வாழ்த்துக்கள் ஈஸ்வர் சரியான பதில் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இவரின் பெயர் பகத்சிங்
பிறந்தது : 7-10-1907
பிறந்த இடம் : பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் நகருக்கு அருகிலுள்ள லாயல்பூர் மாவட்டதில் பங்கா எனும் கிராமத்தில் பிறந்தார்.
இந்திய சமதர்மக் குடியரசு இராணுவம்(H.S.R.A) என்ற அமைப்பு ஒன்று 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்புபின் மத்தியக்குழு உறுப்பினராக் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அமைப்பின் முதல் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளில் அவர் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
1.காவல் அதிகாரி 'சாண்டர்ஸ்' என்பவரக் கொல்வது.
2.சட்டசபையில் குண்டு வீசுவது.
17-12-1928 காவல் அதிகாரி 'சாண்டர்ஸ்' சுடபட்ட சம்பவதின் பின்னர் அவரின் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பமாயிற்று. நான்கு மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் கட்சி முடிவுப்படி 8-4-1929 அன்று சட்டசபையில் குண்டு வீசும் நடவடிக்கையில் ஈடுபட்டு தாங்களே கைதாகச் சம்மதித்து, பிறகு நீதிமன்றங்களைத் தமது கொள்கை பரப்பும் மேடைகளாக ஆக்கிக் கொண்டார்.
7-10-1930 அன்று தீர்ப்புக் கூறப்பட்டது.(அன்றய நாள் அவருக்கு 22 வயது பூர்த்தியடைந்து 23 ஆரம்பம்)
பகத்சிங், சுகதேவ், இராகுரு(raj guru) ஆகிய மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், இன்னும் ஒருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டன.
07-10-1930 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி பகத்சிங் முதலான மூவருக்கும் 17-10-1930 அன்றே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்மென்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இவர்கள் தூக்கிலிடப்பட்டது 23-03-1931.