மையே அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும். தாமதிக்கும் ஒவ வொரு கட்டமும் இனவாத சக்திகள் மீள்திரட்சி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
முன்னெப்பொழும் இல்லாதவாறு இனவாதம் அதிகம் ஸ்தம்பிதமடைந்திருக்கும் காலகட்டமிதுவாகும். ஆதலால் இராணுவம் உடனடி நிலையில் நேரடிக் குழப்பங்களில் ஈடுபட முடியாத ஓர் ஈய்வு இப்போதுள்ளது.

மு. திருநாவுக்கரசு
Reply
#51
பலப்படுத்தப்படும் படைநிலைகள்
பலவீனமான நகர்வுகள்
மக்கள் சந்தேகிப்பது போல்
மீண்டும் ஒரு பாரிய யுத்தத்தை
ஆரம்பிப்பதற்கான
தயார்படுத்தல் காலமாக
இவ இடைவெளியைப்
பயன்படுத்தி சர்வதேச
உதவிகளுடன்
மீண்டும் ஓர் யுத்தத்தை
இவர் தமிழ் மக்கள் மீது
தொடுப்பாரேயானால்
அதன் விளைவுகளை நாடு
சந்தித்தேயாக வேண்டும்.
ஏனெனில் தமிழ் மக்களை
எவரும் எளிதில்
ஏமாற்றிவிட முடியாது.
இதை கடந்தகால
அனுபவங்கள்
அனைவருக்கும்
நன்கு உணர்த்தியேயுள்ளது.


சமாதானம் என்ற போர்வையால் அனைவரது கண்களையும் கட்டிவிட்டு சிறீலங்கா அரசு யுத்தத்திற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றதா என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழவே செய்கின்றது. இச் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுவதை தவறு என்றும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் செயற்பாடுகள் அதிர்ச்சியளிப்பவையாகவே காணப்படுகின்றன.
பல வருடங்களாக மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொருளாதாரத் தடையை நீக்கியது முதல் நாடு முழுவதும் இரு தரப்பினரும் எதுவித அனுமதியும் இன்றி சுதந்திரமாக நடமாட அனுமதித்தமை வரை அவர் எடுத்த துணிவான முடிவுகள் எவரும் எதிர்பார்த்திராத அதிர்ச்சியுூட்டும் நடவடிக்கைகளே.
இதேபோல் நோர்வே அனுசரணையுடன் பேச்சுவார்த்தைக்கான நகர்வுகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் இரு கட்சி ஆட்சி நடைபெறும் அதேவேளை, சர்வ அதிகாரமும் கொண்ட சனாதிபதியாக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர் இருக்க அதிகாரங்கள் எதுவுமற்ற பிரதமர் தன் போக்கில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவரது நகர்வுகள் சமாதானம் நோக்கியதாகவே பார்வைக்குத் தென்படுகின்றபோதிலும் மறுபுறத்தில் யுத்தத்திற்கு தயாராகும் முயற்சிகளும் நடைபெறுவதாகவே தெரிகிறது. புரிந்துணர்வு உடன்படிக்கை இவற்றுக்கு தடையாக அமையவில்லை என இவர்கள் இதற்குக் காரணம் கூறுகின்றனர். அப்படியானால் இப் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மறுபுறத்தில் யுத்தத் தயாரிப்பிற்கு சாதகமான வகையிலேயே தயாரிக் கப்பட்டுள்ளது என்றே எண்ணத்தோன்றுகின்றது.

ஆட்திரட்டல்:
படைகளுக்கு ஆட்களைத் திரட்டும் முயற்சிகள் தீவிரமாக அதேவேளை பகிரங்கமாகவே நடைபெற்று வருகின்றது. இராணுவத்திற்கு முதற்கட்டமாகப் பத்தாயிரம் பேரை திரட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன. படைகளில் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்ப மட்டுமே இவ ஆட்திரட்டல் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது. உண்மையில் சமாதானம் மீது, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் நியாயமான தீர்வை வழங்கப் போவதாக அரசு சொல்லி வருகின்றது. அப்படித் தமிழ் மக்கள் தட்டிக்கழிக்காத ஓர் தீர்வை வழங்குவோம் என்ற நம்பிக்கை இவர்கள் மனங்களில் இருக்குமேயானால் இவ வாறான பெரும் ஆட்திரட்டல்களில் இவர்கள் தீவிரம் காட்டுவதற்குப் பதிலாக படைக்குறைப்பையும், பாதுகாப்புச் செலவினக் குறைப்பையும் அல்லவா மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலங்களில் படைகளுக்கான ஆட்திரட்டல்கள் தோல்வியில் முடிவடைந்தமைக்கு யுத்தமே காரணமாயிருந்தது. படைகளில் இருந்தவர்கள் தப்பி ஓடுவதற்கும் இதுவே காரணமாயிற்று. இதனால் ஆட்திரட்டலுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி சமாதானம் என்ற நிலையை தோற்றுவித்து ஆட்திரட்டலுக்கு இக்காலப் பகுதியை சாதகமாகப் பயன படுத்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனரா?
இராணுவத்திற்கு ஆட்திரட்டலை மேற்கொள்ளும் அதேவேளை முல்லைத்தீவு முதல் பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள படை நிலைகள் படையினரால் பலப்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். குடாநாட்டிலும் புதிய புதிய காவலரண்கள் அமைக கப்படுகின்றன. பனை, தென்னை மரங்கள் படையினரால் தறிக்கப்பட்டு நிலமட்டத்துடனான அதிபாதுகாப்புக்கூடிய காவலரண்கள் படையினரால் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் கடற்படை மற்றும் விமானப்படைகளையும் பலப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி இதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. யுத்தக் கப்பல்களை கொள்வனவு செய்வதிலும் கடற்படைக்கென தனியாக ஆட்களைத் திரட்டுவதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோலவே விமானப்படையையும் விரிவுபடுத்தவும், விமானப்படைத்தள விஸ்தரிப்பிற்கான காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தத்தில் கடந்த ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்ற மூன்றாம்கட்ட ஈழப்போர் சிறீலங்காவின் முப்படைகளுக்கும் பெரும் ஆள், ஆயுத இழப்புக்களை ஏற்படுத்தியதுடன் பலவருடகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டு முகாம்களாக்கப்பட்டிருந்த பிரதேசங்களையுமே புலிகளிடம் இழக்கும் நிலையை ஏற்படுத்தியது. இது சர்வதேச மட்டத்திலேயே, புலிகளின் அதிவேக வளர்ச்சியை புடம் போட்டுக்காட்டியது. இவை ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்கே தெரியும் என்பதுடன் புலிகளை இராணுவ hPதியில் என்றுமே வெற்றி கொள்ள முடியாது என்ற யதார்த்தத்தையும் புரிய வைத்திருக்கும்.
இதனால் இவர் தான் ஆட்சிக்கு வந்தால் புலிகளுடன் உடனடியாக மோதல்களில் இறங்காது படையணிகளை பலப்படுத்தும் அதேவேளை புலிகளை பலவீனப்படுத்தும் திட்டங களையும் தயாரித்து அதற்கு அமைவாகவே செயற்படத் தொடங்கியுள்ளார்.
புலிகளை எதிர்த்தால் அது தமிழ் மக்களை எதிர்ப்பதாகவே அமையும் என்பதால் அதனை மனதில் கொண்டு தமிழ் மக்களுக்கு இருந்து வரும் அழுத்தங்களை விலக்கி அவர்களுக்குத் தேவையானவற்றைத் தடையின்றி வழங்குவதன் மூலம் அவர்களைத் தம்வசப்படுத்தலாம். அதேவேளை மக்கள் புலிகளிடம் இருந்து விலகுவர். இதனால் புலிகள் தனிமைப்படுத்தப்படுவர். பின்னர் புலிகளை இலகுவாக வெற்றிகொள்ளலாம் என தப்புக்கணக்குப் போட்டுள்ளார் என்பது போலவே இவரது போக்குகள் அமைகின்றன. படைப்பலத்தை அதிகரிக்கும் அதேவேளை நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க சர்வதேச உதவிகளையும் இவர் மறைமுகமாகப் பெறும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இதன் நோக்கிலானதே திருமலை எண்ணைக் குதங்களை இந்தியாவிற்கும் வான் பரப்பையும், துறைமுகங்களையும் அமெரிக்காவிற்கும் குத்தகைக்கு வழங்கும் திட்டங்களாகும். அமெரிக்க யுத்தக் கப்பல்களின் இதன் வருகையும் இதனை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. உலகிற்கு இவற்றின் நோக்கம் வேறு என இவர்கள் கற்பிக்க முனைந்தாலும் தமிழ் மக்களுக்கு இவற்றின் உண்மை நோக்கம் தெளிவாகவே தெரிந்துவிடும். அதனால் தான் ஆரம்பம் முதலே ரணில் விக்கிரமசிங்கவின் ஒவ வொரு அசைவுகளையும் மக்கள் சந்தேகக் கண்கொண்டே நோக்கி வருகின்றனர்.
மக்கள் சந்தேகிப்பது போல் மீண்டும் ஒரு பாரிய யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான தயார்படுத்தல் காலமாக இவ இடைவெளியைப் பயன்படுத்தி சர்வதேச உதவிகளுடன் மீண்டும் ஓர் யுத்தத்தை இவர் தமிழ் மக்கள் மீது தொடுப்பாரேயானால் அதன் விளைவுகளை நாடு சந்தித்தேயாக வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களை எவரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. இதை கடந்தகால அனுபவங்கள் அனைவருக்கும் நன்கு உணர்த்தியேயுள்ளது.


- சசிகரன் -
Reply
#52
நிறைவேற்று அதிகாரத்தால்
தீர்க்கப்பட முடியாதுள்ள


அவதந்திரம் தனக்கந்திரம் எனத்தமிழில் பழமொழி ஒன்றுண்டு சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியான சந்திரிக்காவின் இன்றைய நிலைக்கு அப்பழமொழி கச்சிதமாகப் பொருந்துவதாகவே உள்ளது.
அளவற்ற அதிகாரத்தையும் அதற்கும் பல மடங்கு மேலான அகங்காரத்தையும் கொண்டவராக 1995 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு இறுதி வரை ஆட்சிபீடத்தில் இருந்து கொண்டு அவர் மேற் கொண்ட ஆரவல்லி ஆட்சி காலத்து அட்டகாசங்ளை அனைவரும் அறிவார்.
அக் காலகட்டத்தில் அவரும் அவருடைய ஆட்களும் தமக்கு மேலாக எவருமில்லை என்ற அதீததிமிருடன் நடந்து கொண்டதன் பெறுபேற்றினை. அப்போது விதைத்த விதைகளுக்கான அறுவடையை இப்போது பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினை மக்களும், வரலாறும் சந்திரிகாவுக்கு ஏற்பத்தியுள்ளது. அளவற்ற - ஏன் அனைத்து அதிகாரங்களையுமே தன்வசம் வைத்துக்கொண்டு அவர் தனக்கு சாதகமான அனைத்தையும் சாதுரியமாக மேற்கொண்ட போதுதான், சிறிலங்காவின் மக்கள் தாம் விட்ட மிக மோசமான வரலாற்றுத் தவறினை புரிந்து கொண்டார்கள்.
அதிகாரத் துஸ்பிரயோகம் சந்திரிக்காவினதும் அவரது பொ.ஐ. முன்னணி ஆட்சியினதும் பொழுது போக்காவே இருந்தது. லஞ்சம், ஊழல், மோசடிகள், சட்டவிரோதச் செயற்பாடுகள். மனிதஉரிமை மற்றும் ஜனநாயக உரிமை மீறல்கள் என அனைத்தும் சந்திரிக்கா தலைமையிலான அந்த ஆட்சியில் மிகச் சர்வசாதாரணமான விடயங்களாகவே இருந்தன.
பயங்கரவாதத் தடைச் சட்டம். அவசரகாலச்சட்டம். பத்திரிகைச் செய்தித் தணிக்கைச் சட்டம் என்று தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி அமுலாக்கிய சட்டங்களின் பாதுகாப்புடன் பொ.ஐ. முன்னணியினர் மேற்கொண்ட அனைத்துக் குற்றங்களும் மறைக்கப்பட, பல புதைக்கப்பட சந்திரிக்காவே காரணமானார்.
இவையனைத்தும் சமாதானம், அமைதி, சமதர்மம் என்ற இடைவிடாத கோசங்களுக்கு மத்தியில் நாகரிகமாக கையாளப்பட்டதுடன் தேசிய மற்றும் சர்வதேசிய சமூகத்தினரையும் மிகவும் நாசூகலாகாக ஏமாற்றி தன்னை நம்பவும் வைத்த சந்திரிக்காவை ஒரு பெரும் அமைதித்தேவதையாகவும். பயங்கரவாதத்திற்கெதிராக வெகு துணிச்சலுடன் ஒரு யுத்தத்தை நடத்தும் வீராங்கனையாகவும் சர்வதேசமட்டத்தில் சித்தரிப்பதில் பெரும் பங்குவகித்தவரின் பட்டியல் மிக நீளமானது. எஸ்.பி. திஸநாயக்கா, ஜி.எல்.பீரிஸ் கதிர்காமர், ரத்வத்தை, அஸ்ரப் என இவர்களது பெயரை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் சந்திரிகாவின் விசுவாசிகளாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் அந்த அராஜக ஆட்சிக்காலப் பகுதியில் இயங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் ஐந்தாண்டு காலக் கூத்து. இந்த விசவாசிகள் சிலர் அவிசுவாசிகளாக மாறி கட்சி மாறியதையடுத்து ஒரு முடிவுக்கு வந்தது. சலிப்பும் வெறுப்பும் கோபமும் கொண்ட மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பியதில் ஆச்சரியமில்லை.
சந்திகா ஆட்சி மீதான வெறுப்பே ரணில் ஆட்சி பீடம் ஏறக்காரணமாகியது என்பதே யதார்த்த நிலையாகும்.
சனாதிபதி ஒரு கட்சி. பிரதமர் இன்னொருகட்சி என இரு கட்சி ஆட்சி சிறீலங்காவில் அரங்கேறியது. அதிகாரங்கள் அனைத்தும் சனாதிபதி சந்திகா கையில். பாராளுமன்ற ஆட்சியோ பிரதமரின் நிர்வாகத்தில்லு}. இங்குதான் பிரச்ச}னையே ஆரம்பமாகியது.
கடந்த ஐந்து மாதகாலமாக இழுபறிபடும் இந்த ஆட்சி அதிகாரப்போட்டியில் பல சுவையான சம்பவங்கள் அடுத்தடுத்து அரசியலரங்கில் அரங்கேறி வருகின்றன.
சந்திh}க்காவின் உள்ளார்ந்த பலம், பலவீனம், ரகசியங்கள் அனைத்தையும் அவருடன் இருந்து. அவரின் குற்றங்களில் எல்லாம் பங்கு கொண்டு. அவரை தவறான வழியில் இயக்கி, தாமும் அதே வழியில் இயங்கிக் கொண்டவர்கள் இப்போது ரணிலின் பக்க பலமாகிவிட்டார். சந்திரிக்காவை நிலை குலையச் செய்துள்ளதுடன், அன்றாடம் அவா கள் சனாதிபதி தொடர்பான பல மறைக்கப்பட்ட விடயங்களை ஆதாரபுூர்வமாக, ஒவ வொன்றாக வெளியிட்டு வருவதானது சந்திh}க்காவை சிறிது சிறிதாக உளவியல் hPதியாக வெகுவாகப் பாதிப்பது இன்றைய நாட்களில் அவரது பேச்சுகள் அவர் விடும் அறிக்கைகள் போன்றவற்றின் மூலம் மிகத் தெளிவாகி வருகின்றன.
அவரது பேச்சில் விரக்தியின் ஆழம் செறிந்த கோபமும், அவரது அறிக்கைகளில் பதட்டத்துடன் கூடிய மிரட்டல் தனமும் அவரை மீறி வெளிப்படவே செய்கின்றன.
தனது நிறைவேற்று அதிகார வலுவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்துவிடத் தன்னால் முடியும். ஒரு கையெழுத்து மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கையை ரத்துச் செய்யமுடியும்லு}. என அன்றாடம் அவர் விட்ட விடும் மிரட்டல்களுக்கெல்லாம் ரணில் அஞ்சுபவராக இல்லை. மாறாக சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரப் புூச்சாண்டியை விரட்டக் கூடிய மந்திரக்கோல் ஒன்று அவரிடம் இருப்பதாகவே தெரிகிறது.
அந்த மந்திரக் கோலை இயக்கும் சக்திமிகு சாத்தான்களாக எஸ்.பி.திஸநாயக்காவும், ஜி.எல்.பீரிஸிமே உள்ளார்கள் என்பது வெளிப்படையான விடையம்.
சமூர்த்தி அமைச்சராக எஸ்.பி.திஸநாயக்காவை நியமிப்பதற்கு அங்கீகாரம் அளிக்க முதலில் கர்ணகடூரமாக மறுத்து காரணங்களை அடுக்கிய சந்திh}க்கா, எஸ். பி. யை விசாரிக்கப்பட வேண்டிய மோசடிக் குற்றவாளியெனப் பகிரங்கமாகவும் அறிவித்தார். ஆனால் அவரது அதிகாரவலுவைப் பயன்படுத்தி எஸ்.பி. திஸநாயக்காவை எதுவும் செய்ய அவரால் முடியவில்லை. மாறாக அவருக்கு வெறுப்புடன் முகத்தை கடுப்பாக வைத்துக்கொண்டு, நேருக்கு நேர் பார்க்காமல் மீண்டும் சமூர்த்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார். இது அவரின் அதிகாரவலுவுக்கு கிடைத்த முதலாவது பலமான அடி.
இதனையடுத்து தேர்தல் காலவன்முறைகள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான அவரது மாமனாரும் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான அநுருத்த ரத வத்தையும், அவரின் இர புத்திரர்களான லொகான் மற்றும் சானுக்க ரத்வத்தைகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நான்காம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இன்னமும் சிறையிலும், சிறைமருத்துவமனையிலும் என மாறி மாறி இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றிய இரண்டாவது சப்புமால் குமாரய என்று தன்னைத் தானே பிரகடனம் செய்த அந்த வெறித்தனம் கொண்ட போலி ஜெனரலையும். அவரது புதல்வர்களையும் பாதுகாக்கவோ விடுவிக்கவோ சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரத்தால் எதுவும் செய்து விடமுடியவில்லை.
அடுத்ததாக கொடிய செயல்களுக்கென்றே மிகவும் பெயர் பெற்ற, மனிதநேயமற்ற, கொலை வெறி கொண்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பலரையும் உள்ளடக்கியதுதான் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதீத அதிகாரங்களைக் கொண்ட இயக்குநரான பொலிஸ் அத்தியட்சகரும் சந்திரிக்காவின் பிரதம மெய்ப்பாதுகாவலரும், அவரின் பிரியத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவருமான நிகால் கருணாரத்ன மருத்துவமனையில் சத்திரசிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட போது. அதனைத் தடுக்க மிரட்டியும், இறுதியில் கெஞ்சியும் எத்தனையோ பேர் ஏடாக நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும் சந்திh}க்காவால் எதுவும் செய்துவிட முடியவில்லை. அவரது அதீத சக்தி வாய்ந்த நிறைவேற்று அதிகாரத்தால் அவரது பாதுகாப்புக்கு பொறுப்பானவரையே பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.
அண்மையில் அவரது நெருங்கிய நண்பரும் விசுவாசியும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர சட்டத்தின் பிடியில் ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பிடிபட்ட போது சந்திh}க்காவின் நிறைவேற்று அதிகாரம் சக்தி செயலிழந்து போய்த்தான் கிடந்தது.
இப்போது மாமனிதர் குமாh பொன்னம்பலத்தின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அவரின் அன்பு மைத்துனரும், அநுருத்த ரத்வத்தையின் கடைசி மகனுமாகிய மகேன் ரத்வத்தையை பாதுகாக்க சந்திரிக்காவால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு சூழல் மாற்றியிருந்தது. அக் கொலை வழக்கில் தனது பெயரும் இழுக்கப்படும். அச்சம் தரும் நிலை இப்போது இருப்பது சந்திரிக்காவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அவரது நிறைவேற்று அதிகாரம் அவரையே பாதுகாக்குமா என்ற கேள்வியும் எளத் தெடங்கியுள்ளது.
எல்லாவற்றிலும் மேலாக அவரது சொந்தக்கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் மெல்ல மெல்ல விசுவரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளன.
பண்டாரநாயக்கா பாம்பரியம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடருமா என்ற சந்தேகமும் இப்போது வலுப்பெறத் தொடங்கியுள்ளது. அநுராவை அடுத்த சனாதிபதியாக்கும் சந்திரிக்காவின் திட்டத்திற்கு குறுக்கே மகிந்த ராஜபக்ச இருப்பது சந்திரிக்காவுக்கு இப்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. தம்பியை கட்சிக்குள் முதன்மைப்படுத்த மேற்க்கொள்ளப்படும் எந்த வீயுூகமும் கட்சியை பிளக்கவே வழி செய்யும் என்ற நிலையில், கட்சிக்குள் மகிந்த ராஜபக்சவின் முதன்மை நிலையை பொறுத்துக் கொள்ள முடியாதவராக சந்திரிக்கா பொருமிக் கொண்டிருக்கின்றார். அவரிடமுள்ள இன்னமும் பாவிக்கப்படாமல் உள்ளதாகக் கூறும் அவரது 75சதவீதமான அதிகாரங்களில் ஏதாவது ஒன்று சந்திரிக்காவின் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க உதவுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
வரும் டிசம்பருடன் புதிய ஆட்சியமைத்து ஓராண்டு ஆகவுள்ளது. அதனையடுத்து இந்த ஆட்சியைக் கலைத்துவிடும் அதிகாரம் தனக்கு இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவரும் சந்திரிக்காவுக்கு அதற்கு முன்னர் தனது பதவிக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்ற நியாயபுூர்வமான அச்சமும் ஏற்படத்தொடங்கிவிட்டது.
அநுராவை பலப்படுத்த முயன்றால். அல்லது அநுராவுக்கு மகிந்த ராஐபக்சவுக்குமான முறுகல் நிலை மோசமடைந்தால் ராஐபக்சவுக்கு ஆதரவான 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு வழங்கி மூன்றிலிரண்டு பங்கு உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கிவிட ஐ.தே. முன்னணி அரசுக்கு ஓர் வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்ற அச்சம் சந்திh}க்காவை இருதலைக் கொள்ளி எறும்பாக மாற்றியுள்ளது.
அவருக்கு அச்சத்தையும் அவதானத்தையும் ஏற்படுத்தும் பிரச்சினைகளில் இருந்து அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளக்கூட அவருடைய வலுவான நிறைவேற்று அதிகாரங்கள் உதவுமா என்பதே இன்றைய கேள்வியாக சந்திரிகா முன்னர் எழுந்து நின்று அவரின் குழப்பத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கப்போகிற தென்னவோ உண்மையான விடயம்தான்.
தனது நிறைவேற்று அதிகார வலுவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்துவிடத் தன்னால் முடியும். ஒரு கையெழுத்து மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கையை ரத்துச் செய்யமுடியும்லு}. என அன்றாடம் அவர் விட்ட, விடும் மிரட்டல்களுக்கெல்லாம் ரணில் அஞ்சுபவராக இல்லை. பதிலளிப்பவராகவும் இல்லை, மாறாக சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரப் புூச்சாண்டியை விரட்டியடிக்கக் கூடிய மந்திரக்கோல் ஒன்று அவரிடம் இருப்பதாகவே தெரிகின்றது.
Reply
#53
எதிர்வு கூறப்படமுடியாத மனிதர் என்றும், கணிப்பிடப்பட முடியாத
மனிதர் என்றும்,
இராணுவ hPதியாகவோ அரசியல் hPதியாகவோ யாராலுமே வெல்லப்படமுடியாத மனிதர் என்றும் உலகம் இன்று கருதுகின்ற தலைவர். அன்று தன் அரண்மனையான
காட்டில் அமைக்கப்பட்டிருந்த ஒரு எளிய குடிலிலே அன்றைய
நிலையில் தன்னால் உச்சமாகக் கொடுக்க இயன்றதைக் கொடுத்தார். காட்டிலே பழுத்துவிழுகின்ற
அந்தச் சிறு உலுவிந்தம்பழம் அன்று தேசத் தலைவரின்
பாசத்தோடு கொடுக்கப்பட்டதில் விலை மதிக்கப்படவே முடியாத
பெரும் பரிசாயிற்று.
தடயங்கள் எதையும் விடாமல், முடிந்த வரையில் மோதலைத் தவிர்த்துக்கொண்டு, 'இந்தக் காட்டுக்குள் புலிகள் இல்லை' என்பது போன்ற தோற்றம் காட்டிக்கொண்டு நாங்கள் எங்கள் வேலைகளைச் செய்துகொண்டிருந்தோம். இதற்காக நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்சமல்ல. காட்டினுள் தோண்டப்பட்ட ஆழக் கிணறுகளில் நீர் அள்ளும்போது கப்பிச் சத்தம் கேளாமல், நீர் கோலும் சத்தம் கேளாமல், சமைக்கும்போது புகை கிளம்பாமல், கதைக்கும்போது ஒலி எழும்பாமல், மான்போல கூவி, காட்டுப்பறவைகளின் மொழிகளில்பேசி, மரம் வெட்டுகின்ற, அரிகின்ற நிலம் கொத்துகின்ற ஓசைகளை எழுப்பாமல்லு}.. காட்டின் இயல்புக்குப் பங்கம் விளைவிக்காமல் ஒன்றிப்போன எம்மைத் தேடி அழிக்க முடியாமல் இந்திய இராணுவம் திணறிக்கொண்டிருந்தது.
தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவ அணிகள் எமது தளங்களுக்கு இடையாலும் வந்துபோகும் அளவுக்கு காடு இராணுவத்தால் நிறைந்துவிட்டது. இப்போது போன்ற தொலைத் தொடர்பு சாதன வசதி குறைந்த காலம் அது. எனவே எதிரியை முதலில் காணுபவர் எவ வகையிலாவது உடனடியாக அந்தத் தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஜொனி மிதிவெடியைத் தயாரிப்பதில் மூழ்கிப்போயிருந்த தலைவர் எல்லோரையும் கூப்பிட்டார். பெண் போராளிகளை வேறாகவும் ஆண் போராளிகளை வேறாகவும் மும்மூன்று பேர் கொண்ட அணிகளாகப் பிரிந்தார். எதிரி வருகையைத் தெரியப்படுத்தக்கூடிய பொறிமுறை ஒன்றைக் கண்டுபிடிக்குமாறு சொல்லிவிட்டு, ஜொனி மிதிவெடி ஆய்விலே ஆழ்ந்து போனார்.
எல்லோரும் கண்டுபிடிப்பிலே இறங்கிவிட்டார்கள். காட்டுக்குள் அவர்களிடமிருந்தது நிலத்தைக் கொத்துகின்ற, மரத்தை வெட்டுகின்ற உபகரணங்களும், மீன் அடைக்கப்பட்டு வரும் தகரங்களும்தான். பேரோசை எழாத வகையில் தமது வேலை அமையவேண்டுமெனப் பெண் போராளிகள் முடிவெடுத்தனர். தளத்தில் தம்மை மறந்து சத்தம் போட்ட நேரங்களில் தரப்பட்டிருந்த ஒறுப்புக்களே அவர்களை இந்த முடிவெடுக்க வைத்தது.
சரி, வேலைமுடிந்தது. தலைவர் வந்து ஒவ வொன்றாகப் பார்த்தார். பெண் போராளிகளின் கண்டுபிடிப்பு ஒன்று அவரின் பாராட்டையும் முதற்பரிசையும் தட்டிக்கொண்டது.
இதுதான் அது, எதிரியைக் கண்டவுடன் காவலரணில் நிற்பவர் ஒரு நூலை இழுப்பார் அந்த நூல் தளத்தினுள்ளே உள்ள பொறுப்பாளரின் குடிலில் பொருத்தப்பட்டிருக்கும் வெற்றுத் தகரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சிறு கல்லைத் தகரத்தோடு மோதவைக்கும்போது சிறு ஒலி எழும்பும். சூழ்நிலைக்குப் பொருத்தமாக அமைந்த இந்தப் பொறிமுறையே தலைவரின் கவனத்தை ஈர்த்தது. உடனடியாகவே இது காடு முழுதும் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
இதைவிட, இன்னொரு பெண் போராளியின் கண்டுபிடிப்பு தலைவரை ரசிக்கவைத்தது. அவருக்கு நினைவு வரும்போதெல்லாம் சொல்லிச் சிரிக்குமளவுக்கு அவரைக்கவர்ந்தது. அந்தக் கண்டுபிடிப்பைச் செய்தவர் தனது காவல் நேரங்களில் தூங்கி, கண்டுபிடிக்கப்பட்டு, ஒறுப்புகளைச்செய்வது அடிக்கடி நிகழ்கின்ற சம்பவம். அவர் என்ன செய்தாரென்றால், உள்ளிருப்பவர்களை உஸார்ப்படுத்தும் பொறிமுறையை மட்டுமல்லாது, தன்னையும் உஸார்ப்படுத்தும் பொறி ஒன்றையும் செய்துவைத்திருந்ததே தலைவரின் சிரிப்புக்குக் காரணம். அவரது காவலரணை முன்புறமாகவோ, பின்புறமாகவோ நெருங்குபவர்களின் காலில் தட்டுப் படக்கூடிய விதத்தில் நிலமட்டத்திற்குச் சற்று உயரே உருமறைப்பில் நூல்கள் கட்டப்பட்டிருக்கும். யார் காலாவது பட்டு நூல் இழுபட, காவலரணினுள்ளே நூலின் மறுமுனையில் கட்டப்பட்டிருக்கும் தடியொன்று காவலில் நிற்பவருடைய முதுகில் அடிக்கும்.
தலைவரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. 'ஆள் தனக்குப் பொருத்தமான கண்டுபிடிப்பைச் செய்திருக்குது' என்று சொல்லிச் சிரித்தார். காட்டின் அமைதியைக் குலைக்காத விதத்தில் ஒவ வொரு பெண் போராளி அணியுமே சிறு தகரத்துண்டுகள், அணிகள், கற்கள், வெற்று ரவைக்கோதுகள், போத்தல் மூடிகள் என்பவற்றையே தம் வேலைக் குப் பயன்படுத்தியது அவரால் பாராட்டப்பட்டது.
நீந்தப்போன மீன்குஞ்சு
காட்டிலே ஒரு சண்டைக்கான தயார்ப்படுத்தல் நடந்தது. அந்தச் சண்டையில் கைக்குண்டுகளுடன் ஒருவர் போகவேண்டும். தன்னுடன் நின்ற அனைவரையும் குண்டெறியச் சொல்லிவிட்டுத் தலைவர் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர்களில் அதிக தூரத்திற்குக் குண்டெறிந்தது ஒரு பெண் போராளி. திறமையாகக் குண்டெறிந்த அந்தப் பெண் போராளிக்கு சண்டைக்கான வாய்ப்புக் கொடுத்து ஆண் போராளிகளின் சண்டை அணியுடன் அனுப்பினார்.
தலைவரைப் பொறுத்தவரையில் எப்போதுமே திறமைக்குத்தான் முதலிடம். திறமையாகச் செயற்படுவது யாராக இருந்தாலும், திறமை மழுங்கிப்போகாமல் உரிய வாய்ப்பைத் தந்து உயர்த்திவிடுவது அவரின் இயல்பு. அவரின் இயல்பைப் புரிந்துகொண்ட இவர்கள் சண்டைகளுக்கான வாய்ப்பைத் தருமாறு கேட்பதைவிட்டு, தம் திறமைகளை அதிகரிப்பதில் முனைப்புடன் ஈடுபட்டார்கள்.


உலகில் யார்க்கும் பணியாவீரம்
இந்திய இராணுவக் காலத்தில் மணலாற்றில் ஒரு சண்டை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. சண்டை செய்ய வேண்டிய இடம் மூன்று புறம் சிங்கள இராணுவத்தால் சூழப்பட்ட பகுதி. ஒரு அணி உள்ளே போய் அடிக்க, வெளியிலிருந்து வரக்கூடிய உதவிகளை இன்னொரு அணி தடுக்கவேண்டும்.
சண்டைக்குரிய அணியில் தலைவர் பெண் போராளிகளையும் இணைத்துவிட்டார். சண்டைக்குப் பொறுப்பானவர் பெண் போராளிகளைக் கூட்டிச் செல்லவிரும்பவில்லை. 'மூன்று பக்கமும் ஆமி நிக்கிற இடத்தில் பெண் பிள்ளைகளைக் கூட்டிப் போனால், திரும்பிவருவது எல்லாம் சிரமம்' என்று மறுத்த பொறுப்பாளர், தலைவரின் முடிவை மாற்ற முடியாமல் அரை மனதோடு பெண் போராளிகளை அழைத்துச் சென்றார். அவர்களை இரண்டு உதவியணிகளாகப் பிரித்துவிட்டார்.
பிரதான வீதியின் அப்புறம் திட்டமிட்ட சிங்களக் குடியிருப்புகள், இப்புறம் 100 மீற்றர் அளவில் காடு வெட்டி எரித்துத் துப்பரவாக்கப்பட்டிருந்தது. பிரதான வீதியால் நகரும் இராணுவ அணியுடன் இந்த 100 மீற்றர் வெட்டையைக் கடந்து ஓடித்தான் சண்டை பிடிக்கவேண்டும்.
உதவிக்கு வரும் இராணுவத்தினரைத் தடுக்கும் பொறுப்பு இவர்களிடம் விடப்பட்டது. வீதியில் போகும் இராணுவத்துடன் மோதப் போவது ஆண் போராளிகளெனினும் சண்டையைத் தொடக்குவதற்காக காலையிலிருந்து மதியம்வரை உருமறைப்பில் காத்திருந்து தமது பிறண் டுஆபு அடியுடன் சண்டையைத் தொடக்கியது இரண்டு பெண் போராளிகளே.
வெற்றிகரமாக நடந்த அந்தச் சண்டையில் இருபத்திரண்டு வு 56-11 களைக் கைப்பற்றிய தாக்குதல் அணியும் பெண் போராளிகளின் ஒரு உதவியணியும் ஆயுதங்களுடன் நகர்ந்துவிட, அவர்களுக்குக் காப்பு வழங்கியவாறு வீதியருகே நின்ற பெண் போராளிகளின் மற்றைய அணி, உதவிக்கு வந்து இராணுவ அணியொன்றை எதிர்கொண்டு மோதி, ஏராளமான ஸொட்கண் துப்பாக்கிகளைக் கைப்பற்றிக்கொண்டு தங்ககம் திரும்பியது.
இருபத்திரண்டு வு 56-11 என்பதைக் குறிக்கும் விதமாக ரூரூ சண்டை (வுறுழு வுறுழு) எனப் போராளிகளால் பேசப்பட்ட இச்சண்டையில் தமது பிறண் டுஆபு யை சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக அந்த இருவரும் தலைவரின் சிறப்பான பாராட்டைப் பெற்றுக்கொண்டனர்.
மறக்கமுடியாத நாளொன்று
இந்திய இராணுவத்திற்கும் தேசவிரோத சக்திகளுக்கும் நாம் முகம் கொடுத்துக்கொண்டிருந்த அந்த நெருக்கடியான நேரத்தில் ஒரு பெண் போராளிக்கு அன்று பிறந்தநாள். கருவாடும், பருப்பும், கஞ்சியுமாக வயிற்றுப்பாடு போய்க்கொண்டிருந்த நாட்களில் பிறந்தநாள், சாதாரண நாள் என்று என்ன வேறுபாடு காண முடியும்? ஆனால், தலைவர் அன்றைய நாளை அந்தப் போராளியின் வாழ் நாளிலேயே மறக்கமுடியாத நாளாக்கிவிட்டார்.
அன்று அவரைக்கூப்பிட்ட தலைவர், அவரிடம் உலுவிந்தம் பழங்களைக்கொடுத்து, "சாப்பிடுங்கோ" என்றார்.
எதிர்வு கூறப்படமுடியாத மனிதர் என்றும், கணிப்பிடப்பட முடியாத மனிதர் என்றும், இராணுவ hPதியாகவோ அரசியல் hPதியாகவோ யாராலுமே வெல்லப்படமுடியாத மனிதர் என்றும் உலகம் இன்று கருதுகின்ற தலைவர். அன்று தன் அரண்மனையான காட்டில் அமைக்கப்பட்டிருந்த ஒரு எளிய குடிலிலே அன்றைய நிலையில் தன்னால் உச்சமாகக் கொடுக்க இயன்றதைக் கொடுத்தார். காட்டிலே பழுத்துவிழுகின்ற அந்தச் சிறு உலுவிந்தம்பழம் அன்று தேசத் தலைவரின் பாசத்தோடு கொடுக்கப்பட்டதில் விலை மதிக்கப்படவே முடியாத பெரும் பரிசாயிற்று.
(இன்னும் வரும்)
மலைமகள்
Reply
#54
அமைதியும், பிரகாசமுமான முகத்துடன் புன்னகை தவழ, சாந்தமாகப் பேசும் இந்த மனிதனை எப்படி பயங்கரவாதி என இவர்களால் சித்தரிக்க இதுவரை காலமும் முடிந்தது' என அங்கலாய்க்கும் சாதாரண சிங்கள மக்களை இப்போது சந்திக்க முடிகிறது. பெரும்பாலான சிங்கள, ஆங்கில ஊடகங்கள் உருவாக்கிய இனவாதப் படிமங்களை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு சற்று அசைத்துச், சரித்து விட்டதென முதுபெரும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
இப்போதெல்லாம் சாதாரண சிங்கள மக்கள் உட்பட உண்மையான பௌத்தர்களான ஒரு சில பௌத்த மதகுருமாரும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அவர்களுடைய வாழ்வியல் துயரங்களை உணரவும் அவைபற்றி அலசவும் தொடங்கிவிட்டனர் என்பதையும் உணரமுடிகிறது எனவும் அவர் மேலும் சொன்னார். எனினும் இவர்களுடைய குரல்களுக்கு அச்சுப்பதிப்பு ஊடகங்களோ அன்றி இலத்திரனியல் ஊடகங்களோ முக்கியமான இடத்தைத் தருவதில்லை என்பது இன்னும் நடைமுறையில் உள்ள யதார்த்தமாகும்.
பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாட்டுக்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதன் மூலம் அமைதியும், நிம்மதியும் ஏற்பட வேண்டுமென அனைத்து இன மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற போதிலும் 'சிஹல உறுமய' போன்ற இனவாத அமைப்புக்கள் தமிழ், முஸ்லீம் இனங்களை அழிப்பதிலேயே கண்ணாக இருக்கின்றன. 'சிங்கள பௌத்த நாடு' என்னும் கோசம் இருக்கும்வரை இந்த தேசத்திற்கு விமோசனம் கிட்டப் போவதே இல்லை என சிறீலங்காவின் முன்னணி வர்த்தகப் பிரமுகரான தேசமான்ய லலித் கொத்தலாவல பேட்டி ஒன்றில் கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' கைச்சாத்திடப்பட்டு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் இனப்பிரச்சினைக்கான நகர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தடைகளும், நடைமுறை தடங்கல்களும் எழுகின்றபோதும், இரு பகுதியினருமே மிக நிதானமாக செயற்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் இவற்றிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் முகமாக சிங்கள கடும் கோட்பாட்டாளர்களின் எதிர்ப்புப் போராட்டம், சாதாரண மக்கள் மத்தியிலான விசமத்தனமான பிரச்சாரங்கள் என்பவற்றோடு, தமிழ் அமைப்புகள் எனப் பெயரிட்டு தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இரண்டொரு குழுக்களும் கை கோர்த்துள்ளனர். (தமிழ் மக்களின் எழுச்சி நிகழ்வுகளை கூலிக்கு படம் பிடித்தல், வீடியோ பதிவு செய்தல் போன்ற புலனாய்வுப் பணிகள் மூலம் மக்களை அச்சுறுத்துதல் இவர்களின் தற்போதைய பிரதான பணியாகியுள்ளது)
கடந்த மாதம் கொழும்பு கைட்பார்க் திடலில் நாடு தழுவிய புரிந்துணர்வு ஒப்பந்த எதிர்ப்பு கூட்டம், ஒன்று ஜே.வி.பியால் ஏற்படுத்தப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராகவும், வடக்குக் கிழக்கின் இடைக்கால நிர்வாகம் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிராகவும் நடத்தப்பட்ட இந்தக் கண்டனக் கூட்டத்தில் ஜே.வி.பியின் விமல் வீரவன்ச, மக்கள் ஐக்கிய முன்னணியின் தினேஸ் குணவர்தன, சுதந்திரக் கட்சியின் அநுரா பண்டாரநாயக்க ஆகியோரும் ஏனைய சிங்களக் கடும் போக்காளர்களும் கலந்துகொண்டிருந்தபோதும் பெரும்பாலான மக்கள் இக்கூட்டத்தினை நிராகரித்திருந்தனர்.
இதேபோன்று கிழக்கு மக்கள் அழைப்பு எனும் பெயரில் வாகன ஊர்வலமொன்று சேருவில தேரர் ஒருவரின் தலைமையில் கொழும்பில் நுழைவது பொலிசாரால் தடுக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு இணைப்பை இரத்துச் செய்யக் கோருவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், நுவரெலியா எனப்பல இடங்களிலும் நடந்து முடிந்த பொங்குதமிழ் எழுச்சிகளும், தமிழ் ஆசிரியர் சங்க எழுச்சி மகாநாடு, யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த சைவ எழுச்சி மகாநாடு என பல்வேறு மக்கள் எழுச்சி மகாநாடுகளிலும் தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தை எதிர்பார்க்கும் குரல்கள் வானளாவி ஒலிக்கின்றன. 1985 இல் முதற்தடவை ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தத்தின்போது சார்க் நாடுகளில் ஒன்றான புூட்டானின் தலைநகரம் திம்புவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் அர்த்தமுள்ள தீர்வுத்திட்டம் ஒன்றுக்காக நான்கு அடிப்படைகளைக் கொண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
2. தமிழ் மக்களுடைய பாரம்பரிய வாழ்விடம் தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
3. தமிழ்த் தேசியத்தினுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.
4. தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமத்துவமுடைய குடிமக்களாக அவர்கள் இந்தத் தீவில் வாழும் குடியுரிமை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதேயவையாகும்.
ஏறக்குறைய பதினேழு வருடங்களின் பின்பும் அதே கோரிக்கைகளையே தீர்வுத்திட்டம் உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கோரிக்கைகளைத் திரித்தும், தவறாகவும் பொருள் கூறும் முயற்சியிலேயே அன்றுதொட்டு சிங்கள கடும் கோட்பாட்டாளர்களான சம்பிக ரணவக்க, தசந்த குணதிலக போன்றோர் இன்றுவரை ஈடுபட்டு வருகின்றனர். இக்கோட்பாடுகள் ஒரு மாய தத்துவார்த்த விவாதம் (யுடிளவசயஉவ வடிநழசநவiஉயட யசபரஅநவெ) எனக் கூறும் இவர்கள் பிரித்தானியரிடமிருந்து 1948இல் சிறீலங்கா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சிறுபான்மை இனங்கள் மீது பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட இனவாத நடவடிக்கைகளின் மோசமான போக்கை, அது ஏற்படுத்திய துயரம் தரும் விளைவுகளை காலத்திற்கு காலம் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு திரித்து வந்துள்ளனர். மேலும், பிரித்தானியர் நாட்டைவிட்டு வெளியேறிய பின்பு ஒரு கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கும், மற்றயதை கீழே தள்ளுவதற்கும் இந்த பேரினவாத கோட்பாடுகளை இறுக்கமாக மாற்றியிருந்தனர். இதுவே இந்த தீவின் இரத்தப் பெருக்கிற்கும், துயரத்திற்கும் காரணமாயிருந்தன என்பது இன்று எவராலும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகிவிட்டன.
வெறும் அழுத்தக் குழுக்களாக செயற்பட்டு வந்த சிங்களக் கடும் கோட்பாட்டுக் குழுக்கள் இன்று பாராளுமன்றத்திலும் அங்கம் பெறும் அரசியற் கட்சிகளாகப் பரிணாமம் அடைந்துவிட்டன என்பது இன்றைய இனச்சிக்கலின் கூர்மைக்கு ஓர் அடையாளமாகும்.
1950களில் ஆரம்பித்து விட்ட நிலப்பறிப்பு இன்றுவரை தொடர்கிறது. 1985 இல் மணலாற்றில் கொக்கிளாய், நாயாறு, தென்னைமரவாடி ஆகிய இடங்களில் இருந்து ஒரே இரவில் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டவர்கள் இன்றுவரை தமது இடங்களுக்கு திரும்ப முடியாது அகதிகளாக அலைகின்றனர். 1946ம் ஆண்டின் குடிசன புள்ளி விபரங்களுக்கும், இன்றைய குடிசன புள்ளி விபரங்களுக்குமான இடைவெளியே வடக்கு கிழக்கு தாயகச் சிதைவுக்குப் போதுமான ஆதாரமாகும். எனவே 'தமிழர் தாயகம்' அங்கீகரிக்கப்படுவதே தமிழர்களின் சமத்துவமான வாழ்வுக்கான பாதையாக மாறும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
சிறுபான்மை இனங்களும் இலங்கைத்தீவில் கூடிவாழும் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியாத அல்லது விரும்பாத சிறீலங்காவின் அரசியல் சக்திகள் சுயநிர்ணய உரிமை வழங்குவது என்பது தனியரசுக்கு வழிகாட்டுவதாகும் என கூறுகிறார்கள். (ளுநடக னநவநசஅiயெவழைn றடைட டநயன வழ ளநியசயவந ளவயவந) சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தேசங்களின் ஐக்கியத்தில் உருவாகிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற மேற்குலக அனுபவங்கள், சமஸ்டி அமைப்புக்கள் இவர்களின் கவனத்துக்கு ஏன் எடுபடவில்லை என்னும் கேள்வி எழுகிறது. சமத்துவமான வாழ்நிலை உருவாக்கமே உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தும்.
மாங்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு சட்டவிரோதமான ஒரு செயல் எனக் குறிப்பிட்டிருந்தார் சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி திரு. ஜெகத் குணவர்தனா. இவரின் கூற்று பெரும்பாலான சிங்களப் புத்திஜீவிகளின் மனப்பாங்கின் தெளிப்பாக கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். இது சிறீலங்காவின் அரசியல் அமைப்பும் அதன் சட்ட திட்டங்களுமே இலங்கைத்தீவில் நடைமுறையில் இருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பின் விளைவாகும். இந்த சட்டங்களும், இதன் அமுலாக்கமும் இந்தத் தீவின் மக்களிற் பலரை துன்பத்துக்குள்ளாக்குவதை இவர்கள் அறிந்துகொள்ளவில்லை அல்லது அறிந்துகொள்ள விரும்பவில்லை என்பதையே இது குறித்து நிற்கிறது. இலங்கைத்தீவின் ஒரு பகுதியில் வேறொரு அரசுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு (ஞரயளளல ளுவயவந) பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிர்வாகம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் சூழ்நிலையிலேயே சுமூகமான இணக்கப்பாடும் நிரந்தரத் தீh வும் எட்டப்படக்கூடும்.
ஆறு மாதங்களில் 'பயங்கரவாதத்தை' ஒடுக்குவதற்காக, பிரிகேடியர் வீரதுங்கவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் முயற்சி வடக்குக் கிழக்கையும் கடந்து சிறீலங்காவின் தலைநகரையும் எட்டிவிட்ட பின்பும் அடக்கப்படவில்லை என்பது பிரச்சினை, பிரச்சினையின் தன்மையில் இருந்து அணுகப்படவில்லை என்பதை கோடி காட்டி நிற்கிறது.
புரிந்துணர்வு உடன் படிக்கையில் இணக்கப்பாடு காணப்பட்ட பல விடயங்கள் இன்றும் நடைமுறைக்கு வரவில்லை. இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதுடன், இந்த உடன்படிக்கை தொடர்பான விடயங்களை சிங்கள மக்கள் மத்தியிலும் தெளிவு படுத்துவது எமது பிரதான பணியாக உள்ளது என தமிழர் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வம் அடைக்கலநாதன் வன்னி விஜயத்தின் போது கூறியிருந்தார்.
'சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடாக தன்னை கட்டிவளர்க்கத் தவறியதால், இரத்தம் தோய்ந்த இனமோதல்களை அது காண நேர்ந்தது. இவ வாறான புறக்கணிப்புகளாலேயே கொடூரமான பின் விளைவுகள் ஏற்பட்டன. எமது நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களில் ஒன்று ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தது. இது உலகின் மிகப்பெரும் ஆயுதப் போராக வளர்ச்சி பெற்றது' என சிறீலங்கா ஜனாதிபதி புதுடில்லியில் விமான விபத்தில் இறந்த இந்திய அமைச்சர் மாதவரா சிந்தியாவின் ஒரு வருட நினைவுப் பேருரையில் குறிப்பிட்டதை அவரே குழப்பங்கள் இன்றி புரிந்துகொள்ள வேண்டும். இவ வாறன புரிதல்களே இந்தத் தீவின் நிரந்தர சமாதானத்துக்கு வழிகாட்டும், ஒளியுூட்டும்.

அன்ரன் அன்பழகன்
Reply
#55
1961ல் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகத்தின் போது எடுக்கப்பட்ட படம்
எப்போதும் உன்னதமான போராட்டங்களுக்குத் தயாரானவர்களாய்
தமிழ் மக்கள் இருந்துள்ளனர் என்பதை வரலாறு எமக்குக் கூறுகின்றது, நீண்ட
காலமாய் பல்வேறு எதிரிகளினாலும் அடக்கி ஒடுக்கப்பட்டுவரும்
அப்பாவித் தமிழ் மக்களின் பக்கம் நின்று நிதானமாகவும்
பொறுப்புடனும் வரலாற்றை எடைபோடுதலே வளர்ச்சிக்கான
முன் நிபந்தனைகளில் ஒன்றாகும்.

சமஸ்டி அரசமைப்பு முறையானது ஓர் அபாயகரமான புூதமென்பதே பொதுவாக ஆசிய அரசுகளின் எண்ணம். இந்தியாவில் இப்போது நிலவுவது சமஸ்டி முறையல்ல. அரைச் சமஸ்டி முறைதான். பிரித்தானியர் தமது ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவை வைத்திருந்தபோது அங்கு அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தது சமஸ்டி முறையல்ல. அது ஒரு புவியியல் நிர்வாக அலகு முறைதான். சீனாவும் சமஸ்டி முறையைக் கண்டு அஞ்சும் தேசம். குழும உணர்வு மேலோங்கிய ஆசிய சமூகங்களில் அரச அதிகாரம் பெற்ற பெரிய குழுமம் சமஸ்டி முறையை நிராகரிப்பதன் மூலமே 'தேச' ஐக்கியத்தை கட்டிக்காக்கலாம் எனப் பிழையாக எடைபோடுகின றது. இதில் இலங்கையும் ஒன்று.
ஆசியாவில் நிலவும் சமஸ்டி எதிர்ப்புச் சிந்தனை பற்றி பிறிதொரு கட்டுரையில் விரிவாகப் பார்போம்.
சமஸ்டிக் கோரிக்கையை முன் வைத்து அதனடிப்படையில் சமஸ்டிக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தோற்றுவித்த முதலாவது ஆசியநாடு இலங்கைதான். 1949ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் சமஸ்டிக் கட்சி உதயமானது.
பிரித்தானிய அரசியற் பாரம்பரியத்தில் சமஸ்டி எதிர்ப்புக் கண்ணோட்டமே அதிகமுண்டு. ஆதலால் அதன் அடிமை நாடுகளாக இருந்த ஆசிய அரசத்தலைவர்களிடமும் அச்சிந்தனை இலகுவாக வேர் பதித்து விட்டது. சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை ஆசியாவில் முதலிற் கொண்டிருந்த அரசியல்வாதி என்ற பெருமை எஸ்.டபிள்யுூ.ஆர்.டி பண்டாரநாயக்காவிற்கு உண்டு. இவர் தலைவனாக ஆட்சியாளனாக வரமுன் இதனைக் கூறினாரே தவிர தலைவனானதும், ஆட்சியாளனானதும் அச்சிந்தனையை வசதியாகக் கைவிடவே விரும்பினார்.
ஆனால் பிரித்தானிய அரசியல் மரபுக்கு வெளியே அமெரிக்க மிசனின் சிந்தனை மரபிற்குட்பட்டு வளர்ந்த எஸ்.ஜே.பி. செல்வநாயகத்திடம் சமஸ்டி முறைபற்றிய சிந்தனை இலகுவிற் பதியமுடிந்தது. அமெரிக்கா சமஸ்டி முறையை கொண்ட ஒரு தேசம் என்பதால் அமெரிக்க மிசனின் பாரம்பரியத்திற்கூடாக செல்வநாயகத்திடம் இச்சிந்தனை இலகுவாக வேர்விட முடிந்தது.
இன, மத, மொழி மற்றும் குழும உணர்வுகளினாற் குரோத முற்றிருக்கும் ஆசிய சமூகங்களின் மத்தியில் சமஸ்டி என்ற சொல்லின் பெயரால் ஒரு கட்சி தோன்றியமை என்பது ஆசிய சமூக வளர்ச்சிக்கு ஏதுவான ஒரு சிறந்த முன்னுதாரணமே. இணைக்குழும உணர்வு மேலோங்கிய ஆசியாவில், இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈழத் தமிழ் பேசும் மக்கள் கிறீஸ்தவரான செல்வநாயகத்தை ஆயுட் காலத் தலைவராக ஏற்றுப் போற்றியும் கொண்டமை கூட ஒரு சிறந்த முன்னுதாரணமே.
சமஸ்டிக் கோரிக்கையை அடைந்ததற்கான வழிமுறையாக அகிம்சைப் போராட்டத்தை இவர் தேர்ந்தெடுத்தார். இந்தியாவிற்கு மிக அருகே அமைவிடத்தைக்கொண்ட தீவென்ற வகையில் இந்தியாவின் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த அகிம்சை முறை இலங்கைக்கும் இலகுவாகப் பரவியது. ஆதலால் அகிம்சை வழிமுறையில் சமஸ்டி அரசமைப்பை ஸ்தாபிப்பது என்ற இலட்சியம் சமஸ்டிக் கட்சியால் (தமிழரசுக் கட்சி) முன் வைக்கப்பட்டது. இந்த அகிம்சைப் போராட்ட வழிமுறை எப்படி அமைந்திருந்தது என்பதை பரிசீலனை செய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம். குறிப்பாக அகிம்சைப் போராட்டக் காலம என வர்ணிக்கப்படத்தக்க 1956ஆம் ஆண்டிலிருந்து 1977ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியே இங்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகும்.
ஈழத்தமிழர் ஒரு புள்ளிவிபரக் கொத்தல்ல, அவர்கள் நீண்ட வரலாற்றில் திரண்டெழுந்தது ஒரு வஸ்து, ஒரு வினோதமான இரசாயனக்கலவை. ஈழத்தமிழரை விளங்க முற்பட்ட பலரும் தத்தமது நோக்கு நிலையில் நின்றே யானை பார்த்த குருடனைப்போல பார்த்தனர். பிரித்தானியரின் பார்வையில் ஈழத்தமிழர் 'விசுவாசம் மிக்க சேவகர்' என்பது. இரண்டு கிலோ மீற்றர் நீளமும் இரண்டு கிலோ மீற்றர் அகலமும் கொண்ட யாழ்ப்பாணத்தாரின் தீர்மானமல்ல தமிழரின் தீர்மானம் என்று ரஜீவ காந்தி மீற்றர் கணக்கில் தமிழரை அளக்க முற்பட்டார். தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான இனப்பிரச்சனை இட்டு நிரப்பப்பட முடியாததும், விளங்கிக் கொள்ள முடியாததுமான அதளபாதாள வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்ற பொருள் பட ஜே. என். டிக்ஸித் கூறினார். ஈழத்தமிழர் புதிரும் வினோதமுமான மக்களென்பது டிக்ஸித்திற்குத் தெரிந்துள்ளது. ஈழத்தமிழரை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகள் என றோகண விஜயவீர கூறினார்.
இப்படி பலராலும் பலவாகக் கூறப்படும், மதிப்பிடப்படும் ஈழத்தமிழரின் 20ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றை சிறப்பாக ஆராய்ந்து எழுதினால் மட்டுமே தமிழ் மக்களைப் புரிந்து கொள்ளுதல் சாத்தியப்படும். தமிழர் தமது இருபதாம் நுற்றாண்டு வரலாற்றை ஆய்ந்தறிந்து புரிந்து கொள்ளத் தவறுவார்களேயானால் தமக்குரிய 21ம் நூற்றாண்டு வரலாற்றை சிறப்புற ஒழுங்கமைக்க முடியாதவர்களாவார்கள். எனவே தமது 20ஆம் நூற்றாண்டு வரலாற்றைத் தமிழர் மிகச்சிரத்தை எடுத்து ஆராய்ந்து எழுத வேண்டும். பிற இனங்களுக்கு மட்டுமல்ல தமிழன் தனக்குத்தானே புரியாத புதிராயுமுள்ளான்.
மேலோட்டமான இச்சிறு கட்டுரையில், 20ஆம் நூற்றாண்டு ஈழத்தமிழர் கடந்து வந்த ஒரு போராட்ட முறையான அகிம்சைப் போராட்ட முறையை மதிப்பிடுவதற்கான ஒரு சிறு முற்குறிப்பை மட்டும் குறிப்பிடலாம் எனத் தோன்றுகின்றது.
சமஸ்டிக் கோரிக்கை ஆசியாவின் அன்றைய சூழலிற் சிறப்பானது என்பத}ற் சந்தேகமில்லை. ஆனால் அந்த இலட்சியத்தை அடைவதற்கான அகிம்சைப் போராட்டமுறை எவ வளவு தூரம் சிறப்பாகப் பின்பற்றப்பட்டது என்பது கேள்விக்குரியதே. காந்தியின் அகிம்சைப் போராட்டத்தோடு ஈழத்தில் நிகழ்ந்திருந்த அகிம்சைப் போராட்டங்களை ஒருபோதும் ஒப்பிட முடியாது.
சமஸ்டிக் கட்சியின் முதலாவது பகிஸ்கரிப்புப் போராட்டம் 1950ஆம் ஆண்டு சோல்பரியின் யாழ் விஜயத்திற்கு எதிரானது. இது பெரிதும் கோரிக்கையின்வானதே. மிகச் சிறு அளவிற்தான் இதன் வெற்றி அமைந்தது. இலங்கையில் நிகழ்ந்த முதலாவது கறுப்புக் கொடிப் போராட்டம் பிரதமராயிருந்த கொத்தலாவலையின் 1954ஆம் ஆண்டு யாழ் விஜயத்திற்கு எதிரானது. இக் கறுப்புக் கொடிப் போராட்டம் சில நிமிடங்கள் நீடித்தது. இப்படிப்பட்ட கறுப்புக் கொடிப்போராட்டம், பகிஸ்கரிப்புப் போராட்டம். கதவடைப்புப் போராட்டம் எனக் சிறு சிறு போராட்டங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மூன்று அகிம்சைப் போராட்டங்களையே முக்கியமானவையாகக் கொள்ளமுடியும். அதில் முதலாவது 1956 யுூன் 5ஆம் திகதி தனிச் சிங்கள மசோதாவிற்கெதிரான சமஸ்டிக் கட்சியின் காலிமுகத்திடற் சத்தியாக்கிரகம். அன்று காலை காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் ஆரம்பமானது. சிங்களக் குண்டர்களின் தாக்குதல்களினால் சத்தியாக்கிரகம் சில மணித்தியாலங்களுடன் கைவிடப்பட்டது. இதுபற்றி அ.அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறுகிறார். "காடையர் வீசிய கல்லினால் எனது நெற்றி பிளந்தது. எத்தனையோ தொண்டர்கள் காயமுற்றனர். பகல் ஒரு மணிக்கு தலைவர்கள் எல்லோரும் ஆலோசித்துச் சத்தியாகிரகத்தை நிறுத்தித் தொண்டர்களை திருப்பி அனுப்ப ஏற்பாடுசெய்தனர்."
அடுத்து இரண்டாவது பெரிய அகிம்சைப் போராட்டம் 'திருமலை யாத்திரை' இது 1956 ஓகஸ்ட் 6ஆம் திகதி தொடங்கி 16ஆம் திகதி வரையான பத்து நாட்கள் வரை ந்டித்தது யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து கட்சித் தொண்டர்களும் மக்களுமெனத் திரண்டு திருமலை நோக்கிப் பாதயாத்திரை புறப்பட்டனர். மக்கள் மத்தியில் இதற்கு நல்லாதரவு இருந்தது. இவற்றில் மக்கள் விடுதலை உணர்வையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். இந்தப் பாதயாத்திரையின் முடிவில் பண்டாரநாயக்காவிற்கு ஒரு வருட அவகாசம் அளிக்கும் திருமலைத் தீர்மானத்துடன் இப்போராட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.
அடுத்து 1961ஆம் ஆண்டு நிகழ்த 58 நாட்கள் நீடித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இலங்கையில் அதிக நாட்கள் நீடித்த மிகப்பெரும் அகிம்சைப் போராட்டம் இதுவே. இதுவே சமஸ்டிக் கட்சியின் ஆகப்பெரிய அகிம்சைப் போராட்டமும் ஆகும். உண்மையான அர்த்தத்தில் இதுவே சமஸ்டிக் கட்சியின் இறுதி அகிம்சைப் போராட்டமுமாகும். 58 நாட்கள் வரை நீடித்த சத்தியாக்கிரகத்தை பிரதமாராயிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா பொருட்படுத்தவில்லை. இதுபற்றி காவலூர் நவரத்தினம் பிற்காலத்தில் என்னிடம் தெரிவித்திருந்த ஒரு கருத்தை கூறுவது பொருந்தும்.
"போராட்டம் பயனின்றி நீடித்துக் கொண்டு போனது. எப்படிப் போராட்டத்தைக் கைவிடுவதென்று தெரியவில்லை. அந்நிலையில் சட்டவிரோத தபால் சேவையை ஆரம்பிப்பதன் மூலம் அரசு நேரடியான தலையீட்டைச் செய்து போராட்டத்தை வெற்றிகரமாக நிறுத்த வழிசமைக்கலாம் என எண்ணி சட்டவிரோத தபாற் சேவையை ஆரம்பித்தோம். எதிர்பார்த்தபடியே அரசு போராட்டத்தை முடித்து வைத்தது." என்று நீண்ட விளக்கத்துடன் கூறினார்.
அவசரகாலச் சட்டப் பிரகடனம், இராணுவத் தலையீடு என்பவற்றால் 1961ஆம்ஆண்டு சத்தியாக்கிரகம் முற்றுப்பெற்றது. அதன் பின்பு அப்படி ஒரு போராட்டத்தை கட்சி ஒரு போதும் சிந்திக்கவில்லை. இவ வாறாக அவர்கள் கூறிய அகிம்சைப் போராட்டம் கைவிடப்பட்ட 15 ஆண்டுகளின் பின்னர் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்னமாத்தின் மூலம் சமஸ்டிக் கோரிக்கைக்குப் பதிலாக தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான போராட்ட வழிமுறையும் அகிம்சை என்றே கூறினராயினும் அவ வழியிற் செயற்பாடுகளை குறிப்பிடக்கூடியளவிற்கு முன்னெடுக்வில்லை.
அப்படியாயின் அகிம்சைப் போராட்டம் தோல்வி கண்டமைக்குரிய காரணங்கள் யாவை?
1) அகிம்சைப் போராட்டங்கள் முழு அளவில் முன்னெடுக்கப்படவில்லை.
2) அகிம்சைப் போராட்டங்கள் எதனாலும் சிங்கள அரசின் பொருளாதாரத்தைப் பாதிக்கமுடியவில்லை என்பதுடன் ஒருபோதும் சிங்கள அரச இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியவில்லை. அதாவது இவற்றால் சிங்கள அரசிற்கு பாதிப்பேற்படவில்லை. ஏனெனில் எமது அகிம்சைப் போராட்டம் அரசைப் பாதிக்கக் கூடிய பொருளாதாரப் பரிமாணத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் எமது பொருளாதார வாழ்வுதான் தெற்கிற் தங்கு நிலையைக் கொண்டிருந்தது. மலையகத் தமிழர் இந்த அகிம்சைப் போராட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் நிலைமை வேறுவிதமாய் அமைந்திருக்கும். ஏனெனில் அவர்கள் ஒரு பொருளாதாரச் சக்தி.
3) 1977ஆம் ஆண்டு வரை தமிழ்த்தலைவர்களில் எவரும் முழுநேர அரசியற் தலைவர்களாக இருந்ததில்லை. பகுதி நேரத்தலைவர்களாக இருந்து கொண்டு ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவிதியை நிர்ணயிக்கலாம் என்று எண்ணியதும், அகிம்சைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கலாமென்று எண்ணியதும் வேடிக்கையானது. 1977ஆம் ஆண்டுப் பொதுதேர்தலின் பின்பு எதிர்கட்சித் தலைவராய் இருப்பவர் வேறுதொழில் புரிய முடியாதென்ற உத்தியோகபுூர்வ நிர்ப்பந்தத்தின் பின்னணியில் அ.அமிர்தலிங்கம் முழுநேரத் தலைவரானார். இதற்கு அப்பால் இந்த அகிம்சைப் போராட்டக்காலம் முழுவதும் பகுதிநேரத் தலைவர்களின் காலமே.
4) தமிழ்த் தலைவர்களில் எவரும் சில மாதக்கணகான காலமே சிறையிலிருந்துள்ளனர். வருடக் கணக்கான ஆண்டுகளுக்கு அவர்களிற்கான சிறையை எதிரியால் நீடிக்க முடியாதளவிற்கே இவர்களது அகிம்சைப் போராட்டங்களின் பருமன் அமைந்திருந்தது.
5) எதிரி அகிம்சைப் போராட்டங்களை அற்பமாய் எடுக்கக்கூடியளவிற்கே போராட்டங்களின் தன்மைகள் காணப்பட்டன.
தமிழ் மக்களின் பிரச்சினையை சூடுதணியாது வைத்திருந்ததற்கும் அப்பால், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் உணர்வை தூண்ட உதவியதற்கும் அப்பால் எமது அகிம்சைப் போராட்டம் பெரிதும் முன்னேற முடியாது போனது. எனவே இந்த அகிம்சைப் போராட்டத் தோல்வியில் எதிரிக்கு ஒரு பக்கம் பங்கு இருக்கின்ற போதிலும் மறுபக்கப் பங்கு இப்போராட்டத்தை முன்னெடுத்த தலைமைக்குரியது.இதனை உணர்ச்சிவசப்பட்டு வெறும் பற்றுப் பாசங்களுக்குள்ளாற் பார்க்காது அறிவுபுூர்வமாகச் சரிவர எடைபோட வேண்டியதே வருங்கால வளர்ச்சிகளுக்குமான அத்திவாரமாகும்.
எப்போதும் உன்னதமான போராட்டங்களுக்குத் தயாரானவர்களாய் தமிழ் மக்கள் இருந்துள்ளனர் என்பதை வரலாறு எமக்குக் கூறுகின்றது, நீண்ட காலமாய் பல்வேறு எதிரிகளினாலும் அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் அப்பாவித் தமிழ் மக்களின் பக்கம் நின்று நிதானமாகவும் பொறுப்புடனும் வரலாற்றை எடைபோடுதலே வளர்ச்சிக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாகும்.

மு. திருநாவுக்கரசு
Reply
#56
யுத்தம் மனப்பாதிப்புகளை நிச்சயம் அதிகரிக்கத்தான் செய்யும் என்பதில் எவருக்குமே கருத்து முரண்பாடு இருக்க முடியாது. ஆனால் இந்த மனப்பாதிப்புகள் சுயமரியாதையில் தீவிரபற்றுள்ள தமிழனை அடுத்தவருக்குப் பாரமாக, அடையாளத்தையே தொலைத்தவனாக அவனை மாற்றுவதற்குப் பதிலாக அல்லது மேலை நாடுகளில் உள்ளது போல் கூப்பிடு தூரத்திற்கு ஒரு உள் ஆலோசனை நிலையங்களை உருவாக்குவதாக இருப்பதற்குப் பதிலாக பிடிவாதமும், பழிவாங்கும் உணர்வும், உரிமைக்கான உத்வேகமும் பெற்ற சமூகத்தையே உருவாக்கும். உருவாக்கிக்கொண்டும் இருக்கிறது என்பதே இத்தனைகால உயிரிழப்புகள் உடமை இழப்புகள், உரிமை மறுப்புகள் மத்தியிலும் சோர்வடையாத உரிமைக்குரல்களும், எதிர்ப்புணர்வும்.
"


மனித சமூகத்தின் இத்தனை நூற்றாண்டு கால வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் மனித சிந்தனையைவிடவும் மனவெழுச்சிகளே கூடிய பங்காற்றியிருக்கின்றன. ஒரு செயலில் காரண காரிய தொடர்பறிந்து அதன் வழி செயலாற்றும் அறிவுத்திறனை விடவும் மனிதரிடம் இயல்பாகவே நிலை கொண்டிருக்கும் இயல்புூக்கங்களதும் அதன்வழி உருவாகும் மனவெழுச்சிகளதும் முதிர்ச்சித்தன்மையும் சமநிலையுமே பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்ற உளவியலாளர்களின் கருத்தை அறிவியல் சமூகம் ஏற்றுக்கொண்டு பலகாலமாகிவிட்டது. இந்தவகையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாகப் போரை வாழ்வியலாக ஏற்று இன்றும் சோர்வடையாமல் போராடிவரும் தமிழ்ச்சமூகத்தின் போராட்ட உணர்வுக்கும் உறுதிக்கும் மனவெழுச்சிகள் எத்துணை பங்காற்றியிருக்கின்றன என்பது தொடர்பான சில நேரடி அனுபவப் பகிர்வுகள் உங்கள் முன் கட்டுரையாக வடிவம் பெற்றிருக்கின்றன.
மனித நடத்தைக் கோலங்களை ஆராயப் புகுந்தவர்கள் இந்நடத்தைக்கோலங்கள் மனிதனிடம் இயல்பாய் அமைந்திருக்கும் மனநிலைகளான ஆராய்தல், உணவு தேடுதல், குழந்தை பெறுதல், போரிடுதல் போன்ற இயல்புூக்கங்களதும் (ஐளெவiவெ) மனிதனிடம் பிறப்பிலிருந்தே காணப்படும் கோபம், வியப்பு, வெறுப்பு, அன்பு, பாசம், மகிழ்ச்சி போன்ற மனவெழுச்சிகளதும் (நுஅழவழைளெ) உந்துதலினால் ஏற்படுபவை என கூறுகின்றனர். இவை குழந்தைப் பருவம் முதற்கொண்டு மனிதனின் ஒவ வொரு வளர்ச்சிப்படி நிலைகளுடனும் பின்னிப்பிணைந்து சூழலுக்கேற்ப மாறுபட்டு திரிபடைந்தோ, அல்லது சிதைந்தோ அதுவுமன்றி செப்பனிடப்பட்டோ, கூர்ப்படைந்தோ தீவிர விருப்பார்வங்களாக (ளுநவெiஅநவெள) மாறுகின்றன. எடுத்துக்காட்டாக தம்மை சூழவுள்ள பொருட்களைத் தோண்டித்துருவி ஆராயும் இயல்புூக்கமும், அப்பொருள் பார்த்து ஏற்படும் வியப்பு என்ற மனவெழுச்சியும் குழந்தைப்பருவ நடத்தைக்கோலங்களில் பெரிதும் காணப்படுபவை. குடும்ப உறவுகளும், சூழலும் கொடுக்கப்படும் கல்வி வாய்ப்பும் சரிவர பொருந்தி அமையும் போது இந்த ஆராய்வுூக்கம் செப்பனிடப்பட்டு, பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு ஏதுவாக மாறும். அது போன்றே வளரிளம் பருவத்தை ஆக்கிரமித்திருக்கும் பாலுணர்வுூக்கத்தின் வழி ஏற்படும் உணர்ச்சி வேகமானது தாய்மை அல்லது தந்தைமை நிலையில் குழந்தை பெறும் ஊக்கமாக மாறி அதன் வழி குழந்தை மீதான அன்பு, பாசம், பரிவு போன்ற மனவெழுச்சிகளை மேலோங்கச் செய்கின்றது.
மனவெழுச்சிகளும் மனவுணர்ச்சிகளும்
மனித செயற்பாடுகளில் பெரும்பங்கு மனவெழுச்சிகளின் உந்துதலினால் ஏற்படுபவை. ஆரம்பகட்டங்களில் மனித சிந்தனையின் பங்கு குறைந்தளவிலேயே இருக்கும். மழலை மொழியில் முதன் முதல் தன் தாயை அழைக்கும் குழந்தையை வாரி அணைத்து கொஞ்சும் தாய், பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற தன் பிள்ளையை தோள்மீது வைத்து கூத்தாடும் தந்தை, கொடுத்த வேலையைத் திறம்படச் செய்துமுடித்த பணியாளனை முதுகில்தட்டி மனதாரப் பாராட்டுத் தெரிவிக்கும் ஒரு மேலதிகாரி இவைகள் மனவெழுச்சிகளின் உந்துதல் தரும் வெளிப்பாடுகள். மனதிற்கு மகிழ்ச்சி தருபவற்றைச் செய்யத் தூண்டுவதும், அச்சமும் அருவருப்பும் தருபவற்றை ஒதுக்கித் தள்ளுவதும், இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டைத் தூண்டுவதும், ஓவியம், சிற்பம் போன்ற கலைகளில் தம்மை மறந்து இலயிக்கச் செய்வதும் இந்த மனவெழுச்சிகளின் உந்துதல் செய்யும் காரியங்களே. சாதாரண நிலைகளில் தன்னால் செய்துமுடிக்கமுடியாது என்று நினைத்திருப்பவற்றை நெருக்கடியான நிலைகளில் செய்து முடிப்பதற்குத் தேவையான துணிவும் கூடஇந்த மனவெழுச்சிகளின் வழி ஏற்பட்டவையே. எடுத்துக்காட்டாக 4 அடி உயரத்தைப்பாய்ந்து கடக்க முடியாது என நினைத்திருக்கும் ஒருவனுக்கு இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பும் பொருட்டு மதிலேறிப்பாயும் வலுவும், இருளுக்குப் பயந்து அம்மாவின் துணை தேடும் பிள்ளைக்கு நடுநிசியில் காவற் கடமையில் ஈடுபடும் துணிவும் அறிவுத்திறனால் ஏற்பட்டவை அல்ல. இவை மனவெழுச்சிகளின் துணைகொண்டு சாதிக்கப்படுபவை.
இந்த மனவெழுச்சிகளை மனிதனிடம் எப்போதும் காணப்படும் சாதாரண மனவுணர்ச்சிகளுடன் (குநநடiபௌ) குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. எந்தவொரு எதிர்பார்ப்புகளும் இன்றி சமைப்பது தனது கடமை என்ற சாதாரண மனவுணர்ச்சியில் இருக்கும் மனைவிக்கோ அல்லது மகிழ்வற்ற சூழலில் அடுத்த வீட்டில் கடன்வாங்கி சமைத்து வைக்கும் தாய்க்கோ சாப்பாட்டின் சுவை தொடர்பான பாராட்டுரைகள் எந்தவொரு மனவெழுச்சியையும் தருவதில்லை. மாறாக தனது சமையலை மற்றவர் ரசித்து உண்ணவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதற்குள் நன்றாகச் சமைத்துக்கொடுத்துவிட்டு கணவனின் முகம் பார்த்து நிற்கும் மனைவிக்கு கணவனது பாராட்டுரைகள் அதீத மகிழ்ச்சி என்ற மனவெழுச்சியைத்தோற்றுவித்து வாழ்வு தொடர்பான பிடிப்பை மேலும் கூட்டும். சாதாரணமனவுணர்ச்சிகளின் மேலோங்கிய தன்மையே மனவெழுச்சிகளாகும். இருட்டுக்குப் பயப்படுதல் என்ற சாதாரண மனவுணர்ச்சி போராட்ட சூழல் ஒன்றில் குண்டுவீச்சு விமானங்களைக் கண்டதும் தீவிர நடுக்கமாகி சிலசமயம் உடனடி மருத்துவ கவனிப்புக்குக்கொண்டு செல்லும் அதேசமயம் இன்னொருவருக்கோ ஆராய்வுூக்கமாகி விமான ஓட்டங்களை அண்ணாந்து பார்க்கும் அதிக ஆவலாக மாறும்.
தன்மீது தான் கொண்டிருக்கும் பிணைப்பு
இயல்புூக்கங்களும் மனவெழுச்சிகளும் மனிதன் வாழும் சூழல், அவனது குடும்ப உறவுகளின் தன்மை, அவன் பெறும் அறிவுத்திறன் என்பவற்றின் தாக்கங்களுக்குட்பட்டு நாளடைவில் விருப்பார்வமாக (ளுநவெiஅநவெள) மாறுகின்றது. இவை விருப்பு, வெறுப்பு என்ற இருவகையில் தோன்றுகின்றன. சமயப் பற்று, சமூகப்பற்று, தேசப்பற்று போன்றவை சூழலின் நேர்முகத் தாக்கங்கள் வழியாகவும் களவு, பொய், கொலைகளில் ஈடுபாடு, விரக்தி, ஏமாற்றம் போன்றவை எதிர்மறைத்தாக்கங்கள் வழியாகவும் ஏற்படுகின்றன.
மனிதனிடம் காணப்படும் விருப்பார்வங்கள் அனைத்திலும் முதன்மையானது. ஒருவன் தன்மீது தான்கொண்டிருக்கும் விருப்பமே என்பதைப் பல உளவியல் ஆய்வுகளும், நேரடி அனுபவங்களும் உணர்த்தியிருக்கின்றன. ஒவ வொரு மனித மனமும் மற்றவர் தம்மை மதிக்கவேண்டும் என்பதற்காக, மற்றவரிடம் பாராட்டுப் பெறவேண்டும் என்பதற்காக அதிகம் உழைக்கக்கூடியதொன்று. இத்தகைய மனப்போக்கு சில சமயம் தன்னைதனக்காக, தனது திறமைகளுக்காக மதிக்கவேண்டும் அல்லது நேசிக்கவேண்டும் என்ற யதார்த்தத்திற்கும் அப்பால் சென்று தனது அழகுக்காக, பேச்சுத்திறன் அந்தஸ்து, பதவி, செல்வம் போன்ற ஏதாவது ஒன்றால் மற்றவரின் மதிப்பைப் பெறவிரும்பும் மனோபாவத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது.
தமிழ்ச்சமூகத்தைப் பொறுத்தவரை இந்தச் சுயபற்று என்பது ஏனையவர்களை விடச்சற்று அதிகப்படியானது என்றுதான் சொல்லவேண்டும். காலத்தால் முந்திய குடி என்பதிலும், தொன்மை வாய்ந்த மொழியைப் பேசுபவன் என்ற வகையிலும், தொன்மை வாய்ந்த கலாச்சாரத்திற்கு உரித்துடையவன் என்ற வகையிலும் மட்டுமன்றி தமது நீண்டகால வீரம் செறிந்த வரலாறுக்காக, தான் படித்தவன் என்பதற்காக, அடுத்தவர்களுக்குத் தலைமை தாங்கியே பழக்கப்பட்டவன் என்பதற்கான அனைத்து உணர்வுகளும் ஒவ வொரு தமிழனிடமும் ஊறிக்கிடக்கிறது. இது அவர்களது நடையுடை பாவனை, சிந்தனை அனைத்திலும் தெளிவாகக் காணக்கூடிய ஒரு அம்சமாகும்.
முக்கியமான விடயங்களைப் பேசிக்கொண்டிருக்கும் சமயங்களில் தன் மீதான கவனிப்பு விடுபட்டதை உணர்ந்து மெல்லச் சுரண்டி கவனத்தை தன்மீது திருப்ப எத்தனிக்கும் குழந்தை, வகுப்பில் முதற் பிள்ளையாக வரவேண்டும் என்பதற்காக கஸ்ரப்பட்டு படிக்கும் மாணவன், அதிகாரியின் பாராட்டுதலுக்காக விழுந்து விழுந்து உழைக்கும் பணியாளர் - இவர்கள் எங்குமே காணப்படக்கூடிய எடுத்துக்காட்டுகள். தன்மீது தான் கொண்டிருக்கும் பற்று நம்பத்தகாத எத்தனையோ பெரிய சாதனைகளுக்கு அடித்தளமிடுகிறது. இந்தச் சுயமதிப்புக்கு இழுக்குவரும் எவ வித செயற்பாடுகளும் அச்செயற்பாடுகளுக்கெதிரான மனித நடத்தையைத் தூண்டும் என்பதற்கான பல எடுத்துக்காட்டுக்களை இம் மண்ணில் அவதானிக்க முடியும்.
பதவியுயர்வுக்கு சிங்களம் படித்தேயாக வேண்டும் என்ற சட்டத்திற்கு அடிபணியச் சுயமதிப்பு இடங்கொடுக்க மறுத்ததன் விளைவு பதவி விலகச் செய்து பலரை வியாபாராத்திலும் விவசாயத்திலும் ஈடுபடத் தூண்டியிருக்கிறது. சோதனைச் சாவடிகளில் சுயமரியாதைக்கு இழுக்குவரும் மனித நடத்தைகளுக்கு முகங்கொடுக்க விருப்பம் இல்லாமை, பெற்ற பிள்ளையுடன் தொடர்புகொள்ளவோ, சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு குடிசை வீடுகளில் கூட வாழும் வல்லமையை தந்திருக்கிறது.
1958, 77, 83 கலவரங்களில் தமது குழந்தைப்பருவத்தில் இருந்தவர்கள் இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பின்னருங்கூட அந்த வெறுப்பு நிலை மாறாமல் இருக்கின்றனர். 81இல் யாழ். நூலக எரிப்பையும், 90இல் இந்திய இராணுவக் கெடுபிடிகளையும் நேரில் பார்த்த பல வளரிளம் பருவத்தினருக்கு இந்த அனுபவம் தமக்கு ஒரு தாயகம் வேண்டும்தான் என்ற மனவுணர்வை, மேலும் அதிகமாக்கி போராட்டத்தின் உந்துசக்தியாக மாற்றியிருக்கிறது. இதற்குமப்பால் இராணுவ கெடுபிடிகளுக்குள் நேரடியாக அகப்பட்டவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இராணுவத்திற்கெதிரான எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் உதவத் தயாராக இருப்பதை கண்கூடாகக் காணமுடியும்.
குடும்ப உறவுகள்
மீதான பிணைப்பு
பொதுவாக அன்புக்குரியவர்களின் இழப்புகள் பெரியவர்களைவிட குழந்தைகளைத் தாக்குவது மிகவும் அதிகமாகும். பிள்ளையை இழந்த தாயைவிட தாயை இழந்துவிட்ட பிள்ளையின் பாதிப்பு மிகவும் கூட. நோய், எதிர்பாராத மரணம் போன்ற சாதாரண உயிரிழப்புக்களைவிட வலிந்து பறித்தெடுக்கப்பட்ட உயிரிழப்புகள் மிகவும் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தவல்லன. யுத்தத்தின் நேரடிப்பாதிப்புகளான குண்டுவீச்சுகள், இராணுவத்தின் சித்திரவதைகளால் தனது தாயை அல்லது தந்தையை இழந்த சிறுவருக்கோ அல்லது யுத்தத்தின் மறைமுகப் பாதிப்புகளான வறுமை, போசாக்கின்மை, மருந்துத்தடை போன்றவற்றில் ஏதாவதொன்றால் தன் அன்புத் தம்பியை அல்லது தங்கையை இழந்தவர்களுக்கோ பழிவாங்கும் உணர்வும், வெறுப்பும் தீவிரமாவது இயல்பானது. இது இவர்களை இயல்பாகவே தமது அழிவுக்குக்காரணமானவர்களுக்கு எதிராகப் போராடத் தூண்டும் அதேசமயம் இராணுவச் சுற்றிவளைப்புக்குள் அகப்பட்ட குழந்தைக்கோ அல்லது குண்டுத்தாக்குதலை நேரடியாக அனுபவித்த குழந்தைக்கோ பழிவாங்கும் உணர்வுக்கும் மேலாக அச்ச உணர்வு தீவிரமாகும் எனினும் தன்னால் காட்டமுடியாத எதிர்ப்பை இன்னொருவர் மேற்கொள்ளும்போது மகிழ்வும் திருப்தியும் ஏற்படும். குண்டுத்தாக்கத்தினால் ஏற்பட்ட உயிர் உடல் அழிவுகளுக்கு யாழ் மண் முகங்கொடுத்தது போல் தம் கண்முன்னே தம் உறவுகள் வெட்டப்பட்டும், சுடப்பட்டும், இழுத்துச் செல்லப்பட்டும், உயிருடன் எரிக்கப்பட்டும் இருந்ததை நேரில் பார்த்த எத்தனையோ பேரை மட்டக்களப்பு மண்போராட்டத்தின் உந்து விசையாகத் தந்திருக்கிறது.
தன் வாழ்விடத்துடனான பிணைப்பு
வீடு வாசல், நகைநட்டு, காணிபுூமி என்ற பதங்கள் நடுத்தர வயதைத் தாண்டி வெளிப்படும் தமிழ்ச் சிந்தனைகளில் ஒன்று. வாழ்விடம் என்பது ஒவ வொரு தமிழனைப் பொறுத்து வெறும் மழைக்கும் குளிருக்கும் பாதுகாப்புக்கொடுக்கும் இடம் அல்ல. அவனது அந்தஸ்தை வெளிக்காட்டும் பிரதான குறியீடு அது. அதிலும் நடுத்தர வாழ் நிலையைக் கொண்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் வாழ்விடத்துடனான பிணைப்பைக் கிட்டத்தட்ட நோய் என்றே சொல்லிவிடலாம்.
வீட்டை அழகுபடுத்துவதற்காக ஆடம்பரத் தளபாடம் செய்வதற்காகச் சம்பலும் சோறும் கூட சாப்பிட்ட எத்தனையோ குடும்பங்கள் அங்குண்டு. பெண்களின் மனதை முழுமையாக ஆக்கிரமிக்கும் நகைநட்டுக்கள் கூட, வீட்டைப் புூரணப்படுத்த மனமுவந்து விற்கப்பட அல்லது அடைவு வைக்கப்படத் தயாராகும் அளவுக்கு வாழ்விடம் தமிழன் வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளது. 'கையில மடியில இருந்ததை எல்லாம் வீட்டுக்குள்ள முடக்கிப் போட்டன்' என்ற புலம்பலில் கையில் என்பது பணத்தையும், மடி என்பது நகை நட்டையுமே பெரும்பாலும் குறிக்கும். இந்த வாழ்விடத்தை தனது பெண்பிள்ளையின் எதிர்காலச் சீதனத்திற்காக மட்டும் கட்டியது என்ற குறுகிய எல்லைக்குள் இதை மலினப்படுத்திவிட முடியாது. மற்றவரிடம் இல்லாத ஒன்று தன்னிடம் இருக்க வேண்டும் என்ற மனப்பாங்கு இங்கு பொதுமையாகவே உண்டு. வீட்டில் வளர்க்கும் புூஞ்செடிகளில் கூட இது வெளிப்படும்.
இந்த மக்களின் வாழ்விடங்கள் பறித்தெடுக்கப்பட்டபோது இவர்களிடம் ஏற்பட்ட கொதிப்பும் வெறுப்பும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதவை. தன் வீட்டின் மீதான காதல் பலரை மனப்பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. தானும் தன் குடும்பமும் எவ வித சேதமுமின்றித் தப்பிவிட்டோம் என்ற யதார்த்தத்தை உணர்ந்து ஆறுதற்பட முடியாதளவுக்கு இப்பாதிப்பு அதிகமாயிருக்கிறது. அன்புக்குரியவர்களின் இழப்பு ஏற்படுத்தும் பாதிப்பைவிட வாழ்விடத்தை இழத்தல் இங்கு பல மறைமுக எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. காணி, புூமி, அணிகலன்கள் அனைத்தையும் முடக்கிய குடும்பங்கள் அது தொடர்பான விரக்தி நிலையைத் திரும்பத்திரும்ப மீட்கும்போது வீட்டின் சுமுக சூழலை அது கடுமையாகப் பாதித்திருக்கிறது. அம்மாவின் அன்பும், அக்காவின் தந்தையின் ஏக்கங்களும் அதனால் ஏற்படும் உடல் உளப்பாதிப்புகளும் எத்தனையோ பிள்ளைகளின் மகிழ்ச்சியான சூழலை பறித்தெடுத்திருக்கிறது. மீளாவறுமைக்குள் தள்ளி ஆதார வாழ்வுக்கே அல்லல்படும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
வாய்ப்பு நலன்கள்
மீதான பிணைப்பு
வாய்ப்பு நலன்களில் பிரதானமானது கல்வி. காணி புூமியை வித்தாவது பிள்ளையைப் படிப்பித்து நல்ல நிலைக்கு ஆளாக்கிவிட வேண்டும் என்ற தவனம் தமிழனுக்குள் ஊறிக்கிடக்கும் ஒன்றாகும். வாழ்வைக்கொண்டு நடத்த உதவும் தொழில்சார் கல்வியை விடவும் அந்தஸ்தின் குறியீடுகளாக விளங்கும் கல்வி வாய்ப்பை நோக்கி பிள்ளைகளை நகர்த்து பெற்றோர்களே எம்மிடம் அதிகமாகும். தமது பிள்கைளின் கல்வி, தரப்படுத்தல் மூலமோ யுத்தத்தின் நேரடி மறைமுக அழிவுகள் மூலமோ மறுக்கப்படும்போது தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வு, போராட்டத்தின் பலமிக்க உந்துசக்தியாக மாறியதை எவருக்குமே புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. 'கற்பதற்காய் போராடுவோம், போராடுவதற்காய் கற்போம்' என்ற சுலோகமே இதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான்.


முடிவாக
யுத்தத்தை நிரந்தர வாழ்வியலாக ஏற்று தமிழ்மண் மூன்று தசாப்தங்களை நெருங்கிவிட்டது. அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலுமாக அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பி அரைநூற்றாண்டை நெருங்கிவிட்டது. அதேசமயம் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் போர்ப்பண்புகளும் வீர வாழ்வுமோ பல நூற்றாண்டுகளையும் தாண்டியதொன்று. தன்நிலை தாழ்ந்தாலும் தன்தலை குனிய தமிழ் மகன் எப்போதுமே தயாராக இல்லை. படிப்பில், பதவியில், வாழ்க்கை முறையில், மற்றவரைவிட தன்னை உயர்ந்தவனாகக் கருதும் மனப்பாங்குள்ள தமிழனுக்கு அடுத்தவருக்குப் புத்தி சொல்லி, அடுத்தவரைக்கொண்டு வேலை செய்வித்து, அடுத்தவருக்காகவே தன்னைத் தியாகம் செய்து வாழப் பழக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை ஆதார வசதிகளை மறுப்பதன் மூலமோ, உடல் உளச்சேதத்தை ஏற்படுத்துவதன் மூலமோ வழிக்குக்கொண்டு வருவது சாத்தியமற்றது. மாறாக அது மேலும் மேலும் இந்த மண்ணுக்காகப் போராடும் ஆரோக்கியம் மிக்க விதைகளை உருவாக்கவே வழிகோலும்.
யுத்தம் மனப்பாதிப்புகளை நிச்சயம் அதிகரிக்கத்தான் செய்யும் என்பதில் எவருக்குமே கருத்து முரண்பாடு இருக்க முடியாது. ஆனால் இந்த மனப்பாதிப்புகள் சுயமரியாதையில் தீவிரபற்றுள்ள தமிழனை அடுத்தவருக்குப் பாரமாக, அடையாளத்தையே தொலைத்தவனாக அவனை மாற்றுவதற்குப் பதிலாக அல்லது மேலை நாடுகளில் உள்ளது போல் கூப்பிடு தூரத்திற்கு ஒரு உள் ஆலோசனை நிலையங்களை உருவாக்குவதாக இருப்பதற்குப் பதிலாக பிடிவாதமும், பழிவாங்கும் உணர்வும், உரிமைக்கான உத்வேகமும் பெற்ற சமூகத்தையே உருவாக்கும். உருவாக்கிக்கொண்டும் இருக்கிறது என்பதே இத்தனைகால உயிரிழப்புகள் உடமை இழப்புகள், உரிமை மறுப்புகள் மத்தியிலும் சோர்வடையாத உரிமைக்குரல்களும், எதிர்ப்புணர்வும். பொதுவாக
அன்புக்குரியவர்களின் இழப்புகள் பெரியவர்களைவிடகுழந்தைகளைத் தாக்குவது மிகவும் அதிகமாகும். பிள்ளையை இழந்த தாயைவிட தாயை இழந்துவிட்ட பிள்ளையின் பாதிப்பு மிகவும் கூட நோய், எதிர்பாராத மரணம் போன்ற சாதாரண உயிரிழப்புக்களைவிட வலிந்து பறித்தெடுக்கப்பட்ட உயிரிழப்புகள் மிகவும் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தவல்லன. யுத்தத்தின் நேரடிப்பாதிப்புகளான குண்டுவீச்சுகள், இராணுவத்தின் சித்திரவதைகளால் தனது தாயை அல்லது தந்தையை இழந்த சிறுவருக்கோ அல்லது யுத்தத்தின் மறைமுகப் பாதிப்புகளான வறுமை, போசாக்கின்மை, மருந்துத்தடை போன்றவற்றில் ஏதாவதொன்றால் தன் அன்புத் தம்பியை அல்லது தங்கையை இழந்தவர்களுக்கோ பழிவாங்கும் உணர்வும், வெப்பும் தீவிரமாவது இயல்பானது. இது இவர்களை இயல்பாகவே தமது அழிவுக்குக்காரணமானவர்களுக்கு எதிராகப் போராடத் தூண்டும்


அர்த்தநாhP
Reply
#57
'
உலகின் கவனமனைத்தையும் ஈர்த்து, விடுதலைப் புலிகளின் உச்சக்கட்ட போரிடும் ஆற்றலை வெளிப்படுத்திய, ஓயாத அலைகள் - 3இன் ஆனையிறவு மீட்பிற்கான இத்தாவில் சமர்க்களம். கடல்வழியாகத் தரையிறங்கிய புலிகளின் படையணிகள் இராணுவ வலயத்தை ஊடுருவித் தமது நிலைகளை அமைத்திருந்தன.
மொத்தம் முப்பத்திநான்கு நாட்கள் தொடர்ந்து கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமல்ல ஆனையிறவிலுங் கூடவே சிங்களத்தின் போர்வலிமை புலிகளிடம் தோற்றுப்போனது.
'
உ லகின் கவனமனைத்தையும் ஈர்த்து, விடுதலைப் புலிகளின் உச்சக்கட்ட போரிடும் ஆற்றலை வெளிப்படுத்திய, ஓயாத அலைகள் - 3இன் ஆனையிறவு மீட்பிற்கான இத்தாவில் சமர்க்களம். கடல்வழியாகத் தரையிறங்கிய புலிகளின் படையணிகள் இராணுவ வலயத்தை ஊடுருவித் தமது நிலைகளை அமைத்திருந்தன.
மொத்தம் முப்பத்திநான்கு நாட்கள் தொடர்ந்து கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமல்ல ஆனையிறவிலுங் கூடவே சிங்களத்தின் போர்வலிமை புலிகளிடம் தோற்றுப்போனது.
வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவில் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2000, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு அன்றைய பொழுது சூடாகவே விடிந்தது.
கண்டி வீதியை மையமாகக்கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். கொடுமையான அந்தப் போர்க்களத்தில், துன்பங்கள் நிறைந்த அனுபவங்கள் பலதை ஏற்கனவே எதிரி அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தான். கடந்த இரண்டு நாட்களாக எதிரி இடையறாது அங்கே மேற்கொண்ட முன்னேற்றங்களையெல்லாம் அவர்கள் முறியடிக்கவேண்டியிருந்தது. இலகுவான பின்னணிப் பாதைகள் இல்லாத நிலையில், போதுமானளவு ரவைகள், வெடிபொருட்களற்றிருந்த புலிகளின் அணிகள், தம்மிடமிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக்கொண்டே ஏற்கனவே நடந்த இரண்டு நாள் சமரிலும் பல முனைகளிலும் முன்னேறிய இராணுவத்தினரை முறியடித்து வெற்றிபெற்றிருந்தன.
அதிகாலையில், தொடங்கிய இன்றைய சமர் மிகவும் உக்கிரமானதாக இருந்தது. வழமைக்கு மாறாக எதிரி இன்று ஆனையிறவுப் பகுதியிலிருந்து ஐந்து டாங்கிகள் சகிதம் முன்னேறினான். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த எமது நிலைகள் இராணுவத்தின் அகோரமான எறிகணை வீச்சில் சிதைந்துகொண்டிருந்தன. எதிரி படு வேகமாக முன்னேறினான். டாங்கிகளும் கனரக வாகனங்களும் அணிவகுத்து முன்னே வர பெருந்தொகையில் படையினர் சூழ்ந்த யுத்தக்காடாக மாறியது அந்தக்களம்.
சில மணித்தியாலங்களிலேயே கண்டி வீதியின் இருபுறமும் முன்னேறிய எதிரியால் எமது நிலைகள் ஊடறுக்கப்பட்டு விட்டன. காவலரண் வரிசையின் இரு பகுதிக@டாக உள்ளே நுழைந்த எதிரி, இப்போது மூன்றாவது முனையான பிரதான வீதியின் வழியே உள்நுழைவதற்கு முயன்றுகொண்டிருந்தான்.
அவர்கள் விடவில்லை. செக்சன் லீடர் வீரன், இயல்வாணன், வளநெஞ்சன், சேரக்குன்றன் என இன்னும் மிகச் சிலர் மட்டுமே அங்கே தனித்திருந்தனர். பின்வாங்கத் தயாரில்லா அவர்களை எதிரி சூழத்தொடங்கினான்.
பிரதான வீதியின் அருகில் அவர்கள் இருந்தனர். தன்னிடமிருந்த ஒரேயொரு P.மு இயந்திரத் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக்கொண்டிருந்தான் இயல்வாணன். இருபுறமும் பெரும் எண்ணிக்கையில் முன்னேறிய எதிரியின் ஆட்பலம், டாங்கிகள் சகிதம் மனிதப்பிரவாகமென அவர்களைச் சூழ்ந்துகொண்டுவிட்டது.
அவர்களுடனான தொலைத்தொடர்புகள் இறுதியாக அற்றுப்போனவுடன் கட்டளைப்பீடம் பரபரப்பானது. அது கைவிடமுடியாத ஒரு நிலை இத்தாவில் சமர்க்களத்தினது மாத்திரமல்ல, ஆனையிறவு மீட்பிற்கான தலைவரது வியுூகத்தின் தந்திரோபாய முடிச்சு அது. அங்கே அமைக்கப்பட்டிருந்த வியுூகத்தின் உயிர்நாடியும் அதுதான். இப்போது அங்கேயிருந்த வீரர்கள் கொல்லப்பட்டிருப்பர். மாற்றுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. மீண்டும் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளிக்காமல் போனது.
அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பு எல்லோரையும் பிடித்துலுக்கிக் கொண்டிருந்தது.
ஆனாலும், சுற்றிச் சூழ்ந்துவிட்ட எதிரிகளின் நடுவே அவர்கள் இன்னமும் உயிருடன் இருந்தனர். தொடர்ந்தும் இராணுவத்தினரை எதிர்த்து சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.
பிரதான வீதியால் வந்த இராணுவத்தினரை ஒவ வொருவராய் வீழ்த்தினர். தொடர்ந்து வந்த கனரக வாகனம் ஒன்றும் அதன் பின்னால் வந்த இராணுவத்தினரும் இயல்வாணனின் P.மு தாக்குதலினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போதுதான் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருந்த அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத அந்தத் துரதிஸ்ரம் நிகழ்ந்தது. அவர்களிடமிருந்த ஒரேயொரு கனரக துப்பாக்கி Pமு- ஆPஆபு இயங்கு நிலை தடைப்பட்டு சுடமறுத்தது.
எல்லாத்திசைகளிலிருந்தும் இராணுவத்தினர் அவர்களை நோக்கி முன்னேறத் துடித்துக்கொண்டிருந்தனர். இராணுவத்தினரின் முன்னேற்றத்திற்கான இதுவரையான தடையாக அவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அவர்களிடமிருந்த துப்பாக்கியும் சுட மறுத்துவிட்டது.
இராணுவம் நெருங்கிவந்துவிட இயல்வாணனுடைய தோழனொருவன் வீசிய கையெறிகுண்டு வெடித்துச் சிதறியது. எதிரி அந்தத் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் கிடைத்த சிறியதொரு அவகாசத்தினுள் தன் துப்பாக்கியை சீர்படுத்த முயன்றான் இயல்வாணன். ஆனாலும், முடியவில்லை மீண்டும் இராணுவம் அவர்களின் நிலையை நெருங்கியது.
மிகவும், நெருக்கடியானதொரு சூழல். தடுப்பதற்கு வழியில்லை. இயல்வாணன் தனித்து இயங்கத் தொடங்கினான். ஒவ வொன்றாய் ரவையேற்றினான். தனித்தனியே மீண்டும் ஆரம்பித்த சூடுகளில் இராணுவத்தினர் அவனது நிலையின்முன் விழத்தொடங்கினர்.
எனினும், பெருந்தொகையில் வேகமாக முன்னேறும் இராணுவத்தைத் தொடர்ந்தும் அவர்களால் தடுக்கமுடியவில்லை. எதிரிகள் அவர்களை நெருங்கியவாறே இருந்தனர்.
செக்சன் லீடர் வீரனுடைய தொலைத்தொடர்புச் சாதனம் ஒருவாறு தனது கட்டளைப்பீடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியது. கட்டளைப்பீடத்தில் புதியதொரு பரபரப்புத் தோன்றியது. இராணுவத்தினரால் சூழப்பட்டுவிட்ட பிரதான வீதியிலிருந்து ஒலித்த வீரனுடைய குரல் கட்டளைப்பீடத்திற்கு உற்சாகமானதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
'றோமியோ, றோமியோ, இப்ப ஆமி எங்கள நெருங்கீட்டான்'
'எங்களுக்கு ரவுன்ஸ் எல்லாம் முடிந்துவிட்டது'
'பிரச்சினையில்லை, எங்களைப் பார்க்காதையுங்கோ, நாங்கள் நிக்கிற இடத்திற்கு செல் அடியுங்கோ, வேகமாய் எங்கட நிலையளை வைச்சு ஆமிக்குச் செல் அடியுங்கோ'
யாருமே எதிர்பார்க்காத அவர்களுடைய உணர்வுகள் கட்டளைப்பீடத் தொலைத்தொடர்புக் கருவியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
அவர்கள் இன்னமும் தோற்றுவிடவில்லை. இன்னமும் அவர்கள் தமது நிலைகளை எதிரியிடம் செல்ல அனுமதித்துவிடவில்லை. எதிரியால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக எண்ணியிருந்த பிரதேசத்திலிருந்து அவர்கள் தொடர்ந்தும் போரிடுகின்றனர். கட்டளைப்பீடம் மீண்டுமொரு முறியடிப்புச் சமரிற்குத் தயாராகியது.
இராணுவம் அவர்களுடைய நிலைகளினுள் புகுந்துகொண்டால் வெடிக்கத் தயாரான கையெறி குண்டுகளுடன் அவர்கள் போரிட்டனர். அவை வார்த்தைகளின் விபரிப்பிற்கு அப்பாற்பட்ட போர்க்களத்தின் கொடிய கணங்கள். கண்களின் முன்னே, மிக அருகில், அவர்களைக் கொல்லும்வெறியுடன் வரும் எதிரிகளை எதிர்த்துத் தொடர்ந்தும் சண்டையிட்டனர். உச்சமான அவர்களின் மனோதிடம், போரிடத் தயாரான ஆற்றல், இறுதிவரை வென்றுவிடத்துடிக்கும் விடுதலை உணர்வு அவர்களைத் தொடர்ந்தும் இயக்கியது.
வீரனது தொலைத்தொடர்புச் சாதனம் சொல்லிய இலக்குகளை எறிகணைகள் தாக்கின. இயல்வாணனுடைய P.மு சுட்டுக்கொன்ற இராணுவத்தினரது சடலங்கள் அவர்களது நிலைகளைச் சுற்றிக் குவியத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக அவை எதிரியின் மூர்க்கத்தை உடைத்தன.
இத்தாவில் களத்தை அன்று எதிரியிடமிருந்து மீட்டுத்தந்த வீரர்களை மீட்பதற்கான எமது முறியடிப்பு அணிகள் அவர்களை நெருங்கியபோது, வீரன் இயல்வாணனுடைய காவலரண்களைச் சுற்றி மட்டும் கொல்லப்பட்ட எண்பத்தைந்து இராணுவச் சடலங்கள் கிடந்தன.


இரண்டாம்கட்ட ஈழப்போரின் ஆரம்ப ஆண்டுகள் அவை. 26.11.1992 பலாலித் தளத்தின் ஒருபகுதி. முன்னணிக் காவலரண்கள் அமைந்திருந்த வளலாய் பகுதிக் காவலரண் வரிசையைத் தாக்கி, அதன் பின்னான சில மினி முகாம்களையும் அழிப்பதற்கான நகர்வுகளைப் புலிகளின் படையணிகள் செய்துகொண்டிருந்தன.
முன்னரங்க காவல் நிலைகள் தகர்க்கப்படும் சமநேரத்தில் ஏற்கனவே ஊடுருவி நிலைகொண்டிருக்கும் அணிகளால் தளத்தின் உட்புற இராணுவ முகாம்களும் தாக்கப்படுவதாக அன்றைய எமது திட்டம் இருந்தது.
பின்னணியில் அமைந்திருந்த இந்த மினிமுகாம்களை தாக்கும் அணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நியமிக்கப்பட்டது. அதற்காக இராணுவ நிலைகளை ஊடறுத்து ஏழு கிலோ மீற்றர் வரையான தூரம் அவர்கள் இரகசியமாக நகரவேண்டியிருந்தது.
கண்ணிவெடிகள், மிதிவெடிகள் நிறைந்த இராணுவ முன்னரங்க வேலி, நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள தொடர் காவலரண்கள், மின்ஒளி பாய்ச்சப்பட்ட இரவு நேர அவதானிப்பு வலயம், சிறிய ஒலியும் பேரொலியாக மாறும் பயங்கரமானதொரு அமைதி. இத்தனைக்கும் அப்பால் தொடர் கண்காணிப்பில் இருக்கும் ஒரு பிரதான வீதியையும் கடந்தே அந்த அணி தன் இலக்கை எட்டவேண்டியிருந்தது.
அப்போதுதான் அது நிகழ்ந்தது. யாருமே தாக்குதலுக்கான இறுதி இலக்கை அப்போது நெருங்கியிருக்கவில்லை. நிசப்தமான அன்றைய இருட்பொழுதின் ஆழ்ந்த அமைதியை குலைத்தது ஒரு வெடியோசை. இராணுவ முன்னரங்கை ஊடுருவி பின்னணி ஆழ்நிலைகள் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காவலன் என்ற போராளியின் கால்களில் ஒன்றை அங்கே வெடித்த மிதிவெடி சிதைத்திருந்தது.
எல்லோருடைய விழிகளிலும் கலவரத்தின் சாயல். அடுத்து நடக்கப்போவது என்ன? நிச்சயமாக இந்தச் சத்தத்தை எதிரி கேட்டிருப்பான். திகைப்பின் கதறல், வேதனையின் புலம்பல், காயப்பட்டுவிட்ட ஒரு மனித உயிரின் இயல்பான அனுங்கல் எதிரிக்கு எம்வரவைச் சொல்லிவிடும். அன்றைய சண்டை அத்துடனேயே, எம்மால் தொடங்கப்படாமலேயே முடிவடைந்துவிடும். அந்தப் பிரதேசத்தில் சூழ்ந்திருந்த எமது முன்னணி வீரர்கள் பலரை நாம் இழக்கநேரிடும். இலக்குகள் எவையும் வெற்றிகொள்ளப்படாமலேயே எமது திட்டம் எதிரியால் தோற்கடிக்கப்பட்டுவிடும்.
அடுத்தது பற்றிய அவநம்பிக்கையுடன் எல்லோரது கவனமும் காவலரன் பக்கம் திரும்பியது.
வெடிப்பின் அதிர்வுகள் அடங்கியபோது கலைந்த புகையினூடு அவன் அசைவது தெரிந்தது. துண்டிக்கப்பட்டு சிதைந்திருந்த அவனது காலில் இருந்து குருதி கொப்பளித்துப் பாய்ந்தது. சத்தமில்லை மெல்ல கையசைத்து அருகிலிருந்த தோழனை அழைத்தான்.
'மச்சான் நான் சத்தம்போட மாட்டன். நீங்கள் தொடர்ந்து முன்னேறுங்கோ'
பயம் படர்ந்திருந்த தோழர்களின் முகத்தில் அதிர்ச்சி பரவியது. அந்த வார்த்தைகள் எவ வளவு அற்புதமானவை. அவனது அந்த வார்த்தைகள் அன்றைய எம் வெற்றியை சாத்தியமாக்கியது என்று சொன்னால் யாரால்தான் மறுத்துவிடமுடியும்.
Reply
#58
'எமது இரு தோழிகளை தண்ணீருக்காக அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். எமது உணவுப் பொதிகளை அவிழ்ப்பதானாலும் தண்ணீர்வாளியுடன் தள்ளாடியபடி தொலைவில் வந்துகொண்டிருந்தார்கள். திடீரென அந்த வேட்டொலி அமைதியை குலைத்தது. எதிரியின் பதுங்கிச் சுடுபவன் எம் தோழிகளில் ஒருத்தி மீது ரவையை ஏற்றினான். மற்றைய தோழி அவளை நிமிர்த்த முயன்ற வேளை அவளது கழுத்திலும் ரவை பாய்ந்து சரிந்தாள். நாங்கள் குடித்திருந்த தண்ணீர் கண்ணீராய் பெருக்கெடுத்தது'
'அன்று அதிகாலையிலேயே
எதிரி யுத்தத்தை தொடங்கினான். பிறந்தநாள் கொண்டாட இருந்த
என் தோழியின் நிலையின்
நேராகவே எதிரி தன் நகர்வுப்பாதையை ஏற்படுத்தினான். அவளது தொடர்பு அற்றுப்போக நான் தவித்தேன். சண்டை முடிந்து எதிரியை விரட்டிவிட்டு என் தோழியிடம் நான் ஓடிப்போக அவள் உயிரிழந்து கிடந்தாள். அவளது புது உடைகள் குருதியில் தோய்ந்து அவளது தலை மாட்டிலேயே கிடந்தன'

- அகிலன்


கரும்புலிகள் படைப்பிரிவில் இணைவதற்கு முன் மேஜர் மீனா, சோதியா படையணியில் ஒரு அணியின் தலைவியாக இருந்தாள். அந்த நாட்களில் தன் அணியில் இருந்த தோழிகளின் சாவுகளை சகிக்கமுடியாது அவள் தவியாய் தவித்தாள். ஒவ வொரு யுத்த களத்திலும் சாவுகள் அவள் இதயத்தைத் துளைத்தன. ஆனாலும், அந்த வீராங்கனை சாவுகளைக்கண்டு தன் போராட்ட வாழ்வில் இருந்து ஒதுங்க எண்ணியதில்லை. அந்தப் பெண்ணின் இதயம் மேலும் மேலும் பாறையாய் இறுகியது. அவள் பங்கெடுத்த யுத்த களத்தின் காட்சிகளை எழுதுகிறாள்.
'அன்று ஒலுமடுவில் யுத்தகளம் கடுமையான யுத்தம். எதிரி டாங்கிகளுடன் வந்து எமது காவலரண்கள் பலவற்றை கைப்பற்றிவிட்டான். சிறிது நேரத்திலேயே எதிரியிடம் விடுபட்ட பிரதேசங்களை மீட்டபடி போராளிகள் முன்னேறத் தொடங்கினர். எமது அணியும் அதில் போரிட்டது.
'எதிரியின் டாங்கிகள்' எரிவதை மகிழ்வுடன் அறிவித்தபடி முன்னேறிக்கொண்டிருந்த என் தோழி திடீரென பின்புறத்தால் வந்த எதிரியின் குண்டுபட்டு நிலத்தில் சாய்ந்தாள். அவள் கரங்கள் தொலைத்தொடர்பின் பி.ரி.ரி.ஐ. அழுத்தியபடியே இருக்க அலைவரிசையில் அவளது முனகல் ஒலி எனது காதை அடைந்தது. மூச்சுத்திணறியபடியிருந்த அவளை மீட்டெடுத்துவர நான் புறப்பட்டேன். அவளை நோக்கி 'குறோள்' இல்போய் தலையைத் தடவினேன். மார்பு துளைக்கப்பட்ட என்தோழி அப்போதுதான் உயிர்விட்டாள். என் மனம் துவண்டுபோனது. தன் தோழியைச் சாய்த்த எதிரியை நோக்கி ஆவேசமாய் பாய்ந்த இன்னொரு தோழி தன் காலிலே குண்டை அணைத்து காயமடைந்து வீழ்ந்தாள்.
'சமரின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே போனது. எதிரியின் 'டாங்கிகள்' அங்குமிங்குமாய் ஓடித்திரிந்து எமது வீரர்களைத் தாக்கியது. அவை களத்தில் எமக்குச் சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கின. அப்போது எமது பெண் போராளி ஒருத்தி துணிந்து முன்னேறி தனது எறிகணைச் செலுத்தியால் (ஆர்.பி.ஜி) எதிரியின் 'டாங்கி' ஒன்றைத் தகர்த்தாள். வீரத்துடன் மேலும் முன்னேறியவள் மற்றைய 'டாங்கி' யையும் விரைந்து இலக்கு வைத்தாள். அப்போது என் கண்முன்னால்தான் அது நடந்ததுலு}.
அந்த 'டாங்கி' யில் இருந்து எதிரி ஏவிய 'ஸெல்' அவளைத் தூக்கி வீசிச் சிதறடித்தது. என்னால் நம்பவேமுடியவில்லை. அந்தக் கணத்திலேயே அந்த எதிரி 'டாங்கி' யின் சக்கரம் தாக்கப்பட்டு அதன் செயின் அறுந்துபோனது. தன் வாழ்வின் இறுதி மணித்துளியிலும் அந்த வீராங்கனை தன்விசைவில்லை அழுத்தி விட்டுத்தான் மடிந்தாள் போலும். எமக்கான எதிர்ப்புகள் குறைந்து போனது. ஆனால், ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் தன் மகளின் புூமுகத்தைப் பார்த்து மகிழ்ந்துபோன அந்தத் தோழியின் அன்னை எப்படித்தான் மகளின் சிதறுண்ட உடலைப் பார்ப்பாளோ? என்று நினைத்து நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தேன்.
அன்றைய யுத்தம் வெற்றியுடன் ஓய்ந்ததும் சத்தமின்றியிருந்த யுத்த களத்தில் இன்னொரு நாள்.
'எமது இரு தோழிகளை தண்ணீருக்காக அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். எமது உணவுப் பொதிகளை அவிழ்ப்பதானாலும் தண்ணீர்வாளியுடன் தள்ளாடியபடி தொலைவில் வந்துகொண்டிருந்தார்கள். திடீரென அந்த வேட்டொலி அமைதியை குலைத்தது. எதிரியின் பதுங்கிச் சுடுபவன் எம் தோழிகளில் ஒருத்தி மீது ரவையை ஏற்றினான். மற்றைய தோழி அவளை நிமிர்த்த முயன்ற வேளை அவளது கழுத்திலும் ரவை பாய்ந்து சரிந்தாள். நாங்கள் குடித்திருந்த தண்ணீர் கண்ணீராய் பெருக்கெடுத்தது'
கொடுமையான இன்னொரு காலை 'அன்று என் நெருங்கிய தோழியின் 26 ஆவது பிறந்தநாள், அவள் முதல் நாள் தான் என்னிடம் சொல்லியிருந்தாள். இரவு 12.00மணிக்கு தன்னை எழுப்பித் தேத்தண்ணி போட்டுத்தரும்படி. அதற்காக என்னை மண்டாடி குறும்புகள் செய்தாள். அவளது தாய் கொடுத்த புத்தாடையும், கேக்கும் அவளிடம் இருந்தது. சிறிதான கொண்டாட்டம் ஒன்றின் நினைவுகளுடன் நாங்கள் இருந்திருந்தோம்.
'அன்று அதிகாலையிலேயே எதிரி யுத்தத்தை தொடங்கினான். பிறந்தநாள் கொண்டாட இருந்த என் தோழியின் நிலையின் நேராகவே எதிரி தன் நகர்வுப்பாதையை ஏற்படுத்தினான். அவளது தொடர்பு அற்றுப்போக நான் தவித்தேன். சண்டை முடிந்து எதிரியை விரட்டிவிட்டு என் தோழியிடம் நான் ஓடிப்போக அவள் உயிரிழந்து கிடந்தாள். அவளது புது உடைகள் குருதியில் தோய்ந்து அவளது தலைமாட்டிலேயே கிடந்தன'
இவற்றையெல்லாம் எழுதிவிட்டுப்போன மீனா கரும்புலியாகி இத்தேசத்திற்காய் தன்னையும் விதையாக்கிக்கொண்டாள்.
(இன்னும் வரும்)
Reply
#59
அன்பான குமரனுக்கு.
வணக்கம்.
வெகுஅபுூர்வமான. இவ வளவு விரைவாக உன்னுடைய கடிதம் வந்திருக்கிறது.
தடை தளர்வால் ஏற்பட்ட அதிசயம் இதுவா, அல்லது நியாயத்தின் பாற்பட்ட மாற்றமா என்று யோசிக்கிறேன்.
இப்படி விரைவாகக் கடிதம் வந்து கனகாலமாகிவிட்டது. இதுமட்டும் புதினமல்ல.
'சமாதானத்துக்கான அமைதிக்காலம்' என்று உருவாகியுள்ள இந்தச் சூழ்நிலை, இச் சூழ்நிலையில் நடக்கும் நிகழ்வுகள், செயல்கள் எல்லாமே புதினமாகத்தானிருக்கிறது.
முதலில் உனக்கு ஒரு விடயம் குழப்பமாக இருக்கம். அது என்ன 'சமாதானத்துக்கான அமைதி?' என்று உண்மையில், 'அமைதிக்காகத்தானே சமாதானம்' என்று யோசிப்பாய்.
இந்தக்காலம் எப்போதும் இப்படித்தான். புதிரும் விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் ஊகங்களும் மற்றும் வியாக்கியானங்களாலும் நிறைந்திருக்கும்.
முன்பும் இப்படியான சந்தர்ப்பங்களில் இவ்வாறெல்லாம் நிகழ்ந்ததுதானே.
இவையெல்லாவற்றுக்குமப்பால் உண்மையை உணரக்கூடிய, பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய, வழிமுறையை தெரிந்து கொள்ளக்கூடிய பார்வையை, தரிசனத்தை நாம் கொண்டிருந்தோமே. அதுதானே எமது போராட்டத்தை ஒரு வளா ச்சிப்போக்கில் கொண்டு வந்தது.
இப்பொழுதும் நீண்ட யுத்தத்தின்பின் ஒரு ஓய்வாக போர் நிறுத்தமும் சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையும் என்றொரு நிலை ஏற்பட்டிருக்கிறதுதான்.
புதிய அரசாங்கம் கடந்த காலத்தின் அனுபவங்களையும் வெளியுலக போக்கினையும் கருத்தில் கொண்டு அமைதித் தீர்வுக்கு முயல்கிறது என்கிறார்கள் சிலர்.
இலங்கையின் பொருளாதாரம் இனியும் தொடா ந்து யுத்தத்தை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு இடமளியாது என்கிறனா வேறுசிலர்.
ஒரு காலகட்டத்தில் வா க்கப் போராட்டத்தை திசைதிருப்புவதற்கு, சோசலிச முகாமை உடைப்பதற்கு தேசிய இன நெருக்கடியை ஏற்படுத்திய மேலாதிக்க உலகம் இன்று தனது முதல் நோக்கம் நிறைவேறியபின் இந்த நெருக்கடியைத் தீர்க்கமுயல்கிறது என்கிறாh கள் மற்றும் சிலர்.
போரின் விளைவுகளை இனியும் எதிர்கொள்ளும் திராணி சிங்களமக்களுக்கில்லை. அவர்கள் சமாதானத்தையே மீண்டும் மீண்டும் விரும்புகின்றனர். அதுவே அவர்கள் தேர்தல் மூலமும் வெளிப்படுத்திய சேதி என்கின்றனர் இன்னொரு சாரார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமும், விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும், தளராத உறுதியும் அசையாத நிலைப்பாடும் உலகையும் சிங்களத் தரப்பினரையும் இத்தகைய அணுகுமுறைக்குள்ளாகியிருக்கின்றது என்கின்றார்கள் வேறொரு சாரார்.
எப்படியோ இன்று பேச்சுவார்த்தைக்கான சூழல் அமைகிறது.
இதை நல்ல முறையில் பயன்படுத்துவதும் தீர்வைக் காண்பதற்கு முயல்வதும் சிறீலங்கா அரசின் கைகளில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது.
புதிதாக ஆட்சி அமைக்கும் இந்த அரசாங்கம் ஏனைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறையையும் விட்டதவறையும் போல தானும் செயற்படுமாக இருந்தால் அது சிறீலங்காவை மீளமுடியாத நிலைக்குள் தள்ளிவிடும்.
ஒப்புக்குப் பேச்சுவாh த்தை சமாதானம், அமைதித்தீர்வு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சிங்களப் பேரினவாதத்தின் நிழலில் அது இயங்குமாயின் மீண்டும் போர் தவிர்க்கமுடியாததாகிவிடக்கூடும்.
உரிமைக்காக, சுதந்திரத்திக்காக போராடும் தமிழ்மக்கள் அது கிடைக்கும் வரையில் போராடுவதும் தவிர்க்கமுடியாததாகிவிடும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எப்போதும் சமாதானத்துக்கும் அமைதிக்கும் மாறுபட்டு நின்றவர்களில்லை. சிங்கள அரசாங்கங்களுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்கள் பல முறையும் முயன்றிருக்கிறார்கள். அந்த வரலாறுதான் உனக்கு நன்றாகத் தெரியும். பேச்சுவார்த்தையை தமிழர்களைப் பலவீனப்படுத்தும் ஒரு கருவியாகவே ஒவ வொரு தடவையும் சிங்களப் பேரினவாதம் பயன்படுத்தி வந்திருக்கிறது.
தனக்கு உள்ளரங்கிலும் வெளியரங்கிலும் ஏற்படும் நெருக்கடிகளைத் தணிப்பதற்காகவும் தமிழ் மக்களின் எழுச்சியையும் போராட்டத்தையும் திசை திருப்புவற்காகவும் பேச்சுவார்த்தையை சிங்களப் பேரினவாதம் ஏற்படுத்தி வந்திருக்கிறது.
பேச்சுவார்த்தைகள். ஒப்பந்தங்களெல்லாம் நடைமுறையில் எந்தப்பலனையும் தராமல் ஆயுதப் போராட்டத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னும் தமிழர் பேச்சுவாh த்தையை சமாதானத்தைப் புறந்தள்ளவில்லை. பெங்க@ரில், திம்புவில், டில்லியில், கொழும்பில், யாழ்ப்பாணத்தில் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் சிங்களத்தரப்பின் அணுகுமுறையில் மாற்றமேதும்மில்லை.
ஆனாலும் தமிழர்கள் பேச்சுவாh த்தையை, சமாதானத்தை, அமைதிவழியை பின்தள்ளிவிடவில்லை.
"எப்போதும் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம்" என்று அடிக்கடி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருக் கிறாh .
தனக்குத் தேவையானபோது பேசமுயல்வதும் பின்பு அதை இழுத்தடிப்பதும், மீறுவதும், முறிப்பதும் சிங்களத் தரப்புத்தான்.
இதற்கு வழிமுறையின் விளைவுகளையெல்லாம் சிங்களத்தரப்பு இன்று நன்றாக அறுவடைசெய்கிறது.
இப்போது பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, அபிவிருத்தியின்மை என்றெல்லாம் அது பெரும் பிரச்சினைகளால் சூழப் பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல நண்பனே, இலங்கைக்கு நிதியுதவியென்றும் அபிவிருத திக்கு உதவுவதென்றும் வெளியுலகம் சிறீலங்காவில் கூடுதல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.
தெளிவற்ற சிந்தனையால் முடிவற்ற ஒடுக்குமுறையை மேற்கொள்ளத் தொடங்கிய சிங்களப்பேரினவாதம் இன்று இந்தத் தேசத்தை பாழாக்கியிருக்கிறது.
இந்த ஒடுக்குமுறை தேசத்தை இயக்க முடியாத நிலைக்கு தள்ள}யது மட்டுமல்ல வெளியாh}ன் கூடிய தலையீட்டுக்கும் வழிவகுத்துவிட்டது பார்த்தாயா?
இப்போது அரசியல் வரையில் இது வளா ந்துவிட்டது. இந்த நிலைமைக்கு சிங்களத்தரப்பே முழுப்பொறுப்பு. எத்தனை சந்தர்ப்பத்தை தமிழர்கள் வழங்கினார்கள். ஆனால் அப்போதெல்லாம் தமிழர்பலவீனமாகிவிட்டார்கள் என்றும் தமிழர்களைப் பலவீனப்படுத்தவேண்டு மென் றுமே சிங்களவர்கள் செயற்பட்டனர். உண்மையில் இந்தத்தேசத்தை அள வுக்கதிகமாக நேசித்தும் பாதுகாக்க முற்பட்டதும் தமிழரே.
நண்பா,
இப்போது நல்லதொரு அரியவாய்ப்பு. தமிழர் மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளனர். இதைப் பயன்படுத்துவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது நிலைப்பாட்டில் எந்தக் குழப்பமுமில்லை. ஓரே குரலில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளே தமிழர்களின் பிரதிநிதிகள் என்றும் விடுதலைப் புலிகளுடனேயே பேசவேண்டுமென்றும். விடுதலைப் புலிகளே தேசிய சக்தியென்றும் எல்லோரும் சொல்கின்றனர். தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு நல்ல ஆரோக்கியமான அம்சம். ஒரு யாதாhத் தத்தின் விளைவாக இது அமைந்ததாகவே கருதுகிறேன். கூட்டமைப்பினர் யதார்த்தத்தைப் புரிந்து ஒன்றிணைந்த அடிப்படையை மறக்காமல் இருப்பது நல்லது. சிறு நலன்களுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் பிளவுண்டு விடக்கூடாது. பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு நிலைப்பாடு. உள்@ராட்சிமன்றத் தேர்தலுக்கு ஒரு நிலைப்பாடு என அவர்கள் தளம்பக்கூடாது. ஆட்சிமாற்றங்களில் ஆடிவிடுதல் நல்லதல்ல. ஆடினால் அது தமிழ் மக்களின் தியாகத்துக்கு, போராட்டத்துக்கு, வாழ்வுக்கு, எதிர்காலத்துக்கு இழைத்த மாபெரும் தவறாகிவிடும்.
சரி, இவை ஒரு புறமிருக்க, வன்னிக்கு இப்போது புதுவாழ்வு வந்துவிட்டதாக எல்லா ஊடகங்களும் பேசுகின்றன நண்பனே. வன்னி நெருக்குவாரங்களால் சூழப்பட்டபோது. வன்னியை ஆக்கிரமித்த பெரும்போர் நிகழ்ந்த போது. வன்னி மக்கள் பெரும் சிரமத்துக்கும் துன்பத்துக்கும் ஆளான போது இவைகளெல்லாம் எங்கே போயின, வன்னி மீதான போரின் நீதிபற்றி, நியாயம்பற்றி, வன்னிமக்களின் பிரச்சினைகள் பற்றி, நிலைமைபற்றி அப்போது என்ன செய்தன? ஒரு புதிய பாணியாக பிரச்சினைகளைப் பேசுவதைக் குறைத்து போரை ஆய்வு செய்வதிலேயே இவை பெருங்கவனம் கொண்டியங்கின.
சரி இப்போதாவது வன்னி மீது கவனம் திரும்பியிருக்கிறது. இதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம் ஆனால் இதையும் வியாபாரத்துக்கான ஒரு உத்தியாக யாரும் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லதல்லவா?
பொருட்கள் வாங்குகின்றனதான். இன்னும் முற்றாகத் தடைதளரவில்லை. மக்களிடம் கொள்வனவுத்திறன் குறைகிறது. வீதிகள் இன்னும் புழுதியில்தான் இழப்பீடுகளும் புனர்அமைப்பும் புதிய அபிவிருத்தியும் செய்யப்படாமல் இயல்பு வாழ்வு திரும்பப்போவதில்லை. ஆனாலும் இது ஒரு சிறு ஓய்வாகத்தான் இருக்கிறது. ஒரு நெடும் பயணத்தின் போதான சிறு இளைப்பாறுதல்.
இப்போது, இதை எழுதிக் கொண்டிருக்கும் போது மீண்டும் இரண்டு யுத்த விமானங்கள் பேரிரைச்சலுடன் சுற்றுகின்றன, குண்டுகளையும் போடுகின்றன. ஒன்றுமே புரியவில்லை. மீண்டும் வேதாளம் முருங்கையை விரும்புகின்றதோ? மக்கள் மனதில் இது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தப்போகிறது. ஆனாலும் தமிழர்கள் பொறுமை காப்பார்கள் என்றே நம்புகிறேன்.
மேலும்,
இங்கே மக்கள் எப்போதும் போலவே இயல்பாக இருக்கின்றனர். நேற்றுக்கூட ஒரு நிகழ்வு-அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் அரங்கப் பெருவிழா நடந்து. உணர்வெழுச்சியுடன் மக்கள் திரண்டு பங்கேற்றனர்.
கொடியேற்றம், உயிர்த் தீ, யானும் இட்டதீ, ஆன்ம தகனம், பிரகடனம் என நாடகங்களும் நிகழ்வுகளுமாக உணர்வுபுூர்வமானதொரு அரங்காக விரிந்த 'அரங்கப் பெருவிழா' தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையைக்கோரும் பிரகடனம் விழா நிறைவில் ஒலிக்கப்பட்டது.
நீ இங்கிருந்தால் எல்லாவற்றையும் பார்த்திருப்பாய். இந்தச் சூழலில் பலவிடயம் குறித்தும். ஆனாலும், உவ விடத்திலும் உனது பணி அவசியமானதுதான். தாயகத்துக்காக உழைப்பதில் எப்போதும் உனக்கிருக்கும் மகிழ்வையும் ஊக்கத்தையும் இப்போதும் வியக்கிறேன்.
பதில் எழுது.


அன்புடனும் நட்புடனும்.
விதுல்ஜன்.
Reply
#60
ஒரு தேசத்தின் பிறப்பு
ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில்தான் இருக்கிறது என்பதை கிழக்குத்தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.


மே மாதம் பத்தொன்பதாம் திகதி, கிழக்குத் தீமோர் மக்களால் இனிமேல் ஒவ வொரு வருடமும் எழுச்சியுடனும், உணர்வுபுூர்வமாகவும் நினைவு கூரப்படப்போகும் ஒரு நாள். 450 ஆண்டுகளுக்கு மேலான கொத்தடிமை வாழ்வில் இருந்து தமது போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்று "நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோம் இப்போதுதான் நாங்கள் ஒரு மெய்யான தேசிய இனம் என்ற உணர்வு ஏற்படுகின்றது", என்று கூறி பரவசமடைகிறார்கள் கிழக்குத் தீமோh}யர்கள். இதற்குக் காரணம் மே பத்தொன்பதாம் திகதி, இந்நாளில்தான் மில்லேனியத்தின் முதல் சுதந்திர தேசமாக கிழக்குத் தீமோர் பிறப்பெடுத்தது. இந்நாளில்தான் ஒரு தனி சுதந்திர தேசமாக ஐ.நா. சபையால் உத்தியோகபுூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதுதான் கிழக்குத் தீமோh}யர்களின் இத்தனை பரவசத்திற்குக் காரணம்.
கிழக்குத் தீமோர், ஆசியாவின் தெற்குப் பகுதியில் இந்தோனேசியாவிற்குத் தெற்காக 14615 சதுர கிலோ மீற்றர் பரப்பில் 800,000ற்கும் குறைவான மக்கள் தொகையுடன் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. 1642இல் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்துக்குட்பட்டு பின் 1975இல் போர்த்துக்கேயர் வெளியேறியதும் இந்தோனேசிய இராணுவ அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டு தொடர்ந்து கொத்தடிமைகளாக நடத்தப் பெற்று வந்த மக்கள் மத்தியில் சிறிது சிறிதாக வளர்ந்த சுதந்திர வேட்கை போராட்டமாக உருவெடுத்து அதுவே இச் சிறிய தீவிற்கு சுதந்திர விடியலைக் கொடுத்திருக்கிறது.
இந்த விடியலுக்கு வழிகாட்டியாக நின்று மக்களை வழிநடத்தி கிழக்குத் தீமோரின் சுதந்திரத்துக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் சனானா குஸ்மாவோ, இவரே கிழக்குத் தீமோரின் தந்தையென எல்லோராலும் போற்றப்படுகிறார்.
சோவியத் யுூனியனின் உடைவிற்குப் பின்னர் சர்வதேச hPதியில் ஏற்பட்ட சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைமையை மிகத்திறமையாகக் கையாண்ட குஸ்மாவே, கிழக்குத் தீமோர் தொடர்ந்து இந்தோனேசிய நிர்வாகத்துக்குள் இருக்க வேண்டுமா? அல்லது சுதந்திர நாடாக வேண்டுமா? என்று கேட்டும் சர்வஜனவாக்கெடுப்பொன்றை 1999 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ. நாவின் அனுசரணையுடன் நடைபெறச்செய்தார். இதற்கு 80 சதவீதமான மக்கள் தமது சுதந்திரத்துக்காகவே வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து ஒக்டோபரில் கிழக்குத் தீமோரின் நிர்வாகத்தை ஐ. நா. சபை பொறுப்பேற்றது. அதன் பின் கடந்த மாதம் முதலாவது ஜனாதிபதித் தேர்தலையும் நடத்தியது. அதில் சனானா குஸ்மாவோ மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று புதிதாகப்பிறந்த சுதந்திர தேசத்தின் முதல் ஜனாதிபதியாகினார்.
19-05-2002 அன்று சுதந்திரம் பெற்ற கிழக்குத் தீமோரின் நிர்வாகத்தை அந்நாட்டு மக்களிடம் ஒப்படைக்கும் உத்தியோகபுூர்வமான நிகழ்வு இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது மக்கள் ஆடிப்பாடி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ந்தனர். வீதிகளில் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர். தமது நாட்டின் பிறந்த தினத்தை தமது கலாச்சாரத்துடன் கூடிய ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் உணர்வுபுூர்வமாகக் கொண்டாடினார்கள்.
பொழுது புலரும் வரை நடைபெற்ற இவ வெழுச்சி நிகழ்விற்கு ஐ. நா சபை செயலாளர் நாயகம் கோபி அனான், அவுஸ்திரேல}யப் பிரதமர், இந்தோனிசியப் பிரதமர் உள்ளிட்ட 92 நாடுகளின் இராஜதந்திரிகள் வருகை தந்திருந்தனர்.
கிழக்குத் தீமோர் சுதந்திர தேசமாக பிரகடனம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் சனானா குஸ்மாவோ ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து பிரதமர் உட்பட 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றது.
கடந்த நான்கு நூற்றாண்டு கால அந்நிய ஆட்சியில் கிழக்குத் தீமோரின் இயற்கை வளங்களும் பெருமளவில் சூறையாடப்பட்டு விட்டன. மிகவும் (வறிய) ஏழ்மையான நாடுகளில் சுதந்திர கிழக்குத் தீமோரும் ஒன்றாகிவிட்டது. இந்த வறிய நிலையை உடைத்து நாட்டின் இயற்கை வளத்தைப் பெருக்கி, பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ள சுதந்திரமாக பரிணம}க்கச் செய்யும் சவாலை ஜனாதிபதி சனானா குஸ்மாவோவுடன் கிழக்குத்தீமோரின் மக்களும் எதிர்கொண்டுள்ளார்கள். தமது நாட்டை அவர்கள் வளப்படுத்தி இயற்கை வளங்களைப் பெருக்குவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில்தான் இருக்கிறது என்பதை கிழக்குத்தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் வெற்றி விடுதலைக்காகப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்று சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)