Yarl Forum
மாற்று - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: மாற்று (/showthread.php?tid=8373)

Pages: 1 2 3 4


மாற்று - sethu - 06-17-2003

மாற்று என்ற பதிய குறும்படம் ஒன்று மிகவிரைவில் வர இருப்பதாக அறிகின்றேன். ஈழத்தமிழர்களின் புதிய படைப்பாம் தகவல் தெரிந்தவர்கள் அறியத் தரவும்


- Manithaasan - 06-20-2003

மாற்று இலண்டனில் தயாராகி நிறைவடைந்துள்ளதாம். இதன் இயக்குநர் புதியவன.பாடல் ஆடல் சண்டைக்காட்சிகளுடன் அமைந்த ;விளம்பரத்தை பாரிசில் நடைபெற்ற குறும்பட விழாவில் திரையிட்டார்கள்இதுபற்றி பழைய களத்திலும் எழுதி .சேது அதற்கு பதில்களும் எழுதியது நினைவிலிருக்கிறது..


- sethu - 06-20-2003

ஆம் அது நிறைவடைந்துள்ளதா அறிகிறேன். ஆனால் ஆனால்


- Guest - 06-20-2003

என்ன ஆனால்?


- sethu - 06-21-2003

விளம்பரம் போற இடம் அப்பாடா கனவிலை வேதாளம் மருக்கமரத்தை பாத்த மாதிரி........................


- Ilango - 06-21-2003

மற்ற களங்கள் போலல்லாது
இங்கு நெகிழ்சி போக்கு காண்பிக்கப்படமாட்டாது.
விடியோ துறை தவிர்ந்த விடயங்கள் எழுதப்படும் பட்சத்தில் அந்தக்கருத்து இங்கிருந்து நீக்கப்பட்டு சம்பந்தபட்டவரின் அஞ்சல் பெட்டிக்கு அனுப்பபடும்.
அவர் மீண்டும் சரியான தலையங்கத்துக்கு அதை கொண்டு சென்று எழுதிக்கொள்ளலாம்


- Ilango - 06-21-2003

பல குறும்படவிற்பனர்களை நாம் இணைத்து கொண்டு வருகிறோம். மிகவிரைவில் அவர்ளுடன் உங்கள் கருத்தாடல்களை செய்யலாம்.


- sethu - 06-21-2003

மாற்றுபடத்தின் இசையமைப்பாளர் இர்பான் இங்கு கருத்தாடவந்தால் நண்றாக இருக்கும் என்பது எனது கருத்து. இர்பான் என்ன சொல்லுறியள்?


- Guest - 06-21-2003

படத்தின் இசையமைப்பாளரின் இசை வேறெங்கும் இணையத்தில் கேட்க கிடைக்குமா?


- sethu - 06-22-2003

அவர் வானொலி ஒண்றில் வேலை செய்கிறார்


- Manithaasan - 06-24-2003

<!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin-->மற்ற களங்கள் போலல்லாது  
இங்கு நெகிழ்சி போக்கு காண்பிக்கப்படமாட்டாது.  
விடியோ துறை தவிர்ந்த விடயங்கள் எழுதப்படும் பட்சத்தில் அந்தக்கருத்து இங்கிருந்து நீக்கப்பட்டு சம்பந்தபட்டவரின் அஞ்சல் பெட்டிக்கு அனுப்பபடும்.
அவர் மீண்டும் சரியான தலையங்கத்துக்கு அதை கொண்டு சென்று எழுதிக்கொள்ளலாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இங்கு நெகிழ்ச்சிப் போக்கு இலலையென்பதைப்போலவே களத்தின் ஏனைய பக்கங்களிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்


- sethu - 06-24-2003

மாற்றுப்பட தயாரிப்பாளர் வாசுதெவன் அல்லது கண்ணன் என அழைக்கப்படும் கணனி பொறியியலாளன் இந்த இனையத்தில் மாற்றத்தொடர்பான கருத்துக்களை தந்தால் நண்றாக இருக்கும்.


- sethu - 06-28-2003

மாற்றை இப்பவெ மாற்றுகருத்தெண்டு எலாரும் களிச்சு விட்டுட்டினமோ?


- Manithaasan - 06-28-2003

படம் வெளியிடப்படுமுன்பே அதை மாற்றுக் கருத்து ....அது இது என்று ஏன் திசை திருப்புகிறீர்கள்...எம்மவர் கலை வளர ஊக்கம் கொடுங்கள்..உங்களுக்குப் பிடிக்காத வானொலியில் விளம்பரம் போகிறது என பல தடவை எழுதினீர்கள்.. விளம்பரம் உதவியாகக் கூட இருக்கலாம்...அதை வைத்து படத்தை எடை போடாமல் படம் வந்தபின் பார்த்து விமர்சனம் வைப்பதே பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்களின் கடமை.தர்மம் நியாயம்.


- sethu - 06-29-2003

வியம்பரம் மட்டுமோ தயாரிப்பாளர் இசை அமைப்பாளர்????


- mohamed - 10-07-2003

கடந்த ஞாயிறு 05-10-2003 அன்று இந்த திரைப்படம் லண்டனில் திரையிடப்பட்டது. கிட்டத்தட்ட 400 பேர்வரை இந்த திரைப்படத்தை பார்த்துள்ளனர். இது அங்கு பலத்த வரவேற்பை பெற்றதாக சன்றைஸ் வானொலி அறிவித்துள்ளது. இன்னமும் பார்க்க கிடைக்கவில்லை. பார்த்தவர்கள் யாராவது விமர்சிக்கவும்.


- AJeevan - 10-08-2003

mohamed Wrote:கடந்த ஞாயிறு 05-10-2003 அன்று இந்த திரைப்படம் லண்டனில் திரையிடப்பட்டது. கிட்டத்தட்ட 400 பேர்வரை இந்த திரைப்படத்தை பார்த்துள்ளனர். இது அங்கு பலத்த வரவேற்பை பெற்றதாக சன்றைஸ் வானொலி அறிவித்துள்ளது. இன்னமும் பார்க்க கிடைக்கவில்லை. பார்த்தவர்கள் யாராவது விமர்சிக்கவும்.
mohamed செய்தியோடு நின்று விட்டார்.
AJeevan Wrote:<img src='http://www.yarl.com/advert/img_banners/martu_ad.gif' border='0' alt='user posted image'>
மாற்று திரைப்படம்
லண்டனில் காண்பிக்கப் பட்டிருக்கிறது.
பார்த்தவர்கள்
விமர்சனம் வைத்தால் படைப்பாளிகளுக்கு
உற்சாமாக இருக்கும்.

யாராவது இத் திரைப்படம் பற்றி எழுதினால் நன்று.


- yarlmohan - 10-10-2003

மாற்று படம் கடந்த ஞாயிறு இரண்டாம் காட்சி 8.30 மணிக்கு பார்தேன் முதல் காட்சிக்கு நிறைய சனம் ஆனால் இரண்டாம் காட்சிக்கு ஒரு 80பேர் வந்திரிந்தினம். அமைதியாக இருந்து பார்க்க முடிந்தது. படம் ஆரம்பத்தில் ஒரே குழப்பம் அனுபவமின்மை தெரிகிறது, ஆனால் பார்க்கும் போது சலிப்பு தட்டவில்லை காரணம் அனைவரினதும் நடப்பு இயற்கையாக மிகப் பிரமாதமாக இருந்தது. கமரா பேசாவிட்டாலும் படப்பிடிப்பு முதல் அகுபவத்திற்கு பரவாயில்லை என்றே கூற வேண்டும்.

லண்டனில் தயாரித்து வெளி வந்த படங்கள் அனைத்தையும், பரிசில் தயாரித்து வெளிவந்த சில படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றுடன் ஒப்பிட்டால் மாற்று எங்கேயோ போய்விட்டது. ஆனால் இந்திய மற்றும் ஆங்கில படங்களுடன் மாற்றை ஒப்பிட முடியாவிட்டாலும் இவர்கள் அவர்கைள விஞ்சும் நாள் தொலைவில் இல்லை என்று கூறலாம்.

குறிப்பாக தொழில் நுட்ப விடயங்களில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் படம் சுப்பர். அரங்கில் படம் பார்த்த அனைவரும் இது லண்டன் படம் தானே என்று ஒரு அலுப்புடன் தான் படத்தை பார்க்க ஆரம்பிந்தோம் ஆனால் படம் தொடங்கி முடியும் வரை விறுவிறுப்புடன் கதை நகர்ந்தது. ஆரம்பத்தில் விறுவிறுப்பு கொஞ்சம் கூடித்தான் போட்டுது, பக்கத்தில் இருந்தவர் அடிக்கடி என்னை கேள்வி கேட்டதில் அது புரிந்து ஆனால் படம் அரைவாசிக்கு போய் விறுவிறுப்பு முடிச்சு அவிண்டதும் படம் எம்மை அசைய விடவில்லை.

பாடல் காடசி இயல்பாக எடுத்திருக்கிறார்கள் ஆனால் காட்சிகள் போதாது, இன்னும் அதிகமாக்கியிருக்கலாம். படத்தில் வன்முறை கொஞ்சம் அதிகம் ஆனால் அது பற்றி நான் படம் முடிந்ததும் இயக்கியவரிடம் கேட்ட போது உண்மைக்கதையில் நடந்த வன்முறையை போட்டிருந்தால் ஓருவரும் படம் பாக்க வந்திருக்க மாட்டினம் என்று அவர் நகைச்சுவையாக சொன்னபோதும் உண்மை கதை என்றதும் அது நெஞ்சில் ஒரு கனத்தை ஏற்படுத்த தவறவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணாக நடத்தவர் நல்லாக முத்திரை பதித்து விட்டார். ஆனால் திரைப்பட வெளியீட்டில் அவரை ஏனோ காண முடியவில்லை. இசை மிக நன்றாக இருக்கிறது. காட்சிக்கேற்ப இசையாக இருந்தாலும் சில இடங்களில் இசை கூடி வசனங்களை கேட்க முடியாது செய்து விட்டது. அடுத்த வெளியீட்டுக்கு திருத்துவதாக உறுதி செய்தனர்.

பல விடயங்களை ஒரே படத்தில் சொல்ல முனைந்தது ஒரு தவறு. இந்த படத்தில் நான்கு படங்களுக்கான கதையுள்ளது. முதல் படம் என்பதால் மன்னிக்கலாம். ஆனால் இது புலம் பெயரந்த அனைவரும் பார்தது ரசிக்க கூடிய படம். சிரிக்கவும் அழவும் செய்த ஒரு ஜனரஞ்சகமான படம். படம் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆனால் நேரம் போனது தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் என்று என் அருகில் இருந்தவர் சொன்னபோது மாற்று பட குழுவுக்கு கிடைத்த ஒரு வெற்றி என்றுதான் புரிந்தேன். யாரும் எதிர்பாராத விதத்தில் நம்மவர் புலம் பெயர் மண்ணில் தயாரித்த முதல் படம் நம்பிக்கை தருகிறது.

இவ்விமர்சனம் காந்தனால் (இங்கு அங்கத்துவராக உள்ளார்) எனக்கு அனுப்பப்பட்டது. - மோகன்


- mohamed - 10-10-2003

நேற்று மாலை நான் வழக்கமாக போகும் வீடியோ கடையில் படம் எடுக்க நிக்கும் போது ஒருவர் வந்து அண்ணை இந்த மாற்று படம் வந்துட்டுதோ என்று கேட்டார். விசாரித்தவர் நல்ல படம் எண்டு ஆக்கள் சொல்லிச்சினம் அதுதான் வீடியோவிலை வந்துட்டுதோ எண்டு விசாரிச்சார். நம்மடை ஆக்கள் படம் எடுத்திரிக்கிறாங்கள், நல்லாயிருக்கு எண்டு கூட கதைக்கினம் போய் பாக்க இன்னமும் மனம் வரவில்லையே (நான் உட்பட)! பார்க்கும் ஆசையில் போன் செய்ததேன் நவம்பர் மாதம் சினிமா தியட்டரில் போட இருக்கின <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . ஐரோப்பா எங்கும் போட ஆசைப்படுகினையாம் அனால் முகவர்கள் இல்லையாம். யாராவது முன்வந்தால் நல்லது தானே! தொடர்புகொள்ள புதியவன் : 004407958412515, 00447753831583 அவர்களின் அனுமதியுடன் தான் இந்த இலக்கத்தை போடுகிறேன்.


- Mathivathanan - 10-10-2003

கண்ணுபடப்போகுது.. கட்டிக்கடி சேலையை.. பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கடி ரவிக்கையை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->