Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம்- 6</span>
மனது முழுக்க பாரத்துடன் தன் படுக்கையில் விழுந்தவனிடம், சந்தோசத்துடன் இருந்த ஜெனி "மச்சான் என் மனைவி கடிதம் போட்டா" என்று
"சந்தோசம்"
என்று சுரத்தில்லாமல் பதில் சொன்ன ரமணன். இருந்த நிலையை பார்த்த ஜெனி "என்னடாப்பா மூன்று கிழமை வேலையால் களைத்துப் போய் இருப்பாய்.. தேத்தண்ணீ போட்டுத்தாறன்." என்று சொல்லி அன்புடன் அவன் கழுத்தில் கை வைத்து பார்த்டு காய்ச்சலா என்று கேட்டான்..
"ம்ம் என்றான் ரமணன்..
இல்லை படு மச்சான் வாறன்" என்று தேனீர் வைக்கபோனான். அறையிலும் யாரும் இல்லை தனிய இருக்க பைத்தியம் பிடிக்குமாப் போல் இருந்தது,மீண்டும் மற்றகடிதங்களை வாசிக்கத் தொடங்கினான். முதல் முறையாக நண்பன் எழுதிய கடிதத்தை திறந்தான்.., அதிலும் இருந்ததும் அவனை உயிருடன் கல்லால் அடித்து கொல்லும் செய்திதான்..
சவூதியில் வெள்ளிகிழமை மதிய பிரார்த்தனைக்கு குற்றம் செய்தவர்களை இப்படி மிருக்கதனமா தண்டிப்பார்கள். ஒரு முறை அதை நேரடியாக பார்த்த ரமணனுக்கு நித்திரை வராமல் இரண்டு கிழமைகள் தூக்கமின்றி தவித்தான் அது போன்ற மனநிலையில் இருந்தான் மனதை ஒருவாறு ஒருமுகப்படுத்தி நண்பனின் மடலை வாசிக்கத்தொடங்கினான் ..
<i>நண்பா டேய் எப்படி சுகம்?
நட்புடன் குமரன் எழுதுவது,
இத்தனை காலமும் கடிதம் போடவில்லை என்று குறை நினைக்காதே. உங்கள் அப்பாவை பார்க்கும் போதெல்லாம் சுகம் விசாரிப்பேன். நீயும் எங்களை மறக்காமல் விசாரித்து அவரிடம் எழுதி இருப்பதை, நாங்கள் உங்கள் வீட்டுக்கு போகும் போது காட்டுவார். உன் அம்மா எங்களை சாப்பிடாமல் அனுப்ப விட மாட்டார்கள். உன்னை போல் நாங்களும் பிள்ளைகள் என்று வகையில் பேசும் போது இப்படி கடவுள் உன் அம்மாவை வஞ்சித்து விட்டானே? என்று அவன் மேல் கோபம் வரும்.. இப்போ அந்த கடவுளை வெறுக்கவைத்து விடுவானோ, என்று யோசிக்கிறேன்.. நீ இல்லாமல் கோவிலில் மூன்றாவது வருடமாக நாம் கோவிலில் சாமி தூக்குகிறோம் ..கடந்த 2 வருடமும் மது தனியாக கோவிலுக்கு வந்து உன்பெயரில் அர்ச்சனை செய்த மது....... எழுத மனம் இல்லை இந்த முறை கொடியேற்றத்தில் ..அன்று வேறு பெயருக்கு அர்ச்சனை செய்ததாக நம் கோவில் அலுவலக ஊழியர் சொன்னார்.அவரையும் உனக்கு தெரியும் தானே.. அந்த பேரை நான் கேட்டேன் சொன்னார் அந்த ஆளைபற்றியும் விசாரித்தேன்...
கிடைத்த தகவல்கள் என்னை ரொம்பவே குழப்பி விட்டது. அத்தனை பேருக்கும் மத்தியில் யாரையும் பற்றி கவலை படாமல் முத்தமிட்ட மதுவா இப்படி ?
நம்பவே முடியவில்லை எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ. தகவல் சொன்னவர்களை நான் நம்பவில்லை மதுவில் உனக்கு இருக்கும் காதலை நான் அறிவேன்.. அதனால் தான் நானே தனியாக விசாரித்தேன் என் கண்ணாலும் கண்டேன். இருவரும் ஒன்றாக இரவில் சைக்கிளில் ஒன்றாக செல்வதை முன்னாடி இருந்து மதுவும் அவனும் பழகும் முறையில் புரிந்தது...!
இது தப்பான உறவு என்று இதுவரை நான் நம்பவில்லை பார்ப்போம்.. மலியும் போது சந்தைக்கு வரும் தானெ.. </i>
என்று மேற்கொண்டு படிக்கமுடியாமல் மௌனத்தில் ஆழ்ந்தான் ரமணன்...
இனி என்ன செய்வது.. இரவில் விட்டுக்குப் போக பஸ் இல்லாமல் யாருடனும் போய் இருக்கலாம்.. என்று மனதை தேற்றிய அவன் மற்றைய கடிதங்களையும் வாசித்தான்.. ஆனால் புலன்கள் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. மேலோட்டமாக வாசித்தான் நுனிப்புல் மேய்ந்தான்.. அதில் ஒருகடிததிலும் இருந்த சாரமும், அது தான் ஆனால் வேறு ஒர் மேலதிக விபரம் இருந்தது ...... !
மது கூட பழகுபவன் ஏற்கனவே திருமணமாகி இரு பிள்ளைகளுக்கு தகப்பன். மதுவும் அவனும் இப்பொதெல்லாம் இரவு வேலை தான் செய்வதாகவும், வைத்தியசாலை வட்டாரத்திலும் அவர்களை பற்றி தப்பான தகவல்கள் உலாவுவதாகவும் இருந்தது. மனது அப்போதும் நம்பவில்லை மதுவின் மடல் தான் உண்மை சொல்லவேண்டும்… என்று நினத்தபடி கடிதம் எழுதத் தொடங்கினான் ...!
எப்படி தொடங்குவது.......
<i>அன்பான என் மது வுக்கு நலமா ?
மது, உங்களுக்கு ஒரு சந்தோச செய்தி ஒன்று மூன்று கிழமையாக நான் என் மச்சானுடன் இருந்தேன் .. யார் எம் திருமணத்துக்கு தடையாக இருப்பானோ என்று நினைத்த சாமி ( உன் அண்ணா) என் மச்சான் சம்மதித்து விட்டான் ... வரும் ஆவணியில் ஊருக்கு வருகிறோம்.. ஆயத்தமாக இருங்கோ, திருமதி ரமணனுக்கு தேவையானது எல்லாம் வாங்கி விட்டேன் ..கழுத்து மட்டும் தான் வேண்டும். தாலி கட்ட தயாராக இருங்கள்.. என்ன நிறத்தில் கூறை வாங்க வேண்டும் என்று எழுதுங்கோ...
அப்புறம் என்ன நீண்ட காலங்கள் உங்கள் மடலை காணவில்லை.. என்ன ஆச்சுடா எங்கள் வீட்டுக்கு போனீர்களா? உங்கள் மாமனார் என்ன சொன்னார் மருமகளை கவனமாக பார்ப்பேன்.. என்று சொன்னார் பார்க்கிறாரா? அவசரமா எழுதுகிறேன் எனக்கு பதில் எழுதுங்கள்.. மூன்று கிழமையாக உங்கள் பதிலை காணாமல் தவிப்பாக இருக்கு.. என் தவிப்பு புரிகிறதா கண்மணி? இந்த மடலில் ஆங்காங்கே இருப்பது என்கண்ணீர் துளிகள் புரிகிறதா ? என் மனசு பிளீஸ் டா உங்கள் மடல் தான் என் தவிப்பை போக்கும் அமுதம்...!
வழிமேல் விழிவைத்தபடி அன்புடனும் ..
காதலுடனும்,
உங்கள் ரமணன்.</i>
கடிதம் எழுதிவிட்டானே தவிர மனசார அவன் எதையும் நம்பவில்லை ..அதனால் தான் தான் கேள்விபட்ட விடயம் பற்றி எதுவுமே பிரஸ்தாபிக்கவில்லை.. உள்ளன்போடு மனைவியாக வரித்தவளிடம் நீ இப்படியா? என்று கேட்பவன் ஒரு முட்டாள்.அது காதலின் அத்திவாரத்தையே அசைத்துவிடுமல்லவா. மதுவின் பதில் வரும் வரை அவன் நெருப்பின் மேல் நிற்பது போல் ஒரு வேதனை படுக்கையெல்லாம் முட்கள் இருப்பது போல் வலிகள் யாரிடம் சொல்ல முடியும்.. மனதின் பாரங்களை அப்போது ஜெனியின் டேப் ரிகார்டரில் ஒலித்த பாட்டு அவனை வேதனையை அதிகரித்தது...
"
உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வைத்தகிளி பச்சைமலை பக்கதில் போனதென்று சொண்னாங்க "அந்தபாடலின் வரிகள் தன்னை நேசித்த மதுவுக்கும் பொருந்துமா என்று மனது அலைபாய்ந்தது அடுத்த நாளும் அப்பாவின் கடிதம் வந்தது ,
<i>அன்பான தம்பிக்கு அநேக ஆசிர்வாதங்களுடன்
அப்பா எழுதிகொள்வது.. நாங்கள் எல்லொரும் நலம்.. உங்கள் மன உடல் நலத்தை நாரயணன் காக்க மேலும் நீங்கள் அனுப்பிய பொருட்கள் உமது நண்பர் கொண்டுவந்து தந்தார் ...அதில் மதுவுக்கு உரியவைகளை அவவிடன் கொடுக்க போனேன்.. அவ அவைகளை வங்கவில்லை... திருப்பி கொண்டு போக சொன்னா அந்த பார்சல் திறக்காமல் வீட்டில் இருக்கிறது...! நடப்பவைகள் ஏதும் நல்லமுடிவை தருவதாக இருப்பது போல் தெரியவில்லை... மனதை கட்டுபடுத்துங்கள். தம்பி உங்களிடம் ஒன்று கேட்கலாமா? நீங்கள் பொருட்கள் கொடுத்துவிட்ட நண்பர் எமது தூரத்து உறவினர் ..அவர்கள் அம்மா சகோதரி எல்லோரும் எங்கள் வீட்டுக்கு மதிய போசனத்துக்காக வந்து இருந்தார்கள்.. அப்போ பேச்சுவாக்கில் உங்களை பற்றியும் உங்களை பற்றியும் உங்கள் நண்பர் நன்றாக சொன்ன போது அவரின் அம்மா தங்கள் மகளுக்கும் உங்களுக்கும் உங்கள் தங்கைக்கும் மாற்று சம்பந்தம் செய்தால் என்னஎன்று கேட்டார்கள் உங்கள் தங்கையும் அண்ணா ஓம், என்றால் சம்மதம் என்று சொல்லி விட்டா.. உங்கள் நண்பரும் மனசு நிறைய சம்மதித்து விட்டார் உங்கள் சம்மததுக்காக நங்கள் பார்த்து கொண்டு இருக்கிறோம் ..
தம்பி நான் சொன்ன சொல் மாற மாட்டேன் ஆனால் நாங்கள் நினத்தது எல்லாமே தலை கீழாக மாறும் என்று நாராயணன் நினைத்து விட்டானே.ஒரு தகப்பனாக சொல்லமுடியாத நான் எனக்கும் மூன்று பெண்பிள்ளைகள் 2 பேர் திருமணமானது உங்களால் நீங்கள் மனதார சந்தோசத்துடன் வாழ்ந்தால் தான் இந்த அப்பாவின் மனது குளிரும் யாரின் பெண் பிள்ளைகளை பற்றி நான் தப்பாக சொல்லமாட்டேன் ..உங்கள் நண்பர்கள் எழுதுவதாக சொல்லி என்னிடன் அழுதார்கள் ..அவர்களை மறக்காமல் நீங்கள் அனுப்பும் கடிதங்கள் அன்பளிப்புகள் எல்லாம் அவர்கள் நினைத்து வேதணை படுகிறார்கள்.. உங்கள் வாழ்வு வீணாக போய்விட்டதே என்று நான் சொன்னேன் ..உங்கள் மனதுக்கு எதுவுமே தப்பாகது என்று அப்படி ஏதும் நடந்தா நான் நாராயணனை தொழவே மாட்டேன்.என்று சொன்னேன் நான் சொல்லவந்தது புரிகிறதா?</i>
அப்பா எப்போதுமே மற்றவரைபற்றி தப்பாக பேசமாட்டார்... வாய்பேச முடியாத அம்மாவும் அப்படிதான் அப்பா அடிக்கடி சொல்வார் அம்மாவைபோல் பெண்தான் நிம்மதியான வாழ்க்கையின் அத்திவாரம் என்று.ஒருகிழமையால் ஊரில் இருந்து வந்த நண்பன் றமணனினிடம் வந்து இருந்தார் ...!
"என்ன தாடி எல்லாம் வளர்ந்து இருக்கு ஊரில் எல்லொரும் நல்லவிடயம் பேசுகிறார்கள் உங்கள் அப்பா இந்த போட்டோவை உங்களிடம் கொடுக்க சொன்னார்" என்று ஒரு கவரை கொடுத்தார் ...!
அத்துடன் உங்கள் அம்மா பலகாரமும் தந்து விட்டவா ... என் அம்மாவும் தங்கையும் தனித்தனியாக பலகாரம் செய்து தந்து விட்டார்கள் என்று சொல்லி பெரிய பலகார பார்சலை தந்தார்.அதை ..
பக்கதில் இருந்து கேட்ட ஜெனி கேட்டான்..
"என்ன இது எப்படி இவர் உங்களுக்கு சொந்தமா? இதுவரை எனக்கு தெரியாதே என்று "
"ம்ம் இனிதான் சொந்தமாக போகிறோம் என்று சொல்லி சிரித்தார்... "
அது றமணன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது.. மனதை கட்டுபடுத்தினான் ...!மதுவின் கடிதம் வராமல் எதுவுமே தப்பாக பேசகூடாது என்று முடிவு எடுத்தான் ...காலங்கள் ஓடியது மனசு இல்லமால் வேலை செய்தான் ..ஆனாலும் உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்ய பின் நிற்கவில்லை.. சம்பளமும் 2000 ரியால் ஆகிவிட்டது நல்ல சேமிப்பும் தப்பான பழக்கவழக்கமும் இல்லாத அவனுக்கு பணத்தின் தேவையும் இருக்கவில்லை.. அவன் கொம்பனியில் முன்பின் பழக்கமில்லாதவருக்கும் பண உதவி செய்வான் மனசு இல்லமல் இருந்தவனுக்கு ஒருநாள் ஒரு அனுப்புனர் முகவரியிடாமல் ஒரு கடிதம் கொஞ்சம் தடிப்பாக வந்து இருந்தது எதுவுமே புரியாமல் அறையில் சென்று திறந்தான் சுக்கல் சுக்கலாக கிழித்த காகித துகள்கள் அறையெங்கும் ஏர்கண்டிசனரின் காற்று வேகத்தில் பறந்தது அத்துடன் ஒரு சிறிய துண்டு ...
"என்னை பார்க்க ஒருவர் இருக்கிறார் யாரும் எனக்கு வேண்டாம்" இதுமட்டும் எ மதுவின் எழுத்து தான் எழுதி இருந்தது மதுவின் கையெழுத்து தான் சந்தேகமே இல்லை றமணன் அப்படியே அதிர்ச்சியின் உச்சத்துக்கு போனான்.மயங்கி விட்டான் 3கிழமையாக சரியாக சாப்பிடாமல் இருந்தது யாருக்கும்தெரியாது மயக்கம் தெளியவைத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.வைத்தியசாலை இக்கு அழைத்து செல்ல வாகன ஓட்ட தெரிந்தவரும் அருகில் இல்லை...
<b>-தொடரும்-</b>
inthirajith
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இந்திரஜித் கதை நன்றாக செல்கிறது. என்னால் காத்திருக்க முடியவில்லை சீக்கிரம் கதையை எழுதி முடியுங்கோ
<b> .. .. !!</b>
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
கடவுளே கதையப்பா இது இன்னும் எத்தனையோ கதைகள் எழுத வேணும் இதற்கு எல்லாம் யாழ் இணையம் இடம் கொடுக்குமா தெரியவில்லை உங்கள் உண்மையான ஆதரவு வேண்டும்வாசிக்கும் எல்லோரும் ஒரு வரியாவது எழுதுங்கோ அது மட்டும் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் கதைகள் எழுதுவதால் கவிதைக்கு விடுமுறை
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம் மீண்டும் நாளை நடுஇரவில் பேய் உலாவும் போது கதையும் வரும் ஒரு சீரீயஸ் ஆன கதைக்கு நடுவே பகிடிவிட்டென் கொபம் வேண்டாம் சமாதானம் சமாதானம் உபயம் (குஸி படம்)
inthirajith
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
இந்திரஜித் கதை நன்றாக உள்ளது. நான் கூட இப்போதுதான் முழுவதையும் வாசித்தேன். இது ஓர் உண்மை சம்பவம் போல் உள்ளது. மிகுதியையும் விரைவில் தரவும்.
" "
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இந்திரஐித் கதை நல்லாயிருக்கு... எப்போது முடிவு வரும்... வாசிக்க ஆவலாய் இருக்கின்றோம்... நன்றிகள்..
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பொதுவா பெரிய கதைகள் படிப்பது பிடிப்பதில்லை.. இந்திரஜித்தின் கதை படிக்க படிக்க மேலும் படிக்க ஆர்வத்தை தந்தது..தொடர வாழ்த்துக்கள்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
யாருமே எதுவுமே சொல்லவில்லை ஆகவே. 2 நாட்கள் விடுமுறை.
inthirajith
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
அப்படி இல்லை நேற்று நீர் கதையை இணைத்தவுடன் நான் படித்தேன். சில எழுத்து பிழைகள் இருந்தன அதை உடனடியாக சுட்டிக்காட்ட விரும்பினேன் ஆனால் இது கதைக்கான பிரிவு இதற்குள் ஏன் கருத்தாடல் என விட்டுவிட்டேன். இன்றும் ஆவலுடன் கதையை எதிர்பார்த்தேன் ஆனால் ஏமாற்றம்தான். மீண்டும் தொடரவும் வாழ்த்துக்கள்.
" "
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஆகா உங்கள் அடுத்த பாகத்தை அல்லவா பார்த்திருக்கின்றோம்.. அதற்குள் 2 நாள் லீவா. விடுமுறை எடுக்கமால் தொடர்ந்து எழுதினால் தானே நாம் எமது விடுமுறையில் வாசிக்க முடியும்
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
இண்ணங்கண்னா இது...கதையை வாசிக்க ஆவலா இருந்த்ம் லீவுனு சொல்லிட்டு போட்டிங்க...........கதை நல்லா இருக்கு ஆனால் இது கதை இல்ல நிஜம் தானே?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஐயோ இந்திரஜித் சும்மா லொள்ளு பண்ணாமல் கதையை போடுங்கோ
<b> .. .. !!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
inthirajith Wrote:கடவுளே கதையப்பா இது இன்னும் எத்தனையோ கதைகள் எழுத வேணும் இதற்கு எல்லாம் யாழ் இணையம் இடம் கொடுக்குமா தெரியவில்லை உங்கள் உண்மையான ஆதரவு வேண்டும்வாசிக்கும் எல்லோரும் ஒரு வரியாவது எழுதுங்கோ அது மட்டும் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் கதைகள் எழுதுவதால் கவிதைக்கு விடுமுறை
கதை நன்றாக இருக்கின்றது சுவாரசியமாகவும் செல்கின்றது. இதனை படிக்கும்போது மனதில் இது கதையல்ல உண்மை சம்பவம் என்ற நினைவும் தோன்றுகின்றது, நீங்கள் எத்தனை கதை வேண்டுமானாலும் யாழ் இணையத்தில் எழுதலாம்.
உங்களுடைய கதையின் அனைத்து பாகங்களும் பந்தி ஒழுங்குபடுத்தப்பட்டு பாகம் பாகமாக இணைக்கப்பட்டுள்ளது. எழுத்து பிழைகளும் முடிந்தவரையில் களையப்பட்டுள்ளன. கதையை ஒழுங்கு செய்து தந்த அனிதாவிற்கு நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>