Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்கள் கலயை நோக்கட்டும்
#41
இவோன் Wrote:நன்றி நாரதர்.
நீங்கள் இங்கே இக்கவிதையைப் போட்டபின்தான் அந்தக் கடைசிப் பின்னூட்டம் அங்கே போடப்பட்டதென்பது என்புரிதல். ஏனென்றால் நான் பார்க்கும்போது அப்பின்னூட்டம் அந்தப் பதிவிலில்லை.

மேலும் முன்பு போடப்பட்ட பின்னூட்டங்களைச் சொல்லியோர் என்னைப்பொறுத்தவரை விளையாட்டுப் பிள்ளைகளில்லை என்பது என்புரிதல். குறிப்பாக கார்த்திக்ரமாஸ், தங்கமணி, பெயிரி, மதிகந்தசாமி, பத்மா அரவிந் போன்றவர்களின் எழுத்துக்களும் சமூகத்தில் அவர்களின் நிலையும் உயர்வானவையே.
(முக்கியமாக பெண்கள் இக்கவிதையை வரவேற்றிருப்பது கவனிக்கத்தக்கது. அதுவும் தம் அடையாளங்களைப் பகிரங்கப்படுத்தி எழுதும் அப்பெண்களின் இக்கவிதைக்கான வரவேற்பு கவனிக்கத்தக்கது.)

சின்னக்குட்டியரே,
கலக்குங்கள்.

பதிந்தது:nii oru luusu

போடா லூசா கவிதையா இது.... எருமை மாடு பன்னி...

2.10.2005

By Anonymous, at October 02, 2005 7:56 AM

எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:23 pm Post subject: கண்கள் கலயை நோக்கட்டும்
இதுக்குமேல என்னால உங்களுக்கு புரியவைக்க முடியாதப்பா சாமி. :wink:
.

.
#42
narathar Wrote:ம்ம் பிருந்தன் எதை தனி நபர் தாக்குதல் என்கிறீர்கள்.எனக்கு விளங்கவில்லை.ஒருவர் இன்னொருவரின் ஒழுக்கம் பற்றித் தான் ஒரு கனவானைப் போல் கதைப் பதற்கு முன்,தனது ஒழுக்கத்தைப் பற்றியும் சிந்திப்பது நலம்.மேலுள்ள கவிதை அதைத் தான் சுட்டி நிக்கிறது. நீ கல்லை எறிய முதல் உன்னக்கு அந்த கல்லை எறிவதற்கான தகுதி இருக்கா என்று பார்க்க வேண்டும்.இதை யேசு நாதரும்(?) ஒரு பெண்ணை விபச்சாரி என்று கல்லெறிந்தவர்களிடம் சொன்னர் என்று எங்கோ படித்த நாபகம்.

இங்கே களத்தில் குஸ்பு பற்றியும் இன்னும் பல்வேறு தனி நபர் பற்றியும் பல்வேறு வகை யான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.அவர்களுக்கு இங்கே அதற்கு பதில் சொல்ல முடியாது.இவை தனி நபர் தாக்குதல்கள் போல் தெரியவில்லயா.அவர் முன் வைத்த கருத்துக்களை விமர்சிக்காமல் அவர் விபச்சாரி என்றும் மானக்கெட்டவர் என்று விமர்சிப்பது எவ்வகையில் நியாயம்.அது போலவே சீர்திருத்தம் கதைத்தால் இவர்கள் ஒழுக்கம் அற்றவர்கள் என்றும்,பெண்ணிய விடுதலை கதைத்தால் இவர்கள் விபச்சாரிகள் ,என்றும் கருத்தாடுவது தனி நபர் தாக்குதல் ஆகாதோ?உங்களின் ஒழுக்கத்தை கேள்வி ஆக்கினால் மட்டுமா தனி நபர் தாக்குதல்?அதுவும் நீங்கள் இங்கே களத்தில் இட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டிச் சுட்டிக்காட்டினால்.ஆரோக்கியமான கருத்தாடலுக்கு அடிப்படை உண்மை பேசுதல்,அதற்கான முதிர்ச்சி உங்களுக்கு இல்லாவிட்டால் அதற்கு நான் என்ன செய்வது?
மேலும் நான் இங்கு இந்தக் கவிதயை இட்ட பின்னே டிசேயின் தளத்தில் மேற்குறிப்பிட்ட சிறப்பு விமர்சனம் இடப்பட்டுள்ளது.மிகுதியை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

இதன் பொருள் என்ன?

இங்கு ஒவ்வொருவரும் இயந்திரத்தனமான ஒரு வாழ்க்கை வாழ்கின்றார்கள். கிடைக்கும் சிறிய நேரத்தில் ஏதாவது நல்ல விடயங்களை பார்க்கலாமா எனக் களம் வருபவர்களுக்கு வெறுமனே எண்ணிக்கைக்காக கருத்தாளம் இல்லாத கருத்துக்கள் காலப்போக்கில் இக்கருத்துக்களம் மீது ஓர் சலிப்பையும், வெறுமனே குற்றங்கள், குறைகள் கண்டுபிடிப்பதையும் அதை நாகரீகமற்ற முறையில் வெளிக்கொண்டுவருவதும் இக்களம் மீது வெறுப்பையும் தரலாம். ஆதலால் களநிபந்தனைகளைக் கருத்தில்கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.
.

.
#43
<b>இவற்றை காட்டில் இருந்து கூச்சலாக விலங்குகளோடு விலங்குகளாக இட்டுக்கொண்டிருக்க வேண்டும்...அப்படித்தான் கூர்ப்பின் ஆரம்பத்தில் மனிதன் செய்து கொண்டு இருந்தான்...தான் விரும்பிய நேரம் விரும்பினது செய்ய விலங்குகள் கடித்துக் குதற...வசதிகள் வாய்ப்புகள் இன்றி இயற்கைக்குள் கட்டுப்பட்டு வாழ்ந்தான்...! பகுத்தறிவு வளர முதல்...இப்பவும் விலங்குகள் வாழுதுகளே...அதுபோல காதல் அன்பு உணர்ச்சி என்ற ஒரு பாகுபாடில்லாது... கண்டதும் கொண்டதும் வாழ்வென்று வாழ்ந்து வந்தான்..!</b>

ம். இப்படித்தான் மனிதன் வாழ்ந்தான். இப்போதும் இப்படி வாழ் என்று சொல்வது முட்டாள்தனம். அதாவது எமது 'பழைய கலாச்சாரம் பண்பாட்டுப் படி வாழ்' என்று சொல்வது முட்டாள்தனம். சரியாகச் சொன்னீர் குருவிகள்.
#44
பிருந்தன்,
நான் அங்கே பார்க்கும்போது அப்பின்னூட்டம் இருந்ததாக ஞாபகமில்லை. அதைத்தான் சொன்னேன்.

சரி உங்கள் நேர விசயத்துக்கே வருவோம்.
டி.சேயின் வலைப்பதிவு இயங்குவது அட்லாண்டிக் நேரப்படி. அதாவது GMT - 04.00.
ஆனால் யாழ்க்களத்தில் நேரம் கணிப்பிடப்படுவது GMT நேரப்படி (சரிதானே?).
குறிப்பிட்ட பின்னூட்டம் டி.சேயின் பதிவில் இடப்பட்டபோது GMT நேரப்படி 11.56 am.
அப்பதிவு யாழ்க்களத்தில் இடப்பட்டபோது GMTநேரம் 12.23 pm.
27 நிமிட இடைவெளியுண்டு. நாரதர் படியெடுத்துப்போடும்போது எடுக்கப்பட்டிருக்கும் நேரமென்று கருத்திற்கொண்டால் அப்பின்னூட்டத்தை நாரதர் கண்டுகொள்ளாமலிருக்கச் சந்தர்ப்பமுண்டு.
மேலும் பின்னூட்டம் போடப்பட்ட சரியான நேரத்தைக்காட்டினாலும் பின்னூட்டம் முதன்மைப் பக்கத்துக்கு வர குறிப்பிட்ட நேரம் எடுக்கும். அதாவது பின்னூட்டம் கொடுத்தவுடன் அப்பின்னூட்டம் முதன்மைப் பக்கத்துக்கு வராது (Blogger இல்). நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம்.

ஆனால் கடைச்சிக்கு முதல் பின்னூட்டத்தை நாரதர் தறவவிட்டது தெரிந்தே செய்ததுதான்.
#45
அண்ணே பிருந்தன்,
குடுத்துவிட்டியளே ஒரு விளையாட்டை.

நாரதர் பதிந்தது 11.23 என்றல்லவா காட்டுகிறது? ஆனால் நீங்கள் வசதியாக 12.23 என்று ஒரு மணித்தியாலத்தைக் கூட்டிப் போட்டுவிட்டீர்களே? இது நியாயமா? போதாததுக்கு நீங்களும் 11.49க்கு பதிற்கருத்தும் போட்டுள்ளீர்கள்.

அப்படிப் பார்க்கப்போனால் நாரதர் இங்கே பதிந்தபின்தான் அந்தக் கடைசிப்பின்னூட்டம் போடப்பட்டுள்ளதென்று ஒத்துக்கொள்கிறீர்களா? அதாவது நாரதர் இங்கே பதிந்து 33 நமிடங்களின் பின்தான் கடைசிப் பின்னூட்டம் டி.சேயின் பதிவில் போடப்பட்டுள்ளது என்பது தெளிவாக நிரூபனமாகிறதே?

"இதுக்குமேல என்னால உங்களுக்கு புரியவைக்க முடியாதப்பா சாமி."
(இது நீங்கள் சொன்னதுதான்.) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#46
என்ன நடக்குது இங்க?
இவோன் அண்ணா (அண்ணாவோ அக்காவோ)
உதென்ன நீதிமன்றத்தில வாதாடுற மாதிரி புட்டுப்புட்டு வைக்கிறியள்?
நானும் கணக்குப் பண்ணிப் பாத்தன். உங்கட கணக்குச் சரியா வருது. எனக்கும் 11.23 எண்டுதான் காட்டுது.
ஆனா ஒவ்வொருவருக்கும் அவையள் இருக்கிற நாட்டைப்பொறுத்து பதிந்த நேரம் மாறுபட்டுக்காட்டுமோ எண்டு யோசிக்கிறன். எல்லாருக்கும் ஒரே நேரத்தைத்தான் யாழ்களம் காட்டுமெண்டா பிருந்தன் அண்ணா எந்த நேரத்தைப்பார்த்து 12.23 எண்டு தந்தாரெண்டு தெரியேல. அந்த நேரத்தில எந்தக்கருத்துமே வரேல.
#47
குருவிகள்,
நீங்கள் விரைவிலேயே பத்தாயிரமாவது கருத்துக்களை எட்ட இந்தத் தங்கையின் வாழ்த்துக்கள்.
ஏதாவது கொண்டாட்டமெண்டா எனக்குத்தான் முதல் அழைப்புத் தரவேணும். சரியோ?
#48
இவோன் Wrote:பிருந்தன்,
நான் அங்கே பார்க்கும்போது அப்பின்னூட்டம் இருந்ததாக ஞாபகமில்லை. அதைத்தான் சொன்னேன்.

சரி உங்கள் நேர விசயத்துக்கே வருவோம்.
டி.சேயின் வலைப்பதிவு இயங்குவது அட்லாண்டிக் நேரப்படி - 04.00.
ஆனால் யாழ்க்களத்தில் நேரம் கணிப்பிடப்படுவது GMT நேரப்படி (சரிதானே?).
குறிப்பிட்ட பின்னூட்டம் டி.சேயின் பதிவில் இடப்பட்டபோது GMT நேரப்படி 11.56 am.
அப்பதிவு யாழ்க்களத்தில் இடப்பட்டபோது GMTநேரம் 12.23 pm.
27 நிமிட இடைவெளியுண்டு. நாரதர் படியெடுத்துப்போடும்போது எடுக்கப்பட்டிருக்கும் நேரமென்று கருத்திற்கொண்டால் அப்பின்னூட்டத்தை நாரதர் கண்டுகொள்ளாமலிருக்கச் சந்தர்ப்பமுண்டு.
மேலும் பின்னூட்டம் போடப்பட்ட சரியான நேரத்தைக்காட்டினாலும் பின்னூட்டம் முதன்மைப் பக்கத்துக்கு வர குறிப்பிட்ட நேரம் எடுக்கும். அதாவது பின்னூட்டம் கொடுத்தவுடன் அப்பின்னூட்டம் முதன்மைப் பக்கத்துக்கு வராது (Blogger இல்). நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம்.

ஆனால் கடைச்சிக்கு முதல் பின்னூட்டத்தை நாரதர் தறவவிட்டது தெரிந்தே செய்ததுதான்.

கோமதி Wrote:என்ன நடக்குது இங்க?
இவோன் அண்ணா (அண்ணாவோ அக்காவோ)
உதென்ன நீதிமன்றத்தில வாதாடுற மாதிரி புட்டுப்புட்டு வைக்கிறியள்?

நானும் கணக்குப் பண்ணிப் பாத்தன். உங்கட கணக்குச் சரியா வருது. எனக்கும் 11.23 எண்டுதான் காட்டுது.
ஆனா ஒவ்வொருவருக்கும் அவையள் இருக்கிற நாட்டைப்பொறுத்து பதிந்த நேரம் மாறுபட்டுக்காட்டுமோ எண்டு யோசிக்கிறன். எல்லாருக்கும் ஒரே நேரத்தைத்தான் யாழ்களம் காட்டுமெண்டா பிருந்தன் அண்ணா எந்த நேரத்தைப்பார்த்து 12.23 எண்டு தந்தாரெண்டு தெரியேல. அந்த நேரத்தில எந்தக்கருத்துமே வரேல.

கோமதியம்மா... நீதிமன்றத்தில் நீதிபதி இருப்பார் நல்ல வாதப்பிரதிவாதங்கள் சாட்சியங்கள் என்றும் இருக்கும்.. நல்லதோ கெட்டதோ..குறைஞ்சது தீர்ப்பாவது கிடைக்கும்...! இங்க தீர்வுக்கே வழியில்ல...உதாரணத்துக்கு... GMT - 04.00(Greenwich Mean Time) இதை அத்திலாந்திக் நேரம் (உண்மையா வாழ்க்கையில் இன்றுதான் கேள்விப்பட்டம்....அத்திலாந்திக் நேரம் எண்டதை..உண்மைல...இப்படித்தான் ஒன்று இரண்டு அறிஞ்ச ஞாபகம்..ADT - Atlantic Daylight Time மற்றும் AST - Atlantic Standard Time . அத்திலாந்திக் நியம நேரம்.. என்று..!) எண்ட அதை புட்டுப்புட்டு வைக்கிறதா.... ஆமோதிச்சு கருத்துச் சொல்லும்... வில்லிசைக் குழு ஆமா கோஸ்டியாத்தான் களம் இப்ப நகர்ந்து கொண்டிருக்குது... கொஞ்சக்காலமா...???!

இந்த நேரக் கணக்கு ஏனாம்...அதுவும் மற்றவைல பிழை பிடிக்க... இதெல்லாம் ஒரு பதிவு... இதுக்க போய் கருத்தெழுதி அதையே இங்க ஒட்ட யாழ் களத்தில் எவரும் முனையார்கள்...! களத்தில் உள்ள அநேகர் அவர்கள் இவர்களை விட பக்குவப்பட்டவர்கள் தான்...! இவைட பேசும் பொருளை... குடிகாரந்தான் தினமும் வீதில பேசுறானே...அப்புறம் என்ன...! எவனோ ஒரு புண்ணியவான்...அல்லது வதி...நல்ல ஒரு விமர்சனத்தை எழுதி இருக்காங்க... வலைப்பதிவுகள் தாங்கி வரும் விமர்சனங்களைக் காட்ட வேணாமோ...அதுதான் காட்டினம்...சிலர் சொன்னவை சிறப்பான எழுத்துக்களை வலைப்பதிவுகள் மட்டும்தானாம் தருகுது...! அதுக்கு உதாரணமா...சிறப்பான கவிதைகளையும் அவையே ஒட்டிட்டு இருக்கினம்...! அந்தச் சிறப்புகளை சிறப்பிக்க வேணாமோ...??! நல்லது செய்யவிடாயளே...!

இவை இப்ப குஷ்புவைச் சாட்டு வைச்சு இங்க பேசுறதை போய்ஸ் படத்தில் சங்கர் காட்டிட்டார்தானே.... அப்பவும் ஒரு கலக்கு கலக்கினவை...இங்க களத்திலும் தான்.....இவைட்ட இருக்கிறது இவ்வளவும் தான் எண்டதும் வெளிப்படை...நத்திங் எல்ஸ்..!

நேரக்கணக்கில்... பிருந்தனில் தப்பில்லை...காரணம்...யாழ் கள நேரத்தை அவரவர் தங்கள் இஸ்டத்துக்கு புரபைலில் போய் மாற்றி அமைக்கலாம்...! பிருந்தனின் தெரிவின் படி அவருக்கு நேரம் 11.23 க்கு பதில் 12.23 என்று காட்டலாம்...அதுபோல்...வலைப்பதிவுகளிலும் நேரத்தை மாற்றி அமைக்கலாம்..! வலைப்பதிவாளர் மட்டும் கணணிச்சுட்டி மூலம் குறித்த கருத்தெழுதியவர் எங்கிருந்து வந்தார் என்பதை அறியலாம்...அதையும் மாற்றி கருத்தெழுதலாம்...! சோ...இங்க புட்டுபுட்டு வைக்க எதுவும் ஆதாரமா இல்லை...! எழுதினதை வாசிச்சிட்டு கம்முண்ணு இருக்குறதுதான் செய்யக் கூடிய ஒரே வேலை...! அதுதான் வலைப்பதிவு...! அதுக்க புட்டு இடியப்பம் என்று கொண்டு.....! :twisted: Idea

NS Nova Scotia, Canada (AST= GMT-4) (ADT = GMT-3)

Daylight time serving - North America United States, Canada, Mexico
St. Johns, Bahamas, Turks and Caicos

Start: First Sunday in April
End: Last Sunday in October

இதன்படி இப்போ பாவனையில் உள்ளது ADT..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#49
இவோன் Wrote:அண்ணே பிருந்தன்,
குடுத்துவிட்டியளே ஒரு விளையாட்டை.

நாரதர் பதிந்தது 11.23 என்றல்லவா காட்டுகிறது? ஆனால் நீங்கள் வசதியாக 12.23 என்று போதாததுக்கு நீங்களும் 11.49க்கு பதிற்கருத்தும் போட்டுள்ளீர்கள்.

அப்படிப் பார்க்கப்போனால் நாரதர் இங்கே பதிந்தபின்தான் அந்தக் கடைசிப்பின்னூட்டம் போடப்பட்டுள்ளதென்று ஒத்துக்கொள்கிறீர்களா?

"இதுக்குமேல என்னால உங்களுக்கு புரியவைக்க முடியாதப்பா சாமி."
(இது நீங்கள் சொன்னதுதான்.) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

புட்டும் இல்ல இடியப்பமும் இல்ல எனது கணனியில் உள்ளநேரத்தைதான் இதில் நான் போட்டேன் உங்கள்கணனியில் உள்ள நேரங்கள் எனக்கு தெரிவதில்லை :wink:

இதுகவிதை போடப்பபட்ட நேரம்
எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:23 pm Post subject: கண்கள் கலயை நோக்கட்டும்

இதுநான் கருத்து எழுதியது
எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:49 pm Post subject:

--------------------------------------------------------------------------------

கவிதையின் கரு நண்றாக இருப்பினும், சொல்லியவிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை,

கோமதி அக்கா நீங்கள் இடைக்கிடை வந்து பகிடிவிட்டுட்டு போறியள் நல்லா இருக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

"இதுக்குமேல என்னால உங்களுக்கு புரியவைக்க முடியாதப்பா சாமி."
(இது நீங்கள் சொன்னதுதான்.) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]
.

.
#50
ம்ம்ம் பாய் பாய் சொல்லிப்போட்டு வந்து குடிகாரன் பேச்சு எண்டு வழக்கமான தூற்றலும்,பிதற்றலும் கருத்துத் திருபுகளும்,கவிதை சொல்ல வந்த கருத்தயே திசை திருப்பி தனி நபர் வசை பாடலா இருக்குது.

முதலில இந்தக் கவிதை சொல்லுவதே மனிதனா இரு மிருகமா இருக்காத எண்டு.பெண்களை மனிதராப் பார் ,மிருக உணர்வோட காமக் கண்ணோட பாக்காத எண்டு.இதில என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்ல.

அதில பின்னூட்டம் யார் இட்டிச்சினமோ இட்டவருக்குத் தான் தெரியும்.அந்தக் கடசிப் பின்னூட்டத்தை நான் படி எடுக்கும் போது பாத்ததா ஞாபகம் இல்லை.அதில் என்ன கூறப் பட்டது ,எதாவது கருத்து இருந்திச்சுதா,எருமை லூசு எண்டு வசை தான் இருந்திச்சிது.அதை ஒருவர் சிறந்த விமர்சனம் என்று எழுதிறார் எண்டால் அவரும் ,அதே மொழியய் அந்தக் கவிதைக்கு பின்னூட்டமாகப் பாவிக்கிறார் என்பதுவே அர்த்தம்.அப்படி ஆயின் அவர் இங்க என்ன சொல்லவாறார்.ஆண்கள் மிருகமா இருக்கிறது இல்லை,அவை எல்லரும் நல்லவை எண்டுறாரா.இல்லாட்டி ஆண்கள் பெண்களைப் பார்த்து, நடிகைகளைப் பார்த்து வழிவது காமக் கண்ணோட்டத்தில் அல்ல,கலைக் கண்ணோட்டத்தில் என்கிறாரா.அப்படி ஆயின் அது என்ன கலைக் கண்ணோட்டம்.என்ன தேனி குன்ச்ரம்மாவும் நடிகை தானே அவரிடமும் நடிப்பாற்றல் இருக்குத் தானே,அது ஏன் ஐஸ்வர்யா ராய மட்டும் பார்த்து வழிய வேணும்.குன்சரம்மாவிடம் இல்லாத எது ராயிடம் இருக்கு.இருக்கிற அதை ரசிக்கிறது கலயா?காமமா?போகமா?பெண்கள் போகப் பொருட்களா?அப்படி ஆயின் உங்கள் ஒருவன் ஒருத்தி என்ற கோட்பாடு என்ன ஆனது?கனவில ஐசுவர்யாவோட வாழ்ந்து போட்டு , நனவில வேறு யாரோடயும் வாழுவியல்,பிறகு மற்றவைக்கு உபதேசம்?ஏன் கோவம் வருகுது?உண்மை தெரிவதாலா?முகமூடிகள் கிழிவதாலா?
இவர்களின் இரட்டை வேடம் அம்மணம் ஆனதாலா?
அதைத் தானே கவிதை சொல்லுது,அதுக்குத் தானே இந்தத் துள்ளல்,உண்மை சுடும் தானே,அப்ப எழுதியவனைப் பாத்து எருமை,லூசு எண்டு வசை தானே மனசில வரும்.
#51
Birundan Wrote:இதுகவிதை போடப்பபட்ட நேரம்
எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:23 pm Post subject: கண்கள் கலயை நோக்கட்டும்

இதுநான் கருத்து எழுதியது
எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:49 pm Post subject:

நாரதரால் கவிதை போடப்பட்ட நேரம்
எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 4:53 pm Post subject: கண்கள் கலயை நோக்கட்டும்

பிருந்தனால் பதில் எழுதப்பட்ட நேரம்
எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 5:19 pm Post subject:

இவ்வாறுதான் என் கணனியில் தெரியுது. ஆமா நீங்கள் எல்லோரும் இது பற்றிதானே கதைக்கிறீங்க. :roll:
----------
#52
kuruvikal Wrote:சின்னக்குட்டி...கவிதை அருமை...உங்கள் அனுபவத்தை அப்படியே சொல்லி இருக்கிறியள் போல...! காலம் இன்னும் கண்ணதாசன்களைத்தான் இங்கும் பிறப்பிக்கிறது...! கெட்டழிஞ்ச பின் சித்தாந்தம் பேசிறதிலும்...முன்னைய மனிதர்கள் விட்ட தவறுகளில் இருந்து பாடம் படிப்பவன் தான் நவீன மனிதன்..! கோவலனைக் காட்டினது பின்பற்ற அல்ல...அழிக்க வேண்டிய ஒரு பாத்திரம் என்று...இப்ப கோவலனைக் காட்டாதே...காட்டினால் பின்பற்றுவேன் என்பது...புரட்சியல்ல ...பீதி...தன்னைத்தானே ஆள முடியாத மனப்பலவீனத்தின் வெளிப்பாடு..! Idea
கவிதை அருமையா...நன்றி......என்ரை அநுபவத்தை சொல்லேலை மோனை...தொப்பி அளவாயிருந்தால் யாரும் மாட்டிகொள்ளுங்கோ...பிரச்சனையில்லை
#53
அட்லாண்டிக் நேரமென்பதில் என்ன புரியவில்லையோ தெரியவில்லை. வேண்டுமானால் உங்கள் கணிணியின் நேர அட்டவணையைக் கிளிக்கிப் பாருங்கள். கனடாவுக்குரிய நேரம் எப்படிச் சொல்லப்பட்டுள்ளதென்று. அது GMT நேரத்தைவிட நாலு மணித்தியாலம் குறைந்திருக்கும். அதைத்தான் நான் சொன்னேன்.

யாழ்க்களத்தில் நானொரு கருத்தெழுதினால் அது GMT நேரப்படிதான் எனக்குத் தெரிகிறது. ஆகவே நாரதர் இட்ட கவிதைக்கான நேரமும் எனக்கு GMT நேரப்படிதான் தெரிகிறது என்று எடுத்துக்கொண்டுதான் நான் எனது கருத்தைச் சொன்னேன்.
மற்றவர்களுக்கும் ஏதோவொரு நேரத்தின் அடிப்படையில்தான் கருத்து எழுதிய நேரமும் காட்டப்படும். அவர்கள் அது எந்த நேரத்தின் அடிப்படையில் காட்டப்படுகிறது என்று புரிந்துகொண்டால் கருத்தெழுதின நேரத்தைக் கணித்துக்கொள்ளலாம்.

அதைவிட்டுவிட்டு பெரிய இலக்கம் சிறிய இலக்கம் பார்த்து எது முதலில் எழுதப்பட்டதென்று கண்டுபிடிப்பது எந்தவகையில் சரி?
------------------------
<b>கவனிக்கவும். </b>இந்த நேரப்பிரச்சினையைத் துவக்கியது நானல்லன். நான் இடையிலே வந்து புகுந்தவன்.
#54
narathar Wrote:ம்ம்ம் பாய் பாய் சொல்லிப்போட்டு வந்து குடிகாரன் பேச்சு எண்டு வழக்கமான தூற்றலும்,பிதற்றலும் கருத்துத் திருபுகளும்,கவிதை சொல்ல வந்த கருத்தயே திசை திருப்பி தனி நபர் வசை பாடலா இருக்குது.

முதலில இந்தக் கவிதை சொல்லுவதே மனிதனா இரு மிருகமா இருக்காத எண்டு.பெண்களை மனிதராப் பார் ,மிருக உணர்வோட காமக் கண்ணோட பாக்காத எண்டு.இதில என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்ல.

அதில பின்னூட்டம் யார் இட்டிச்சினமோ இட்டவருக்குத் தான் தெரியும்.அந்தக் கடசிப் பின்னூட்டத்தை நான் படி எடுக்கும் போது பாத்ததா ஞாபகம் இல்லை.அதில் என்ன கூறப் பட்டது ,எதாவது கருத்து இருந்திச்சுதா,எருமை லூசு எண்டு வசை தான் இருந்திச்சிது.அதை ஒருவர் சிறந்த விமர்சனம் என்று எழுதிறார் எண்டால் அவரும் ,அதே மொழியய் அந்தக் கவிதைக்கு பின்னூட்டமாகப் பாவிக்கிறார் என்பதுவே அர்த்தம்.அப்படி ஆயின் அவர் இங்க என்ன சொல்லவாறார்.ஆண்கள் மிருகமா இருக்கிறது இல்லை,அவை எல்லரும் நல்லவை எண்டுறாரா.இல்லாட்டி ஆண்கள் பெண்களைப் பார்த்து, நடிகைகளைப் பார்த்து வழிவது காமக் கண்ணோட்டத்தில் அல்ல,கலைக் கண்ணோட்டத்தில் என்கிறாரா.அப்படி ஆயின் அது என்ன கலைக் கண்ணோட்டம்.என்ன தேனி குன்ச்ரம்மாவும் நடிகை தானே அவரிடமும் நடிப்பாற்றல் இருக்குத் தானே,அது ஏன் ஐஸ்வர்யா ராய மட்டும் பார்த்து வழிய வேணும்.குன்சரம்மாவிடம் இல்லாத எது ராயிடம் இருக்கு.இருக்கிற அதை ரசிக்கிறது கலயா?காமமா?போகமா?பெண்கள் போகப் பொருட்களா?அப்படி ஆயின் உங்கள் ஒருவன் ஒருத்தி என்ற கோட்பாடு என்ன ஆனது?கனவில ஐசுவர்யாவோட வாழ்ந்து போட்டு , நனவில வேறு யாரோடயும் வாழுவியல்,பிறகு மற்றவைக்கு உபதேசம்?ஏன் கோவம் வருகுது?உண்மை தெரிவதாலா?முகமூடிகள் கிழிவதாலா?
இவர்களின் இரட்டை வேடம் அம்மணம் ஆனதாலா?
அதைத் தானே கவிதை சொல்லுது,அதுக்குத் தானே இந்தத் துள்ளல்,உண்மை சுடும் தானே,அப்ப எழுதியவனைப் பாத்து எருமை,லூசு எண்டு வசை தானே மனசில வரும்.

பெண்களை நீங்க எதுவுமாவும் பாக்கத்தேவைல்ல...அவங்க அவங்களாவே இருப்பாங்க...அத்தோட அவங்களுக்கு தெரியும் தங்களப் பாத்துக்க...நீங்க பாக்கிறதால அவங்க மிருகமும் ஆகமாட்டாங்க...பாக்கல்லை என்றதுக்காக மனிதனும் ஆகமாட்டாங்க... ஒன்று செய்யுங்கோ உங்க வேலைலை பாத்திட்டுப் போக்கிட்டு இருங்க...எங்கும் பார்வையால சீரழிஞ்ச மனிதன் உலகத்தில இல்லை...உந்த உரசல் கதைல விளங்கிட்டு உங்க உங்க பார்வைல மனிசரை எப்படிப் பாக்கிறியள் எண்டு... இதில ஐஸ்வரியா என்ன தேனிகுஞ்சாரமம்மாவும் ஏன் இன்னும் சொல்லலாம் கோவலமாகிடும்...உங்களுக்கு ஒன்றுதான்...! உங்களைப் போல கனவு நிஜம் என்று வாழுறது மனிசரில குறைவு...அதுகள் ஒருவிதமான கேசுகள் தான்...மனிசருக்கு ஒரு வாழ்வுதான் நிஜவாழ்வு...! கேவலம் நீங்கள் எல்லாம் இன்னும் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளுறதுதான்...! உங்களை முதலில் திருத்திட்டு...உலகத்தின்ர பார்வை பற்றி எழுதுங்கோ...எழுதினைதையே புரிஞ்சுக்க முடியாத காமக் குழந்தைகளோட பேசுறதிலும்...பூடிங் பொட்டில் வைக்கிறது நல்லம்...களத்தில...! குடிச்சிட்டு தூங்குங்கள்..! சின்னக்குட்டி வந்து தாலாட்ட சரி...!

பாய் பாய் களத்துக்குச் சொல்லியாச்சு... தனி நபர் கருத்தை களம் களவுக்கு விட்டதால வருகிற கருத்துக்கு நாங்க தான் பதில் சொல்லனும்..எங்களுக்கு வாலில்லையே கூட வந்து ஆமா போட...! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#55
sinnakuddy Wrote:
kuruvikal Wrote:சின்னக்குட்டி...கவிதை அருமை...உங்கள் அனுபவத்தை அப்படியே சொல்லி இருக்கிறியள் போல...! காலம் இன்னும் கண்ணதாசன்களைத்தான் இங்கும் பிறப்பிக்கிறது...! கெட்டழிஞ்ச பின் சித்தாந்தம் பேசிறதிலும்...முன்னைய மனிதர்கள் விட்ட தவறுகளில் இருந்து பாடம் படிப்பவன் தான் நவீன மனிதன்..! கோவலனைக் காட்டினது பின்பற்ற அல்ல...அழிக்க வேண்டிய ஒரு பாத்திரம் என்று...இப்ப கோவலனைக் காட்டாதே...காட்டினால் பின்பற்றுவேன் என்பது...புரட்சியல்ல ...பீதி...தன்னைத்தானே ஆள முடியாத மனப்பலவீனத்தின் வெளிப்பாடு..! Idea

கவிதை அருமையா...நன்றி......என்ரை அநுபவத்தை சொல்லேலை மோனை...தொப்பி அளவாயிருந்தால் யாரும் மாட்டிகொள்ளுங்கோ...பிரச்சனையில்லை

ஏனன சின்னக்குட்டி..உங்களுக்கு பல அளவிலும் தொப்பி தைக்கிற அளவு அனுபவம் ஜாத்தியோன...! கில்லாடிதானன நீங்க...சொல்லிக் கொடன உங்க வாரிசுகளுக்கு... அதுகள் போற இடமெல்லாம் பார்வையிலையே எதையோ தேடிட்டு திரியுதுகளாம்..! களத்தில உங்க தொப்பி சேலாகாதன...! பிசினஸ் டல்லாகிடும்..! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#56
இவர்களின் நாக்கு எப்படியும் புரளும். தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில்த்தான் பெயர்வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்ன போது. தமிழ் பாதுகாவலர்களை சமூக ஆர்வலர்கள் என்று கூறாது அரசியல்வாதிகள் எனக் கூறி, அவர்கள் தமிழ் திரைகுறித்து பேசியமை கண்டிக்கவேண்டிய விடயம் என்றும். அரசியல் வாதிகள் திரைத்துறையினரின் விடயங்களில் மூக்கை நுளைக்கக் கூடாது என்றும் கட்டுரை வடித்த ஒரு திரை இணையப்பத்திரிகை. நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது கண்டிக்கப்படவேண்டும் என்கின்ற வகையிலான கட்டுரைகளை வரைந்திட பின்நின்றதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

அந்த வகையில்த்தான் குஸ்புவிற்கு வக்காலத்து வாங்குகின்றது இந்த திரை இணையம். தமிழர்களே ஊக்கம் பெறுங்கள், விளிப்போடு இருங்கள்.

:evil: :evil: :evil:
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#57
மதுரன் எந்த இணையத்தைப் பற்றிச் சொல்லிறியள்?
#58
.8
#59
குரிவியாரே,

மீண்டும் மீண்டும் இதை ஒரு தனி நபர் சார்ந்த விவாதம் ஆக்குகிறீர்.பெண்களை வன்புணர்வு செய்வதுவும் அவர்களைப் போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதுவும் இந்த ஆணாதிக்கக்ச் சமூகம் இல்லயா.பெண்களுக்கு எதிரான எல்லா வன் முறைகளுக்குப் பின்னாலும் இந்த உணர்வே பின் நிக்கிறது.சமுதாயத்தில் பெண்களும் மனிதர்கள் அவர்களுக்கும் உரிமைகள்,பாலியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இருக்கு என்று ஏற்கும் வரை இந்த சீரழிப்புக்கள் ஆண்களால் நடை பெறும்.இதை மறுதலித்து அவர்கள் தங்களைப் பார்ப்பார்கள், நீங்கள் சும்மா இருங்க அவைக்கு அப்படி ஒரு பிரச்சினையும் இந்தச் சமுகத்தில இல்லை,எல்லாம் உங்கட குடிகாரப் பேச்சு என்றது எவ்வளவு நியாயம்.
மேலும் எனக்கிருக்கும் சமுதாயப் பிரன்ஞை காரணமாக நான் எழுதுவது சிந்தனை மாற்றத்துக்காக,அதை செய்யாதே என்பதற்கு உமக்கு எந்தவித அருகதையும் இல்லை.

எங்கும் பார்வயால் சீரழிந்த மனிதர் இல்லை என்று உமது பார்வையை நியாயப் படுத்தும் நீர் காணத் தவறுவது வன் முறயிலீடுபடுவோரின் செய்கையும் பார்வயில் இருந்தே ஆரம்பிக்கிறது.எல்லாத்துக்கும் அடிப்படை பார்வை,போகிப்பது பார்வயால்.கற்பெனப்படுவது உடற் புணர்ச்சியில் மட்டுமல்ல உள்ளத்திலும் வேண்டும்,அது உங்களுக்கும் பொருந்தும் பெண்களுக்கும் பொருந்தும்.
#60
9.

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)