Posts: 5
Threads: 0
Joined: Sep 2003
Reputation:
0
இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் வேந்தன், இவர் தற்போது இந்தியாவில்
படம் நடித்து வருகிறார். இவரும் மாற்றில் நடித்திருக்கிறர்.
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
வணக்கம் நண்பர்களே. இந்த படத்தை தயாரித்த ஒருவரில் நானும் ஒருவன் என்றவகையில் நமது படம் பற்றிய சல தகவல்களை தருகிறேன்.இந்த படத்திற்கு இசையமைத்தவர்கள் இருவர் ஒருவர் வேந்தன் மற்றவர் நோர்வே முரளி, அத்துட்ன இர்பான் என்பவரும் இவர்களுக்கு இசை விடயத்தில் முக்கிய உதவிகளை செய்துள்ளார். இசை ஒரு கூட்டு முயற்சியாகவே உள்ளது. இத்திரைப்படம் வெகுவிரைவில் ஐரோப்பா எங்கும் திரையிட உள்ளோம்இ லண்டனில் நவம்பர் 14, 15, 16 திகதிகளில் மீண்டும் திரையிட உள்ளோம். இரண்டு வருடம் நாம் பலத்த இடர்கள் மத்தியிலேயே இந்த திரைப்படத்தை முடித்தோம். நாம் இத்திரைப்படம் மூலம் கற்ற பல விடயகளை கற்றோம். ஜனவரியல் நமது அடுத்த படிப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம்.
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
மாற்று திரைப்படத்தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு முதற்கண் வாழத்துக்கள்.உங்கள் பணிகளைத் தயங்காது தொடர்ந்து செல்லுங்கள்.தயாரிப்பாளர் சண் அவர்களிற்கு பிரத்யேகமான வாழ்த்துக்கள்.
மற்றும் இசையமைப்பாளர் பற்றியதொரு கேள்வி வந்தவிடத்தில் படத்தினை பார்த்த காந்தன் அவர்கள் ஒரு பார்வையாளராக :
Quote:இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் வேந்தன், இவர் தற்போது இந்தியாவில்
என்று கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சண் அவர்கள் :
Quote:இந்த படத்திற்கு இசையமைத்தவர்கள் இருவர் ஒருவர் வேந்தன் மற்றவர் நோர்வே முரளி, அத்துட்ன இர்பான் என்பவரும் இவர்களுக்கு இசை விடயத்தில் முக்கிய உதவிகளை செய்துள்ளார். இசை ஒரு கூட்டு முயற்சியாகவே உள்ளது.
<b>என்று எழுதியிருக்கிறார்.உண்மையில் பாராட்டத்தக்கவொரு விடயம்.ஆனால் வேந்தன் மற்றும் முரளி ஆகியோருடைய பெயர்கள் உங்களது அனைத்து விளம்பரங்களிலும் காணப்பட்டாலும் முக்கிய இசையுதவி செய்ததாக நீங்கள் கூறுபவரைப்பற்றியோ அல்லது அவரது பெயரையோ எந்த இடத்திலும் வெளிக்கொண்டுவர இல்லையே ஏன் என்ன காரணம்?</b>
உங்கள் யாரையும் குறை கூறுவதற்காக அல்ல இசையமைப்பாளர் இர்பானுடன் எனக்குத் தொடர்பு உள்ளது.இங்கே களத்தில் இதனைப் பார்த்த பின்னர் அவரைத் தொடர்பு கொண்டு சில விடயங்களைக் கேட்டேன்.பின்னர் தங்களிடமும் (தயாரிப்பாளர்) கேட்கலாம் என்று யோசித்தேன்.
இசையமைப்பு என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு விடயம்.அது மட்டுமன்றி அதற்காக எவ்வளேவோ காலங்களை நேரங்களை செலவழிக்க வேண்டியும் வரும்.
உயிர் நாடியான இசையில்லாமல் ஒரு திரைப்படம் நகர்வதென்பது காலத்தால் சாத்தியமில்லாத விடயம்.அந்த வகையில் நல்ல இசைவடிவினை கூட்டு முயற்சியில் கொண்டுவந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
விழம்பரங்களில் அனைவரினதும் பெயரை போடுவதில் சிக்கல் இருந்ததால் அவர் பெயரை மட்டுமல் பலரின் பெயரை போட முடியவில்லை. அதி கூடய முக்கிய பங்களிப்பை செய்தவர்களின் பெயரை மட்டுமே விளம்பரங்களில் பாவித்தாலும் திரைப்படத்தில் அவர்கள் அனைவரினது பெயரையும் நாம் போடத் தவறவில்லை.
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
விளம்பரங்களில் அனைவரினதும் பெயரை போடுவதில் சிக்கல் இருந்ததால் அவரின் பெயரை மட்டுமல்ல முக்கிய பங்குவகித்த பலரின் பெயரை போட முடியவில்லை. அதி கூடய முக்கிய பங்களிப்பை செய்தவர்களின் பெயரை மட்டுமே விளம்பரங்களில் பாவித்தாலும் திரைப்படத்தில் அவர்கள் அனைவரினது பெயரையும் நாம் போடத் தவறவில்லை.
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி திருவாளர் சண்,
அப்படியானால் திரப்படத்தில் அனைவரைது பெயர்களையும் இணைத்துள்ளீர்களா?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
உதவிகள் அனைத்தையும் செய்த அனைவரினது பெயரும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கூட்டு முயற்சி ஈழம் நண்பர்கள் என்ற பெயரிலே பெயர் குறிப்பிட விரும்பாத பல நண்பர்கள் நமக்கு உதவிபுரிந்துள்ளனர். இந்த படம் ஈழம் நண்பர்களின் முதல் தயாரிப்பு. யாருடையபெயராவது விடுபட்டிருப்பின் நாம் சரி செய்ய நிச்சயம் தயங்கமாட்டோம். நன்றி!
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
உங்கள் நல்ல மனதுக்குப் பாராட்டுக்கள்.
மூவரின் இசையும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா?எவ்வாறு பகிர்ந்தளித்துள்ளீர்கள்?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
சங்கடமான கேள்வியொன்றைக் கேட்டு விட்டேனோ என்று நினைக்கத் தோன்றுகிறது.நேற்றிலிருந்து இன்று வரை பலதடவை களப்பக்கம் வந்து சென்றவர்கள் பதிலளிக்கத் தயங்கியதன் காரணம் புரியவில்லை :!:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
நிச்சயமாக காரணம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தவர்கள் பலர். தனிப்பட்ட முறையில் பங்களிப்பை பிரித்து கூறுவதை தவிர்த்து இதை ஈழம் நண்பர்களின் ஒரு கூட்டு முயற்சியாக நாம் பார்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். நாம் நினைக்கிறோம்.
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
Quote:மூவரின் இசையும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா?எவ்வாறு பகிர்ந்தளித்துள்ளீர்கள்?
Quote:சங்கடமான கேள்வியொன்றைக் கேட்டு விட்டேனோ என்று நினைக்கத் தோன்றுகிறது
கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில் போலத் தெரிகின்றதே?
[quote]
நிச்சயமாக காரணம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தவர்கள் பலர். தனிப்பட்ட முறையில் பங்களிப்பை பிரித்து கூறுவதை தவிர்த்து இதை ஈழம் நண்பர்களின் ஒரு கூட்டு முயற்சியாக நாம் பார்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். நாம் நினைக்கிறோம்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
ஒரு மனிதன் தானாக விரும்பி செய்தால் அதற்குப்பெயர் உதவி.இது பலன் எதிர்பார்க்காமல் தானாக விரும்பி செய்வதாகவும் இருக்க வேண்டும்.
தொழிலாக செய்பவர்களிடம் உழைப்பைப்வைப்பதற்குப் பெயர் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.
அதற்கும் மேலாக ஒரு உழைப்பாளிக்குத் தெரியாமலே அவனது பிரசவத்தைக் கொண்டு தங்களுக்கு மகுடம் சூடிக்கொள்பவர்களுக்கு என்ன பெயர் என்றும் எனக்குத் தெரியவில்லை.
இது தயாரிப்பாளருக்கு ? நன்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
ஒரு தரப்பு நியாயங்களை மட்டும் வைத்துக்கொண்டு எம்மை வெறுமனே சாடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இந்த முயற்சி ஆரம்பிக்கும் போது அனைவரும் முதல் முயற்சி என்பதால் ஊதியம் பெறாமல் வேலை செய்ய ஒத்துக்கொண்டே இதில் பங்கு பற்றினர். நீங்கள் குறிப்பிடுபவரும் அப்படியே. ஆனால் இந்த குழுவில் உள்ள ஒருவருடன் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து தனது பங்களிப்பை அதில் இருந்து எடுக்கும் படி கூறினார். முழுவெலைகளும் முடியும் தறுவாயில் இருந்தும் கூட அவர் வேண்டுகோழுக்கிணங்கி அவரின் வேலைகள் அனைத்தும் நீக்கப்பட்டது. ஆனாலம் அவர் இந்த முய்ற்சியில் பங்குகொண்டவர் என்ற ஓரே காரணத்திற்காக அவரின் பெயர் டைட்டிலில் சேர்க்கப்பட்டமு; உள்ளது. யாருடைய உழைப்பையும் சுரண்டும் நோக்கம் நமக்கு இல்ரலை. சம்பந்த பட்டவரிடம் நாம் பல தடவைகள் கெஞ்சி மண்டடினோம் தயவு செய்து இந்த கூட்டு முயற்சிக்கு ஒத்துளைக்கும் படி, அனால' தனது தனிப்பட்ட பெயர் மட்டுமம வரவேண்டும் இல்லாது போயின் அனைத்தையும் அகற்றும் படி கூறியதை அடுத்து கிட்டத்தட்ட 5 இரவுகள் கண்விழித்து வேலைசெய்தவரல்களுக்குதான் உழைப்பின் அருமை தெரியும். இந்த படம் ஒரு கூட்டு முயற்சி தனிப்பட்ட முறையில் யாரும் மகுடம் ஏற்றவில்லை. இந்த திரைப்படம் ஈழம் நண்பர்களின் கூட்டு முயற்சியே! கூட்டு மயற்சிக்கு அர்தம் தெரியாவிடன் தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளவும்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
அன்பு சண்,
1.மாற்று திரைப்படம் கூட்டு முயற்சி என்கிறீர்கள்.எனக்கு அதன் (கூட்டு முயற்சி) பிரச்சனைகள் மற்றும் தாக்கங்களைப் பற்றித் தெரியும்.இருந்தாலும் உங்கள் திரைப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன் இது பற்றி ஏதாவது டாக்யுமன்றில் கையெழுத்திட்டுள்ளீர்களா?
2.அப்படியும் இல்லாது போனால் இந்த 3 இசைக் கலைஞர்களும் இசையமைப்பாளர்களாக இணைந்து வேலை செய்தார்களா?
3.அல்லது (தனிப்பட) குறிப்பிட்ட சில பகுதிகளை வெவ்வேறு இசையமைப்பாளர்கள் வெவ்வேறாக இசையமைத்தார்களா?
4.அல்லது வேறு எந்த விதத்தில் அவர்களது இசை சேர்க்கப் பட்டுள்ளது?
5.இது பற்றிய விபரங்களை அவர்களுக்கு தெரிவித்து அவர்களது ஒப்புதலோடு இதைச் செய்தீர்களா? அல்லது உங்கள் விருப்பப்படி அவர்களது இசையை படத்தில் சேர்த்துக் கொண்டீர்களா?
எனக்கே குழப்பமாக விளங்க மறுக்கிறது.பதில் எழுதுங்கள்?
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
சில உண்மைகள் வெளிவரும் போது சாடல்கள் வருவது நியாயம்.ஆனால் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் எழுதப்படும் போது...
Quote:முதல் முயற்சி என்பதால் ஊதியம் பெறாமல் வேலை செய்ய ஒத்துக்கொண்டே இதில் பங்கு பற்றினர். நீங்கள் குறிப்பிடுபவரும் அப்படியே.
அதாவது நீங்கள் எழுதியுள்ளவை முற்று முழுதான சாடல்களாகவும் உண்மைக்குப் புறம்பானதாகவும் அமைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
அந்த வகையில் மாற்று எனும் திரைப்படத்திற்கு தான் இசையமைக்க அழைக்கப்பட்டது முதல் இறுதியில் நீங்கள் ? (வாசுதேவன்) நான்கு நாட்களுக்கு முன்னர் அவரோடு உரையாடியது வரை அனைத்தையும் நான் கேட்டறிந்தேன்.
தவிரவும் திடீரென இதுவரை காலமும் தள்ளிப்போயிருந்த முரளி அவர்கள் பணியை முடித்ததாகக்கூறுவது நம்பமுடியாதது.வேந்தனின் நிலை ஓரளவு ஒத்துப்போனதாக இருக்கலாம்.இருந்தாலும் வெறும் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் நீங்கள் காரியத்தை முடித்தது என்று கூறுவது சோடிக்கப்பட்ட ஒன்றாகவே எனக்குப் பபடுகிறது.
அப்படியானால் அஜீவன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகம் மற்றும் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெளிவாக வந்தமையும் படி அனைத்து விடயங்களையும் இங்கு தருவதுதான் நியாயம் என்று நினைக்கின்றேன்..இருந்தாலும் மேலதிக ஆதாரங்களுக்காக அவரையும் தொடர்பு கொண்டு கேட்டுவிட்டு மீண்டும் எழுதுகிறேன்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
குறும்படமென்ற தலைப்பின் கீழ் தனிப்பட்ட சாடல்கள் இடம் பெறுவது நல்லதாக எமக்குப்படவில்லை.
ஆனாலும் பொதுவேலைத்திட்டம் சம்பந்தமான விடயமானதாலும். அதனுடன் சம்பந்தப்பட்டவரும் இங்கு வருகை தந்து தனது பக்க நியாயத்தை கூறக்கூடிய நிலையில் இருப்தாலும்.
கருத்துக்கள் தொடர்ந்து எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.
அதே வேளை வீரா அவர்கள் பெயர்களை பயன்படுத்தும் பொழுது நிதானமான செயற்படவும்.
வீணான சேறு புூசல்களில் உங்கள் கருத்தை முன்வைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
சம்பந்தபட்டவர்கள் தமது பெயரை பாவிப்பது சம்பந்தமாக ஆட்சேபனை தெரிவிக்கலாம். எனவே பெயரை முழுமையாக எழுதுவதை தவிர்க்கவும்.
அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் நாம் அவர்கள் பெயர்களை அழித்துவிடுவோம்.
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி இளங்கோ.
நீங்களும் அவசரப்பட்டு ஒருபக்க முடிவிற்குள் செல்ல மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.தவிரவும் இதை இத்தோடு விட்டுவிடக் கூட எனக்கு எந்த ஆட்பேனையும் இல்லை.
மேலும் நான் ஒரே ஒரு இடத்தில் பெயரை எழுதியுள்ளேன்.அது நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் சம்பந்தப்பட்டவொரு விடயம் (அவர் இங்கு கருத்தெழுதுபவரும் கூட) எனவே அதை நீங்கள் நான் எல்லை கடந்ததாக நினைத்தால் எடுத்துவிடலாம்.
எனினும் எப்பொழுதுமே நான் நிதானமாகத்தான் இதுவரை கேள்விகளை முன்வைத்தேன்.இதில் உங்களுக்கோ களத்தின் மற்ற உறுப்பினர்களுக்கோ ஆட்சேபனை இருந்தால் சுட்டிக்காட்டலாம்.ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்னிடம் நிறைய உள்ளது.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>