08-19-2005, 02:08 PM
வசி அண்ணா நீங்க வேணுமெண்டா பேய்க் கதை சொல்லேக்க கலர் சேலை உடுத்த பேயை ஹீரோயினா போடுங்க ஆர் வேண்டாமெண்டது
. .
.
.
|
பேய் கதை சொல்லுங்கோ
|
|
08-19-2005, 02:08 PM
வசி அண்ணா நீங்க வேணுமெண்டா பேய்க் கதை சொல்லேக்க கலர் சேலை உடுத்த பேயை ஹீரோயினா போடுங்க ஆர் வேண்டாமெண்டது
. .
.
08-19-2005, 02:18 PM
அதுவும் நல்ல ஐடியா தான் கலர்புல்லா ஒரு பேய் கதை சொல்லுங்க வசி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
08-19-2005, 02:27 PM
கலர் சாறி உடுத்த பெண் கதை சொன்னால் அது காதல் கதை ஆகிடும்..பேய் கதை என்றால் அதுக்கு வெள்ளை சாறி போட்டா தான் பயம் வரும்....:wink:
" "
" "
08-19-2005, 02:30 PM
அப்ப கலர் சாறியோட பேய் வந்தா யாரும்
பயப்பட மாட்டாங்க என்று சொல்றீங்கள்? :roll:
08-19-2005, 06:22 PM
Rasikai Wrote:Quote:என்ன சொல்லுறிக்க ரசிகை இந்த ஊர்ப் பேய்களும் உங்க வத்து அசைலம் எடுத்துட்டுதுகளோ? பேயளுக்குப் பயந்த மனிசரும் இருக்கினம்,மனிசருக்குப் பயந்த பேய்களும் இருக்கினம். இலங்கையில டாக்டர் கோவூர் எண்டு ஒருத்தர் இருந்தவர்,இவரைப் பற்றி யார் யாருக்குத் தெரியுமோ தெரியாது,இவர் சாய்பாபாவுக்கே சவால் விட்டவர். பேய் பிடிப்பது என்பதெல்லாம் மன வியாதி என்று பல பேரை மனோதத்துவ ரீதியாக் குணப்படுத்தினவர்.இந்த பேய்க்கதை சொல்லிற ஆக்களுக்கும்,மந்திரீகம் செய்யிற ஆக்களின்ட பித்தலாட்டங்களைய் எல்லாம் அம்பலப்படுத்தினவர்.இவர் குணப்படுத்திய ஒருவரின் கதயை மையமாக வைத்து அந்தக் காலத்தில நம்பிகை எண்டொரு நாடகம் இலங்கை முழுக்க அரங்கேறியது,யாராவது பாத்திருக்கிறியளோ.
08-19-2005, 11:13 PM
கோவுர் சாயி பாபாவிடம் ஏன் சின்னதாக சங்கிலி சின்ன லிங்கம் எண்டு வாயாலை வரவழைக்காமல் பெரிதாக ஒரு புசணிக்கயை வர வழைக்க சொல்லி சவால் விட்டவர் சாத்திரியும் ஊரிலை ஒரு பேயை பிடிச்சனான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
08-19-2005, 11:39 PM
பாரதிராஜா படங்களில் ஏற்கனவே கலர்ப்பே வந்துள்ளதே. ஆனால் ஒன்று அந்தப்பேயைச்சுற்றி ஏராளமான கூட ஆடும்.
08-20-2005, 10:28 AM
இது ஒரு காதர்களின் பேய்க்கதை
கந்தரோடையில் ஒரு குடும்பமிருந்தது 4 ஆண்களுக்கு 1தங்கை கன காலத்தின் பிறந்த பெண் எண்டபடியால் அண்ணன்மார் செரியான பாசம் விவசாயத்தையே தொழிலாக கொண்ட குடும்பம் பெண்பிள்ளையை பெரிய படிப்பு படிபிக்க விரும்பியது அந்த காலத்திலேயே பிள்ளைக்கு புது சைக்கிள் வாங்கிக் குடுத்து பாடசாலைக்கு அனுப்பினார்கள் ஊர் பெடியள்மார் அண்ணன்மாரின் குணம்தெரிந்து அந்தபிள்ளை றோட்டால் போணால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாங்கள் இப்பிடி இருக்கையில் hPயுசனுக்கு போற இடத்தில் வெளியிடத்து பெடியன் ஒருவனுக்கு பிள்ளைமேலை லவ் வந்திட்டுது கட்டுப்பாட்டுக்கையே வளர்ந்த பிள்ளைக்கும் அந்த பெடியனின் அன்பு கவர்ந்திருக்கவேண்டும் ஓம் எண்டு அவர்களின் காதல் வளர்ந்திருக்கு ஒரு 6மாதத்தின் பின் இந்த விடயம் எப்பிடியோ அண்ணன்மாருக்கு தெரிந்து விட்டது பிள்ளையை கண்டித்திருக்கிறார்கள் முடியவில்லை பெடியனையும் வெருட்டிபார்த்தார்கள் சரிவரேலை பெட்டையை வீட்டுக்குள் புூட்டி வைத்து அடித்திருக்கிறார்கள் அந்த அடி படாத இடத்திலை பட்டு பிள்ளை செத்துப் போச்சு உடனே கயித்திலை மாட்டி பிள்ளையை தொங்க வைத்துவிட்டு தூக்கு போட்டு செத்திட்டாள் என கதையை கட்டி விட்டுட்டார்கள் போஸ்மோட்டம் இல்லாமல் பொலிசைப்பிடிச்சு விசயத்தையும் சேப்பண்ணினார்கள் பொடியை கொண்டுபொய் சுடலேலை எரித்துவிட்டு அடுத்த நாள் காலேலை காடாத்த(சாம்பல் அள்ள) சுடலைக்கு போயிருக்கிறார்கள் அங்கே பிள்ளையின் காதலன் சாம்பல் மேட்டில் விழுந்து கிடந்தான் உயிரில்லாமல் அருகில் நஞ்சுப் போத்தல் இருந்தது. (ஆனால் ஊரில் கதை அண்ணன்மார்தான் அடிச்சு சாக்கொல்லி போட்டு கொண்டு வந்து போட்டதாக ) ஏதோ இரண்டும் தற்கொலையென முடிந்துவிட்டன. . . இதெல்லாம் முடிந்து 2கிழமையிருக்கும் சுடலைக்கு போற வழியில் ஒரு வைரவ கோயிலும் அரசமரமும் இருக்கிறது அந்த மரத்தின் பின்னால் இரவு 10மணிக்குப் பிறகு யாரோ சிரிச்சுக் கேக்குமாம் கொஞ்ச நேரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேக்குமாம் இந்த காதலர்கள் முந்தி லவ் பண்ணும் போது இந்த இடத்திலைதான் சந்திப்பார்களாம் (சுடலை றோட்டில் எவரும் வரமாட்டார்கள் என்பதால்) இதை எங்கடை மாமாக்கு சொல்ல ஆள் சிரிச்சுப்போட்டு ஒருநாளைக்கு போய்பாத்திட்டு வந்து உங்களுக்குச் சொல்லுறன் எண்டார் ஒருநாள் மாமாவை இரவு 11மணியாகியும் காணவில்லை தேடவெளிக்கிட்டம் அப்ப ஒருவர் வந்து சொன்னார் உங்கடை மாமா வைரவ கோயிலிலை விழுந்து கிடக்கிறார் எண்டு போய் ஆளை தூக்கிகொண்டு வந்தம் மயக்கம் தெளிஞ்சு என்ன எண்டு விசாரித்தால் 10மணிபோல மாமா அந்த பாதையாலை வந்தாராம் அப்ப அந்த மரத்துக்கு பின்னாலை இருந்து யாரோ அழுகிற மாதிரி சத்தம் கேட்டுச்சாம் மாhமாக்கு உந்த பேய் பயம் கிடையாது சைக்கிலை நிப்பாட்டிப் போட்டு போய்பாத்திருக்கிறார் ஒண்டையும் காணேலை திரும்பி வந்து சைக்கிலை எடுக்கேக்கை பெரிய இரைச்சலோடை காத்து மாதிரி ஒண்டு வந்து இவரை இழுத்து கொண்டு போய் மரத்திலை மோதிச்சாம் அத்தோடை இவர் மயங்கிட்டார் ஊர் ஆட்கள் சொல்லிச்சினம் எங்களுக்கு எப்பவோ இது தெரியும் இறந்த அந்த காதலர்கள்தான் அவர்களை ஏன் தொந்தரவு செய்யப் போனதாக நீண்ட காலம் அந்த சிரிப்பும் அழுகையும் அந்த இடத்தில் இருந்ததாம் இப்ப இதைப்பற்றி நண்பர்களுடன் நாங்கள் கதைப்பது என்னவெண்டால் பேயை காட்டி வேறை இரண்டு சோடி விளையாட்டுக் காட்டியிருக்கெண்டு ஆனா தனிய அந்த அரசமரத்தடியாலை போகச் சொன்னால் எஸ்கேப். . . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
08-20-2005, 10:34 AM
வசி அண்ணா இப்படி எல்லாம் பாடுவதை பார்க்க, பயம் வசி அண்ணாக்கு தான் அதிகம் போல<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->சரி சரி இன்னும் சொல்லுங்க, கேட்பம்
[b][size=15]
..
08-20-2005, 10:48 AM
அதுசரி அப்போ நான் ஆகக் சின்னப்பிள்ளையாக இருந்தப்போ பெரிய அண்ணாக்கள் அக்காக்கள் எல்லோரும் தம்ளர் (அதுதானுங்க கோப்பி விட்டுக் குடிப்பமே அதுதான்) அதை தலைகீழாக வைத்து ஏதோ ஆவி கதைக்குது என்று சொல்லி எங்களை சின்னப் பிள்ளையளை துரத்தி விடுவார்கள். அது உண்மையோ முகத்தார் அங்கிள். :roll: :?:
----------
08-20-2005, 01:22 PM
ஆனால் ஒன்று கவனித்தீர்களா? இத்தனை பேய்களும் மனிதர்களை ஒன்றுமே செய்யவில்லை. மயக்கம், காய்ச்சல் தான் !!!!
[b][size=15]
..
08-20-2005, 01:39 PM
narathar Wrote:பேயளுக்குப் பயந்த மனிசரும் இருக்கினம்,மனிசருக்குப் பயந்த பேய்களும் இருக்கினம். <img src='http://www.uni-giessen.de/~gk1415/kovoor4.jpg' border='0' alt='user posted image'> <i>டாக்டர் கோவூர்</i> நம்பிகை நாடகம், வரணியுரான் நெறிப்படுத்தி இலங்கை வானோலியில் ஒலிபரப்பாகியது. அதே நாடகம் கொழும்பு கதிரேசன் மண்டபத்திலும் மேடையேறியது. கோவூரின் ஒரு கதை மலையாளத்தில் புனர்ஜன்மம் என்றும் அதே படம் தமிழில் மறுபிறவி என்றும் திரைப்படங்களாக வெளிவந்தன. மறுபிறவியில் கதாநாயகனாக முத்துராமன் நடித்திருந்தார்.
08-20-2005, 01:47 PM
sathiri Wrote:கோவுர் சாயி பாபாவிடம் ஏன் சின்னதாக சங்கிலி சின்ன லிங்கம் எண்டு வாயாலை வரவழைக்காமல் பெரிதாக ஒரு புசணிக்கயை வர வழைக்க சொல்லி சவால் விட்டவர் <!--emo& சின்னப் பொருட்களை இலகுவில் ஒளித்து வைத்து எடுக்கலாம். எனவே இவ்வளவு முடிந்த உங்களால் ஒரு புசணிக்கயை ஒளித்து வைக்க முடியாதல்லவா? [quote]" Dr Kovoor had been a terror to those who cheat innocent and gullible masses in the garb of holy men or miracle performers. His fervour to wipe out superstition from the face of earth , and establish a humanitarian tradition makes Dr Kovoor one of the noblest personalities of the twentieth century. "
08-20-2005, 02:10 PM
நன்றி அஜீவன் அண்ணா ,உவரைப் பற்றி இன்னும் தகவல்கள் இருந்தாப் போடுங்கோ,எல்லாருக்கும் தெரியட்டும்,
எங்கட நாட்டில அந்தக் காலத்தில இருந்த நல்ல மனிசரப் பற்றி.
08-20-2005, 06:30 PM
டாக்டர் கோவூர் யாழ் மத்திய கல்லூரி ஆசிரியராக இருந்திருக்கிறார்.கோவூரின் மனோத்த்துவ உண்மை கதைகள் வீரகேசரி பிரசுரமாக வந்துள்ளது அத்துடன் ஹி்ப்னாடிசிய மெஸ்மரிச கலைகளை ஸ்டேஜ் புரோக்கிராமாக யாழ் கொழும்பு பகுதிகளில் செய்துகாட்டியவர்
பேய்கதை கேட்கவிரும்புவர்கள் காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஸ் டி.எஸ் பாலயாவுக்கு சொல்லும் பேய்க்கதையை பார்க்கவும் அப்படியான நகைச்சுவை இதுவரை பார்க்கவில்லை....பார்க்கமுடியுமானால் கசட் எடுத்து பார்க்கவும்
08-20-2005, 09:51 PM
narathar Wrote:நன்றி அஜீவன் அண்ணா ,உவரைப் பற்றி இன்னும் தகவல்கள் இருந்தாப் போடுங்கோ,எல்லாருக்கும் தெரியட்டும், http://www.uni-giessen.de/~gk1415/kovoor.htm THE CHALLENGE. Professor A. T. Kovoor, since 1963, had declared an award of Rs. 1, 00, 000/- for anyone who could demonstrate supernatural or miraculous powers under fraud-proof conditions. This was his challenge: I, Abraham T. Kovoor of "Tiruvalla", Pamankada Lane, Colombo-6 do hereby state that l am prepared to pay an award of 1, 00, 000 Srilanka rupees to any one from any part of the world who can demonstrate supernatural or miraculous powers under fool-proof and fraud-proof conditions. This offer will remain open till my death or till I find the first winner. Godman, Saints, Yogis and Sidhas who claim that they acquired miraculous powers through spiritual exercises and divine boons win this award if they can perform any of the following "miracles" 1. Read the serial number of a sealed up currency note. 2. Produce an exact replica of a currency note. 3. Stand stationary on burning cinders for half a minute without blistering the feet. 4. Materialise from nothing an object I ask. 5. Move or bend a solid object using psychokinetic power. 6. Read the thought of another person using telepathic powers. 7 Make an amputated limb grow even one inch by prayer, spiritual or faith healing powers, Lourdes water, holy ash, blessing etc. 8. Levitate in the air by yogic power. 9. Stop the heart-beat for five minutes by yogi power. 10. Stop breathing for thirty minutes by yogi power. 11. Walk on water. 12. Leave the body in one place and reappear in another place. 13. Predict a future event. 14. Develop creative intelligence or get enlightened through transcendental or yogic meditation. 15 Speak or understand an unknown language as a result of rebirth or by being possessed by a spirit. holy or evil. 16. Produce a spirit or ghost to be photographed. 7. Disappear from the negative when photographed. 18. Get out of a locked room by, spiritual power. 19. Increase the quantity by weight of a substance by divine power. 20. Detect a hidden object. 21. Convert water into petrol or wine. 22. Convert wine into blood. 23. Astrologers and palmists, who hoodwink the gullible by saying that astrology and palmistry are perfectly "Scientific", can win my award if they can pick out correctly - within a margin of five percent error - those of males, females, and living and the dead from a set of ten palm prints or astrological charts giving the exact time of birth correct to the minute, and places of birth with their latitudes and longitudes. I invite miracle performers like Satya Sai Baba, Pandrimalai Swamigal, Neelakanta Tathaji, Nirmala Devi Srivastava, Pujya Dadaji, Dattabal, Triprayar Yogini. Gtirudev Anandamurthi, Kamubhai, Chinmayanand, Acharya Rajneesh, Muktanand, Swami Rama, Swami Haridas, Sivabalayogi, Bhagavan Gnanananda, Gurumaharaj-ji, Maharshi Mahesh Yogi, Hazarath Ali, Dr. Vadlaimudi, C. S. Teerthangar, R.P.Tiwari, Uri Geller, Ne1iya Michailova, Jeane Dixon, Sybil Leek and the numerous "professors" of astrology and palmistry, in India and numerous other gurus, swamijis, mahatrnas, acharyas, andas, babas and bhagavans who have found fresh pastures and wealthier gullibles in Western Countries, to take up my challenge and prove to skeptics like me that they are not hoaxers. http://www.indian-skeptic.org/html/kovoor.htm
08-20-2005, 10:24 PM
<img src='http://www.uni-giessen.de/~gk1415/kovoor4.jpg' border='0' alt='user posted image'>
டாக்டர் கோவூர் டாக்டர் கோவூரது மகன் -மனைவி மற்றும் குழந்தைகள் பிரான்சை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் இலங்கையில் வாழ்கிறார்கள். இலங்கையின் "திருவல்லா", 89, பாமன்கடை ஒழுங்கை , கொழும்பு-6 எனும் இடத்திலுள்ள இவரது மூன்று மாடிகளைக் கொண்ட வீடு தற்போது பகுத்தறிவு இயக்க செயல்பாடுகளுக்காக பாவிக்கப்படுகிறது. கோவூரது எலும்புகள் அவர் இறுதியாக கடமை புரிந்த கொழும்பு தேர்ஸ்டன் கொலெஜில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. இன்றுவரை சாயிபாபா இலங்கைக்கு வராமைக்கு இவரும் இவரது மாணவர்களுமே காரணம். தந்தை பெரியாரது நண்பனாக வாழ்ந்த இவர் கேரளாவின் திருவல்லா எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்பாணத்தில் இவர் கற்பித்த காலத்தில் இவர் கற்றுக் கொடுத்த பாடங்களில் ஒன்று கிறிஸ்தவம். இவரிடம் பாடம் கற்ற மாணவர்கள் மிக அதிக புள்ளிகளால் தேர்ச்சி பெற்றனர். ஆனால் மாணவர்கள் , சமயத்தையே வெறுத்து விவாதிக்குமளவுக்கு மாறி விட்டனர் என நிர்வாகத்தால் குற்றம் சுமத்தப்பட்டார். இவரது தந்தையார் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என்பது குறிப்பிடத்தக்கது. புற்று நோய் தாக்கியிருந்த போதிலும் சாகும் வரை அதைப் பெரிது படுத்தாமல் வாழ்ந்தார். இரவு படுக்கையில் தனது இறுதி மூச்சை விட்ட இவரது கண்கள் தானமாக உடன் வழங்கப்பட்டன. உடல் மருத்துவ மாணவர்களுக்காக பல்கலைக் கழகத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர் உடலிலிருந்து பெறப்பட்ட எலும்புக் கூடு இன்றும் தேஸ்டன் கல்லூரியில் பாதுகாக்கப்படுகிறது. இவரது இறுதிக் காலத்தில் (உயிர் பிரியும் நேரத்தில்) இவருடன் வாழ்ந்த இருவர் தற்போது ஐரோப்பாவில் வாழ்கிறார்கள். ஒருவர் லண்டனிலும் மற்றவர் சுவிசிலும் வாழ்கிறார்கள்.
08-20-2005, 10:33 PM
எனது அப்பப்பா இவர் எழுதிய புத்தகங்கள் வைத்திருந்தார்
அதில் ஒன்றை படித்திருக்கிறேன்..பெயர் நினைவுக்கு வரவில்லை.. ஆவிகளுடன் பேசுவது பற்றி எழுதியிருந்தார்.. டம்ளர் ஒன்றை வைத்து ஆவிகளுடன் கதைப்பது பற்றி அது(டம்ளர்) எவ்வாறு நகர்கிறது என்று விளக்கமாக எழுதியிருந்தார். அதைப்படித்த பிறகுதான் எனக்கு ஆவிகளில் நம்பிக்கை இல்லாமல் போனது. தகவல்களுக்கு நன்றி அஜிவன் அண்ணா.. இவர் எழுதிய புத்தகங்களை இப்பொழுது விற்கிறார்களா?
08-20-2005, 10:37 PM
தமிழில் <b>மனக்கோலம்</b> எனும் தலைப்பில் பல புத்தகங்கள் வீரகேசரிப் பிரசுரங்களாக வெளிவந்தன வசிசுதா.
<img src='http://www.uni-giessen.de/~gk1415/godmen.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uni-giessen.de/~gk1415/god-demon-sprit.jpg' border='0' alt='user posted image'> THE MIRACLE OF GANGA WATER by late Dr Abraham Kovoor AMOROUS GODS AND GODDESSES Dr. Abraham Kovoor IS ASTROLOGY SCIENTIFIC? Dr Abraham T. Kovoor This article was written with the kind permission from <b>JAICO PUBLISHING HOUSE - 121, Mahatma Gandhi Road Bombay - 400 023 India</b> E-mail :- jaicopub@giasbm01.vsnl.net.in |
|
« Next Oldest | Next Newest »
|