Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
[size=18] பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே! சிறகைவிரி,எழு!
சிங்க இளஞனே திருப்பு முகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்ச்சியா?
கைவிரித் துவந்த கயவர் நம்மிடைப்
பெய்வி ரித்து நம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பாரெனில்,
வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே?
மொழிப் பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
பொன்மொ ழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள் திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இழஞனே, வாழ் நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி நாரதர்! இது பாரதிதாசனின் கவிதைகளாய் இருந்தால் எந்த தொகுதி என்று சொல்கிறீர்களா?
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
அவர்தாம் பெரியார் - பார்
அன்புமக்கள் கடலின் மீ தில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்...(அவர்)
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்ச கர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலை பெரும் படையின் தொடுப்பு...(அவர்)
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்....(அவர்)
தமிழர் தவம்கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும்தலை மேடை
நமக்குத் தாண்டி அந்த வாட்படை
நமை அவரின் போருக் கொப்படை...(அவர்)
(குயில் :26.8.1958)
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி நாரதர்
ஆனால் அந்த இனைப்பு வேலை செய்யவில்லை
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
<span style='color:red'>சங்க நாதம்
[size=18]எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கே மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடு செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்க ளோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் முழங்கு சங்கே!
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீ ராதி தீ ரரென் றூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப் போல காவிரிபோல கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனிழகமழ்ந்து வீ ரஞ்செய்
கின்றதமிழ் எங்கள் மூச்சாம்</span>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
[size=18]வீ ரத் தமிழன்
தென்றிசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம்
பூரிக்குதடடா!
அன்றலர்ந்த லங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும்
தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான்
கொடைகொடுக்கும் கையான்!
குள்ள நரிச் செயல்செய்யும்
கூட்டத்தின் கூற்றம்!
எந்தமிழர் மூதாதை;
என் தமிழர் பெருமான்
இராவணன் காண்! அவன் நாமம்
இவ்வுலகம் அறியும்
வஞ்சக விபூஷணனின்
அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு
மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை தடவி
நிறைய இசைச் செவியமுது
தரும்புலவன் தன்னை
வெஞ்சமரில் சாதல்வர
நேர் நிதிடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத்
தமிழ்மறைகள் நான்கு
சஞ்சரிக்கும் நாவானை
வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன்; மறந்தவரைச்
சழக்கரெனச் சொல்வேன்
வீ ழ்ச்சியுறும் தமிழினத்தில்
எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப்
பொறமை தன்னைத்
தொகையாக எதிர் நிறுத்தி
தூள் தூளாக்கும்
காழச்சிந்தை மறச்செயல்கள்
மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப்
பெருக்க வேண்டும்!
கீ ழச் செயல்கள் விடவேண்டும்!
இராவணன் தன்
கீ ர்த்திசொல்லி அவன்
நாமம் வாழ்த்த வேண்டும்
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
நாரதா இன்று என்ன லீவா? படிக்க படிக்க போட்டுத்தாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள், பாரதியின் தாசனது கவிதைகள் அருமை.
.
.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
ஒம் இன்று விடுமுறை, நாளயும் தான்,எதாவது உருப்படியா செய்வம் எண்டு....பாரதிதாசன் எழுதினது இப்பவும் எவ்வளவு உண்மை என்று திருபிப் படிக்கத் தெரியுது...
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
<span style='color:darkred'>இன்பத் தமிழ்
தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவதமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வதமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத்
தமிழ் நல்ல பதமிழ் எங்கள் உயர்வதமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.
----------------
தமிழின் இனிமை
கனியிடை ஏறிய சுளையகழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையநனிபசு பொழியநல்கிய குளiரின் நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
பொழிலிடை வண்டின் ஒலியபுனலிடை வாய்க்கும் கலியகுழலிடை வாய்க்கும் இசையகொட்டிடும் அமுதப் பண்ணும் குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பவிழைகுவ னேனும் தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர்.
பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை - எனனைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில் போற் பேசிடும் மனையாள் = அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவ ராகும் வண்ணம் = தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்.
நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளiர்வெண் ணிலவாம்
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளiயாம்
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளiன் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?
செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையதன்னிகர் தானியம் மூதிரை - கட்டித் தயிரோடு மிளகின் சாறும்
நன்மதுரஞ் செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா, உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே.
---------------------- </span>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
தமிழன்
அறியச் செய்தோன் தமிழன்
அறிந்த அனைத்தும் வையத்தார்கள்
செறிந்து காணும் கலையின் பொருளும்
சிறந்த செயலும் அறமும் செய்து
நிறைந்த இன்ப வாழ்வைக் காண
நிகழ்த்தி நிகழ்த்தி நிகழ்த்தி முன்னாள்
காற்றுக் கனல்மண் புனலும் வானும்
தமிழன் கனவும் திறமும் கூட்டி
நாற்றிசை அழகை வாழ்வைச் செய்ய
நவின்று நவின்று நவின்று முன்னாள்
எங்கும் புலமை எங்கும் விடுதலை
எங்கும் புதுமை கண்டாய் நீதான்!
அங்குத் தமிழன் தோளே கண்டாய்!
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>தோழியே சொல்வாய்
காசுபணம் வேண்டாமடி தோழியே - அவன்
கட்டழகு போதுமடி தோழியே
ஆசை வைத்தேன் அவன்மேலே தோழியே -என்னை
அவனுக்கே அளiத்தேனடி தோழியே
ஓசைபடா தென்வீட்டில் ஓர் இரவிலே - என்பால்
ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியே
ஏசட்டுமே அவன் வரவால் என்னையே - நான்
இவ்வ
தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில் - செழுந்
தேனுக்காக வண்டுபாடும் மாலையில்
இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர் - நல்
எழில்காட்டிச் சென்றானடி தோழியே
ஒன்றெனக்குச் செய்திட்டி இப்போதே - நல்ல
ஒத்தாசை ஆகுமடி தோழியே
அன்றெனக்குக் காட்சி தந்த கண்ணாளன் -கொஞ்சம்
அன்ப
என்பார்வை அவன் பார்வை தோழியே - அங்கே
இடித்ததுவ தன் அழகில் தாக்கடைந்த என் வாழ்வில் - அவன்
தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாயே
பொன்னான நாளடியே என் தோழி - ஒருவாய்ப்
பொங்கலுண்டு போகும்படி சொல்வாயே
இந்தாளும் வாழுகின்றேன் தோழியே - அவன்
எனை மறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியே</span>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இசைத் தமிழ்
மேசை விளக்கேற்ற - நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத் தமிழ்படித்தேன் - என்னருமை
அம்மா அருகில் வந்தார்
மீசைத் தமிழ்மன்னர் - தம்பகையை
வென்ற வரலாற்றை
ஓசையுடன் படித்தேன் - அன்னைமகிழ்
வுற்றதை என்ன சொல்வேன்!
செந்தமிழ் நாட்டினிலே - வாழ்கின்ற
சேயிழை யார்எவரும்
வந்த விருந்தோம்பும் - வழக்கத்தை
வாய்விட்டுச் சொல்லுக்கையில்
அந்தத் தமிழ் அன்னையின் - முகத்தினில்
வாய்விட்டுச் சொல்லுகையில்
அந்தத் தமிழ் அன்னையின் - முகத்தினில்
அன்பு பெருகியதை
எந்த வகை உரைப்பேன்! கேட்டபின்பும்
இன்னும் சொல் என்றுரைத்தார்!
கிட்ட நெருங்கிஎனைப் - பிள்ளாய் என்று
கெஞ்சி நறுந்தேனைச்
சொட்டு வதைப்போலே - வாய் திறந்து
சொல்லொரு பாடல் என்றார்.
கட்டிக்கரும்பான - இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்
எட்டுவகைச் செல்வமும் - தாம்பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார்!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இப்போது வேலை செய்கின்றது நன்றி நாரதா.....
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
உழைப்புத் துன்பம்
காலைப் போதனைக் கனலால் பொசுக்கிச்
சோலையும் கடந்து கசுடவந்த வெய்யில்
விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன்
எண்ணும் போதென் கண்ணின் எதிரில்
வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள்
வந்து நின்று வணக்கம் செய்தனார்.
ஐயகோ நெஞ்சமே இந்த ஆட்கள்
தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினார்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
<img src='http://img380.imageshack.us/img380/2329/nrhiyapnyhh1vg.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
விரக தாபம்
காதலும் கனலாய் என்னையே சுடும்
ஈதென்ன மாயமோ!
நாதர் மா தெனையே சோதித்தாரோ
நஞ்சமோஇவ் வஞ்சி வாழ்வு? ஐய்யோ!
நலியுதே என் அகமிகுதியு மலருடலே
நனிமெலிதல் அநீதி இதுவலவோ?
வனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில்
வருவரோ அலது வருகிலரோ
வாரிச விகசித முக தரி சனமுற
வசமதோ கலவி புரிவது நிசமோ
மதுரமான அமுதமு
மலரினொடுமது கனியிரச மதிவிரச மடைவதென்ன!
தென்ற லென்றபுலி சீறல் தாளேன்
சீத நிலவே தீ தாய் விளைந்திடுதே!
வேன்றி யணைந்திடும் அவர்புயம் அணைந்தே
மேவி ஆவி எய்தல் எந்த நாள்?