Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமுதாயம்
#41
<b>சாதிகள் பற்றி பேசி தனிப்பட்ட தாக்குதல்களில் நீங்கள் ஈடுபட எத்தனித்ததன் காரணமாக நித்தியா கவிதைகள் என்ற தலைப்புக்குள் இருந்த சாதிகள் பற்றிய கருத்துக்கள் அங்கத்தவர் பகுதிக்கு மாற்றப் படுகிறது </b>.

தொழில் ரீதியில் ஏற்றபட்ட ஏற்றத்தாழ்வுகள் சாதிகளாக முன்னோர்களால் பிரிக்கப் பட்டு இன்றுவரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவ் வர்க்க வேறுபாடு சிறிது சிறிதாக அழிக்கப் பட்டு வருக்கிறது. புலத்தைப் பொறுத்தவரை இப்போது அனைவரின் தொழிலும் கிட்டத்தட்ட ஒன்று தான். இங்கே உங்கள் சாதி உயர்ந்த சாதி என்று சொல்லி அரசாங்க உத்தியோகமா எடுக்க முடியும் அல்லது தாழ்ந்த சாதி என்றால் தாழ்ந்த வேலையா எடுக்க முடியும். எந்த வேலை கிடைக்கிறதோ அதனை தானே செய்கிறீர்கள்.. வெள்ளைக் காறனுக்கு கோப்பை கழுவினால் உயர்ந்த சாதியா ...? தாழ்ந்த சாதியா..? ஏன் தான் அழிக்கப் படவேண்டியவற்றை எல்லாம் பேசி ஆளாளுக்கு சண்டை பிடிக்கிறீர்கள்.தமிழ் தேசியத்தில் அனைவரும் தமிழன் என்ற ஒரே வர்க்கமாக வாழ்வோமாக.
நன்றி
[b][size=18]
Reply
#42
narathar Wrote:
kuruvikal Wrote:[quote=kirubans]தமிழர்கள் இன்னும் சாதியத்தின் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பது சத்தியமானது. தாயகத்தில் நீறு பூத்த நெருப்பாக இப்போதும் சாதியம் உள்ளது. சகலரும் சரிசமமாக சென்று வழிபட அனுமதி மறுக்கும் கோயிலகள் தற்போதும் யாழில் உள்ளன. இல்லை இல்லையென்று சொன்னால் எதுவும் இல்லாமல் போகாது.

<b>நித்யாவின் கவிதைப் பக்கத்திற்கு எப்படியாவது பூட்டுப் போட வைக்கவேண்டும் என்ற அழல் குணத்தைக் கைவிட்டால் நல்லது என்று நினைக்கின்றேன். மேலே எழுத விருப்பமில்லை. நித்யா புதிதாக எழுதினால் மீண்டும் வருகின்றேன்</b>.

முதலில் இப்படியான கொழுவல் போக்கான கருத்தைத் தவிருங்கள்..உங்கள் உண்மை முகம் பற்றி எங்களுக்கு தெரியும்...!

நித்தியா சாதியக் கூறுகளை உச்சரிப்பதை தவிர்த்திருக்கலாம் என்பதே எங்கள் கருத்து...அதை நேற்றே சுட்டிக்காட்டினோம்..! அத்தோடு எமது வாதம் முடிந்திருந்தது..! கீழ்சாதி உயர்சாதி பாகுபாடு இதற்குள் புகுத்தப்பட்டது அவசியமில்லாத ஒன்று...! அது தேவைக்கு அப்பால்பட்டது..! அது சாதிய ஒழிப்புக்கு எதிரான செயலும் கூட...!

இங்கு நாங்கள் சாதி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று எங்கும் சொல்லவில்லை.
:roll: :roll:
இல்லாத ஒன்றை நீங்கள் ஏன் தெளிய வைக்கிறீர்கள்...அதைக் காவ நிக்கிறீர்கள்..! சாதி இல்லை என்ற பின் ஏன் உச்சரிக்க வேண்டும்.

:roll: :roll:
என்ன பெரியவர் திரும்பி குணத்தக் காட்டத் தொடங்கிட்டீர்.
சமூகத்தில் தான் காணுவதை படைப்பாளி காட்டுகிறான்,கவி ஆக்குகிறான்.
அதுக்குள்ள யாரு நீர் சாதியம் இல்லை,சாதியம் ஒழின்ச்சிட்டுது எண்டு என்னத்தை வச்சு கொக்கரிக்கிறீர்.எங்கே நீர் கூறவதைப் போல் சாதியம் ஒழிந்ததற்கான சமூகத் தரவுகள்.உமது அரவேக்காட்டு அங்கலாய்ப்புக்கள் கொக்கரிப்புக்கள் எல்லாம் ஏன் இப்படி விதண்டாவதம் புரி கின்றன.

உங்களுக்குள் ஒழியாதது மற்றவர்களுக்குள்ளும் ஒழியவில்லை என்ற கற்பனையில்...கதை அளப்பதில் காலம் கழிக்கும் நீங்கள்..சாதியம் பல மட்டங்களில் மெல்லத் தகர்ந்திருக்கிறது..தகர்ந்தும் வருகிறது...என்ற உண்மையை உள்வாங்கப் போவதில்லை..! இருண்ட உலகத்தையே பார்த்திட்டு அதுக்கு ஒளி கொடுப்பதாக எண்ணும் மின்மினிகள்..பற்றி உலகம் அறியும்...! <b>***</b>

உங்களுக்காக எவரும் தங்களை மாற்றமாட்டீனம்...கழிவுகளைக் குப்பையில்தான் கொட்டனும்..! இங்கல்ல..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


<b>*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது -வலைஞன்</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
kavithan Wrote:<b>சாதிகள் பற்றி பேசி தனிப்பட்ட தாக்குதல்களில் நீங்கள் ஈடுபட எத்தனித்ததன் காரணமாக நித்தியா கவிதைகள் என்ற தலைப்புக்குள் இருந்த சாதிகள் பற்றிய கருத்துக்கள் அங்கத்தவர் பகுதிக்கு மாற்றப் படுகிறது </b>.

தொழில் ரீதியில் ஏற்றபட்ட ஏற்றத்தாழ்வுகள் சாதிகளாக முன்னோர்களால் பிரிக்கப் பட்டு இன்றுவரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவ் வர்க்க வேறுபாடு சிறிது சிறிதாக அழிக்கப் பட்டு வருக்கிறது. புலத்தைப் பொறுத்தவரை இப்போது அனைவரின் தொழிலும் கிட்டத்தட்ட ஒன்று தான். இங்கே உங்கள் சாதி உயர்ந்த சாதி என்று சொல்லி அரசாங்க உத்தியோகமா எடுக்க முடியும் அல்லது தாழ்ந்த சாதி என்றால் தாழ்ந்த வேலையா எடுக்க முடியும். எந்த வேலை கிடைக்கிறதோ அதனை தானே செய்கிறீர்கள்.. வெள்ளைக் காறனுக்கு கோப்பை கழுவினால் உயர்ந்த சாதியா ...? தாழ்ந்த சாதியா..? ஏன் தான் அழிக்கப் படவேண்டியவற்றை எல்லாம் பேசி ஆளாளுக்கு சண்டை பிடிக்கிறீர்கள்.தமிழ் தேசியத்தில் அனைவரும் தமிழன் என்ற ஒரே வர்க்கமாக வாழ்வோமாக.
நன்றி

நன்றி கவிதன் இதை இங்கு நகர்த்தியதற்கு..! இவ்வாறான அலட்டல்கள் சமூகவிரோத கருத்துக்கள் ஒரு சிலரோடு உதித்து உதிரட்டும்...! இன்று சிறுவர்கள் சிறுமிகள்.. சாதியம் என்பது அறியாது.. தெரியாது வளர்ந்து வருகிறார்கள்..அவர்களை அவர்கள் பாதையில் உயர் மனிதநேயம் உள்ளவர்களாக நல்ல மனிதர்களாக உருவாக விடுங்கள்..!

சாதி உச்சரிப்பே சாதிய வெளிப்பாட்டின் ஆரம்பநிலை..! அதை மீண்டும் இங்கு தொடரச் சிலர் கங்கணம் கட்டி நிற்கின்றனர்..! பேச்சுப் பொருள் என்று அநாவசியங்களை காவும் இவர்கள் மனங்களுக்குள் அடங்கி இருப்பது என்ன...??! மொத்த சாதியமும்...அதன் ஆதிக்கமும்...மட்டுமே..! புலம் சரி.. தாயகம் சரி இன்று சாதியம் என்பது கூனிக்குறுகி நிற்கிறது..! அதற்கு முண்டுகொடுக்க நினைப்பவர்களை தீவிர கருத்தியல் என்ற போர்வையில் களம் நிமிர இடமளிக்கிறது..! இந்த இடத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா சொன்னது போல...சாதிகள் இல்லையடி என்றபடி சாதியத்தைப் படிப்பவனே உச்சரிப்பவனே உண்மையான சாதி வெறியன்..! அவன் எதற்காக அநாவசியமாக அகற்றப்பட வேண்டியதுக்கு விளக்கம் தேடுறான்..காவித்திரிகிறான்....!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
சாதியின் பெயரைச் சொல்லி அழையாமல் விடுவதால் அது இல்லாமல் போய்விடாது என்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதே. ஆனால் நாங்கள் எமது சமூக வழக்கத்தில் உள்ளதொன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். நாங்கள் சாதியின் பெயரைக் குறிப்பிடும்போது அது சுட்டுவரின் சமூக அந்தஸ்தை குறிப்பிடுகின்றோம் இது பெரும்பாலும் அவரை இழிவுபடுத்துபவராகவேயுள்ளது. எனவே அப்படியான சொற்களுக்கு ஏன் நாம் உத்வேகம் கொடுக்க வேண்டும். அவற்றை காலவோட்டத்தில் வழக்கொழிந்து போக விடுவதே யாவருக்கும் நல்லது.
Reply
#45
சமுதாயம் தொடர்பான கவிதை எழுத தொடங்கி விட்டீர்கள்.... நன்றாக இருக்கின்றன...கல்லெறிகள் வரத்தான் செய்யும்..... களத்தில் எல்லா தரப்பட்ட மத்தியிலும் உங்கள் கவிதைக்கு வரவேற்பு இருப்பதை அவதானித்திருப்பீர்கள்...தொடருங்கள் வாழ்த்து்கள்
Reply
#46
<!--QuoteBegin-manimaran+-->QUOTE(manimaran)<!--QuoteEBegin-->சாதியின் பெயரைச் சொல்லி அழையாமல் விடுவதால் அது இல்லாமல் போய்விடாது என்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதே. ஆனால் நாங்கள் எமது சமூக வழக்கத்தில் உள்ளதொன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். நாங்கள் சாதியின் பெயரைக் குறிப்பிடும்போது அது சுட்டுவரின் சமூக அந்தஸ்தை குறிப்பிடுகின்றோம் இது பெரும்பாலும் அவரை இழிவுபடுத்துபவராகவேயுள்ளது. எனவே அப்படியான சொற்களுக்கு ஏன் நாம் உத்வேகம் கொடுக்க வேண்டும். அவற்றை காலவோட்டத்தில் வழக்கொழிந்து போக விடுவதே யாவருக்கும் நல்லது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது நல்ல ஒரு கருத்து, இதைத்தான் நாமும் கேட்கிறோம்.
.

.
Reply
#47
நல்லது குருவி! பாரதியார் சாதிகளின் பெயரைச் சொல்லி பாடவில்லை என்ற உங்கள் கருத்துக்கு பூனைக்குட்டியின் பதில்க் கருத்து தொடர்பாக நீங்கள் இதுரை கருத்தேதும் சொல்ல வில்லையே.. உங்கள் கருத்தை அறியலாமா?
Reply
#48
குறித்த உதாரணத்தில் கூட சாதி இதுதான் என்று இனங்காட்டவில்லை பாரதி...! ஏற்றத்தாழ்வு சொல்லவில்லை...! சாதியத்துக்கு எதிராக குரல் கொடுத்த அவன் இயன்றவரை சாதி உச்சரிப்பை தவிர்த்தவன்..! அதுவே எங்கள் முதன்மையானது...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
<!--QuoteBegin-இவோன்+-->QUOTE(இவோன்)<!--QuoteEBegin-->நல்லது குருவி! பாரதியார் சாதிகளின் பெயரைச் சொல்லி பாடவில்லை என்ற உங்கள் கருத்துக்கு பூனைக்குட்டியின் பதில்க் கருத்து தொடர்பாக நீங்கள் இதுரை கருத்தேதும் சொல்ல வில்லையே.. உங்கள் கருத்தை அறியலாமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பாரதி சொன்னது சாதியத்திற்கான எதிர்ப்பும், அதில் இருந்துமான விடுதலை, நித்தியா சொன்னது சாதியத்தைகொண்டு உதாரணமும், உவமையும். இரண்டுக்கும் உரிய வேறுபாடு உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன். :wink:
.

.
Reply
#50
காலம் காலமாக யாழில் இருந்த சாதி அமைப்பு முறைக்கு தீயுட்டி சற் சூத்திரர் என யாழில் கொழுந்துவிட்டு எரித்த்தவர் ஆறுமுகநாவலர் அவர்கள்....அவர்களின் வழித்தோன்றல்கள் சாதிகள் இல்லை பிரமையை உருவாக்கி சாதி பெயரை கேட்டவுடனேயே புதிதாக கேட்டதாக துடிக்கிறார்கள் ... சந்தர்ப்ப சூழ்நிலைக்காக வெளியில் சாதி யில்லை என்ற தோற்றப்பாடை உருவாக்கி கொண்டு உளமனத்தில் சாதியல் நகர்வுகளையே நகர்த்தி வருகிறார்கள்

யாரும் சாதிய பரப்பரை செய்யமாலே அதன் குணாம்சத்துடன் நாட்டில் சரி புலத்தின் சரி அதன் குணாம்சத்துடன் உலாவி வருகிறது..குடாநாட்டு குணாம்சமே இன்று புலத்தில் அழியாது போது யாழின் வடுவான சாதியத்தை அழிந்ததுதான பிரமையை உருவாக்கி தொடர்ந்து சாதியத்தை பேணி காக்க நவீன ஆறுமூகநாவலர்கள் முனையுறார்கள்
Reply
#51
களத்தில் இப்படி சாதி பற்றி??. நான் அறிந்தவரை முன்னர் வர்க்கபேதம் பார்க்கப்பட்ட கோவில்களில் கூட அந்த பேதங்கள் அகற்றப்பட்டுவிட்டதாம். மக்கள் மனசில் இருந்தும் அழிந்து கொண்டு வருகிறது. இதில் சாதியத்தை விபரிப்பதும் உதாரணங்கள் போடுவதும். சிலரது உள்மனங்களில் மாறது மறையாது இருக்கின்ற பேதத்தை எடுத்துக்காட்டுதோ?? இங்கு பலருக்கு உந்த முறைமைகள் தெரியாது என்று நினைக்கிறன். விபரமாய் எழுதி அவர்களிற்கும் தெரியப்படுத்துவது தொண்டு தானே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#52
முன்னைய களத்திலும் இது சம்பந்தமாக சில விடயங்கள் அலசப்பட்டிருக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> http://www.yarl.com/kalam/viewtopic.php?t=...&highlight=rhjp

http://www.yarl.com/kalam/viewtopic.php?t=...&highlight=rhjp
Reply
#53
இங்க புலத்தில கூட ஒராள போகவிட்ட அவர பத்தின சாதிய பற்றி கதைக்கிறது நிறைய இருக்கு....அது இல்லையெண்ட நீங்கள் சொன்னால் தமிழ் சமூகத்தில நீங்கள் வாழல எண்டுதான் எடுத்துக் கொள்ளலாம்...... கல்யாணங்கட்டேக்க கூட இன்னும் சாதி பாக்கினம்.... இருக்கிற ஒண்ட நடக்கிற ஒண்ட உவமானம் காட்டுறதில என்ன சிக்லெண்டு எனக்கு விளங்கேல.....

இண்டைக்கு பொருளாதார ரீதியா தாயகத்தில கீழ்நிலையில இருந்தவை வெளிநாட்டில பொருளாதார hPதியா முன்னேறி தொழில் ரீதியான மாற்றங்கள் எல்லாம் நடந்து அவையின்ர அடையாளங்கள் மாறினாலும் அவர்கள் மேல குத்தப்பட்ட முத்திரைகள் இன்னும் நீங்கல....

புலத்தில.......... சாதியடிப்படேல கீழ்நிலையாக கருதப்பட்டவைய அடக்கி ஆதிக்கம் செலுத்திய தன்மை இல்லாமல் போயிருக்கு.... ஊரில அது குறைஞ்சிருக்கு....ஆனா பேர் மாறல.....

சகஜமாக எல்லாரும் பழகுவினம்....முந்திய மாதிரி ஆண்டான் அடிமைத் தன்மையள் இல்ல..... ஆனா....

கல்யாணம் எண்டு வரேக்கயும்
காதலெண்டு வந்து சேரநினைக்கும் போதிலயும்

அப்பட்டமாக அது வெளிப்படும்....

வீட்டுக்கு வந்தா சமைச்சு ஒண்டா இருந்து சாப்பிடுவினம்...எல்லாம் செய்வினம்.....பாத்தா சாதிகள் ஒழிந்த மாதிரித்தான் இருக்கும்...... ஆனா ஆக்கள் வீட்ட விட்டு வெளில போன பிறகு தான் சாதியென்ன சமயமென்ன எண்டு கதையள் வெளிக்கிடும்....

இத அற்புதமா நித்யாக்கா சொல்லியிருக்கிறாங்கோ..... என்னங்கோ அக்கா நீங்கள் காதல் கவிதை எழுதிட்டீங்களா????
Reply
#54
திருமணம் காதல் இவை தான் முக்கியமாக சாதிகள் பார்க்கும் இடம் என்றால். இப்ப கூடுதலாக திருமணம் முடிக்கிற இளைஞர்கள். சாதி பார்ப்பதில்லை மனசிற்கு பிடித்திருந்தால் பெற்றோர்கள் சம்மதம் இன்றியே சேர்கிறார்கள் எதிர்த்து திருமணம் செய்கிறார்கள். ஆக மொத்தம். எங்கள் எங்கள் மனங்களில் மாற்றங்கள் வரவேண்டுமே தவிர பழைய பல்லவிகளைப்பாடிக்கொண்டிருந்தால் அப்படியே தான் இருப்பார்கள்.

தொழில் ரீதியாக பிரித்துப்பேசப்பட்டவர்கள். முன்னேறி நல்ல நல்ல தொழில்களில் வந்த பின்னரும் ஏன் பழைய முத்திரைகள் பாவிக்கப்படவேண்டும் ஏன் புதுப்பிக்கபடவேண்டும் என்றது தான் கேள்வியே. இன்று விவசாயத்தையே செய்வதற்கு எங்கள் கிராமங்களில் பின்நிக்கிறார்கள். எத்தனைபேர் சலவைத்தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிச்செய்தாலும் தான் அதை வைத்து தாழ்த்தவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. உடுப்புகளை நீங்கள் துவைப்பதில்லையா? இல்லை கழிவறைகளை நீங்கள் சுத்தம் செய்வதில்லையா?? இதில் எதற்கு பேதம் இதை வைத்து எதற்கு பிரிவினைள். இப்படியான பேதங்கள் அறியாமையால் முன்னைய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது அறியாமையில் இருப்பவர்கள் தான் இன்னும் சாதி பாகுபாட்டை வைத்திருக்கிறார்கள் என்று தான் எண்ணததோன்று கிறது.

அவரவருக்கு தேவைகள் இருந்தால் சாதி சம்பிரதாயம் எல்லாம் பாக்காயினம். என்னவும் செய்வினம். தேவைகள் அற்ற நிலையில் தான் விதண்டாவாதம்.

ஊரியல குறைஞ்சிருக்கு இங்க இல்லாமல் போயிருக்கு பெயர்கள் மாறவில்லை என்று கூறிக்கொண்டிருந்தால் ஆகுமா?? இப்படியான பேதங்கள் களையபபட ஒவ்வொருவரும் முயற்சிசெய்யக்கூடாதா?? பெயரை பாவிச்சுக்கொண்டு அழியவில்லை என்றால் எப்படி அழியும்?? இவை அழியாமல் இருந்து சாதிக்கப்போவது எதுவும் இல்லை மனிதத்தை தான் அழிக்கும். இன்னாருடன் நாங்கள் சேரோம் இன்னாருடன் நாங்கள் பழகோம் என்று இருந்தவை எத்தனை பேர் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் மரங்களின் கீழும் ஒன்றாய் படுத்து ஒன்றாய் உறங்கி ஒரு குழாயில் தண்ணிபிடிச்சு. ஒன்றாய் உயிரைக்காக்க பாடுபட்டோம். ஆபத்து அல்லது அவலாம் என்று வரும் போது கண்ணுக்கு புலப்படாதவை மற்ற நேரங்களில் எதற்காக வெளிவரவேண்டும்? மறைந்து கொண்டு அல்லது அழிந்து கொண்டு போவதை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுவது ஏன் என்பது தான் தெரியவில்லை. நித்தியா கூட காதல்கவிதை எழுதி எழுதி வேறு பக்கமாக தன் பார்வையைத்திருப்பிறாங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
கோயில்களில் சாதியம் அழிந்து அநுமதிக்கப்பட்டிருக்கிறது எல்லாரையும் உள்ளே அநுமதித்திருக்கிறார்கள் என்ற கூற்றை தமிழினி அவர்கள் கூறினார்

நிர்பந்தத்தின்படியேலய அவர்கள் உள் அநுமதித்தார்களின் சாட்சியாக இரண்டாம் மண்டபத்தடியலேய ஒரு பெரிய இரும்பு கேடர் போட்டு இது அங்கால் ஒருதரும் போகேலேது என்று பம்மாத்து விட்டுக்கொண்டு தஙகள் வர்ணாச்சர தர்மத்தை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் பத்திரிகைகளில் புலத்திருந்து கூட மணமக்கள் தேடுபவர்கள் தங்களை சாதியை கூவித்தான் விளம்பரமிடுவதை க்காணலாம்

புலத்தில் தாயகத்தில் தங்களிலுள்ள குணாம்சங்களுடன்தான் வைபவங்களிலும் காட்டி க்கொள்கிறார்கள்

தொழில் சார் சாதிய ஒடுக்குமுறை புலத்தில் இல்லாமல் இருந்தாலும் சாதிய பாகுமாடு இந்த குழு மனபான்மை இருந்தே தீருகிறது

புலத்தில் ஊர் பெயர் சொல்லி மூலைக்கு மூலை கோயில்கள் முளைப்பதின் வெளிப்பாடு அகச்சாதி முரண்பாட்டின் வெளிப்பாடே

லண்டன் வீதிகளில் இளைஞர்களின் குழு கோஸ்டி சண்டைக்குள்ளை சாதியமும் ஒரு கருப்பொருளாக இருப்பதை கம்பியுட்டர் பின் தூங்கி கம்பியுட்டர் முன் எழும்புவர்களுக்கு தெரியாமிலிருப்பது ஆச்சரியபட க்கூடிய விடயமில்லைத்தான்.
Reply
#56
நான் அறிந்தவரை நான் வசித்த பல இடங்களின் நிலவரம். அது கூறினேன். ஒரு குறிப்பட்ட இடத்திற்கு அங்கால் யாரும் சொல்ல முடியாது (கற்பக்கிரகம்) அதற்கு முதல் படியாக முன்மண்டபத்திற்குள் அனுமதிப்பதில்லை வெளிமண்டபத்தில் மட்டும் நிக்கலாம் அப்படி என்ற நிலையிருந்தது. ஆனால் இப்ப அப்படியில்லை என அறிந்தேன். கிணறுகள் கூட முன்பு 2 இருந்தன. ஒரு கிணத்தில் மற்றவர் தண்ணி அள்ளினால் எண்ணை ஊற்றும் தன்மை கொண்ட அறியாமையில் மூழ்கியவர்கள் இருந்த ஊரில் இப்போ அனைவரும் இருகிணறும் பயன்படுத்துகிறார்கள். இப்படி தங்களுக்குள் சாதிய எண்ணங்கள் பூட்டிவைத்துள்ள ஒரு சிலர் இன்னும் தங்கள் வட்டத்தை விட்டு வெளிவர தயாரின்மை தான் பத்திரிகையில் வரும் விளம்பரங்கள் சான்று பகர்கிறது. மொத்தத்தமிழரில் எத்தனை பேர் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறார்கள். இது கூட மருவிக்கொண்டு தான் வருகிறது. விளம்பரம் போடுபவர்கள் வேற்றுக்கிரகவாசிகளா?? நம்மைப்போன்ற மனிதர்கள் தானே? அவர்களது அறியாமை நீங்க சரியாகவரும் எல்லாம்.

புலத்தின் நடைபெறுகின்ற விசேசங்கள் திருமணங்கள் என்பவற்றிற்கு வர்க்க பேதம் பார்ப்பது குறைவு. இங்கு வர்க்க பேதம் பார்க்க என்ன இருக்கிறது. இங்கு வந்தபின்னர் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு வேலையைத்தான் செய்கிறார்கள். மாணவர்களாய் வருபவர்கள் கூட கிடைக்கிற வேலையைச்செய்யத்தயாராகிறார்கள் இங்கு தேவை வயிற்றுப்பிழைப்பே அன்றி வர்க்கம் பேதம் பாத்தால் வாழமுடியாது என்றதை நடைமுறை ரீதியாக அவர்கள் உணர்ந்ததால் தான். அங்கு மேல் வர்க்கம் என்று கருதப்பட்டவர்கள் எல்லாம் சாதாரனமாய் சகலவேலைகளையும் செய்கிறார்கள். இப்படியான நிலை வருவது ஓரு விதத்தில் நல்லது தான். தொழில் செய்ததைக்கொண்டு பேதம் பாக்கையில் பாதிக்கப்பட்டவர்களது வலிகள் புரியும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இலண்டனில் கோவில்கள் பல வருவதற்கு காரணம். நம் மக்களிடம் இருக்கும் ஒற்றுமை இன்மையே காரணம் அன்றி வேறொன்றும் இல்லை. இல்லை வர்க்க வேறுபாட்டை இணையத்திலும் விளாவரியாய் விவரிக்க மக்கள் இருக்கையில் கோவில் குளம் என்று அலைபவர்களது சிந்தனைகள் எப்படி ஒற்றுமையாகும். ஊர்ப்பெயர்களில் கோவில் வருவதற்கு இன்னொரு காரணம். மக்களைக்கவரும் வியாபாரத்தந்திரமே? ஆயிரம் கோவில் வந்தாலும் ஒரு கோவில்திருவிழாவையாவது மக்கள் தவிர்க்கிறார்களா?? போகாது புறக்கணிக்கிறார்களா?? அனைவரும் அனைத்திற்கும் போகிறார்கள். வியாபாரத்தந்திரம் என்றதை சிந்திச்சா ஏன் இந்த நிலை?

லண்டனில் நடக்கிற பிரச்சனை தெரியாமல் லண்டனில தமிழரா?? கணணில கண்முழிச்சா என்ன தூங்கினா என்ன சில பல தேவைகளைத்தீர்க்க வெளியிஉலகோடு நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு. அறிந்ததின்படி சாதி பற்றி சண்டை எழுந்ததை விட. பெண்கள் பிரச்சனையில் தான் இளைஞர்களிடையே மோதல்கள் பற்றித்தான் அறிந்திருக்கிறேன் லண்டனில். அண்மையில் கூட ஒரு மோதல் ஒரு பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்டதாய் அறிந்தேன். போகும் வழி தெரியாது சாதிகளையும் போலிகளை தேடி அலைவதை விட தேவைகளை நிறைவேற்றி கணணியில் தூங்கி கணணியில் எழுவது பறவாய் இல்லைத்தானே? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
தாயகத்தில் சாதி பார்த்த பலரை புலத்தில் அவர் என்ன சாதி என கூறமுடியாதுள்ளது! காரணம்:-

1.முடி திருத்தும் தொழில்காரணமாக சாதிபார்த்தார்கள் இங்கு ஒருவருக்கொருவர் தாங்களே முடிவெட்டிக்கொள்கிறார்கள்.

2.சலவைத்தொழிலாளியை சாதிபார்த்தார்கள் இங்குதாங்களே செய்கிறார்கள் சற்று விபரமாக கூறுவதானால் மகப்பேறு காலத்தில் வைத்தியசாலையில் இருந்து பிள்ளையை தொட்டிலில் போடும்வரை சலவைத்தொழிலாழி வீட்டுக்கு பலதடவை வந்துபோய்விடுவார்கள் இங்கு தாங்களே செய்கிறார்கள்.

3.சிறு சிறு கோயில்கள் கட்டி தாங்களே பூசை செய்தவர்களும் உண்டு!

4.சுத்திகரிப்புதொழலாளியை சாதிபார்த்து தொழில் நிமித்தம் நாளாந்தம் மலசலகூடமும் சுத்தம் செய்கிறார்கள்.

5.பிள்ளைகளுக்கு தாங்களே காதும் குத்துகிறார்கள்.

இப்படி பலதொழிலையும் செய்பவர்களை என்னசாதிசொல்லி அழைப்பது? இவை எப்படி திருமணத்துக்கு சாதிபார்ப்பது?

தொழிலைவைத்து சாதிபார்த்தால் எதிர்காலத்தில் புதுப்புது சாதிகளும் தோன்றுமா?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
!:lol::lol::lol:
Reply
#58
தற்கால வாழ்வுமுறை நிற்பந்தங்களால் புதுச்சாதிகள் தொடக்கிறியளோ இல்லையோ, மடப்பள்ளி வேளாளர் புலத்தில கேப்பை கக்குசு கழுவினாலும் வீட்டில கோற் சூட் போட்டு இந்திய இலங்கையில ஏதாவது காசுகுடுத்து வேண்டின சேட்டிபிக்கற்றை பிறேம்பண்ணி மாட்டிப்போட்டு காலுக்கு மேல கால் போட்டுக் கொண்டு இங்கிலிசு கதைப்பினம்.

சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேண முயற்சிப்பவர்கள் அந்தக் கட்டமைப்பில் உயர்நிலையில் (ஒருவகையில் ஆழும்வர்க்கமாக) இருபவர்கள். எந்த ஒரு ஆழும்வர்கமும் ஒற்றுமையாக ஒட்டுமொத்தமாக பெருந்தன்மையோடு தமது மேலாண்மையை இழக்க முன்வரமாட்டினம்.
Reply
#59
கோப்பை கக்குசு கழுவும் போது ஒருசாதி
கோட்டும் சூட்டும் போட்டால் வேறுசாதியா?

செய்யும் தொழிலை வைத்துத்தானே சாதிசொல்கிறார்கள்! அப்படியில்லையா?
!:lol::lol::lol:
Reply
#60
kurukaalapoovan Wrote:தற்கால வாழ்வுமுறை நிற்பந்தங்களால் புதுச்சாதிகள் தொடக்கிறியளோ இல்லையோ, மடப்பள்ளி <b>வேளாளர்</b> புலத்தில கேப்பை கக்குசு கழுவினாலும் வீட்டில கோற் சூட் போட்டு இந்திய <b>இலங்கையில</b> ஏதாவது காசு குடுத்து வேண்டின சேட்டிபிக்கற்றை பிறேம் பண்ணி மாட்டிப்போட்டு காலுக்கு மேல கால் போட்டுக் கொண்டு இங்கிலிசு கதைப்பினம்.

சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேண முயற்சிப்பவர்கள் அந்தக் கட்டமைப்பில் உயர்நிலையில் (ஒருவகையில் ஆழும்வர்க்கமாக) இருபவர்கள். எந்த ஒரு ஆழும்வர்கமும் ஒற்றுமையாக ஒட்டுமொத்தமாக பெருந்தன்மையோடு தமது மேலாண்மையை இழக்க முன்வரமாட்டினம்.

இலங்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் சேட்டிப்பிக்கற்றை காசுக்கு விக்கிறதா அறியல்ல..! அங்கு உயர்கல்வி கற்பதே முயற்கொம்பு..! புலத்தில் இந்தியாவில் காசுக்கு வாங்கினம்..அது என்னவோ உண்மைதான்..! Idea

மீண்டும்...சாதி உச்சரிப்பும் பழிப்பும் ஏன்...???! இவ்வளவும் சொல்லியும் விளங்கல்லை என்றால்...என்ன அர்த்தம்...! :wink: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)