Yarl Forum
நாரி நோ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: நாரி நோ? (/showthread.php?tid=8374)

Pages: 1 2


நாரி நோ? - sethu - 06-17-2003

நாரி நோ ஏன் வருகிறது? அதற்கு என்ன மருத்துவம் தேவை என தருவீர்களா?


- sennpagam - 06-17-2003

நளாயினி அக்கா எழுதின கட்டுரையில் இப்பிடி இருக்குது

இன்ரநெற் அரட்டை உலகத்துள் பெரும்பாலும் 16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் இளைஜிகள் ராச்சியம் தான்.படு குசியாக சம்பாசிக்கிறார்கள்.இதற்குள் போனவர்கள் யாரும் மீண்டதாக இல்லை.........

அரட்டை உலகத்தினால் சில நன்மைகளும் உள்ளது போல் தெரிகிறது...........

நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. .
..................
11 முதுகு ,நாரி நோ ஏற்படுகிறது,கண்மிகவும் நோகிறது.

http://www.sooriyan.com/articles/0001.asp


- sennpagam - 06-17-2003

உப்பிடிக் கன காரணங்கள் இருக்கும்.

கொம்பியூட்டருக்கு முன்னாலை இருக்கிற பொழுது வளையாமல் நெளியாமல் சரியா நேரா இருந்து பாருங்கோ.


- Paranee - 06-17-2003

எனக்கும் இந்த வருத்தம் இருக்கின்றது. ஓரேயடியாக கதிரையில் இருப்பதால் இந்த வருத்தம் ஏற்படுகின்றது என்று கூறினார்கள். அதற்கு தினமும் 1 மணித்தியாலம் நடக்கும்படி சொன்னார்கள்.
சொன்னதுதான் சொன்னார்கள். பின்பு ஓரு இன்ஜெக்ஜன் எடுத்து ஒரு அடி. அப்பாடா இன்றுவரை அந்த இன்ஜெக்ஜன் போட்ட வேதனை மாறவில்லை.


- sethu - 06-17-2003

வேறு சித்தமருத்துவமுறை இருக்கின்றதா?


- sethu - 06-17-2003

நாரிநோ நித்திரையில் இருக்கும்போதும் ஏற்படுமா? உடற்பயிற்ச்சி செய்தால் தீருமா?


- sOliyAn - 06-17-2003

ஜேர்மனியில் எம்மவர்களில் பலருக்கு நாரி நோ அல்லது முதுகுவலிதான்.. முள்ளந்தண்டு பாதிப்படைவதால் ஏற்படும் இவ்வியாதியால்.. நடக்கமுடியாத நிலைக்குச் சென்ற ஓரிருவரையும் நேரடியாகச் சந்தித்துள்ளேன்.. எதற்கும் உயரத்திற்கேற்ற எடையைப் பேணுங்கள்.. முகத்தைப் பார்த்தால் 'தொந்தி" இருக்கும் போலிருக்கிறதே.. அதை இல்லாமல் செய்தால் ஓரளவு தப்பலாம்.. நான்கூட இம்முயற்சியில்.. :wink:


- kuruvikal - 06-17-2003

அதென்ன நாரி.....இடுப்புப் பகுதிதானோ...அங்கு நோ ஏற்பட மருத்துவரீதியில் பல காரணங்கள் உண்டு... பால் வேறுபாட்டிற்கிணங்க காரணங்களும் வேறுபடும்...அத்துடன் இடுப்பு நோ பல முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறி மட்டுமன்றி சிறுநீரகம் நேர்குடல் இப்ப்படியான பல உடலின் கீழ் பாதி அங்கங்களில் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் அறி குறி...அதே வேளை சாதாரண தசைக்களைப்பும் இடுப்பு நோவைத்தரும்.....எனவே நாரிப்பிடிப்பென்று கவலையீனமாகவிருக்காமல் தகுந்த மருத்துவப் பரிசோதனைகள் செய்வதும் மருத்துவ உதவியை நாடுவதூம் நோயற்ற வாழ்வுக்கு உறுதுணையாக அமையும்.....!


- sethu - 06-18-2003

குருவியின் ஆலோசனை சிறந்ததாக தெரிகிறது. அதுக்கும் ஆண்களின் விதை நோக்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா? இல்லை என்றால் விதைப்பகுதி எனது நண்பர் இடைக்கிடை நோகுவதாக தெரிவிக்கின்றார் காரணம் என்ன? அதுமட்டுமல்ல திடீரென வண்டி வைப்பதேன்? இதுமட்டுமல்ல கால் குதிப்பகுதி நோவது ஏன் என இன்னொரு நண்பன் கேட்கின்றான்?


- kuruvikal - 06-18-2003

நல்லது சேது அவர்களே...உங்கள் நண்பரை ஒரு பொது மருத்துவரிடம் கூட்டிச் செல்வது நலம்....ஏனெனில் அப்படியான நோக்களிற்கு நுண்ணுயிரித் தொற்றுகளும் காரணமாக விருக்கலாம்....உதாரணமாக...கூகைக் கட்டுக் கண்டவர்களூக்கு இப்படியான பாதிப்புக்கள் வரும்....இப்படிப் பல நோய்க்கிருமிகளின் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புண்டு....எனினும் பாலுறுப்புகள் சம்பந்தப்பட்ட மட்டில் ஆண்களுக்கான நோய் தொற்று வீதம் அவர்கள் பொது சுகாதாரத்தை கடைப்பிடித்து வந்தால் குறைவு!
விபத்துக்களின் போது ஏற்படும் உட் காயங்களும் நோ ஏற்பட வாய்ப்பு அளிக்கும் எனவே நல்ல மருத்துவ ஆளோசனை பெறுவதே சிறந்தவழி...இல்லையேல் மலட்டுத்தன்மைக்கும் வழி வகுக்கலாம்!

மேலும் தொப்பை (வயிறு வைத்தலுக்கு) மேலதிக சக்தி கொழுப்பாக சேமிக்கபடுதல் முக்கிய காரணம்....பியர் கள்ளு போன்ற மதுபான வகைகள் அருந்துவபவர்கள் விரைவில் தொப்பை பெறுவர் ஏனெனில் மலிவான வகை பியர்களில் அதிகம் சீனிச்சத்துக்கு ஒத்த பொருள் இருப்பதால் வண்டி வைக்கும் அத்துடன் ஒரு நாளைக்கு தேவையான கலோரியைவிட மிக அதிக அளவில் உணவு உண்பவர்களுக்கு மேலதிக சக்தி கொழுப்பாக சேமிக்கப்படுவதால் வண்டி வைக்கும் உடல் பருக்கும்!

எனவே அளவோடு உண்டு தேவையற்ற குடிப்பழக்கத்தை தவிர்த்து கிரமமான உடற் பயிற்சியும் செய்து வந்தால் தொப்பை போடுவதை தவிர்க்கலாம்!


- sethu - 06-18-2003

நண்றி குருவி தங்கள் ஆலோசனை நண்பனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நான் ஒரு பாரிய விபத்தில் உயிர்தப்பினேன் அதன்போது என்னுடன் இருந்தவர்கள் இறந்து போனார்கள். நான் காயத்தில் தப்பினேன் ஆனால் தற்போது தலை நோ ஏற்படுகின்றது காரணம் ஏன் என்று சொல்லமுடியுமா?


- kuruvikal - 06-18-2003

சேது அவர்களே..நீங்கள் குறிப்பிட்டதன் பிரகாரம் விபத்துப் பயங்கரமானதாகவே இருந்துள்ளது! உங்களுக்கு தலையில் அடிபட்டதோ இல்லையோ தெரியாது ஆனால் தலையில் கடும் அதிர்வுகள் ஏற்படும் போது மூளையில் உள்ள குருதிக்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டு அவை மூளையில் நாட் பிந்திய தாக்கங்களை காண்பிக்க வாய்ப்பிருப்பதால்..... உங்கள் விபத்தின் தன்மை கருதி சொல்வதானால் ..... நீங்கள் மருத்துவரின் உதவியை நாடிப் தலையை ஸ்கான் செய்து உங்கள் அசாதாரண அறிகுறிக்கான காரணத்தைக் கண்டறிவதே சாலச் சிறத்து அத்துடன் விரைந்து அதைச் செய்யுங்கள்!


- sethu - 06-18-2003

ஆம் விபத்து பயங்கரமானது. ஜரோப்பிய ஆசிய ஊடகங்கள் மட்டத்தில் பரவிய விடயம். மற்றது வெளிக்காயங்கள் ஏற்படாமல் தப்பியவன் நான் மட்டுந்தான் என்பது அதிசயம். சம்பவத்தை அடுத்து பல உடல்கள் நிலத்தில் கிடந்ததை உணர்ந்தேன் ஆனால் அது நானா நண்பனா என அறிய 3 மணித்தியாலம் சென்றது. சிறிது நேரத்தில் தலைசுற்றி மூக்கால் கறுப்பு நிற இரத்தம் பாய்ந்தவண்ணம் இருந்தது அதனைத்தொடர்ந்த இஸ்தலத்திற்கு முதலுதவி பிரிவு வந்து எம்மை மருத்துவமனைக்கு சேர்த்தது. இதன்போது ஏற்பட்ட உள்நோவின் தாக்கமாகவே இவற்றை கருதுகிறேன். உங்கள் பதில் என்ன ?


- kuruvikal - 06-19-2003

இருக்கலாம்...உடனடிக் கவனம் எடுத்துச் செயற்படவும்!
வருமுன் காப்பதே நோய்களிலிருந்து காப்புப் பெற சிறந்த வழி!


- sethu - 06-19-2003

நன்றி முயற்சிக்கிறேன்


- sethu - 06-21-2003

மருத்துவர் ஒப்பரேசன் செய்யவேண்டும் என்கிறார் இது உகந்ததா குருவி?


- kuruvikal - 06-21-2003

அவசியம் அவசரமும்கூட...களத்தைப் பார்க்கவே தெரியுது...விட்டா முத்தியிடும்...பிறகு மாத்திரது கஸ்டம்!


- sethu - 06-21-2003

நீங்கள் என்னை முடிக்கிற பிளானோ?


- kuruvikal - 06-21-2003

நல்லதுக்கு காலமில்லை.....என்னவோ செய்யுங்கோ..?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- sethu - 06-21-2003

குருவியரே முள்ளந்தண்டில் ஒப்பரேசன் பண்ணினவை காலம்முழுக்க அழுத வரலாறுதான் இருக்கு