Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா படிச்சு முடிச்ச நீங்கள் செய்ய முடியாத பலவற்றை படிக்காத அவர்கள் செய்கின்றார்கள்.
அது சரி அவர்கள் படிக்கவில்லை என்று உங்களிற்கு யார் சொன்னது. எம்மைவிட நன்கு படித்தவர்கள் அவர்கள். எந்ததுறையில் அவர்கள் சளைத்தவர்கள் இல்லை. எல்லாத்துறைகளிலும் அவர்கள் முன்னேறி இருக்கின்றார்கள். மருத்துவத்துறையில் அவர்களிற்கு நிகர் யாருமில்;லை. முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள். படித்த முட்டாள்கள் உங்களைவப்போல இங்கு அரட்டை அடிச்சுத்தான் தங்கள் படிப்பை காட்டிக்கொள்கின்றார்கள். செய்ல்களில் இல்லை
[b] ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா தனது இயக்க வரலாற்றை சொல்லுறார். அந்தநேரம் வயித்துக்கு ஒரு பிடிசோத்துக்காக தாத்தா இயக்கம் ஆரம்பிச்சு இப்ப அறிக்கை விடுறார்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அந்நியனுக்கு காட்டிக் கொடுத்தும் தனது சொந்த இனத்தையே அழிப்பதற்கு அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருப்து தான் தமிழ் படித்த அறிவாளிகளின் செயல். படித்த மாமேதைகள் பேரினத்தின் கால் நக்கி சஸ்டாங்கமாய் வீழ்ந்து கிடப்பது தெரியவில்லையா?
மெத்தப்படித்த தமிழ் மேதாவிகள், லக்ஸ்மன், நீலன், கூத்தணி சங்கரி இந்த இனத் துரோகிகள் மெத்தப்படித்ததனால் அல்லவா பெற்ற தாயைப் போன்ற இனத்தையே விலைபேசி விற்றுத் திரிகின்றார்கள்;. அந்நியனின் கால்நக்கி கூலிக்கு மாரடிக்கும் தமிழர்களில் அதிகமானோர்(எல்லோரும் அல்ல) மெத்தப்படித்த அதியுயர் மேதாவிகள்.
அண்மையில் மெத்தப்படித்த சங்கரிக்குக் கூட தமிழனாயிருந்தும் சிங்கள பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டதே, எதற்கு படித்த படிப்பிற்கா அல்லது இனப்பிரச்சனைக்கு நல்லதொரு வழிகாட்டியதாலா? இல்லை பேரினத்தின் கால்களைச் சுற்றிவந்ததால். தமிழினமே உம்மை இன்று காத்து நிற்பது படித்த முட்டாள்களா? அல்லது சுயநலம் பாராது தனது இனத்தின் விடியலுக்காய் மழைவெய்யில், கல்முள், காடுமேடென்று பாராது போராடிக் கொண்டு, தமது அத்தனை இளமைச் சுகத்தையும் எமது விடியலுக்காய் அர்ப்பணித்த அந்த அறைகுறை படிப்பாளிகளா? இன்று அங்கு நடந்து கொண்டிருப்பது கர்ணபரம்பரை- இராமாயாண- பைபிள்களின் கட்டுக் கதையல்ல நிதர்சனம். எம் கண்முன்னே தெரிபவை. தமது சொத்து சுகங்களுக்கு நாற்கலி ஆசைகளுக்காக தமது இனத்தையே ஈடு வைத்து வாழ்வபர்களில் அதிகமானவர்கள் யார்? கல்வியில் பாராபட்சம் காட்டப்பட்டு கல்வி மறுக்கப்பட்டு மற்றவர்களுக்காவது அந்த வாய்ப்புக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் படிப்பை மறுத்து எமக்காய் எம் மண்ணுக்காய் போராடிக் கொண்டிருப்பவர்கள் உயர்ந்தவர்களா அல்லது ஏட்டுப்படிப்பால் தமது சுயநலங்களைக காத்துக் கொண்டிருக்கும் படித்தவர்களா? இவர்கள் படிப்பு யாருக்கு உதவியது? அறைகுறைப் படிப்பானாலும் மற்றவருக்காய் வாழும் பண்பு, இவர்களை கூலிக்கு மாரடிக்கும் கல்விமான்களிலும் உயர்ந்தவர்களாய் காட்டி நிற்பது புரியவில்லையா? இவர்களும் படித்திருந்தால் எங்கோ ஓடிவந்து ஒழிந்திருந்து கொண்டு இனத்தை அவமானப்படுத்தியிருப்பார்களோ என்னவோ? கண்ணிருந்தும் குருடனாயிருப்பது ஏனோ? கல்வியிருந்தும் காட்டிக் கொடுக்கும் துரோகிகளாயிருப்பதேனோ? அரைகுறை படிப்பாயினும் மற்றவரை நம்பி வாழாது தமதுழைப்பிலே வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள். புரிந்தால் சரி. புரியுமா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் என்றில்லை. இங்கு புலம் பெயர்ந்த நாட்டில்கூட சிலபேர்களின் தொல்லைகள் உண்டு.
கடந்த ஞாயிறு யேர்மனியின் தென்பகுதியில் இரண்டு இளைஞர் குழுக்கழுக்கிடையே மோதல் நடந்தது.
சுமார் இருபது தமிழ் இளைஞர்கள் இந்த கோஸ்டி மோதலில் ஈடுபட்டனர். கத்தி, Baseball batஆகியன இந்த அடிதடியில் பயன்படுத்தப்பட்டன. முப்பது பொலிஸ் வாகனங்களில் வந்தே பொலிஸாரால் இந்த மோதலைக் கட்டுப்படுத்த முடிந்தது.
மோதலின் முடிவில் 21, 24, 34 வயதினரான மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவருக்கு முகத்தில் பலத்த வெட்டுக்காயம். ஏனையோருக்கு வெட்டுக்காயங்களும், அடிகாயங்களும் கைகால் முறிவுகளும் .
பன்னிரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் தரப்பின் செய்திப்படி,
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
பட்டினத்தார் பாடல் படிக்க வேண்டிய அவசியமில்லை
அடிப்படை உடல் உள விஞ்ஞானமும் சமூகம் கலாசாரம் பற்றிய தெளிவும் இருந்தாலே போதும்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
விலங்குகளுக்கு ஒப்ப பெட்டைக்காக அடிபடுதல் பாடசாலைகளில்தமிழ் இலக்கியங்களூடும் (இராமாயணம்) பின் சினிமாவினூடும் புகுத்தப்படுகின்றன.
புலத்தில் பெட்டைக்கான சண்டை வர முக்கிய காரணங்கள் இளைஞர்கள் வினைத்திறனான பொழுது போக்கு அம்சங்களை நாடாததும் அது பற்றிய தெளிவின்றி அறிவின்றி இருப்பதும் தனிமைப்பட்ட வாழ்க்கை முறையும் அதிக சுதந்திரமும் கண்காணிப்பாரற்ற வளர்ப்பு முறையும் 'பெண் சுதந்திரம்' என்று கூறி அரை குறையாக வீதிகளில் அலைந்து திரியும் தமிழ் கலாசார பின்னணியில் வந்த அரை குறைப் பெண்களும்..பிள்ளைகளின் நடத்தையில் கவனமற்ற பெற்றொருமே...!
எனவே வெறுமன இளைஞர்களை குறை கண்டு கொண்டிராமல் கேவலங்களுக்கான சரியான காரணிகளை கண்டு அகற்ற வழி செய்வதும் இது தொடர்பில் இளைஞர் யுவதிகளை அறிவுறுத்தி வழி நடத்துவதுமே இப்படியான கேவலங்கள் நம்மைவிட்டு ஓட வழி சமைக்கும் அல்லது புலத்தில் உள்ள பொலிஸார் புலிகளின் உதவியை நாட வேண்டியதுதான் ஒரே வழி! :evil: :roll: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
பெண்களிற்கான சண்டை இப்ப அரசியல் மாதிரி அது எல்லா இடத்திலும் கட்டாயம் நடைபெறும்.இந்த அரேபிய மண்ணில்கூட அந்த அக்கிரமங்கள் நடைபெறுகின்றன.
அதை விடுங்கள்
யாழ்ப்பான நிலைமையை எடுத்துப்பார்த்தால் 15வயது 16 வயத தாண்டியவுடன் அதாவது க.பொ.த.சாதராண தரம் முடிந்தவுடன் எல்லோரும் அவரவர் பெரியவர்கள் என்ற தோரணையில் வீட்டிற்கு கட்டுப்படாது தம்மை தாமே வழிநடத்த முயல்கின்றார்கள். இன்றை நிலையில் இராணுவம் என்று ஆட்சிக்கு வந்ததோ அன்றிலிருந்து பெற்றேர் பிள்ளைகள் மீது வைக்கும் பாசத்தை அதிகரித்துவிட்டனர். ஏனெனில் பயம். பிள்ளைக்கு அடித்தால் அவன் இயக்கத்துடன் திரிவான். பிறகு அவனை ஆமி பிடிக்கும் என்ற பயம் அவர்களை மேலும் மேலும் தவறுகள் செய்ய து}ண்டுகின்றது. என்னவென்றாலும் செய்யட்டும் அவன் எங்களுடன் இருந்தால் அதுவே போதும் என்ற நிலையில்தான் இன்றைய பெற்றோர்.
அதற்கேற்றாப்போல இராணுவமும் அவர்களை கைப்பாவைகளாக மாற்றிக்கொண்டுள்ளது. பாலியல் உணர்வுகளை து}ண்டக்கூடிய புத்தகங்கள் படங்கள் என்பவற்றை இளைஞர்கள் மத்தியில் பரவவைத்து அவற்றில் மூலம் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கின்றார்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இருந்த யாழ் மாவட்டத்திற்குமு; இன்றைய யாழ்மாவட்டத்திற்குமு; எவ்வளவோ வேறுபாடு. அன்று நம்பிக்கை ஓளி இளைஞர்கள் மத்தியில் இருந்தது. இன்று அறNவு இல்லை. ஏனோ தானோ வாழ்க்கை வாழ்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் இராணுவம் என்பதை தவிர வேறுயாரும் அல்ல.
ஒரு பெண் தன்னை காதலிக்காவிட்டால் எனது காலப்பகுதியில் ஒரு தடவை கேட்டுப்பார்ப்பார்கள் அவள் மாட்டேன் என்றால் அத்துடன் விட்டுவிடுவார்கள் மனதில் அவளுடன் வாழி;வார்கள். ஆனூல் இன்றோ அவன் மாட்டேன் என்றால் அவளின் வீட்டிற்குள் புகுந்து கடத்திச்செல்லக்கூடிய நிலைமை அங்கு உருவாகி உள்ளது. இதில் பகிடி என்னவென்றால் பாதிக்கப்பட்ட பெண் அவனைப்பற்றி பொலிசில் புகார் கொடுத்தாலும் பொலிஸ் அதைப்பற்றி அக்களை எடுப்பதில்லை. தற்போது அரசியல்பணிக்கு வந்திருக்கும் போராளிகளால் அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து வருகின்றது. அதை நான் எனது வடமராட்சிப்பகுதியில் அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பான பகுதியில் அவர்களால் எதையுமு; செய்ய முடியாத நிலைமை ஏனெனில் அங்கு இராணுவத்துடன் இளைஞர்கள் மிக நெருக்கமான ஒரு உறவை வைத்திருக்கின்றார்க்ள. ஏதாவது தவறு செய்தால்உடனயேN இராணுவத்துடன் சேர்ந்து விடுகின்றார்கள். அதனால் புலிகளில் கட்டுப்பாட்டிற்குள் அவர்களை கொண்டுவரமுடியவில்லை. அப்படி முனைந்தால் யுத்தநிறுத்த மீறல் என்று தாத்தா மாதிரி சில பைத்தியங்கள் கதை கட்டிவிடும்.
இன்றைய இளைஞர்களில் இத்தகைய மாற்றத்திற்கு முக்கிய காரணம் அளவுக்கதிகமான பணம். அது அவர்கள் கைகளில் கடல்நீர்போல நிறைந்து இருக்கின்றது. அள்ள அள்ள குறையவில்லை அதனால் அவாக்ளும் ஆசைதீர வாழ்வை அழித்து அனுபவிக்கின்றார்கள். இதற்கு நாம் என்ன செய்யமுடியும்.
[b] ?
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
இதற்கு என்ன முடிவு? ஒன்று புலிகளின் ஆட்சி வரட்டும். அல்லது பெண்களே பேனாவுடன் துப்பாக்கியையும் தூக்குங்கள். எங்கோ யாரோ கஸ்டப்பட்டு அனுப்பும் பணம் உடம்பு நோகாமல் கிடைக்கும் போது மற்றவைiயும் தேவைப்படும் தானே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
மானத்துடன் வாழ நினைத்ததுகள் வீட்டைப்பற்றிக் கவலைப்படவில்லை. புருஷன் இல்லாமல் போனாலும் பரவாயில்லை மானத்தோட வாழ வேணும் என்டு நினைச்சு பொட்டு வைச்சு அனுப்பினதுகள். வீட்டில இருந்து செத்துப் போனதுகளுக்கு கூலிக்குழுக்களும் முக்கிய காரணம். காட்டிக் கொடுத்து வயிறு வளக்க எண்ணித்தான் ஆயுதமில்லாதவையை காட்டிக்குடுத்து அழிச்சது. வேட்டி நஷனல்காரர் அரசியல் செய்யும் போது தமிழனிடம் கோவணம் மட்டும் தான் மிஞ்சியிருந்தது. இப்பம் மேல் வேட்டியாவது கிடைச்சிருக்கு. அதையும் கோவணத்தோட உறிஞ்சி போட்டு நிக்கிறன் என்று ஒற்றைக்காலில் நின்றால் நாங்கள் என்னப்பா செய்ய?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஓமோம் படிச்ச அறிவுள்ளதுகள் பதவிக்கும் பகட்டுக்கும் தொடங்கி முடியாத போது காலில் விழவாவது முடிந்திருக்கும். அவர்களின் பெரிய படிப்பும் பட்டமும் தான் அந்நியனுக்கு சேவகம் செய்து கொண்டும் காட்டிக் கொடுத்துக் கொண்டும் இருக்கச் சொன்னது போலும். எதைத்தந்தாலும் போதும் அதோட கொழும்பிலே ஒரு அரசாங்க வேலையுடன் ஒரு வீடும் வேணும் என்று கேட்டது படித்த தமிழ்தான். வெட்கம் கெட்டதுகள். போராட்டம தான் படித்ததுகளுக்கு நாட்டுப்பற்றையாவது கொடுத்திருக்கின்றது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan