Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அதுவும் சரிதான் அங்கே இருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
சரி இதை விடுவோம்.
கொழும்பில் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழும் மற்றவர்கள் பேசும் தமிழும் வித்தியாசம் கவனித்திருக்கிறீர்களா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஆங்கிலத்தில் கூட அமெரிக்கமக்கள் பேசும் ஆங்கிலம் வேறுவிதம; பிரித்தானிய மக்கள் பேசும் ஆங்கிலம் ஒருவிதம்.
உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கும்.
தமிழிலும் இப்படித்தான்
எப்படி இருக்கிறாய், என்பது சென்னை பாசையில் எப்படி கீரே என்று மருவிவிட்டது.
இந்திய தமிழில் பாவிக்கும் தமிழ்ச் சொற்கள் இலங்கைத்தமிழில் இல்லாமல் இருக்கலாம்.
அதே போல இலங்கைத் தமிழில் பாவிக்கும் சில தமிழ்ச் சொற்கள் அங்கே இல்லை.
உதாரணமாக யாழ் மக்கள் அமளி என்ற சொல்லை பேச்சு வழக்கில் பாவிப்பதுண்டு.
"அங்கே என்ன ஓரே அமளியா இருக்கு?'
அமளி என்றால் ஆரவாரம் இரைச்சல் போன்ற சொற்களை குறிக்கிறது என்று தமிழ் அகராதியில் படித்த நினைவு.
இச்சொல் இந்திய தமிழில் பாவிப்பது இல்லை.
இப்படி பல சொற்கள் இருக்கின்றன தேடி
எடுக்க வேண்டும்.
இதே போல் இந்திய தமிழில் இருக்கும் நல்ல தமிழ்ச் சொற்கள் பற்றி அறிந்தவர்கள் கூறுங்கள்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
உண்மை உண்மை. இன்னும் நிறைய இது போல தகவல்களை தாருங்கள்
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
இந்த நூற்ராண்டில் எந்த ஒரு தமிழும் துயதமிழ் அல்ல.........
உண்மைதான். உங்கள் கருத்துக்கு நன்றி ராஜன்.
மற்றய யாழ் உறுப்பினர்களும் கருத்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
வணக்கம் நண்பர்களே
சுரேன் அண்ணாவின் விவாதத்திற்கு பதில் சொல்ல முன்பு ஒரு
வார்த்தை.
இப்படியான ஒரு ஆய்வுக்குரிய விவாதத்திற்கு யாழ்
இணையத்தின் உறுப்பினர்களாக உலகெங்கும் வாழும்
பல்வேறுபட்ட நண்பர்களிடம் இருந்து கருத்துகள் வந்து
குவியும் என எதிர்பார்த்தேன். ஏமாற்றம் தான்
கிடைத்தது. ஏன் கருத்துக்களத்திற்கு என்ன
நடந்தது?
அவன் அப்படி செய்கிறான் இவன் இன்ன செய்ய
போகிறான் என்று மற்றவர்களின் அலுவல்களில் மூக்கை
நுளைக்கும் சுவாரசியம் இந்தக் கருத்தாடலில் இல்லாமல்
போய்விட்டதா?அல்லது எல்லோருக்கும் இக்கருத்தில்
சம்மதமா?
இப்போது எனது கருத்துக்கு வருகிறேன், யாழ் மக்களால்
பேசப்பட்டு வரும் தமிழ் தான் தூய தமிழ் என்பதை
நான் மறுக்கிறேன் எமது மொழியிலும் நிறைய பேச்சு
வழக்குகள்,வேற்று மொழி கலப்புகள் இருக்கின்றன ஆனால்
சுரேன் அண்ணா சொல்வது போல பேச்சு நடை இருப்பதால்
மட்டும் அந்த மொழி தூய்மை குன்றியதாக ஆகிவிடாது எங்கே பேச்சு நடை இல்லாத ஒரு மொழி சொல்லுங்கள் பார்ப்போம்? பேச்சு நடை அல்லது நாட்டு வழக்கு என்று கூறப்படும் மொழியின் பேச்சு வடிவம் தான் மொழியின் உண்மையான பயன் பாட்டை எடுத்துக்காட்டுகிறது. அதே போன்று அதுவே அனைவராலும் அறியப்படுவதுமாகும்.
இன்று நாங்கள் விவாதிக்கும் யாழ்ப்பணத்தமிழ்,இந்தியத்தமிழ்,இன்னும் பல்வேறு வட்டாரத்தமிழ் எல்லாமே தமிழ் மொழியின் பல்வேறு வட்டார நடைகளே அன்றி இவைதான் எமது மொழி என்று இல்லை.அப்படியிருக்க நாம் எப்படி யாழ்ப்பாணத்தமிழ் தூய தமிழ் என்று கூறலாம்?ஒரு யாழ்ப்பாணத்தவரை தமிழில் ஒரு கட்டுரை எழுதச்சொன்னால் அவர் என்ன எழுதுவாரோ அதை தான் இந்தியாவில் உள்ள ஒருவரும் எழுதுவார் ஆனால் இங்கே தான் முக்கிய பிரச்சனை வருகிறது மொழிக்கலப்பு.
இன்று உலகிலே வழக்கில் உள்ள மொழிகளில் தொன்மையும்
சிறப்பும் நிறைந்து விளங்கும் 5 மொழிகளிலே தமிழ்
மொழியும் ஒன்று ஆனால் உண்மையை சொல்லப்போனால் தமிழ்
மொழி என்று சொல்வதை விட திராவிட மொழி என்று
சொல்வது தான் பொருத்தம்.அதற்கு தான் தொன்மையான
வரலாறு
தமிழ் மொழியானது திராவிட மொழிக்குடும்பத்தில்
சிறப்புற்று நிற்பதற்கு காரணம் அதன் இலக்கணம்.
அருவியாய் பாயும் இலக்கிய படைப்புகள் எல்லவற்றையும்
ஒரு வரம்புக்குள் கொண்டு வந்து தமிழ் மொழியின் அழகு
கெடாமல் பார்ப்பது இலக்கணத்தின் வேலை.
மொழியின் அடிப்படை தேவை தொடர்பாடல்தான், எனவே
காலப்போக்கில் எமது வாழ்க்கை முறை மாறும் போது நாம்
பேசும் மொழியும் மாறித்தான் ஆக வேண்டும். அப்படி
மாறாவிட்டல் காலப்போக்கில் அது பயன்பாட்டில் இல்லது
அழிந்துவிடும். அதை கருத்தில் கொண்டுதன் எமது
தமிழ் மொழியின் இலக்கணத்தை வகுத்த
வித்தகர்கள் தூர நோக்கில் செயற்பட்டு, தமிழ்
மொழியில் பிற மொழியின் கலப்புக்கு வழி செய்தனர்.
அதேவேளை பிற மொழி கலப்பால் எமது மொழியின்
சுவையும் தனித்தன்மையும் குன்றி விடக்கூடாது
என்பதற்காகவே தற்பவம், தற்சமம் என்று இரு
பிரிவுகளை வகுத்து அதற்கும் வரம்பு கட்டினர். அதாவது பிறமொழி சொற்களை தமிழில் கலந்து வழங்கும் போது அவை இன்ன வடிவத்தில் இப்படி இருக்க வேண்டும் என வகுத்தனர்.
அதனாலே பிரமொழிகள் உதாரணமாக போர்த்துக்கல்,சமச்கிருதம்,ஒல்லாந்து நாட்டு சொற்கள் காலத்துக்கு காலம் தமிழுடன் வந்து கலந்தாலும் தமிழின் தனித்தன்மை கெடாது பாதுகாகப்பட்டு வந்தது.
ஆனால் இந்தியாவில் உள்ள அனேக எழுத்தாளர்கள் முற்போக்கு எழுத்து என்ற பெயரில் இயலுமான வரை தமிழில் ஆங்கிலத்தை கலந்து எழுதுகிறார்கள் அதை படிப்பவர்கள் இது தான் தமிழின் உண்மையான வடிவம் என நினைத்து பேச்சு வழக்கிலும் அதையே பின்பற்றுகிறார்கள் இது எழுத்தாளர்கள் என்று மட்டுமல்ல கவிதாசிரியர்கள், புத்தக ஆசிரியர்கள்,முக்கியமாக சினிமா பாடலாசிரியர்கள் போன்றோரதும் பிழை குறிப்பாக சொல்லப்போனால் ஆனந்தவிகடன்,குமுதம் போன்ற பத்திரிகைகள் இந்த எழுத்தாளர்களை ஊக்குவித்ததோடு தங்கள் பத்திரிகையிலும் பாதிக்குமேல் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தினர் இது இப்பத்திரிகைகளின் வாசகர்களுக்கு தெரியும் இப்படி பல்வேறு காரணிகளால் இந்திய நாட்டில் வழங்கும் தமிழின் வடிவம் தரம் குன்றி விட்டது என்றுதான் சொல்லவேண்டும் ஒரு விவாதத்திற்காக ஏன் யாழ்ப்பாணத்தில் பேசும் தமிழ் மொழியில் ஆங்கிலக்கலப்பு இல்லையா என்று கேட்டால் உண்டு ஆனால் குறைவு நாம் பேச்சு வழக்கில் ஆங்கிலத்தை பயன்படுத்தினாலும் எழுதும் போது இயன்றவரை இலக்கண சுத்தத்துடன் தான் எழுதுகின்றோம் அந்த வகையில் எமது தாய்மண்ணில் விரல் விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்களே இருந்தாலும் வியாபாரத்துக்காக தமிழை விற்காமல் அதன் மரபை பேணி வருகின்றார்கள் என்றே சொல்லவேண்டும்.
என்னதான் நாம் சினிமா பார்த்தாலும், இன்னமா எப்டி கீறே என்று கேட்பதில்லை அப்படி பார்க்கும் போது உலகெங்கிலும் வழங்கும் தமிழின் வடிவத்தில் யாழ் தமிழ் ஓரளவு தூய்மையானது அல்லது மாசு குறைந்தது என்றே சொல்லவேண்டும் உதாரணத்திற்கு இந்தக்கருத்துக்களத்தில் வரும் கருத்துகளை வாசித்துப்பாருங்கள் நாங்கள் யாரும் சங்கத்தமிழில் எழுதுவதில்லை யாவரும் விளங்கிகொள்ளும் வகை இலகு தமிழில் தான் எழுதுகின்றோம் இதை பார்த்தவுடனே உலகின் எந்த மூலையில் எந்த வட்டாரதமிழில் பேசும் தமிழ் மகனாலும் இதை புரிந்து கொள்ள முடியும் இது யாழ் மக்களின் எழுத்து என்று
நான் சுரேன் அண்ணா சொன்ன ஒரு கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் அதாவது எமது தமிழை சிங்களத்தமிழ் அல்லது மலையாளத்தமிழ் என்று சொல்பவரை நானும் சந்திதிருக்கிறேன் தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழ் நண்பர்கள் கூட சொல்வார்கள் எங்கே அப்படி சொல்பவரில் ஒருத்தராவது இலகு தமிழில் எந்தவொரு ஆங்கிலக் கலப்புமின்றி ஒரு பந்தி எழுதட்டும் பார்ப்போம் அவர்கள் சொல்வதால் எமது தமிழின் தரம் குன்றி விடுமா?
நண்பர்களுக்கு நாம் விடும் வேண்டுகோள் இதுதான் காலத்தின் தேவைக்கு ஏற்றமாதிரி தமிழில் ஆங்கிலச்சொற்களை பயன்படுங்கள் ஆனால் கலந்து விடாதீர்கள் ஆங்கிலச்சொற்கள் பயன்படுத்தவேண்டிய இடத்தில் அவற்றை அப்படியே பயன்படுத்துங்கள் தயவு செய்து மவுஸ்,கம்பியூட்டர்,பிறின்ரர் என்று தமிழுக்கு மாற்றி எழுதவேண்டாம் அததற்குரிய ஆங்கில உச்சரிப்பில் அப்படியே எழுங்கள்.அதற்காக அச்சுப்பொறி,ஆவணப்பெட்டகம் என்று சங்ககால நடையில் எழுதி மொழியின் பயன்பாடையும் குறைக்க வேண்டாம்
பல்வேறு நாடுகளில் வழங்கும் தமிழின் பேச்சு நடைகளை அடுத்து தருகிறேன் அதே போன்று யாழ் மண்ணில் நாம் வழங்கும் சில தனிச்சிறப்புள்ள வட்டார நடைகளையும் எழுகிறேன் நண்பர்களே உங்களுக்கு தெரிந்தவற்றையும் எழுங்கள்
அன்புடன்
ஈழவன்
"தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள்"
உங்களது நீண்ட விரிவான கருத்துக்களுக்கு நன்றி ஈழவன்.
உங்களை போன்றே நானும் பல கருத்துக்கள் பலவிதமான வாசகர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன். தனிப்பட்ட பழிவாங்கலுக்காகவே இந்த களத்தை பலர் உபயோகிக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. உதாரணமாக கடன் அட்டை விவகாரத்தை குறிப்பிடலாம். யாழ் களத்தில் நிறைய படைப்பாளிகள் இருந்தும் அவர்களிடமிருந்து கூட கருத்துக்களை காணவில்லை.
உங்கள் கருத்திற்கு இனியாவது பதில் அளிப்பார்கள் என நம்புவோம்.
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
அதெல்லாம் ஒரு காலம் இனிமேல் எருமை மாட்டிலை மழை பெய்த கதை தான். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Suren Wrote:உங்களது நீண்ட விரிவான கருத்துக்களுக்கு நன்றி ஈழவன்.
உங்களை போன்றே நானும் பல கருத்துக்கள் பலவிதமான வாசகர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன். தனிப்பட்ட பழிவாங்கலுக்காகவே இந்த களத்தை பலர் உபயோகிக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. உதாரணமாக கடன் அட்டை விவகாரத்தை குறிப்பிடலாம். யாழ் களத்தில் நிறைய படைப்பாளிகள் இருந்தும் அவர்களிடமிருந்து கூட கருத்துக்களை காணவில்லை.
உங்கள் கருத்திற்கு இனியாவது பதில் அளிப்பார்கள் என நம்புவோம்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
அது சரி தாத்தா.. நீங்க அந்த 'ழ' பற்றி எனது கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எம் இரு விழிகள்....விழிகள் காப்போம் விதிவிலக்குகள் விரட்டுவோம்....! வீரம் கொண்டு வீணரை வீழ்த்தி விவேகத்தால் படைப்போம் வீர தமிழீழம்....!
'மக்' என்ன வெள்ளைமாளிகை முன்னும் இடுவோம் முழக்கம்... அற்ப உயிருக்காய் மானம் விற்றுப் பிழைக்கும் அற்பங்கள் அல்ல நாம் என்று அகிலம் உரைப்போம்....!
உண்மைத்தமிழா... வீர முலை கொண்டு உன் அன்னை ஊட்டி இருந்தால் தமிழ் மானம் நீ நா கூசாமல் வெட்டியாய் வரையாய் நாலு வார்த்தை....!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>