sOliyAn Wrote:தற்போது ஜேர்மனியில் கண் வலியும் தும்மலும் பலரை ஆட்கொண்டிருக்கிறது.. இது ஒரு வகை அலர்ஜி என்கிறார்கள்.. இது பூக்களில் இருந்து மகரந்தம் உதிரும் காலகட்டத்திலேயே நிகழ்கிறது.. வருடாவருடம் குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்நோய்க்கு ஆளாகும் இவர்கள்.. மாத்திரைகளை நாடி.. இறுதியில் ஊசி மருந்தின்மூலமாகவே இந்நோயை கட்டுப்பாட்டுள் வைத்திருக்கிறார்கள்.
இததைவிட இன்னுமொரு வழியுண்டு.
[size=15]
(i) அதாவது உங்கள் இரத்தத்தை பரிசோதித்து ,எவையெவை நோயாளிக்கு அலர்ஜி தருகிறது என்று கண்டறிந்து,அவற்றை ஊசி மூலமாக vaccination முறையில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு வாரத்தில் ஒரு முறை இரத்தத்தில் செலுத்தி அலர்ஜி தரும் வகைகளை இரத்தத்துடன் ஒத்துப் போகப் பண்ணுவார்கள். இவற்றைப் பற்றி உங்கள் வைத்தியரிடம் ஆலோசனை பெறலாம்.அவரே உங்களை அலர்ஜி சம்பந்தமான விசேட வைத்தியரிடம் அனுப்புவார்கள்.
(ii)புதிய (German) ஜேர்மனிய மருத்துவ முறையில் பரிசோதித்து ,எவையெவை நோயாளிக்கு அலர்ஜி தருகிறது என்று கண்டறிந்து,அவற்றை ஒரு மெசின் மூலமாக - & + எனும் மெக்னட் தெரப்பியாக செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.
இவ் முறைகள் சுவிசில் நடைமுறையில் உள்ளது.
இது தவிர இந்தியாவில் ஆயுர்வேத முறைகளில் அலர்ஜிகள் குணமாக்கப்பட்டு வருகின்றன
பழைய வித சிகிச்சையாக தற்போதும்:-
1.மாத்திரைகள் எடுக்கிறார்கள்.
2.ஹைட்ரோகோடிசோன் எனும் ஊசி போடுகிறர்கள்.ஹைட்ரோகோடிசோன் போடும் போது
ஒரு மாதம் அளவுக்கு அலர்ஜி வராமல் தவிர்க்கப் படுகிறது.
ஆனால் இவை முழு நிவாரணமல்ல.இது தவிர ஊசி போடுவதால் பக்க விளைவுகள் (side effects) வர வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
எனவே பக்க விளைவற்ற:-
புதிதாக German மருத்துவ முறையில் பரிசோதித்து ,எவையெவை நோயாளிக்கு அலர்ஜி தருகிறது என்று கண்டறிந்து,அவற்றை ஒரு மெசின் மூலமாக - & + எனும் மெக்னட் தெரப்பியை...........
அல்லது
உங்கள் இரத்தத்தை பரிசோதித்து ,எவையெவை நோயாளிக்கு அலர்ஜி தருகிறது என்று கண்டறிந்து,அவற்றை ஊசி மூலமாக vaccination செய்து கொள்வது...............
அல்லது
ஆயுர்வேத முறைகளில் அலர்ஜிகள் குணமாக்கப்பட்டு வருவதை சிறந்ததெனக் குறிப்பிடுகிறார்கள்.
இது பற்றிய விபரங்களை உங்கள் குடும்ப மருத்துவரோடு பேசி முடிவெடுங்கள்............
AJeevan