Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒருகதை
#41
அப்படியா அப்ப சீட்டுக்கட்டினவை பாடு அம்போவா..?? :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதில் எனக்கு தெரிந்தவர்களும் அடக்கம். பாராட்டியவர்களிற்கு நன்றிகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
#43
சியாம்.
மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
Reply
#44
நீங்கள் எதை மாற்றினாலும் கதையின் கரு மாறாமல் யாதர்த்த நிலையை தெளிவாக வெளிப்படுத்தியற்கு இந்த தவத்தாரின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
______________________________________________________________
[size=18]'' வாழ்க தமிழ் வளர்க வையகம் '' _____________________________________________________________
Reply
#45
<img src='http://img152.echo.cx/img152/5742/3623310zv.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#46
shiyam Wrote:shiyam's blogஒருபடப்பிடிப்பு
திங்கள் பங்குனி 28, 2005 8:48 pm




<b>இறுதிப் பதிவொன்று......................</b>
-சியாம்
<img src='http://www.survivingthesystem.com/graphics_5-02/Preacher_I%20Am.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:brown'>விஜி தனது வீடியோ கமராவை எடுத்து
வரவேற்பறை முழுவதும் தெரியும்படியாக கோணம் பார்த்து பொருத்தினான்.

பின்னர் எல்லாம்சரியாக இருக்கிறதா என ஒரு தடைவைக்கு பலதடைவை பார்த்தான்.

ஏனெனில் இது அவன் எடுக்கபோகும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி.

வீடியோ கமறா தானாகவே இயங்கி எடுக்கவிருப்பதால் எல்லாம் சரியாக பதிய படவேண்டும் என்பதில்
அவனிற்குள் ஒருபடபடப்பு.

ஏனெனில் வீடியோ விஜி என்றால் பாரீசில் அனேகமாக தெரியாத தமிழர்கள் இல்லை.
பத்து வருங்களிற்கு மேலாக பாரீசில் தமிழர்களின் பிறந்தநாள்,
திருமணம் என்று அனைத்து, மங்களகரமான நிகழ்ச்சிகள் என்றாலும் அனைவரும் உடனே சொல்வது,

\"விஜியை கூப்பிடுங்கோ,.........
அவரெண்டால் எங்கட விருப்பத்திற்கேற்றமாதிரி வடிவா எடுத்து,
அதற்கேற்றமாதிரி பாட்டுகளும் அடித்து தருவார்\"என்றுதான்.

அப்படியொரு நல்ல பெயர் அவனிற்கிருந்தது.
காலப்போக்கில், வீடியோவும் அவனது பெயரில் ஒட்டி,
வீடியோ விஜியாகிவிட்டான்.

எல்லாம் சரிபார்த்து விட்டு கதிரையில் அமர்ந்து,
கிளாசில் கொஞ்சம் விஸ்கியை ஊற்றி,
இரண்டு துண்டு ஐஸ் கட்டியை போட்டு
ஒரு மடக்கில் குடித்து விட்டு நிமிர்ந்து
சுவரில் மாட்டியிருந்த படத்தை உற்று பார்த்தான்.

அவன் நினைவுகள் மூன்றுமாதங்கள் பின்நோக்கி நர்ந்தது

விஜி வீடுமாறுவதற்காக எல்லா சாமான்களையும்
பெட்டிகளில் போட்டு ஒட்டிக்கொண்டிருந்தான்.

தொலைபேசி அடித்தது, எடுத்தான்.

\"கலோ வணக்கம்\"

\"விஜி நிக்கிறாரோ?\"

\" ஓம்,...... நான் விஜிதான், சொல்லுங்கோ.\"

\"நான்மேகன் , இந்த ஞாயிற்று கிழமை ஒருகலியாண வீடு.
நீங்கள்தான் வீடியோ எடுக்கவேணும்.
அதுதான் உங்களிற்கு வசதியோ?\"

\"பிரச்சனையில்லை,....... ஆனால் நான் வர ஏலாது.
என்ரை சினேதனை அனுப்பிவிடுறன்.
உங்கட விலாசம் மற்றது கலியாணம் நடக்கிற இடத்து விலாசம் ரெலிபோன் நம்பர் மற்ற விபரங்களை தாங்கோ.

\"இல்லை நீங்கள் வந்து எடுத்தா தான் நல்லா இருக்கும்.\"

\" இல்லையண்ணை சனிக்கிழமை மனிசி வாறா ,
அதாலை நானும் வீடுமாறிகொணடிருக்கிறன்.
சரியானவேலை அதுதான்.............\"

\"சரிசரி விளங்கிது, பிரச்சனையில்லை.
உங்கட சினேதனையே அனுப்புங்கோ.
இந்தாங்கோ விலாசமும் விபரமும். \"

விஜி விபரங்களை குறித்து கொண்டு இணைப்பை துண்டித்தான்.

சனிக்கிழமை மனிசி வருகிது ஞாயிறு வீடியோ எடுக்க வரட்டாம்,
கோடி ருபாய் தந்தாலும் போக ஏலாது.
அடுத்ததா காரையும் ஒருக்கா நாளைக்கு கழுவ வேணும் என நினைத்து கொண்டு வேலையை தொடர்ந்தான்.

ஒருகிழமை லீவு எடுத்து, புதுவீட்டில் சாமான்கள் எல்லாம்
மாற்றி அடுக்கி.......................
அவ்வப்போது அவனது நண்பன் ரவியும் வந்து உதவிகள் செய்தது
அவனிற்கு நிம்மதியாய் இருந்தது

அன்று சனிக்கிழமை காலை 6.00மணிக்கெல்லாம் எழும்பி அவசரவசரமாக முன்று மரக்கறியுடன்
ஒரு மீன்கறியென சமையல் எல்லாம் செய்து விட்டு
விமானநிலையம் போவதற்காக தயாரானான்.

அவனது நண்பன் ரவியும் கூட வருவதாக கூறியிருந்தான்

அடிக்கடி நேரத்தை பார்த்தபடியே.

சே இந்த ரவி இப்பிடித்தான் ஒரு நாளும் சொன்ன நேரத்திற்கு வரமாட்டான்.

8.00மணியாகிது............
10.00 மணிக்கெல்லாம் விமான நிலையத்திலை நிக்கவேணும் என நினைத்தபோதே,
வீட்டு அழைப்புமணியடித்தது.

ஆ வந்திட்டான் கதவை திறந்தான்..

என்ன சமையல் எல்லாம் தடல்புடலாய் நடந்திருக்கு போலை 3ம் மாடியிலையிருந்து கீழை வரேக்கையே
மணக்கிது என்ன சமைச்சனி
உன்ரை மனிசி குடுத்து வச்சவா ம்.........
என்றபடி உள்நுழைந்தான் ரவி.

என்னத்தை சமைக்கிறது மனிசி இறைச்சி சாப்பிடுறேல்லையாம்,...... அதுதான் மரக்கறியும், மீனும் சமைச்சனான் .
தெரியும்தானே ஊரிலை விதரம் எண்டுங்கள் மாடு பண்டி சாப்பிடாதுகள்.
இஞ்சை வந்தாபிறகு கொஞ்சம் கொஞ்சமா பழக்கியெடுப்பம்.
நீயேன் பெரு மூச்சு விடுறாய்
நீயும் இஞ்சை இல்லாட்டி ஊரிலையெண்டாலும் ஒண்டை பாத்து செய்து போட்டு சமைச்சு போடன்.

சரி சரி நேரம் போட்டுது, போவம் .

பாரீஸ் விமானநிலையம் சுகியை சுமந்து வந்தவிமானம் சரியான நேரத்திற்கு தரையிறங்கியது.

அவனது ஒருவருட காத்திருப்பு தனது எதிர்காலத்தை எதிர்பார்த்து எட்டியெட்டி பார்த்தபடியிருந்தான்.

என்ன விஜி பிளேன் வந்திட்டுது எப்படியும் மனிசி வெளியிலை வந்துதானே ஆக வேணும் ஏன் அவசரபடுறாய்.

அதில்லை........ ஆ............. அந்தா வாறா.

சுகி இரண்டு பெரிய சூட்கேசுகளை வண்டிலில் வைத்து தள்ளியபடி வந்து கொண்டிருந்தாள்.

அவனிற்கும் வெள்ளை காரர்களைபோல ஓடிப்போய் கட்டியணைத்து ...........

ஆனாலும் அடக்கிகொண்டு போய் வண்டிலை வாங்கி கொண்டு

என்ன கன சாமானெல்லாம் கொண்டு வந்திருக்கிறியள்.
பயணம் எல்லாம் எப்பிடி ஒருபிரச்சனையுமில்லையோ??

இவர்தான் ரவி என்ரை சினேதன் என்னோடைதான் வேலை செய்யிறவர்.இரண்டுபேரும் சேந்துதான் வீடியோவும் எடுக்கிறனாங்கள்.

அறிமுகம் முடிந்தபின்னர் புறப்பட்டார்கள்.

புதிய மனைவி, புதியவீடு , புதியவாழ்வு, புதிய அனுபவங்கள் என இனிதாகவே அவர்கள் வாழ்வு போய்கொண்டிருந்தது.

சுகி வந்ததிலிருந்து, ஓரே தொலைபேசியும் கையும்தான்.

விஜியும் விட்டுவிட்டான்.
இப்பதானே வந்தவா ஊரிலையிருந்து வந்த புதிசிலை நானும் இப்பிடித்தான்.
ஊருக்கு ஓரே தொலைபேசி இப்ப கிழைமையிலை ஒருக்கா சிலநேரம் அதுவும் இல்லை.

சுகி, தொலைபேசியை வைத்துவிட்டு விஜியின் அருகில் வந்தாள்.

என்னப்பா இரவுக்கு என்ன சமைக்க.

புட்டு அவியும். ஒரு கறி மட்டும் வையும்.
நீர் வந்து இரண்டு கிழைமையிலை சாப்பிட்டு, சாப்பிட்டு நான் இரண்டு கிலோ கூடிட்டன்.
இனி கொஞசம் குறைக்கவேணும்.

விஜியின் தலையை கோதியபடி, அதுசரியப்பா நான் உங்களிட்டை ஒருவிசயம் கதைக்கவேணும் என்று இழுத்தாள் சுகி.

சொல்லுமன்.......... என்ன முக்கியமான விசயம்.

இல்லை, நான் சிவாவை பற்றி உங்களிற்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.
கொழும்பிலை உங்கட ஸ்பொன்சருக்காக ஒருவருசமா நிக்கேக்கை அவன்தான் எனக்கு நல்ல உதவி...........
எம்பசிக்கு அடிக்கடி கூட்டிகொண்டு போறதிலையிருந்து
சாமான்கள் வாங்கி தாறது வரைக்கும் ஓடியோடி செய்து தாறவன்
நல்ல பெடியன் ஒருவிதத்திலை எங்களிற்கு சொந்தமும் கூட ,........ பாவம் ஒரு ஏயென்சிட்டை இங்கை வாறத்திற்கு காசு கட்டி ஏமாந்து போய் நிக்கிறான்.
அவனிற்கு வெளி நாட்டிலையும் உதவி செய்ய ஒருத்தரும் இல்லை. நீங்கள கொஞ்சம் பாத்து உதவி செய்தா நல்லது
வந்து உழைச்சு தருவான்.
உங்களிற்கும் வீடியோ வேலையளிற்கு உதவியாய் இருக்கும்.
வேணுமெண்டால் நீங்களும் ஒருக்கா அவனோடை கதையுங்கோ பாவமப்பா.
எனக்கு ஒரு தம்பிமாதிரி.

என்னப்பா, நீர் வந்ததிற்கே, வீடுமாறினது சாமான்கள் வாங்கினதெண்டு செலவு.
என்னட்டை இப்ப பெரிசா காசும் கையிலை இல்லை.
ஒருத்ரை கூப்படுறதெண்டா சும்மாவே சரியா செலவாகும்.
பாப்பம் யோசிச்சு சொல்லுறன். சரிவேலைக்கு நேரமாச்சு போட்டுவாறன்.

போகும் வழியில் சுகி சொன்னதை பற்றி யேசித்து கொண்டே போனான் எதுக்கும் உவன் ரவியிட்டை கொஞ்சம் உதவி கேட்டு பாப்பம்...........

அன்று வேலைமுடிந்து வீடு வந்தவன், உடைகளை மாற்றி கொண்டு,

சே என்ன இண்டைக்கு சரியான வேலை .
நாரிசரியா நோகுது என்று கூறிகொண்டு , ஒரு குளிசையை வாயில் போட்டு தண்ணீரை குடித்து கொண்டு வந்து கதிரையல் அமர்ந்தான் .

என்னப்பா நாரி நோகுதே, வாங்கோ விக்ஸ் போட்டு மசாச் பண்ணி விடுறன்........ உடனை மாறிவிடும்.

வந்து இதிலை படுங்கோ என்றவாறே விக்ஸ் எடுத்துகொண்டு வந்து அவனை குப்புற படுக்கவைத்து முதுகில் விக்சை தடவியவாறே,

என்னப்பா சிவாவின்ரை அலுவலைபற்றி ஏதும் யேசிச்சனீங்களே?.

ம்....ரவியிட்டைதான் கொஞ்சம் உதவி கேட்டனான். எனக்கு தெரிஞ்ச ஒரு ஏஜென்சியிட்டையும் கதைச்சனான்.
வந்தா பிறகுதான் காசாம்............ நாளைக்கு விபரம் குடுத்தா ஒரு கிழமையிலை ஆள் இஞ்சை வந்திடும்.

சுகி நன்றாக முதுகை பிடித்து மசாச் பண்ணி விட்டாள்.

ஒரு வாரத்தில் சிவாவும் வந்து சேர்ந்தான்.

விஜி அவனிற்கு விசா அலுவல் எல்லாம் பாத்து ஒரு வேலையும் பார்த்து கொடுத்து வீட்டிலேயே வைத்திருந்தான்.

அதே நேரம் கிழைமை நாட்களில் அவனிற்கு உதவியாக ரவியுடன் சிவாவையும் படப்பிடிப்புகளிற்கு அழைத்து சென்று
படப்பிடிப்பு நுணுக்கங்களை அவனிற்கு கற்று கொடுத்தான்.

இப்படியே ஒரு சில மாதங்கள் கடந்ததன.

அன்று ஒரு ஞாயிற்று கிழைமை.
விஜிக்கு ஒரு கலியாண வீட்டு படப்பிடிப்பு நாள்.
அதற்கு தாயார் படுத்தி கொண்டே ............

என்ன சிவா வெளிக்கிட்டாச்சே போவம்.

இல்லையண்ணை,
எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமை கிடக்கு அதுதான்........
என சிவா இழுத்தான்.

சரி , சரி பிரச்சனையில்லை.
நான் ரவியோடை போறன்.
ஏதும் தேவையெண்டா சுகியிட்டை கேளும் என்று போய்விட்டான்.

அதிகாலை ஒரு மணியளவில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்து மெதுவாக கதவை திறந்தான்.

சுகியும் சிவாவும் நித்திரையிலிருப்பினம்,
குழப்பகூடாது என நினைத்து வழமை போல
கொண்டு வந்த சாமான்களை மெதுவாக வைத்துவிட்டு
மின் விளக்கை போட்டான்.

வரவேற்பறையில் நுழைந்து மின் விளக்கை போட்டு விட்டு
சப்பாத்தை கழற்ற போனவன்
மேசையில் இருந்த பொருளை பார்த்ததும் திடுக்கிட்டான்.

சுகியின் தாலிக் கொடியும், ஒருகடிதமும் மேசையில் இருந்தது.

அவனிற்கு தலை சுற்றுவது போல ஒரு உணர்வு.

கைகள் நடுங்க, கடிதத்தை எடுத்து படித்தான்.

விஜிக்கு,
இந்த கடிதம் உங்களிற்கு அதிர்ச்சியாக இருக்கும்.
நான் உங்களின் ஸ்பொன்சருக்காக கொழும்பில் சுமார் ஒருவருடம் காத்திருந்த வேளையில்
நான் தங்கியிருந்த விடுதியில் இருந்த சிவாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அதுவே காலப்போக்கில் காதலாக மாறி ,
எங்கள் உறவும் உடல்வரை ஒன்றாகிவிட்டது .
நான் இங்கு வந்ததும் கொழும்பில் நடந்த எல்லாவற்றையும் மறந்து
உங்களுடன் புதுவாழ்வு வாழலாம் என்றுதான் எண்ணினேன்.
என்னால் சிவாவை மறக்கமுடியவில்லை.
அதனால்தான் உங்கள் உதவியுடன் இங்கு சிவாவை வரவழைத்தேன்.
சிவாவும் நானும் பிரான்சை விட்டு வேறுநாடு போகிறோம்.
எங்களை தேட வேண்டாம். நாங்கள் உங்களிற்கு செய்தது துரோகம்தான்.
ஆனாலும் எனக்கு வேறுவழி தெரியவில்லை.
எங்களை மன்னித்து விடுங்கள்.

இப்படிக்கு சுகி.

விஜிக்கு தலை சுற்றி, கண்கள் இருண்டு கொண்டு வந்தது.

அப்படியே கதிரையில் சாய்ந்தான்.

யாரோ சுத்தியலால் உச்சந்தலையில் அடித்ததுபோல ஒரு உணர்வு.

சில நிமிடங்கள் அப்படியே இருந்தவன்,

சீ , இது சிலவேளை சுகியின் விழையாட்டாக இருக்கும்.
எழுந்து கடவுளே இப்படி எதுவும் நடந்திருக்ககூடாது.............
பிள்ளையாரே லூர்து மாதாவே என சில வினாடிகளில் எல்லா மதத்தின் பல ஆயிரம் தெய்வங்களை வேண்டியபடி
போய் படுக்கை அறையை திறந்தான் யாரும் இல்லை.

உடுப்பு அலமாரி திறந்திருந்தது.
சுகியின் நகைகளையும் சில உடுப்புகளையும் காண வில்லை.

சிவாவின் அறையை திறந்தான். அங்கும் யாருமில்லை.

கடவுளே என்னசெய்வேன், என்க்கேன் இப்படி?
என்ன செய்வேன் ............பொலிசுக்கு போவமா? போய்த்தான் என்ன பிரயோசனம்?
அவர்கள் விரும்பி போய் விட்டார்கள்.
விவாகரத்து கேள் என்று ஆலோசனை செல்வார்கள்.
பிறகு ஊருக்கெல்லாம் தெரிந்து பொழுது போகாதவன் வாயிலெல்லாம் என்ரை கதையாத்தான் இருக்கும்.
ரவிக்கு சொல்லலாமா ?
சொல்லி அவனால்தான் என்னசெய்யமுடியும்.

தேடிப்பிடித்து இருவரையும் ஒரே வெட்டில்...........
சே..............இப்படியே குழப்பம், கோபம், அழுகையென நித்திரையின்றி அந்த இரவு விடிந்தது.

இரவிரவாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

இனி அழுதோ, ஆத்திரபட்டோ பிரயேசனமில்லை.
அடுத்ததை பாப்பம் என நினைத்து
வேலையிடத்திற்கு ஒருகிழைமை லீவுகேட்டான்.

அடுத்தாக, சிவாவை கூப்பிட ரவியிட்டை வாங்கின கடனை குடுக்க வேண்டும்.
உடனடியாக காரை விக்க ஏற்பாடு செய்தான்.

அன்று பகல் முழுதும், முதல்நாள் எடுத்த திருமண நிகழ்ச்சியை பாட்டடித்து பதிவு செய்து கையிலெடுத்தான்.

மாலையாகிவிட்டது.
திருமண கொப்பியை உரியவரிடம் சேர்த்தான்.

என்ன விஜி இவ்வளவு கெதியா கொப்பியை கொண்டு வந்திட்டியள்.

ஒமண்ணை, வேறை வேலை கனக்க இருக்கு அதுதான்.

சரி, இந்தாரும் மிச்ச காசு எண்ணிபாரும் .

தேவையில்லையண்ணை.

அவர் கொடுத்த பணத்தை பெற்று கொண்டு,
பாரீசின் புறநகர் பகுதியில் கார் விற்கும் ஒரு சந்தைக்கு வந்து,
காரிற்கு மலிவாக ஒரு விலையை காரின் மீது எழுதி ஒட்டி விட்டு காத்திருக்க,
சில நிமிட நேரத்தில் ஒருவரின் காசோலையும்
விஜியின் காரும் சில கையொப்பங்களுடன் கைமாறியது.

காரில் இருந்த சில பொருட்களை, ஒரு பையில் எடுத்துக் கொண்டு நடந்தான்.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.

கைத் தெலைபேசியில் ரவியின் இலக்கத்தை அழுத்தினான்.

கலோ......ரவி நான்விஜி.
உன்ரை பாங் எக்கவுண்ட் நம்பரை சொல்லு,
உன்ரை காசை போட்டு விடுறன்.

என்னடா விஜி வேலைக்கும் வரேல்லை.
முதலாளி சென்னான் ஒருகிழமை லீவாம் எண்டு........
இப்ப என்னடா எண்டா...........
என்ரை காசு போடுறனெண்டுறாய் .
ஏதும் லொட்டோ விழுந்ததோ இல்லை?
குதிரை பந்தயம் ஏதும் விழையாடினனியோ?.

டேய் பகிடியை விடடிட்டு, நம்பரை சொல்லு.

ரவியின் வங்கி இலக்கத்தை வாங்கி ,
அதில் அவனிற்குரிய பணத்தை சேர்த்துவிட்டு,
கடையில் போய் ஒருபோத்தல் விஸ்கியும்
காலையிலிருந்து சாப்பிடாததால் ,
ஒரு சாண்விச்சை வாங்கி சாப்பிட்டபடி வீடுவந்து சேர்ந்தான்.

சாண்விச் சாப்பிட்டது வயிற்றிற்கு கொஞ்சம் நல்லாயிருந்தது.

ஆனால் மனதிற்கு அவன் உற்று பார்த்து கொண்டிருந்த படம்...............

அவர்களது திருமணப்படம்...............
பெரிதாக்கி வரவேற்பறையில் மாட்டியிருந்தான்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டவன்.

அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுதே.

அதிலிருந்துபார்வையை விலக்கி,
மீண்டுமொரு முறை சுகியின் கடிதத்தை படித்தான்.
ஒரு தடைவையல்ல
பல தடவைகள் இன்னும் அவனால்
நடந்தவைகளை நம்பமுடியவில்லை.

விஸ்கி பாதி போத்தலுக்கு மேல் குடித்துவிட்டான்.

போதையேறி தலை கிறுகிறுத்தது.

எல்லாரும் சொல்வார்களே எதையாவது மறக்க குடிப்பதாக
ஆனால் எனக்கு சுகியின் நினைவுகளே திரும்ப திரும்ப வருகிறதே
எதுவும் மறக்கவில்லையே ..............

அப்ப மற்றவர்கள் சொல்வது பொய்யா?

வரும் போது காரிலிருந்து எடுத்துவந்த பையிலிருந்து நைலோன் கயிற்றை எடுத்து
வரவேற்பறையின் மின்விளக்கு தொங்கிய கம்பியில் கட்டி
மறுமுனையை நன்றாக இழுத்துபார்த்தான்.

எனது எழுபத்தைந்து கிலோ எடையை இது தாங்குமா
இன்னெரு முறை இழுத்துபார்த்தவன்,
திருப்தியுடன் போய் தனது வீடியோ கமறாவை இயங்க விட்டான்.

வந்து சுகி வைத்து விட்டு போன தாலியை கையிலெடுத்து பார்த்தான்.

இந்து பெண்கள் சுமங்கலியாக தாலியுடன்தான் சாக விரும்புவார்களாமே,
சரி பெண்களுக்கு மட்டுமா தாலியை தனது கழுத்தில்போட்டு
கண்ணாடியில் ஒரு முறை பார்த்தான்.

இதோ நான் சுமங்கலனாக சாக போகிறேன்.

ஒரு கதிரையை எடுத்து வந்து,
கயிற்றிற்கு நேராக வைத்துவிட்டு
அதில் ஏற போனவன், கிளாசில் இன்னும் கொஞ்சம் விஸ்கி மிச்சமிருந்ததை பார்த்து விட்டு
அதனையும் ஒரு மடக்கில் குடித்து விட்டு,
கதிரையில் ஏறினான்.

கேழைகள், வாழ தெரியாதவர்கள்தான் தற்கொலை செய்வார்களாமே?........
இல்லை என்னை பொறுத்தவரை தற்கொலைக்குதான் அதிக தைரியம் வேண்டும்.

இனி சுகியை மறந்தோ
அல்லது அவள் செய்தவற்றை நினைத்துகொண்டோ
இநத சமூதாயத்தின் கேள்விகளிற்கு பதில் சொல்லி கொண்டும் என்னால் வாழ இயலாது.

எனது இந்த மரணம் நாளை செய்திகளில் வரும்

அதை எப்படியும் சுகியும் கேள்விப்படுவாள்.

அப்போது ஒரு துளி கண்ணீர் எனக்காக விட்டால்.........
அதுவே எனக்கு போதும்.

கயிற்றை கழுத்தில் மாட்டி விட்டு,
கதிரையை கலால் தட்டிவிட்டான்.
அவனது அடங்கும் துடிப்பை வீடியோ கமறா பதிவு செய்து கொண்டிருந்தது ..............................


</span>[/size]

[size=9]ஒரு நல்ல உண்மைக் கதையை ரசித்த போது
சில மாற்றங்களை செய்ய எண்ணினேன்.

சியாமின் அனுமதியின்றி அதைச் செய்கிறேன்.

வாழ்த்துகள் சியாம். தொடருங்கள்...................

விரும்பினால்
இந்த மாற்றத்தை கொண்டு போய் உங்கள் முதல் பதிப்பில் திருத்தி மாற்றம் செய்யுங்கள். பலருக்கு படிக்க இலகுவாக இருக்கும்.
அதன்பின்னர் இப்பகுதியை எடுத்து விடுகிறேன்.

நட்புடன்
ajeevan
Reply
#47
தாம் செய்த தவறுக்காக திருந்துவதை விட்டுட்டு தற்கொலை செய்து என்ன பயன்? அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? அவர்கள் தப்பு ஏதும் செய்யலலயே? அதுதவிர தற்கொலை செய்யும் அளவிற்கு இதில் என்ன பிரைச்சனை?

இந்த சீட்டு புலத்தில் தமிழர்களிடயே மிக பிரபல்யம். இது எப்படி செய்கின்றார்கள்? இதன் நன்மைதான் என்ன? வங்கிகள் இருக்கும் போது சீட்டின் அவசியம் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#48
அண்ணன் கதை நல்லாயிருக்கு
உண்மை வருத்த்துக்குரியது........பிள்ளைகள் கதி????????ஃஃஃ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#49
இங்கே பெண்நிலையில் அவர் ஊரில் இருக்கும் போதே இன்னொருவரை காதலித்தவராயின் அங்கேயே அவரைத் திருமணம் முடித்து விடயத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் புலம் வந்து தன் காதலைனையும் கணவனின் செலவில் அழைத்து பிரிந்து சென்றது சுயநலப்போக்கே. அதேநேரம் இதிலே தனியே பெண் மட்டும் சம்பந்தப்படவில்லை காதலனாக உள்ள ஆணும் சம்பந்தப்படுகிறார். எனவே அவர்கள் இருவர் மீதும் குறைகூறுவதை விடுத்து இங்கே கணவனின் சிந்தனைப் போக்கை மட்டும் பார்க்கும் போது யதார்த்த நிலையை உணர்ந்தவனாகவும், பகுது்தறிவோடு சிந்திக்கத்தெரிந்தவனாகவும் நல்ல முடிவை ஆரம்பத்தில் எடுத்த அவர் இறுதியில் தற்கொலை முடிவை எடுத்தது கொஞ்சம் முரண்பாடாகத்தான் உள்ளது.

அண்மையில் ஒரு தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். திரைப்படத்தின் பெயர் "அமுதே". முடிந்தால் பாருங்கள். குடும்ப சூழ்நிலையால் காதலைர்கள் இருவரும் பிரிந்து வேறு வேறு துணையை மணமுடிக்கிறார்கள். மணமுடித்தபின் விடயத்தை தம் துணைகளுக்கு சொல்கிறார்கள். விவாகரத்து பெறப்போவதாகவும் அறிவிக்கிறார்கள். இப்படிச் செல்கிறது கதை. மனித உறவுகளின் நிலைப்பாட்டையும், மனித மனங்களின் மாற்றங்களையும் சொல்கின்றது.


Reply
#50
அமுதே என்று ஒரு படம் வந்ததா? அண்மையிலா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#51
ஓம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#52
இணையத்தில் இருக்கின்றதா இளைஞன். தெரிந்தால் இணைப்பு தாருங்களேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#53
Mathan Wrote:இணையத்தில் இருக்கின்றதா இளைஞன். தெரிந்தால் இணைப்பு தாருங்களேன்
http://www.besttamil.net/forum/....
.மதன் இதில இருக்கும் :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#54
நன்றி. தேடி பார்க்கிறேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#55
http://11.freebb.com/viewforum.php?f=4&fre...eebb=tamilblood
மதன் அண்ணா இதில இருக்கு பாருங்க..




அனிதா
Reply
#56
குளக்காட்டான், அனிதா அந்த படத்தை பார்த்தீர்களா? உங்கள் கருத்தென்ன?


Reply
#57
Anitha Wrote:http://11.freebb.com/viewforum.php?f=4&f...tamilblood
மதன் அண்ணா இதில இருக்கு பாருங்க..

நன்றி பார்க்கிறேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#58
[size=15]இங்கே <b>சியாம் எழுதும் கதைகள்</b> உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாக வைத்தே எழுதப்படுகின்றன.

அவற்றில் அவரது கருத்துகளை விட
அவர் கேட்ட சம்பவத்தை அப்படியே எழுதுகிறார் என்பதால்
அதில் திணிப்புகள் இல்லாமல் இருப்பதால்
இதற்கு வேறு முடிவு கொடுத்திருக்கலாமே என்று
நம்மால் எண்ணத் தோன்றுகிறது.

அப்படி ஒரு நிலையை சியாம் கொடுத்தால்
சில உண்மைகள் ,
நாயகத் தன்மையுடன் (heroisum) மறைக்கப்பட்டு
இப்படியான நிகழ்வுகள் நடக்கிறதென்றே
பலருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடும்.

இங்கே ஒரே ஒரு பக்கத்தை
முக்கியப் படுத்தியே சம்பவத்தை கதையாக்கியிருக்கிறார் சியாம்.

ஆனால் ஏனைய பாத்திரங்களைப் பற்றியும்
அவர்களது நிலைமை பற்றிய பகுதிகளையும்
தொட்டுச் சென்றால் வித்தியாசமாக இருக்கலாம்?

[size=15]என்னைப் பொறுத்த வரை
அவரது எழுத்தின் தன்மை பலரை சிந்திக்க வைத்திருக்கிறது.

<b>அத்துடன் சில தப்புகளை தடுக்கவும் வழி வகுப்பதாய் இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.</b>
Reply
#59
வணக்கம் உறவுகளே மீண்டும் நீண்ட இடைவெளியின் பின் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி

<span style='font-size:30pt;line-height:100%'>விசா</span>


எனக்கு வயது 30
திருமணமாகிவிட்டது மனைவிக்கு வயது 25
ஒரு மகன் இருக்கிறான் வயது 2
மனைவி இப்போ அடுத்த தரம் கரப்பமாகி 8மாத கர்ப்பிணி பிரான்ஸ் நாட்டிற்கு வந்து 10 வருசமாகிது பாரீசிலை இருக்கிறன்
எனக்கோ எனது மனைவிக்கோ பிரான்ஸ் நாட்டு வதிவிட அனுமதி பத்திரம் இன்னமும் கிடைக்க வில்லை.

இனி எனது மிச்ச சோகத்திற்கு போகலாம் வாருங்கள்

பாரிசிலை ஒரு உணவு விடுதியிலை வேலை செய்யிறன். நண்பன் ஒருதனின்ரை விசாவிலை தான் அது முதலாளிக்கும் தெரியும். அங்கை எட்டு வருசத்திற்கு முதல் பாசையும் தெரியாமல் கோப்பை கழுவிற வேலைக்கு போய் சேந்து பிறகு படிப்படியா வேலையை பிடிச்சு இண்டைக்கு நான் தான் அங்கை பிரதான சமையல் காரன்.

முதலாளியும் நல்லவன் வயசான கிழவன் எங்களிட்டை எப்பிடி அன்பா வேலை வாங்கிறதெண்டு அவனுக்குதெரியும் இப்ப அவனுக்கு ஏலாது வயசு போட்டு தெண்டு கடையை ஒருத்தனுக்கு வித்து போட்டான்.

வித்து போட்டு போகேக்கைநல்லா மாடு மாதிரி வேலை செய்வன் எண்டு என்னை பற்றி நல்லா சொல்லி போட்டு என்ரை விசா பிரச்சனையையும் சொல்லி பேட்டுதான் போனவன். புதுசா வாங்கினவனுக்கு ஒரு 40 வயது வரும் ஆனால் ஆள் சரியான துன்பம் பிடிச்சவன். தான் முதலாழி எண்ட கொழுப்பு மனிசரை மதிக்க தெரியாத ஒருத்தன்.ஒரு நாழைக்கு ஒரு பெட்டையோடை வந்து விடிய விடிய தண்ணியடிச்சு கொண்டிருப்பான்.

சரி சரி அது அவனின்ரை சொந்த பிரச்சனை என்ரை பிரச்சனைக்கு வருவம். நான் இருக்கிற இடத்திலை இருந்து வேலைக்கு போக ஒரு அரை மணித்தியாலம் பாதாள தொடர் வண்டியிலை (சுரங்க ரெயின்)போக வேணும் அங்காலை ஒரு 5 நிமிச நடை .வேலையிடம்

உந்த சுரங்க வண்டி நிலையத்திலை இருந்து வெளியிலை போகேக்கைஆண் பெண்ணெண்டு சில வயசான சிலபேர் மலிஞ்ச வைனைவாங்கி குடிச்சு கொண்டு போற வாற ஆக்களிட்டை காசு கேட்டு கொண்டும் இருப்பினம். வந்த புதிசிலை அவையளை பாக்கேக்கை எனக்கு அதிசயமா தான் இருந்தது இஞ்சையும் பிச்சைகாரரா எண்டு.

பிறகு பழகிட்டிதுசில நேரத்திலை நானும் சில்லறையளை போட்டிட்டு போறனான்.சில நேரங்களிலை அதிலை வழைமையா இருந்த ஆக்கள் காணாமல் போடுவினம் வேறை புது ஆக்கள்வருவினம்.காணாமல் போனவை வேறை இடம் போனவையா அல்லது இறந்திட்டினமா எண்டெல்லாம் எண்டெல்லாம் எனக்கு கவலை இல்லை

இப்ப ஒரு கிழைமையா புதிசா ஒருத்தன் என்ரை வயதிருக்கும் வயது ஒரு 35க்கை தான் இருக்கும் கையிலை ஒரு பழைய இரண்டு கம்பியறுந்த கித்தார் பக்கத்திலை ஒருநாய்.அந்த கித்தாரை தட்டி தட்டி தனக்கு தெரிந்த ஆங்கில பிரெஞ்சு பாட்டுகளை பாடுவான் எண்டிறதை விட வசனமா சொல்லுவான்.

அவனுக்கு முன்னாலை உள்ள தொப்பியிலை சில சனம் காசு போடும். சேந்த காசுக்கு வழமை போல வைனும் வாங்கி தனக்கும் நாய்க்கும் ஏதாவது சாப்பாடு வாங்கி சாப்பிட்டிட்டு நான் இரவு வேவை முடிஞ்சு வரேக்கை பக்கத்திலை ஒரு கடுதாசி மட்டையை போட்டிட்டு அதிலை அவனும் அவன்ரை தலை மாட்டிலை அவனின்ரை நாயும் நல்ல நித்திரை கொண்டு கொணடிருப்பினம்

எனக்கு அவனை பாத்தாலே எரிச்சலா வரும் இளம் வயசு கைகால் எல்லாம் ஒழுங்கா இருக்கு ஏன் என்னை மாதிரி உழைச்சு சாப்பிடலாம்தானே அதை விட்டிட்டு பிச்சையெடுத்து கொண்டு இவனுக்கு ஒரு சதம் கூட போட கூடாது எண்டு மனசுக்கை நினைச்சு கொண்டு வேலைக்கு போவன்.


திரும்பவும் ஆற்ரையோ கதையை சொல்லி கொண்டு போறன் என்ரை கதைக்கு வருவம். நேற்ரைக்கு வேலைக்கு வெளிக்கிட்டு அவசரமா தொடர் வண்டியை பிடிப்பம் எண்டு ஒடினன் வண்டி வரேல்லை யரோ தண்டவாளத்திலை குதிச்சு தற்கொலை செய்திட்டாங்களாம் அதாலை வண்டி வரதாமதமாகும் எண்டு அறிவிச்சாங்கள்.

சே நான் வேலைக்கு போற நேரத்திலையா எவனாவது தற்கொலை செய்ய வேணுமெண்டு மனதுக்குள் திட்டியவாறே



வேலையிடத்திற்கு எனது கைத்தொலை பேசியில் நிலைமையை அறிவித்து விட்டு அரை மணி நேரம் பிந்தி வந்த வண்டியில் வேலையிடத்திற்கு போனால் அங்கை அண்டைக்கெண்டு முதலாளி முன்னுக்கு நிண்டான்.

நான் அவனிடம் போய் வணக்கம் எண்டன் அதுக்கு அவன் என்னை பாத்து நக்கலா வாங்கோ முதலாளி வாங்கோ வணக்கம் எண்டான். எனக்கு கோவம் பத்தி கொண்டு வந்தது எண்டாலும் அடக்கி கொண்டு பிரச்சனையை விளங்க படுத்த முயல சரி சரி போய் வேலையை பார் எண்டு ஏதோ நாயை துரத்திற மாதிரி சொன்னான்.

நானும் பேசாமல் போய் வேலையை தொடங்கினன். என்ன செய்ய நாய் வேடம் போட்டா குலைச்சு தானே ஆகவேணும்.இரவு 12 மணியாகி கொண்டிருந்தது எனது வேலையை முடித்து விட்டு புறப்பட தயாரான போது வழமை போல ஒரு பெண்ணுடன் தண்ணியடிச்சு கொண்டிருந்த முதலாளி காரன் என்னை பாத்து சொன்னான் பொறு நாங்கள் சாப்பிட வேணும் எண்டான் .

நான் சொன்னன் இன்னும் அரை மணி நேரத்திலை கடைசி றெயின் கெதியா சாப்பிட்டா நல்லது எண்டு சொல்ல அவனோ தனது நண்பியிடம் பாத்தாயா வேலைக்கு வந்ததே பிந்தி அதிலை அய்யா சொல்லேக்கை நாங்கள் சாப்பிட வேணுமாம் என்றான்.



அவனின்ரை நண்பியோஒருபடி மேலே போய் எதுக்கு அவருக்கு கரைச்சல் குடுக்கிறாய் பேசாமல் அவரை வீட்டிலை இருக்க விட்டிட்டு மாமதா மாதம் சமபளத்தை அனுப்பி விடலாமே இப்ப என்ன றெயின் இல்லாட்டி நடந்து போ காலிருக்குதானே எண்ட அங்கு நின்ற மற்றைய வேலை காரர் எல்லாரும் சிரிக்க எனக்குஅவமானமா போட்டுது.

முதலாளி ஏதும் சொன்னாலும் பறவாயில்லை சம்பளம் தாறவன் எண்டு பொறுக்கலாம் ஆனால் ஆனால் அவனின்ரை ஒட்டுண்ணியெல்லாம் என்னை நக்கலடிக்கிது எண்டு எனக்கு ரோசம் பொங்கி கொண்டு வர ஒருநிமிசம் என்ரை நிலைலைமை எல்லாத்தையும் மறந்துபோய் கோவத்திலை நீ விரும்பினா போட்டு சாப்பிடு எண்டு முதலாளியிட்டை சொல்லி போட்டு வெளியேறிட்டன்.

வீட்டை போய் மனிசியிட்டை பிரச்சனையை சொன்னன். ஏதோ கோவத்திலை விட்டிட்டு வந்திட்டன் விசாவுமில்லாமல் வேறை வேலை எடுக்கிறதும் கஸ்ரம் எங்கை வேலைக்கு போனாலும் முதல் விசா மற்றது வேலை செய்த அனுபவம் இரண்டையும்; தான் கேப்பாங்கள் ஏதோ ஒரு எட்டு வருசம் ஒரு பிரச்சனையுமில்லாமல் காலம் ஒடிட்டிது வேலையை விட்டா விசா இல்லாமல் உதவி பணம் கூட கிடைக்காது. சரி எதுக்கும் நாளைக்கு போய் அவனிட்டை மன்னிப்பு கேட்டிட்டு வேலையை செய்வம் எண்டு மனிசிக்கு சொல்லிப்போட்டு படுத்திட்டன்.

இண்டைக்கு காலைமை எழும்பி வழமை போலை வேலைக்கு போனன் அங்கை என்ரை இடத்திலை புதிசா வெள்ளை ஒருத்தன் வேலைசெய்து கொண்டு நிண்டான்.முதலாளியிட்டை போய் காலை வணக்கம் எண்டன். நிமிந்து பாத்து என்ன வேணுமெண்டான்.நான் நேற்று செய்தது பிழை மன்னிச்சு கொள்ளுங்கோ இனி அப்பிடி தவறு வராமல் நான் நடக்கிறன் எண்டு மன்னிப்பு கேட்டன்.

முதலாளியோ உன்னை எனக்கு தெரியாது போகலாம் எண்டான். அவனுக்கு தெரியும்எனக்கு விசா இல்லாத படியால் சட்டப்படி என்னால் எதுவும் செய்ய முடியாது எண்டு. விசா இல்லாத நாயே உனக்கெல்லாம் எதுக்கு ரோசம் கோபம் எண்டு என்னை நானே திட்டியவாறு சுரங்க ரயில் நிலையத்தை நேக்கி நடந்தன்.

இனியென்ன செய்யலாம் தெரிந்த தமிழாக்களிட்டைதான் நிலைமையை சொல்லி வேலை கேக்க வேணும்.;வீட்டையும் உடனை போக மனம் வராமல் சுரங்க இரயில் நிலைய படியிலை கொஞ்ச நேரம் இருந்தன். அந்த கித்தார் கார பெடியன் தொப்பியை முன்னுக்கு வைச்சிட்டு கித்தாரை தட்டினபடி ஜோர்ச் மைக்கலின்ரை பிரீடம் பிரீடம் எண்ட எண்ட பாட்டை பாடிக்கொண்டிருந்தான்.

அவனை கொஞ்ச நேரம் உத்து பாத்தன் என்ன கவலை இல்லாதா மனிதன் மாத கடைசியிலை வாடகை பிரச்சனையா? மின்சார கட்டணமா?தண்ணி கட்டணமா? சீட்டா வட்டியா? ஊருக்கு பணம் அனுப்ப வேண்டுமா? என்று எதுவித பிரச்சனையுமற்ற ஒருமனிதன் அன்றாடம் கிடைக்கிற பணத்திலை தனக்கும் தன்ரை நாய்க்கும் உணவு மிச்சத்துக்கு மலிந்த வைன் அதோடை பிரச்சனை முடிஞ்சுது.

இப்போ என்னை பாக்கவே எனக்கு வெறுப்பாக இருந்தது அவன் கடவுளாக தெரிந்தான் அவன் பாடும் பாடல் தேவ கானமாக இனித்தது சட்டை பையினுள் கையை விட்டு சில சில்லறைகளை அவனது தொப்பிக்குள் போட்டு விட்டு வீடு நோக்கி பயணமானேன்
; ;
Reply
#60
சியாம் இது உங்க சொந்த கதையா??? வாசிக்கவே மனதில் ஒரு பாரம்.. தமிழனாய் பிறந்துவிட்டோம்... சமாளித்துதான் ஆகவேண்டும்ம்.. சரியா கஸ்டபடுறீங்க.. நல்லதுக்குத்தான்.. கவலைப்படாதேங்க... Idea :!:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)