வணக்கம் நண்பர்களே...
யாவா கற்போம் பகுதியை மீண்டும் தூசி தட்டுகிறேன். எத்தனை நாட்களுக்குத் தொடரமுடியும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் இன்று யாழ் கருத்துக்களத்தில் இத்துறைசார்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். நான் இடையில் விட்டாலும், மிகுதியை அவர்கள் தொடர்வார்கள் என நம்புகிறேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஏற்கனவே முன்னைய பகுதிகளில் எழுதியது போன்று யாவா கற்பதற்கு வசதியாக "JAVA" மென்பொருளை(யாவாவை) கணினியில் நிறுவுங்கள் (Installation). அல்லது சுருக்கமாக கீழெ எழுதுகிறேன். அதன் அடிப்படையில் நிறுவுங்கள் (Installation). விளங்காதவற்றைக் கேளுங்கள். சோபனாவும் இத்துறையில் பணிபுரிபவர், எனவே அவரும் விளக்கம் தருவார்.
<b>யாவா நிறுவுதல்</b>
1. நான் ஏற்கனவே முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டது போன்று உங்கள் கணினியின் செயற்திறன் போதுமானதாக இருக்கவேண்டுமென்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
2.
http://java.sun.com/j2se/1.4.2/download.html என்னும் முகவரிக்கு சென்று netBeans (J2SE v 1.4.2_07 SDK with NetBeans 4.0 Bundle) மென்பொருளைத் தரவிறக்குங்கள்.
3. முன்னைய தொடரில் குறிப்பிட்டது போல் தனித்தனியே எதையும் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. எனவே இப்பொழுது நீங்கள் தரவிறக்கியதை நிறுவுங்கள். (நிறுவும் போது அது எங்கு நிறுவவேண்டும் எனபதைத் தானாகவே தெரிவுசெய்து காட்டும், அதில் மாற்றம் செய்யாமல் அப்படியே தொடருங்கள்.) நிறுவிய பின் உங்கள் வன்தட்டின் C: பரிவில் "<b>C:\j2sdk1.4.2_07</b>" இப்படியொரு கோப்பு (FOLDER) இருக்கும்.
4. அடுத்து அதற்கான Documentation ஐயும் தரவிறக்குங்கள். அது ZIP கோப்பாக இருக்கும். எனவே அதனைப் பிரித்து <b>C:\j2sdk1.4.2_07\</b> இற்குள் சேமித்து வையுங்கள்.
அனைத்தையும் சரியாக செய்திருந்தால், பின்வருமாறு உங்கள் <b>C:\j2sdk1.4.2_07</b> பிரிவு இருக்கும்:
<img src='http://www.yarl.com/forum/files/java1.jpg' border='0' alt='user posted image'>
5. சரி இனி யாவா மொழியில் எழுதிப் பயில்வதற்கு எமக்கு ஒரு செயலி வேண்டுமல்லவா. நமது ஆரம்பப் பயிற்சிக்கு இருக்கவே இருக்கிறது <b>Notepad</b> அல்லது <b>Editor</b>. அல்லது இதற்கென்று உள்ள சிறப்பான, இலவசமான செயலி ஒன்றை இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
http://www.jcreator.com/download.htm என்னும் முகவரிக்கு சென்று <b>JCreator LE version (build 3.50.011)</b> என்னும் செயலியைத் தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்.
தொடரும்...[/b]