Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
கனடாவில் கொன்சேர்வட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தடை வரும் என்று எல்லோரும் சொன்னார்கள். தற்போதுதான் புலிகளைப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்கப்போவதாக செய்திகள் வருகின்றன. இது ஒரு வகையில் பின்னடைவுதான். தமிழர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் எமக்குத் தார்மீக ஆதரவு கிடைக்காததற்கு முதற் காரணம் எமது அசட்டையீனம்தான்.
தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் சிலராக இருந்தாலும், அவர்களின் நடவடிக்கைகள் எமது தேசியப் போராட்டத்தைப் பின் தள்ள முயற்சிக்கின்றன. இது நாளடைவில் இன்னும் பெருகாமல் இருக்க தற்போதே வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும்.
<b> . .</b>
Posts: 41
Threads: 2
Joined: Sep 2004
Reputation:
0
கிருபன்ஸ் உங்களுடைய கருத்தினை நான் வரவேற்கின்றேன்.
எம்மவர்கள் இது விடயத்தில் விழிப்பற்றிருக்கின்றார்கள் என்பதனை நினைக்க மிகவும் கவலையாக இருக்கின்றது.
தகுதியானவர்களையும், நன்கு படித்தவர்களையும் பொறுப்பான பதவிகளில் நியமிக்க வேண்டும். அதனை விடுத்து பெயருக்கு பொறுப்பாளர்கள் என்று நியமிப்பதில் அர்த்தமில்லை.
அந்த அந்த நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் பிற தமிழ் அமைப்புக்கள் (எமக்கு ஆதரவான அமைப்புக்கள்) ஏற்படுகின்ற பிரச்சனைகள் அதேவேளை அந்த அந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை அரசமட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய பணியினையும் அரசால் அல்லது அந்த நாட்டில் ஊடகங்களால் வெளியிடப்படும் அறிக்கைகளுக்கு உடனடியாக கருத்துக் கூறக் கூடியவர்களாகவும் உடன் மறுப்பறிக்கை விடுப்பவர்களாக தகுந்த நபர்களை நியமிக்க வேண்டும்.
ஆனால் எம்மவர்கள் அவ்வாறு செய்வதில்லை. நிதி சேகரிப்பதுதான் தலையாய கடமை என்று கருதுகின்றார்கள்.
சிறிலங்கா அரசின் அடாவடிகள், சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்காது இழுத்தடிக்கின்ற விடங்களை அந்த அந்த நாட்டில் உள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் உதிரிக்கட்சிகளுக்கு அறிக்கைகளாக அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு எமது நாட்டில் நடக்கின்ற உண்மை நிலவரங்கள் தெரியும்.
துரதிர்ஸ்டவசமாக தமிழன் நன்கு படித்தவன் என்கின்ற பெயரே தவிர அறிவுபுூர்வமாக எமது போராட்டத்திற்கு பங்களிப்பது என்பது மிகவும் குறைவு. இது அவர்கள் தப்புமில்லை. எம்மவர்களை அவர்களை உள்வாங்காது ஒதுக்கி வைப்பதே முக்கிய காரணம்.
மீண்டும் கூறுகின்றேன். நாம் அறிவுபூர்வமாக சிந்திக்காத விடத்து தொடர்ந்தும் இத்தகைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தே தீரவேண்டிய நிலைக்கு ஏற்படும்.
தயவுசெய்து இதில் விவாதிப்பவர்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குங்கள். இப்போது எஞ்சியிருப்பது ஐரோப்பிய நாடுகளே. அங்கேயும் தடை நடவடிக்கைகளை கொண்டுவந்தால் நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கின்றது.
கடந்த நான்கு வருடகால சமாதான காலத்தில் நாம் எவ்வளவோ விடயங்களை எமக்கு சாதகமாக்கியிருக்க முடியும். ஆனால் நடந்தவையெல்லாம் ஏமாற்றமளித்ததாகவே தென்படுகின்றது.
மீண்டும் பொற்காலம் திரும்பும் என்று நம்பியிருப்போம்.
S.Nirmalan
Posts: 119
Threads: 9
Joined: Sep 2005
Reputation:
0
Quote:தகுதியானவர்களையும், நன்கு படித்தவர்களையும் பொறுப்பான பதவிகளில் நியமிக்க வேண்டும். அதனை விடுத்து பெயருக்கு பொறுப்பாளர்கள் என்று நியமிப்பதில் அர்த்தமில்லை.
அந்த அந்த நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் பிற தமிழ் அமைப்புக்கள் (எமக்கு ஆதரவான அமைப்புக்கள்) ஏற்படுகின்ற பிரச்சனைகள் அதேவேளை அந்த அந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை அரசமட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய பணியினையும் அரசால் அல்லது அந்த நாட்டில் ஊடகங்களால் வெளியிடப்படும் அறிக்கைகளுக்கு உடனடியாக கருத்துக் கூறக் கூடியவர்களாகவும் உடன் மறுப்பறிக்கை விடுப்பவர்களாக தகுந்த நபர்களை நியமிக்க வேண்டும். ஆனால் எம்மவர்கள் அவ்வாறு செய்வதில்லை. நிதி சேகரிப்பதுதான் தலையாய கடமை என்று கருதுகின்றார்கள்.
[size=14]இந்த விடயத்தில் நிர்மலனின் கருத்து தான் என்னுடையதும், கனடா போன்ற வெளிநாடுகளில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் அமைப்புக்களின் தலைவர்கள் உறவினர்களாகவும், அவர்களின் பிள்ளைகளாகவும் இருந்தால் மட்டும் போதாது, படித்தவர்களாக, திறமையான முறையில் வாதாடக் கூடியவர்களாக, மனிதவுரிமைகளின் விடயத்தில், வெளிநாட்டு நிருபர்களின், மேலை நாட்டு மக்களின் கருத்துக்களை அறிந்தவர்களாக, அது மட்டுமல்ல, மேலை நாட்டு அரசியல், சமூக நிலைகளில் ஈடுபாடும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்களின் நாட்டில் நடைபெறுவதையும் மேற்கோள் காட்டி விளக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
எந்த விடுதலைப் போராட்டத்திலும், போரை விடப் பிரச்சாரம் தான் முக்கியம், இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா, படித்த. விவாதிக்கும் தன்மையுள்ள இளம் சிங்களவர்களைப் பாவிக்கிறது, நீங்கள் சிங்களத் தளங்களையும், ஐரோப்பாவிலும், கனடாவிலுமுள்ள படித்த சிங்களவர்களையும் அவதானித்தால் தெரியும். இலங்கைத் தமிழர்களின் சார்பில் கதைப்பவர்கள் ஒன்றில் தமிழ் மட்டும் தெரிந்தவர்கள், அல்லது அவர்களின் பிள்ளைகள், இலங்கைக்கே போயிராத பல்கலைக்கழக மாணவர்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஸ்காபுரோவில் பிரச்சாரம் செய்வதில் தான் வல்லவர்கள்.ஆனால் படித்த சிங்களவர்கள் தம்முடைய தமிழெதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பெரும்பான்மை மக்களிடம் எடுத்துச் சொல்வதில் வல்லவர்கள்.
கனடாவின் உள்நாட்டுப்பாதுகாப்பமைச்சர் ஸ்ரொக்வெல் டே யின் Okanagan-Coquihalla தொகுதியிலுள்ள சிங்களவர்களின் வற்புறுத்தலால் தான், அவர் அமைச்சராக முன்பே அவர்களுக்கு உறுதியளித்தபடி அவர் விடுதலைப் புலிகளையும் பயங்கரவாத வரிசையில் சேர்த்து விட்டார். அப்பொழுதே கனடாவிலுள்ள பலம்வாய்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள். CONSERVATIVES ஐயும் LOBBY பண்ணாமல், Liberal களுக்கு மட்டும் வால் பிடித்ததால் வந்தது தான் இந்த விளைவு. கடைசித் தேர்தல் மட்டும் 12 வருடங்களாக liberal களுக்கு ஆதரவளித்து விட்டு, சிலர் தேர்தல் வேளையில் மட்டும், Conservativesக்கு ஆதரவளித்ததால், முற்றுமுழுதாக இலங்கைத் தமிழர் ஆதரவுப் பத்திரிகையும், கனடாவில் அதிகளவில் வாசிக்கப்டுவதுமான, Toronto Star கூட ஈழத்தமிழர் எதிர்ப்பை ஆசிரியர் கருத்தில் காட்டத் தொடங்கி விட்டது. இது யார் விட்ட பிழை? இஸ்ரேல், அமெரிக்க அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்துவதே இஸ்ரேலியர்களின் LOBBYING இனால் தான். ஆனால் எத்தனை முறை எங்களின் எந்த இலங்கைத் தமிழ்ப் பேச்சாளரும், கெட்டித்தனமாக, கனடாவில் வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ வாதாடியுள்ளார்கள்.
கனடாவின் தொலைக்காட்சியில் நடந்த ஒரு சில ஈழத்தமிழர்கள் சம்பந்தமான எந்தக் கருத்தரங்கிலும் ஈழத்தமிழ்ப்பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் எவரும் ஆணித்தரமாக, சிங்களவர்களுக்கிணையாகக் கருத்துத் தெரிவித்ததில்லை. எங்கட ஆட்களுக்குத் தெரிந்தெல்லாம் பேச விடாமல் கூச்சலிடுவது தான். Lobbying விடயத்தில் தமிழர்கள், எங்களின் பக்கம் தான் நியாயம் இருந்தும் அவர்களிடம் தோற்று விட்டோம் ஏனென்றால் அவர்கள் சொந்தக்காரர்களையும், பிள்ளை குட்டிகளையும் நியமிப்பதில்லை, தமிழராக இருந்தாலும், தகைமையுள்ள, தங்களுக்குச் சார்பான தமிழர்களையும் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. கூட்டணிக்காலப் பெரிசுகளைப், புலம் பெயர்ந்த தமிழர்களின் பேச்சாளர்களாக நியமிப்பதால், அவர்களால் தமிழர்களுக்கு உபதேசம் செய்ய மட்டும் தான் முடியும்.
இந்த நிலைமை மீண்டும் ஏற்படாமலிருக்க, வன்னி, படித்த, திறமையான, (மும்மொழி மிகவும் நல்லது), அல்லது ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமையுள்ள, தமிழுணர்வுள்ள, விவாதிக்கும் திறனுள்ள, இளந்தமிழர்களை, பெரும்பான்மை இன ஊடகங்களின் வழியாக தமிழர்களின் பக்க நியாயங்களை எடுத்துச் சொல்லத் தக்கவர்களை நியமிக்க வேண்டும், அதை விட்டிட்டு, தமிழர்களுக்கு மட்டும் பிரச்சாரம் செய்யக் கூடியவர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் பேச்சாளர்களாக்கினால் இப்படி எத்தனையோ இடைஞ்சல்கள் வரலாம்
Posts: 113
Threads: 23
Joined: Feb 2006
Reputation:
0
ஒம் கனடா புலிகளை தடை செய்வது சரி தான் ஏன் என்றால் கனடா நாட்டை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் இராணுவ அமைப்பு கனடாடக்குள் உடுருவி விட்டார்கள் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
ஆக மொத்தம் பல லச்சம் தமிழ்மக்களின் மன நிலையை விட ஒரு சில பேரின் புலி எதிரிப்பு தான் தடைக்கு காரணமா? :roll: :roll: :roll:
நா¨Çக்கு சொல்லுவார்கள் புலிகளிடம் அமெரிக்¸¡வையும் கɼ¡¨ÅÔõ «Æ¢ìÌõ «Û¬Ô¾õ þÕìÌ ±ýÚ ¿õÀ¢ ¦¸¡ñÎ þÕí¸û «øÄÐ ¦º¡øÖí¸û ÒÄ¢¸û ¿øÄ Òò¾¢ ƒ£Å¢¸¨Ç ¦¸¡ñÎ ¸É¼¡«ÃÍìÌõ «¦Áâ측 «ÃÍìÌõ Å¢Çì¸ ÀÎò¾ §ÅñÎõ ±ýÚ <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
þýÚ Å¨Ã ´Õ «ôÀ¡Å¢ ¦À¡Ð Áì¸Ç¢ý þÈôÒìÌ ÒÄ¢¸¨Ç ¸¡Ã½õ ¸¡ðÎí¸û? :evil: :evil: :evil:
þø¨Ä ´Õ «¦Áâ측 À¢Ã¨ƒ «øÄÐ ¸É¼¡
À¢Ã¨ƒ????????????????
«ôÀÊ Â¡Õõ ÒĢǡø ¦¸¡¨Ä ¦ºöÂôÀð¼¡ø ¿¡ý þýÚ¼ý ÒÄ¢(¾Á¢Æ£Æ)¬¾Ã× ¦¸¡û¨¸¨Â Å¢ðÎ
Ţθ¢§Èý ....................................
þýÚ Â¡÷ þó¾ âÁ¢¨Â ¬úÅÐ ±ýÚ Ü¼ ¦¾Ã¢Â¡Á
¸É¼¡ ¾¨¼ ¦ºöÔÐ þÉ¢ ¸‰¼õ ±ýÈ Á¡¾¢Ã¢ «ÆÒŨ¾ Å¢ðΠŢðÎ ÓÊó¾ ¯¾Å¢ ¦ºöÔí¸û ¿¼ôÀ¨Å ¿¡ýÈ¡¸ ¿¼ìÌõ Áð¼ì¸ÇôÀ¢ø ¸¡½¾
«Æ¢Å¡???????????????
º¢í¸ÇÛõ «Êò¾¡ý ¦¾¡ôÀ¢Ôõ(Ó측Π¿¡ö¸û) «Ê¾¡÷¸û(º¢í¸Ç ¿¡ö¸Ù¼ý §º÷óÐ þôÀ ¾É¢ ¾ÃôÀ¡?)¸Ã¢ ¿¡¸õ ¸Õ½¡×õ(¿Ã¢) «ÊìÌÈ¡ý ±ýÛõ ±ÅÇ× ¸¡Äõ ¾¡ý À¡÷ì¸Ä¡õ :twisted: :twisted:
þÕ¸¢È 3.5 Á¢øÄ¢Âý ¾Á¢úÁì¸Ç¢ø «ÐìÌÇ À¢Ã§¾º Å¡¾Á¡õ <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
¸Ã¢¿¡¸õ ¸Õ½¡ ¯ÉìÌ Á£ñÎõ சொல்கிரேன் உனக்கு மவனே அழிவு மட்டகளப்பு பெடியன்கல் தன் வைப்பங்கள் ஆப்பு.....................................
[b]
Posts: 130
Threads: 14
Joined: Apr 2005
Reputation:
0
இது தமிழனின் சாபக்கேடு. திருந்தவேமாட்டோம்.ஈழம் பிறக்கனும். இல்லையேல் வரலாற்றோடு அழிந்து இப்படி ஒரு இனம் இருந்ததாம் என்று இல்லாமல் போகவேண்டும்
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
கனேடிய தடை முடிவானது விடுதலைப் போராட்டத்தை பாதிக்காது: மாவை சேனாதிராசா
[திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2006, 04:35 ஈழம்] [ச.விமலராஜா]
தமிழீழ விடுதலைப் புலிகளை கனேடிய அரசாங்கம் தடை செய்ய முடிவு செய்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து அமைதி முயற்சிகளை விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் செல்லுகிற நிலையில் கனேடிய அரசாங்கத்தின் இம்முடிவானது எதிர்பாராதது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தொடர்பில் சர்வதேச சமூகம் ஏன் கவலை கொள்ளவில்லை என்பது ஆச்சரியமளிப்பதாகவும் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தகைய முடிவினால் நாம் அதிருப்தியடைந்துள்ளோம். இருப்பினும் இத்தகைய முடிவு எமது விடுதலைப் போராட்டத்தை பாதிக்காது என்றார் மாவை சேனாதிராசா.
இதனிடையே சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா கருத்து தெரிவிக்கையில், பேச்சுக்கள் மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், பேச்சுக்கள் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண ஏதுவான சூழ்நிலையை அரசாங்கத்துக்கு இம்முடிவு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். இருப்பினும் இந்த விடயமானது கனேடிய அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடைப்பட்டதானது. இதில் தமது கட்சி தலையிட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு பாரிய பின்னடைவு என்றும் கனடாவில் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பை எந்தப் பெயரிலும் மேற்கொள்வதைத் தடை செய்தால்தான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புகளின் பெயரில் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபடுவர் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கனேடிய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Vasampu Wrote:அருவி
முதலில் இது விடயமாக <b>நான் எழுதிய கருத்துக்களை படித்து விட்டு கருத்தெழுதும்</b>. ஏதோ கண்ணில் பட்ட ஒரு கருத்தை மட்டும் பார்த்து விட்டு கருத்தெழுத வேண்டாம். எது உண்மையென்பது திங்கட்க்கிழமை தெரிந்தவிடும் என்று நான் எழுதியிருப்பது உமக்குத் தெரியவில்லை.
நீங்க கூறிய அதையேதான் நானும் கூறுகிறேன். :wink:
பந்திபிரித்து எழுதுவதன் பொருளும் தெரியாதோ :roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Vasampu Wrote:<i><b>தூயவன்</b>
இங்கே தலைகால் தெரியாமல் ஆடுவது யாரென்று பார்ப்பவர்களுக்குத் தெரியும். புலிகளுக்குப் பிரைச்சினைகள் ஏற்படுவது உம் போன்ற பச்சோந்திகளால்த் தான். தவறுகளை மறைக்க பொய் மேல் பொய் சொல்வதை விட தவறுகளைத் திருத்தப் பாருங்கள். இவையெல்லாம் உம் போன்றவர்களின் மண்டையில் ஏறுமா என்ன?? நிர்மலன் போன்றவர்கள் எழுதுவதைப் படித்தாவது திருந்தப் பாருங்கள்.</i>
நான் நினைத்தேன். உங்களுக்கு சிகிச்சை கையில் மட்டும் செய்தால் குணமாகிவிடுவீர்கள் என்று. ஆனால் மண்டையிலும் செய்தாகத் தான் வேணும். :wink:
[size=14] ' '
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
நிர்மலன் அண்ணாவினுடைய கருத்துக்கள் அனைத்துமே..மிகவும் ஆழமான யாதார்த்தமான கருத்துக்கள்..புத்தி ஜீவிகளையும்...பல்வேறு படித்த பதவிகளில் இருப்பவர்களையும் கொண்டு ஒவ்வோறு நாட்டிலும் குழுக்களை அமைத்து அவர்களை அந்த அந்த நாட்டு அரசாங்களுடன் பேச வைக்கலாம்...முந்தி தீவிரமாக செயற்பட்டவர்கள் பலர் தற்பொழுது ஒதுங்கி இருக்கின்றார்கள் அதற்கான காரணத்தையும் ஆராய வேண்டும்..ஒரு சிலர் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக ஒருவர் மீது குற்றம் சாட்டும் போது அதை ஆராய்ந்து முடிவெடுக்வேண்டும்..என்னை பொருத்தவரை கிட்டு அண்ணா அவர்களுடைய இழப்பிற்கு பிறகு அந்த வெற்றிடத்தை நிறப்ப யாராலும் முடியவில்லை...அவரைபோன்ற திறமை வாய்ந்த ஒருவரும் நியமிக்க படவும் இல்லை...இதை தலைமைப் பீடம் கவணத்தில் எடுக்குமா...?
வெளிநாட்டு விவகாரங்களில்..தீவிரமாக.....ராஜதந்திர hPதியில் கடுமையாக உழைக்க கூடிய ஒருவர் இப்பொழுதைய உடணடி தேவையாக உள்ளது.....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 41
Threads: 2
Joined: Sep 2004
Reputation:
0
ஆவுூரானின் கருத்துக்களுக்கும், சுண்டலின் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி. இங்கே நான் குறிப்பிடுவது எமது சர்வதேச பரப்புரை வலுவடைய வேண்டும் என்பதற்காகவே தவிர எவர்மீதும் உள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக அல்ல.
பல நாடுகளில் பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு அந்த அந்த நாட்டின் மொழி சரளமாகத் தெரியாதது என்பது பெரிய சோகம்.
கனடாவில் உள்ள பலருடன் உரையாடியபோது அவர்கள் கூறிய விடயங்களில் முக்கியமானது படித்தவர்களை அரவணைக்கின்ற தன்மை அமைப்பிடம் இல்லை என்பதே பரவலாக பலர் கூறிய குற்றச்சாட்டு.
கிட்டண்ணா காலம் ஒரு பொற்காலம் தான். அந்தக்காலத்தை மீண்டும் தலைவரால் கொண்டுவர முடியும்.
கிட்டண்ணாவின் கீழ் முன்னர் பொறுப்பாக இருந்த சுரேஸ் அண்ணா அவர்கள் மிகத்திறம்பட நிர்வாகத்தை நடத்தியதாக கனடாவில் உள்ளவர்கள் கூறுகின்றாார்கள். அந்தக்காலம் ஒரு பொற்காலம் என்றும் கூடக் கூறி வருகின்றனர்.
கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு எம்மவர்கள் பின்னர் ஆதரவளித்ததாக இங்கே இன்னொரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. ஆம், இது உண்மைதான். கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவளிக்கின்றோம் என்று லிபரல் கட்சியை இவர்கள் பின்னர் கைவிட்டது மிகப்பெரிய தவறு.
முன்னர் விடுதலைப் புலிகளை தடைசெய்யக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் வாதாடி வந்த லிபரல் கட்சி எம்மவர்களின் இரட்டை நிலைத்தன்மை காரணமாக இன்று கொன்சர்வேட்டிவ் கட்சி கொண்டு வருகின்ற தடையைக்கூட எதுவும் விமர்சிக்காது கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அதாவது இன்று எமக்கு குரல் கொடுக்க வேண்டிய நிலையிலிருந்த லிபரல் கட்சியை எம்மவர்களின் இரட்டை நிலைப் போக்கினால் அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். இது எமக்கு பெரும் இழப்பே.
சிறிலங்கா, இந்தியா போன்று நாளை ஒரு கட்சி, இன்று ஒரு கட்சி என்ற தாவல் நிலையை எம்மவர்கள் தவிர்த்து ஏதாவது ஒரு கட்சியுடன் பலமாக நிற்க வேண்டும். அல்லது இரண்டு கட்சிகளிலும் சமமாக தொடர்புகளைப் பேணல் வேண்டும்.
எதுவாக இருந்தாலும் விட்ட தவறுகளை சரிசெய்து எமது பரபரப்புரையை மீண்டும் புதுத் தெம்புடன் செய்ய வேண்டும் வேண்டும். அப்போதுதான் சிறிலங்காவின் பரப்புரைக்கு ஈடாக வெற்றிபெற முடியும்.
இங்கே ஒரு விடயத்தை நாம் நோக்க வேண்டும். சிங்களவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் குறைந்தளவில் வாழ்ந்தாலும் அவர்கள் தம்மில் படித்தவர்களை தேர்ந்தெடுத்து தமது பரப்புரைக்குப் பயன்படுத்துகின்றார்கள். இதுதான் அவர்களின் வெற்றியின் பலம்.
S.Nirmalan
Posts: 100
Threads: 2
Joined: Feb 2005
Reputation:
0
nirmalan Wrote:கிட்டண்ணா காலம் ஒரு பொற்காலம் தான். அந்தக்காலத்தை மீண்டும் தலைவரால் கொண்டுவர முடியும்.
கிட்டண்ணாவின் கீழ் முன்னர் பொறுப்பாக இருந்த சுரேஸ் அண்ணா அவர்கள் மிகத்திறம்பட நிர்வாகத்தை நடத்தியதாக கனடாவில் உள்ளவர்கள் கூறுகின்றாார்கள். அந்தக்காலம் ஒரு பொற்காலம் என்றும் கூடக் கூறி வருகின்றனர்.
கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு எம்மவர்கள் பின்னர் ஆதரவளித்ததாக இங்கே இன்னொரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. ஆம், இது உண்மைதான். கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவளிக்கின்றோம் என்று லிபரல் கட்சியை இவர்கள் பின்னர் கைவிட்டது மிகப்பெரிய தவறு.
முன்னர் விடுதலைப் புலிகளை தடைசெய்யக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் வாதாடி வந்த லிபரல் கட்சி எம்மவர்களின் இரட்டை நிலைத்தன்மை காரணமாக இன்று கொன்சர்வேட்டிவ் கட்சி கொண்டு வருகின்ற தடையைக்கூட எதுவும் விமர்சிக்காது கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அதாவது இன்று எமக்கு குரல் கொடுக்க வேண்டிய நிலையிலிருந்த லிபரல் கட்சியை எம்மவர்களின் இரட்டை நிலைப் போக்கினால் அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். இது எமக்கு பெரும் இழப்பே.
சிறிலங்கா, இந்தியா போன்று நாளை ஒரு கட்சி, இன்று ஒரு கட்சி என்ற தாவல் நிலையை எம்மவர்கள் தவிர்த்து ஏதாவது ஒரு கட்சியுடன் பலமாக நிற்க வேண்டும். அல்லது இரண்டு கட்சிகளிலும் சமமாக தொடர்புகளைப் பேணல் வேண்டும்.
எதுவாக இருந்தாலும் விட்ட தவறுகளை சரிசெய்து எமது பரபரப்புரையை மீண்டும் புதுத் தெம்புடன் செய்ய வேண்டும் வேண்டும். அப்போதுதான் சிறிலங்காவின் பரப்புரைக்கு ஈடாக வெற்றிபெற முடியும்.
இங்கே ஒரு விடயத்தை நாம் நோக்க வேண்டும். சிங்களவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் குறைந்தளவில் வாழ்ந்தாலும் அவர்கள் தம்மில் படித்தவர்களை தேர்ந்தெடுத்து தமது பரப்புரைக்குப் பயன்படுத்துகின்றார்கள். இதுதான் அவர்களின் வெற்றியின் பலம்.
இந்த கருத்து உண்மைதான்
கனடாவில் உள்ள எம்மவர் சிலருடன் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்குகிடைத்தது அவர்களும் இப்படியான கருத்தையே கூறினார்கள்.
""
Posts: 130
Threads: 14
Joined: Apr 2005
Reputation:
0
நிர்மலன் உங்கள் கருத்துக்கள் சரியானதுதான்,ஆனால் விடுதலைக்காக வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போதிய அறிவு இல்லை என்பது பொய்த்தனம்,இவ்வளவுகாலமும் அந்த விடுதலையை இழுத்து வந்தவர்கள் நீங்கள் சொல்கின்ற அந்த போதிய தகமை இல்லாதவர்கள் தான். நீங்கள் உங்களையே கேட்டுப்பாருங்கள் நீங்கள் இதுவரை ஏதாவது களம் இறங்கி விடுதலைக்காக செய்தீகளா என்று.நிச்சயமாக செய்திருக்கமாட்டீர்கள்...பிறகு எப்படி அவர்களை மாத்திரம் குறை சொல்வது.. எங்கள் முதுகிலேயே சொறி இருக்கின்றது.
படித்தவர்கள் விடுதலைக்கு களம் இறங்கி வேலை செய்வதற்கு ஒன்றும் தடை இல்லை..அவர்கள்தானே தங்களை கூப்பிட்டு தாம்பாளத்தில் வைத்து விடுதலையை தங்களிடம் ஒப்படைக்கின்றோம் காப்பாற்றுங்கள் என்று ,இப்போது போதிய தகமை இல்லாமல் வேலை செய்கின்றார்களே அவர்கள் கேட்பார்கள் என்று காத்திருக்கின்றார்கள் போலும்.
Posts: 130
Threads: 14
Joined: Apr 2005
Reputation:
0
நாங்கள் ஓர் அன்றாடம் காட்சிகள், ஒன்றுக்கும் வழியில்லாத தெரூநாய்கள்..தெருவில் போறவனே எங்களை பார்த்துவிட்டு நீ தமிழா என்றால் காறித்துப்பும் அளவிற்கு யாரும் கேட்க பலமில்லாத ஓர் அகதி இனம்.....
பிறகு எப்படி பெரிய பலம்படைத்த சிங்கள வல்லரசை தனக்கென்று நாட்டை வைத்துக்கொள்ளும் அரசுடன் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்து மோதுவது.... அவர்கள் எங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்தும் பணத்தின் தொகை நாங்கள் கனவில் கூட நினைக்கமுடியாது.
வீடுதேடி வந்து உதவி கேட்டால்,இருந்து கொண்டு கதவு திறக்காமல் .யன்னலால் எட்டிபார்த்துவிட்டு மவுனமாக இருக்கும் அகதிதமிழன் இருக்கும் வரை இந்த இழிநிலை தொடரும்
இதுதான் உண்மைநிலை. அதை விடுத்து படித்தவன் இல்லை என்று முடிச்சுபோடுவது ... ஈகோத்தனம்
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
படித்த பலர் அமைப்;பிலே கட்டாயம் உள்வாங்கபட வேண்டும் அவர்களை அப்பிடி தான் அழைக்க வேண்டும் என்றால் அழைப்பதிலே தப்பில்லை மிவும் சோகமான கட்டதில் இருக்கிறது எமது வெளிநாடுகளுடனான உறவு..............
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
இப்படியான நிகழ்சிகள் நடைபெறும் போது அவசரப்பட்டி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை.இப்படி ஏன் நடக்கிறது?அதற்கான காரணங்கள் என்ன? நாம் இவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்று யோசித்தோமா?
முதலில் ஏன் இப்படி நடந்தது,இதற்கான விடை யாருக்காவது தெரியுமா?பல்வேறு வளங்களைக்கொண்ட கனேடிய அரசிற்கு ஈழத்திலென்ன நடக்கிறது என்று தெரியாமலா இப்படிச் செய்தார்கள்?அவர்கள் இப்படிச் செய்வது ஏன்?ஒரு சில ஆயிரம் கனேடிய சிங்களவருக்காக இப்படிச் செய்தனரா?
எனது அபிப்பிராயம் இதை செய்யப் பரிந்துரைத்தது கனடேய புலானிய்வுத் துறை.கனேடிய புலனாய்வுத் துறை யாரால் வழி நடத்தப்படுகிறது.அதற்கும் அமெரிக்க புல நாய்வுத் துறையினருக்கும் ஊடான தொடர்பு என்ன?இது விடுதலைப் புலிகளை ஒரு அழுத்ததிற்கு உட்படுதுவதற்காக அமெரிக்க வழி நடதலால் ஏற்படுத்தப்படதா?அல்லது இங்கே பலரும் கூறுவதைப் போல், ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இப்படி நடந்ததா?
அடுத்தது இதனை நாம் எவ்வாறு எதிர் கொள்ளலாம்.அமெரிக்க வெளிஉறவுக் கொள்கையால் வழி நடதப்படும் கனேடிய கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின்,உள்ளூர் அரசியல் வாதிகளின் செல்வாக்கில் இந்த முடிபானது தாக்கம் செலுத்தும் வகையில் நாம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.உள்ளூர் பராளுமன்ற உறுபினர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.சமாதானப் பேச்சுவார்த்தயில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புலிகள் மேல் ஏன் இவ்வாறு கனேடிய அரசு தடயை கொண்டு வருகிறது?சிங்கள அரசும் இராணுவமும் மக்களைக் கொலை செய்யும் இந்தத் தருணத்தில் ஏன் இவ்வாறு கனேடிய அரசு நடந்து கொள்கிறது.இது பிழையான அணுகுமுறை.இதனால் புலிகள் போரை நோக்கியே செல்வார்கள்.போன்ற கருதுக்களை அங்கிருக்கும் ஊடகங்கள் பரப்ப வேண்டும்.அத்தோடு கனேடிய கொள்கை வகுப்பாளர்கள் அரச பேச்சாளர்கள் போன்றவர்களிடம் கனேடிய தமிழ் ஊடகங்கள் கேள்வி கேட்டு பேட்டி எடுக்க வேண்டும்.மற்றும் கண்டன ஊர்வலங்கள்,கூட்டங்கள் என்பவை நடாத்தப் பட வேண்டும்.மற்றய கனடிய ஊடகங்கள்,மக்களிடமும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும்.
அமைப்பு ரீதியாகவே இதனைச் செய்ய முடியும்,குறிப்பாக மனித உரிமை அமைப்புக்கள் ,சுயாதீன மக்கள் அமைப்புக்கள் இதனைச் செய்ய வேண்டும்.உதாரணமாக பிரான்சில் இயங்கும் தமிழ் மக்கள் மனித உரிமை அமைப்பு செய்யும் விடயங்கள் போல் இவை அமைய வேண்டும்.இந்த அமைப்புக்களை ஏன் இந்தப் படித்தவர்கள் உருவாக்க முடியாது?ஏன் யாரோ வந்து வரவேற்க வேண்டும்.உங்களுக்கு செயற்பட வேண்டும் என்ற உணர்விருந்தால் நீங்களே நண்பர்களைச் சேர்த்து, நிதி திரட்டி இதனை மேற்கொள்ளலாமே.
இப்போது தேவை அமைப்பு ரீதியாக ஒன்று படலும்,திட்டமிட்டு செயற்படுதலுமே. விமர்சனங்கள் தேவை தான் ஆனால் நாம் எவ்வாறு செயற்படுகிறோம், என்ன செய்கிறோம் என்ற சுய விமர்சனம் முதலில் அவசியம்.எமக்கு உணர்விருந்தால் நாம் முயற்சி செய்வோம் அல்லவா? ஏன் மற்றவர் அழைக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருக்க வேணும்?
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
கடந்த மாவீரர் நாள் பாலா அண்ணாவின் உரையின்படி பார்த்தால் தடையைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை... எங்களுடனான உறவை நீங்களே கெடுத்துக்கொள்வது என்பது எங்களின் நோக்கத்தை பாதிக்காது எனும் வகையில் பாலா அண்ணா சொல்லி இருந்தார்...
அண்மையில் சொல்கைம் கூட சொல்லி இருந்தார் அமெரிக்க அரசு தீவிர இலங்கை ஆதரவு நிலையில் இருக்கிறது எண்று.... ஆகவே அமெரிக்க ஆதரவு அரசுகள் புலிகள் எதிர்நிலை எடுப்பதில் ஆச்சரியம் ஒண்றும் இல்லை...
கடந்தமுறை பிரித்தானியா ஐரோப்பிய தலைமை ஏற்றபோதும் தடை வந்தது... ஆனால் ஒஸ்ரிய தலைமை வந்தபோது புலிகள் ஐரோப்பிய நாடாகிவிட்ட சுவிசிலாந்துக்கு போய் வந்தனர்...
::
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Vaanampaadi Wrote:<b>Tamil terrorist label will hurt talks, groups say</b>http://www.theglobeandmail.com/servlet/story/RTGAM.20060410.wxtamil10/BNStory/National/home
இதை கனடிய மீட்புநிறுவனம் ( உதவிநிறுவனம்) புரிந்து கொண்டது மகிழ்ச்சிதான்... சிலவேளை இன்நிறுவனம் இலங்கையில் அரசால் தடை செய்யப்படலாம் எனும் பாதிப்புக்குள்ளாக கூடியதாக உள்ளது...
இல்லை இன்னிறுவனத்துக்கும் முன் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று அடக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது...
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
இரு முறை தவறாய் பதியப்பட்டு விட்டது...!
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
கிட்டாண்ணா நல்ல திறமையுள்ள தலைவர். அவரிடம் பல்துறை மக்களையும் ஒருங்கிணைத்து செயற்திட்டங்களை ஏற்பாடு செய்ய கூடிய வசீகரம் இருந்தது. அவற்றிற்கு மேலாக தலைவரின் நம்பிக்கைக்குரியவர். இவை கிட்டண்ணா காலத்தில் புலிகளின் வெளிநாட்டு பரப்புரை மற்றும் உறவு உருவாக்கல் நடவடிக்கைகளை சீர் செய்ய உதவியது. இன்று வெளிநாடுகளில் உள்ள எந்தப் பொறுப்பாளரும் கிட்டண்ணா போன்று தாயகத்தில் இருந்த காலத்தில் மக்களின் மதிப்பை பெற்றுக் கொண்டவர்கள் அல்ல.
இன்று வெளிநாட்டுப் பொறுப்பாளர் பலர் பற்றி ஊழல் கிசு கிசுகள் மூலம் தான் பல சாதாரணமானவர்களிற்கு அறிமுகமே ஆகிறார்கள். கிசு கிசுக்கள் எதிரியின் துரோகிகளின் விசமப்பிரச்சாரமாக இருந்தாலும் பலருக்கு அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது ஏனென்றால் இவர்கள் அறிமுகம் அற்ற பொறுப்பாளர்கள். அறிமுகமானவர்களை நம்புவது அறிமுகமற்றவர்களை இலகுவில் சந்தேகப்படுவதும் மனித இயல்பு. உண்மையான சில ஊழல்களும் நடந்திருக்கு அவை இந்த எதிர்பிரச்சாரத்தை சாதாரண மக்கள் நம்ப வைப்பதில் மேலும் துணை போகிறது.
உறுதியான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஆதரவாளர்கள் ஊழல்களால் சோர்ந்துவிடப் போவதில்லை. ஆனால் கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும், பொரும்பான்மையானவர்கள் ஊழல்களை கேட்டு சோர்ந்துவிடாத ஆதரவாளார்கள் அல்ல. கஷ்டப்பட்டு உழைத்த காசில்தான் தமது சொந்த வாழ்கைiயும் நடத்திக் கொண்டுதான் எம்மவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். தாயகப்போராட்டத்திற்கான பங்களிப்பு அவசியமானது ஆனால் அவர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தமது அன்றாட வழ்வு அந்த சூழலுக்கு ஏற்ற எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவும் வேண்டிய தேவையும் உண்டு. பொருளாதார வசதிபடைத்தவர்கள் நல்ல நிலையில் இருப்பவர்களும் தமது துறைகளில் பல சவால்களை சந்தித்து கடின உழைப்பில்தான் அந்த வசதிபடைத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள், அதை தக்க வைக்கவும் அவர்கள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். அதிஸ்டலாபச்சீட்டில் கிடைத்த பணம் அல்ல. இதை உணராதவர்களாகத்தான் பெரும்பாலான தொண்டர்கள் உதவி கேட்டு இவர்களை அணுகிறார்கள் இதனால் அனாவசியமற்ற விரிசல்கள் உருவாகிறது. இந்தக் கலாச்சார இடைவெளி சீர் செய்யப்பட வேண்டும்.
கனடா வந்து அமெரிக்காவின் துருப்பாக பல இராஜதந்திர நகர்வுகளில் பயன்படுத்தப்படுவது வழமை. கனடாவின் இந்த நகர்விற்கும் இது தான் மூல காரணம் என நினைக்கிறேன். யுத்த நிறுத்தம் மற்றும் அதனை அமுல்படுத்துவது பற்றிய இரண்டாம் கட்ட பேச்சு மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. சர்வதேச சமூகம் தம்மால் முடிந்தவரையில் இரு தரப்பிற்கும் அழுத்தத்தை கொடுத்து யுத்த நிறுத்தத்தை தக்கவைக்க முயற்சிக்கிறது. புலிகள் இலங்கை அரசாங்கம் போன்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரச தரப்பு இல்லை என்றரீதியில் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தத்தை கொடுக்கக் கூடிய ஒரு இலகுவான தரப்பாக இருக்கிறது. "சர்வதேசம்" தமது சுய தேவைகளிற்கு சில மேல்நிலை முடிவுகளை எடுக்கும் போது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடுக்கு எதிராகவும் நீதி நியாயங்களிற்கு அப்பால் நடவடிக்கைகளை எடுக்கும் என்பதும் வரலாறு. இவற்றை எல்லாம் உணர்ந்தவர்களாகத்தான் புலிகள் கடந்த 2 வருடத்திற்கு மேலாக உச்சப் பொறுமைகாக்கிறார்கள். ஆனால் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் புலிகள் தமது பெறுமையை இழந்தவர்களாக நெகிழ்வுப் போக்கை இறுக்கி உறுதியாக தமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த வருடத்தில் சர்வதேச சமூகம் இலங்கை அரசு சார்பாக வெளிப்படையாக காட்டிவரும் நிலைப்பாடு இதற்கு உதாரணம். சர்வதேசமும் பதிலுக்கு புலிகள் மீது வெளிப்படையாக சில அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஒரு balancing act செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இன்று நாம் எதிர்கொள்ளுவது சர்வதேசதரத்திலான மிகவும் சாதுரியமான இராஜதந்திர ஊடல்.
எதிரிகளின் துரோகிகளின் எதிர்ப்பிரச்சாரங்கள், தடைகள் ஒருவகையில் எமது நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி அதிலுள்ள பலவீனங்களை சீர்செய்து வினைத்திறன் மிக்கதாக்க நல்ல சந்தர்ப்பத்தை தருகிறது என்று தான் நினைக்கிறேன். அதற்கு முதலில் கண்மூடித்தனமாக எம்மத்தியிலுள்ள குறைபாடுகளை மூடிமறைக்காது அதை ஆக்கபூர்வமான முறையில் விமர்சித்து நல்வழிப்படுத்த முயலுபவர்களை துரோகிகளாக்காது இருக்க பழகவேண்டும். புலத்தில் பிறந்து வழர்ந்தவர்கள் சிறுவயதில் இங்கு வந்தவர்கள் எமது போராட்டத்திற்கான நியாப்பாட்டை அனுபவரீதியில் உணரமுடியாதவர்கள். அவர்கள் கிட்டத்தட்ட நேரடி அனுபவம் அற்ற ஒரு பிறநாட்டவர் மனோபாவத்தோடுதான் விடையத்தை அணுகுவார்கள். இவர்களை தமிழ்த்தேசிய போராட்டத்தின் நியாயத்தன்மையை எதிர்விசமப்பிரச்சாரத்திற்கு மத்தியில் வென்றெடுப்பது ஒரு புதிய சவால். தமிழ் இளையோர் அமைப்பு இதை சிறந்த முறையில் செய்கிறது. இந்த இளைய சந்ததிதான் உலகளாவியரீதியில் தமிழ்தேசியத்தின் எதிரகால பேச்சாளர்கள் பிரதிநிதிகள். எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய கலாச்சார யுக்திகள் தெரிந்த வல்லுனர்கள். இவர்கள் சிறந்த முறையில் எமது போராட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும், திறமையின் அடிப்படையில் பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும். எமது போராட்டம் நிதானமாக இந்த எதிர்காலச்சந்ததியின் புதிய சிந்தனைகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
|