ப்ரியசகி Wrote:சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே.. 
<b>வாசனையாக வெறும் தேனீர்</b>
1 ஏலக்காய்
கறுவா சிறியதுண்டு
1 கராம்பு
இவற்றை வறுத்து பொடி செய்து தண்ணீர் கொதிக்கும்
போது போடுங்கள்..... (3 பேருக்கு)
பின்னர் தேயிலை போட்டு சாயம் நன்றாக இறங்கியதும்
வடித்து சீனி போட்டு கலக்கவும்....
வாசமான தேத்தண்ணி ரெடி....
_______________________
<b>பால்தேத்தண்ணி</b>
தேவையான அளவு பாலை அடுப்பில் நன்றாக காய்ச்சுங்கள்...
வேறொரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை
கொதிக்க வையுங்கள்....
தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதனுள் தேயிலையை
போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள்..
(தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர் தான் தேயிலையை
போட வேண்டும்...)
பின்னர் பாலையும் அதனுடன் கலந்து
5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.......
பின்னர் தேவையான அளவு சீனி சேர்த்து அருந்துங்கள்...
*அடுப்பில் வைத்து தயாரிக்கும் தேனீர் சுவை அதிகம்..
*பால் தேனீர் என்றால் சாயம் அதிகமாக இருக்கவேண்டும்..
சீனி குறைவாக போடவேண்டும்..
*வெறும் தேத்தண்ணிக்கு அதிக சாயம் கூடாது....
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>