11-26-2005, 12:52 PM
|
தேசியத்தலைவரை வாழ்த்துங்கள்
|
|
11-26-2005, 01:05 PM
51வது பிறந்ததினத்தை கொண்டாடும் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
11-26-2005, 01:33 PM
<img src='http://img299.imageshack.us/img299/5233/thalaivarrrrrrrrrrrrrrrrrrrrrr.jpg' border='0' alt='user posted image'>
<b>பிரபாகரன் எம் வேதம். தமிழீழம் எம் யாகம். மாவீரர், யாகஆகுதியை, கொழிந்துவிட்டு எரியச்செய்தவர்கள். அந்நெருப்பு உலகம் முழுதும், தமிழர் நெஞ்சில் சுடர் வீசுகிறது. நம் தலைவன் காலத்தில், தமிழீழம் பெறுவது உறுதி, தானைத் தலைவனுக்கு எம் வீரபிறந்ததின வாழ்த்துக்கள்.</b>
.
.
11-26-2005, 02:16 PM
<img src='http://img479.imageshack.us/img479/6775/thaliarbd7vi.jpg' border='0' alt='user posted image'>
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது.
.
11-26-2005, 10:13 PM
<img src='http://img264.imageshack.us/img264/8201/nl2002sx0mz.jpg' border='0' alt='user posted image'>
<b>நிமிர்வு தந்தவனின் அகவை நிறைவில் உவகையுடன்...!</b> <b>-தமிழ்வாணன் (நோர்வே)- </b> பிரபாகரன்..! தமிழ் வானின் கதிரானவன்! தமிழ் வாழ்வின் உயிரானவன்! மூச்சினில் சுமக்கிறான் தமிழின விடுதலை விரைவினில் ஆக்குவான் விடியலின் அறுவடை விடுதலைத் தீயானவன் தமிழரின் தாயானவன் குழந்தை வடிவமே அவன் சிரிப்பு! வுpழிகள்.. பகையெரிக்கும் அனல் நெருப்பு அடிமை விலங்குகள் உடைத்தவன் புதுமைக் காலங்கள் படைத்தவன் சமூக அழுக்குகள் போக்கியவன் பகுத்தறிவின் பாதை உருவாக்கியவன் சாதிச் சாக்கடை கொழுத்தியவன் சரிநிகர் நீதிச் சாதனை நிகழ்த்தியவன் செஞ்சோலையில் சேய்களைத் தாங்குகின்றான் அறிவுச்சோலையில் தாயாகி தாலாட்டுகின்றான் பகைவர் படைகளை ஓட்டியவன் தமிழர் படையின் பலமது நாட்டியவன் வலிமையே வாழ்வென்று காட்டியவன் உலகத்தமிழரை ஓரணி கூட்டியவன் போராற்றல் மட்டுமா கைவரப்பெற்றான் நுண்மதித் திறனில் பேராற்றல் பெற்றான் மானிடம் காக்க மலர்ந்த கதிரவன் தமிழர் இதயம் நிறைந்த உயிரவன் நிமிர்வு தந்தவனின் அகவை நிறைவில் உவகையுடன் உணர்வள்ளி வாழ்த்துவோம்...! -------------------------------------------------------------------------------- நன்றி தமிழ்நாதம் http://www.tamilnaatham.com/poems/others/20051126.htm
[size=18]<b> </b>
[size=18]<b> </b> IRUVIZHI
11-27-2005, 12:27 AM
<img src='http://img464.imageshack.us/img464/306/thalaivarbday5oc.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழத் தேசியத் தலைவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
11-27-2005, 12:05 PM
<b>நெருப்புக்கு நேரியனே</b>
கவிஞர் அறிவுமதி. ஊரார்கள் வலி வாங்கி உள்ளுக்குள் நீ துடித்தாய்! உருமறைத்த புலியாகி உயிருக்குள் நீ சிலிர்த்தாய்! பள்ளிக்குச் செல்லுவதை படிப்படியாய் நீ குறைத்தாய்! பதுங்குதற்கு முடிவெடுத்துப் படங்களையும் நீ மறைத்தாய்! விளையாடும் வயதினிலே விளையாட்டைத் துண்டித்தாய்! வீணர்களின் வெறிச்செயலை வெடிகுண்டால் தண்டித்தாய்! பாராண்ட மன்னர்களை படிப்பகத்தில் சந்தித்தாய்! பழந்தமிழர் புகழ்மீட்க பண்போடு சிந்தித்தாய்! எங்கென்ற ஏக்கத்தில் இளைத்தாளே அன்புத்தாய்! இவனன்றோ பிள்ளையென்று இனித்தாளே ஈழத்தாய்! ஈழத்தின் இருளழிக்க எழுந்து வந்த சூரியனே! ஈனத்தின் கருவழிக்க இடிகிழித்த வீரியனே! கண்ணிமைக்க மறந்துவிட்ட கடுமுழைப்புக் காரியனே! கண்டுசொல்ல கறையில்லா நெருப்புக்கு நேரியனே! இழந்திருந்த வீரத்தை இழுத்து வந்து போட்டவனே! சிதைந்திருந்த தமிழினத்தைச் சேர்த்துவைத்து மூட்டவனே! மரணத்தை மடியேந்தி மாதாவாய்க் கேட்டவனே! மறத்திமிரில் தமிழ்க்குடியின் மானத்தை மீட்டவனே! துளியளவும் நெறிபிறழா தூயமனக் காவலனே! துவண்டதமிழ் துளிர்க்கவென தூக்கிவிடும் ஆவலனே! தான்செய்த சிறுபிழைக்கும் தண்டனைகள் ஏற்றவனே! தாய்மானம் காப்பதற்காய் தன்மானம் நூற்றவனே! எவன் தமிழன் எனக்கேட்ட இறுமாப்பை நீ உடைத்தாய்! இவன்தமிழன் எனும்பெருமை வரலாற்றை நீ படைத்தாய்! இரக்கமற்ற தாயாகி எம்பெண்ணை புலிசெய்தாய்! அடுப்படியின் வரலாற்றை அதனாலே பலிசெய்தாய்! தாயுக்கும் மேலாகத் தாயாகி வந்தவனே! தலைநிமிர்வு ஊக்கத்தைத் தமிழருக்குத் தந்தவனே! உனக்கின்று பிறந்தநாள்! எங்கள்உயிரோடும் நரம்பெங்கும் உணர்வோடம் ஏறிவந்து மூத்ததமிழ்த் தொன்மத்தை மொண்டு மொண்டு ஊற்றி எங்கள்முகம் கழுவிவிட்டவனே! முகவரியும்தந்தவனே! அன்பாண்டு அறிவாண்டு ஆற்றல்மிகு வீரத்தில் படையாண்டு பண்டைய நம்பழுதில்லா இயற்கை தமிழ்ப்பண்பாண்டு பல்லாண்டு பல்லாண்டு பாரிலுள தமிழர்களின் மனமாண்டு வாழ்க வாழ்கவென மகிழ்ச்சியிலே வாழ்த்துகிறோம் மாண்புமிகு எம் தலைவா! வாழ்த்துகிறோம் எம் தலைவா! --------------------------------------------- நன்றி:- தமிழ்நாதம்.
.
. |
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 1 Guest(s)

