Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நமக்கு அன்பகம் போடுற புதிருகள் சிலது புரியிறமாதிரி கிடக்கு.......
நீங்க தொடருங்க அன்பகம்.......... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
தென்னிந்திய முஸ்லிம் மார்க்க அறிஞர் நேற்று அதிகாலை நாடு கடத்தப்பட்டார்
இலங்கைக்கு வருகை தந்து இங்கு இஸ்லாமிய மதப் போதனையில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய மார்க்க அறிஞர் மௌலவி பி.ஜெயினுலாப்தீன் நேற்று புதன்கிழமை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.....
......கடந்த இரண்டு வார காலமாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதபோதனையில் ஈடுபட்டு வந்த இவர் இறைவனை அடைவதற்கு இறை தூதர்களின் உதவி தேவையில்லை எனப் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் இந்தக் கருத்தை இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினர் ஏற்க மறுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் இவரது போதனை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு பிரவேசித்த மற்றுமொரு இஸ்லாமியக் குழுவினர் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இருவர் காயமடைந்திருந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் இந்நிகழ்ச்சியைத் தடைசெய்திருந்தனர். அத்துடன் இவரைக் கைது செய்த பொலிஸார் நேற்று அதிகாலை இவரை நாடு கடத்தியுள்ளனர்......
........காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாசல் முன்றிலிலிருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பிரதான வீதிகள் ஊடாக பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா கொழும்பைச் சேர்ந்த மௌலவி நியாப் காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி ஏ.எல். ஜஹியா ஆகியோரின் கொடும்பாவிகளும் எடுத்துச் செல்லப்பட்டன......
தினக்குரலில்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
உத்தேச பொதுக்கட்டமைப்பு குறித்து அரசிடம் விளக்கம் கேட்கிறது ஹெலஉறுமய
.........கடல்கோள் நிவாரணப் பணிகளுக்காக பொதுக் கட்டமைப்பொன்று உருவாக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.
இதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதா? அமைக்கப்படவுள்ள பொதுக்கட்டமைப்பு எந்த அடிப்படையானது? இந்த பொதுக் கட்டமைப்பு குறித்து சபைக்கு அறிவிக்கப்படுமா? இது குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.
வடக்குஇ கிழக்கு பகுதிகளில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளும் உள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றும் உள்ளது. எனவே இப் பிரதேசங்களுக்கென பொதுவான கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதென்பது பொறுத்தமற்றது.
அவ்வாறு செய்வது முழு வடக்கு கிழக்கு மக்களையும் அடிமைப்படுத்தி புலிகளிடம் கையளிக்குமொரு நடவடிக்கையாகவே அமையும்.
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
ஜனாதிபதியாகும் சகல தகுதியும் தமக்கிருப்பதாக சபையில் மார்தட்டினார் மகேஸ்வரன்
......இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. ஒருவருக்கு அநீதி நடந்தால் நீதிமன்றுக்குப் போக வேண்டும். ஆனால் இங்கு நீதிமன்றிலேயே அநீதி நடக்கின்றது. நீதிபதிகள் பக்கச் சார்பாக நடந்து கொள்கிறார்கள். நீதிமன்றங்கள் மூலம் அரசியல் பழிவாங்கல்கள் நடக்கின்றன.
ஜனாதிபதி நிதியத்தில் 24 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது. இதை நாம் எந்த நீதிமன்றுக்குச் சென்று முறையிடுவது?
ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள 1 கோடி 80 இலட்சம் மக்களின் நலனா? தனிப்பட்ட ஒருவரின் நலனா? என்பதை அனைவரும் யோசியுங்கள். இந்த நாட்டுக்கு நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே தேவை.
கூட்டரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறிப்படுகின்றார்கள். எமது கட்சியில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லை. ஜனாதிபதியாகக் கூடிய அனைத்துத் தகுதிகளும் என்னிடம் உண்டு. யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். என்னை எங்கு நிறுத்தினாலும் நான் வெற்றி பெறுவேன். என்னைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்..........
தினக்குரலில்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த
குடும்பஸ்தருக்கு "எயிட்ஸ்' நோய்!
யாழ். ஆஸ்பத்திரி பரிசோதனையில் கண்டுபிடிப்பு
யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு எயிட்ஸ்டு நோய்க்கிரு மியான எச்.ஐ.வி. தொற்றியிருப்பது
ஆரம்பப் பரிசோதனைகளில் கண்டுபிடிக் கப்பட்டிருக்கின்றது.
தொடர்ச்சியான காய்ச்சலினால் பீடிக்கப் பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரது நோய் நிலை மையை அடுத்து இவரது இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டபோது எச்.ஐ.வி. தொற்றி இருப்பது தெரியவந்திருக்கிறது.
மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணி யாற்றி விட்டு தாயகம் திரும்பிய இவருக்கு வயது 38. நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இரத்தப்பரிசோதனை மூலம் எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரது மனைவியும் இரத்தப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டிக்கிறார்.
இவருடன் சேர்த்து குடாநாட்டில் இதுவரை 18 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானமை கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 16 பேர் உயிரிழந்து விட்டனர்.
உதயனில்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
அரசியல்துறை அலுவலகத்தில்
பயணப் பொதிகைகள்
முகமாலையிலிருந்து நேற்று யாழ்ப்பாணம் நோக்கி வந்த வாகனம் ஒன்றிலிருந்து வீழ்ந்த இரண்டு பயணப் பொதிகள் பொற்பதி வீதி கொக்கு விலில் உள்ள யாழ். மாவட்ட அரசியல்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் - சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆதாரம் காட்டி அதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் - அறி விக்கப்பட்டுள்ளது.
-உதயனில்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
குடும்பஸ்தருக்கு \"எயிட்ஸ்' நோய்!
யாழ். ஆஸ்பத்திரி பரிசோதனையில் கண்டுபிடிப்பு
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:twisted: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
ஆழிப்பேரலை அழிவு தொடர்பான நிவாரண மற்றும் மீள்கட்டு மானப் பணிகளை முன்னெடுப்பதற்கான பொதுக்கட்டமைப்பு குறித்து அரசும்இ விடுதலைப் புலிகளும் இணக்கம் கண்டாலும் அதற்காக அரசிலிருந்து ஜே.வி.பி. வெளியேறிவிடாது. அதற்கான உறுதிமொழியை ஜே.வி.பியினர் எனக்குத் தந்துள்ளனர்.
- இப்படிக் கதை விட்டிருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர்.
லண்டனில் பி.பி.ஸி. தொலைக்காட்சிக்கு அளித்த விசேட பேட்டியின்போதே அவர் இவ் வாறு தெரிவித்திருக்கின்றார்.......
.........ரோய்ட்டருக்கோ வேறு எவருக்கோ அவர் கள் (ஜே.வி.பியினர்) வேறு என்ன கூறியிருந் தாலும் அரசை விட்டுவெளியேறுவதில் தங்க ளுக்கு விருப்பமில்லை என்று ஜே.வி.பியினர் எனக்கு உறுதி அளித்துள்ளனர்.
அவர்கள் பேச்சுமூலமான தீர்வையே வேண்டுகின்றனர். புலிகளின் தீவிர நிபந்தனைக ளையே அவர்கள் எதிர்க்கின்றனர்.
பொதுக்கட்டமைப்பை உருவாக்குவது மிக முக்கியமான விடயம் என நான் உணர்கிறேன். பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்துவது என்ற ஜனாதிபதியின் திடமான முடிவை - தீர்க்கமான தீர்மானத்தை - நான் முற்றும்முழுவதாக வர வேற்று ஆதரிக்கிறேன்.
பொதுக்கட்டமைப்புக் குறித்துப் புலிகளுடன் பேசி இணக்கத்துக்கு வருவதை யாராவது எதிர்ப்பார்களானால் அவர்கள் சுத்தக்கிறுக்கர்க ளாகவே இருப்பார்கள் - என்றால் கதிர்காமர்.
உதயனில்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
இலங்கை தேசிய சமாதான பேரவை தனது ஏ-9 புகைப்படக் கண்காட்சியை அடுத்த மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதிவரை யாழ்ப்பாண நூலகத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியின் அனைத்துப் புகைப்படங்களும் இலங்கையில் 20 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் யேர்மனி புகைப்படப்பிடிப்பாளரான வோல்டர் கெலர் என்பவருடையதாகும்இப்புகைப்படங்கள் யுத்த நிறுத்ததுக்கு பின்னர் ஏ-9 வீதியில் மக்கள் வாழ்க்கை மாறுதல் அடைந்த விதம் தொடர்பானவையாகும். இப்புகைப்பட கண்காட்சியில் 120 புகைப்படங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளது.
இப்புகைப்பட கண்கண்காட்சி ஏ-9 வீதியினுடாக தங்களை அழைத்துச் செல்லும் முதலாவது புகைப்படகண்காட்சியானது கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடத்தப்பட்டது. அங்கு சிங்கள பேரினவாதிகளின் எதிர்ப்புக்கள் பல மேற்கொள்ளப்பட்டன. ஏ-9 பாதையின் முதலாவது மைல்கல் கண்டி குயின்ஸ் ஹோட்டலருகில் என்ற காரணத்தினால் முதலாவது கண்காட்சி கண்டியில் நடத்தப்பட்டது.
யாழ்பாண நூலகத்தின் அருகே ஏ-9 வீதி நிறைவடைகின்றது. ஆதலால் இரண்டாவது கண்காட்சியை யாழ்ப்பாண நூலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டதன் பின் இப்புகைப்படக் கண்காட்சி ஏ-9 வீதியினூடாக கிளிநொச்சி வவுனியா போன்ற பிரதேசங்களிலும் மிகிந்தலை தம்புள்ள மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும் இக்கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக தேசிய சமாதான பேரவையின் சிரேஷ்ட ஊடக அலுவலர் சுதேஷ் த சில்வா அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிரதேசத்தின் இக்கண்காட்சிக்கான இணைப்பாளராக அருட்தந்தை சிஜி.ஜெயக்குமார் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதினத்தில்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
கியுபா சிக்கலில் அமெரிக்காவை எதிர்க்காமல் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும்: சந்திரிகாவுக்கு ஜே.வி.பி. அறிவுரை
இலங்கைத் தீவகத்தில் சமாதான முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு பேரினவாத வெறிகொண்டு அலையும் ஜே.வி.பி கட்சி கியுபா நாட்டின் மீதான அமெரிக்காவின் பொருளாதரத் தடையை சிறீலங்கா அரசு எதிர்க்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சாதான் இதைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளின் சார்பாக அமெரிக்காவுக்கு எதிராக கிய10பா போராடி வருவதாக குறிப்பிட வீரவன்ச சிறீலங்கா அரசு எதிர்க்கப் போவது அமெரிக்காவை அல்ல- நீதியின் பக்கம்தான் நிற்கப் போகிறது என்றும் தத்துவ முத்தை உதிர்த்து விட்டிருக்கிறார்.
இலங்கைத் தீவகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் ஆழிப்பேரலையைக் காரணம் காட்டி குவிக்கப்பட்டபோது சிவப்புக் கம்பளம் விரித்த சிங்களச் சிவப்புச் சிந்தனைக் கும்பலும் இவர்கள்தான் என்பதையும் யாரும் மறக்கப்போவதில்லை.
புதினத்தில்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
கதிர்காமரின் கருத்துக்களால்
ஜே.வி.பி. கட்சிக்குள் குழப்பம்!
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமர் அண்மையில் வெளியிட்ட சில கருத்துக் கள் ஜே.வி.பி. கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஆராய்வதற்காக கட்சியின் அரசியல் குழு அவசரமாக நாளை திங்கட் கிழமை கூடுகின்றது.
ஆழிப்பேரலை அனர்த்தம் தொடர்பான நிவாரணம் மற்றும் மீள்கட்டுமானப் பணி களை முன்னெடுப்பதற்கான பொதுக்கட்டமைப் புக் குறித்து அரசும் விடுதலைப் புலிகளும் இணக்கம் கண்டாலும் அதற்காக அரசில் இருந்து ஜே.வி.பி. வெளியேறிவிடாதென்றும் அதற்கான உத்தரவாதம் தமக்கு வழங்கப்பட் டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ் மன் கதிர்காமர் கருத்துக் கூறியிருந்தார்.
இக்கருத்தே ஜே.வி.பிக்குள் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமர சிங்கவே இந்த உறுதிமொழியை வழங்கிய தாக லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளதால் சோமவன்ஸ அக்கருத்தை வாபஸ் பெறவேண் டும் என்று ஜே.வி.பி. கட்சிக்குள் ஒரு சாரர் அவரை வலியுறுத்திவருகின்றனர்.
-------------------------------------------- ---------------------------
திருட்டுப் பேர்வழியான மகனை
பொலீஸிடம் சிக்கவைத்த தாய்
நெல்லியடியில் நேற்றுச் சம்பவம்
வடமராட்சிப் பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளைகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் நபர் ஒருவர் நேற்று பொலீஸாரிடம் சிக்கினார். அவருடைய தாயாரே அவரைக் காட்டிக்கொடுத்துப் பொலீஸாரிடம் சிக்கவைத் தார் என்று கூறப்படுகிறது.
திருட்டுகள் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த கண்ணன் என்று அழைக்கப்படும் பாஸ் கரன் என்பவரே பொலீஸாரிடம் மாட்டினார்.
இவரது சமூகவிரோதச் செயல்களால் ஏற் பட்ட பாதிப்புகளை அறிந்து வேதனையுற்ற தாயார் அவரை பொலீஸில் ஒப்படைக்க முயன் றார் என்று கூறப்படுகிறது.
மகனைப் பொலீஸாரிடம் கையளிக்கும் எண் ணத்துடன் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அவரை ஓட்டோ ஒன்றில் ஏற்றி நெல்லியடிப் பொலீஸ் நிலையம் நோக்கித் தன்னோடு அழைத் துச் சென்றிருக்கிறார் அந்தத் தாயார்.
விவரம் புரிந்த மகன் வழியில் ஓட்டோவில் இருந்து குதித்துத் தப்பி ஓட முயன்றார் என் றும் -அப்போது தாயார் திருடன் திருடன்| என்று குரல் எழுப்பவே வீதியில் காணப்பட்டவர்கள் அவரை மடக்கிப் பிடித்து பொலீஸாரிடம் கைய ளித்தனர் எனவும் கூறப்படுகிறது.
உதயனில்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
4 மொழிகளில் தயாராகும் 'ஜெயேந்திரர்' சினிமா
ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் ஜெயலலிதாவின் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் படம் தயாரிக்க உள்ளதாக பிரபல தெலுங்கு படத் தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.
ஜெயேந்திரரின் தீவிர பக்தரான இவர் சமீபத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்........
........ஜெயேந்திரர் தமிழக அரசால் பழிவாங்கப்பட்டதை கண்டித்தும் அவர் எந்தக் குற்றமும் செய்யாதவர் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவும்இ "ஜெயேந்திரர் பேசுகிறார்' என்ற பெயரில் ஒரு திரைப் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.
கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஜெயேந்திரர் பக்தர்களும் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களும் சேர்ந்து இப் படத்தை தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஜெயேந்திரர் ரோலில் தெலுங்கு சினிமா உலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் விஜயேந்திரர் வேடத்தில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் நடிக்க உள்ளனர்.........
.........படத்தில் தற்போதைய தமிழகத்தின் அரசியல் நிலை கடந்த காலத்தில் நிர்க்கதியாக இருந்தவர்கள் (சசிகலா?) இப்போது எப்படி உயர்ந்த நிலைக்கு வந்தனர் இதற்காக இவர்கள் யாரையெல்லாம் எப்படியெல்லாம் ஏமாற்றினர் ஆகியவற்றை விளக்கும் காட்சிகள் இடம்பெறும்...........
........இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்து மதத்தை காக்கவும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யவும் பயன்படுத்தப்படும்.
இப்படம் வெளிவந்தால் தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார்.......
.........இதற்கிடையே நடிகை விஜயசாந்தி சங்கராச்சாரியார்களை கைது செய்த விதம் முறையல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் விஜயசாந்தி. பாஜகவில் அங்கம் வகிக்கும் விஜயசாந்தி அவரது கட்சி ஜெயலலிதாவை எதிர்த்துக் கொண்டிருந்த போதே அவரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்......
..........இதற்கிடையே ரெட்டி எடுக்க உள்ள ஜெயேந்திரர் படத்துக்கு எதிராக 'அம்மா' ஆதரவாளர்கள் ஒரு போட்டி படத்துக்கு பூஜை போட்டாலும் போடலாம் சொல்ல முடியாது.
அப்படி பூஜை போட்டு எஸ்வி சேகரை அதில் நடிக்கக் கூப்பிட்டால் நடிப்பாரோ?
Thatstamilஇல்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
வெலிமடையில் இனந்தெரியாத நோய்க்கு மூவர் பலி
வெலிமடையில் இனந்தெரியாத நோய்க்கு இலக்காகி ஒரே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் மற்றும் உப அதிபர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
வெலிமடை ஊவா பரணகமவிலுள்ள பாடசாலையொன்றில் 10 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவன் ஒருவன் நேற்று முன்தினம் மயங்கி விழுந்ததனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளான்.
வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சிறிது நேரத்தில் மாணவன் மரணமடைந்துள்ளான்.
அதே பாடசாலையின் மற்றுமொரு மாணவனும் நேற்றைய தினம் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களும் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் மரணம் குறித்து பரிசோதனை நடத்திய வைத்தியர்கள் இவர்களின் கல்லீரலை நோய் கிருமிகள் தாக்கியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும் இம்மரணங்கள் குறித்து பூரண ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இரு விசேட குழுக்கள் ஊவா பரணகமவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஷெல்டன் சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
குடிநீர் மூலமாகவே இந்நோய் பரவுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புதினத்தில்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
சுமத்ரா நில நடுக்கத்தால் கடல்கோள் ஏற்படாதது குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் ஆச்சரியம்
இந்தோனேசியாவில் திங்கட்கிழமை இரவு 8.7 ரிச்டர் அளவில் பூகம்பமொன்று ஏற்பட்ட போதிலும்இ கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்டது போன்றதொரு கடல்கோள் ஏற்படாதது குறித்து பெரும் ஆச்சரியம் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதற்கு பல்வேறு விளக்கங்களையுமளித்துள்ளனர்.....
......கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்த இடமும் திங்கட்கிழமை ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்த இடமும் வேறு வேறானவை.
கடந்த 26 ஆம் திகதி பூகம்பத்தின் போது இந்திய பெருநிலப்பரப்புஇ பர்மா பெருநிலப்பரப்புடன் மோதியது. இந்த மோதல் கிழக்கு மேற்காக நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அது தென்கிழக்கு ஆசியாவைத் தாக்கியது.
ஆனால் திங்கட்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது பர்மா பெரு நிலப்பரப்பு அவுஸ்திரேலிய பெரு நில பரப்புடன் மோதியதால் உருவானது. இம் மோதல் தென் கிழக்காக மோதியுள்ளது......
இதேவேளை இந்த கடல்கோள் ஏற்படாமைக்கான காரணம் குறித்து தெரிவித்த சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை ஆய்வாளர் வெங்கட் நாதன்
திங்கட்கிழமை நில நடுக்கத்தின் மையம் சுமத்ரா தீவினை எட்டிய மேற்கு கடல் பகுதியிலுள்ள நயாஸ் தீவிற்கும் சிமியூலு தீவிற்கும் இடையே இருந்ததால் அதன் தாக்கம் முழுவதும் அந்த இரு தீவுகளுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே அடங்கிவிட்டது. அதனால் தான் அந்த இரு தீவுகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதேவேளைஇ இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஷ் விஞ்ஞானியான ஜோன் மிக் லொஸ்ட்
சென்ற முறை ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் பார்க்க இம்முறை ஏற்பட்ட நிலநடுக்கம் சக்தி குறைவாக இருந்ததே கடல்கோள் ஏற்படாததற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
நிலநடுக்கத்தை அளவிடும் ரிச்டர் அளவீட்டில் ஒவ்வொரு அலகு அதிகரிப்பின் போதும் அது வெளியிடும் சக்தியின் அளவு 30 இன் மடங்குகளால் அதிகரிக்கும். எனவே இந்த தடவை நிலநடுக்கத்தின் போதுஇ சென்ற முறையை விட 12 முதல் 15 மடங்கு குறைந்தளவு சக்தியே வெளிப்படுத்தப்பட்டது. எனவே சக்தி வெளிப்பாடு குறைவாக இருந்ததே கடல்கோள் பெரியளவில் தோன்றாததற்கு காரணம் என தெரிவித்தார்.
அத்துடன் இந்த முறை நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சென்ற முறையைவிட கடலின் ஆழத்தில் இருந்துள்ளது. அதனால் மேற்பரப்பின் மீது அதன் தாக்கம் குறைவாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
பசுபிக் கடல் பிராந்தியத்தை கண்காணித்து கடல்கோள் பற்றிய விபரங்களை அளிக்கும் தேசிய கடலியல் நிறுவனத்தின் இயக்குநரான சார்லஸ் மெக்ரீரி கூறுகையில்
ரிச்டர் அளவுகளில் 8 என பதிவாகும் நிலநடுக்கத்தாலேயே கடல்கோள் ஏற்படும். ஆனால் 8.7 என பதிவாகிய நிலநடுக்கத்தால் கடல்கோள் இராட்சத அலை ஏற்படாதது ஆச்சரியத்தை அளிக்கிறது என்கிறார்.
நிலநடுக்கத்தின் அளவை வைத்து கடல்கோள் தாக்குதலை முன்கூட்டி கணிப்பதில் ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டிருப்பதாக அவர் கருத்துத் தெரிவித்தார்.
தினக்குரலில்
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
ராமேஸ்வரம் கடலில் முளைத்த திடீர் தீவு:
திருச்செந்தூர்இ தூத்துக்குடியில் இன்றும் கடல் உள்வாங்கியது
ராமேஸ்வரம் அருகே கடல் பகுதியில் சுமார் 20 சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு கடல் நீர் வடிந்து போய் திடீரென தீவு உருவாகியுள்ளது.
அதே போல தூத்துக்குடி திருச்செந்தூர் உட்பட பல பகுதிகளில் இன்றும் கடல்இ பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் இப்பகுதிகளில் இன்றும் சுனாமி பீதி ஏற்பட்டது. பாண்டிச்சேரியில் பல பகுதிகளில் மீன்கள் குவியல் குவியலாக செத்து கரையொதுங்கின.
நேற்று மாமல்லபுரம் திருச்செந்தூர் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் கடல்நீர் பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.
இதே போல இன்றும் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் நீர் 500 அடி தூரத்திற்கு உள் வாங்கியது.
ஙுத்துக்குடி தவிர திருச்செந்தூர் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கடல்நீர் பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிச் சென்றது. இதனால் இப்பகுதிகளில் இன்றும் மக்களிடையே பீதி பரவியுள்ளது.
தூத்துக்குடியில் இன்று காலை 11 மணியளவில் கடல் நீர் திடீரென உள்வாங்கியது. துøமுறகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்ளே சென்றதால் தூத்துக்குடி மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டது.
நீர் உள் வாங்கியதால் கடலடித் தரைப் பகுதி பாறைகள் கடல் தரையில் வளரும் செடிகள் ஆகியவை வெளியில் தெரிந்தன. திருச்செந்தூரில் பல மீட்டர் தொலைவுக்கு கடல் உள்ளே சென்றுவிட்டதால் கடல் தாவரங்கள் பாசி படிந்த பாறைகளை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள 21 கண்டத் திட்டுகளின் அருகே உள்ள கடல் பகுதியில் ஒரு இடத்தில் சுமார் 20 சதுர கி.மீட்டர் அளவுக்கு கடல் நீர் வடிந்து போய் திடீரென தீவு உருவாகியுள்ளது. இது குறித்து மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவின் வார்டன் நாகநாதன் கூறுகையில்
அலைகள் குறைகிற காலத்தில் 4,5 மீட்டர் அளவுக்கு சில இடங்களில் கடல் நீர் வடிந்து தீவுகள் தோன்றும். ஆனால்இ இப்படி 20 சதுர கிமீ சுற்றளவுக்கு மிகப் பெரியே தீவே தோன்றும் அளவுக்கு கடல் நீர் வடிந்து போனது இதுவே முதல் முறை என்றார்.
திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்குவதும் வெளியில் வருவதுமாக உள்ளது.
thatstamilஇல்
Posts: 114
Threads: 9
Joined: Dec 2004
Reputation:
0
«ýÀ¸õ ±ýÉ ¦ºöÂ¢È¢í¸ þí¸?? ¿£í¸û Áü¨È ¸ÇôÀ¢Ã¢×¸ÙìÌ §À¡È§¾ þø¨Ä¡? ¿£í¸û §À¡ðÊÕ츢Ȧ¾øÄ¡õ ÁüÈ ¸ÕòÐ À¢Ã¢Å¢¨ÄÔõ ¸¢¼ìÌ. ÍõÁ þ¼ò¨¾ ţɡ츾£í¸. «¨¾Å¢¼ ´ù¦Å¡Õ ¦À¡Õò¾Á¡É ¸ÕòÐÀ¢Ã¢Å¢ý ¸£ú ¿£í¸û ±Ø¾¢É¡ø Áü¨ÈÂÅ÷¸û «¨¾ÀüÈ¢ Å¡¾Ê ¿¢¨È «È¢óЦ¸¡ûÇÄ¡õ. ¸ÅÉò¾¢ø ±Îì¸×õ «ýÀ¸õ.
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...